சொத்துகள் ஆக்கிரமித்து அழிக்கப்படலும், சொத்தை லிபரல்களும்

10/11/2019

சுமார் 30 ஆண்டுகளுக்கு முன், சென்னையின் ஒருபகுதியாக இப்போதிருக்கும் நங்கநல்லூரில் நடந்த கதை. (ஆனால் – தாராளமாக, அயோத்தி விஷயங்களுடன் இதனைத் தொடர்பு படுத்திக் கொள்ளலாம்; ஓடும் நீரெல்லாம் கங்கை என்பது போல, என வைத்துக்கொள்ளுங்கள்!)

நான் குடியிருந்தவீட்டுக்கு அடுத்த இடம் ஒரு காலிமனை – இரண்டரை க்ரௌண்ட் போல, ஆறாவது மெய்ன் ரோட் அருகில்/சமீபத்தில். ஒருகாலத்தில் இரண்டு ரெவின்யூ கிராமங்களின் எல்லையில் இருந்த ஒரு பகுதி; அதன் எல்லைக்குள் தமிழக மின்சாரத்துறையில் ட்ரேன்ஸ்ஃபார்மர் வேறு பிஸா நகர கோபுரம் போலக் கொஞ்சம் சாய்ந்து நின்றுகொண்டிருந்தது! கொஞ்சம் ஸர்வே விஷயத்தில் சிறு பிரச்சினை. அது ‘தெருக்குத்தாகவும்’ இருந்தது – ஆகவே ‘த்ருஷ்டி’ விஷயம் இன்னபிறவற்றுக்காக ஒரு சிறு பிள்ளையார் சிலையையும் வைத்திருந்தார்கள்.

அதை வாங்கியவர் ஜப்பானில் இருந்தார் – அங்கேயே ஒருமாதிரி ஸெட்டில்(!) ஆகிவிட்ட நபர். பாவம், ஒரு என்ஆர்ஐ. அவர் பெயரை வேண்டுமானால் கல்யாணராமன் அல்லது கமலகாசன் என வைத்துக்கொள்ளலாம்.

வாங்கிய ஒன்றிரண்டு ஆண்டுகளுக்கு அவர் தன் மனையின் பக்கமே வரவில்லை. பின் சிலபல ஸர்வே சிக்கல்கள் வேறு.

கமலகாசனாரின் ஆவணங்களெல்லாம் பக்காவாக இருந்தாலும் – சிக்கல்களைப் புரிந்துகொண்ட ஒரு திராவிட அன்பர் (ஆலந்தூர் திமுக ஆர்எஸ்பாரதியின் அடிவருடி) அதனைத் தடுத்தாட்கொண்டார். முதலில் ஒரு சனிக்கிழமை இரவில் ஒரு திடீரெக்ஸ் குடிசை வந்தது.

அடுத்த நாள், உடனடியாக அங்கிருந்த பிள்ளையார் சிலையை எங்கேயோ நகர்த்திவிட்டு அதனைவிடப் பெரிதாக ஒரு மாரியம்மன் சிலையைப் ப்ரதிஷ்டை செய்தார்.  பின்னர் அதையும் அகற்றி  ஒரு ப்ரேயர் ஹவுஸ் (‘ஜெபவீடு’) என ஒருமாதிரி மாற்றினார். ஆனால், அன்பர் வெறும் ஒரு  அரிசிமூட்டைக் க்றிஸ்தவர். ஆகவே எதற்கும் அவர் நடத்தைக்கும் தொடர்பில்லை. பெருங்குடி வம்சத்தினர்வேறு. பின்னர் காலாகாலத்தில், குடித்த மப்பில், தன் மகளையே புணர்ந்து பிள்ளைத்தாய்ச்சி ஆக்கியவர். பின்னர் அவர் மனைவிக்கும் மகளுக்கும் சண்டை. மகளுக்குச் சதா அடிஉதை. (எனக்குப் பரிதாபமாக இருந்தது. ஆனால் உங்களுக்கு அப்படியிருக்கவேண்டிய அவசியமில்லை – முன்னமே சொன்னேனல்லவா, அவர் ஒரு திராவிடர்; ஆக, வருத்தம் எல்லாம் படவேண்டாம். இதெல்லாம் அங்கே சகஜம்தானே!)

