ஐயய்யோ! மணிரத்னம் ‘பொன்னியின் செல்வன்’ பிலிம் எடுக்கப்போகிறாராமே?

16/12/2019

உண்மையா?

உணர்ச்சி வசப்பட்டு உதட்டைக் கடித்துப் புருவங்களை நெறித்து நடனமாடவிட்டு, கணீர்க் குரலில் வசனங்களைக் கத்தி முழ நீளத்துக்குப் பேசி,  நடிகர் திலகம் சிவாஜி கணேசனாக  ஏற்கனவே நடித்து நொந்துபோயுள்ள அருள்மொழி ராஜகேசரி ராஜராஜ சோழனுக்கு, இப்படி இன்னுமொரு சோதனையா?

இந்தச் சோகத்தைக் கேட்பாரே இல்லையா? :-(

ஆண்டவனே! கமலகாசா!! இது என்னடாப்பா ரோதனே! ஏதோ மய்யமா தானேப்பா போய்க்கொண்டிருந்தோம் என ஆதூரமாக நமக்கு நாமே தனித்துவமாகச் சொல்லி அறிவுரைத்து ஆகவே வருத்தத்துடன் சிரித்துக்கொண்டிருக்கிறோம்?

இந்தத் தொடர்ந்த நூட்ல்ஸ் வரலாற்று நொந்தாலஜியின் நீட்சியாக, யிந்தே ‘பொன்னியின் செல்வன்’ பாபா யென்னே யெப்டீ  யெந்த சமயத்லே என்ட்ரி குட்த்து வர்வேன்னு  யென்க்குத் தெர்யாது ஆனா, ஹ்ஹ, ஆண்டெவெனுக்குத் தான் தெர்யும்னு, அனேக பிலிம் ட்ரெய்லர் ரெயில் வெண்டிகள் பார்த்த நாம் அறியமாட்டோமா?

இருந்தாலும் இது ற்றொம்பவே ஷாக்கிங், என்ன செய்ய… :-(

யில்ல, அது உண்மை யில்ல” என அரையிருட்டில் உணர்ச்சிபூர்வமாகவும் மட்டுறுத்தப்பட்ட குரலிலும் கிசுகிசுப்புக் கரகரப்பாக மூச்சை மைக்கில் விட்டுக்கொண்டு, ஐந்து நிமிடங்களுக்கு ஒருமுறை வகையறா ஃப்ரீக்வென்ஸியில் யாராவது சொல்லமாட்டீர்களா? ப்ளீஸ்??

அல்லது “மாட்டேன், சொல்ல மாட்டேன்” என்பீர்களா? (பின்புல இசையாக,  வேய்ங்குழலில் ஒரு உச்சஸ்தாயி சோகக் குக்கூ)

இல்லை, “விடு, சனியன விடு” என அறிவுரை கொடுப்பீர்களா?

-0-0-0-0-

எது எப்படியோ, பொதுயுகம் 1000-ம் ஆண்டு வாக்கில்,  நம் ராஜராஜசோழன், மகாமகோ மணிரத்னம் தயவில் தஞ்சையில் உட்கார்ந்து ஆண்டுகொண்டிருந்தபோது…

…அதே சமயத்தில் இஸ்லாமிய ஜிஹாதிவெறி கஜினி மொஹம்மதுகள் வடமேற்கு பாரதத்தை ரத்தக்காடாகவும், கோவில்களைச் சிதிலங்களாகவும் ஆக்கி, முத்துகாமிக்ஸ் அகொதீக போலச் செயல்பட்டுக் கொண்டிருந்ததையெல்லாம்…

…வரலாற்றுரீதியான  ‘மேட்ச் கட்’  யுத்தியை வைத்து நம் தமிழ்த்திரைப்படக் கோமாளிக்காப்பிக் கோமகன்கள் காண்பிக்காமல் இருந்தால் சரி.

ஏனெனில், மறுபடியும் மணிரத்னம் வீட்டில் வெடிகுண்டு போடுவோம் என அன்பான அறிவுரைகள் வரலாம். தேவையா?

-0-0-0-0-

எது எப்படியோ… தாய்லாந்தில் ‘லொக்கேஷனில்’ தஞ்சாவூர்ச்சோழர்கள் பற்றிய படமெடுக்க வாழ்த்துகள்.

இப்போது… மணிரத்னத்துக்கு, சில பரிந்துரைகள் – அதாவது யார்யார் எந்தெந்தப் பாத்திரத்துக்கு நம்பிக்கையானவர் எனச் சில அனுமானங்கள்…

