கவிஞ்ஜர் பெருந்தேவியாரின் அபிமான சமூகநீதி ஹீரோயினி வசந்தாகந்தசாமியாரின் பெருகும் அருள்!

23/11/2019

இந்தக் குப்பை ஆராய்ச்சிக்காரரையும், அவருக்கு (ஒரு பின்புலமுமில்லாமல், சுயசிந்தனையோ ஒரு கருமமோ இல்லாமல் பொத்தாம்பொதுவாக முட்டுக்கொடுக்கும்) அதிகுப்பை ஆர்வக்கோளாறுக் கவிதாயினியையும், முந்தைய பதிவுடன் விட்டுவிடலாம் என நினைத்தேன். ஆனால் ஆணாதிக்கம், பார்ப்பனவெறி, ஹிந்துத்துவா, ஆர்எஸ்எஸ், காவி, சங்கிமங்கி அப்படியிப்படி என்று பெருந்தேவி+வசந்தாத்தனமான, இஷ்டத்துக்குப் புகழும் தரமுடைத்த சிலபல பின்னூட்டங்கள், இரண்டு மின்னஞ்சல்கள் வந்திருக்கின்றன; அவற்றால் எனக்குப் பெரிதாகப் பிரச்சினையில்லை என்றாலும், தொடர்புள்ள இயக்கங்களையும் கருத்தாக்கங்களையும் என்னுடன் இணைப்பது, அவற்றுக்குத் தரும் அவமரியாதை என்பதால் அந்த காமாலைப்பார்வைகளைக் கடாசிவிட்டேன்.

இந்த அற்பர்கள், பெரும்பாலும் கவிதாயினியின் வெறித்தனமான அபிமானிகள் போலும் –  – ஏனெனில் வந்தவற்றில் ஒன்றுதான் தண்ட ஆராய்ச்சியாளினியின் மேதமை(!) பற்றியது; இந்த ரேட்டில், ஒரு ஆபத்துதவித் தற்கொலைப் படையையே உருவாக்கிவிடுவார்கள் போல, இந்த தண்டக்கருமாந்திர அடிவருடிகள்.

இப்படி அடிவருடி அடிவருடியே அதிசராசரிகளுக்குக் கொம்புசீவிவிட்டு அனைவரும் கூண்டோடு வீடுபேறை அடைய என் வாழ்த்துகள்.

–0-0-0-0-

நன்றி அம்மணிகளே, அம்மணர்களே! (நான் ஆணாதிக்கவெறியன் (மட்டும்) அல்லன் – பெண்ணாதிக்கவெறியனும்கூட, ஆகவேதான் அம்மணர்களும் இந்தப் பின்னூட்டவாதிகளில் இருக்கலாம் எனும் சாத்தியக்கூறைக் கருத்தில் கொண்டிருக்கிறேன்)

…மண்டையில் அடித்துக்கொண்டு இந்த எழவு தொடரப் படுகிறது. (இது ஒரு குட்டிப் பதிவுதான், அலக்கிய அறச்சீற்றவாதிகளை நினைத்தாலே தட்டச்சு செய்வது கொஞ்சம் தளர்ந்துவிடுகிறது, என்ன செய்ய! ஆனால், இதுதான் கடைசி.)

இது, முக்கியமாக பெருந்தேவி அடிப்பொடிகளுக்கும், கொஞ்சமேகொஞ்சம், வசந்தாகந்தசாமியின் அடிப்பொடியான பெருந்தேவிக்கும் சமர்ப்பணம்.

-0-0-0-0-0-

1. நான் தரவுகளுடன், அம்மணி வசந்தாகந்தசாமி அவர்கள், ஒரு மரியாதைக்குரிய மகத்தான  சகலகலாவல்லிய புளுகுமூட்டை என்று சிலாகிக்கிறேன். அவரை அறிவுஜீவிய சமூகநீதிய கணிதப்போலி எனவும் புகழ்கிறேன். கணிதரீதியாக  (அவருடைய அதலபாதாள ரெவலில்) அவருடன் விவாதம் செய்யவும் தயாராக இருக்கிறேன் என்கிறேன்.

