வசந்தாகந்தசாமியாயணம், அமெரிக்கக் கவிஞ்ஜர் பெருந்தேவி அறச்சீற்றலுளறலாயணம் – குறிப்புகள்

20/11/2019

இரண்டும் = 100% நகைச்சுவை நவீணம். கியாரண்டி.

-0-0-0-0-

சுமார் இரண்டுமாமாங்கங்களுக்கு முன்போல ஏதோ விஷயமாக ‘முன்னாள் ஐஐடி சென்னை’ + ‘ஒடுக்கப்பட்ட’ புகழ் பெற்ற பேராசிரியர் வசந்தா கந்தசாமி அவர்களுடன் ஒரிருவார்த்தை பேசும் பேறு பெற்றிருக்கிறேன்.

அங்கே ஆராய்ச்சி செய்துகொண்டிருந்த என் நண்பன் ஒருவனுடன் ஏதேச்சையாக ஏதோ புராணகால பாரதக் கணித/வானியல் பயன்பாடுகள் பாரம்பரியங்கள் (‘வேதிக் மேதமேடிக்ஸ்’ அல்ல! எனக்கு அது சிலபல காரணங்களால் ஒத்துவராது!) பற்றி அரட்டை அடித்துக்கொண்டிருந்தபோது நம் அம்மணி பற்றிப் பேச்சுவந்தது. நண்பன் சொன்னான் – அம்மணி அவர்களும் அதில் ஆர்வமுள்ளவர், ஆழமான விமர்சனங்களை வைக்கிறார் என வதந்தி என்று.

ஆகவேயும் பேராசிரியாயினி அவர்களின் அலுவலகம் மிகப்பக்கத்தில் இருந்ததாலும், எனக்கும் ரயில்வண்டி இரவில்தான் என்பதாலும், அம்மணியிடம் முன்னனுமதி வாங்கிக்கொண்டபின், அந்தப் பாவப்பட்ட ஓரிருவார்த்தைகள் நடந்தன என்பதுபோல நினைவு. (இந்த நண்பன் தற்போது குப்பைகொட்டிக்கொண்டிருப்பது, இங்கிருந்து ஓடிப்போயிருக்கும் அதிசராசரிகள், ஐடிகுமாஸ்தாக்கள் எல்லோரும் ஆனந்தமாக மினுக்கிகொண்டு குப்பை கொட்டிக்கொண்டிருக்கும் அமெரிக்காவில்தான் – ஆனாலும் இவனைப் போல சிலபல மாணிக்கங்களும்  வெளியேறியிருப்பது நிச்சயம் பாரதத்திற்கு நஷ்டம்தான்!)

சென்றோம். மாட்டிக்கொண்டோம். நொந்தோம். படுசோகம், என்ன செய்ய.

பாவம். சுத்தம். அவரும் சரி. கணிதமும் சரி. நான் தான் ஏதோ கொடூரப் பாவம் செய்திருக்கவேண்டும். அன்றும் என் கர்மா என்னைத் துரத்தித் துரத்தி ரவுண்டு கட்டி அடித்தது.

அவரும் ஏதோ தடக்கா புடக்கா என ஏதோ ஒன்றும் தொடர்பில்லாமல் சொல்லிக்கொண்டிருந்தார். அவருடைய அடிப்படைக் கணிதம்கூடச் சரியில்லை என்பதற்கு அப்பாற்பட்டு (துளிக்கூட முன்னறிமுகமில்லாத எங்களிடம்கூட!) முகாந்திரமேயில்லாமல் ஒரே ‘ஒடுக்குகிறார்கள்‘ புலம்பல். நண்பன் ஏதோ குறுக்குக்கேள்வி கேட்கப்போய், பின்னர் இது ‘ஒடுக்குகிறீர்கள்‘ என ரஸவாத மாற்றம் கண்டது. ஆகவே, அம்மணி அவர்கள் எங்களைத் துளிக்கூடப் பேசவே விடவில்லை.

காலி ஓவல்டின் தகர டப்பாவில் ஆணி அடித்தால் வரும் ஓசை. பாவம். (ஓ!  இது பெண்ணியம். ஆகவே டப்பி. என் ஆணாதிக்க மனப்பான்மையையும் என்னையும் ஒருசேர மன்னிப்பீர்களா?)

