பதினான்கே மணி நேரங்களில் ‘மிக விரிவான வரலாற்று சித்திரத்தை’ உருவாக்கிக் கொள்வது எப்படி :-(

24/09/2019

…பலப்பல நாட்களுக்குப் பின் ஜெயமோகன் அவர்களைப் படிக்கச் சென்றபோது தென்பட்ட அவருடைய ஒரு அண்மைய பதிவு: கிருஷ்ணன் எனும் காமுகனை வழிபடலாமா?

ஒரு  டப்பா வாசகன் டாப்கன் கிறுக்கன் எழுதிய ஒரு சிறுபிள்ளைத்தனமான கடிதத்துக்கு விலாவாரியாகவும் பொறுமையாகவும் பதிலளித்திருக்கிறார். இதை ஒருமாதிரி ‘ஸ்பிரிட்டட் டிஃபென்ஸ்’  (=’ஆவி அல்லது சாராயப் பாதுகாப்பு’©) என்று சொல்லலாம். ஒவ்வொருமுறை இவர் இப்படியொரு எதிர்வினையைக் கொடுக்கு கொடுக்கு எனக் கொட்டிக் கொடுக்கும்போதும், எனக்கும் ஒரு அற்ப சந்தோஷமும் திருப்தியும் கிடைக்கும் என்றாலும்… …

அதாவது – ஒரு குப்பைத்தனமாக பார்வையை முன்வைக்கும் அதிசராசரிக் குளுவானுக்குப் பதிலளிக்கும் அளவில் போதுமானதாக ஒரு பார்வையை வைக்கும் அளவில் அது நன்றாகவே வந்து.. ள்  … ள   …. து….  ….என்றும் அடிப்படை நல்லெண்ணம் இ ..ரு …க் ….கி ……ற ……தே, தொடர்ந்து சலிக்காமல் அரைகுறைகளை எதிர் கொ …ள் ….கி ……….றா …………. …ரே  என்றெல்லாம், நன்றியுணர்ச்சியுடன் நினைக்கும்போதே, இவர் ஏன் எந்த எழவினால் இப்படியொரு பிறழ் பார்வைத்தொகுப்பைக் கொண்டவராக இருக்கிறார் எனவும் தோன்றுவதைத் தவிர்க்க முடியவில்லையே, ஈஸ்வரா! ஞான் எந்தா செய்யும். இந்த இடியாப்பச் சிக்கல் பிரச்சினையிலிருந்து எனக்கு விடிவே கிடையாதா? :-(

ஜெயமோகன் அவர்களின் எழுத்துகளைச் சிலாகித்துப் பேசத்தான் எனக்கு ஆசை, ஆனால் அவர்  வரவர அதற்கெல்லாம், துளிக்கூடக் கருணையேயில்லாமல், கிஞ்சித்து இடமும் கொடுக்கவே மாட்டேனென்கிறார் என்பதை அறியும் போது… எனக்கு வரும் துக்கத்துக்கும் தூக்கத்துக்கும் அளவேயில்லை! :-( என்ன செய்ய, சொல்லுங்கள்.

-0-0-0-0-

யோசித்துப் பார்த்தால் – ஓரளவுக்கு ஸனாதனதர்மத்தைக் (=’ஹிந்து மதங்கள்’) குறித்து, பொருட்படுத்தத்தக்க கருத்துகள் கொண்டிருப்பவர்களில் பலருக்கும் (ஹ்ம்ம், உண்மையில் இவர்கள்  எண்ணிக்கையில் சிலரே!) இருக்கும் கொடூரமான பிரச்சினைதான், ஜெயமோகன் அவர்களையும் பிடித்து உலுக்கி வாட்டியெடுக்கிறது என நினைக்கிறேன்.

பிரச்சினை: நமது கலாச்சாரத்தைப் பற்றி அறிந்துகொள்ள, பெரும்பாலும் இவர்கள் சார்ந்திருப்பது ஒருசிலர் ஏகோபித்து எழுதியுள்ள, சற்றே பிரபலமான புத்தகங்களே – அவை பெரியமனது பண்ணி அளித்திருக்கும் பார்வைகளே.  அதுவும் அவை ஸம்ஸ்க்ருதத்தில்  அல்லது ப்ராக்ருத / பாலி / தமிழ் மொழிகளில் எழுதப்பட்ட மூலங்களோ, பொழிப்புரைகளோ அல்ல – அவை அதிகபட்சம் வெறும் ஆங்கிலப் புத்தகங்களோ, மொழிமாற்றங்களோ, பொழிப்புரைகளோ அல்லது அவற்றின் தமிழாக்கங்கள் மட்டுமேதாம்.

ஆகவே, அவர்களுடைய அடிப்படைப் புரிதல்களே, வேறேதோ பார்வைகளில் இருந்து சமைக்கப்பட்டவை; இது சோகம், ஆனால் உண்மை. என்ன செய்வது சொல்லுங்கள். :-(

இம்மாதிரியான தேங்காய் (வெளித்தோல் நம்முடையது  போல பழுப்பு/கருப்பு; ஆனால் உள்ளே வெள்ளைய மேட்டிமை மனப்பான்மை கொண்டவர்கள், வெள்ளையப் பார்வையினூடே தங்கள் கலாச்சாரங்களை அறிய முயல்பவர்கள், பழுப்புப் பார்வைகளின் அடிப்படைகளைக் கற்றுக்கொள்ளக் கூட முயலாதவர்கள்; தங்களுடைய சொந்தப் பாரம்பரியங்களைக்கூட, தங்கள் சொந்த பாரம்பரிய மொழிவழிகளில் அறிய இயலாத, ஞானங்களைப் பெறமுயலாத கருத்துலகச் சோம்பேறிகள்!) எழுத்தாளர்களுடைய ஊற்றுக்கண்கள் குறித்த அபிமான தேங்காயலஜிஸ்ட்கள் ஜாபிதா இப்படி விரியும்:

(கீழ்கண்டவர் அனைவரும், படிப்பாளிகள் என்பதைத் தவிர பல போற்றத்தக்க குணங்களைக் கொண்டவர்கள், ஆகவே இடக்கையால் புறமொதுக்கத்தக்கவர்களல்லர் என்றாலும், வெறுக்கப்படவேண்டியவர்கள் அல்லரென்றாலும், இவர்களுடைய பார்வைகளானவை — பல்வேறு காரணங்களால், மிகத் தீவிரமாக மறுபரிசீலனை செய்யத்தக்கவை.

