இகழ்வாராய்ச்சிக்கார அகழ்வாராய்ச்சியாள அமர்நாத் ராமகிருஷ்ணா: ‘நான் அறியாமையால் அட்ச்சிவுடுவதற்கு அப்பாற்பட்டு, கூசாமல் புளுகுபவன்!

12/10/2019

நன்றி. பல நாள் சந்தேகம் இன்றுதான் நிவர்த்தியானது. ஒத்திசைவைப் படிக்கும் சொற்ப ஏழரைகளில் முக்காலேமூணுவீசம்பேர் அதில் எழுதப்படுவைகளையும், என்னையும் வெறுப்பவர்கள். வெறுக்கப்படுவது எனக்குப் பிரச்சினையில்லை. ஆனால் ஏனிப்படி விழுந்துவிழுந்து இங்குவந்து படிக்கிறார்கள் என்பது எனக்குப் புரியவேயில்லை. இருந்தாலும், நன்றி!

ஆக – இந்த அன்பர்கள் சிலருக்கு, என் மேல் அசாத்தியக் கோபம், ஆகவே பகீர்க் கேள்வி: அவர்களுடைய லேட்டஸ்ட் அண்ட் க்ரேட்டஸ்ட் அட்டைக்கத்தி ஹீரோ ‘ஆர்கையாலஜிஸ்ட்’ அமர்நாத் ராமகிருஷ்ணா அவர்களையா, போக்கற்ற நான் குற்றம் சொல்கிறேன்? என்ன திமிர், எனக்கு?

…பின்னர், உடனடியாக ‘நீ பாப்பான்’  கீப்பான் என வழக்கம்போன்ற தேவையேயற்ற, துளிக்கூடத் தொடர்பேயற்ற அர்ச்சனை. தடுக்கித் தலைகுப்புற விழுந்தாலும் உங்கள் சாயமடித்த மீசைகளில் மண் ஒட்டவில்லையாமே? தேவையா, என்னெருமைப் பேடிகளே?  தவறுகளைச் செய்யாதவர்களே இல்லை. ஆனால், அப்படிச் செய்தாலும் அவற்றை ஒப்புக்கொண்டு, தம்மைச் செழுமைப்படுத்திக்கொண்டு மேலெழும்புவதுதானே நேர்மைக்கு அடையாளம்?

(சரி. பிற ஏழரைகளும் பொறுமை இருந்தால் இதனைத் தொடர்ந்து படிக்கலாம், பாவம் நீங்கள்! ஏனெனில், இதில் அமர்நாத் அவர்கள் செய்த இன்னொரு தகிடுதத்தம் பற்றியும் எழுதுகிறேன், சரியா?)

-0–0–0-

அமர்நாத் அவர்களுடன் எனக்கு ஒருவிதமான பிணக்கோ வாய்க்காத் தகராறோ இல்லை. அவர் ஒரு நல்ல தந்தையாக மகனாக கணவனாக, ஏன், பெரிய சான்றோராகவேகூட(!) இருக்கலாம். எனக்குத் தெரியாது.  ஆனால், அந்த வீடியோவில் அவர் சொன்ன விஷயங்களும் சொன்ன முறைகளும் – அவருடைய மத்தியஅரசு பதவிக்கும் தகுதிக்கும் திறமைக்கும் படிப்புக்கும்(?) பயிற்சிக்கும்(??)  ஒத்தேவராத அவருடைய பொறுப்பற்ற நடவடிக்கைகளும் – சர்வநிச்சயமாக அருவருக்கத்தக்கவை. அசிங்கமானவை. வெறுத்தொதுக்கித் தள்ளப் படவேண்டியவை…

நானாக, பொய்சொல்லி இட்டுக்கட்டியா எழுதுகிறேன்?

இல்லையே! அவரே தன்னிச்சையாகவும் ‘நக்கலாகப் பேசுகிறோம் என நினைத்து’ உளறிக்கொட்டியதைத்தானே  குறிப்பிட்டு எழுதுகிறேன்? அதற்கும் அதற்கெதிராகவும்தானே தரவுகள் தந்திருக்கிறேன்?

அமர்நாத் சொன்னது, வாய் குழறிப்பேசியதோ அவைக்கூச்சம் காரணமாக வெளிப்பட்டதோ அல்ல. அது சிறு பிழையல்ல, கவனக்குறைவால் அல்லது அவைநடுக்கத்தால் ஏற்பட்ட தவறல்ல. இரண்டு தடவை , மிகுந்த தெகிர்யத்துடன் அதே உளறல் விஷயத்தைச் சொல்கிறார், நிறுத்தி நிதானமாகவே, ஒரு பெரிய்ய ஆசிரியன், மூளைகழன்ற முட்டாக்கூ மாணவனுக்குச் சொல்லக்கூடுவதைப் போலத்தானே, ஹ்ஹ, எவன் சரிபார்க்கப்போகிறான் என்றுதானே சொல்கிறார்? இது எப்படி  #பார்ப்பனசூழ்ச்சி? பார்ப்பனர்களா சூழ்ச்சி செய்து அமர்நாத் அவர்களை உளறவைத்தார்கள்? போங்கடா, முட்டாக்கூவான்களா!

