சித்திரமும் கைப்பலக்கம், செந்தமிலும் நாப்பலக்கம்

16/10/2019

வாலைப் பலத்தோலில் கிலவன் வலுக்கி விலுந்தான்…

சரிதான். (கீழடிப் பூதம் தொடர்கிறது, பாவம் நீங்கள்!)

நம்மில் பலருக்கு தமிழை, தமிள் தமில் என்பதுபோல உச்சரிப்பதுதான் வருகிறது. ஆனால், இது நம்முடைய பிரச்சினையில்லை. அது தமிழுக்குத்தான் சிக்கல், பாவம்!

ஏனெனில், நம்மில் பலர், பெரும்பாலோர் பாமரர்கள். முடிந்தவரை பிறருக்கு உபகாரமாக இருப்பதற்கு அப்பாற்பட்டு, பிறருக்கு அனாவசியமாக உபத்திரவம் கொடுக்காமலிருப்பதையும் விரும்புபவர்கள். ஆக தமிழை தமிளாக்கினால் என்ன, தமிலாக்கினாலும் என்ன, ஒரு பிரச்சினையும் இல்லை.

நாம் பாமரர்கள். சகஜவாழ்க்கையின் போது நாம் சாதாரணர்களாக, தப்பித்தல்களுக்காகவும் சால்ஜாப்புகளுக்காகவும் அப்படியிப்படி என சிலசமயங்களில் உண்மைகளுக்குப் பிறழ்வாகவும், சிலபல ‘நெளிவுசுளிவு’களுடனும் நடந்துகொண்டாலும் – தொழில்முறையில் பொய்கள் பலபேசிக்கொண்டு, தம்மைச் சான்றோர்களாக, அறிவுஜீவிகளாக நினைத்து வளையவராதவர்கள். பிறருக்கு அறிவுரைஅறிவுரையாகக் கொடுத்துக்கொண்டு, மற்றபடி இரட்டைவேட போங்காட்டம் ஆடாதவர்கள்.

நாம் பாமரர்கள்தாம்; ஆனால், நம் சமுதாயங்களின் பிரதானமான பற்சக்கரங்கள். நாம்தான் ஆணிவேர்கள். நமக்குப் பல தொழில்கள் செய்யவும் முனையவும் முடியும் என்றாலும், நமக்கு வீங்கிய மூளை இல்லை என்பதையும் நாம் அறிவோம்.

நமக்கு குறித்த அதீதமான மயக்கங்கள் இல்லை. நம்மைக் குறித்த உயர்வு நவிற்சி அணிசார் மயக்கங்களும் இல்லை.  இல்பொருள் உவமைப் புளகாங்கிதமும் இல்லை. நாம் இயல்பாக, அவரவர் ஸ்வதர்மப்படி, குல-குடும்ப தர்மங்களின்படி வாழ  முனைபவர்கள். சர்வ நிச்சயமாகப் போற்றத் தக்கவர்கள்.

பொதுவாகவே – நாம் தமிழ் கிமிழ் என ஏகத்துக்கும் நடித்துப் பேசி கலாச்சார, அலக்கிய, திரைப்பட, அரசியல் (ஆகவே பொருளாதார) ஆதாயம் எனப் பேசாதவர்கள். நமக்கு, தமிழ் என்பது தொடர்புக்கான, தகவல் பரிமாற்றங்களுக்கான ஒரு கருவி. திருட்டு ஆதாயத்துக்கான மூலதனம் அல்ல.

ஆனால் பிரச்சினை என்னவென்றால் – நாம், நம் மூளைகளைச் சிந்தனாபூர்வமாக அதிகம் வேலைசெய்யவைத்து பழக்கப்படுத்தவில்லையாதலால், அதுவும் 1960களில் இருந்து, அவற்றை நம் செல்ல திராவிடத்துக்கு, மொத்தமாகவே அடகு வைத்துவிட்டோமாதலால்  –  வெகு சீக்கிரமாகவும் சுளுவாகவும் உணர்ச்சிவசப்பட்டு உசுப்பிவிடப் படுவதில் நமக்கு நிகர், நாம் தாம்!

