தரம்பால், அயோத்யா, அரவிந்தன் நீலகண்டன் கட்டுரை, ஊர்சுற்றிப்புராணம், அப்ரஹாமிய மத அட்டூழியங்கள் – குறிப்புகள் (1/2)

03/12/2019

இன்று இந்தக் கட்டுரையை மறுபடியும் படித்தேன்.  நீங்களும் அவசியம் படிக்கவும், சிறிய கட்டுரைதான். அழகாக வந்திருக்கிறது.

இரண்டு விஷயங்கள் காரணமாக, எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது.

-0-0-0-0-

முதல் விஷயம்: பொதுவாகவே, நான் ஸ்ரீ தரம்பால் அவர்களை, அவருடைய கடும் உழைப்புக்காகவும், மூளைக்காகவும், ஆகவே நம் வரலாறுகளை மீட்டெடுத்ததற்காகவும் ஆராதிப்பவன். எனக்கு இந்த சொற்ப அளவுக்காவது ஒரு முதிர்ச்சியும்(!) நம் வரலாறுகள் குறித்த காத்திரமான படிப்பறிவும்(!!!) இருக்கிறது என்றால், அதற்கு நான் சுமார் 1984 வாக்கில் முதலில் படித்த அவருடைய மகாமகோ புத்தகங்களும்தாம் காரணம் என்பதைத் தயங்காமல் சொல்வேன். (அரவிந்தன் அவர்களுடைய ஸ்வராஜ்யா கட்டுரையின் குவியமும் நம் ஸ்ரீ தரம்பால் அவர்களைப் பற்றித்தான்)

இரண்டாம் விஷயம்: நானும் அரவிந்தன் அவர்கள் குறிப்பிட்டிருக்கும் அதே 1993 ஸிபிஎஸ் கூட்டத்திற்குச் சென்றிருந்தேன். ஒருவழியாக அயோத்யா சொத்துவழக்கு நீதி ஒருமாதிரியாகக் கிடைத்த நாளன்றே (9 நவம்பர், 2019) இந்த ஸெமினார் குறித்து ஒரு ட்வீட் செய்திருந்தேன். (இது பெரிய விஷயமில்லை – கொஞ்சம் பின்புலத்துக்காகக் குறிப்பிடுகிறேன்)

twitter.com/othisaivu/status/1193118197408419840

அன்றுமாலையே அதே கூட்டம் குறித்த, கருத்துப் பரிமாற்றம் பற்றிய, மேலே குறிப்பிடப்பட்ட அரவிந்தனின் கட்டுரை படிக்கக் கிடைத்தது.

திருப்தி.

மேலதிகக் குறிப்பு: ஸ்ரீ தரம்பால் அவர்களின் இந்தப் பேச்சுக்குப் பின், அவர்பேரில் பலருக்கு மகா கோபம். காந்தியனாகத் தம்மைக் கருதிக்கொண்ட ஒருவர் இப்படி இருக்கலாமா அப்படியிப்படி என்று ஒர்ரே அறச்சீற்றம்.

அதற்குப் பிறகு – காந்தியர் சிலர், ஸ்ரீ தரம்பால் அவர்களை, ஒரு முகாந்திரமும் இல்லாமல், ஆனால் அவர் சிலபல உண்மைகளைப் பட்டவர்த்தனமாக, நாசூக்கு பார்க்காமல் மதச்சார்பின்மை ஃபேஷனோயில்லாமல், ஆதாரங்களுடனும் தர்க்கரீதியான கருத்தாக்கங்களுடன் பேசியதால், அவரை மதவெறியாளர் என்று ஏசினர்.

வாழ்க்கையில் ஒரு சுக்கும் சாதிக்காமல், சொகுசு லிபரல் நபும்ஸக அஹிம்ஸை கருத்துதிர்ப்பவர்களின் பேடித்தனம், வேறென்ன சொல்ல.

