1983ல் அண்ணன் ஜெர்ரி ஷ்வார்ஸ், Usenetல் சொன்னதை நான் கேட்டிருந்தால் நிலைமை இவ்வளவு மோசமாக இருந்திருக்காதோ?

29/11/2019

:-( பிரச்சினை என்னவென்றால்…

ஒத்திசைவைப் படிக்கும் சொற்ப எண்ணிக்கை அன்பர்களில் சிலருக்கு மட்டும்தான் பாவம், நான் என்ன எதை எப்படி, என்று, எந்த தொனியில் எழுதுகிறேன், எது கேளிக்கை/பகடி, எது ஸீரியஸ், எது படு ஸீரியஸ் பகடி, எது படுஸீரியஸ் படுஸீரியஸ், எது திராவிட எதிர்அரசியல், எது சுயபுராணம், எது ‘புனைவு,’ எது சலிப்பு… …அதுஇது என்பதெல்லாம் புரிகிறது என நினைக்கிறேன். அல்லது புரியாவிட்டாலும், நானே எனக்குச் செய்துகொள்வதைப்போல கொஞ்சம் அட்ஜஸ்ட் செய்துகொள்கிறார்களோ என்ன எழவோ!  இந்த அழகில் ஒரே பதிவில் இப்படி எல்லாமும் கலந்துகட்டி இருந்தால், அதுவேறு இன்னொரு ரெவல் பிரச்சினை.

மற்றபடி பலருக்கு, என்னைப்போலவே, நான் எழுதுவதில் ஒரு மசுரும் புரிவதில்லை. தாங்களாகவே ஏதோ கற்பனை செய்துகொண்டு கோபித்துக்கொண்டுவேறு விடுகிறார்கள்; இதுவாவது பரவாயில்லை, கண்டபடி திட்டப்படுவதால் நான் பெரிதாக பாதிக்கப்படுவதில்லை. முடிந்தவரை சிரித்துக்கொண்டே அகன்றுவிடுவேன்.

இன்னொரு பக்கம் (=yet another page), “நீ ஒரு பதிவுக்கும் இன்னொரு பதிவுக்கும் தொடர்பில்லாமல் எதையோ எழுதிக்கொண்டே போகிறாய், கொஞ்சகாலமாவது தொடர்ச்சியாக ஒரே ஸ்டைலில் எழுதவேண்டும். இல்லாவிடில் படிக்கக் கஷ்டமாக இருக்கிறது. வசைச் சொற்களைத் தவிர்க்கலாமே!”

என் எதிர்வினை:

1. இது ஒத்திசைவு. எனக்குப் பிடிக்கும் அல்லது ஒத்துவராத விஷயங்கள் பற்றி, என் குருவிமூளைக்குப் பிடிபட்ட விஷயங்கள்தாம் வரும். அவை உங்களுக்கு ஒத்துவந்தால் அது ஊக்கபோனஸ். ஒத்துவராவிட்டால் என்மேல் விழுந்துபிடுங்கி ஒத்துவூதவேண்டும் என்கிற அவசியம் இல்லை; இது இருவழிச்சாலை.

2.  ஒத்திசைவு என் ஸ்டைல்(!) எழவில் தான் வரும். ஒர்ரே மாதிரி எழுத நான் என்ன அட்ச்சிவுட்டாலஜிஸ்ட் வெண்முரசனா அல்லது வொலக நெகிழ்வாலஜிஸ்டா அல்லது விளிம்புநிலைக் களிம்பாலஜிஸ்டா?

3. எனக்கு மட்டும் நான் எழுதுவதைப் படிக்கக் கஷ்டமாக இல்லையா என்ன? ஆகவேதான் இந்தப் ‘பெறுக இவ்வையகம்.’  இப்படியாப்பட்ட பெறுதற்கரிய இன்பம்ஸ் வேண்டாமென்றால் தாராளமாக அகலலாம். நன்றி.

4. வசைச் சொற்களைத் தவிர்க்கவேண்டுமா? அதுதானே அம்மணி ஒத்திசைவின் ஆதாரசுருதி? ஆகவே பிடியுங்கள்: திராவிடர் திராவிடர் திராவிடர்… …

எல்லாம் ஒருசுற்று முடிந்து ராசியானதும், மறுபடியும் பழைய மாற்றுக்கண்ணி, கதவைத் திறப்பாயா…

…ஒரு பின்புல முடியையும் அறியாமல், பெரிதாக அறிவுரைவேறு கொடுக்கவந்துவிடுகிறார்கள். :-( “நீ இதைச் செய்யவேண்டும்.” “நீ இதனைச் செய்யக்கூடாது.” “நீ சொல்லியிருப்பது சரிதான், ஆனால் சொன்னவிதம் சரியில்லை.”