ஆக — தமிழன், பச்சைத் தமிழன் மஞ்சள் தமிழன் செந்தமிழன் ஊதாத் தமிழன் (ஒல்லி),  ஊதிய தமிழன் (துரைமுருகன்), நீலத் தமிழன் (ஹ்ம்ம், இது நீளத் தமிழன், உயரத் தமிழன் என இருந்திருக்கவேண்டும், ஆனால் எனக்குப் ப்ரொனொஞ்ஜேஜன் ப்ராப்ளம்!) … … எனக் கலர்கலராக வண்ணமடிக்கப்பட்டுள்ள, பாவப்பட்ட பாமரத் தமிழர்களான நமக்கு – — நீ-இந்தியனல்லன்-நீ-திராவிடன், இனமானம்,  பண்டைய திராவிடநாடு, லெமூரியா, குமரிக் காண்டம் (+குமரிகளைச் சிக்கலில்லாமல் திராவிடத்தனமாகப் புணர்வதற்கு இன்னொரு காண்டம்), வடக்கு வாழ்கிறது தெற்கு தேய்கிறது, ஆரிய-வடவ அதிகாரம், ஹிந்தி ஆக்கிரமிப்பு, அவாள் சதி, நாம்தமிளர், வெற்றிவாகை அதுஇது என்று யாராவது போக்கற்ற திராவிட தமிழ்வெறிய அரைகுறை நெற்றிநரம்பும் கீழடிக்குறியும் விடைக்கக் கத்தினால்….

…போச்சு! நமக்குத் தினவு ஏகத்துக்கும் ஏறி… …

வெற்றிவேல் வீரவேல்! புறநானூற்று வீரம்!! போராளித்தனம்!!! புர்ச்சி!!!!  #தமிழேண்டா!  அதாவது – #ங்கொம்மாள.

இதுதான் ஐயா, நம் திராவிடப் பேடி அரசியல்வாதிகளின், கலாச்சாரக் காவலர்களின், தமிழ் வெறியர்களின் – அடிப்படை மூலதனம்!

பாமரர்களாகிய நம்முடைய உணர்ச்சிவசப்படும் தன்மையால்தான் திராவிடமும் தமிழ்வெறியும் முட்டுக்கொடுக்கப்பட்டு நமக்கு மூச்சிறைக்கிறது.

அதனால்தான் தமிழ் நாட்டில் கல்வியின் நிலை அந்தோ பரிதாப நிலையில், கல்வித் தந்தைகளாலும் மாமாக்களாலும் அப்படியே, அதே அதலபாதாள ரெவலில் புல்லரிப்புடன் வைக்கப்பட்டிருக்கிறது.

நம் பாமர இளைஞ மாணவமணிகளெல்லாம் நடிகர்களின் குஞ்சாமணிகளையும் நடிகைகளின் பிதுங்கும் மார்பகங்களையும் பிடித்துத் தொங்கிக்கொண்டு ஒர்ரே போராளிப் புளகாங்கிதம், போங்கள்!

..ஆனால் …இவர்களெல்லாம் ஒழுங்காகப் படித்துவிட்டு உருப்படியாக வாழ்க்கையை நடத்தும், மூளையை அபரிமிதமாக உபயோகிக்கும் அபாமரர்களாக ஆகிவிட்டால், திராவிடத்தமிழ் வெறியர்கள் குழுமங்களின் கதி அதோகதியாகிவிடுஂமே!

-0-0-0-0-

2011 வாக்கில் (அல்லது 2009ல்?) நான் ‘பகுதி நேரப்பணி(!)’ செய்துகொண்டிருந்த பள்ளியில் நடந்த விஷயம்.