ஆனால், நான் யாருடனும் பேசவில்லை, அமைதியாக இருந்து முழுவதையும் கவனித்துத் திரும்பினேன்.

காரியவாதி லிபரல், இடதுசாரி, காந்திய பம்மாத்து வாதிகளை, ‘Skin in the game’ இல்லாமல் பிறருக்கு மாளா அறிவுரை தருபவர்களை, அந்த நிகழ்வைத் தொடர்ந்த காலங்களில் இனம்புரிந்துகொள்ளக் கற்றுக்கொண்டேன்.

-0-0-0-0-

…நானும் என் 15 வயது மகனும், நேரம் வாய்த்து சக்தியும் இருந்து, முடிந்தபோதெல்லாம் என் டப்பா (ஆனால் செய்நன்றிமறவா) மோட்டர்பைக்கில் (அல்லது நண்பனின் ‘புல்லெட்’டில்)  சிறு/நெடும் பயணங்கள் சென்றபடி இருப்போம்.

ஓரிரு முறை தில்லி, வாராணசீ எனச் சுற்றியிருந்தாலும், இப்போதைக்கு இவை தென்மாநிலங்களில் மட்டுமே அவ்வப்போது நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

சிலபல புவியியல் கூறுகள், கலாச்சாரச் சின்னங்கள், இயற்கை அழகுகள், நதி தீரம் போன்ற உன்னதங்களைத் துய்ப்பது என இவை விரியும். பொதுவாக, கிளம்புவதற்கு முன்னால் கொஞ்சம் ஹோம்வர்க் செய்வோம், படிப்போம், குறிப்புகள் எடுத்துக்கொள்வோம். ஆக, ஓரளவுக்காவது முழுமையான சித்திரங்கள் கிடைக்க வாய்ப்பு அதிகமாகலாம் எனும் நப்பாசைதான்…

ஆனால், இப்பயணங்களில் ஒரு  தாங்கொணா வருத்தற்குரிய விஷயம் என்னவென்றால்…

இம்மாதிரியான துய்ப்புப் பயணங்களில் ஏறத்தாழ, 350+ வயதான எந்தக் கோவிலுக்குச் சென்றாலும் (ஜைன, பௌத்தப் பிரிவுகள் உட்பட), அது ஏதாவது ஒரு வகையிலாவது படுமோசமாக பின்னம் செய்யப் பட்டிருக்கும்.

அதாவது – உடைக்கப்பட்ட சிலைகள், மூளியாக்கப்பட்ட (மூக்கு அல்லது மார்பகம் வெட்டப்படல், தலை கை கால்கள் உடைக்கப்பட்டிருத்தல் இன்ன பிற) சிற்பங்கள், துப்புரவாக ஒழிக்கப்பட்ட புடைப்புச் சிற்பங்கள், பல இடங்களில் மூலவர்களோ உத்ஸவமூர்த்திகளோகூட இல்லாமல் வெறும் கும்மிருட்டுக் கர்ப்பக்கிரஹம், சிலபல இடங்களில் பழமைவாய்ந்த கோவில்களைத் தகர்த்து அதற்குமேல் கட்டப்பட்ட மஸுதிகள், சில இடங்களில் யாருமே இல்லாமல் அத்துவானக் காடாக இருள்மண்டியிருக்கும் (புழக்கத்திலில்லாத) கோவில்கள்…

