கீழடி மேலடி நடுவடி தடாலடி – சில கொல்லியல் கொறிப்புகள்

15/10/2019

நம் ஆராய்ச்சியாளர்களின் பேரும்புகழும் நக்கலும்சிரிப்பும் மூச்சுமுட்டவைக்கும் அதிவுயரங்களில் இருக்கும் இந்த அழகில், நண்பர்களும் அன்பர்களும் நம் பழம்பெருச்சாளிப் பெருமைகளை நமக்குநாமே என விளக்கோவிளக்கு என விளக்கிக்கொண்டிருக்கும் வேளைகளில் – நமக்குஎனக்கு, இறைவன் திருவடிதான் சரணம்.


இந்தக் கீழடி உரியடி உற்சவத்தில் ஈடுபடவைத்து, என்னையும் கடவுள் நம்பிக்கை கொண்டவனாக மாற்றியதில், தமிழகக் கொல்லியல் அகழ்வாராய்ச்சித் துறைக்குத் தான் முக்கியமான பங்கு. தெய்வம் நின்று கொல்லுமியல். நன்றி.

ஐயோ! நான் தவறாக எழுதவில்லை! நம் தொல்லியல் துறை ஆராய்ச்சிகளையும் அதன் அறிக்கைகளையும் படித்துக் கொல்லென்று சிரிப்பதனால்தான் அந்தத் துறையானது என்னால் பெயர்மாற்றம் செய்யப்பட்டு,  கொல்லியல் துறையானது என்றறிக. (இதற்கும் லீலாவதி, தாகிருஷ்ணன், ஆலடிஅருணா, அண்ணாநகர் ரமேஷ், சாதிக்பாட்சா போன்றவர்களின் திராவிடக் கருணைக்கொலைகளுக்கும் ஒரு தொடர்புமில்லையாமே, அப்படியா?)

-0-0-0-0-

…நான்கு திசைகளிலிருந்தும் நம்மை ரவுண்டு கட்டிக்கொண்டு அடிக்கிறார்கள், பாவிகள்!

கீழ்திசை – துறைவல்லுந துரைமார்கள்(!): ஒரு பக்கம் நம் கொல்லியல்துறை கொல்லுநர்கள் – கார்பன்14 கால நிர்ணயமுறையைக் கூடச் சரியாக அறியாமல் அதை வைத்துக்கொண்டு எதற்கெல்லாம் காலம்கணிக்கலாம் என்பதையும் புரிந்துகொள்ளாமல், பகிரங்கமாக தம் அறியாமையைப் பறைசாற்றிப் பெருமைப்படும், அதாவது, அடக்கம் அமர்நாதருள் உய்க்காமல் டமால்டுமீலென்று ‘அமர்நாத் செய்யும்’  ஆராய்ச்சி அன்பர்கள்; அதாவது, இளம் அமர்நாத் ராமகிருஷ்ணன் போன்ற சான்றோர்கள்.

இவர்கள் கொஞ்சம் தென்பக்கம் அகன்று, இலங்கையில் என்ன சமகால அகழ்வாராய்ச்சிகள் நடந்துள்ளன அங்கு இதற்கு முற்சமயங்களிலேயே என்னஎன்ன கிடைத்துள்ளன, வடக்கில் என்னென்ன, எப்படிஎப்படி என்றெல்லாம் சுற்றிப் பார்த்தால் – இந்தத் தேவையற்ற ஆஹாவூஹூ கீழடி மசுர்க்கூச்செறிதல்களைத் தவிர்க்கலாம்…

ஆனால் இந்தக் கொல்லியலாளர்களுக்கு, உலகில் எங்குமே இல்லாமல் தமிழகத்துக் கீழடியில்தான் மனிதகுலமே உதித்துமேம்பட்டது என்று எப்படியாவது புகுந்துபுறப்பட்டு ‘நிறுவுவதில்’ இருக்கும் முனைப்பு – தொழிலறத்திலோ அடிப்படை நேர்மையிலோ இல்லை. என்ன செய்ய.

மேல்திசை – துறைவல்லுந மேலதிகார துரைமார்கள்: ஐம்பது வருடங்கள் முன் நடந்த, நன்றாகவே ஆவணப்படுத்த அண்மைய வரலாற்றையே அறியாமல், இஷ்டத்துக்குத் திரித்து, அதையும் பகிரங்கமாக எழுதி வெட்கமில்லாமல் பெருமைப்படும், தமிழகத் தொல்லியல்துறை தலைவ இயக்குந ஐஏஎஸ் அதிகாரிகள் – நம் இளம் உதயசந்திரன் ஐஏஎஸ் அவர்களைத் தான் குறிப்பிடுகிறேன்! (சும்மா 50 வருடத்துக்கு முன்னால் என்ன நடந்தது என்பதைக்கூட அறியாமல் உளறிக்கொட்டியிருக்கும் இந்த இளம் அன்பர், சங்ககாலம் மங்கமாய்மாலம் என 2500 ஆண்டுகள் முன்னால் சென்று ஆய்வதற்கான அமைப்புகளின், அமர்நாத் செய்பவர்களின், தலைவரும் வழிகாட்டுபவருமாமே, அப்படியா?)