சரி. போலீஸ் கீலீஸ் என எங்குசென்றாலும் திமுக லெட்டர்பேட் காட்டி, ‘பெரிய இடங்களில் இருந்து ஃபோன் போடச்சொல்லி’ வழுக்கிக்கொண்டே இருந்தார். ஒன்றிரண்டு முறை, ‘கொத்தவரங்கா போலவுடம்பு அல்லேக்’ உடற்பாங்கு கொண்டிருந்தாலும், அன்பரிடம் போய் ஏகத்துக்கும் சப்தம்போட்ட கமலகாசனாருக்கு அர்ச்சனையெல்லாம் நடந்தது. இன்னொரு முறை சில ஆட்களை கமலாகாசனார் கூட்டிக்கொண்டுபோய் தன் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்திருந்த கட்டிடத்தை அகற்றவும் முயன்றார். ஆனால் போலீஸ் வந்து ‘மத்தியஸ்தம்’ செய்தது.

மேற்கண்ட விஷயங்கள் நடந்தபோது நான் மும்முரமாகச் சில தொழில்முனைவுகளில் ஈடுபட்டு ஏகத்துக்கும் தீவிரமாக நஷ்டப்பட்டுக்கொண்டிருந்தேன் — ஆகவே, அதிகம் நேரடியாக இதில், கோதாவில் இறங்கவில்லை. கமலகாசனாரை ஒருமுறை திராவிடர் அடிக்க வந்தபோது கொஞ்சம் தள்ளுமுள்ளு நடந்தது, எனக்கும் மஹாகோபம் வந்து கமலகாசனாரைப் பாதுகாத்து திராவிடரை உதைத்தேன், உதையும் பட்டேன். விளைவு – என் மோட்டார்ஸைக்கிள் (ஹ்ம்ம், அதுவும் அது என் அலுவலகத்துடையது, எனக்குச் சொந்தமானதல்ல!) கொஞ்சம் நசுக்கப்பட்டது; கொஞ்சம் அக்கப்போர். பெரிய விஷயமில்லை.  திராவிடரின் மகள் தொடர்பாக காவல்துறைக்குச் சென்றேன் – ஆர்எஸ்பாரதியின் உதவியாளரும் அங்கே வந்திருந்தார்; ஆகவே ஒன்றும் நடக்கவில்லை. என் வயிற்றில் நிறைய அமிலம் சுரந்ததுதான் மிச்சம்.

இதற்குப் பிறகு நான் உத்தராயணம் சென்றுவிட்டேன்.

அந்தப் பெண்குழந்தை என்னவாயிற்றோ, இன்று நினைத்தாலும் வருத்தமாக இருக்கிறது. (ஆனால் திராவிட அன்பரிடம் இதுகுறித்து , நியாயமா எனக்கேட்டு முட்டாள்தனமாக ‘உரையாட’ச் சென்றபோது, அந்த 13 வயதுக்குழந்தையை அரசு ஹாஸ்டலில் சேர்த்திவிடலாம் என நினைத்தபோது, அவர் எனக்குக் கொடுத்த அறிவுரை: “நீயும் வேணாக்க அவகூட படு.” நன்றி, ஐயா நன்றி!)

-0-0-0-0-0-

கோர்ட்டில் விவகாரம் – இரண்டு பத்தாண்டுகளுக்கும் மேல் நீடித்தது. இத்தனைக்கும் கமலகாசனார் சுறுசுறுப்பாக வழக்கை மேலெடுத்தார், எப்பப் பார்த்தாலும் காஸ் லிஸ்ட், இன்னிக்கு ஹியரிங், சீக்கிரம் ஜட்ஜ்மெண்ட் வந்துடும், அப்பீல் அப்படி இப்படியென்று…

சுற்றுவட்டாரத்தில் மனையின் விலையும் ஏறிக்கொண்டே இருந்தது. இந்தக் காரணத்தாலும் பலமுறை ரெவின்யூ துறையிலிருந்தும் பிராந்திய திராவிடர்களும் வழக்குரைஞர்களும் லும்பன்களும் பார்வையிட்ட வண்ணம் இருந்தனர். கண்டவர்களும் ‘மத்தியஸ்தம்’ செய்கிறேன் என்று வந்தனர்.