… சில அபூர்வமான பகுதிகளில் சிதிலம் செய்யப்படாத, வழிபாட்டிலும் இருக்கும் சில கோவில்கள். (ஊக்கபோனஸாக, அப்படியிருந்தாலும் மாதம் ரூ30-ரூ200 போல ஹிமாலயச் சம்பளம் வாங்கிக்கொண்டு கண்ணில் பஞ்சடைத்தாலும் அத்துவானக் காட்டுக்கோவில்களில் சேவை செய்துகொண்டிருக்கும் பூஜாரிகள்… பரம்பரையாகக்  தலைமுறை தலைமுறையாகக் கோவில்களில் பணி செய்பவர்கள் – இவர்களெல்லாரும் புத்திசாலிகள்தாம், வெளியில்வந்தால் நன்கு ‘சம்பாதிக்கலாம்.’ ஆனால், இவர்களில் பலர் (நான் பார்த்த வரையில்) ஏழ்மையில் இருந்தாலும் கோயிற்பணியை நிராகரிக்கமாட்டோம் என அழிச்சாட்டியம் செய்யும் தொழில்தர்மம் மிக்கவர்கள்; சில சமயங்களில் உள்சுற்று முறையில் குடும்பத்தினர் முறை வைத்துக்கொண்டு ‘ஒரு காசுகூட எதிர்பாராமல்’ கோவில் பரிபாலனம் செய்வதும் நடக்கிறது என்பதை நேரடியாக அறிந்து ஆச்சரியப் பட்டிருக்கிறேன்! சென்ற பதிவில் குறிப்பிட்ட விவரிக்கவியலாத பாரதஷக்தியோ அதன்வழியான பண்பாட்டுத் தொடர்ச்சிச் சங்கிலியிணைப்புகளோ இதற்குக் காரணமாக இருக்கலாம். )

…நான் ஓரளவுக்கு (மிக அதிகமல்ல, அவற்றைக் குறித்து பெரிதாக எழுதியதுமில்லை!) பாரதத்தில் சுற்றியிருக்கிறேன்; அதனால் சொல்வேன், தென் பாரதத்திலாவது இந்த நிலைதான். ஆனால் வடக்கில் இது மிகச் சோகமான விஷயம்; நான் பார்த்துள்ள வரை, இப்படி அழிக்கப்படாத ஒரு கோவிலும் இல்லை. அப்படியில்லாத ஒரு பழமைவாய்ந்த கோவிலுக்குக் கூட, இதுவரை நான் சென்றதாக நினைவில்லை.

…அப்படியே, ஆச்சரியப்படத்தக்க வகையில் விதிவிலக்குகளாக, பின்னப்படுத்தப் படாமல் இருந்தால், அவை கடந்த 100-150 வருடங்கள் முன்புபோலத்தான் கட்டமைக்கப் பட்டிருக்கும், அல்லது அதற்குச் சற்றுமுன்னர் புனருத்தாரணம் செய்யப்பட்டிருக்கும்  அல்லது முகலாய/ஸுல்தாயிய ஆட்சிகளுக்குக் கப்பம் கட்டிய சிற்றரசர்களால் கட்டமைக்கப்பட்டு வெளியில் அவ்வளவு அறியப்படாமல் இருந்திருக்கும்,  அல்லது மராட்டியர்களால்/சீக்கியர்களால் புனருத்தாரணம் செய்யப்பட்டிருக்கும் போன்றவைகள் வகையறாதான் என்பது என் அனுபவபூர்வமான கருத்து. (நான் பார்த்தவரை, தென் பாரதத்தில் இது கர்நாடக (=விஜயநகர), மராட்டிய, நாயக்க, பாளையக்கார அரசுகள் புனருத்தாரணம் செய்தவகை)

நம்மெல்லாருக்கும் தெரிந்த ‘மதச்சார்பின்மையுடன் கோவில்களையும் மூர்த்திகளையும் முழுமூச்சுடன் உடைத்த’ கதைதான் இது. எனக்கும் இந்தப் பிழியும் சோகங்களைப் பார்த்துப் பார்த்து மரத்துவிட்டது.  இதனைத் தொடரத் தொடர வேதனைதான்… ஆகவே, மௌனமாகப் பார்த்துவிட்டுத் திரும்புவேன், சிலசமயம் சிறு குழுக்களுடன் சென்றால், பொதுவாக சிலபல விஷயங்களைக் காட்டி என் மேதாவித்தனமான கருத்துகளைச் சொல்வதோடு நிறுத்திக் கொள்வேன்…  (இதையெல்லாம் இப்போது நிறுத்திவிட்டேன்; என் மகனுடன் அல்லது குடும்பத்துடன் சுற்றுவதோடு சரி)