வெளிநாட்டார்களின் பாரதப்பார்வைகளையும், காலனியாதிக்கவாத ‘வெள்ளைக்காரனின் சுமை‘ மனோபாவத்தையும், அப்ரஹாமிய மதச்சிமிழ்களில் பிற கலாச்சாரங்களை ஒடுக்கிஅடக்கும் திறனையும், ஜெர்மன் இந்தாலஜி வகையறாக்களையும் கலந்துகட்டி, உருவாக்கி மேட்டிமைத்தனத்துடன் ‘பேக்கேஜிங்’ செய்து அட்ச்சிவுடப்படுபவை.

இம்மாதிரி அறிவுஜீவிகளை, அழிச்சாட்டியச் சான்றோர்களையெல்லாம் குறிப்பிடத்தக்க அளவு உருப்போட்டபின்தான் இப்படி இவர்கள் மண்டையை உருட்டுகிறேன் என்பதை கவனத்தில் கொள்ளவும்; வீணாகப் பொங்கவேண்டாம், நன்றி!)

1. ராஹுல் சாங்க்ருத்யாயன் (இந்த ஆசாமியின் பொருள்முதல்வாத அரைகுறைப் புத்தகங்களைத் தமிழில் வெளியிட்ட பாவத்திற்கான பிராயச்சித்தத்தை, நியூசெஞ்சுரி புக்ஹவுஸ், கம்பராமாயணத்தை வெளியிட்டதால் செய்தது எனக் கொள்ளலாம்)

2. தேபிப்ரஸாத் சட்டோபாத்யாய (இவரும் பொருள்முதல்வாதிதான்; இவருடைய முந்தைய புத்தகமான, இந்தியத்தத்துவவியலைக் கூடப் படிக்காமல், அவருடைய பின்வந்த புத்தகமான ‘இந்தியத் தத்துவத்தில் நிலைத்திருப்பனவும் அழிந்தனவும்’ மட்டுமே படித்து பாரததத்துவத்தை அறிந்துவிட்டதாகக் காலட்சேபம் செய்துவரும் பல கோமாளிகளை அறிவேன்)

3. சர்வேபள்ளி ராதாக்ருஷ்ணன் (இவர் எழுதியுள்ள தலையணை தலையணையான புத்தகங்கள், கொஞ்சம் பாவம்; வெண்முரசுதான் மஹாபாரதம் எனக் கருதினால், சர்வேபள்ளியாரின் புத்தகங்களையும் ஸனாதனதர்மத்தின் கூறுகளைப் பிரதிபலிப்பதாகக் கொள்ளலாம்; பொதுவாகவே இவரைப் பற்றிக் கிண்டல் செய்யும்போது நான் சொல்வது: “அவர் ஸர்வே பள்ளியைச் சார்ந்தவர்; அவர் பார்வையில் சங்கிலிகளை வைத்து, பாரதத் தத்துவப் பரப்பை, எக்குதப்பாக ஸர்வே செய்யும் பள்ளியைச் சார்ந்தவர். Good ol’ Radhakrishnan belongs to the ‘Survey School’ of Indic philosophies.” ஸர்வே ஜனோ ஸுகினோ பவந்து. சரிதான். ஸர்வேக்குப் பின் அனைவருக்கும் தலா ஏழரை ஏக்கர் ஃப்ரீ. சரியா?)

4. மேக்ஸ்ம்யுல்லர் (இவர் அடிப்படை மொழியை அறியாமல் அகராதி பார்த்து மொழிபெயர்த்தவர்; நம் செல்ல எஸ்ராவுடைய அளவுக்குப் படுமோசமில்லை என்றாலும், அவருடையவை மொண்ணையானவை)

5. மோஹன்தாஸ் ‘பாபுஜி’ காந்தி (இவரும் மேற்கத்திய/அப்ரஹாமிய மதவழிப் பார்வைகளில் தர்மத்தைப் பார்த்துப் புரிந்துகொண்டவர்; பலவிஷயங்களில் போற்றிக்கொண்டாடத் தக்கவரானாலும் நல்லெண்ணமிக்கவரானாலும், அவருடைய பெருஞ்சறுக்கல்களில் ஒன்று, இம்மாதிரி, அடிப்படைப் புத்தகங்களை / கருத்தாக்கங்களை அவற்றின் மூலவடிவுகளில் படிக்காமல், பிற பிறழ்வழிகளில் பார்த்து, தம் சித்திரங்களை விரித்துக்கொண்டது)

6. ஆம்பேட்கர் (இவர் பன்மொழி விற்பன்னர், படித்திருக்கிறார் என்றாலும் இவருடைய பார்வைகளில் வரலாற்றுரீதியான காரணங்களால், ‘வெளியிலிருந்து உள்நோக்கும்’ தன்மை அதிகம். இவருடைய பார்வைகள் கருத்தில்கொண்டு அலசப்படவேண்டியவை என்றாலும், இவர் பெரும்பாலும் ‘மேற்கோள் காட்டப்பட்டு’ வெறுப்பியத்துக்கு சமூகப்பிணக்குகளுக்கு முட்டுக்கொடுப்பதற்காக ஒருமாதிரி ஊற்றுக்கண்ணாக மட்டுமே, பிரிவினைவாதக் கதையாடல்களுக்காகச் சித்திரிக்கப்படுவது சோகம்; பிரச்சினை என்னவென்றால், நம்மில் பலர், வழக்கம்போலவே அவரை முழுவதுமாகப் படிக்கவில்லை, ஏனெனில் மேற்கோள்முதல்வாதம் தானே ஐயா முக்கியம்?)

7. ஜவாஹர்லால் ‘சாச்சா’ நேரு (இவருடைய ‘ஒரு கைதியின் டயரி’ வகையறாப் புத்தகங்களை மட்டுமே படித்து பாரதவரலாற்றையும் வொலகவரலாறுகளையும் ஐயந்திரிபற அறிந்துகொண்ட சான்றோர்கள் கொஞ்சம் அதிகமோஅதிகம்! சில நாட்கள் முன், சென்னையிலிருந்து பெங்களூர் ரயில்பயணத்தில் ஒரு காம்ரேட் (சகபயணிதாங்க இது) சொன்னார், “ஆனால், நேருவே அப்படி ‘டிஸ்கவரி ஆஃப் இந்தியா’வில் சொல்லியிருக்கிறார்!” :-( ஆமாங்க!)