ஐயாமார்களே, அம்மணியே நன்றி! நன்றி!! நன்றீ!!!

-0-0-0-0-0-

இதுதான் பெரும்பிரச்சினை.  இளம் அன்பர் ஒருவர் தேவைமெனக்கெட்டு ஒரு பின்னூட்டம்: “திருவள்ளுவரைப் பற்றி நீங்கள் எழுதியிருப்பது தவறு” என்கிற ரீதியில். மேலதிகமாக, திருவள்ளுவர் பற்றி ஏதோவொரு தண்டக்கருமாந்திர காமாலைக்கண் மிஷனரி ஒருவர் எழுதிய புத்தகத்தை “அவசியம் படி” எனவொரு மேலான அறிவுரை.

முழுநீளம் ஏதேதோ எங்கிருந்தோ வெட்டியொட்டி – ஒத்திசைவு பதிவுகளை விடவும் படுநீளமாக அனுப்பியிருந்தார். எனக்கும் தலையோ காலோ ஒரு மண்ணுமோ (= உதயசந்திரன் ஐஏஎஸ் அவர்களின் ஐடி ஆராய்ச்சி !) சுத்தமாகப் புரியவில்லை. கடாசிவிட்டேன்.

ஒரு மசுரும் புரிந்துகொள்ளாமல் ஏனிங்கு தேவைமெனெக்கெட்டு வந்து விழுகிறார்கள், பாவிகள்!

சிர்ப்புசிர்ப்பா வந்ததால். ஒரே அழுவாச்சி. இது. என்ன செய்வது. சோகம். கையறு நிலை. விரக்தி. ஓடினேன் ஓடினேன். வாழக்காயின் விளிம்புக்கே ஓடி பஜ்ஜி செய்து சாப்பிட்டேன். மூளைக் காய்ச்சல். தலெ தின்னுதாரே. மாதர் சோத். சோத்தாலடித்த பிண்டம். இதுதான் அண்டம். லூஸ்லவுடவும் முடியவில்லை. ஜீரணிக்கவும் முடியவில்லை. மண்டையைப் பிறாண்டும் விஷயம். கதி கலங்கல்.

…இம்மாதிரி திகில்கொடுக்கும் விஷயங்களைப் பார்த்தால் எனக்குக் கொஞ்சம் வியர்த்து விடுகிறது. நான் இந்த மாக்களோடா ‘உரையாட’ வேண்டும். கலக்கம். இங்கு என்ன செய்துகொண்டிருக்கிறேன். வாழ்க்கையில் என் குறிக்கோள் என்ன. நான் யாவற்றால் ஆக்கப்பட்டிருக்கிறேன். மாக்கள் களிமண்ணாந்தைகளோ. குறைந்த பட்சம், மண்டையில் பத்துகிராம் ஆச்சிமசாலாவாவது இருந்து தொலைக்கலாமே. இறப்பு என்றால் இதுதானா. அனுதினமுமா இப்படி எனக்கு லபிக்கவேண்டும். காலதேவன் என் நேரம் முடிந்துவிட்டது என்று இப்படிப் பூடகமாகச் சொல்கிறானா. இறப்புக்குப் பின் வாழ்க்கை எனவொன்று இருக்கிறதா. மறுபிறப்பு உண்மையா. அப்படி இருந்தாலும் மறுபடியும் மேல்மாடிகாலிகளுடன் உறவாடவேண்டுமா. நான் வாழ்ந்துகொண்டிருக்கும் இவ்வாழ்க்கை உண்மையாகவே இப்படித்தானா. தொடருமா. இதுதான் நிதர்சன உண்மையா.

ஹ்ம்ம்ம். உண்மைதான் போலும். அதுமட்டுமில்லாமல், எம் சக திராவிடத் தமிழர்களுக்கு மூளையைச் சுத்தமாக அடகு வைத்துவிட்டபின்னும் புல்லரிப்பு உணர்ச்சிவசப்படமுடியும் என்பதும் உண்மைதான்.

இப்படியே… …இந்தக் கூவான்கள் ஏன் இங்கே என்ன மசுத்துக்குப் படிக்கவருகிறார்கள் எனவொரு கழிவிரக்கம் நிரம்பி, என்ன மசுத்தை சாதித்துக்கொண்டிருக்கிறேன் என்ற பின்புல ஒப்பாரியுனூடே தமிழின் நிலையை நினைத்தும்,  அதிமேதாவிகள் நம் சமுதாயத்தை ஆக்கிரமித்திருக்கும் ஆழத்தைப் பார்த்தும் மூச்சடைத்துவிடுகிறது.