…இச்சமயம் எனக்கு ஆச்சரியம் தரும் ஒரு விஷயத்தைச் சொல்லவேண்டும். நம் மக்கள் பொதுவாகவே, இம்மாதிரி கோவில்மீதான வன்முறைகள் ப்ரத்யட்சமாக, கண்கூடாகத் தெரிந்தாலும் – அவற்றைப் பற்றிய ஒரு கேள்வியைக்கூடத் தம்மில் எழுப்பிக்கொள்ளமாட்டார்கள்;  விஷயங்களைத் தெரிந்துகொள்ளலாமே என ஒரு துருதுருப்போ குறுகுறுப்போ இல்லை. எல்லாவற்றையும் ‘இயல்பாக’ எடுத்துக்கொண்டு, குண்டிமண்ணைத் தட்டிக்கொண்டு போய்விடுவார்கள்!  ‘ஸர்வே ஜனோ ஸுகினோ பவந்து’ – ‘நமக்கு நடப்பதெல்லாம் நன்றாகவே நடக்கும்’ இன்னபிற சோம்பேறிச் சால்ஜாப்புகள்வேறு!

ஆனால் நான் — நாமெல்லாரும் பொங்கவேண்டும், விடலை உணர்ச்சியாவேசத்தனமாக ‘திருப்பி அடி, திமிறியெழு, அடங்கமறு’ என்றெல்லாம் உச்சாடனரீதியாக உளற வரவில்லை;  ஆனால் நம் வரலாறுகளை நாம் சரியாகத் தெரிந்துகொள்ளவில்லையானால், அவை திரும்பி அரங்கேற்றப்படும்போது நாம் அவற்றை எதிர்கொள்ளத் தயாராகக் கூட இருக்கமுடியாதல்லவா?

-0-0-0-0-

எது எப்படியோ, ஆனால்… என் மகனுடன் சென்று கொண்டிருக்கும் அண்மைய சுற்றுகளில் அவன் கேள்வி கேட்க ஆரம்பித்திருக்கிறான்.

இந்த வருட ஆரம்பத்தில் தில்லி பக்கம் சுற்றிக்கொண்டிருந்தபோது – குத்ப் மினார் எழவில் ஆரம்பித்தது  இந்தக் குடைச்சல் என நினைக்கிறேன். அங்குள்ள க்வாவத்துல்-இஸ்லாம் (‘இஸ்லாமின் பராக்கிரமம்!’) மஸுதியைப் பார்த்து, அவனுக்குக் கண்ணில் நீர் துளிர்த்தேவிட்டது. அது குத்புத்தீன் ஐபக் அரசாணைப்படி 27 ஹிந்து, ஜைன கோவில்களை இடித்து அவற்றின் சிதிலங்களாலும் பாகங்களாலும் கட்டப்பட்டது. எங்கு பார்த்தாலும் ஹிந்து கோவில்களின் இடிமானங்கள். அதன்மேல் மஸுதி.

ஜேம்ஸ் ஆல்ஃப்ரெட் பேஜ் + (பின்னாட்களில்) வை.டி. ஷர்மா எழுதி, மத்திய அகழ்வாராய்ச்சிக் கழகத்தால் வெளியிடப்பட்டதின் 2002 பதிப்பிலிருந்து கீழேயுள்ள பகுதிகள். (James Alfred Page, Y. D. Sharma  Archaeological Survey of India,  2002)

எவ்ளோ நாசூக்காக, பட்டும் படாமலும் எழுதியிருக்கிறார்கள், ஆச்சரியமாக இல்லை?