…குலுக்கை வீடியோ ஃப்ரேம்களை நான் சரிபார்த்தேன்; நீங்கள் அபாண்டமாக என்மீது குற்றம் சொல்வதற்கு மாறாக, அவை ஜோடிக்கப்பட்டவையல்ல; நான் கொடுத்ததும் என்னால் திருத்தப்பட்ட வீடியோஅல்ல – மூலத்திலிருந்து கத்தரிக்கப்பட்டது, அவ்வளவுதான், ஆனால் எந்த விஷயத்திலும் எடிட் செய்யப்படவில்லை. பின்புல விஷயங்களில் இருந்து விலக்கப்பட்டு, அவரைக் குற்றம் சொல்வதற்காகக் கயமையுடன் எடுத்துக்காட்டப்படவில்லை.

இயல்பாக , பலப்பல பொய்களைச் சொல்வது, கண்டமேனிக்கும் பீலாவுடுவது, அறியாமையால் உளறுவது, பொய்மையால் திரிப்பது – எல்லாம் அப்படியே இருக்கிறது, அவ்வளவுதான்!

ஒரு பத்து நிமிடம்கூட அவரால் உளறாமல் இருக்கமுடியவில்லை, பாவம். பெரும் பிரச்சினைதான்! (நமக்கு, அவருக்கு இல்லை – அவர் அட்ச்சிவுட்டபின், குண்டிமண்ணைத் தட்டிவிட்டுப் போய்க்கொண்டே இருப்பார்! கேட்டால் மண்அடுக்கு, ஸ்ட்ரேட்டிக்ரேஃபி என்பார்!)

அவர் ரேடியோ கார்பன்14 பற்றி, அந்த நிகழ்வில் அப்படிச் சொல்லவில்லை என்று சந்தேகத்திற்கிடமில்லாமல் நிரூபித்தால், நான் அவரிடம் என்ன, உங்களிடம் கூட பகிரங்கமாக மன்னிப்புக் கேட்கத் தயார். ஆனால் அது அப்படியில்லை என்றால், அந்தப் பரிதாபத்துக்குரிய இகழ்வாராய்ச்சியாளரும் பகிரங்கமாக, தம் பிழைகளை ஒப்புக்கொள்ளத் தயாரா? நீங்கள் வெளிவந்து உங்கள் உளறல்களையும் என் மீதான அபாண்டமான பழிசொல்லல்களையும் ஒப்புக்கொண்டு கருத்துகளை வாபஸ் வாங்கிக்கொள்வீர்களா?

…ஆனால், மாட்டீர்கள். ஏனெனில் அவரிடமோ உங்களிடமோ, அடிப்படை நேர்மை என்பது துளிக்கூட இல்லை. இது சோகம், ஆனால் உண்மை.

ஒருவேளை உங்கள் ஹீரோவுக்கு, தமிழில் பேசவேண்டியில்லாமல் ஆங்கிலத்தில் பேசியிருந்தால் இப்படிச் சொதப்பவேண்டிய பிரச்சினை இருந்திருக்காதோ என்னவோ!  ஆனால் இதிலும் தெரியாத விஷயத்தை (அதாவது சரளமான, கலைச்சொற்களுடன்கூடிய பேச்சுத்தமிழ்) தெரிந்ததுபோலக் காட்டிக்கொள்வதனால்தானே வருகிறது? ஆனால், ஒருவேளை ஆங்கிலத்தில் பேசியிருந்தால், இதைவிடப் பெரிய சதுக்கப் பூதங்கள் கிளம்பியிருக்குமோ என்ன எழவோ!

ஆனால் – அவர் பேசிய உள்ளீடற்ற எக்காளச் சவடால் பேச்சினை எடுத்துக்கொண்டால்  – அறிவியல் புரிதல்களையே விடுங்கள் – உங்களுக்கெல்லாம் அடிப்படை அறிவோ, ஏன், துளிக்கூடச் சிரத்தையோ, எந்த விஷயத்திலும் இல்லை; அதேசமயம் – ஆனால், சொல்லப்போனால் – அவருக்கு, தாம் ஒரு மூன்றாம்தர திராவிட மேடைப்பேச்சாளச் செம்மலாகவே இருக்க ஆசை என்றால் எனக்கும் ஒரு பிரச்சினையும் இல்லை. பிரச்சினை எப்போது வருகிறது என்றால் – அப்படியில்லாமல், தான் ‘துறை வல்லுநர்’ என்று வேடமிட்டு உளறிக்கொட்டும்போதுதான்!

பெரியவர் பிஏகிருஷ்ணன் அவர்களை, அவருடைய கீழடி குறித்த சமனம் மிகுந்த கருத்துகளுக்காக, நான் சிலாகித்து எழுதியதற்குக் காரணம் அவர் ஐயங்கார்/பிராம்மணர் என்பதால் அல்ல – மாறாக, அவருடைய சமனமும் பொறுப்பும் மிகுந்த கருத்துகளுக்காக மட்டுமே!