8. ஜிட்டு ‘ஜேகே’ க்ருஷ்ணமூர்த்தி போன்ற நவதத்துப்பித்துவர்கள் (இவர்களுடைய மேக்கி டூமினிட் நூட்ல்ஸ்வாதம் சார்ந்த, பாரத அடிப்படைகளையறியாத, அல்லது அறிந்தாலும் கண்டுகொள்ளப்படாத, ஏகத்துக்கும் ‘எளிமைப் படுத்தப்பட்ட’  ஒன்றரைக்கண் பார்வைகளும் புத்தகங்களும் உரையாடல்களும் சுவாரசியமானவை; ‘மேற்கோள்’ (=Upper Planet ©) காட்ட ஏதுவானவை. ‘Freedumb from the Noun‘ ஆம்!)

9. தேவ்தத் பட்டநாயக் போன்ற, நம்முடைய சமகால நவீன ஆங்கில மித்தாலஜிஸ்ட்கள் (இவர், புனைவுக்கும் புராணத்துக்கும் நிகழ்ந்தவைகளுக்கும் அவருடைய சொந்தச்சரக்குக்கும் வித்தியாசம் தெரியாமல் அதிமேதாவித்தனமான அட்ச்சிவுடுபவர்; கேள்விகேட்டால் கோபப்படுபவர் – பலசமயங்களில், எனக்கு ஜெயமோகன் அவர்களை நினைவுபடுத்துபவர்)

10. நித்யானந்தா (திடுக்கிடாதீர்கள்; சிலசமயங்களில் நம்முடைய அலக்கியப் பிதாமகர்களின் அட்டகாசங்களையும் அட்ச்சிவுடல்களையும் பார்த்துத் தவிக்கும்போது, எனக்குத் தோன்றும் விஷயம்தான் இது. அவர்களுக்கும் நித்யானந்தா அவர்கள் போன்றவர்களின் கருதுகோள்களுக்கும் கோள்மூட்டல்களுக்கும் சாளக்கிராமங்களுக்கும், எனக்குச் சுத்தமாக வித்தியாசம் தெரிவதேயில்லை. உங்களுக்கு நினைவிருக்கிறதா எனத் தெரியவில்லை; ஒருகாலத்தில் சாருநிவேதிதாவார், இதே நித்யானந்தா அவர்களுக்கு முட்டுக்கொடுத்துக் கொண்டிருந்தார், பாவம்!)

(இன்னமும் சிலபலர் இப்படி இருக்கிறார்கள், ஆனால் தற்போதைக்கு இந்த ஜாபிதா போதும்; மேலும் இவர்களெல்லாம் ஒருமாதிரி ஸ்டீரியோடைப்கள், அவற்றுக்கான எடுத்துக்காட்டுகளும் கூட)

மேற்படியாளர்கள் தவிர பலப்பலர் — உலக மதங்கள், அவற்றின்  தோற்றம், வளர்ச்சி, க்ஷீணிப்புகள், தற்கால நிலவரங்கள் என ஆராய்ச்சி செய்திருக்கிறார்கள். ஸினாலஜி (சீனம் பற்றிய படிப்பு), க்ரீக் ஸ்டடீஸ் (க்ரேக்கம் பற்றி), பேகன் நம்பிக்கைகள் / பாரம்பரியங்கள் (பொத்தாம் பொதுவாக அப்ரஹாமிய மரபுகளுக்கு முன்பேயிருந்த, பின்னர் பெரும்பாலும் அழித்தொழிக்கப்பட்ட பாரம்பரியங்களை / நம்பிக்கைகளை இப்படிக் குவியல் செய்திருக்கிறார்கள், பாவிகள்!), ஈஜிப்டாலஜி (எகிப்து பற்றிய படிப்பு), அக்காடியன் ஸ்டடீஸ் (இப்போதைய பாரசீகம்/இராக்/குர்திஸ்தான் பரப்புகளைக் குறித்த வரலாறுகள்) அப்படியிப்படி எனப் பலப்பல பார்வைகள் மிகச் சுவாரசியமாக இருக்கின்றன.

இத்துறைகளில் பல மதிக்கத்தக்க பிதாமகர்கள், ஜாம்பவான்கள் (=பழஊறல் உணவகங்கள் ©) இருக்கிறார்கள். ஆனால் அந்த மதங்களை/நம்பிக்கைகளைப் புரிந்துகொள்ள உதவியாக இருக்கும் கருத்தாக்கங்களையும் உபகரணங்களையும் கொண்டு, பாரதப் பாரம்பரியங்களைப் புரிந்துகொள்ள முடியாது. அளக்கவும் முடியாது. (ஐயய்யோ, அளக்க முடியும்; நம் அலக்கியக் காரர்களுக்கு இது சர்வ நிச்சயமாக முடியும்தான்!)

அவற்றின் பாரம்பரியங்களையும் வளர்ச்சியையும் குறித்த கருத்தாக்கங்கள், பொதுமைப் படுத்தத் தக்கவையல்ல. சர்வ நிச்சயமாக, அவற்றை பாரதப் பாரம்பரியங்களுடன் பொருத்திப் பார்க்கவேமுடியாது. மாறாக, அப்படித் தேவை மெனெக்கெட்டுக்கொண்டு செய்தால் அது குளறுபடியில்தான் முடியும். சில பிரதேசங்களில் நடந்திருக்கக்கூடும் ஓரிரு விஷயங்களை மட்டும் வைத்துக்கொண்டு, ஒரு பிரம்மாண்டமான, ஒப்புக்கொள்ளத்தக்க சித்திரத்தை உலகளாவ விரிக்க முடியாது.

ஆனால் பாருங்கள், மேற்படியாளர்களின் மூலமே தேங்காயலஜிஸ்ட்கள் தங்கள் சொந்தச் சரக்குகளை ஆடித் தள்ளுபடியில் அமோகமான ஆஃபர் பெற்று வந்தடைகிறார்கள் என்பதுதான் காலத்தின் கோலம்.