 

ஆனால், குத்புத்தீனின் சமகால ஹஸன் நைஸமி, விஷயத்தை பட்டென்று போட்டு உடைக்கின்றார். மதசார்பின்மைத் திரை விலகுகிறது. நன்றி!

-0-0-0-0–

…வழிகாட்டி ‘கைடு’ மஹான்கள் “இதோ பாருங்கள் – இவைதான் இந்தோ-இஸ்லாமியக் கட்டிடக் கலைக்கு கலாச்சார ஒருங்கிணைப்புக்கு புராதன மகத்தான எடுத்துக்காட்டுகள், ஸுல்தான்களும் முகலாயர்களும் கோவில்கள் போலவே கட்டியிருக்கிறார்கள், பாருங்கள். கங்கா-ஜமுனி தெஹ்ஸீப்!” எனச் சொல்லிய மணியம் – வெட்கங்கெட்டு அவற்றிற்கு முன்னால், நம் சுற்றுலார்வலர்கள் ஸெல்ஃபிக்கள் மயம்… எனக்கே தாங்கமுடியாமல் போய்விட்டது.

… ஏனிப்படி, எதற்காகச் செய்யப்பட்டன என என் மகன் கேட்ட நியாயமான கேள்விகளுக்கு என்னால் உடனடியாகவும் கோர்வையாகவும் அவனுக்குப் புரியும்படியும் பதில் சொல்லமுடிந்திருக்கவில்லை என்பதையும் கொஞ்சம் வெட்கமில்லாமல் ஒப்புக்கொள்ளவேண்டும் – ஏனெனில் என் மனதிலும் ஓடிக்கொண்டிருந்த உணர்ச்சிகள், ரத்தக்களறி வரலாறுகள் குறித்த அலைபாய்தல்கள் என்னைச் சரியாகச் சிந்திக்கவிடவில்லை. ஆகவே, பிறகு பேசலாம் என்றேன்.

… அண்மையில் கோலார் (பெங்களூருக்குக் கிழக்கேயுள்ளது இது) பக்க புராதனக் கிராமக் கோவில் ஒன்றுக்குச் சென்றிருந்தபோது அதேபோன்ற சிதிலங்களைப் பார்த்து மறுபடியும் அதே விஷயத்தைப் பற்றிக் கேட்டான் – எனக்கும் ‘இது வெறுமனே ஏதோ அப்போதைய இஸ்லாமிய மதவெறிதாண்டா, இப்ப அப்டியில்ல‘ என மேம்போக்காகச் சொல்ல மனதில்லாமல், ஏதோ அப்படி இப்படியென்று பதில் சொல்லி – பின்னொரு நாள், உனக்கு இந்த விவகாரங்களைக் குறித்து, ஆவணங்களுடன் சிலபல விஷயங்களைச் சொல்கிறேன் என்று விட்டுவிட்டேன்.

இப்படியே சிலபல மாதங்கள் கழிந்துவிட்டன. … …

(அடுத்த பகுதியில் முடியும் எனவொரு அனுமானம்)

10 Responses to “தரம்பால், அயோத்யா, அரவிந்தன் நீலகண்டன் கட்டுரை, ஊர்சுற்றிப்புராணம், அப்ரஹாமிய மத அட்டூழியங்கள் – குறிப்புகள் (1/2)”

 1. jasdiaz Says:

  How can anyone judge the Kings who lived centuries ago and what they did by today’s standards? Centuries back, after the war it was customary to kill or sell as slaves all-male population including young & old, castrate young boys, capture all women folk for distributing them among the troops as wives /concubines, loot the valuables and destroy or burn what can not be carried.

  By today’s standards, the demolition of Lord Ram’s temple is a sacrilegious act by Babur. But at his time how can he motivate his soldiers to fight thousands of kms away from their families and homeland? Offering them a share of the loot is of no use because the soldier may not survive the next battle. The only way to motivate him is by promising a great afterlife in heaven with 72 virgins. In short, the King has to appeal to the soldier’s base instincts, carnal desires and motivate him through religious fanatism.

