கௌதம புத்தர் எனும் ஆதி ஆரிய வலதுசாரி: ஆர்ய அஷ்டாங்க மார்க்கம்

30/11/2019

கவனிக்கவும்.

அவர், ஆரிய, நல்ல என்றுதான் சொன்னார்.

மேலும் முக்கியமாக – திராவிட அஷ்டாங்க மார்கம் எனச் சொல்லவில்லை என்பதை இன்னமும் சரியாகக் கவனிக்கவும். அதைப் பாலிமொழியில் கூட, ஆரிய அத்தாங்கிக மாக்கம் எனத்தான் குறிப்பிட்டுச் சொல்லியிருக்கிறார்.

-0-0-0-0-

தர்ம சக்ர பரிவர்த்தனை (பாலி: தம்ம சக்கர பவித்தனா) எனும் புத்தரின் முதல் பேச்சான ‘தர்மத்தைப் போதிக்கும் சக்கரத்தை நிலை நாட்டுதல்’ என்பதில் பல, ஆதி பௌத்தம் குறித்த விஷயங்கள் இடம் பெறுகின்றன – அவற்றில், அவருடைய ஐந்து முதன்மைச் சீடர்கள், நடு நிலை மார்க்கம், நான்கு உண்மைகள், எட்டு வழிகள், புத்தரின் மெய்மை தரிசித்த நிலை எனப் பல விஷயங்கள். கொஞ்சம் நீண்ட ப்ரவசனம் இது.

இதில்தான் ஸம்ஸ்க்ருதத்தில் – आर्याष्टाङगमार्ग என்றும் பாலி மொழியில் अरिय अट्ठङगिक मग्ग எனவும் வரும் போற்றத்தக்க, ஆரிய வழிகள் விளக்கப்படுகின்றன. எண்வழி மார்க்கம் என அறியப் படுகின்றன.

(Tilmann Vetter, The Ideas and Meditative Practices of Early Buddhism, 1988, Brill)

(Majjhima Nikāya | The Middle Collection – The Shorter Set of Questions & Answers – Cūḷa Vedalla Sutta)

எங்கேயாவது இடது, லெஃப்ட் என எங்காவது இருக்கிறதா, சொல்லுங்கள். எங்குபார்த்தாலும் ரைட் தான். ரைட்டு. சரியா?

ஆக, பாரதத்துக்கேற்ற பாதை என அன்றே சொன்னார் அண்ணா புத்தர்!

 1. வலதுசாரி எண்ணம்
 2. வலதுசாரி நம்பிக்கை
 3. வலதுசாரி பேச்சு
 4. வலதுசாரி செயல்
 5. வலதுசாரி வாழ்க்கை
 6. வலதுசாரி  முயற்சி
 7. வலதுசாரி சிந்தனை
 8. வலதுசாரி நோக்கம்

(மொழிபெயர்ப்புக்கு நன்றி. ©எஸ் ராமகிருஷ்ணன், 2019)

-0-0-0-0-0-0-

சரி, உங்களில் சிலருக்கு என்னைப் போலல்லாமல், என் ஆதர்ச எழுத்தாளரான பெரும்பேராசான் எஸ்ரா அவர்களைப் பிடிக்காமல் இருக்கலாம். இருந்தாலுமேகூட…

வலதுசாரி என்றில்லாமல், ஆர்ய என்றுகூட இல்லாமல், நாம் ‘நல்ல’ என மட்டுமே முழிபெயர்ப்போம் என்றாலும்…

அதாவது எண்வகை மார்க்கம் என நம்மால் புரிந்துகொண்டு விளங்கிக் கொள்ளப்படும் – நல்ல எண்ணம், நல்ல நம்பிக்கை, நல்ல பேச்சு, நல்ல செயல், நல்ல வாழ்க்கை, நல்ல முயற்சி, நல்ல சிந்தனை, நல்ல நோக்கம் – இவைதாம் எண்வகை ஆரிய வழிமுறைகள்; இவற்றைக் கடைப்பிடித்தால், நாம் கரையேறலாம் என்றுதான் புத்தர் சொல்லியிருக்கிறார்.