அதிமூடர்களே! முட்டாக்கூ வெறியர்களே! இதே பெரியவரை, நான் முன்னம் சிலபலமுறை அவருடைய கருத்துகளுக்காகக் கிண்டலும் செய்திருக்கிறேன் என்பதையும் அறிவீர்; அவற்றுக்கும் அவர் ஒப்புக்கொண்டு ஒருமாதிரி பெருந்தன்மையுடன் பின்னூட்டமிட்டார் என்பதையும்… ஹ்ம்ம், இனிமேலும் நான் அவருடைய சிலபல அடிப்படையற்ற பிற கருத்துகளுக்கு மாறான தரவுகளைக் கொஞ்சம் காட்டமாகவே தரக்கூடும். பதிலுக்கு அவரும் என்னை ‘ஹிந்துத்துவா வெறியன்’ அல்லது மூக்கு (‘நாசி’) எனவும் புகழக்கூடும்! இருந்தாலும்… இந்தக் ‘கீழடி’ பைத்தியக்கார வாயோர நுரைதள்ளல்களை எதிர்கொள்ளும் விஷயத்தில், பெரியவர் வாதம் மிகச் சரியானதே! உங்களைப் போன்ற அறிவிலிக் கோவேறுகழுதைகளைச் சலிப்பில்லாமல், அவர் தொடர்ந்து விரட்டுவது சரியே! திராவிட திராபைத்தனத்தால் காயடிக்கப்பட்ட அதிசராசரித் தமிழ்ச் சூழலில், அவர் பணி சிறக்கத்தான் வேண்டும். நன்றி!

…ஆக உங்களுக்கு ஒரு அறிவுரை: உங்களைப் போன்ற அறியாமையில் உழன்று பிலுக்கிக்கொள்ளும் காமாலைக் கண்ணர்களுக்குக் கண்டதெல்லாம் மஞ்சள், அல்லது காவி! அற்பர்களே, அகலுங்கள்!

…இன்னொன்று: ‘குலுக்கை‘ என்ற அமைப்பு, இந்த வீடியோவை வெளியிட்டிருப்பதால், அவர்கள் இதனை ஃபோட்டோஷாப்/எடிட் வகையறாவைச் செய்து, அமர்நாத் அவர்கள் மீது அது கொண்ட காழ்ப்பினால், அநியாயத்துக்குச் சேற்றை வாரியிறைத்திருக்கலாம் என்பதும் ஒரு சாத்தியக் கூறு என்றாலும் – அதே கூட்டத்துக்கு என் பாண்டிச்சேரி அன்பர் நேரடியாகச் சென்று புளகாங்கிதம் அடைந்ததைத்தான் எனக்குச் சொன்னார் – அப்படித்தான் எனக்கு இந்த அக்கப்போர் விஷயங்கள் அறிமுகமாயின; இதனையும் நான், என்னுடைய முந்தைய பதிவில் குறிப்பிட்டிருக்கிறேன்.

மேலும், இந்தக் ‘குலுக்கை’ அமைப்பு இதேபோல குலுங்கிக் குலுங்கிச் சிரிக்கவைக்கும் பலப்பல திராவிடதர வீடியோக்களைத் தரவேற்றியிருக்கிறது; அதன் பின்னால் இருப்பவர்கள், தொழில்முறைப் போராளிக் கோமாளிகள்தாம்!

தப்பிக்க வேண்டாம், நன்றி! அவர் செய்தவை, அசிங்கமானவை, அதை சால்ஜாப்பு சொல்லாமல் ஒப்புக் கொண்டுபோவதை விட்டுவிட்டு பெரிதாகக் குற்றம் சொல்லவருகிறீர்கள்! உளறியது நானா, அவரா??

-0-0-0-0-

அதே வீடியோவில், பத்தே நிமிடப் பேச்சில் அவருடைய இன்னொரு உளறல் பற்றி இப்போது. (அந்த நகைக்கத்தக்க பேச்சில், வழிநெடுக, உளறல்களும் பொய்மைகளும்தான் – நான் கடைசியாக அதனை (மறுமறுமறு…படியும்) பார்த்து எண்ணியபோது குறைந்த பட்சம், 16 மேலதிகப் பிழைகளும் அட்ச்சிவுடல்களும் இருந்தன! ஆனால் இத்தோடு போதும்!)

…அதே வீடியோவில்  சுமார் 3.44 நிமிடங்களின்போது, நமட்டுச் சிரிப்புச் சிரித்துக்கொண்டே கேட்கிறார்,

“[வொங்க]… ரிக்வேதம் 1500 பிஸி என்கிறார்கள், அதற்கு எந்த கார்பன் வைத்துக் கணித்தார்கள்? இதுவரை [அதை] கார்பன் வைத்துக் கணித்ததே கிடையாது!” என! <கைதட்டல்>

“…அதக் கேட்டா சும்மா மேக்ஸ்முல்லர் ஒரு டேட் கொடுத்தாருன்னு சொல்வாங்க… 1500 பிஸி…  அதற்கு முன், நம்ம சங்ககாலத்துக்கு 300 பிஸின்னு சொல்றீங்க, வேதகாலத்துக்கு எப்டி  1500 பிஸின்னு சொல்றீங்க?” <கைதட்டல்>

~4.20 வாக்கில் சொல்கிறார்:

“…அது அறிவியல்பூர்வமாகவா கணிக்கப்பட்டது? அதற்குப் பதில் இதுவரை யாராலும் சொல்லமுடியாது… கேட்டாலும் சொல்லவும் மாட்டாங்க…” <கைதட்டல்>