பின்னர் ஜாதி, மதம் எனக் கொஞ்ச வருடங்கள், புத்தம் புதிதான கோணங்களைக் கொணர்ந்த வண்ணம் இருந்தனர். (ஏனெனில் அந்த இடத்திற்குப் பின்பக்கம் இன்னொரு சுமார் 1.8 ஏக்கர் நிலத்தை இன்னொரு திராவிடர் ஆக்கிரமித்திருந்தார் – அதிலும் வழக்கு வியாஜ்ஜியம் என நடந்துகொண்டிருந்தது என நினைவு –  இவர்களெல்லாம், மிகவும் தளர்ந்த நிலைக்கு நிலத்தின் உண்மையான உரிமையாளர்கள் வரும்போது அவர்களுக்கு வேறுவழியே புலப்படாமல் ‘அவுட் ஆஃப் கோர்ட் ஸெட்டில்மெண்ட்’  என அவர்களிடமிருந்து பணக் கறக்க நினைத்த வல்லூறுகள், பிணம் தின்னிகள்!)

எது எப்படியோ, கடைசியில் கமலகாசனார் கட்சி வெற்றி.  இது ஒரு பெரிய விஷயம் இல்லை, ஏனெனில் தரவுகள் அனைத்தும் கமலகாசனார் பக்கம்தானே இருந்தன.

ஆனால், நீதி பரிபாலனம் செய்யப்படவேண்டுமே! அதிலும் பிரச்சினை. ஒரு வழியாக, போலீஸ் திராவிடர்கள் என மத்தியஸ்தம் செய்து, ‘ஒரு அமௌண்ட்’ கொடுத்து நிலத்தை மீட்டனர். 2009 வாக்கில் இது நடந்தது என நினைவு. (அந்த சமயம், அப்பகுதியில் விலை ஏகத்தும் அதிகமாகிவிட்டிருந்தது என நினைவு)

என்ன சொல்ல வருகிறேன் என்றால் – இந்த அவிழ்க்கப்பட்ட சிக்கலானது –  வெறும் நிலம் -> அடாவடி ஆக்கிரமிப்பு -> நீண்ண்ண்ண்ண்ட வழக்காடல் -> நீதி பரிபாலனம் விஷயம். இதற்கும் கடவுள் சிலைக்கும் ஒரு தொடர்புமில்லை.

-0-0-0-0-0-

ஆனால், ஒரு தோழர் (இக்காலத்து படிக்காத இடதுசாரியல்ல அவர், அப்போதைய வெறும் படித்த முட்டாள் மட்டுமே!) அதற்குக் கொடுத்த வியாக்கியானம் இருக்கிறதே…

 • நீதி கொடுத்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஒரு ஹிந்து.
 • அதனால் அவர் ஜெபவீட்டுக்கு எதிரி. (இத்தனைக்கும் வழக்கு நடந்த மாமாங்கங்களில் அது ஒரு ஜெபவீடாகக் கூட  இல்லை, பலவருடங்கள் சிதிலத்தில்தான் இருந்தது என நினைவு!)
 • முதலில் அங்கே பிள்ளையார் சிலை இருந்ததா எனக்கூடப் பார்க்காமல் செய்யப்பட்ட அநீதி அது. அது அங்கே இருந்திருக்கவில்லை, அது ஒரு மாரியம்மன் கோவிலாகத்தான் இருந்தது – கோவில் நிலத்தைத்தான் ஜப்பான் காரர் ஆக்கிரமித்தார்!
 • குற்றம் சாட்டப்பட்டவர் (நம் செல்ல திராவிடர்தாம்!) தன்(!) நிலத்தில் தொடர்ந்து சர்ச் நடத்திய சான்றுகளைக் காட்டியும் இப்படியா?
 • அதற்கு முன் அதே நிலத்தில் மாரியம்மன் கோவில் இருந்திருக்கிறதே – உயர்ஜாதி (கமலகாசனார் ஒரு சைவப்பிள்ளை அப்பிராணி, பாவம்!) ஆட்கள் கீழ்ஜாதி ஆட்களைக் கொடுமைப்படுத்தியிருப்பதின்  தொடர்ச்சிதானே இது.
 • நாடே இந்துவெறியில் இருக்கும்போது உயர் நீதிமன்றம் மட்டும் எம்மாத்திரம்?