ஏனெனில், அவர் புத்தகங்கள் சிலவற்றை மூச்சுமுட்டப் படித்த (இவற்றில் இரண்டு பற்றிக் கீழே…) அளவில், எனக்கு ஜெயமோகனின் வெண்முரசே அல்லது பெருந்தேவியின் கவிதைகளே(?) தேவலாம் என்றாகி விட்டது. அம்மணியின் கணித அறிவின் அளவு, சர்வ நிச்சயமாக, மிகஅதிகபட்சம் ஒரு பிஎஸ்ஸி (கணிதம்) அளவுதான் – பெரும்பாலும் அது +2 அளவில்தான் மய்யம்கொண்டு கமல்ஹாஸ்யம் போலப் பேந்தப்பேந்த முழித்துக்கொண்டிருக்கிறது; அதனால்தான் எனக்கு இப்படி ஒரு குண்டு தெகிர்யம். ஏனெனில் என்னால் ஒரு எம்எஸ்ஸி அளவு கணிதத்தை ஓரளவுக்கு நன்றாகவே கையாள முடியும்வேறு. நன்றி.

2. பெருந்தேவியாரின் கவிதைகள்(!) பற்றியும் அக்குவேறு ஆணிவேராக அலசி, அதற்கும் மேலாக அவருடைய அரைகுறை அரைவேக்காட்டுச் சமூகவியல் திராவிடத்தன பம்மாத்துக் கருத்துகள் குறித்தும் அவருடன் (மரியாதையுடன்தான் ஆனால் மேம்போக்காக அல்ல!) விவாதம் செய்யத் தயார். அவரும் என்னுடைய ஆணாதிக்கம் பற்றி, என் தோல்நிறம் பற்றியெல்லாம் சமூகநீதியுடன் விவாதிக்கலாம். இதற்கு உங்கள் கவிதாயினி அவர்களிடம் சொல்லி ஆவன செய்ய முடியுமா?

நான் கடந்த சுமார் 30 வருடங்களுக்காவது –  கவிதைகளை, தற்காலத் தற்குறித் தமிழ்க்கவிதை(!)களைப் பணம் கொடுத்து வாங்கிப் படித்துவந்திருப்பவன், அழகியல் அழுக்கியல் அழுக்காறியல் மோஸ்தர்களையும் பாசாங்குகளையும் ஃபார்மூலாக்களையும் அறிந்து தெளிந்தவன். நன்றி.

3. பொய்த் தகவல்களை, ஒரு மசுத்துக்கும் பரிசீலிக்காமல், வதந்திகளாக உலாவவிட்டதற்கு அப்பாற்பட்டு, தன்னுடைய அசிங்கமான செயல்பாடுகளுக்கு மனதாற வருந்தி ஒரு மன்னிப்பு கூட கேட்காமல், தொடர்ந்து ஒரு தொடர்புமில்லாமல் உளறிக் கொட்டிக்கொண்டிருப்பது, நானா அல்லது உங்கள் செல்லக் கவிதாயினியா?  (அம்மணியார் இதுவரை மன்னிப்புக் கேட்கவில்லை என நினைக்கிறேன் – ஏனெனில் அவர் அப்படி ஏதாவது ஏடாகூடமாக, தன் செயல்பாடுகளுக்கு அறவுணர்ச்சிசார்ந்து வருத்தம் தெரிவித்தால் (அவர் ஒரு தமிழக்கியவாதக் கவிஞ்ஜர் என்பதற்கும் அப்பாற்பட்டு) எனக்கு உடனே தெரிவிக்கும்படிக்கு,  பெருந்தேவியை (யும் போய்ப்போய்!) தேவைமெனெக்கட்டுப் பின்தொடரும் ஒரு சூதறியா இளம் அன்பரிடம் கோரிக்கை வைத்திருக்கிறேன்)

4. பொழுதுபோக்கு அறச்சீற்றம், தொலைதூர மனிதவுரிமைத்தனம், பொறுப்பற்ற அட்ச்சிவுடல், பேடித்தனமாகக் கருத்துதிர்த்தல் – இவையெல்லாம் இனங்கண்டுகொள்ளப்பட்டுப் புறம்தள்ளப்படவேண்டியவை. தமிழ்ஜல்லி செஞ்ஜல்லி அடிப்பதற்கும் ஒரு அளவு, வரைமுறை வேண்டும்.