…ஏமாந்தால், டைனோஸர்கள் எல்லாம் ~65 மில்லியன் வருடங்களுக்கு முன் விசித்திரமாக இறந்துபோனதைக் குறித்த அவரது மேலான ஆராய்ச்சி முடிவை, “அந்தக் காலத்தில் மிருகங்களுக்கு உதவும் வரையில் ஆம்புலன்ஸ் வண்டிகளைக் கீழடித் தமிழர்கள் கண்டுபிடித்திருந்தாலும் ‘வொங்க’ ஆரியர்கள் அதனை உபயோகிக்க விடவில்லை! மேலும், அப்போதும் தொல்லியல் இயக்குநராக இருந்த அதே நாகசாமி, டைனோஸர்களைக் காப்பாற்ற தமிழக வனக்காவல் துறையினர் தயாராக இருந்தபோதும், அவர்கள் மாட்டுவண்டிகளைக்கூட உபயோகிக்கவிடவில்லை!” என மேதாவித்தனமாகச் சொல்லிவிடுவார்போல!

பிறகென்ன, அவர் பார்வையாளப் பேடிகளிடமிருந்து இதற்கும் ஏகோபித்த <கைதட்டல்>. நன்றி.

-0-0-0-0-

அவருடைய ‘அறிவியல்’ இருக்கும் அதிஅற்புத அழகில், இந்தக் கேள்வி ஒன்றுதான் அவருக்குக் கேடு!

இந்த மாதிரி அரைகுறைகள், என்ன தெகிர்யத்தில், துளிக்கூட வெட்கமேயில்லாமல் மத்திய அரசிடம் கை நீட்டி மாதச் சம்பளம் பெறுகிறார்கள் என்றே தெரியவில்லை!.  இருந்தாலும் கொஞ்சம் விரிவாக இதனைப் பார்க்கலாம்.

பிரச்சினை என்னவென்றால் – நம் அமர்நாத் அவர்கள், அவர் தொழிலுக்குத் தேவையான முக்கியமாக ஆய்வுகளைப் படிக்கவில்லை, ஆய்வாளர்களைத் தெரிந்துகொள்ளவில்லை – காற்றுவாக்கில் கேள்விப்பட்ட விஷயங்களை (~மேக்ஸ்ம்யுல்லர்) மானேதேனே கலந்து நிறுத்தி நிதானமாக அட்ச்சிவுடுகிறார்.

மேலும் – அடிப்படை மொழியறிவியல் (philology), மொழியியல் (linguistics) எனவும் ஒன்றையும் அறிந்துகொள்ளாமல் பேசுகிறார் என்பதுதான் இதனால் தெரிகிறது. வெறுமனே அகழ்வாய்வு, ஸ்ட்ரேட்டிக்ரஃபி பஜனை அதுஇது எனவே (அவையும் முக்கியமானவை என்றாலும்) தன் பொழுதை ஒட்டியிருக்கிறார், அவற்றையும், அடிப்படைகளான கார்பன்14 கால நிர்ணய வழிமுறையைச் சரியாகப் புரிந்துகொள்ளாமல்தான் என்று…. சோகமடா, சோகம்!

1. ரிக்வேதம் படைக்கப்பட்ட மொழி என்பது நம்மால் இப்போது ‘வேதகால ஸம்ஸ்க்ருதம்’ என்றழைக்கப் படுவது, குறைந்தபட்சம் சுமார் 2000-1500 பிஸி இ (பொதுயுகத்துக்கு முன்னால்) வழக்கிலிருந்த மொழி. பிராம்மி வரிவடிவம் எனவொன்று பாரதத்தில் உருவாவதற்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே புனையப்பட்டது .பாணிநி சமயத்தில் ~ 500 பிஸி இ காலகட்டம் வாக்கில் மட்டுறுத்தப்பட்டு நிறுவப்பட்ட செழுமைப்படுத்தப்பட்ட ‘செம்மொழி’ ஸம்ஸ்க்ருதம் அல்ல அது.

2. அது பலப்பல நூற்றாண்டுகள் எழுத்து வடிவத்தில் இல்லாமல், பேச்சுவழக்கிலேயே (ஸ்ருதி, எழுதாக்கிளவி) தலைமுறை தலைமுறையாகச் சேர்க்கப்பட்டு வந்திருக்கிறது. எழுத்தில், வரிவடிவங்களில் வினையப் படவில்லை. அது ஒரு தொகை நூல்; பலர் பல காலகட்டங்களில், நூற்றாண்டுகளாக எழுதியிருக்கின்றனர். சர்வ நிச்சயமாக 1200-1500 பிஸி இ வாக்கில் அது தற்போதைய முழுமை வடிவத்திற்கு வந்துவிட்டது. (இதை எப்படிக் கார்பன்14 வைத்துக் கால நிர்ணயம் செய்யமுடியும்? என்ன பைத்தியக்காரத்தனமிது, அமர்நாத் பேத்துவது? இதற்கும் கைதட்ட ஒரு அற்பர்கள் கூட்டம், என்ன சொல்ல… ஏதோ, இந்தக்கால இளைஞ ஆண்கள் பெண்கள் செய்யும் இந்த ‘டேட்டிங்’ எழவையும் கார்பன்14 டேட்டிங் வழியாகத்தான் அறிவியல்பூர்வமாகச் செய்யவேண்டும் எனச் சொல்லாத வரை, அவர் அந்த அளவுக்கு கார்பன்14 டெர்ரரிஸ்ட் ஆகாதவரை, நல்லதுதான்!)

