திருட்டுசாவி அபிலாஷும் ப்ளூமும் சாவுக்கிராக்கியும்*

19/10/2019

இளைஞர்(?)  ‘ஆர் அபிலாஷ்’ அவர்கள், ‘மின்னற்பொழுதே தூரம்‘ என்று ஒரு தளம் அமைத்து செங்கோலோச்சி வருகிறார். அதற்காக, அவர், ஆச்சிமசாலாவும் கலந்தடித்துப் பரிமாறவேண்டுமா, சொல்லுங்கள்? :-(

அண்மையில் ஹேர்-டை மயிர்மை பத்திரிகையில் இப்படியொரு சுளுக்கெழுத்துக் காட்டுரை ஒன்றை எழுதியிருக்கிறார், பாவம். (அதாவது, நாம்!)

ஹரால்ட் ப்ளூம் என்ன பாவம் செய்தார்? அவர் இறந்ததற்கு அஞ்சலி, கருத்தளித்தல், கருக்கலைத்தல் என நம் அலக்கியக்காரர்கள், சிற்றிளைஞ குஞ்சப்பனார்கள் செய்யவில்லை என யார் அழுதார்கள்?

அதேபோலத் துளிக்கூடத் தொடர்பேயில்லாமல் – ‘லெட் எ தொஸண்ட் ஃப்ளவர்ஸ் ப்ளூம்!‘ என ஆங்கிலத்தில் புளிச்ச மாவோ சொன்னது நம்முடைய, அண்மையில் போய்ச்சேர்ந்த ஹரால்ட் ப்ளூம் பற்றித்தான் என்பதே நம்மில் எவ்ளோ பேருக்குத் தெரியும்?

…ரசனை/சுவைத்தல் பூர்வமாக யாராவது சொன்னாலே இந்தக் கந்தறகோளக் கோட்பாட்டாளர்களுக்கு கழுத்தில் நெறிகட்டிக்கொண்டுவிடுகிறது போல…

-0-0-0-0-

போகிறபோக்கில் ஜெயமோகன் அவர்களின் மனுஷ்யபுத்திர விமர்சனம் பற்றி ஒரு கருத்து! தேவையா? (ஆனால் மப்புவார் நடத்தும் பத்திரிகையில் அவருக்கு அணுக்கமாக தேவதாவிசுவாசத்துடன் மற்றவர்களை அடித்தால்தானே சரி?)

எனக்கு என்ன படுகிறது என்றால், ஜெயமோகனின் அப்படியாப்பட்ட விமர்சனம் ஒன்றும் வெறுத்தொதுக்கத் தக்கது அல்ல. அதற்கு முகாந்திரம் இல்லாமல் இல்லை.

மேலும் – பிராம்மணர்களின்  பேச்சுவழக்கு பாஷையை (இப்போது இப்படியெல்லாம் பேசுவதில்லை என்றாலும்) அதேபோன்று, கீழ்கண்டதுபோல் அதே கட்டுரையில் தேவையோ முகாந்திரமோ இல்லாமல் கிண்டல்/விமர்சனம் செய்யும் அபிலாஷுக்கும் இதற்கும் ஒன்றுக்கு ஒன்று சரியாகி விட்டது.

அதெல்லாம் இருக்கட்டும் – கோட்பாடு பூர்வமாக கறார் டமார் என்றுதான் அலக்கிய விமர்சனம் இருக்கவேண்டும் என விழையும் அபிலாஷ், ஏன் ‘டிஸெபிலிடி ஸ்டடீஸ்’ வகை இலக்கியத் திறனாய்வு முறையை ஜெயமோகன் அவர்கள் கடைப்பிடித்தாகக் கருதி அவரை மெச்சக்கூடாது?

ஆக, மெத்தப்படித்த (அல்லது அப்படிக் காட்டிக்கொள்ளும்) அபிலாஷ் அவர்களுக்கு, தாம் ஜெயமோகனின் பார்வையை/விமர்சனத்தை ஆதரிக்கிறோம் என்று தெரியாமலேயே எதிர்க்கிறார்!

என்ன எழவு அறிவுஜீவியமோ! (இந்தக் குப்பையாளர்களையும் மீறித்தாண்டா தமிள் எளக்கியம் முன்னேறணும்!)

இன்னொரு மாணிக்கம்:

உங்களுக்கு இது புரிந்தவுடன், உடனடியாக எனக்கு விளக்கவும்.