கோமாளித்தனங்களுக்கும்தான்.

கவிதாயினிகளும் ஆராய்ச்சியாளினிகளும் மட்டும் ஒரு பெரிய ப்ரஷ் வைத்து வாய்க்கும் கைக்கும் வந்தாற்போல, ஒரு தரவுமில்லாமல் நிறுவனங்கள்மீதும் மக்கட்திரள்கள் மேலும் பொத்தாம்பொதுவாக ஆதாரமேயில்லாமல் கறுப்புவர்ணம் தீட்டுவார்களாம்; சில ஜாதிகளை மட்டும் சொகுசாகத் திட்டுவார்களாம். இவர்கள் வசைபாடல்களுக்கு விசிலடிச்சான்குஞ்சப்பத் தற்குறிகள் போட்டால், அதுவே அவர்களது குற்றச்சாட்டுகளுக்குத் தரவாகிவிடுமாம்.

ஆனால் ஏனம்மா இப்படி அநியாயம் செய்கிறீர்கள் எனத் தரவுகளுடன் கேட்டோமென்றால், ஒரு ‘ஐயய்யோ! ஆணாதிக்கவெறீஈஈஈஈ!”  அல்லது ‘மேல்ஜாதி வெறி!’ ஆனால் maleஜாதியும் ஆணாதிக்கக் கட்டமைப்போ! என்னத்தச் சொல்ல.

பேடிகளின் நடிப்புக்கும் அறச்சீற்ற ஆவேஷத்துக்கும் ஒரு அளவேயில்லை, அல்லவா?

5. ஐஐடி போன்ற ஒரு நிறுவனம், கண்டகண்ட அற்பக் கழுதைகளுக்கெல்லாம், புளுகுமூட்டையை அவிழ்த்துவிட்டு ஊடகப்பேடி நடனம் ஆடுபவர்களுக்கெல்லாம் திரும்பித்திரும்பி அதே பதிலையோ தம்பக்க நியாயத்தையோ சொல்லவேண்டியதில்லை, அவர்களுக்கு அந்த அக்கப்போர்களுக்கெல்லாம் ஏது நேரம் என்பது சரிதான் என்றாலும், ‘திரும்பத் திரும்ப அதேபொய்களைச் சொல்லி அவற்றை உண்மைகளாக நிறுவும்‘ நாட்ஸி வெறியிய வசந்தகந்தசாமிகளையும், அவர்களுக்கு முட்டுக்கொடுத்தும் சுயசிந்தனையற்றும் ஜன்னியில் சமூகநீதி ஜல்லியடிக்கும் அரைகுறைத் தமிழலக்கியவாதினிகளையும் சட்டரீதியாக சுளுக்கெடுக்கவேண்டுமென்றாலும்…

…இதெல்லாம் கொஞ்சம் அயர்வு கொடுக்கும் வழிமுறைகள். நானுமே கூட பலப்பல அற்பக்கழுதைகளுக்கு பதில் லாவணி பாடுவதில்லை. எதிர்வினை புரியப்படுவதற்குக்கூட இவர்களுக்கு ஒரு தரம் வேண்டும். “பாதையோர நாய்கள் குரைக்கலாம், ஆனால், சரக்கு ஓட்டக நெடும்பயணங்கள் தொடரும்.” (ஐயய்யோ, இதையும் தவறாகச் சித்திரித்து, என்னை நாய்வெறுப்பாளன் ஒட்டகஃபோபியா நாட்ஸி எனவெல்லாம் பொங்கவேண்டாம்! நான் நாய்களுக்கும் ஒட்டகங்களுக்கும் ஒரு இனியபயம் கலந்த மரியாதையைக் கொடுப்பவன், நன்றி!)

6. இதில் இந்த அன்பர் சமயவேல் வேறு. சந்தில் சிந்துபாடி ஒர்ரே நகைச்சுவை. இவருடன் சிலமுறை சுமார் 30 வருடங்கள்முன் பேசியிருக்கிறேன். அப்போது வெள்ளைமனது இளைஞராக இருந்தார் என நினைவு. ஆனால், அவர் இந்த அளவுக்கு, தம் கவிதையையும் அவருடைய அபிமானப் பெருந்தேவியாரின் கவிதையையும் சுயவிமர்சனத்துக்குள்ளாக்குவார் என நினைக்கவேயில்லை.