ஆரிய என்பதையே விடுங்கள்! இந்த அறவிழுமியங்களை எப்படி நாம், கடுகளவுகூட நம் திருட்டுத் திராவிடர்களோடு முடிச்சுப் போடமுடியும்? அப்படி ஏதாவது ஏடாகூடமாகச் செய்ய முடிந்திருக்குமானால், புரட்சித் தலைவர் புத்தர் அன்றே அதனைச் செய்திருப்பாரே?

இச்சமயம், திருமாவளவளவளவளவன் அவர்களுக்கு என் பரிந்துரை என்னவென்றால் – நீங்கள் உங்கள் விளம்பரத்தட்டிகளில் புத்தர் படத்தைப் போட்டுக்கொண்டால், திராவிடக் கட்சிகளுடன் உறவாடமுடியாது.

ஆம்பேட்கர் படத்தைப் போட்டு, அவர் சிலைக்கு மாலை அணிவித்துப் புளகாங்கிதம் அடைந்தால் –  அவருடைய பௌத்த நம்பிக்கைக்கு எதிர்மறையாக, ஆரியர்களை எதிர்க்கும் திராவிடர்களுடன் உல்லாசமாக இருக்கமுடியாது.

ஆனால், நீங்கள் ஒரு திராவிடர், பாவம். உங்கள் இரட்டைக் குறட்டை நிலையைப் பார்த்தால், கௌதமபுத்தரும் ஆம்பேட்கரும் விழுந்து விழுந்து தங்கள் பின்பக்கங்களை விலக்கிக்கொண்டு உருண்டுருண்டு கண்ணீர்மல்கச் சிரிப்பார்கள் – ஆனால் நல்லவேளை இருவரும் போய்ச்சேர்ந்து பல்லாண்டுகள் ஓடிவிட்டன.

ஆகவே, உங்கள் திராவிடக் கூட்டுத் தொழிலைத் தொடர்ந்து லாபகரமாக நடத்த வாழ்த்துகள்.

வாழ்க ஆரியம், ஆகவே பௌத்தம்.

நன்றி.

 

5 Responses to “கௌதம புத்தர் எனும் ஆதி ஆரிய வலதுசாரி: ஆர்ய அஷ்டாங்க மார்க்கம்”

 1. Vijay Vanbakkam Says:

  நீங்கள் இன்னொரு “ஆரிய மாயை”யை விட்டுவிட்டிகள்.

  சதுராணி ஆர்ய சத்யாணி.

  இதைப் பொதுவாக ஆங்கிலத்தில் Four Noble Truths என்றழைப்பர். ஆங்லத்தில் . ஆரிய என்று வரும் இடங்களில் , அதை மறைத்து விட்டு வேறெதாவது Noble முலாம் பூசுவார்கள்

  சதுராணி ஆர்ய சத்யாணி. மற்றும் அஷ்டாங்க ஆர்ய மார்கம் என புத்தமதம் தன்னை அழைத்துக் கொண்டது

 2. Vijay Vanbakkam Says:

  இந்து மதத்தை விட , புத்த மதத்தில் ‘ஆரிய’ முத்திரை என்னும் ஆழமாக பத்திந்துள்ளது.


  • ஐயா, பின்னூட்டங்களுக்கு நன்றி. பின்னர், இவை குறித்துச் கொஞ்சம் குறிப்புகளைப் பதிக்கிறேன்.

 3. அப்துல்லாஹ் Says:

  உண்மைதான்!பவுத்தம் என்பதும் பார்பனீயத்தால் விழுங்கப்பட்டுவிட்டது!கிறிஸ்தவம் போல!பார்ப்பனீயத்தை துணிந்து எதிர்த்து நிற்கும் ஒரே மார்க்கம் இஸ்லாம் மட்டுமே


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s