பள்ளியில் தமிழ்விழா என ஒன்றினை தமிழ்ப் புத்தாண்டு தினத்தில் நடத்தினார்கள், பிள்ளைகளுக்கு ஒர்ரே குதூகலம், ஆனால் பிற பலவேலைகளில் நான் ஈடுபட்டுக்கொண்டிருந்ததால், அலுப்பின் காரணமாக – அதில் என் மூக்கையும் நுழைக்கவில்லை,  பெரிதாக ஆர்வத்துடன் பங்குபெறவும் இயலவில்லை.

ஆனால் விழாவன்று (எனக்கு வழக்கமான) பின்பக்க பெஞ்ச் ஒன்றில் உட்கார்ந்துகொண்டு சோகமாகப் பார்த்துக்கொண்டிருந்தேன். விழாமுழுதும் அசிங்கமாக ஒரே திரைப்பட நெடி.  இரண்டு குத்தாட்டங்கள். சிறுமிகளின் (தங்கள் உடலமைப்புக்கும், மனவளர்ச்சிக்கும் ஒத்துவராத வகையில்) நடன அடவுகள். ஒருமாதிரி அடிவயிற்றுக் கலக்கம் தந்த கலவரத்தால், எனக்கு வெறுத்து விட்டது.

அதைவிடவும் வெறுக்கவைத்தது என்னவென்றால், ஒரு சிறுமி (என் நேரடி மாணவி!), கையில் தமிழ்த்தாய் ‘பொறித்த’ ஒரு கொடியைப் பிடித்துக்கொண்டு பாடிய பாடல். அதற்கு முன், தமிழின் அருமை பெருமை அதன் தனித்தன்மை பற்றி 2 நிமிடம் போல, வாந்தியெடுத்தாற்போல ஒப்பித்தல் பேச்சு. அன்ஸஹிக்கபிள், பாவம். ஆனால் அதற்கு அந்தக் குழந்தையை ஜவாப்தாரியாக்கவும் முடியாது, கூடாது. அச்சிறுமி பாடிய பாடல்…

சங்கே முளங்கூ, சங்கே முளங்கூ…

…எங்கல் வால்வும் எங்கல் வலமும் மண்காத தமிலென்று சங்கே முளங்கூ…

…ஏறக்குறைய நான் அழுதே விட்டேன்.  தருமத்தின் வால்வதனைச் சூத்து கவ்விவிட்டதே என எனக்கு, இதயத்தின் வால்வுகள் அடைத்துக்கொள்ளாத குறை….:-(

…அடுத்த நாள் கணிதவகுப்பு. அச்சிறுமியைத் தனியாக வெளியில் இழுத்துப் பேசினேன். “உனக்குக் குரல்வளம் இருக்கிறது, நன்றாகப் பாடுகிறாய். தமிழின் மேன்மைகளைக் குறித்து அழகாகவும் சுருக்கமாகவும் பேசினாய். ஆனால் தமிழ் உச்சரிப்பைச் சரிசெய்துகொள்ளலாமே? என்ன??”

அவள்: “என் தமிள் சார் சொள்லிக்கொடுத்தாரு. அதேமாறி பாடிணேன்! தப்பாவா இருந்திச்சி??”

(எனக்கு அவரைத் தெரியும். அவரும் ‘சங்கே முலங்கூவார்’ ஆசாமிதான், என்ன செய்ய!)

குழந்தையிடம் சொன்னேன். “உனக்கு ழ ல ள ன் ண் ந் ள் ற் போன்றவற்றில் தான் சிறிது பிரச்சினை. கொஞ்சம் பயிற்சி எடுத்தால் சரியாகிவிடும், என்னைப் போலவே ஆங்கிலம் மட்டுமல்லாமல் தமிழிலும் முடிந்தவரை சரியாகப் பேசலாம், நீ ரெடியா?”

குழந்தை “நான் ரெடி, ஆனா எனக்குச் சரியாப் பேச வருமா?”

நான்: “அவசியம் வரும், கண்ணம்மா.”