இப்படியெல்லாம், இந்தக் கழுவேறிகள் மாற்றி ரோசிப்பார்கள் எனக் கனவில் கூட யோசித்ததில்லை! ஆச்சரியம்தான்!  ஆனால், அவருடன் வம்புவலிக்க நேரமில்லாததால், சிரித்துக்கொண்டே அகன்றுவிட்டேன். (இது நடந்தது சுமார் 2010 வாக்கில்; அதற்குப் பிறகு இந்தப் பொறுக்கி உதவாக்கரையுடன் தொடர்பே இல்லை!)

கமலகாசனார் இப்போது எங்கிருக்கிறார், மனை எப்படி என ஒன்றையும் அறிந்துகொள்ள முயற்சியும் செய்யவில்லை.

-0-0-0-0-0-

இப்போதும் அதே இடதுசாரிகள், சொத்தை லிபரல்கள். ஏறத்தாழ அதே ஆக்கிரமிப்பு கதை. அதே போன்ற ‘மத்தியஸ்தம்’ செய்ய முனைந்தவர்கள், தொழில் வல்லுநர்கள். சுயகாரியப் புலிகள், பேடிகள்.

அயோத்தியில், பல நூற்றாண்டுகளாக,  அண்மைவரை நடந்திருப்பது, ஒரு பெரிய பச்சைத் துரோகம். கொடூரம். அசிங்கம். ஆனால் இதற்கும் கிடைத்த நீதிக்கும் தொடர்பில்லை.

அது – இந்தக் கொடுமைகளைக் கணக்கில் கொள்ளாமல், வாய்கூசாமல் பொய்சொன்ன வரலாற்றாளப் பேடிகளை விமர்சிக்காமல், தம் நிலமாக இல்லாவிட்டாலும் பொய்ச்சொந்தம் கொண்டாடிய அயோக்கியர்களைக் குற்றம் சாட்டாமல்  – நிலத்தின் சொந்தக்காரர்கள் பாத்தியதைக் காரர்கள் யாரென்று ஆவணபூர்வமாக, சான்றுகளுடன் சந்தேகத்திற்கிடமிலாத வகையில் நிரூபணம் செய்திருக்கிறது. அவ்வளவுதான். வெறும் டைட்டில் டிஸ்ப்யூட் விவகாரத்தைத் தீர்த்திருக்கிறது.

ஆனால் பல்லாண்டுகளுக்குப் பின், இந்த அடிப்படை நியாயத்துக்கு வருவதற்குள் எவ்வளவு குழப்பினார்கள், பொய் சொன்னார்கள், நம் தொழில்முறைப் பேடிகள்!

(twitter.com/othisaivu/status/1193135434219450368)

…நம்பிக்கைகளை இழுத்து, ஆகாத்தியம் செய்து, அநியாயத்துக்குப் புளுகி, தங்கள் கட்சிக்காரர்களிடமும் பொய்சொல்லி ஏமாற்றி, துளிக்கூடப் பொறுப்பில்லாமல் நீதிமன்றங்களின் நேரத்தை வீணடித்து, அகழ்வாராய்ச்சி செய்யவேண்டும் எனச் சொல்லி, அது செய்தவுடன் அதனை ஒப்புக்கொள்ளாமல் குற்றம் சொல்லி என – இந்த கும்பல்கள் செய்தது, பச்சைப் பொறுக்கித்தனம்

இந்த நீதி – ‘வெறும் சொத்துத் தகராறு’ எனக் குவியம் செய்யப்பட்ட விஷயம் குறித்த, தெளிவான விளக்கம் மட்டுமே.

அதுவும் குற்றம் புரிந்தவர்களுக்கு, ஆக்கிரமிப்பு செய்தவர்களுக்கு, அதுவும் தாங்கள் செய்ததுதான் சரி என ஆகாத்தியம் செய்து பல உயிர்களைக் காவுவாங்கிய லும்பன் கும்பல்களுக்குச் சலுகைகளும் கிடைத்திருக்கின்றன.

ஆனால், அது மட்டுமல்ல; பொய்மைகளைக் கண்டுகொள்ளாமல், இப்போதும் இதற்கும் மதச் சாயம் பூசுகிறார்கள், நம் மதச்சார்பின்மை மாமாக்கள்.

ஒரு வரலாற்றுக் களங்கம், சட்டரீதியாக எதிர்கொள்ளப்படும்போது பம்முகிறார்கள். இதுவா நீதி என்கிறார்கள்!

