இன்னாதூ? தற்கொல கேஸ்மேல கர்த்து ஸொல்ணுமா?

16/11/2019

முட்யாத். போங்கடே.

-0-0-0-0-0-

…சுமார் 35 ஆண்டுகளுக்கு முன் நான் படித்த(!) கல்லூரியில் ஒரு பெண் தற்கொலை செய்துகொண்டிருக்கிறது என இன்று கேள்விப்பட்டேன். ஊரே பற்றி எரிகிறதாம். ஜாதிவெறியா மதவெறியா பாலியல் ரீதியான தொந்திரவு காரணமா என்றெல்லாம் அலசல்கள். யார் யார் எந்த ஜாதி என அப்படியொரு ஆய்வாம்.

ஒரு அன்பருக்கு, ஆகவே, ஒரு முக்கியமான கேள்வி: “உண்மை நிலவரம் என்ன? விசாரித்து எழுதமுடியுமா??”

ற்றொம்ப முக்கியண்டே! (இந்த தண்டகருமாந்திர விஷயத்தால், என் வாழ்க்கையின் பத்து நிமிடங்கள் இன்று காலையில் வியர்த்தம். இன்னமும் பதினைந்து நிமிடங்கள் இந்தக் கோபப் பதிவை எழுதுவதில் செலவழிக்கப்போகிறேன், என்ன செய்ய…)

…ஒரு மசுறு பின்புலத்தையும் அவர் புரிந்துகொள்ளவில்லை. அவருக்கு ஏதோவொரு தகவலறியும் தற்குறித்தனம், அல்லது திராவிட மசக்கை. அவ்ளோதான். தெரிந்துகொண்டு என்ன மசுத்தைச் சாதிக்கப்போகிறார் என்றும் தெரியவில்லை. ஃபோன் நம்பர் இருந்தால் சும்மா ஒரு ஃபோன் போடவேண்டியது, இந்த அளவுதான் இம்மாதிரி வம்பர்களின் செயலூக்கம்.

இந்த பப்பரப்பா தண்டங்களுக்கு — பல இடங்களில் இப்படி நடந்தாலும் ஏன் ஒருசில கேஸ்களில் மட்டும் அப்படி ஆர்வம் காட்டுகிறோம், இந்த (தற்)கொலைகள் நடப்பதில் நம் பங்கு என்ன, இம்மாதிரி நிகழ்வுகளைக் களைய நெடுங்காலத்திட்டங்களாக நம் சமூகம், அரசு, ஊடகப்பேடிகள், அறிவுஜீவிய அவுசாரிகள் என்ன செய்யவேண்டும், ஒன்றுமே தெரிந்துகொள்ளாமல் கறார்கருத்துகளுக்கு டமாரென்று வந்து சேர்ந்தது எப்படி… — என்பதெல்லாம் குறித்த ஒரு சிந்தனையுமில்லை.

எது எப்படியோ – பலவகை ஃபேஷன் தற்கொலைகளைப் பற்றியும், தற்கொலை செய்துகொண்ட கோழைகள் ஹீரோக்களாகவும் ஹீரோயினிகளாகவும் ஆவதையும், பொறுப்பற்ற ஊடகப்பேடிகள் இதை வைத்துக்கொண்டு டிஆர்பி ரேட்டிங் எனக் காலட்சேபம் செய்வதையும், சிலபல அரைகுறைப் பொறுக்கி திராவிட அரசியல் கட்சிகள் இவற்றில் அரசியல் செய்து குளிர்காய்வதையும், ஆகவே மேன்மேலும் தற்கொலைப் பேடித்தனங்கள் அரங்கேறுவதையும் பல நாட்களாகக் கேள்விப்பட்டுக்கொண்டுதான் இருக்கிறேன். வருத்தமாகவும் இருக்கிறது.