பதின்ம வயதுப் பிள்ளைகள், அவர்கள் மதிக்கும், விரும்பும் ஆசிரியர்களை ‘ஹீரோ வர்ஷிப்’ (அதிமனித வழிபாடு?) செய்யும் தன்மையுடையவர்கள் என்பதை நான் அனுபவபூர்வமாக அறிந்துகொண்டிருக்கிறேன்; இது ‘கத்தியில் நடப்பது’ போன்ற விவகாரம் என்றாலும், குழந்தைகளுக்கு ஒரு விஷயம் நன்மை பயக்கும் என்றால், அதைக் குறிக்கோளாகக் கொண்டு அவர்களை நடத்திச்செல்ல ஏதுவான சாமதானபேததண்ட வழிபாடு முறைகளுடன் எனக்கு ஒரு பிரச்சினையும் இல்லை. எனக்கு அரசியல்சரிகமபதவெல்லாம் ஒத்தும் வராது.

ஆக – அடுத்த நாள் முதல், குழந்தைக்கு, தினம் 20 நிமிடம் பயிற்சி. வாயில் சிறு கூழாங்கல் ஒன்றைப் போட்டு (கவனமாகத் தான்! சில சமயங்களில் ஆரஞ்சு மிட்டாய்) நாக்கு சுழற்சிப் பயிற்சி, நானாவிதமான சப்தங்களை உருவாக்குவது, ஒரு சப்த/உச்சரிப்பையும் உடைத்துச் சிறுதுண்டுகளை வெற்றி கொள்வது, பின்னர் முழுவதையும் ஒருங்கிணைத்து மகிழ்வது coupez la difficulté en quatre வழியாக என்றெல்லாம். ஒவ்வொரு நாளும் ஒரு சிறு வெற்றி.

சுமார் 8 நாட்களில் – மொத்தம் 2-3 மணி நேரம்தான், ஆகியிருக்கும் என நினைக்கிறேன்.

சித்திரமும் கைப்பழக்கம், செந்தமிழும் நாப்பழக்கம்

மேஜிக்.

முலுவெட்ரி. முழு வெற்றி. குழந்தைக்கும் மகிழ்ச்சியோ மகிழ்ச்சி.

தமிழ் சார், “சின்ன புள்ளைங்களுக்கு இதெல்லாம் ஈஸியா வரும் சார், ஆனால் எனக்கெல்லாம் வர்ராது. மட்றும் இது முக்கியமா? டெந்த் பரீட்சைல பேச சொல்லமாட்டாங்க இல்லியா! ஸிலபஸ்ல இல்லயே!!”

நான் சொன்னேன், “தமிழ் சொல்லிக்கொடுக்கும் நீங்களே அப்படிச் சொன்னால் எப்படி? அதுவும் நம் தமிழ் அல்லவா அது? இளைஞரே, என்னிடம் வாருங்கள், ரெண்டே நாட்களில் உங்களுக்கும் கற்றுக் கொடுக்கிறேன்!”

(அவர் வரவில்லை, அவருக்கும் வேறுவேலைகள் இருந்திருக்கலாம் – இருந்தாளும்,  இண்ணமும் தமிளை வாள்வாங்கு வாளவைத்துக்கொண்டிருப்பாற் எண நிணைக்கிறேண்!)

பின்னர் சில வருடங்களுக்குப் பின் ‘கண்ணம்மா’வை அகஸ்மாத்தாக இன்னொரு கிராமவிழா சமயம் பார்த்தேன். எனக்கு என, பிரத்யேகமாக, சன்னக்குரலில் பெருமையாகப் பாடிக் காண்பித்தாள் “எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு!

எனக்குக் கண்ணில் நீர் வந்துவிட்டது. உண்மையாகவே.

சரி. எனக்கு இம்மாதிரி விஷயங்கள், வருடத்துக்கு ஒன்றிரண்டு நடந்தால் போதும். என் கர்வமும் தன்னம்பிக்கையும் குறையாமலிருக்க இது முக்கியம். நன்றி.