இதில் ஒரு சுவாரசியமான விஷயம் என்னவென்றால், என் நண்பன் இக்காலங்களில் ‘தலித்’ என அழைக்கப்படும் மக்கட்திரளைச் சார்ந்தவன். மத்தியப் பிரதேசக்காரன். அவன் தோல் நிறம் வெள்ளை. நான் பழுப்புக்கறுப்பு நிறத்தோன். ஆகவே, எங்கள் தோல்நிறங்களையும் மூஞ்சிகளையும் பார்த்து நான் கட்டியிருந்த டப்பாக்கட்டு வேட்டியைப் பார்த்து, நம் இனிய தமிழ்மக்களுக்கே உரித்தான ‘ஜாதி கண்டுபிடிக்கும்’ ஃபஸ்ஸி லாஜிக் திறமையைக் கொண்டு அவர் ‘கலர் கோடிங்’ செய்து எங்களை ‘உயர்’ஜாதி என வகைப்படுத்தி ‘ஒடுக்குகிறீர்கள்’ எனச் சொல்லிவிட்டார் என நினைக்கிறேன். தேவையா? :-(

சொல்லப்போனால் அவர்தாம் எங்களை ஒடுக்கிக்கொண்டிருந்தார்; நாங்களும் ஒடுங்கிக்கொண்டிருந்தோம்.

But our issue was that, both of us were/are against mediocrity & uncalled-for unscholarship. But we were never impolite or sarcastic to the lady.  {To this day, I practice it. I never go to someone else’s place and pick up fights or arguments. Even if there were grave provocations or nastiness, to the extent possible, I do not talk at all, but if I do, I am careful with my words and intonation; இன்னொருவர் சபைக்குச் சென்று அவர்களை அசிங்கப்படுத்துவது எனும் அரைவேக்காட்டுத்தனம், பொதுவாக, என் கட்சித்திட்டத்தில் ஒரு அங்கம் அல்ல! என் 20களின் ஆரம்பத்தில், நான் படுகோபக்காரனாக இருந்தபோது சிலபல விதிவிலக்குகள் அரங்கேறியிருக்கின்றன எனவும் நினைவு… :-( }

…எது எப்படியோ – நானும் அவனும் மரியாதையாக அவர் சொன்னது முழுவதையும் கேட்டுக்கொண்டிருந்துவிட்டு, சமயம் வாய்த்தபோது டபக்கென்று போர்க்காலரீதியில் புறமுதுகிட்டோடி வெளியே வந்து ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக்கொண்டு யார் முதலில் சிரிக்கப் போகிறார்கள்… … என ஒரு திடீரெக்ஸ் போட்டியில்… … அவன் தான் தோற்றான். (ஏனெனில்-  இந்த சுயஅடக்குமுறையில் இந்திரியங்களை ஒடுக்குவதில், பொங்கிவரும் சிரிப்பை அடக்குவதில் எனக்குப் பயிற்சி அதிகம்; அந்தக்காலத்திலேயே எவ்வளவு அரைகுறை அன்பர்களுடன் அளவளாவும் பேறு பெற்றிருந்திருக்கிறேன், சொல்லுங்கள்!)

பாவம்தான். அம்மணியவர்கள் ஏனிப்படித் தன்னையும் கஷ்டப்படுத்திக்கொண்டு பிறருக்கும் கணிதரீதியான உபத்திரவம் கொடுக்கிறார் எனப் பட்டது. பேசாமல்  இலக்கியம், அலக்கியத்திறனாய்வு, சமூகவியல், பின் நவீனத்துவம், பெண்ணியம், க்ரிட்டிக்கல் தியரி, ஸப்ஆல்டர்ன் ஸ்டடீஸ் போன்ற கவைக்குதவாத போங்காட்டப் போராளித் துறைகளில் அவர் ஆனந்தமாக ஜல்லியடிப்பில் ஈடுபட்டிருக்கலாம்; அவற்றில், அமோகமாக உளறிக்கொட்டினாலும் யாருக்கும் புரியாமல் (எழுதுபவருக்கும்கூட!) அதை மேட்டிமைத்தனத்துடன் செய்வது எளிது. அமெரிக்க மொக்கைகளுடன் ஐக்கியமாகியும் உய்யலாம்.

ஹ்ம்ம்.