ஆனால் – இதுபற்றியெல்லாம் ஒரு மசுத்தையும் புரிந்துகொள்ளாமல், தீரவிசாரிக்காமல், தரவுகளே இல்லாமல் வதந்திகளாக எழுதி ஔட்ரேஜ் அறச்சீற்றம் என ஸீன் போட, நான் ஒரு சராசரி ஊடகப்பேடியோ அல்லது ‘சமூகத்தின் மனச்சாட்சி’ என தன்னைத்தானே வரித்துக்கொண்டிருக்கும் பொய்மையே உருவான அலக்கியக்காரனோ அல்லன். ஹிஸ்டீரியா வெறிகளுடன் எனக்கு ஒத்துவராது.

மேலும் எனக்கு, இந்த கேஸ் பற்றி ஒன்றும் தெரியாது. அந்தக் கல்லூரியில் எனக்குத் தெரிந்தவர்களைத் தொடர்புகொண்டு இதனைப் பற்றி விசாரிக்கவோ, அல்லது இந்த தற்கொலையின் பின்புலத்தைத் தெரிந்துகொண்டு என் மேலான கருத்தை அளிக்கவோ துளிக்கூட ஆசையில்லை.

ஆனால் நீங்களே துப்பறிந்து  ஆய்ந்து அலசி மேல்ஜாதிவெறி கீழ்பேதிவெறி பிறஜாதிக்கறி எனப் பப்பரப்பாத்தனமாக எழுதிக்கொண்டு நீங்களே படித்துக்கொள்ளவும்.

இம்மாதிரி தற்கொலை அரைகுறைத்தனங்களுக்குப் பெரிதாகக் கவலைப் படுவதுபோல் காட்டிக்கொண்டு வம்புக் கவரேஜ் கொடுத்துக்கொடுத்தே, இன்னமும் நிறைய தற்கொலைகள் நடக்க சாத்தியக்கூறுகளை உருவாக்கும் உங்களைப் போன்றவர்களை நம்பித்தான், நம்முடைய இளம் தற்கொலை இண்டஸ்ட்ரியே இருக்கிறது.

அடுத்து நடக்கப்போகும் ஃபேஷன் தற்கொலை பற்றிய ‘உண்மை விளம்பி’ விஷயங்களுக்கு நீங்கள் வேறு யாரையாவது அணுகவும்.

நன்றி.

8 Responses to “இன்னாதூ? தற்கொல கேஸ்மேல கர்த்து ஸொல்ணுமா?”

 1. anonymous Says:

  கல்மனது. வருத்தமாகவே இல்லையா? இனி உங்களோட பேசினா என்னை செருப்பால அடிங்க.


  • ஐயா! தற்போதைய நிலவரங்கள் +  ‘உடையும் செய்திகளின்’படி #ட்ரெண்டிங் எழவுகளில் #தற்கொலைக்கும்மாளம் #ஊடகப்பேடித்தனம் #அறச்சீற்றஆவேஷம் முக்கியமாமே?

   மற்றபடி, என்னிடம் தற்போது பேரகன் செருப்புகளும் (ஃப்லிப்ஃப்லாப்/ஹவாய்)  லிபர்டி ஷூக்களும் இருக்கின்றன.

   #செருப்படி உங்கள் சாய்ஸ்.

   உங்கள் சௌகர்யம்போல (ஆனால் இவை இரண்டில் ஒன்றை) தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம். உங்கள் தோற்செருப்புகள் வேண்டா.

   நன்றி.


  • முகவரி , தொலைபேசி எண் என்று எதையாவது கொடுத்திருக்கலாம். இப்படி அனானியாக பின்னூட்டம் இட்டுள்ளீர் பொறுப்பில்லாமல்.

   ஒரு வேளை ஒத்திசைவாளரே பின் நவீனத்துவ விளையாட்டு ஆடுகிறாரோ என்னவோ ?

 2. ANONYMOUS FEMINISt Says:

  ARROGANt IDIOT BRAHMIN

  PATRIARCHAL PIG, NOBODY BOTHERS ABt YOUR COMMENT

  GEt LOST


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s