–0-0-0–

சரி. குழந்தைகள் பாமரர்கள் இப்படி, நம் தமிழைக் கொளை செய்தால், பயிற்சியின்மை அதுஇது எனக் காரணம் சொல்லி ஒருமாதிரி அட்ஜஸ்ட் செய்துகொள்ளலாம். ஏனெனில் அவர்களுக்குத் தமிழ் என்பது ஒரு கருவி. கொள்ளையடிக்க ஏதுவான மூலதனமல்ல. உசுப்பிவிட்ட தீயில் குளிர்காயவேண்டிய அவசியம் அவர்களுக்கு இல்லை.

மாறாக, தமிழ்தமிழ் எனப் பேசும், உருகும் அறிவுஜீவிகளும், தீவட்டிக் கொள்ளைக்கார அரசியல்வாதிகளும், நடிகர்களும், அகழ்வாராய்ச்சியாளர்களும் — தமிழின் மேன்மை, சங்ககாலம், மங்கமாலம் என அலப்பரை செய்பவர்களும், தமிழின் பெருமைகளில் ஒன்றாக ‘‘ எனும் உச்சரிப்பு/எழுத்து இருப்பதை மறக்காமல் குறிப்பிடுபவர்களில் பலரும் செய்வது, சர்வ நிச்சயமாக…

தமிழ்த்தாயைக் கதறக் கதறக் கற்பழிப்பது

மட்டுமே. நன்றி.

ஊக்கபோனஸாக ல் ள் ன் ண் ந் ள் ற் ட் என அனைவற்றிலும் மஹா சொதப்பல்கள்.

நம் அமர்நாத் ராமகிருஷ்ணா, ‘கீழடித் தமிழ்ப் பாரம்பரியக் காவலர்’ அல்லது கார்பன்14  சூப்ரண்டு  அப்ரசண்டி இதே வகையில் வருகிறார்.

….பளைய பளங்கற்காளம், அளிவதற்கான காலம், ஆண்டுகல், எண்ட்ரால் பளவகை, வீட்டுப் பளக்கம்,  தமிளகம், கீளடி, அகலாய்வு, அளகன்குலம், பதினாளு கூளிகள், முளுவதும் வீடுகல் … …

… இப்படி முளுவதும் தமிளில்(!) பேசியே தமிளை வளர்க்க முயற்சிக்கிறார்!
கூசாமல் மாதாமாதம் டாணென்று சம்பளம் வாங்கிக்கொண்டு இருப்பதற்கு அப்பாற்பட்டு, செய்யவேண்டிய அவர்கள் தொழிலின் அடிப்படைகளையும் அறியவில்லை. பேசுதமிழுக்கு அடிப்படை மரியாதை கொடுக்குமளவுக்குச் சிரத்தையும் இல்லை. பேடிகள். ஆனால் பேசுவதென்னவோ பெரிய்ய தமிழ்காப்பாளத்தனமாக ‘பெத்த பேச்சு!’ நக்கல்கள், உண்மையான சான்றோர்களை வரைமுறையில்லாமல் அப்படியொரு எள்ளல். குறைகுடங்கள்….கூரையேறித் தமிழ் உச்சரிப்புக் கோழியைப் பிடிக்குமளவு கூடச் செயலூக்கம் அற்றவர்கள்,  தமிழுக்கு, அவர்களுக்குச் சோறுபோடும் தெய்வத்துக்கு நேர்மையாக இல்லாதவர்கள், கருத்துலகச் சோம்பேறிகள், எப்படித்தான் கீழடியை ட்ரியோ ட்ரியோ என ஓட்டிக்கொண்டு  வானமேறிச் சங்ககால வைகுந்தம் போவார்கள்?

இவர்களெல்லாமா தமிழின் புகழைப் பாடுகின்றனர்? இக்கோவேறுகழுதைகளா இனமான மாய்மாலப் பரப்புரை செய்கின்றனர்?