நான் ஜெயமோகன் போல உட்கார்ந்து பொழுதன்னிக்கும் ஒரு மஜாபாரத அத்தியாயத்தை எழுதப்போனால், எப்படியிருக்கும்? (எனக்கல்ல, உங்களுக்கு!)

ஆனால், அப்படித்தான் அம்மணி அவர்கள் தொடர்ந்து தொண்டு செய்திருக்கிறார். என்ன செய்ய, சொல்லுங்கள்? :-(

-0-0-0-0-0-

பின்னர் 2011 வாக்கில் அவரது 220 பக்க வேலைவெட்டியற்ற புத்தகத் தனத்தைப் பார்க்க நேர்ந்தது. ஐயய்யோ இதிலும் வேதக் கணிதப்பூதம்!

இந்த எழவு, இணையத்தில் கிடைக்கிறது. படித்துப் பேதியெடுத்தால், என்னைக் குற்றம் சொல்லாதீர்கள், சரியா? :-(

இந்த எழவிலும் அவர் தன்னுடைய ‘ஒடுக்கிறார்கள்’ புலம்பலைக் கைவிடவில்லை.

ஏதோ கணிதம் மாதிரி தோற்றமளிக்கும் குப்பையை எழுதும்போதுகூட திடும்மென்று நட்டநடுவில் அவருக்கு ‘ஒடுக்குகிறார்கள்’ நினைவு வந்துவிட்டது, பாவம். பழக்க தோஷம், என்ன செய்ய!

சுத்தமாக, ஒரு மசுத்துக்கும் தொடர்பில்லாமல் அப்படியொரு உளறல். இன்னொரு வெள்ளைக்கார தண்டக்கருமாந்திரத்துடன் (ஸப்பாஷ்! ஸர்யான போட்டீ!) சேர்ந்து அப்படியொரு கும்மாளம், தேவையா? He is not Smarandache; but only a HeadAche. Thanks!

ஆச்சரியம். + ஊக்கபோனஸாக எனக்கு பேதியும். நன்றி.

பின்னர் அவ்வப்போது இவர் எங்கேயோ ‘ஒடுக்குமுறை’ ஸவுண்டு விடுவதாக எனக்குத் தெரிந்தாலும், எங்கள் வீட்டில் தண்ணீர் சேமிப்பில் குறியாக இருக்கிறோம் என்பதால்…

-0-0-0-0-

ஆனால், என் செல்லங்களில் ஒருவரான பெருந்தேவி அம்மையார் இருக்கிறாரே… …

‘பெரியார்’ இங்கே… ஐயகோப் பெருந்தேவி எங்கே? 13/12/2018

கவிஞ்ஜர்கள் என்றாலே நான் டேஞ்சர் என ஒதுங்குபவன். அதற்கு மேல் பெண்ணியக் கவிஞ்சர் ப்ராண்ட் என்றால், ‘துஷ்டியைக் கண்டால், வேஷ்டி அவிழ்ந்தாலும் தூரவிலகி ஓட்றா’ எனவொரு மனவலி படைத்த மாவீரன். (=Mango Warrior, ©S. Ramakrishnan, 2019)

அதற்கும் மேல் ஒருபடி தாண்டி அமெரிக்கா சென்றுவிட்டால் அவர்களிடம் மிகமிக ஜாக்கிரதையாக இருப்பவன். ஏனெனில், அமெரிக்காவில் ‘ஸெட்டில்’ ஆக எனக்குத் தகுதியில்லை என்கிற அவமான உணர்ச்சிவேறு, என்ன செய்ய!

இருந்தாலும் அண்மையில் நடந்த பைத்தியக்காரத்தனமான அழிச்சாட்டிய ஃபேஷன் தற்கொலை பற்றி ஏதோ நண்பனுடன் விவாதித்துக் கொண்டிருந்த சமயம், அவன், “டேய், உன்னோட அபிமான இனமானக் கவிஞ்ஜர் என்னமோ இதைப்பற்றிச் சொன்னார், படிக்கிறாயா?”

ஐயய்யோ! கர்ப்பு வுடாது போல! :-(

ஆனால் அவர் இதில் சொன்ன சிலபல விஷயங்கள் தவறு எனத் தெரியும். ஆகவே எங்கு இப்படியெல்லாம் உளறிக்கொட்டியிருக்கிறார், ஃபேஸ்புக் எழவிலா அல்லது ஏதாவது ப்ரத்யேக வாட்ஸ்அப் குழுமத்திலா என்றால் – எனக்கு அது குறித்து இரண்டு ஸ்க்ரீன் ஷாட்கள், இன்று கிடைத்தன. இறும்பூது. (=Iron Blow ©S. Ramakrishnan, 2019)

என்ன எழவு பின்நவீணத்துவ உளறலிது! ஆச்சரியமாக இருக்கிறது!!