இவர் என்ன எழுதியிருக்கிறார் எனப் பாருங்கள். உண்மையைப் போட்டு டமாரென்று உடைத்துவிட்டார். இது கவிஞ்ஜர் சமயவேல் அவர்களின் தன்னிலை வாக்குமூலம்! (கொடுக்கப்பட்டது, சமூக நீதிப் போராளியாயினிப் புலவி பெருந்தேவியார் அவர்களின் ஃபேஸ்புக் சமூகத்தில்…ஃபோட்டாஷாப் செய்யப்பட்டதல்ல!)

சமயவேலுக்கு: உங்கள் நேர்மையையும் சுயமதிப்பிடலையும் மெச்சுகிறேன்; ஆனால், தயவுசெய்து தோழிக்காகத் தொழில்முறையில் அழாதீர்கள், தோழர். எனக்கும் அழுவாச்சியா வருது. (கணவான் என்றால் SecondSky-ஆ?)

நமக்கு: தயவுசெய்து சமயவேலார் பெருந்தேவியார் அருகில், ஏன், அவர்கள் கவிதை(!)களுக்கருகில்கூடப் போகவே வேண்டா, டேஞ்சர். கழுதை நின்று கொல்லும். கழுதைகளே சொல்கின்றன.

-0-0-0-0-0-0-

இனி, வசந்தாகந்தசாமியார் அவர்களின் இரண்டு புத்தகங்களைக் குறித்த குறிப்புகள்… (பின்னொரு சமயம், அறச்சீற்றக் கவிஞ்ஜரின் கழுதை ஓட்டும் கவிதைக்கலையைப் பார்க்கலாம் – இருந்தாலும் மறுபடியும் அவற்றின் அருகேபோக எனக்குப் பயமாக இருக்கிறதே!)

புத்தகம் #1:  Reservation for Other Backward Classes in Indian Central Government Institutions Like IITs, IIMs and AIIMS – A Study of the Role of Media Fuzzy Super FRM Models

இது ரொமேனியா தேசத்தில் (இதில்தான் அம்மணியாரின் சக ஆராய்ச்சியாளர் ஸ்மாரண்டெக் இருக்கிறார்!) 2009ல் பதிக்கப்பட்டது.

இதைவிட ஒரு  மகத்தான உளறல் புத்தகத்தைப் பார்க்கமுடியாது. இதில், வசந்தாகந்தசாமியார் கண்டமேனிக்கும் தொடர்பற்ற தினசரிச் செய்தித்தாள் பப்பரப்பாக்களையும் அவருடைய எழுத்துகளையும் பிற அரைகுறைகளின் மேலான ஆராய்ச்சிகளையும் கலந்துகட்டி ஒரு கூட்டாஞ்சோற்றைப் பரிமாறியிருக்கிறார்; இவர் மட்டும் வாக்கியங்களை ஒடித்து ஒடித்து இப்புத்தகத்தை எழுதியிருந்தால், அதற்கும் பெருந்தேவியாரின் கவிதைகளுக்கும் ஆறுவித்தியாசம் என்ன, ஒரு வித்தியாசம் கூடக் கண்டுபிடிக்கமுடியாது.

இந்த மாபெரும் ஆராய்ச்சி மூலம் வெளிவந்த புத்தகத்தின் அர்ப்’பிணி’ப்பு யாருக்கு? யாருக்கு அந்தத் தரம் இருக்கிறது??

நன்றி. இது பெரிய விஷயமில்லை. விஷம்தான். இதில் 277ஆம் பக்கம் கீழே.

இவை படுமோசமான அவதூறுகள். அவருடைய அரைகுறை ஆங்கிலத்தில் அவர் சாராம்சம் செய்திருப்பது -ஐஐடி-சென்னையில் செய்யப்படும் ஆராய்ச்சிகளில் குறைந்த பட்சம் 40% போலிகள், காப்பியடிக்கப் பட்டவை. துறைகளுக்கு அது தெரியுமாம். அதனால்தான் அவற்றைப் பூட்டுபோட்டு வைத்திருக்கின்றனராம். அதுவும் இந்தத் ‘திருட்டுகள்’ இந்த  ஐஐடி நிறுவனத்தின் தனித்தன்மையாம். கேட்டால் ‘யாரோ’ வல்லுநர்கள் சொன்னார்கள் என்பார்.

