ஒரு முன்னாள் இடதுசாரி / லிபரல்வாதியின் மீட்சி: பாரதீயம் குறித்த கவலைகள்/கட்டுரைகள்

23/10/2019

இந்த ‘மரகதம்’ என்பவரை பத்தாண்டுகளுக்கும் மேலாக தனிப்பட்ட முறையில் அறிவேன்.

அதற்கும் முன்னரும் அவரைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன். படித்தவர், உலக அனுபவங்கள் மிக்கவர், சுயதொழில் முனைவாளர் – எல்லாவற்றுக்கும் மேலாக, சுயசிந்தனையுள்ளவர். ஆச்சரியத்துக்குரிய விதத்தில், தமிழர். இன்னொரு ஆச்சரியம் என்னவென்றால், இவருக்குத் தமிழும் வரும், பாவம்.

ஆனால் பொதுவாகவே இடதுசாரி லிபரல் சிந்தனை உள்ளவர்களிடம் நான் எதிர்கொள்ளவேண்டிய பிரச்சினைகள் என நிறையவே இருக்கும் – நான் தரவுகளுடன் பேச ஆரம்பித்தால், அவர்களுக்குக் கோபம் வரும். அவர்களுடைய போலித்தனமும், உள்ளீடற்ற தன்மையும், இரட்டை வேடங்களும் வெளிப்பட்டுவிடும். என் பிரச்சினை என்னவென்றால் – ஒரு முன்னாள் இடதுசாரிக்காரனான எனக்கு, அவர்கள் சிந்தனைகள் எப்படி ஓடும், அவற்றின் (அடிப்படைகளற்ற) அடிப்படைகள் என்ன என்பதும் தெரியும்.

ஆகவே, சலிப்பின் காரணமாக ‘எனக்கெதுக்கு வம்பு’ என நிசப்தமாக கழன்றுகொண்டு விடுவேன். அதிகபட்சம், ‘தாங்கள் நலமா, நான் நலம்’ என்ற அளவில் மேம்போக்காக, மரியாதையுடன் பேசிவிட்டு அகல்வேன். ஏனெனில், தூங்கிக்கொண்டிருக்கிறோம் எனக்கூடத் தெரியாமல் கொர்கொர்ரென்று கொறட்டை விட்டுக்கொண்டு தூங்கிக் கொண்டிருப்பவர்களை என்னால் மட்டுமல்ல, யாராலும் ஒன்றுமே செய்யமுடியாது. நம் சக்திதான் வியர்த்தம்.

-0-0-0-0-0-

ஆகவே, சுமார் பத்துவருடங்கள் முன் அவரை ஒரு பொது நண்பர் வீட்டில் பார்த்து அளவளாவச் சந்தர்ப்பம் வாய்த்தபோதும், பார்த்தவுடனே ‘அதிதாராளமாக’ தோன்றியதால், சிரித்துக்கொண்டே, பெரிதாக ஒன்றும் பேசாமல் அகன்று விட்டேன். (எப்போதுமே எனக்குத் தலைக்குமேல் வேலைகள் இருக்கும் எனும் ஒரு சொகுசான சால்ஜாப்புவேறு!)

பின்னர் அவ்வப்போது அவர் என்ன செய்கிறார் (பணி ரீதியாக) நான் என்ன செய்கிறேன் எனச் சிலமுறை, ஒருவர் மேல் ஒருவர் அகஸ்மாத்தாக ‘முட்டிக்கொண்ட போது,’ சிலபல மேலோட்டமாக அளவளாவல்கள் நடந்தன என மங்கல் நினைவுகள். சொல்லப்போனால் – அவருக்கும் இந்த எழவெடுத்த கல்வி சார்ந்த பிரச்சினைகளிலும் சிடுக்கவிழ்த்தல்களிலும் ஆர்வம். இருந்தாலும்… …

பின்னர், அண்மையில் அவரைப் பார்த்துப் பேச, விஸ்தாரமாக அளவளாவ என ஒரு வாய்ப்பு கிடைத்தது. அவர் திருந்திவிட்டார், கர்வாபஸி செய்துவிட்டார் – என, மிக மிகத் திருப்திகரமாக உணர்ந்தேன். மானுடத்தின் மீதான என் அவநம்பிக்கை இன்னும் கொஞ்சம் குறைந்தது.

அவர் ஆங்கிலத்தில் எழுதியுள்ள இரண்டு ஆத்மார்த்தமான, அனுபவபூர்வமான, நீளமான சமூக அவதானிப்புக் குறிப்புகளுக்கான சுட்டிகள் கீழே.

அனுபவத்தாலும், ஆழ்ந்த அவதானிப்பாலும், களப்பணிரீதியாகவும் புடம்போடப்பட்ட கருத்துகள் இவை. ஜாதி எனும் மானுடப் பகுப்பைப் பற்றியவை. பொறுமையாகப் படிக்கவும். சிந்திக்கவும்.

Caste 101 and the curious case of the Left-Liberal
http://indiafacts.org/caste-101-and-the-curious-case-of-the-left-liberal/

Caste 102- Our Collective Cultural Caste-ration
http://indiafacts.org/caste-102-our-collective-cultural-caste-ration/

இவரைப் போன்றவர்கள், தொடர்ந்து, தமிழிலும் எழுதவந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்?

One Response to “ஒரு முன்னாள் இடதுசாரி / லிபரல்வாதியின் மீட்சி: பாரதீயம் குறித்த கவலைகள்/கட்டுரைகள்”

  1. Aathma Says:

    விடுமுறை நாள் வாழ்த்துக்கள்..


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s