எனக்குத் தெரிந்த, நாம் மிகவும் மதிக்கும் இரண்டு ஐஐடி பேராசிரியர்களிடம் விஷயங்களைத் தெரிந்துகொள்வதற்காகப் பேசினேன் / மின்னஞ்சலில் தொடர்புகொண்டேன். நான் கேட்டதும் அவர்கள் சொன்னதும் கீழே. (அவர்களுடைய முன்னனுமதியை இதற்கு வாங்கிக்கொள்ளவில்லை, இருந்தாலும் இதற்கு அவர்கள் மன்னிப்பார்கள் என நினைக்கிறேன் – ஆனால் தனிப்பட்ட விவரங்களை இவற்றிலிருந்து எடுத்துவிட்டுப் பிரசுரிக்கிறேன்; ஏனெனில் பொய்மைகளும் அபாண்டங்களும் வெட்டியெறியப் படவேண்டும். வதந்திகளைப் பரப்புபவர்களின், பப்பரப்பாவாதிகளின் முகத்திரைகள் கிழிக்கப்படவேண்டும், ஆகவே!)
> Yo.
>
> We spoke about a  bunch of things including Ms Kandaswamy’s accusations. Thanks for your time and patience with me, but could you please give me one liner, pointwise, written answers to her barbs?
>
> warm regards and hugs:
> __r.

Hi Ram, should you be wasting too much of your time on these issues? I never thought you would be so patient with rank idiots as you lovingly refer to them.

For the record, I belong to OBC. I can vouch that there is no caste discrimination on campus of the type complained about by the Professor.

1. The Prof has always had a way of twisting reality and was hyper-imaginative. Especially when she was under even reasonable expectation to perform minimally. That incorrect 1990s accusation about a Dalit having been oppressed has no basis; anyone can investigate and check. It is done and dusted.
2. There is no restriction on sharing dissertations. Prof is highly misinformed. But I do not think they are available online. I am not very clued-in, so please ask your other friends.
3. I challenge your Poetess to show evidence for her accusation about the discriminatory note in the hostels that she is talking about. I am not involved in hostel management, but I am willing to resign if it is proven. That would be shameful, if it were true. But it is not. You should be demanding a public apology from her. Hard to believe that she is a professional in USA. Her attitude is highly irresponsible and condemnable. OTOH, being a SJW is chic these days – you and I know that very well.

Amusedly,

இன்னொன்று:

> Sir, one quick question.
>
> Some 14-15 years ago, in the central lib, I was able to access the dissertations/theses of all scholars. I went in as a normal plebeian, after talking to the librarian.
>
> Is it still the same or noone can access them anymore?
>
> Also, is IITM part of shodhganga kind of dissertation repositories? Is there some online db??
>
> warm regards and hugs:
>__r.
Hard copy dissertations/theses should still be accessible to those who visit the library.
I don’t know if IITM is part of any larger online repository yet. Local IITM repository initiative was taken some years back but weren’t populated yet. Several reasons. A major one — as I understood — is IITM is not yet clear on owning the copyright of the theses to make them freely available under their portal. A DB of the titles of the theses was attempted but again remain incomplete — left to individual faculty to fill up their past research.
Regards,

-0-0-0-0-0-

ஆக வசந்தாகந்தசாமியார் சொன்னதோ, பெருந்தேவியார் உளறியதோ – ஒரு சுக்குக்கும் சரியேயில்லை! ஆனால் வெட்டிப்போராளித் தொலைதூரச் சமூகநீதி அறச்சீற்ற எழவுக்கு அதெல்லாம் ஒரு பொருட்டேஇல்லை அல்லவா?

ஏனிப்படி தன்னிச்சையாகவும் தேவையில்லாமலும் ஆதாரமேயில்லாமலும் உளறுகிறார் கவிஞ்ஜர்?