-0-0-0-0-

நம் பொக்கிஷங்களில் ஒருவரான பத்ருஹரி, தம்முடைய வாக்யபாடியத்தில் என்ன எழுதுகிறார் என்றால்…

https://twitter.com/othisaivu/status/1159826426956136455

மூல நூல்களைப் படித்துச் செரித்து, தம் கருதுகோட்களை செப்பனிட்டுக்கொள்ளாமல், கற்பனாவாதமூலமாகவும் அரைகுறைக் கருத்தாக்கவாதிகளின் மூலமாகவும் தம் கோட்பாடுகளைச் சமைப்பவர்களைப் பார்த்து ஞான தேவதை புன்னகை பூக்கமாட்டாள்… (ஒருமாதிரி எஸ்ராத்தனமான விளக்கம், மேலே ஆங்கில மொழிபெயர்ப்பும் ஸம்ஸ்க்ருத மூலமும் இருக்கின்றன; முடிந்தவரை உய்யவும்!)

ஆம். ஜெயமோகன் அவர்களின் கருதுகோட்களும் மூலக் கருத்தாக்கங்கள் சார்ந்தவையல்ல. அவருடைய நல்லெண்ணங்களையும் க்ரியாசக்தியையும் நான் குறைத்து மதிப்பிடமாட்டேன் என்றாலும், இந்தப் பதிவின் ஆரம்பத்தில் குறிப்பிடப்பட்ட அவர் கட்டுரை, மிகவும் பலவீனமானது, பெரும்பாலும் ஆதாரங்களற்றது. ஆனால், ங்கொம்மாள, ‘கட்டுரைப் பிரதி, கலகம் செய்து தன்னைத்தானே எழுதிக்கொள்கிறது.‘ மன்னிக்கவும். ஐயய்யோ!

-0-0-0-0-0-

வெளி நாட்டார்களின் முகாந்திரமற்ற பிறழ்பார்வைகளை வைத்து – பொதுமைப்படுத்தி எடுத்தல் எழவுகளை வைத்துக்கொண்டு – நம் பாரம்பரியங்களைப் பார்ப்பது என்பது ஒரு சோகமான விஷயம்.

பிலாக்கணத்துக்கு அப்பாற்பட்டு, சுருக்கமாக, தேங்காயலஜி பிரச்சினைகளை அவற்றின்  ஒருமாதிரி சாராம்சங்களின் வழியாகப் பார்க்கலாம்.

தெய்வ – அரச/வேந்த உருவகம் குறித்து ஜெயமோகக் கருத்துகளின் சாராம்சம்:  உலகெங்கும் – சக்திவாய்ந்த வீரமிக்க ஆகவே விந்துபாய்ச்சல் திறன்மிக்க அரசர்களே தெய்வமாகக் கருதப்பட்டு அவர்கள் பிற்காலங்களில் தெய்வங்களாக, வழிபடத்தக்கவர்களாக, பயந்து அடிபணியத்தக்கவர்களாக மாறினார்கள். அதாவது – அதிகாரத் தன்மை படைத்த தெய்வங்கள் < = > தெய்வாம்சம் கொண்ட அரசர்கள் என ஒருமாதிரி, ‘தெய்வங்களின் வரலாற்றை’ப் புரிந்து கொல்லலாம்.

ஆனால், உண்மை என்ன?

இது பிற பாரம்பரியங்களில் ஓரளவுக்கு உண்மையாக இருக்கலாம் – அதிலும் குறிப்பிடத்தக்க விதிவிலக்குகள் இருக்கின்றன என்பது வேறு விஷயம். ஆனால், இது சர்வ நிச்சயமாக, ஸனாதன தர்மப் பாரம்பரியங்களுக்கும் பொருந்தாது.

தசாவதாரங்களை எடுத்துக்கொண்டால் – விஷ்ணு எடுத்த, நாம் வழிபடும் அவதார/தெய்வங்களில் மத்ஸ்ய (மீன்), கூர்ம (ஆமை), வாமன (குட்டிப் பையன்/குள்ளன்) – போன்றவைகளுக்கு சக்தியோ வீர்யமோ விந்துசக்தியோ இல்லை. இவைகள் உருவகங்களாகவே இருந்தாலும்கூட எப்படி அரசர்களாக இருக்க/இருந்திருக்க முடியும்? உதைக்கிறதே!

வராஹ (காட்டுப்பன்றி(?)), நரஸிம்ஹ (மனிதச்சிங்கம்) போன்ற அவதாரங்கள் வீரமும் சக்தியும் நிரம்பியவை என்றாலும், அவை ஒருகாலத்திலும் அரச பாரம்பரியங்களின் உருவகங்களாகக்கூட இல்லை. உதைக்கிறதே!

ராம அவதாரத்தில் – ராமன் சக்திவாய்ந்தவன், இளவரசன், சரி. ஆனால் அவன் ஏகபத்னிவ்ரதன், விந்துசக்தியால் உந்தப்படவில்லை. பெரிய சக்ரவர்த்தியாகக்  கிடைத்த பலப்பல வாய்ப்புகளை அறவுணர்ச்சி காரணமாக நழுவவிட்டு, பலப்பல வருடங்கள் வனாந்திரங்களில் திரிந்து அமோகமாகக் கஷ்டப்பட்டவன்; அவனை ஸனாதன தர்மம் வழிபடுகிறது.  உதைக்கிறதே!

பரசுராம அவதாரத்தில், வீரம், சக்தி எல்லாம் அமோகமாக இருக்கிறது. ஆனால் அரசாள என, அங்கு புகுந்துபுறப்படல் இல்லை. அரச பாரம்பரியம் இல்லை; சொல்லப்போனால், அரச பாரம்பரியங்களை அழிக்கும் ரௌத்திரம் மிக்க அவதாரமது. இவரும் வழிபடப்படுகிறார். உதைக்கிறதே!

ஜெயமோகன் தடுத்தாட்கொண்டிருக்கும் பாவப்பட்ட க்ருஷ்ண அவதாரத்தில் பார்த்தாலும் அவர் அரசரலல்லர், பலப்பல ராஜ்யங்களுக்கு முட்டுக்கொடுத்தார், அரச பாரம்பரியங்களை உருவாக்கினார், ஓருங்கிணைத்தார், தூது சென்றார் எனச் சொல்லிக்கொண்டே போனாலும் – அவர் அரசாளவில்லை. குறைந்த பட்சம், மூலப்பிரதிகளில், அடிப்படை ஆவணங்களில், நான் அறிந்துள்ளவரை அவ்வாறில்லை.