3. பின்னர் பல நூற்றாண்டுகளுக்குப் பின், எழுதாக்கிளவியாக இருந்த ரிக்வேதம் எழுதப் பட்டது. அவற்றின் பல சுவடிப்பிரதிகள் காலவெள்ளத்தில் அடித்துக்கொண்டு போயின. தற்போது, நம்மிடம் (புணே நகரத்து பந்தார்கர் ஓரியண்டல் ரீஸர்ச் இன்ஸ்டிட்யூட் – போரி) இருக்கும் முப்பது பிரதிகள், ‘வேதகால ஸம்ஸ்க்ருதம்’ மொழி வடிவில் நாகரி வரிவடிவத்திலும் ஷாரதா வரிவடிவத்திலும் எழுதப்பட்டிருப்பவை. இவற்றில் மிகப் பழையது, 1464ஆம் வருடத்தியது. உலகளாவிய அளவில் ரிக்வேதக் கையெழுத்து/ஓலைப்பிரதிகள் சுமார் 80 இருக்கலாம் எனவொரு அனுமானம் இருக்கிறது. (வருந்தற்குரிய விதத்தில், மேக்ஸ்ம்யுல்லர் உபயோகித்த சில ஓலைச்சுவடிக் கட்டுகள், இந்தியாவில் இப்போது இல்லை)

4. ரிக்வேதம் ஒரு எழுதாக்கிளவியான காரணத்தால் மொழியியல், மொழியறிவியல், சமகாலப் பிறமொழிச் சொற்கள், அப்பிறமொழிகள் தொடர்பான கற்செதுக்கல்கள், படங்கள், வரலாறுகள் மூலமாகத்தான் அதன் காலம், நம்மால் பெரிதும் மதிக்கப்படவேண்டிய சான்றோர்களால் (அதாவது, நம் அமர்நாத் அவர்கள் போன்றவர்களால் அல்ல!) சிரத்தையுடன், அறிவியல் பூர்வமாகக் கணிக்கப்பட்டிருக்கிறது. இந்தத் தொகைநூல்,  2000 பிஸியி-யில் இருந்து 1500 பிஸிஇ க்குள் தொகுக்கப்பட்டிருக்கவேண்டும் (இன்றிலிருந்து 3500-4000 வருடங்கள்முன்) என்பது பலருடைய ஏகோபித்த கருத்து.  இதில் மார்க்ஸிய வரலாற்றாளர்களும், பெருமை மிக்க பாரத, வெள்ளைக்கார அறிஞர்களும் அடங்குவர். 1200 பிஸிஇ-இல்தான் ரிக்வேதம் முடிவுற்றது என்று சொல்பவர்களும் இருக்கிறார்கள். (மேக்ஸ்ம்யுல்லர் பேரில் எனக்குப் பெரிய மதிப்பு இல்லாவிட்டாலும், அவர் சொன்னாரென்று எவரும் இந்த 1500 பிஸிஇ வருடத்தை எடுத்துக்கொள்ளவில்லை! எப்படி தெகிர்யத்துடன் இந்த அமர்நாத் அவர்கள் இப்படி உளறுகிறார்?)

5. மைக்கெல் விட்ஸெல் எனும், இடதுசாரிகளாலும் பாரதஎதிரி லிபரல்களாலும் திராவிடர்களாலும் போற்றப்படும் அறிஞர்கூட (இவருடைய குறை ஆராய்ச்சிப் பார்வைகளுடன் எனக்குப் பிரச்சினைகள் இருந்தாலும் – எடுத்துக்காட்டுகளாக, அவருடைய தவறான முழிபெயர்ப்புகளும், ஆதாரமேயில்லாமல் – அவருக்கு எதிர்கருத்து சொல்பவர்களை சும்மா ‘ஹிந்துத்துவர்’ எனக் குறிப்பிட்டு அகல்வதும், ‘ஆர்யர்’கள் வந்தேறிகள் எனச் சொல்வதும்)  ரிக்வேதத்தின் உருவாக்கத்தை 1400 பிஸிஇ-க்கு முன்னால் தள்ளமுடியாது என்கிறார்!

ஆர்கயோஅஸ்ட்ரானமி (archaeo-astronomy, பண்டைய புத்தகங்களில் வானஸாஸ்திரத் தரவுகள்  பற்றிய படிப்பு) வழியாகப் போனால்,  இன்னமும் பல சுவையான செய்திகள்; ஸம்மர் ஈக்வினாக்ஸ் (மார்ச் 21ல் வருவது, summer / vernal / spring equinox)  எனப்படும் வஸந்த உத்தராயணத்தை எடுத்துக்கொண்டு பார்த்தால் – அது நம் புவியின் ப்ரிஸெஷ்ஷன் (precession, இதற்குத் தமிழ் வார்த்தை என்ன?) காரணமாக, சுமார் ஒவ்வொரு ஆயிரம் வருடங்களுக்கு ஒருமுறையும், அந்த நாள் ஒவ்வொரு நட்சத்திரத்தின் கீழ் வரும். ஆக, ரிக் வேதத்தில் ருத்ரனின் கதை வழியாகப் பார்த்தால் அது ம்ருகஷீர்ஷம் – ஆகவே  அது சுமார் 4000 பிஸிஇ கதை. ஷதபத ப்ராஹ்மணத்தில் வரும் க்ருத்திகை சமயம் அது 2000 பிஸிஇ. இன்னமும் இப்படியே எழுதலாம்…