இவர்கள் வீட்டில் ஒரு பகுதியை அடாவடியாக இடித்துடைத்து அதில் நான் ஒரு கடை கட்டிக்கொண்டால், என்னைத் தலைமேல் வைத்துக் கொண்டாடி, எனக்கு ஒரு ‘லெனின் விருது’ வாங்கிக் கொடுப்பார்களா என்ன, நம் மமாக்கள்?

அல்லது, அவர்களுடைய லிபரல் படுக்கையறைகளின் நட்டநடுவில் என்னுடைய கழிப்பறையைக் கட்டினால், அதனையும் மலச்சார்புரீதியாக ஒப்புக்கொள்வார்களோ இந்த அயோக்கியப் பதர்கள்??

பேடிகள்.

வாழ்ந்தாலும் இடதுசாரி-லிபரல் கீழ்மக்கள் , கீழ்மக்களே!

13 Responses to “சொத்துகள் ஆக்கிரமித்து அழிக்கப்படலும், சொத்தை லிபரல்களும்”


 1. + “சங்கிகள் சுட்டாலும் வெண்மை தருவோர்!”

  நன்றி.

 2. anonymous Says:

  //பின்னர் காலாகாலத்தில், குடித்த மப்பில், தன் மகளையே புணர்ந்து பிள்ளைத்தாய்ச்சி ஆக்கியவர்.

  👿👿True? Horrible.

 3. Anonymouse Says:


  • ஐயா, பார்த்தேன்.

   இப்படியா பொய் சொல்வார்கள்? தாங்கள் சொன்ன பொய்களையும் தாங்களே நம்புவார்கள்? (அவர்களுக்கு துக்கமும் தாங்கமுடியவில்லை, பாவம்!)

   ஒரு விஷயம்: இந்தக் கோமாளியின் பெயரையும் கருஞ்சட்டை நாட்ஸிகளின் கருப்பு லிஸ்டில் சேர்க்கவேண்டும்தான், ஆனால் இம்மாதிரி ஊடகப்பேடிகளுக்கு என, தனியாக ஒரு ஜாபிதா போடவேண்டும்; அலுப்பாக இருக்கிறது.

 4. A. S eshagiri Says:

  உங்களின் இந்தப்பதிவை இப்போது தான் படித்தேன்,நேற்று இரவு மஹாப்பெரியவர் பி.ஏ.கே அவர்களின் இந்தப்பதிவை படித்து உள்ளுக்குள் குமுறி கொண்டிருந்த எனக்கு இது மிகுந்த ஆறுதலாக இருக்கிறது.மேன் மக்கள் மேன் மக்கள்தான் போலும் வேறு என்னத்தச் சொல்ல?
  https://m.facebook.com/story.php?story_fbid=3731036260255864&id=100000485801824

  https://m.facebook.com/story.php?story_fbid=3740538952638928&id=100000485801824


  • ஐயா அரவமலையோனே!

   ஏன் இதனையெல்லாம்,  இந்தச் சுட்டிவாந்திகளையெல்லாம் கொடுக்கிறீர்கள் எனப் புரியவில்லை. அவர் பலவிஷயங்களில் காமாலைக் கண்ணர், இதுவாவது நமக்குப் புரியவேண்டாமா?

   இருந்தாலும் மண்டையில் அடித்துக்கொண்டு படித்தேன்.

   அந்த 1000த்திச் சொச்ச ஜட்ஜ்மெண்டை நேற்றுதான் முழுவதும் படித்துமுடித்தேன். (இத்தனைக்கும் நான், பயிற்சி காரணமாக, வெகுவேகமாகப் படிக்கக்கூடியவன்)

   ஆனால் பறவையரசர் அலகிலாக்கறுப்பனார் ஒரு ஸுப்பர்மேன்.

   உச்சநீதி மன்றத் தீர்ப்பு காலையில் வருகிறது. அதை மேலோட்டமாகப் படித்துவிட்டு மேலான கருத்துகளை அன்று மாலையே மூன்றுமணிவாக்கில் அளிக்கும் அதிமனிதர் அவர். பைரவர் சேவை நாட்டுக்குத் தேவை.