வெட்கம் மானம் சூடு சொரணை என ஏதாவது இருந்தால் பகிரங்கமாகப் பொய்களைப் பகிர்ந்ததற்கு, மேலும் பொய்களை உருவாக்கியமைக்கு வருத்தம் தெரிவித்து… நாக்கைக் பிடுங்கிக்கொண்டு… …  (WAIT! ஆனால் இவர் தமிழலக்கியக் காரர், அதுவும் கவிஞ்ஜர்வேறு!)

…இவருக்கும் முற்சொன்ன அம்மணி குறித்து யோசித்தது போலவே: பேசாமல்  இலக்கியம், அலக்கியத்திறனாய்வு, சமூகவியல், பின் நவீனத்துவம், பெண்ணியம், க்ரிட்டிக்கல் தியரி, ஸப்ஆல்டர்ன் ஸ்டடீஸ் போன்ற கவைக்குதவாத போங்காட்டப் போராளித் துறைகளில் அவர் ஆனந்தமாக ஜல்லியடிப்பில் ஈடுபட்டிருக்கலாம்; அவற்றில், அமோகமாக உளறிக்கொட்டினாலும் யாருக்கும் புரியாமல் (எழுதுபவருக்கும்கூட!) அதை மேட்டிமைத்தனத்துடன் செய்வது எளிது. அமெரிக்க மொக்கைகளுடன் ஐக்கியமாகியும் உய்யலாம்.

எது உண்மை, எது பப்பரப்பா என்றுகூட பிரித்தறிய முடியாத, கறாராக கருத்துகளைச் சமைத்துக்கொள்ளமுடியாத தண்டக் கருமாந்திரங்களுக்கு, இந்த அறச்சீற்றம் ஒன்றுதான் கேடு. ஒரு மசுரும் தெரியாமல் ஏன் அப்படி உளறிக்கொட்டவேண்டும், இந்த தண்டச் சோறுகள்?

இவர்களை ஏன் ஆதரிக்கவேண்டும் அமெரிக்க வரிகட்டிகள்? பாவம் அமெரிக்கா. அதைவிடவும் பாவம், இந்த அரைகுறைகளிடம் ‘படிக்க’ வந்திருக்கக்கூடும் சபிக்கப்பட்ட மாணவர்கள்!

என் வருத்தம் என்னவென்றால், நாம் தொடர்ந்து குப்பைகளை இப்படியே ஏற்றுமதி செய்துகொண்டிருந்தால்… எவ்வளவு அசிங்கம்.

..ஆனால் பாரதத்தை பீக்காடாக மாற்றுவதற்குப் பதில்,  அவர் அமெரிக்காவை வைத்துச் செய்தால், எனக்கேன் வரப்போகிறது அறச்சீற்றம்!

நான் அமெரிக்காவின் நலம்விரும்பியும்கூட என்றாலும் இந்த நிலைக்கு என்னைத் தள்ளிவிட்டார் கவிஞ்ஜர், என்ன செய்ய! :-(

‘பெரியார்’ இங்கே… ஐயகோப் பெருந்தேவி எங்கே? 13/12/2018

11 Responses to “வசந்தாகந்தசாமியாயணம், அமெரிக்கக் கவிஞ்ஜர் பெருந்தேவி அறச்சீற்றலுளறலாயணம் – குறிப்புகள்”

 1. Sridhar Says:

  I got curious to find out what this Neutrosophic logic is.

  Here’s an example of this theory from the author, Smarandache himself.

  “Let’s say there is a soccer game between India and Pakistan. If I ask you who will win, you may say, since you’re subjective and patriot, that India will win, let’s say with a chance of 70%; but if I ask somebody from Pakistan, he would say that Pakistan will win, let’s say with 60% chance. But asking a neutral expert, he may say that there is 40% chance of tie game.

  All sources are independent, meaning they do not communicate with each other and they do not know the response of each other. Summing we get 0.7 + 0.6 + 0.4 > 1.”

  I don’t understand why he wants to sum it as the sources are independent and are not guaranteed to be mutually exclusive. I don’t know if one has to be insane to make sense of such theories.


 2. ‘ஸ்வாமி’ எனவொருவர் ஃபேஸ்புக்கில், என் செல்ல அம்மணி கணிதாயினி பற்றிக் குறிப்பிட்டிருக்கிறார், நன்றாகவும் மரியாதையுடனும் எழுதியிருக்கிறார். https://m.facebook.com/story.php?story_fbid=2656759837717514&id=100001505708501

  முடிந்தால் படிக்கவும். இவர் அம்மணியின் வகுப்பில் இருந்திருக்கிறார்போல. எனக்கு, அநியாயமாக அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை!