இன்னமும் — பேலியோ எத்னோ பாட்டனி – paleoethnobotany,  archaeobotany (பண்டைய அகழ்வாராய்ச்சித் தலங்களில் தாவர வகைகள், அவற்றின் மானுட உபயோகங்கள் குறித்த படிப்பு) phytolith, ஃபைட்டோலித் ஆராய்ச்சிகள், பேலினோலஜி palynology  (மகரந்தம் வழியான தொல்லாராய்ச்சிகள்) … … என்றெல்லாம் எவ்வளவோ அறிவியற் கருவிகளும் புலங்களும் இருக்கின்றன…

இப்போதைக்கு இவ்வளவு போதும் நம் அறிவியல்பூர்வ அகழ்வாராய்ச்சிக்காரரின், இந்த அறியாமையைப் பறைசாற்றுவதற்கு…

-0-0-0-0-

இம்மாதிரி தேவையேயில்லாமல் மசுர்க்கூச்சல்  ‘அரசியல் ஏற்றப்பட்டுள்ள’  விஷயங்களில் — அறிவுபூர்வமான சிந்தனைகளை விட, உணர்ச்சிபூர்வமாக உளறிக்கொட்டுதல்களுக்குத் தான் பப்பரப்பா அதிகம், என்ன செய்ய! தரவுகளை வைத்துக்கொண்டு கருத்துகளையும் கதையாடல்களையும் சமைத்துக்கொள்வதை விட்டுவிட்டு – கண்டமேனிக்கும்கதையடித்துவிட்டு அந்தக் கட்டுக்கதைகளுக்காக தரவுகளை வளைப்பது அல்லது உருவாக்குவது, உண்மைகளை இழிவுசெய்து காயடித்து பொய்மைகளைச் சொகுசாகப் பரப்புவது – என்பது மசுர்க்கூச்சல் திராவிடத்தால் கற்பழிக்கப்பட்ட தமிழ்ச்சூழலில் மிக எளிது.

ஆனால் – அகழ்வாராய்ச்சி போன்ற விஷயங்களிலும், தொழில் நுட்ப ரீதியாக பெரும்பாய்ச்சல்கள் நடந்த வண்ணம் இருக்கின்றன.  ஆகவே, ஒரு விஷயம்: புதிய தொழில் நுட்பங்கள் வளரவளர, ஆணித்தரமான தரவுகள் வரவர, புதிய பார்வைகள் எழும்பும்போது, நாம் நம் கருத்துகளைச் செழுமைப்படுத்திக்கொண்டு நம் சிந்தனைகளைச் செம்மை செய்துகொள்வதுதான் சரி. அதாவது, நமக்குத் தொழிலறம் எனவொன்று இருந்தால்!

எப்போதுமே நான் தான் சரி என்று சொல்வதும் அடாவடித்தனம், அஅறிவியல் மனப்பான்மைதான். ஆகவே – நம்மால் சொல்லமுடிந்தது என்னவென்றால்: இதுவரை கிடைத்துள்ள சந்தேகப்படமுடியாத கறார் தரவுகளின் படி, இப்படித்தான் விஷயங்கள் இருந்திருக்கலாம்; ஆனால், அப்படி இருந்திருக்க முடியாது. ஆனாலும் பிற்காலங்களில் இவை கொஞ்சம்போல மாறலாம். அப்போதும் நமக்கு நேர்மை வேண்டும். நம்மை மேம்படுத்திக் கொள்ளவேண்டும்.

மார்க்சிய குழப்ப அரசியல்சரிகளுக்கும் மட்டரகமான திராவிடத்துக்கும் இங்கே இடமில்லை. இது அறிவியல். ஐயம்திரிபற ஆய்ந்தறியப்படுவது.

ஆனால், திராவிட திராபைகளிடம் இந்தத் தொழிலறத்தை எதிர்பார்க்க முடியாது.

ஏனெனில் அவர்களின் அடிப்படைகளே – திராவிட இனம், தனித்துவம், லெமூரியம், இனமானம் போன்றவைகளே – வெறும் பம்மாத்துகள்; ஆதாரமற்றவைதாம்; க்றிஸ்தவ பரப்புரை வெறிபிடித்த மிஷனரிகளாலும் ப்ரிட்டிஷ் காலனியத்தாலும் உருவாக்கப்பட்டவை, பின்னர் ‘திராவிட’ வரலாற்றாளர்(!)களாலும் பின்நவீனத்துவப் போராளிகளாலும் விசிலடிச்சான் குஞ்சப்பனார்களாலும் போஷகம் செய்யப்பட்டவை அவை.

இந்தத் திராபைகளின் ஊற்றுக் கண்களே இப்படி இளிக்கும்போது, நம் செல்ல திராவிடர்களிடம் பகுத்தறிவையோ அறிவார்ந்த விவாதங்களையோவா எதிர்பார்க்க முடியும்?

அவர்களென்ன, தங்கள் அறிவைப் பதுக்கி வைத்துக்கொண்டா இப்படி ஓரவஞ்சனையுடன் செயல்படுகிறார்கள்? இருப்பதைத்தானே ஐயா, அவர்களாலும் வெளிப்படுத்த முடியும், பாவம்?