மேலும், “அவன் பெரும் காதலன். தீராத வீரியம் கொண்ட ஆண்மகன்”  என நீட்டி முழக்கி காதல் காமம் என அவரை ஒரு, பாவாடைகளுக்குப் பின்னலையும், 24×7  விடைத்த ஆண்குறிக் கேசனோவா ஜெமினிகணேச கமலஹாஸ்ய ரெவலுக்கு அவரைக் கீழிழுப்பதும் சரியில்லை.

ஆனால் – நிகழ்காப்பியமும் டீயுமாம் வெண்முரசில் இது எப்படி என்பது எனக்கு நினைவிலில்லை, சரிபார்க்கவும் தெம்பில்லை, சலிப்பாகவும் இருக்கிறது. (என் கருத்து மூல ஆவணங்களுடன் ஒத்துப்போகவில்லை என யாராவது ஆதாரத்துடன் சுட்டினால், நான் என்னைத் திருத்திக்கொள்கிறேன்; அதுவரை திரிசமத் திரித்தல்களை எதிர்க்கிறேன், சரியா?)

-0-0-0-0-0-

இப்படி ஒர்ரேயடியாக அட்ச்சிவுடுகிறார், நம் ஜெயமோகன்.

பாகவத புராணத்தில் பத்தாவது ஸ்காந்தத்தில்/புத்தகத்தில் 29ஆம் அத்தியாயத்திலிருந்து 33 வரை ஐந்தில் ராஸலீலை குறித்த விவரணைகள் இருக்கின்றன. இதில் 30வது அத்தியாயத்தில் க்ருஷ்ணன் ஒரு (பெயர் சொல்லப்படாத, ஆனால் ஒரு அணுக்கமான கோபிகையுடன்) செல்வதாக ஒரு காட்சி வருகிறது. துறை வல்லுநர்கள் பலர் கருத்துப்படி, இது ராதா.

பொதுவாக, பாகவதம் சுமார்  (பொதுயுகம்) எட்டாம் நூற்றாண்டிலிருந்து பத்தாம் நூற்றாண்டு வரையான காலகட்டத்தில் தொகுக்கப் பட்டதென்றாலும் அதன் சில அடிப்படைக் கூறுகள் அதற்கும் முந்தைய காலத்தில் இருந்திருக்கின்றன; ஆனால் ஓரளவுக்கு முழுமையாகப் புனையப்பட்ட, கிடைத்த பாகவதம் என்பது ~பத்தாம் நூற்றாண்டைச் சார்ந்தது; அதே சமயத்தில் புனையப்பட்ட/தொகுக்கப்பட்ட பல ஜைனப் புத்தகங்களில் (அபப்ரம்ஷ மொழிகளில் எழுதப்பட்ட) ராதா-க்ருஷ்ணா கவிதைகள் இருந்திருக்கின்றன. இவற்றைப் பற்றிய திட்டவட்டமான குறிப்புகள், எடுத்துக்காட்டுகளாக ஜைன விஞ்ஞானி + இலக்கணகர்த்தாவான ++ மஹாமஹோ ஹேமசந்த்ராசார்ய அவர்களின் 12ஆம் நூற்றாண்டு ஆக்கங்களில் குறிப்பிடப்பட்டு இருக்கின்றன.

என்ன சொல்லவருகிறேன் என்றால், ஜெயமோகன் சொல்வது சரியில்லை.

பிரச்சினை என்னவென்றால், தான் ஒன்றைப் பற்றி அறியாவிட்டால், அது உசுருடன் இருக்கவே தகுதியற்றது என்று அழிச்சாட்டியம் செய்வது எந்தவிதத்தில் நியாயம், சொல்லுங்கள்?

பின் வந்த நூற்றாண்டுகளில், ஜெயமோகன் சொல்வதுபோலவே, பரவலாக அறியப்பட்ட பில்வமங்களரின் க்ருஷ்ணகருணாம்ருதம், ஜயதேவரின் கீதகோவிந்தம் + வித்யாபதி, சாண்டிதாஸ், நரஸின்ஹ மேஹ்தா போன்றவர் ஆக்கங்கள் அனைத்திலும் ராதாக்ருஷ்ணா சித்திரங்கள் இருக்கின்றன.

…இப்படியும் ஒர்ரேயடியாக அட்ச்சிவுடுகிறார், நம் ஜெயமோகன்…

ஆனால் அவரிடமிருந்து இதற்கெல்லாம் தரவு ருசு என்றெல்லாம் வாங்கத்தான் முடியுமா, சொல்லுங்கள்? :-(

-0-0-0-0-

(நேனோ தெய்வம் உள்வாங்கப்பட்டு பெருந்தெய்வம் உருவானதுபோன்ற நைந்த மேலைப்பார்வை முதல்வாத ஜெயமோகனங்களை லூஸ்ல வுட்டுவுட்டு — பலி பெறுதல், நாட்டார் தெய்வங்கள், பெருந்தெய்வங்கள் பற்றி ஜெயமோகன் கூறுவதன் சாராம்சம்: எல்லா தெய்வங்களும் பலி கேட்டுப் பெறுகின்றன. பலி  கொடுக்காவிட்டால் படுத்தி எடுக்கின்றன.

அப்படியா என்ன? ‘சிறு’ தெய்வங்கள் இப்படிச் செய்யலாம். ஆனால் இது பெருந்தெய்வங்கள் என்ற பகுப்பின் இலக்கணத்தில் ஒத்துவராது. “என்னை ஸ்தோத்தரித்துத் துதிக்கா விட்டால் + எனக்கு ஆட்டுப்பலி கொடுக்கா விட்டால் உன்னை வெச்சிசெஞ்சிங் பண்ணுவேன்” என எந்தப் பெருந்தெய்வமும் சொன்னதாகத் தெரியவில்லை. பக்தன் என்ன கொடுத்தாலும் (கொடுக்காவிட்டாலும்) அவனைத் தொந்திரவு செய்வதில்லை இவைகள்.