   எனக்கென்னவோ, அந்த ஆவணத்தில் அவருக்குப் பிடித்திருக்கக்கூடும் வார்த்தைகள்/வாசகங்களான — மதச்சார்பின்மை, தாராளப் பார்வை, நேரு, ஸோஷலிஸ்ம், ஆர்எஸ்எஸ் ஒழிக, பிராம்மணப் பொறுக்கிகள், நட்ட நடு நிலை, ஹிந்து மதவெறி, ஜாதித் திமிர், மஸுதிதான் இருக்கவேண்டும், ராமர் கோவில் பீலா, ராமர் அங்கேதான் பிறந்தார் என்பதற்கு சாட்சியில்லை, அகழ்வாராய்ச்சி (அயோத்தியில் மட்டும்) எப்படி ஒப்புக்கொள்ளமுடியாத பரிதாப நிலையில் இருக்கிறது… … டட்டடா டட்டடா… — போன்றவற்றைத் தேடியிருப்பார்.

   அவருக்கு அவல் ஒன்றும் கிடைக்கவில்லை போலும். பாவம். ஆகவே, அவர் வெறுத்திருப்பார்.

   பின், நீங்கள் கொடுத்துள்ள இரண்டாவது சுட்டியில் தொடர்ந்த பிலாக்கணம். ஒரு பெரிய கலவரமோ களேபரமோ நடக்கவேயில்லையே என்ற கவலையாகவும் இருக்கலாம்.

   இரண்டிற்கும் பல நபும்ஸகர்கள் ‘லைக்’ பண்ணியிருக்கிறார்கள் என்பதையும் அறிந்து மகிழ்ந்தேன். இம்மாதிரிப் புளகாங்கிதச் சூழலில் எனக்கே ஃபேஸ்புக் எழவில் சேரலாம் என ஆசைவேறு வருகிறது.

   எனக்கும் முதுகில் யாராவது சொறிந்துகொடுத்தால் கசக்குமா என்ன?

   சரி. இனிமேலாவது, பறவையரசர் அலகிலாக்கறுப்பனாரின் பதிவுகளை லூஸ்லவுடுவதற்கு அப்பாற்பட்டு, என்னையும் மன்னிப்பீர்களா?

   நன்றி.

 5. A. Seshagiri Says:

  உங்களின் இந்தப் பதிவை இப்போதுதான் படித்தேன், அதற்குமுன் நேற்றிரவு மஹாப் பெரியவர் பி.ஏ.கே அவர்களின் இந்தப்பதிவுகளைப் படித்து உள்ளுக்குள் குமுறிக் கொண்டிருந்த எனக்கு இது மிகுந்த ஆறுதலைத் தந்தது.என்றும் மேன்மக்கள் மேன்மக்கள்தான் மேன்மக்கள்தான் போலும். வேறு என்னத்த சொல்ல?


 6. யோவ்!

  இதென்ன ரெண்டுவாட்டி? ஒன்றில் சுட்டிகள் இல்லைவேறு!

  நீங்கள் சுட்டிச்சார்பின்மைவாதியா அல்லது சுட்டிவெறியரா?

  இடஞ்சுட்டி விளக்கவும்.

 7. A. S eshagiri Says:

  முதல் தடவை அனுப்புகிற நேரத்தில் நெட் கட்டாகிவிட்டது.சந்தேகப்பட்டு இரண்டாம் தடவை அனுப்பும் அவசரத்தில் “குலோத் துங்கனை”மறந்து விட்டேன்.நீங்கள் தமிழ் ‘படுத்திய’எனது பெயர் அருமை-😀😀😀

 8. anonymous Says:

  I have send a lot of links, but how come you respond only to your close friends? What do you think of this – https://m.facebook.com/pakshirajan.ananthakrishnan/posts/3741813939178096


  • இதென்னடா விபரீதம்! :-( உங்களுக்கு எவ்வளவு வயதாகிறது? என்ன சிறுபிள்ளைத்தனமிது? :-(

   அவர் இஷ்டத்துக்குக் கண்டதையும் படித்துவிட்டு அந்தக் குப்பையை மட்டும் சாட்சியாக வைத்துக்கொண்டு பீலாபீலாவாக அட்ச்சிவுடுவதற்கெல்லாம் எவராலும் பதில் சொல்ல ஏலாது. நன்றி.

   (வயதுவந்தபின் தனியாக மின்னஞ்சல் அனுப்பவும், பின்னர், முடிந்தால் பார்க்கலாம்!)


Leave a Reply to anonymous Cancel reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s