நான் அபிலாஷ் காட்டுரையைப் படித்துவிட்டு, என்னையே நான் ‘ரத்து’ செய்துகொள்ள, அதிரடியாக அப்போலோ மருத்துவமனையில் அட்மிட் ஆகியிருக்கிறேன். நிலைமை கவலைக்கிடம். உங்கள் உறவினர்களிடமும் சொல்லிவிடவும்.

உங்கள் உடனடி உபயோகத்துக்காகவும் ‘வாசிப்பின்ப’த்துக்காகவும் எனக்கே எனக்கான ‘அஞ்சலிக் குறிப்பு’ ஒன்றையும் தயாராக ஏற்கனவே தரவேற்றியிருக்கிறேன். நன்றி. (‘ஒத்திசைவு’ வெ. ராமசாமி ஒழிந்தார்! 27/10/2016)

-0-0-0-0-

பிரச்சினை என்னவென்றால், தல்ஸ்தொய் அவர்களையோ ப்ளூம் அவர்கள் தல்ஸ்தொய் பற்றிச் சொன்னவைகளையோ ஒரு எழவும் படிக்காமல் ‘ரசனை’ பூர்வமாக ஒன்றை அணுகுவது தவறென்று நிறுவ நினைக்கும் அன்பர்களை நினைத்தால் பாவமாக இருக்கிறது. இந்த அழகில் தி.ஜானகிராமனின் மோகமுள் குறித்து அபிலாஷ் என்ன நினைக்கிறார் என்பதையும் குழப்பமாக நிரவி நிறுவவேண்டும், பாவம்.

அபிலாஷ் அவர்களின் கட்டுரையில் ஒவ்வொரு பத்திக்கும் விலாவாரியாக எதிர்க்கருத்துகளைத் தரவுகளுடன் நிறுவலாம்.

ஆனால் அந்தக் கட்டுரையை அதற்கு, இருமுறையாகவது மேலதிகமாகப் படிக்கவேண்டும். அதேசமயம், அதனை ஒருமுறை படித்தவுடனே,  விலாநோகச் சிரிக்க ஆரம்பித்த நான், இன்னமும் தொடர்ந்து… …. ஹஹ்ஹ்ஹா… ஹஹ்ஹ்ஹா ஹஹ்ஹ்ஹா… :-(

ஆக, மன்னிக்கவும்!

தப்பித்தீர்கள், ஏழரைகளே! ;-)

-0-0-0-

நான் ஏன் இப்படித் தொடர்ந்து எழுதுகிறேன், அபிலாஷ் போன்றவர்கள் இப்படியே தொடர்ந்து சகட்டுமேனிக்கும் அட்ச்சிவுடுகிறார்கள் என்பதற்கு ஆலிவர் வெண்டெல் ஹொம்ஸ் அவர்களின் ‘எழுதுவதற்கான நமைச்சல்‘ என்பதைத் தவிர வேறு காரணம் இருக்கமுடியுமோ? இப்போது மசியும் காகிதமும் இல்லை. ஆனால் தட்டச்சுவிசைப்பலகையும் அதைக்கொண்டு ரொப்ப இணையமும் இருக்கின்றன என்பதுதான் ‘முன்னேற்றம்!’

Cacoethes Scribendi

(Oliver Wendell Holmes Sr.)
If all the trees in all the woods were men;
And each and every blade of grass a pen;
If every leaf on every shrub and tree
Turned to a sheet of foolscap; every sea
Were changed to ink, and all earth’s living tribes
Had nothing else to do but act as scribes,
And for ten thousand ages, day and night,
The human race should write, and write, and write,
Till all the pens and paper were used up,
And the huge inkstand was an empty cup,
Still would the scribblers clustered round its brink
Call for more pens, more paper, and more ink.

