ஸ்டாலின், மிசா, அண்டப் புளுகுகள், சப்பைக் கட்டல்கள், விகடப் பரப்புரை – குறிப்புகள்

20/10/2019

திராவிடர்கள், அதுவும் திமுக திராவிடர்கள் என்றாலே அவர்கள் அயோக்கியக் கொள்ளைக்கார புளுகுணி மாங்கொட்டைகள்தாம். அவர்களுடைய செய்தித் தொடர்பாளர் ‘கான்ஸ்டன்டைன் ரவீந்திரன்’ போன்ற படிப்போ வரலாற்றறிவோ, ஏன் ‘திராவிடப் பிரக்ஞை’யோகூட இல்லாத ஜிங்சக் ஜால்ராக்கள், இன்னமும் படு மோசம்.

புளுகுணித்தனத்துக்கு அப்பாற்பட்டு, அப்பட்டமான உளறல்வேறு. இம்மாதிரி குப்பைகளையெல்லாம் அகற்றினால் தான் திமுகவுக்கு கதி மோட்சம்.

…எப்படித்தான் இம்மாதிரி உளறல்வாதிகளை வைத்துக்கொண்டு அந்தக் கட்சிக்காரர்கள் குப்பை கொட்டுகிறார்களோ என்பதை நினைத்தால்…

ஆனால் ஐயன்மீர், குப்பைகள் இருந்தால்தானே குப்பைகொட்ட முடியும்! இன்னொன்றும் தோன்றுகிறது – திராவிடக் கட்சிகளின் ‘செய்தித் தொடர்பாளராக’ இருக்கவேண்டிய அடிப்படைத் தகுதி என்பது, அப்படிப்பட்டவர்களுக்கு – வெட்கமும் மானமும் கூச்சமும் சூடும் சொரணையும் இருக்கவேகூடாது. ஆகவே கான்ஸ்டன்டைன் போன்றவர்கள்தாம் இங்கு கான்ஸ்டன்ட் ஆசாமிகள். கூட ஓடிவந்து மானமேயில்லாமல் விஷயங்களையும் அறியாமல் ஒத்து ஊதும் ‘தமிழ்த் தேசிய விடுதலை இயக்க சமூகப் போராளி’  தியாகு போன்ற முதிர்விடலைகள் வேறு! நன்றி!

இப்படியா வாய்கூசாமல் புளுகுவார்கள், இந்த முதிர்விடலைகள்??

இந்தத் தியாகு அவர்களின் கேளிக்கைகளைக் கேட்டால் அசந்துபோவீர்கள்! நமக்குப் பொதுவாகவே நினைவுசக்தி மிகவும் அந்தோ பரிதாபம் என்பதால் ஒரு சிறிய குறிப்பு.

அக்டோபர் 1, 2013 அன்று, “வெற்றி அல்லது வீரச்சாவு” எனும் வீர மசுர்க்கூச்செறிய வைக்கம் முழக்கத்துடன்  தம் உண்ணாவிரதத்தை ஆரம்பித்தார், நம் சமூகப் போராளி.

அவருடைய இனமானக் கோரிக்கைகள்:

 • இலங்கையை பொதுநலவாய அமைப்பிலிருந்து (=Commonwealth) நீக்க வேண்டும்
 • இலங்கையில் காமன்வெல்த் மாநாடு நடைபெறக் கூடாது
 • இந்தியா இலங்கையில் நடக்கும் காமன்வெல்த் மாநாட்டில் கலந்து கொள்ளக்கூடாது

++ போன்ற பல கோரிக்கைக் கோமாளித்தனங்கள்…

பின் ஏதோ உப்பிசப்பில்லாத காரணம் காட்டி (தன் உடல் நிலையையும் இப்படிப்பட்ட விரதத்தால் முன்னேற்றிக்கொண்டு, சரிதான்!), நம் கலைங்கர் கருணாநிதி அவர்கள் போலவே உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டார்… இத்தனைக்கும் அவர் கோரிக்கையில் ஒன்றுகூட  ஒரு சுக்குக் கூட ஒப்புக்கொள்ளப்படவில்லை!