  உபரிக் குறிப்புகள்:

  1. நான் அங்கு படித்தவன் தான் – ஆனால் 1980களின் நடுவில். எனக்கு வாய்த்த ஆசிரியர்கள், சிலர் ஜொலித்தனர். பலர் அப்படியும் இப்படியும்; வெகுசிலர், படுமோசம். (என்னுடைய சொற்ப ஒருமணி நேர வசந்தாயணத்தில் இருந்து, அவரும் இந்தக் கடைசி பகுப்பினர்தாம் என எண்ணுகிறேன்)

  2. நானும் ஐஐடி-யை அளவுக்கு மீறித் தூக்கிப் பிடிப்பவனல்ல. அதிலுள்ள அதிசராசரிகளை அன்றும் எதிர்த்தேன். மாணவர்களாக அங்கிருந்து, ‘ஸிஸ்டம் பீட்டிங்’ செய்து வெளிவந்து மாய்மாலம் செய்யும் அறமற்ற அதிசராசரிகளை அறிவேன். உள்ளே இருந்து பஜனை செய்யும் சில ஆசிரியர்களையும் அறிவேன்.

  3. சேர்ந்த முதல்வருடத்தில் பேசுமொழி ஆங்கிலம் தெரியவில்லை என்பதற்காகப் படுமோசமாகக் கிண்டல்/நையாண்டி செய்யப்பட்டிருக்கிறேன். ஆனால் அதை வைத்துக்கொண்டு அனைவரையும் மேட்டிமைவாதிகள் எனச் சொல்லமாட்டேன். அதுபோல ஓரிரு பிறழ் நிகழ்வுகள் இருந்திருக்கலாம். இருக்கவேண்டும்கூட. ஆனால் அதையே ஒரு முழு சித்திரமாக விரிப்பது அடிப்படை அறமற்ற செயலன்றிப் பிறிதொன்றில்லை.

  4. ஆனால் ஒருசில நிகழ்வுகளை மட்டும் வைத்துக்கொண்டு (அதையும் சரியாகப் புரிந்துகொள்ளாமல்) பொதுமைப் படுத்துவதை, அறிவுஜீவிகள் தொடர்ந்து செய்வது விசனம் தருவது. ‘படித்தவன் சூதும் வாதும் பண்ணினால், போவான் போவான், ஐய்யோவென்று போவான்’ + சர்வ நிச்சயமாகப் ‘போவாளும்’தான்! அறச்சீற்றக் கவிதைக் கழுதாயினிகள் கவனிக்கவும்.

  5. + தண்டகருமாந்திர, ஒன்றுக்கும் உதவாத, பஜனை ‘ஹ்யுமானிட்டீஸ்’ துறைக்கு எதிராக , அதன் தரமின்மைக்கும் தேவையின்மைக்கும், தண்டத்துக்கும் எதிராக – ஏனெனில் அச்சமயமும் இந்தத் துறையில் தான் ஐஐடி-யின் படுமோசமாக அதிசராசரி வாத்திகள் இருந்தார்கள் – போர்க்கொடி(!) உயர்த்தி – பிவி இந்திரேசன் அவர்களிடம், ஒரு சிறுகும்பலாகச் சேர்ந்து மனு எல்லாம் கொடுத்தேன் எனவும் நினைவு.

  6. தேவையேயற்று அதிசராசரி ஹ்யுமானிட்டீஸ் வகை ‘சமூக அறிவியல்(!)’ அல்லது ‘இலக்கியம்’ வகைத் துறைகளை லிபரல்தனமாக அறிவியல்/தொழில் நுட்பத்தின்மீது கவிழ்த்துவது, ஒரு சாபக்கேடு. இதிலிருந்து நம் கல்வி வெளிவரவேண்டும்.

  நன்றி.