ஆகவே, எனக்கு எங்கேபோவது எந்தக் குட்டிச்சுவரில் (=அமர்நாத் ராமகிருஷ்ணன்!) முட்டிக்கொள்வது எனத் தெரியவில்லை.

அம்மணிகளே, அம்மணர்களே ஒத்திசைவுக்கு என் செல்ல ஏழரைகளுக்கு மேல் வேண்டவேவேண்டாம். சர்வ நிச்சயமாக, நான் மேட்டிமைவாதிதான். சராசரிகள் எனக்கு ஒத்துவரமாட்டார்கள். நன்றி.

ஆனால் அது நெடுங்காலக் கட்சித்திட்டம்.

குறுங்காலத் தந்திரோபாயமாக – இந்த படுபயங்கர திகில்களுக்குப் பயந்தே, பின்னூட்டங்களை தற்போதைக்காவது ஏரக்கட்டி மூடிவிடலாமா எனவொரு நப்பாசை வருவதையும் தவிர்க்கமுடியவில்லை.

மற்றபடி – மூளை நம் அனைவரிடமும் ஏறத்தாழச் சமமாகவே இருக்கும் வஸ்துதானே? அதைத் துருப்பிடிக்கவிடாமல், கொஞ்சமேனும் உபயோகிங்கடா முட்டாப் பொறம்போக்குகளா என மட்டும்தான் அறிவுரைக்கும்/பொங்கும் அன்பர்களிடம் மரியாதையுடனும் நல்லிணக்கத்துடனும் கோரிக்கை வைக்கமுடியும்.

-0-0-0-0-0-

அன்றே 1983ல் சொன்னார் ஜெர்ரி ஷ்வார்ஸ் அண்ணாத்தே. நான்தான் அதற்குச் செவி மடுக்கவில்லை, என்ன செய்ய. :-(

யூஸ்நெட் உபயோகத்துக்கான எமிலிபோஸ்ட் (அதாவது அடிப்படை அணுகுமுறைகள், பண்பு குறித்த வியாக்கியானங்கள்) அறிக்கையில்…

     8. Avoid sarcasm and facetious remarks.

       Without the voice inflection and body language of personal
       communication these are easily misinterpreted. A sideways
       smile, :-), has become widely accepted on the net as an
       indication that "I'm only kidding". If you submit a satiric
       item without this symbol, no matter how obvious the satire is to
       you, do not be surprised if people take it seriously.

ஆனால், இப்படி ;-) என்றெல்லாம் போட்டாலும், எம் செல்ல திராவிடர்களுக்கு அது புரிவதில்லை. என்ன செய்ய.

சிலகாலம் முன் ‘இனிய பயம்’ என ஒருமாதிரி ரசக்குறைவான ‘வாசகர் கடிதங்’களை (பெரும்பேராசானுக்கு, மேதகு கடலூரார் எழுதும் த்வனியில்) தொழில்முறையில் எனக்கு நானே தனித்துவமாகத் தன்னில் சிரித்து அழுதுகொண்டே தயாரித்தேன்.

ஒருதலைக் காதல் – கடிதம் 15/10/2018

ஜெயமோகநாயனம் 17/10/2018

அன்புள்ள ஜெயமோகன், உங்களிடமிருந்து அறிவுரை பெறுவது சிறந்ததா அல்லது, உங்களுக்கே அறிவுரை கொடுப்பது சாலச் சிறந்ததா? 23/10/2018

அவையெல்லாம் 100% ப்யூர் பகடி மட்டுமே! அவற்றை ஒருமுறை பார்த்தாலே தெரியும். சந்தேகத்துக்கிடமில்லாமல் அவைகளை எனக்கு நானேதான் எழுதிக்(!)கொண்டேன். இதனை ஃபோர்ஜரி எனச் சொல்லமுடியுமா எனத் தெரியவில்லை.

ஆனால் அவற்றுக்கும் சில படுபுத்திசாலி அன்பர்கள் கோபப்பட்டார்கள். “வராத கடிதங்களை நீயே எழுதிக்கொள்கிறாய்; இது அறமற்ற செயல். உனக்கு என்ன உரிமை இருக்கிறது, பிறரைக் குற்றம் சொல்ல.” டட்டடா டட்டடா

அன்று ஆச்சரியத்தில் மேற்புருவத்துக்கடியில் சொருகிக் கொண்ட கண்மணிகளை, இன்றுவரை கீழே இறக்கவே முடியவில்லை. இறக்கும் வரை இரந்து இரைஞ்சவேண்டும்போல.