நிலைமை இப்படி இருக்கையிலே, கூடியவிரைவில் ஜெயமோகனும் சாமியாடி, ‘எங்கே அந்த கடலூர் சீனு! என் பலியெங்கே??’ எனக்கேட்காமல் ஆளைவிட்டால் சரி! :-(

…சரி.

‘மௌண்ட்ரோட் மஹாவிஷ்ணு’ என அந்த அயோக்கிய ‘த ஹிந்து’ தினசரிப் பாரம்பரியத்தில் ஒரு கிண்டல் இழை உண்டு.

அதற்காக, ‘ஹிந்து மதத்தில், மலைச்சாலைகளெல்லாம் மஹாவிஷ்ணுவின் அவதாரங்களே என்றுதான் குரு நித்யா சொன்னார்‘ என விஸ்தாரமாக, அவர் அட்ச்சிவுடாமல் இருந்தவரை சரிதான்.

-0-0-0-0-

இவையெல்லாவற்றையும் விட, எனக்கு மாளா துக்கம் தந்த விஷயம் என்னவென்றால், கீழ்கண்டதுபோல ஜெயமோகன் அவர்கள் எழுதியதுதான்!

மூட விடலைகளுடன் உரையாடல் நடத்தவேண்டிய நிர்பந்தத்தில் தம்மை வைத்துக்கொண்டிருக்கிறோமே என ஒரு விரக்திக் கோபத்தில் ‘பேச்சு வாக்கில்’ அவர் இப்படி எழுதியிருக்கலாம் என்றாலும், இது சோகம் தான்.

நான் ஒரு பெரும் அறிவாளிய பக்கெட்டெல்லாம் கிடையாது, வெறும் அறிமக்கு (mug) தான் என்றாலும், ஓரளவு தொடர்ந்து ஒரு நாளைக்கு ஐந்தாறு மணி நேரங்களாவது படிப்பவன் என்கிற பின்புலத்தில் இம்மாதிரி வசனம், என்னை மிகுந்த, துக்கிக்க வைக்கும் தாழ்மை யுணர்ச்சிக்குள்ளாக்குகிறது. :-(

ஒரேயொரு புத்தகத்தை (அல்லது ஒரு சில புத்தகங்களை) மட்டும் மொத்தம் பதிநான்கு மணி நேரம் உருப்போட்டால், அது/அவை தரம்வாய்ந்தவையாகவே இருந்தாலும்கூட, சர்வ நிச்சயமாக என்னால் ‘மிக விரிவான வரலாற்று சித்திரத்தை’ உருவாக்கிக் கொள்ளவே முடியாது. எதைக் குறித்துமே அப்படித்தான். வெறும் 14 மணி நேரங்களை ஒருவிஷயத்தில் செலவழித்து அதனைப் புரிந்துகொண்டுவிட்டதாக ஒரு தாங்கொணா தன்னம்பிக்கை எனக்கு வரவே வராது, இயலாமைதான் (=logy turtle self ©), என்ன செய்ய. விரிவான படிப்பு என்றால் அது மிகவும் ஆழமாக இருக்கவேண்டும் எனப் புரிந்துகொள்கிறேன். ஆனால் அவர் ‘விரிவாக’ என்பதை  ‘மேலோட்டமாக’  கேக்கின் மேல் தடவப்படும் க்ரீம் போலப் புரிந்து கொள்கிறாரோ?

இம்மாதிரி, வெறும் 14 மணி நேரப் படிப்பை வைத்துக்கொண்டுதான், வேந்தன் கடவுள்  பெருந்தெய்வம் நேனோ தெய்வம் உள்வாங்கல் வெளித்தள்ளல் மையமாக்கல் கமலஹாஸ்யமாக்கல் டமால் டூமீல் என தனக்கே தனக்கான ‘மிக விரிவான வரலாற்று சித்திரத்தை’ ஏகோபித்து உருவாக்கிக்கொண்டு அவருடைய வாசகர்களுக்கும் பரிமாறுகிறாரோ?

எது எப்படியோ, ஜெயமோகனுடைய வாசகன் எனப் பெருமைப்பட ஏதாவது ஒரு நேனோ முகாந்திரம் கிடைக்காதா எனப் பரிதவித்துக்கொண்டிருக்கும் எனக்கு உடனடியாக ‘மிகவிரிவான வரலாற்றுச் சித்திரம்‘ ஒன்று தேவைப்படுவதால், ஔரங்ஸெப் படம்…

…ஒன்றைத் தரவிரக்கி, உடனடியாக A2 ஸைஸ் காகிதத்தில் கலர்கலராக பெரிதாக விரித்து அச்சிட்டு, அதன் பார்டரில் நல்ல தரமான மதுராகோட்ஸ் நூல்களைப் பிசிறில்லாமல் பிசிராந்தையாராக ஒட்டி, 14 மணி நேரத்திற்குள்ளாக, என் அலுவலகச் சுவற்றில் மாட்டப் போகிறேன். பார்க்கலாம், இப்படியாவது என்னுடைய ஞான ரெவல் ஏறுகிறதா என்று… :-(

நன்றி.

17 Responses to “பதினான்கே மணி நேரங்களில் ‘மிக விரிவான வரலாற்று சித்திரத்தை’ உருவாக்கிக் கொள்வது எப்படி :-(”

 1. அனிருத்தன் Says:

  பொழுது விடிஞ்சா அர்ச்சனை, ஜெமோ பாவம் பண்ணியிருக்கார், உனக்கும் வேர வேலயில்ல தாயோளி வெக்கமா இல்ல?


  • ஐயா, தாங்கள் முன்னமே அறிமுகமாயுள்ள அதே அனிருத்தனாரா (https://othisaivu.wordpress.com/2019/03/16/post-952/#comment-10738) அல்லது இரண்டாம் அனிருத்தனாரா தெரியவில்லை. எப்படியும் ஆசிகளுக்கு நன்றி.

   எனக்கு வெட்கமாக இல்லை. ஆனால் உங்களுக்கும் உங்கள் பெரும்பேராசானுக்கும் எப்படி?

   நான் தரவுகளுடன் பேசுபவன். குற்றம் இருந்தால் சுட்டிக் காட்டவும், திருத்திக் கொள்கிறேன். அவசியமில்லாமல் வசைபாடவேண்டாம். ஒரு மசுத்துக்கும் ருசுவில்லாமல் உளறிக்கொட்டி உங்கள் முட்டாள்தனத்தைப் பறைசாற்றிக்கொள்ளவேண்டாம்.