  Even today, in 21st century, many “battle cries” of the Indian Army units are connected with religion.


  • Sir, thanks for your views. (somehow your comments and that of a couple of others always get caught in the spam filter…)

   I know the ‘battle cries’ aspect – a few of my close relatives were in the army; one of my maternal uncles got killed in the China war in NEFP – before I was born; having said all that, of course, coming from a possibly battle hardened, balanced fauji like you, your views of course deserve merit.

   But wars haven’t always been like the ones you mention, though even our ‘Sangam’ works talk inexorably about mazhapulavanji, uzhapulavanji, stealing cows and all that.

   In fact there has been NO religious motive or a diktat from the ‘holy books’ that have to be merely obeyed in the Indic contexts. But Quran and the authoritative hadiths (and good tafsirs) specifically ASK the followers of Islam to commit heinous acts on the infidels (or kuf’rs if you will) – whether are not there is war. And these books say that, the perpetrators actually get REWARDED. This I find truly abhorrent and tragic. I do not think there is anything to do with the Babur kind of folks giving the opportunity of slaughter and depredations to his marauding mobs of Islam crazed jihadis. It is sanctioned by a framework much, much superior to Babur in power and in ‘influence.’

   This is the MAIN issue. Does the Indian army, ask its soldiers to rape, pillage, burn, break idols and raze only ‘other folks’ places of worship’ in the name of any given religion? I do not think so.

   Jihadi mindset benefits(!) both from 1) a system based internally consistent diktats providing encouragement/sanction (promising all kinds of goodies) for crimes and 2) a logical punishment/retribution based scaffolding which says if you do NOT commit such crimes (actually called ‘holy acts’ as per the internal consistency bit), there shall be negative consequences.

   It is a wince-wince situation. But is real. YMMV. What do you think?


 2. From a ‘friend.’

  -0-0-0-0-

  regarding your post today , few observations 1. Rani Ki Vav is the only place that i have seen that wasn’t destroyed by Muslim Invaders. Because, it was buried under earth 2. In Karnataka, the only temple that i think escaped the marauding forces is the Veeranarayana Temple, Belavadi. 3. I couldnt fathom the kind of hatred that made Aurangazeen spend 3 years destroying Cave #16 at Ellora. I will never, however much i try. 4. South Indians owe a lot to the Vijayanagar empire and the nayak kings for the re-construction 5. Islamic Invasion is the single most important reason that there are very few temples in the north like what we have in the south. 6. I hope the hisory gets re-written in my life time 7. I await part 2.


  • ஐயன்மீர், நன்றி.

   1. நீங்கள் சொன்னதுபோலவே அது ஸரஸ்வதி நதிதீர வண்டல்மண்ணால் பலப்பல நூற்றாண்டுகளாக மூடப்பட்டிருந்ததும் ஒரு காரணமாக இருந்திருக்கலாம். (“காஃபிர் வடெ போச்சே!”)

   2. வீர நாராயணர் கோவில் (பெளெவாடி) தப்பித்தது அதிசயம். ஆனால் அதற்கு மிக அருகிலேயே இருந்த பஸவேஷ்வரர் கோவில் அப்படிப் புண்ணியம் செய்திருக்கவில்லை – இது உடைக்கப்பட்டு சிதில நிலையில் தான் இருந்தது – ஆனால் சுமார் 100 ஆண்டுகள் முன்பு போல என நினைக்கிறேன், புனருத்தாரணம் செய்யப்பட்டது. ஆடம் ஹார்டி, ஜெரார்ட் ஃபீகிமா போன்ற சான்றோர்கள் இது குறித்து எழுதியிருக்கிறார்கள் என ஒரு மங்கல் நினைவு.