போ விதி எனவொன்று இருக்கிறது. அதனினும் பெருவலி யாவுளற, சொல்லுங்கள். :-( இதை, ‘விதியே போ’ என மாற்றுக் கருத்துருவாக்கமும் செய்து கொள்ளலாம். நன்றி.

மெல்லத் தமிழ்ப்ளாக், இனிச் சாகும்.

டிவிட்டரில் சரணடைந்தால் தெய்வமே என்றிருக்கலாம் என்றால் அங்கும் துரத்துகிறார்கள். (ஃபேஸ்புக் எப்படி என்று தெரியவில்லை, ஆனால் அங்கும் இதே சராசரிப் பேய்கள்தானே தானேதந்தானே என அவிழ்த்துப்போட்டு ஆடிக்கொண்டிருக்கும்?)

போங்கடா.

8 Responses to “1983ல் அண்ணன் ஜெர்ரி ஷ்வார்ஸ், Usenetல் சொன்னதை நான் கேட்டிருந்தால் நிலைமை இவ்வளவு மோசமாக இருந்திருக்காதோ?”

 1. சோமு Says:

  இப்படியெல்லாம் சொல்லிவிட்டு எழுதுவதை குறைத்து குழந்தைகளோடு நிம்மதியாக இருக்கலாம் என்றுதானே பார்க்கிறீர்கள்.

  சத்தமில்லாமல் படித்துவிட்டு கருத்துகூட கூறாமல் ஓரமாக நின்றுகொண்டிருக்கும் ஏழரை சங்கத்தினர் இதை வன்மையாக கண்டிப்பார்கள் என்று நினைக்கிறேன். :-)

  Facebook பக்கம் மறந்தும்கூட வந்துவிடாதீர்கள்.


  • ஐயா, குழந்தைகளுடன் செலவழிக்கும் நேரத்தையும் குறைத்துவிட்டேன். வாரத்திற்கு ஒரு நாள் மின்னியல் வகுப்பு, அவ்ளோதான். மற்றபடி சிலபல பிறவிஷயங்கள் ஒடிக்கொண்டிருக்கின்றன.

   சுமார் இரண்டுவருடங்களுக்கு முன், ஒருதடவை பத்ரி சேஷாத்ரி அவர்களின் ஃபேஸ்புக் பக்கத்துக்குப் போய்ப் படித்தேன். அங்கு அரைவேக்காட்டு அன்பர்கள் அவரை வாட்டியெடுத்துக் கொண்டிருந்தார்கள், பாவம்.

   பிறருடைய கஷ்டங்கள் நமக்குக் கொடுக்கும் படிப்பினைகள் அலாதியானவை.

 2. RC Says:

  நன்றி சோமு.நான் நினைத்ததை எழுதிவிட்டீர்கள் :-)

  ஐயா, நீங்கள் கொடுத்த இணைப்பில் இருந்த ‘ஜெர்ரி ஷ்வார்ஸ் விதிகளை’ப் படித்தேன் நன்றி.
  பெரும்பாலான பிரபல தமிழ் பதிவர்களுக்கு,விதிகள் 3,7,8,15 லின் படி NC கொடுக்க வேண்டும்.எத்தனை தடவை என்று கேட்காதீர்கள்.

 3. Ramesh Narayanan Says:

  /… பின்னூட்டங்களை தற்போதைக்காவது ஏறக்கட்டி மூடிவிடலாமா எனவொரு நப்பாசை வருவதையும்/
  இதுல ‘ஏர’க்கட்டின்னு தானே இருக்கணம், குடியானவன் காத்தால 4-5 மணிக்கு ஏரெடுத்துண்டு கெளம்பிப் போய் உச்சி வெயில் 12 மண்ணுக்கு ஏரக்கட்டுவான். அந்தக் குறிக்கிறது தானே இது. இதுக்கு மும்பு கூட கவனிச்சேன், wait பண்ணி இப்ப ஸொல்றேன்

 4. Ramesh Narayanan Says:

  மணிக்கு ‘மண்ணுக்கு’, அத ‘அந்த’

 5. Kannan Says:

  Time to appoint a moderator. Let him or she toss the inappropriate comments and send the ones that deserves reply.

  – Kannan


 6. தவற்றைத் திருத்திக்கொண்டேன்.

  நண்பர்களின் கருத்துகளுக்கு நன்றி. பார்க்கலாம்…


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s