 3. A.Seshagiri Says:

  இன்றைய காலைப் பொழுதை மிகச் சுறுசுறுப்பாக்கியதற்கு நன்றி!
  இந்த வசந்தாகந்தசாமி மற்றும் கவிஞ்ஜர் பெருந்தேவி அவர்களை பற்றிய பதிவில் தாங்கள் மிகவும் பின்
  தங்கியிருக்கிறீர்கள் இந்த விஷயத்திலும் எங்கள் பெரியவர் பி.ஏ கே அவர்கள் தான் முன்னணியில் இருக்கிறார் என்பதை தெரிவித்துக்கொண்டு சக ஏழரைகளின் வசதிக்காக அன்னாரின் இது பற்றிய பதிவுகளின் சுட்டிகளை கொடுத்துள்ளேன் (இதில் நீங்கள் இருவரும் ஏறத்தாழ ஒத்திருக்கிறீர்கள் என்பது என் கருத்து)
  1) https://www.facebook.com/100000485801824/posts/3761271137232376?sfns=mo
  2) https://www.facebook.com/100000485801824/posts/3761836310509192?sfns=mo
  3) https://www.facebook.com/100000485801824/posts/3764379116921578?sfns=mo
  4) https://www.facebook.com/100000485801824/posts/3767971393229017?sfns=mo
  5) https://www.facebook.com/100000485801824/posts/3771329802893176?sfns=mo
  6) https://www.facebook.com/100000485801824/posts/3771512882874868?sfns=mo

  பி.கு : சுட்டுசுட்டென்று சுட்டியதற்கு மன்னிக்கவும்.இதில் கொசுறாக சுடாலினாரின் அறிவாலய(?)கல்யாணமண்டபத்தை பற்றிய சுட்டியையும் சுட்டி கொண்டு விடைபெறுகிறேன்!


  • யோவ்! இதென்ன விபரீதம்!!

   ஒர்ரேயடியாக இவ்ளோ சுட்டிகளைக் கொடுத்தால், எனக்கு மூச்சு முட்டுகிறதே! :-(

   முடிந்தால் 2-3 நாட்களில் படிக்கிறேன். :-( ஆனால், பறவையரசர் அலகிலாக்கறுப்பனாரிடம் போக கொஞ்சம் பயமாக இருக்கிறதே, என்ன செய்ய….

 4. A.Seshagiri Says:

  கவிஞ்சர் பெருந்தேவி அவர்கள் சென்னை ஐ.ஐ.டி யில் இல்லாத அறிவிப்பு பலகையை பார்த்து விசனப்படவேண்டாம் என்பதை கூறிக்கொண்டு அந்தப் பலகை கோயம்புத்தூர் கல்யாண மண்டபத்தில் பார்த்தது என்றும் அதை வைத்து அரசியல் பண்ணிவிட்டார்கள் என்றும் அதன் ‘மூலபத்திரக்காரர்’பெரியவர் பிஏகே அவர்களுக்கு அளித்த ஒப்புதல் வாக்குமூலம்
  https://m.facebook.com/story.php?story_fbid=3771879049504918&id=100000485801824


  • Sir, I knew very well that it was NOT from IIT-M, but may be this version is correct. Again, I dunno about the scumbag poetess, whether she has publicly acknowledged her mistakes and repented for her dastardly sins.

   But she is a liberal, who is also associated with that sewage that Tamil avant garde literature is… Generally they are unrepentant. Anyway…


 5. […] think, the likes of generally clueless Protestwallah scum like Perundevi, and an enormous number of manipulators and self-styled ‘conscience keepers’ and […]


 6. ஒரு கோரிக்கை (அல்லது எச்சரிக்கை):

  நீங்கள் பெருந்தேவியார் அல்லது வசந்தாகந்தசாமியாரின் ரசிகர்களாக, அடிப்பொடிகளாக இருக்கலாம்.

  உங்கள் அளவு அவ்வளவு தரம் தாழ்ந்திருப்பதால்தான் தொடர்ந்து, தேவையேயில்லாமல் வசைபாடிப் பின்னூட்டங்களைத் தொடர்ந்து இடுகிறீர்கள்!  இந்த உதிரித்தனத்தை உடனடியாக நிறுத்துங்கள், அற்பர்களே! உங்களுக்கு இப்பதிவில் உள்ள தகவல்கள் சரியில்லை எனப் பட்டால், தாராளமாக தரவுகளுடன் அவற்றை எதிர்கொள்ளலாமே!

  இப்படியே தொடர்ந்தால், இன்னொருமுறை உங்கள் அபிமான அம்மணிகளைப் பற்றி எழுதவேண்டி வரும்; பிறகு உங்கள் இஷ்டம்.

  நன்றி.


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s