   பெளெவாடி கோவில்கள் பல (அனைத்தும் அல்ல!) தப்பித்ததற்குக் காரணங்கள் 1) அவை முதன்மைப் பாதைகளின் அருகில் இல்லை 2) மிகப் பக்கத்து த்வாரஸமுத்ரம் (ஹளேபீடு) சார்ந்த பெரும்கோவில்கள் இஸ்லாமியக் கோயிலிடிப்பார்களை காந்தமாக இழுத்தன. (“பைஸா வஸூல்!”)

   3. தாங்கள் ஔரங்ஸெப் அவர்களைத் தவறாகப் புரிந்துகொண்டிருக்கிறீர்கள். கண்டகண்ட ஜாதுநாத் ஸர்க்கார்களையும் கேஎஸ் லால்களையும் படிக்கவேண்டா! மாறாக – உண்மை விளம்பி அம்மணி ஆட்ரி ட்ருஷ்கி அவர்களையும் ரிச்சர்ட் ஈட்டன் அவர்களையும் சரணடையவும்.

   4. உண்மை. அப்படித்தான் எழுதியிருக்கிறேன். பிற்கால சேதுபதிகளையும், நகரத்தார்களையும், மடங்களையும் கூட இதில் சேர்த்திக்கொள்ளலாம்.

   5. இந்தப் பராக்கிரமங்களில் தற்போதைய பாகிஸ்தான், ஆஃப்கனிஸ்தான், கிழக்கு இரான், பங்க்ளாதேஷ், நேபாளம், வடகிழக்கு பாரதம் போன்றவற்றையும் சேர்த்திக்கொள்ளவேண்டும். இன்னொரு காரணமாக க்றிஸ்தவத்தையும் சேர்க்கலாம். (ஒரளவு முழுமையாக சித்திரத்தை விரிப்பதற்காக!)

   6. நானும்தான். :-(

 3. xxxx Says:

  காவி மதவெறி பாப்பான் .

  உங்கிட்ட உண்மையா கிடைக்கும் ?


  • …ஹ்ம்ம்? அலுப்புத்தான் வருகுதய்யா.

  • பொன்.முத்துக்குமார் Says:

   நீங்கதான் மதவெறியே தீண்டாத உன்னத ஆத்மாவாச்சே, அரிச்சந்திரனின் அவதாரமாச்சே உண்மையை உரக்கச்சொல்லவேண்டியதுதானே ?

   பேரையாவது ஒளிக்காம சொல்லியிருக்கலாம். அல்லது ஒருவேளை ட்ரிபிள் எக்ஸ்-க்கு பக்கத்துல இன்னொரு எக்ஸ் சேர்ந்திருக்கிறதுதான் உங்க உண்மைப்பெயரோ ?


   • ஐயா, நன்றி. ஆனால் தயை செய்து இம்மாதிரி விஷயங்களை லூஸ்ல வுடவும்.

    நானும் இம்மாதிரி வரும் சிலபலவற்றில் ஒன்றிரண்டை மட்டும்தான், இனம்புரியாத வெறுப்பின் எடுத்துக்காட்டுகளாக அனுமதித்திருக்கிறேன். அவ்வளவுதான்.

    இந்த மாக்களின் மேலாக செலவழிக்கும் சக்தியை வேறெங்காவது செலவழிக்கலாம். நானும் இனி இம்மாதிரி வசைபாடல்களை அனுமதிக்கப் போவதில்லை.

    அன்புடன்,

    ரா.

 4. dagalti Says:

  இந்த 1/2 டீயாவது வருமா? பொறையுடன் காத்திருக்கிறோம்


  • யோவ்! நீவிர் ஆடிட்ட கரிகாலரோ? அப்டீ ஆடிட் செய்கிறீர்?? (எல்லாம் வரும் நேரத்தில் வரும்!)


Leave a Reply to xxxx Cancel reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s