அப்பட்டமான அவதூறுகள். ஐஐடி போன்ற ஒரு பெரும் நிறுவனத்தில், பல அடுக்குகளில் சரிபார்த்தல்கள் இருக்கும் முறைமைகளில் இம்மாதிரிக் கருத்துத் திருட்டுகள் நடக்க சாத்தியக்கூறுகள் குறைவு. ஆனால் நடக்கவேமுடியாது எனச் சொல்ல முடியாது. ஆனானப் பட்ட எம்ஐடி (பாஸ்டன்) ஹார்வர்ட் போன்ற நிறுவனங்களில் உள்ள கழுகுக் கண்ணர்களையும் மீறி அப்படியாப்பட்ட பிறழ்வுகள் அங்கும் நடக்கின்றன. விசாரணை செய்யப்படுகின்றன. கமுக்கமாக மூடவும் படுகின்றன. (எம்ஐடி-யில் நடந்த அப்படி ஒரு விஷயத்துக்கு நானே ஆதாரபூர்வமான தரவுகளைக் கொடுத்திருக்கிறேன்; அது ‘கல்வியியல்’ தொடர்பான ஒரு சோக ஆராய்ச்சி; உட்கார்ந்த இடத்திலிருந்து ‘களச் செயல்பாடு’ செய்து பின்னர் நான்கைந்து ஆராய்ச்சிகளிலிருந்து உல்ட்டா செய்யப்பட்ட விஷயம்; அப்போதும் அந்தப் பெண்மணி என்மீது வைத்த குற்றச்சாட்டு: “ஆணாதிக்கவெறியன்.” நன்றி!)

ஆராய்ச்சிகளின் தரமென்பது இன்னொரு விஷயம். ஆனால் வசந்தா கந்தசாமியார் தன்னுடைய தரம்தான் அதிகபட்சத் தரம் எனும் அனுபூதி நிலையில் இருப்பவராதலால்…

ஆனால், ஏகோபித்து 40% ஆராய்ச்சிகள் இப்படியா என்ன?? அப்போது பெரியார்-அம்பேட்கர் மையத்தின் அங்கத்தினர்களின் 40% ஆராய்ச்சிகளும் பொய்யா? அறமற்றவையா? இதற்காக ஏன் ஐஐடி ஆராய்ச்சியாளர்கள் கொதித்தெழுந்து வசந்தாகந்தசாமியாருக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தமாட்டேனென்கிறார்கள்?

சாணியில் கல்லெறிந்தால் அது நம்மேலும் சிதறக்கூடும் என்கிற ஜாக்கிரதை(!) உணர்ச்சியினாலா?

இது ஒருபுறமிருக்க, இப்படிப் பேடித்தனமாகவும் அறமற்றும் குற்றச்சாட்டு வைப்பவர் – அதற்கு ஒரு தரவு, ஒரேயொரு தரவாவது கொடுக்க முடியுமா?

அவரால் முடியாது. ஆனால் பெருந்தேவியாரால் முடியும் என நினைக்கிறேன். நீங்கள் அவரிடம் இதுகுறித்துப் பரிந்துரை செய்யமுடியுமா?

(வசந்தாகந்தசாமியாருக்கு பிஹெச்டி அறிவுரையாளராக இருந்த சென்னைப்பல்கலைக்கழக ‘கணிதமேதை’ இக்பால் உன்னிஸா அவர்களின் தரத்தையும் நான் இங்கு இழுத்தால் நாறிவிடும்.)

–0-0-0-0–

மூச்சை இழுத்துப் பிடித்துக்கொள்ளுங்கள். உங்கள் கழிப்பறைக்குப் பக்கத்தில் நின்றுகொள்ளுங்கள்… எதற்கும் தயாராக இருங்கள்!

புத்தகம் #2: Methods in Industrial Biotechnology for Chemical Engineers!

என்னது? ‘ஃபஸ்ஸீ  ந்யூட்ரொஸொஃபி’ புகழ் கணிதமேதை வசந்தாகந்தசாமியார், தொழிற்சாலை பயோடெக் கெமிகல் இஞ்ஜினியரிங் என்றெல்லாம் 2008லேயே கலக்கியிருக்கிறாரா? ஐயகோ!