இதுதான் இந்தத் தியாகுகளின் தியாகு மனப்பான்மை. இம்மாதிரிப் புறநானூற்று வீரம் செறிந்த கதைகளைக் கேட்டால், கிழங்கட்டையான எனக்கே மசுர்க்கூச்செறிகிறது. இனமானக் கோமணம் பறக்கிறது.

வாழ்க கீழடி! வளர்க மேலடி!!

(நம் தியாகுச் செம்மல் தியாகு அவர்கள், தம் அசிங்க போங்காட்டத் தவறை உணர்ந்ததும்,  பாரம்பரியமிக்க நம் கவரிமான் போல வெட்கித்து, உடனே திரும்பி அவருடைய உண்ணாவிரதத்தை ஆறுவருடங்களுக்குப் பின் ஆரம்பித்து, கூடிய விரைவில் நாமெல்லாரும் போய்ச்சேரவேண்டிய இடத்துக்குப் போய்ச்சேர, அவருக்கு எனது வாழ்த்துகள், வீரச்சாவுக்குப் புல்லரிப்புகள்!)

-0-0-0-0-0-

சரி. இசுடாலிர் மிசா விவகாரத்துக்கு வருவோம்.

நான் கீழ்கண்டவற்றில் முதல் நான்கையும் படித்திருக்கிறேன். மூன்றாவதைப் புரட்டியிருக்கிறேன். ஐந்தாவதில் இன்றுவரை ஈடுபட்டிருக்கிறேன். ஆறாவதை நேற்று பார்த்தேன். ஏழாவதை இன்று படித்தேன். எட்டாவதை இன்றுவரை செய்துவருகிறேன். பிறவிஷயங்கள் இவற்றுக்குக் கீழே:

1. ஜயந்திலால் சோட்டாலால் ‘ஜேஸி’ ஷா கமிஷன் விசாரணைக் கமிஷன் அறிக்கை (1977-78) – முழு கடைசி அறிக்கை, இடைக்கால அறிக்கை இன்னபிற,  பாரதீய ஜனதா கட்சி தளத்தில், இங்கே: http://library.bjp.org/jspui/handle/123456789/740

2. லல்லன் ப்ரஸாத் ‘எல்பி’ ஸிங் கமிட்டி அறிக்கை (1978) – இந்த அறிக்கை, ஷா கமிஷன் (ஷா செய்தது விசாரணை மட்டுமே, மேற்கொண்டு என்ன செய்யலாம் என்பது அவருக்குக் கொடுக்கப்பட்ட வரையறையில் இருந்திருக்கவில்லை!) தொகுத்த விஷயங்களை அலசி, அவற்றின்மேல் என்ன செயல்பாடுகளைக் கட்டமைக்கலாம், என்ன செய்யலாம் எனும் விவரணைகளைக் கொண்டது. இதன்பேரில் பல மாற்றங்கள் கொணரப்பட்டன, குறைந்தபட்சம் சிபிஐ அமைப்பில் இவை கொஞ்சம்போல அமல் படுத்தப்பட்டன + சிலபல சிறைச்சாலை மேலாண்மை மட்டுறுத்தல்களும் என எனக்கு நினைவு. (இந்த கமிட்டியின் அறிக்கையையோ, பின்னர் 1993ல் தயாரான என்என் வோரா அறிக்கையோ, இன்னமும் அரசால் அதிகாரபூர்வமாக வெளியிடப்படவில்லை; நான் இரண்டாவதைப் பார்த்ததுகூட இல்லை; ஆனால் முன்னதைப் படித்திருக்கிறேன்)

3. தமிழக ஆளுனர் மூலமாக அமைக்கப்பட்ட நீதிபதி எம்எம் இஸ்மாயில் கமிஷன் அறிக்கை (மே-ஸெப்டெம்பர் 1977) – இதில் இவருக்குக் கொடுக்கப்பட்டிருந்த வரையறை சென்னை மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்தவர்களின் நிலைபற்றி மட்டுமே – கோவை இன்னபிற ஊர்களில் இருந்த சிறைகளை இவருடைய அறிக்கை கருத்தில் கொள்ளவில்லை. (ஆனால் எனக்கு இணையத்தில் இந்த அறிக்கை கிடைக்கவில்லை; ஆகவே, அதன்மீதான என்னுடைய பழைய குறிப்புகளே சரணம்!)