ஹ்ம்ம்…

19 Responses to “இகழ்வாராய்ச்சிக்கார அகழ்வாராய்ச்சியாள அமர்நாத் ராமகிருஷ்ணா: ‘நான் அறியாமையால் அட்ச்சிவுடுவதற்கு அப்பாற்பட்டு, கூசாமல் புளுகுபவன்!‘”

 1. பாப்பான ஒழி Says:

  [nonsense deleted]

 2. பாப்பான ஒழி Says:

  [அன்புக்கும் மரியாதைக்கும் நன்றி, இந்தப் பின்னூட்ட வெறி எடுத்தெறியப்பட்டது; தரவுகளுடன் வரலாம், இல்லையேல் கைதட்டிக்கொண்டே, அடக்கமிலாமல் உங்கள் அமரநாதருள் உய்ந்து உங்கள் சொந்த ஓட்டையில் குலுக்கையைக் குலுக்கிக்கொண்டு உங்கள் ஓட்டைகளனைத்தையும் மூடிக்கொண்டும் இருக்கலாம், உங்கள் விருப்பம்.

  __ரா.]

 3. RC Says:

  அய்யா, Precession – சுத்திசை மாற்றம், கூக்ல் உபயம் சரி தானே?


  • ஐயா, சரியாக இருக்கலாம். நன்றி. நான் கூக்ள் பார்க்கவில்லை.

   சுத்திசை மாற்றம் = சுற்று திசை மாற்றம்? ஆனால்  இந்த ப்ரிஸெஷ்ஷன் எழவில், ஒரு சுற்றிக்கொண்டிருக்கும் பொருளின்  (உதாரணமாக ஜைரொ அல்லது விஜயகாந்த் பம்பரம்) அச்சு / அக்ஸிஸ் தானே மாறுகிறது? ஆக, சுற்று அச்சு மாற்றம்? பிர்யலியே நைனா! :-( ஆனால் நான், அந்தக் கலைச்சொல்லை சரியாக விரிக்கவில்லையோ? நீங்கள் யோசித்துத்தான் சொல்லியிருப்பீர்கள், எனக்குத்தான் புரிந்துகொள்ளமுடியவில்லை.

   வரவர தமிழில் கலைச்சொற்கள் எழுதவேண்டும் என்றாலே எனக்கு ஒர்ரேயடியாக கொலைச்சொற்கள் வாயில் வந்து தெறிக்கின்றன, என்ன செய்ய! (எதையோ எழுதவந்து வேறு எந்த எழவையோ எழுதிவிடுகிறேன் வேறு!)

   • RC Says:

    அய்யா,
    நீங்கள் எழுதியது போல் ‘அச்சு’ சொல்லில் வரவேண்டும் என்றுதான் நினைத்தேன்.ஆனால் அது நீளமாக அமைவதும் கூடாது என்ற விருப்பம் இருந்தது.பஞ்சாங்கம்,ஜோதிடம் போன்றவற்றில் பயன்படுத்தும் ‘அயனம்’ என்ற சொல்லையும் இணைத்து யோசித்து தேடியதில் ‘சுத்திசை மாற்றம்’ சரியாய் இருக்கலாம் என்று நினைத்தேன்.கேட்டா அச்சு மறைஞ்சிருக்குன்னு டொக்கு வச்சு திராவிட் ஆகிட்டா போச்சுன்னு நினைச்சேன். :-)

    நீங்கள் எழுதிய பதிவைத்தாண்டி கலைச்சொல் நோக்கி விவாதத்தை இழுப்பதும் முறையல்ல ..’கந்தன் புத்தி கவட்டையில’ என்ன செய்ய :-)


    • ஐயா, தாங்கள் சொல்வது புரிகிறது. கணக்கில் கொள்கிறேன்.

     யுவகிருஷ்ணா செய்யப்பட்ட எஸ்ரா பண்ணப்பட்ட என்பது போல, ‘அமர்நாத் செய்யப்பட்ட அகழ்வாராய்ச்சி’ என்பதும் ஒருமாதிரி வசைச் சொல்லாடலாக ஆகும் போலவிருக்கிறதே!

     கார்பன் டேட்டிங் வைத்து நம் தொல்லியல் ஆராய்ச்சியாளக் குசுக்களின் மேலான கருத்துகளால் கீழடியின் தொன்மையைக்கூட நம்மால் விலாவாரியாக விளக்கிக்கொள்ள முடியும்போது – தாங்கள் கலைச்சொற்கள் பற்றி இந்த விவாதத்தை எடுத்தது மிகச் சரியே! ஒரு பிரச்சினையும் இல்லை, சரியா?

     (ஆனால் என்னைப் பொறுத்தவரை, கலைச்சொற்களுக்கு ஜப்பான்காரர்கள் செய்வது போல – நாமும் பிறமொழிச் சொற்களை, ஆங்கில/ஸம்ஸ்க்ருத/ஜெர்மன்/… வார்த்தைகளை அப்படியே உபயோகிப்பதுதான் நன்று; எல்லாவற்றையும் தமிழ்ப்படுத்திஎடுத்து எஸ்ரா செய்வதில் எனக்கு அவ்வளவு பிடித்தமில்லை – இருந்தாலும் அவ்வப்போது கொஞ்சம் தினவு, என்ன செய்ய!)