   ஒருவிஷயம்: எனக்கு வேறுவேலையில்லாமல் இருக்கலாம்; ஆனால் இம்மாதிரி எதிர்வினைகளைப் பெறுவதற்குத்தான் ஜெயமோகன் அவர்கள், கடினமாக ’14 மணிநேரம் 14 மணிநேரங்களாக’ உழைத்துக்கொண்டிருக்கிறார் என்பது புரிகிறது.

   (பல தடவைகள், நீங்களோ அல்லது உங்களைப் போல மூளைகாலி மூடர்களோ இதே பெயரில் கொடுத்திருக்கும், முயற்சியில் தளராத,  பின்னூட்டங்களைக் கடாசியிருக்கிறேன்; ஒருமாதிரி, உங்களைப் போன்றவர்கள் யாராக இருக்கலாம் என்ற அனுமானமும் இருக்கிறது; ஆகவே, நான் பொறுமையுடன் இருப்பதன் காரணத்தாலேயே ற்றொம்பத் துள்ளவேண்டாம் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்; இதுதான் கடைசிமுறை; இனிமேல் உங்களுடைய இம்மாதிரி முயற்சிகள் வழக்கம்போலவே கடாசப்படும். பிற வழிகளும் இருக்கின்றன. நன்றி!)

   • Kannan Says:

    ஆசானின் அறிவியக்கம் இதுதான் போலிருக்கு. :(


    • ஹ்ம்ம்… இவர் ஒருமாதிரி உணர்ச்சிபூர்வத் தற்கொலைப் படைவீரர்(கள்?) போலப் படுகிறார் என்றாலும் ஜெயமோகவாசகர்களை, விசிறிகளை இவர் பிரதிநிதித்துவப் படுத்தி எடுக்கிறார் எனக் கருதாமல் இருக்கவே ஆசை.

     அறிவியக்கம் என்று அபாண்டமாகச் சொல்லி வீண்பழி தேடிக்கொள்ளவேண்டாம், சரியா?

     …கொஞ்சம் யோசித்தால், இம்மாதிரி ஆசாமிகள், சிடுக்கல்பதிவுகளைப் படிக்குமளவுக்குச் செயலூக்கத்துடன் இருக்கிறார்கள் என்பதுதான் ஆச்சரியமாக இருக்கிறது. பாவம்.

     • Kannan Says:

      Pathetic, they just swallow hook, line and sinker Aasan dishes out everyday and refuse to research it further even a little.

   • Muthukumar Says:

    Sir,
    don’t want to scold that fellow. (Name is there!, I respect the name provided by a MOTHER).
    Why do you have to register feedbacks?
    Like Mr.B.Jeyamohan, you can directly ask for mail , from which you can choose the one…


    • Sir, three things:

     1. I have stopped this feedback/comment business a few times – when abuse from Dravidian scum became a pain. These happened way back in 2011-15; they seem to have stopped now.

     2. I like to get a feedback in an easy format for whoever that is interested in giving one. Having the comments section open gives me and fellow 7.5s some space for conversation.

     3. I do not get much mail, and in many cases, those who send mails request that they not be shared. I should add that these mail conversations are as intense as these posts. Some are long winding. And these mails are not restricted to Othisaivu content.

     Finally siree, it is not that Othisaivu is so very popular or anything. Actually not many people care significantly about anything, so managing a few scum here and there – and now and then is not a significant issue. I do not get that much hatemail or hatecomments. I do not lose my cool at all.

     Let us see how things unfold. If this comments section nonsense, is abused too much, I will close it, of course.

     Thanks for asking.


 2. BCAK ‘Peacock’ Nayar’s concise, sincere and most importantly, a ‘non offensive’ take on the same offending(!) essay of Jeyamohan – https://m.facebook.com/permalink.php?story_fbid=1499371566880285&id=100004223685325 OR try this non-mobile optimized version https://www.facebook.com/permalink.php?story_fbid=1499371566880285&id=100004223685325

  Scholarly, invested folks like BCAK Nayar (of https://vaasipu.wordpress.com/ fame) should write more and more – but not necessarily only in the walled gardens like Facebook, to which many jokers like yours truly do not have ready access – for whatever reason.

 3. T.S. Ravi Says:

  Sir, Jemo’s post is மறுபிரசுரம்- முதற்பிரசுரம் Aug 29, 2016. If he answers the same query now, the reply will be different considering his staunch belief nowadays in DMK’s intellectuality!


  • Oh, Sir! I did not realize that, I thought it was a recent post. :-(

   Anyway, the funda is that, he repeatedly + chronically gets into issues neckdeep (to start with) where he is out of depth, like totally… hmm

   For a person of his capabilities, he need not be indulging in this shit, oh what to do.

   • A.Seshagiri Says:

    சார்,T.S.ரவி அவர்களின் கருத்தும் அதற்கு தங்களின் பதிலும் தான் என்னை இதை எழுத தூண்டியது.
    சமீபத்தில் பி.எஸ். என்.எல்லில்நிகழ்வது என்ற தலைப்பில் ஒரு வாசகரின் கேள்விக்கு பதிலாக ஒரு கட்டுரை எழுதியுள்ளார் அதில் 2ஜி அலைக்கற்றை ஊழல் பற்றி குறிப்பிடுகையில் அதில் ஊழல் ஒன்றும் நடைபெறவில்லை என்றும் அது வெறும் வணிககொடுக்கல் வாங்கல் என்றும் அதில் அறுதியாக எஞ்சுவது வணிக இழப்பு மட்டுமே என்றும் மேலும் இது பாஜக, மோதி மற்றும் ரிலையன்ஸ் இணைந்து ஆடும் ஆட்டம் எனவும் இதில் யாரும் தண்டனை பெறமாட்டார்கள் என்று தனது முன்னாள் ‘தோழர்கள்’ முன்பே சொன்னதாக குறிப்பிட்டுவிட்டு, மேலும்இன்றைய ஆட்சியாளர்கள் பெரிய பேச்சு பேசியபடி ஒவ்வொன்றாக இழுத்துமூடுவதைப் பார்க்கையில் சோர்வுதான் எஞ்சுகிறது என்று எழுதிவிட்டு ழுத்தாய்ப்பாக (என்னைப் பொறுத்த வரை அதிர்ச்சியாக)தோழர்கள் எல்லாரும் சேர்ந்து ஆ. ராசாவுக்கு “விஆர் சாரி தோழர்”என்று மின் அஞ்சல் அனுப்பலாம் அது மட்டுமே மிச்சம் என்று எழுதியிருக்கிறார்.
    இவர் கூறுவது போல் 2ஜி அலைக்கற்றை ஊழல் என்பது இவ்வளவு தானா?
    https://m.jeyamohan.in/126193#.XYuXgowpChA


    • ஐயா, அது அவருடைய கருத்து, அவருடைய உரிமை. ஆனால் பிஎஸ் என் எல் நிறுவனத்தின் மோசமான நிலைக்கு ஜெயமோகன் போன்றவர்களும் காரணம்.