4. மகாமகோ இரா செழியன் அவர்கள் 2010ல் தனக்கு 87 வயதாகியிருக்கும்போது தொகுத்துக் கொணர்ந்த ஷா கமிஷன் விவரணைகள்/பரிந்துரைகள். (இதன் முன்னுரை, ஒரு அழகு)

+செழியன் அவர்கள் இது பற்றி எழுதிய/பேசியவற்றின் மீதான என்னுடைய குறிப்புகள்.

5. திமுக, திராவிடம் அவற்றின் மூலச் சாக்கடைகளுக்கான ஊற்றுக்கண்கள், வரலாறுகள், பின்விளைவுகள் குறித்த தொடர்ந்த படிப்பு, சில மாமாங்கங்களாக எடுத்துள்ள குறிப்புகள்.

6. ‘வின் டீவி’ (விண்?) நிறுவன இளைஞர் மதன் ரவிச்சந்திரன் அவர்கள் (இப்படி நிறையபேர் கிளம்பியிருக்கிறார்கள்போல, எல்லாம் நல்லதற்கே!), திமுக திராவிடரான பொன்முடியுடன் நடத்திய உரையாடல் – https://www.youtube.com/watch?v=E5Apef2fNss

7. ஷா கமிஷன் அறிக்கையில், மிசா கைதிகள் பட்டியலில் ஸ்டாலின் பெயர் ஏன் இல்லை? காரணம்! (இரா.செந்தில் குமார்)  – விகடன் கட்டுரை – https://www.vikatan.com/government-and-politics/politics/why-mk-stalin-name-is-missed-in-the-shah-commission-report

8. சிலபல ஏழரைகளுடனான பிரத்யேக, தொடரும் மின்னஞ்சல்வழி உரையாடல்கள் (குறிப்பாக திமுக, கருணாநிதி, இசுடாலிர் பற்றியவை) – அவற்றின் சாராம்சங்கள்.

-0-0-0-0-

அடுத்த சில, சிறுபதிவுகளில், இசுடாலிர் குறித்த சர்ச்சைகளைப் பற்றிய ஆதாரபூர்வமான சில விஷயங்களைப் பார்க்கலாம் – அவர்கள் விக்கிலீக்ஸ் செய்தியை ஆதாரமாகக் கொடுத்தால், நாமும் அதே விக்கிலீக்ஸ் விஷயங்களை இன்னமும் சிலபல இசுடாலிர் விவரணைகளுக்கு ஆதாரமாகக் கொடுக்கலாம்.

+தமிழர்களாகப் பிறந்ததற்கு, இந்தத் திராவிடத் திருட்டுக் கருமாந்திரங்களின் கிடுக்கிப்பிடியில் சிக்கியிருப்பதற்கு வெட்கப் படலாம்.

ஏனென்றால், திமுக-இசுடாலிர் சொல்பவைகளில் மிகப்பெரும்பான்மை (இந்த மிசா சாமியாடல் விஷயத்திலும்) ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய்கள் மட்டுமே!

பார்க்கலாம்.

2 Responses to “ஸ்டாலின், மிசா, அண்டப் புளுகுகள், சப்பைக் கட்டல்கள், விகடப் பரப்புரை – குறிப்புகள்”

 1. Dagalti Says:

  18/9 அன்று ஒரு 1/2 போட்டுவிட்டு இண்டர்வெல் விட்டுவிட்டீர்கள்.
  இப்போது அடுத்த படம் பூஜை.
  தமிழ்ச்சினிமா பாஷையில் – உங்களுக்கு ஒவ்வாத – ரெட் போட வேண்டி வரும்.


  • ஹ்ம்ம்… சரிதான், எப்படியோ உங்களுக்கு ஏகாம்பரேஸ்வரர் அருள் பாலித்திருக்கிறது போல?


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s