-0-0-0-0-

நாம் பாமரர்கள். உணர்ச்சிவசப் படுபவர்கள், சரி.

ஆனால் – இதனை அக்கிரமமாக உபயோகித்து, தமிழையும் தமிழகத்தையும்  பாரதத்தையும் நம் வரலாறுகளையும் கற்பழிப்பது, தமிழகம் தனக்குரிய இடத்தைப் பாரதத்தில் அடையவிடாமல் அதனைக் காயடிப்பது + நம் அறியா விசிலடிச்சான் குஞ்சப்ப இளைஞர்களை, மசுர்க்கூச்சலில் சதா அசட்டுத்தனமாகத் திளைக்கும் போராளி முட்டாக்கூவான்களாக்குவதும் எந்த விதத்தில் நியாயம்?

சோம்பேறி அயோக்கியர்கள். த்தூ.

-0-0-0-0-

12 Responses to “சித்திரமும் கைப்பலக்கம், செந்தமிலும் நாப்பலக்கம்”


 1. //ஏனெனில், நம்மில் பலர், பெரும்பாலோர் பாமரர்கள். முடிந்தவரை பிறருக்கு உபகாரமாக இருப்பதற்கு அப்பாற்பட்டு, பிறருக்கு அனாவசியமாக உபத்திரவம் கொடுக்காமலிருப்பதையும் விரும்புபவர்கள். ஆக தமிழை தமிளாக்கினால் என்ன, தமிலாக்கினாலும் என்ன, ஒரு பிரச்சினையும் இல்லை.

  நாம் பாமரர்கள். சகஜவாழ்க்கையின் போது நாம் சாதாரணர்களாக, தப்பித்தல்களுக்காகவும் சால்ஜாப்புகளுக்காகவும் அப்படியிப்படி என சிலசமயங்களில் உண்மைகளுக்குப் பிறழ்வாகவும், சிலபல ‘நெளிவுசுளிவு’களுடனும் நடந்துகொண்டாலும் – தொழில்முறையில் பொய்கள் பலபேசிக்கொண்டு, தம்மைச் சான்றோர்களாக, அறிவுஜீவிகளாக நினைத்து வளையவராதவர்கள். பிறருக்கு அறிவுரைஅறிவுரையாகக் கொடுத்துக்கொண்டு, மற்றபடி இரட்டைவேட போங்காட்டம் ஆடாதவர்கள்.

  நாம் பாமரர்கள்தாம்; ஆனால், நம் சமுதாயங்களின் பிரதானமான பற்சக்கரங்கள். நாம்தான் ஆணிவேர்கள். நமக்குப் பல தொழில்கள் செய்யவும் முனையவும் முடியும் என்றாலும், நமக்கு வீங்கிய மூளை இல்லை என்பதையும் நாம் அறிவோம்.

  நமக்கு ழ குறித்த அதீதமான மயக்கங்கள் இல்லை. நம்மைக் குறித்த உயர்வு நவிற்சி அணிசார் மயக்கங்களும் இல்லை. இல்பொருள் உவமைப் புளகாங்கிதமும் இல்லை. நாம் இயல்பாக, அவரவர் ஸ்வதர்மப்படி, குல-குடும்ப தர்மங்களின்படி வாழ முனைபவர்கள். சர்வ நிச்சயமாகப் போற்றத் தக்கவர்கள்.

  பொதுவாகவே – நாம் தமிழ் கிமிழ் என ஏகத்துக்கும் நடித்துப் பேசி கலாச்சார, அலக்கிய, திரைப்பட, அரசியல் (ஆகவே பொருளாதார) ஆதாயம் எனப் பேசாதவர்கள். நமக்கு, தமிழ் என்பது தொடர்புக்கான, தகவல் பரிமாற்றங்களுக்கான ஒரு கருவி. திருட்டு ஆதாயத்துக்கான மூலதனம் அல்ல.//

  தமிழர்கள் (மட்டுமல்லாமல் எந்தவொரு இனத்தின்/நாட்டின் சராசரி, பொறுப்புணர்வுள்ள குடிமகன்களின்) சித்திரத்தைப் பற்றிய உயர்வுநவிற்சியல்லாத ஒரு விளக்கம். நன்றி.