இம்மாதிரித் தரவுகளைத் திருப்பும், இல்லாத தொடர்புகளைத் தொழில்முறையில் உருவாக்கும் ஃபேக் சான்றோரிய ஆசாமிகளால் – எந்த அகழ்வாராய்ச்சிதான் உருப்படியாக நடக்கச் சாத்தியக்கூறு இருக்கிறது, சொல்லுங்கள்?

வடைதிசை – ஊடகப் பேடிகள்: வழக்கம்போலவே ஒரு மசுரும் தெரிந்துகொள்ளாமல் இனமானம் இனமேன்மை எனச் சாதாரணமான ஒரு அகழ்வாராய்ச்சி விஷயத்தை ஊதி உசுப்பி விட்டு அந்த உணர்ச்சிகரத்தீயில் குளிர்காய்பவர்கள், ஏன், பீட் (bead) என்றால் மணி என்பதைக்கூட அறியாமல், மணிகளுக்கு, அவைகள் கோர்க்கப்படவேண்டிய தேவை இருப்பதால் (இந்தப் பேடிகளுக்கு இருப்பதைப் போலவே) ஓட்டைகள் இருக்கவேண்டும் என்பதையும் அறியாமல் அப்படி ஒரு உளறிக்கொட்டல்.

வழக்கம்போலவே, இதைச் செய்ததும் ‘த ஹிந்து‘ தினசொறிப் பத்திரிகைக் குழுமம்தான்!

இது இண்டேக்லியோ ஸீல் வகை. செதுக்குச் சின்னம் / முத்திரை / ‘மருத்துவ குணம்’ உடைய செல்லக்கல் இன்னபிற. அது அங்கு கிடைத்ததால், அங்கு செய்யப்பட்டதல்ல. அது பீட் (மணி) அல்ல. அந்தக் கார்னிலியன் வகைக் கல், இப்போதும் கிடைக்குமிடம் குஜராத்தில் ஆஃப்கனிஸ்தானில்… கீழடியில் அந்தக் கச்சாக் கற்களை இறக்குமதி செய்து அவற்றிலிருந்து  இந்தமாதிரி ஸீல்களை உருவாக்கியிருக்கலாம் என்றால், அதற்கும் ஒரு தரவும் இல்லை.

அந்த உருப்படி அழகாகத்தான் இருக்கிறது; ஆனால் அதற்கும் கீழடிக்கும் நேரடி முடிச்சுப்போட பலப்பல தரவுகள் வேண்டும்.

இது குழு இலச்சினையாக (டோடெம்) அப்படியிப்படி எனக் கருதப்படவேண்டுமானால், இன்னமும் பல, பலவிதமான சான்றுகள் வேண்டும். அல்லது தொழில்முறையில் நம் அகழ்வாராய்ச்சிக்காரர்கள் அதனையும் ‘உருவாக்க’ வேண்டும். ;-)

ஒரு சிறு அகழ்வாராய்ச்சிப் பொருளை, அதன் பின்புலத்தில் அரசியல்முன்முடிவுகளற்று, சாதாரணமாகப் பார்க்கத் தெரியவில்லை, இவர்கள் வந்துவிட்டார்கள், நமக்கு அகழ்வாராய்ச்சி ரகசியங்களைப் புகட்ட, சோம்பேறிகள்! (ஆனால் அந்தக் காட்டுப்பன்றிக்கும் உடலில் ஒன்பது பெரும் ஓட்டைகள் இருக்கலாம், ஆகவே அந்த ஓட்டைகள் வழியாகவே எங்கள் மாலையை கோர்த்துக்கொள்வோம் என்று ஒரு சால்ஜாப்பையும் சொல்வார்களோ என்ன எழவோ!)

…இதைப் படித்து நாக்கு ஏகத்துக்கும் தள்ளிவிட்டது; அதனை மறுபடியும் மடக்கி வாய்க்குள் தள்ளுவதற்குள், இன்னொன்று! :-(

‘தமிழகக் கொல்லியல் ஆராய்ச்சித்துறை’ சிவானந்தம் அவர்களும் ‘ரோஜாமுத்தையா நூலக’ சுந்தர் கணேசன் அவர்களும் இணைந்து எழுதியிருக்கும் ஒரு ஃரண்ட்லைன் (அதே ‘த ஹிந்து’ குசுமம் வெளியிடும் சஞ்சிகைதான்!) சுட்டி வந்தது.