 4. Vijay Vanbakkam Says:

  Good rebuttal. For Indologists , the main method of dating Rg Veda is the linguistic analysis. To talk of ‘karithundu’ as a silver bullet to determine age of any artifact is ridiculous and as a reverse the absence of ‘karithundu’ as a complete impossibility of dating an artifact or mentifact , not to speak of no understanding of half-life.


  • Hmm. Am happy that, at least Mu Varadarasanaar’s novel ‘Kari -th-thundu’ was not invoked by our jokers to justify the carbon dating at Keezhadi!

   …All I am hoping for is, this Amarnath is particularly, exceptionally bad, and is truly an exception – but that, other colleagues of his at the arch dept of TN are much better and not so mediocre!

   Oh the hope. :-(

 5. A.Seshagiri Says:

  சார்,அமர்நாத்திற்கு போட்டியாக கீழடி ஆராய்ச்சியில் பல அகழாய்வாளர்கள் இறங்கியிருப்பார்கள் போலிருக்கிறதே! பாவம் நீங்களும் பெரியவர் பி.ஏ.கிருஷ்ணனும்(சற்று முன் அவர் முகநூல் பக்கத்தில் படித்து விசனப்பட்டது.)
  https://pakrishnan.com/2019/10/13/is-keeladi-a-place-of-magic/


  • நன்றி. இன்னும் இரண்டு அன்பர்களும் இந்தச் சுட்டியை அனுப்பியிருக்கிறார்கள். :-( பொறுமையாக அதனையும் ஃரன்ட்லைன் காட்டுரையையும் படித்தேன்.

   ஃப்ரன்ட்லைன் எழவின் அற்பத்தனமும் அறிவிலித்தனமும், என்ராம் அவர்களையும் தாண்டி வெகுதூரம் சென்றுவிட்டன. நன்றி!

   “கீழடி மேலடி நடுவடி தடாலடி – சில குறிப்புகள்” என ஆரம்பித்து எழுதலாமென்றால், நமக்கு இறைவன் திருவடிதான் சரணம் எனத் தோன்றுகிறது…

   அகழ்வாராய்ச்சியே அமர்நாத் செய்யப்பட்டுள்ள இக்காலகட்டங்களில்… …

 6. Sundar Says:

  Unfortunately I’ve seen this cartoon in “https://xkcd.com/84/” .
  Later I came to know today is Columbus day in US.

 7. பொன்.முத்துக்குமார் Says:

  Ram, as always … Kudos to your patience and passion (to explain in detail for the benefit of guys like me) :)


  • Sir, thanks for your kind words and your uncalled-for self-deprecation. In my opinion, anyone with some little freetime in their hands can do all this.

   But honestly, I don’t know whether I have the patience&passion for the right kind of things. :-(

   I seem to be getting worked up about all the wrong things such as fakery/mediocrity, which is not really a great thing to do – maybe only these are happening in our land.

   hmm…

   • பொன்.முத்துக்குமார் Says:

    In today’s PAK’s FB post, he mentioned that, he had been contacted by professional archelogists (and he’s also contacting a few of them) who agree with his Keezhadi related arguments, but are very scared to come out into the open, fearing the Dravidians and the self-styled “Tamil linguists”. I was totally aghasted. If the professionals and intellectuals are afraid to talk the truth openly, then who else should and will ? What’s TN turning into ?

    At this juncture, what you and PAK likes are doing should be gaining ground. Otherwise, there won’t be anyone left to call the spade the spade.


    • Dear Muthukumar, I do not exactly know what PAK has written, anyway, but… all I can offer is this quote from Seneca…

     “We are more often frightened than hurt; and we suffer more from imagination than from reality.”

     — Lucius Annaeus Seneca

     My annotation: Some folks are afraid of imaginary things. Tamil/Dravidian lunatics suffer from all the imagined grandeur of their non-existent pasts. The reality will set them both free.

     Thanks.

     • பொன்.முத்துக்குமார் Says:

      According to the feedback from one Mr.Ramachandran to PAK’s post, even Iravatham Mahadevan himself had to keep mum / compromise at some times fearing the dravidians.


      • Sir, usually, an youngster sends me some ‘controversial’ posts of PAK – but I haven’t recd or read this stuff.

       Anyway, my platitudes apart, I know for a fact that this ‘fear’ happened – even with many other scholars. (I kinda respect IM, though I have kindal-fied him once too – because there is/was NOTHING called Tamil Brahmi, there was only Brahmi and all that)…

       In some uncharitable moments, when I am bitter, I have used harsh thingies such as ‘நெட்டை மரங்களென நின்று புலம்பினார்’ etc to describe such behaviors. But it is also bad on our part to play the part of ‘என்ன கொடுமையிது’வென்று பார்த்திருந்தார் type.

       But, having observed the goings-on for so many years now, I am 100% convinced that, if Dravidian narratives can be put a fullstop to, then our TN will begin to shine again, like it did before the advent of these scumbags.


 8. […] எதற்கெல்லாம் காலம்கணிக்கலாம் என்பதையும் புரிந்துகொள்ளாமல், பகிரங்கமாக தம் அறியாமையைப் […]


 9. […] இகழ்வாராய்ச்சிக்கார அகழ்வாராய்ச்சி… 12/10/2019 […]


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s