     “9. தனிமனித ஒழுக்கம் என்பது ஓயாமல் சொல்வதற்கு / அறிவுரை தருவதற்கு எளிது. ஒரேயொரு எடுத்துக்காட்டு: அவர் பிஎஸ்என்எல் தொலைபேசி நிறுவனத்தில் ஒருகாலத்தில் பணி(!) செய்து கொண்டிருந்தபோது, அரசுசெலவில் மணிக்கணக்கில் பலப்பல வருடங்களுக்காவது – தன்னுடைய தனிப்பட்ட வளர்ச்சிக்காக அல்லது
     வம்புப் பேச்சாக, மணிக்கணக்கில் பேசித் தள்ளியதை நான் நேரடியாக அறிவேன். இரண்டு விஷயங்கள்: 1) அவர் பணி நேரத்தில், தனக்குக் கொடுக்கப்பட்ட வேலைகளுக்குப் பதிலாக இப்படிச் செய்தார் 2) அரசு செலவில் இப்படி நடந்தது – ஆக இரண்டுவகைகளில் அரசுக்கு இவரால் நஷ்டம். இதற்கெல்லாம் மக்கள் வரிப்பணம்தானே செலவிடப்பட்டது? இது அசிங்கமான ஊழலன்றி வேறேன்ன? தயாநிதி மாறன் போன்ற திராவிடப்பேடிகள் செய்ததன் (=பல்லாயிரம் கோடிகள்) சிறு வடிவம்தானே (=சிலபல பத்துலட்சங்கள், குறைந்த பட்சம்!) இது?

     இவரிடம் இருந்து வரும் ஓஸி தொ(ல்)லைதூர தொடர்அழைப்புகளையும் படுவிஸ்தாரமான பேச்சையும் எதிர்கொள்ள, ‘ஐயய்யோ! மதியம் ரெண்டு மணியாயிற்றே, ஃபோன் வருமே, கீழ வெக்கவேமாட்டானே‘ எனப் படுபீதிக்குள்ளாகி பயந்தவர்களும் இருந்தார்கள். (நான் கூட இருக்கும்போதே இரண்டு இலக்கியக்காரர்களுக்கு இது ஏற்பட்டதை அறிவேன் – இதில் ஒருவர் போய்ச் சேர்ந்துவிட்டார்! இன்னொருவர் இன்னமும் இருக்கிறார், பாவம் – எழுதுவதை நிறுத்திவிட்டார், சுபம்)

     நாமெல்லாரும் அப்படித்தானே? ஆற்றோடு போகும் நீரை அவர் குடித்தால் என்ன, நான் குடித்தால் என்ன? ஆனால், அதே சமயத்தில் நாமெல்லாரும் – அய்யோ, பொதுச்சொத்தை, பிறர் இப்படி நிர்மூலம் செய்கிறார்களே எனப் பிலாக்கணமிடுவதில் விற்பன்னர்கள்தாமே? அதனால்தான், பாவம் – அவருக்குத் திடீரென்று மக்கள் வரிப்பணம் பற்றி, அது வீணாவது பற்றி நினைவு வந்துவிட்டது. பயப்படாதீர்கள், சரியா? (ஆகவே, இதிலும் ஜெயமோகன் ஒரு விதிவிலக்கல்லர், எல்லாம் நம்மைப்போலத்தான்!)”

     https://othisaivu.wordpress.com/2018/09/11/post-886/

 4. Vettri Says:

  கீழடி கையடி தீராவிட குஞ்சு கூவான்களின் திடீர் புர்ச்சி என்கிற தலைப்பில் விரைவில் கட்டுரை எதிர்பார்க்கிறேன்.

 5. Swami Says:

  எனக்கு ஜெயமோகன் மீது பெரிய அளவில் மதிப்பு ஏற்படாதற்கு அவர் அரசாங்க வேலையில் (மக்கள் வரி பணத்தில்) ஒபி வெட்டி பஜனை செய்து கொண்டிருந்தார் என்பது ஒரு முக்கிய காரணம்.
  இதன் காரணமாகவே அவர் கொள்ளும் அறசீற்றம் மற்றும் அவர் அள்ளி தெளிக்கும் தத்துவங்கள் அனைத்தும் ‘hypocritical ஆகவே எடுத்துக்கொள்ள இயலும்
  ஒரு அடிப்படை நேர்மை இல்ல மனிதனின் சொற்களாகவே அவை தெரியும்

  இந்த வகையில் மாமல்லன் மீது அதிக மதிப்பு உருவாகிறது
  அவரிடம் அடிப்படை நேர்மை உள்ளது, போலித்தனம் இல்லாத அவரது எழுத்து ஆசானின் படைப்புக்களை விட பல மடங்கு மதிப்பு மிக்கது


  • நீங்கள் சொல்வதற்கு +1.

   ஆனால், இந்த இரட்டைவேடம் முட்டைவேடம் தாண்டிப்பார்த்தால், ஜெயமோகன் சில குறிப்பிடத்தக்க விஷயங்களைத் தொட்டிருக்கிறார் எனவே நினைக்கிறேன்.

   இந்த உலகமே சாம்பல் நிறமய்யா… :-(

 6. soapudappa Says:

  நல்ல கட்டுரை

  முடிந்தால் அடியேனைப் போன்ற
  மரமண்டைகளுக்கு புரிய வைக்க இது போன்று எழுதவும்

  நன்றி


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s