அதன் முதல் பக்கம் படிப்பதற்குள்ளேயே ஒர்ரே இன்பம்ஸ் ஆகிவிட்டது, என்ன செய்ய… :-(

சர்வ நிச்சயமாகச் சொல்வேன் – ஒரு 20 வருடங்களுக்கு முன்புகூட இந்த ஃப்ரண்ட்லைன் இந்த அளவு (அப்போதும் இண்டெல்லக்சுவல் பரப்புரைதான்!) அற்பமாகவும் மோசமாகவும் இருந்ததில்லை… நம் கொடுப்பினை அவ்வளவுதான்!

தின்திசை – சகதமிழப் பேடி விசிலடிச்சான் குஞ்சப்பர்கள்: இவர்கள் கீழடியைக் கண்டார்களா, உருப்படியைக் கண்டார்களா?

சும்மா தினவெடுத்து திராவிடம் தமிழ் ஆரியச்சதி தமிழகம்வஞ்சிக்கப்படுகிறது போராளிக்குக்குஞ்சிக்கப்படுகிறது வகையறா போராளித்தனம் செய்ய ஏதாவது விஷயம் கிடைத்தால் போதும். ஆனால் இவர்கள் அற்ப முட்டாக்கூவான்கள்; அடுத்த நடுவடி மேலடி கிடைத்தால் அதன்பக்கம் ஓடிப்போய் விடுவார்கள் என நம்பலாம்.

ஆனால் முன்குறிப்பிடப்பட்ட மூன்று திசையினர் அப்படியில்லை. பிரிவினை வாதம், தொழில் ஊழல், பேடித்தனம், அனுபவ வறட்சி, அடிப்படைப் பொய்மை என மட்டுமே அலைந்துகொண்டிருக்கும் இந்த லும்பன் கும்பல்கள் ஒழிந்தால்தான் தமிழகத்துக்கும் ஆகவே பாரதத்துக்கும் நிம்மதி.

-0-0-0-0-

எது எப்படியோ – எனக்கு மிக நன்றாகவே தெரிகிறது –  மேற்கண்ட நால்திசை குண்டர்படைகளோடு தமிழகமும், ஊக்கபோனஸாக நாமும் ஒழிந்தாலும்கூட, பாரதத்துக்கோ அல்லது பிறவுலகப் பகுதிகளுக்கோ, ஒரு  சுக்குக்கும் பிரச்சினையில்லை என்பது… (மாறாக, உலகம் இன்னமும் துரிதமாக முன்னேறும் எனவும்!)

ஆனால் இந்த நான்கு லும்பன் கும்பல்களுக்கு அப்பாற்பட்டு, ஒரு ஐந்தாம்படையானது எனக்கேஎனக்கு என்று பிரத்யேகமாக, இந்த ஏழரைகளில்(!) உள்வட்டமாக(!!)  எனவொன்று  இருக்கிறது.

இதுதான் என்னுடைய, தொடரும் தனிப்பெரும் பிரச்சினை.

அவர்கள் எனக்குச் செல்லமாக அனுப்பித்தரும் – ‘இது சரியா?’ அல்லது ‘அவன் அப்படிச் சொன்னான்!’ அல்லது ”இவன் இப்படி உளறினான்’ – ஆகவே, “நீ இதைக் குறித்து என்ன, எப்படி உளறப்போகிறாய்?” வகையறாச் சுட்டிகளையும் ஸ்க்ரீன்ஷாட் ‘திரைச் சொட்டு’களையும் படிப்பதற்கே ஒரு தனி ஜன்மமெடுக்கவேண்டும், கெரகங்கள்.

மெல்லட் டமிள் இணிச் சாவும். போங்கடே!

-0-0-0-0-0-

3 Responses to “கீழடி மேலடி நடுவடி தடாலடி – சில கொல்லியல் கொறிப்புகள்”

  1. A.Seshagiri Says:

    கீழடியால் கிடைத்த அடுத்த “ராவடி”- ஐந்துபைசா பிரியாணி!

    வாழ்க டுமிலன்!!

  2. Vettri Says:

    அண்ணாதுரை முதல் அமர்நாத் ராமகிருஷ்ணன் வரை தமிழ்நாட்டிற்கு கிடைத்த பெறும் பேறு இது. ஆனாலும் அண்ணாவிடம் ஒரு அடிப்படை நேர்மை இருந்தது. தன் கடைசி காலத்தில் கடவுள் மறுப்பையும் பிராமண துவேஷத்தையும் கைவிட்டார்.


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s