-0-0-0-0-

…சிலபல பத்தாண்டுகளுக்கு முன் நாகார்ஜுனன், முத்துக்குமாரசாமி ‘ஸில்வியா,’ மனோகரன் ‘எஸ்வி ராஜதுரை,’ ஆ. ராஜாராம் ‘பிரம்மராஜன்,’ பூரணச்சந்திரன் போன்றவர்களெல்லாம் (கொஞ்சம்போல பிரம்மராஜன் அவர்களைத் தவிர்த்து), அனுபூதி நிலை மேதாவிலாசத்துடன் – பின்நவீனத்தத்துப்பித்துவம் வடிவவியல் அமைப்பியல் பின்னமைப்பியல் கட்டுடைத்தல் உருவியல் உருப்போட்டியல் மார்க்ஸியல் ஃபுல்மார்க்ஸியல் ஃபெய்லியல் இருப்பியல் இருத்தலியல் இருதலைக்கொள்ளியெறும்பியல் உளவியல் உளறியல் அலக்கியப்பிரதி கலகப்பிரதி ‘எழுத்து தன்னைத்தானே எழுதிக்கொல்லும்’ – லேட்டஸ்டாக குதிரை லகான் ஸப்ஆல்டர்ன் நவகாலனியம் நவக்கெரகம் தெரிதா தெரியாதா என்றெல்லாம் பேசி விவாதித்து எழுதி, அதிகபட்சம் சுமார் 200  (அதாவது 200.000000000000 பேர்!) தமிழ் அலக்கியப் பரிச்சயமுள்ள வாசகர்களை அலற அடித்துக்கொண்டு இருந்தார்கள்… கோட்பாடுகோட்பாடாகத் தாவித்தாவி, மேற்கத்திய பகுப்புகளால் மட்டுமே (அவற்றையும் அமர்க்களமாக அரைகுறையாகப் புரிந்துகொண்டுதான்!) மேலோட்டமாக அணுகி, உன்மத்த மந்திகளாக உரியடிக் கோட்பாட்டு உத்ஸவங்களில் ஈடுபட்டார்கள்; மேலும் இவர்களெல்லாம் ‘இண்டர் நேஷனல்’ காரர்களாக இருப்பதால்/இருந்ததால் நம்முடைய பாரதத்து அழகியல் பாரம்பரியங்கள் பற்றி இவர்களில் ஒருவர்கூட ஒரு  சுக்குக்கும் தெரிந்திருக்கவில்லை என்பதுதான் எனக்கு ஞாபகம்…

ஆக, இன்றைய காலங்களின் கட்டாயத்தால் புத்தம்புதிய கலகப் பிரதிகளும் நகல்களின் அசல்களாகக் கிளம்பிக்கொண்டிருக்கின்றன என்பதில் எனக்கு மகிழ்ச்சிதான்! இதன் முக்கிய அங்கத்தினராக இளம் அபிலாஷ் கன்னக்கோலோச்சுவதும் எனக்கு மேலதிக இறும்பூதளிக்கிறது என்பதும் உண்மைதான்!

ஆனால், தமிழ் கூறுகெட்ட நல்லுலகத்துக்கு ஒரு நற்செய்தி என்னவென்றால்… நல்லவேளை! அப்போதும் சரி, இப்போதும் சரி, இந்த 200 எண்ணிக்கை அவ்ளோதான்! பெரும்பாலும் இந்த வாசகர்கள்தாம் எழுத்தாளர்களும்கூட. ஆனால் #ங்கொம்மாள, இத்தனூண்டு எண்ணிக்கையில் இந்த வொலகத்தில் இருக்கும் சித்தாந்த, குடுமிப்பிடிச் சண்டைகளும் ஒருவர்காலை மற்றொருவர் மாலையில் வாரிவிடுவதும் இருக்கிறதே… அப்பப்பா! ஒர்ரே நகைச்சுவை, போங்கள்!

…என்ன சொல்லவருகிறேன் என்றால்,  ரசனை பூர்வமான கலாச்சார அணுகல் தேவை (மிக முக்கியம்!) அதே சமயம் காலந்தோறும் மாறிவரும் நுகர்தல்/அலக்கியக் கோட்பாடுகளும் மிகவும் முக்கியம், அதாவது இடியாப்ப பிஹெச்டி சமூக(!) அறிவியல்(!!) கோட்பாட்டாளர்களுக்கு…

ஆள வுடுங்கடா, கோட்பாட்டுக் கோட்டான்களா!

ணந்ரீ.

* இந்தச் சாவுக்கிராக்கி எனும் உயற்வுநவிற்சியானது, நம்மைப்போன்ற பாவப்பட்ட வாசகர்களைக் குறிக்கிறது. அபிலாஷ், பாவப்பட்ட ப்ளூம் போன்றவர்களை அல்ல.

2 Responses to “திருட்டுசாவி அபிலாஷும் ப்ளூமும் சாவுக்கிராக்கியும்*”

  1. dagalti Says:

    பேயோனின் அந்தக்கால ட்வீட் ஒன்று நினைவுக்கு வருகிறது: (sic)
    “மேற்கில் காலாவதி ஆகிவிட்ட கோட்பாடுகளே இங்கு வருகின்றன. அந்த வகையில், தமிழிலக்கியச்சூழலை கோட்பாடுகளின் சொர்க்கம் எனலாம்”


    • ஹ்ம்ம்… இந்தப் பேயோன், ஒருவேளை எம்டி முத்துக்குமாரசாமி ஸில்வியாவோ எனவொரு சந்தேகம். ;-)


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s