  அன்புடன்
  வெங்கட்ரமணன்


  • ஹ்ம்ம்…

   இதனாள்தாண், எஸ்ரா போன்றவர்கல், தமிளை மூளதணமாக வைத்து காளச்சேபம் செய்பவர்கல், தமிலைக் கொளை செய்யும்போது பிரச்சிணையாகிவிடுகிரது. நண்ரி!

 2. K.Muthuramakrishnan Says:

  இந்தச் சிறப்பு எழுத்து ‘ழ்’ உச்சரிப்பு வரவில்லை என்பது சரியல்ல. வரும் ஆனா வராது என்ற நிலைதான்.விள்ளல் என்று சொல்லச்சொல்லுங்கள். விள்ளழ் என்று சரியாகத் தப்பான உச்சரிப்பைச்செய்வார்கள்.
  கழுவினாள் என்று சொல்லச் சொல்லுங்கள். களுவினாழ் என்று சரியாகத் தவறு செய்வார்கள். இந்தப் பயிற்சி அளிப்பதை ஒரு சேவையாகவே செய்யலாம்.


  • ஐயா சரிதான்!

   ஆகவே… களுவி ஊற்றினாழ்.

   மற்றபடி ஞமலி பின்னீட்டலை நேர்நேர்தேமா செய்வது என்பது கொஞ்சம் புளிமா. என்ன செய்வது, சொல்லுங்கள்…

   மேலும் இந்தச் சேவை, இடியாப்பச் சிக்களை வரவளைக்கும், தேவையா?

 3. A.Seshagiri Says:

  ஐயா,இந்த சிறப்பு”ழ”கரத்தைக் கூட குதறுவதைக் கூட பொறுத்துக் கொள்ளலாம்,ஏனெனில் அதுபெரும்பாலார்க்கு சுட்டுப் போட்டாலும் வரவில்லை ஆனால் இந்த ‘ல் ‘க்கும் ‘ள்’ க்கும் உச்சரிப்பு வேற்றுமை தெரியாமல் பேசுவதைக் கேட்டால் காது கூசுகிறது. பிரபலமான அரசியல்வாதிகள் மற்றும்குறிப்பாக டி.வி செய்தி சானல்களில் செய்தி வாசிக்கும் பெரும்பாலோர் (இந்நேரத்தில் சரோஜ் நாரயணஸ்வாமி அவர்களின் செய்தி வாசிப்பை நினைக்காமல் இருக்க முடியவில்லை)பேசுவதைக் கேட்டால் அவர்களை அப்படியே கழுத்தை பிடித்து நெரிக்கலாம் எனத் தோன்றுகிறது!


  • ஐயோ! சாத்வீகியான தாங்கலா இப்படி மேட்டிமைத்தணமாகப் பேசுவது?

   பொறுக்கமுடியவிள்ளையே! :-(

 4. Dagalti Says:

  ல, ள, ழ – கொலைக்குத்தம்
  ஆனால் ர/ற ‘வை அதே கூண்டில் ஏத்தவேண்டாம்.
  அடியேனுக்கே (பார்றா!) தகராறு.

  ஆனால் கருமத்தை எண்ணித் துணிய வேண்டும்.
  ஒரு முறை “வரலாற்றின் வரலாரே” – என்றொரு போஸ்டர் பார்த்தேன்
  அதே வரலாறு தானேடா, எப்படி அடுத்த வார்த்தைல மாறும்?
  யோசித்தேன், பயல் all or nothing வேண்டாம், நிச்சயமான 50% போதும் என முடிவெடுத்திருக்கான் என்று புரிந்தது.


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s