இந்த முழு புத்தகமும் ஆர்க்ஸைவ் தளத்தில். :-(  அம்மாடியோவ்!!

முடிந்தால், உங்கள் அபிமானத் தன்மானக் கவிஞ்ஜர் பெருந்தேவியாரை விட்டு இதற்கு, பௌதிக ரீதியாக அல்லது பின்நவீனத்துவ கம்ப்யூட்டர் ஸைன்ஸ் ரீதியாக அல்லது, ஏன், டார்வினின் பரிணாமத் தத்துப்பித்துவ ரீதியிலேகூட முட்டுக்கொடுத்து ஒரு திறனாய்வு செய்யச் சொல்வீர்களா, ப்ளீஸ்?

எல்லாம் வல்ல கவிஞ்ஜக் கணிதாயினிகளே, போற்றீ! :-(

எப்படி எந்தவொரு துறை தொடர்பான இடியாப்பச் சிக்கல்களுக்கும் நம் ஆராய்ச்சியாயினி ரெடிமேடாக ஒரு தீர்வை வைத்திருக்கிறார் பாருங்கள்!

அம்மணி கையில் உள்ள ‘ஃபஸ்ஸீ  ந்யூட்ரொஸொஃபி’ சுத்தியால், எந்தவொரு துறையையும் ஓவல்டின் டப்பி போல நசுக்கமுடியும் என்பது இன்னுமா புரியவில்லை உங்களுக்கு?

-0-0-0-0-0-

அம்மணிகளின் திகைக்க வைக்கும் குண்டுதெகிர்யம் என்பது நடுங்கத் தக்கது.

மகாமகோ பெருந்தேவியாரும் வசந்தாகந்தசாமியாரும் கொள்கைக் கூட்டணி வைத்து இந்திய இளம் இஞ்ஜினீயர்களுக்கும் அமெரிக்க அதேக்களுக்கும் பொறியியல் கணக்கு பின்நவீனத்துவம் வகையறா பாலபாடம் எடுத்து, ‘உலக அமைதி’க்கான நொபெல் பரிசு வாங்கப் பரிசம்போட என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள்.

முடிந்தது, போதுமடா இந்த அரைகுறைகளின் அழிச்சாட்டியங்களைப் படித்ததால் ஏற்பட்ட ரத்தக்கொதிப்பு.

(அதிசயிக்கத்தக்க வகையில், இந்த பெருந்தேவி+வசந்தாகந்தசாமி கொள்கைக்கூட்டணிக்குப் பேராதரவு அளித்திருக்கும் என் முந்தைய பதிவுகளுக்கு ஃபேஸ்புக் எழவில் இருந்து பலர் வந்து படித்திருக்கிறார்கள் – ஹ்ம்ம், குறைந்த பட்சம் அந்தச் சுட்டிகளுக்கு வந்திருக்கிறார்கள் எனச் சொல்லலாம்.

ஆகவே, ஒத்திசைவையும் ஃபேஸ்புக் பதிவுகளையும் படிக்க லபித்திருக்கும் பாக்கியவான்கள், அங்கும் இந்தப் பதிவினைச் சுட்டலாம். முடிந்தால்.
வாழ்க இவ்வசையகம். நன்றி!)

 

5 Responses to “கவிஞ்ஜர் பெருந்தேவியாரின் அபிமான சமூகநீதி ஹீரோயினி வசந்தாகந்தசாமியாரின் பெருகும் அருள்!”

 1. K.Muthuramskrishnan Says:

  I shared your earlier article in FB inthe comment box of PAK

 2. Malaikkallan Says:

  Now I am a little confused. I thought you use the accolade “Mahamaho” as a compliment, not as a sneer.


  • Sir, that honorific was used as a compliment, definitely.

   The fantastic duo SJWs have thickskins of such incredible thicknesses that, it will put pachyderms with a massive superiority complex to shame.

   Another example to elucidate my usage would be: Mahamaho S.Ra. I always admire those people, whose qualities and great attributes, I seek in myself. I am learning.

   Hope you see dark.


Leave a Reply to வெ. ராமசாமி Cancel reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s