ஆழ்வார்க்கடியானாக கமலகாசனார் (+ பல  மிகமுக்கியமான குணசித்திர மாறுவேடங்களிலும் அவர் வழக்கம்போல தனித்துவமாக அவரே கீழ்கண்ட சகலபொருட்களாகவும் இன்னபிறவாகவும் அதிஅற்புதமாக, அதாவது: காவிரி/பொன்னித்தாய், கலங்கரை விளக்கம், படகு, துடுப்பு, வந்தியத்தேவனின் ரோஷக்கார குதிரை, நந்தினியின் பிச்சுவா, உத்தமவில்லச் சோழன், கல்லணை, வீரநாராயணபுரம் ஏரி, தஞ்சைப் பெரியகோவில், அதன் நந்தி, வானதிக்கு அவ்வப்போது வரும் மயக்கம், கால்கோள்விழா, உக்கிராண அறையின் தரையில் மல்லாந்துபடுத்து ஆனந்தமாக நெளியும் கரப்பான்பூச்சி இன்னபிற… இதற்காகவெல்லாம் மேக்கப் போட, பிரத்யேகமாக மங்கோலியாவிலிருந்து ஒப்பனை வல்லுநரி ஒருவரைக் கூப்பிட்டு, அவரும் வசியப்பட்டு உடனடியாக வொலகநாயகனின் முப்பத்தைந்தாவது தோழியாகப் போர்க்காலரீதியில் இணைந்து… மச்சமுண்டு மய்யமில்லை மனமே…)

…துடிப்புள்ள வெந்தியத்தேவனாக ரஜினி; அருள்மொழியாக ஆண்வேட எதிர்ஸ்த்ரீ பார்ட்டில்  திராவிடர்கழக வழக்குரைஞரி அருள்மொழி;  நந்தினியாக கர்நாடக பால்வளர்ச்சிக் கழகம்; வீரபாண்டியனாக சுப.வீரபாண்டியன்.

அநிருத்தப் பிரம்மராயராக ஜெயமோகன், பெரிய பழுவேட்டரையராக எஸ்ராமகிருஷ்ணன், சின்ன பழுவேட்டரையராக பாரா உஷார்.

வானதியாக, பஞ்சாபிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட, “டமிள் எண்க்கும் ற்றொம்ப புட்க்யும், ணள்ளா வறும்” கோதுமை ஹல்வா 45கிலோ.

குந்தவையாக, பிடிவாதமாக நின்றுகொண்டே கோஷ்டம் போட்டுக் கொண்டிருக்கும் அதாவது குந்த வைக்கவே முடியாத அதிதீவிர ‘அனைத்து ஆண்குறிகளையும் அறச்சீற்றத்துடன் அறுப்போம்’ வகை பெண்ணியக்காரர் யாராவது.

பூங்குழலியாக, நமீதா அவர்கள்.

… அருள்மொழியை பூங்குழலி படகில் அழைத்துச் செல்லும்போது –  இங்கு ஒரு பாடல், திரைகடலில் பௌர்ணமி இரவுச் சந்திரனின் விகசிப்பில்… (வேண்டாம், நிலாஅதுவானத்துமேலே2.0 வேண்டாம்!)

அனைத்து ரசிகக் குண்டிகளையும் ஏகோபித்து உறையவைக்கும் க்றீச்சிடலுடன் உச்சஸ்தாயியில் ஏஆர் ரகுமான், அவருடைய தொட்டிற்பழக்க வழக்கம் போலவே மொராக்கொ, ஜெர்மனி போன்ற பிராந்தியங்களிலிருந்து அபரிமிதமாகவும் கமுக்கமாகவும் சுட்ட இசையில்… பழநிபாரதி திருச்செந்தூர்பாரதிதாசன் திருத்தணிசுரதாதாசன் டயமண்டூகதாசன் என எந்த ஞானக்களஞ்சியமாவது எழுதிய பாடலில்…

பூங்குழலீ பூஊஊங்குழலீஈஈஈஈ

துட்ப்பே போடும் பூங்குழலீ வொன்

இட்ப்பே கிள்ளவா?

கட்ப்பே ஏத்தாதே யேன் மச்சான் வொன்

உட்ப்பே கள்ட்டவா!

இந்த ஸீனில் துடுப்பாக இளமைத் துடுக்குடன் நடிப்பவரும் கமலகாசனாரே என்பதைக் கருத்தில் கொண்டால், துடுப்பாக அவர் சுழன்றுசுழன்று கடலில் பல்ட்டி அடிப்பதையும் மய்யக்காரர்களுக்கு புல்லரிப்பதற்காகக் காட்டலாம்.

…மய்யத்துக்கு செமய்யாக ஒரு கட்சிக் கொள்கைப்பாட்டும் ரெடி!

“நான் துடுப்பு போட்டால்,

படகு, நகர்ந்துவிட்டால்

இந்த ஏழைகள் பிலிம்களைப் பார்த்திருப்பர்…”

விடலை ரசிகர்கள் நிரம்பிய தமிழ்த் திரைப்படவுலகில் இது ஸூப்பர்ஹிட்டாக, அடியேன் கேரண்டி.

-0-0-0-0-0-

சேந்தன்அமுதனாக பேந்தப்பேந்த விழிக்க இருக்கவே இருக்கிறார் சாருநிவேதிதா. கீழக்கரைச் சதுப்புநிலக்காடுகளின் கொள்ளிவாய்ப் பிசாசாக, ஏகத்தும் நடித்த முன்னனுபவம் இருக்கும் முகஸ்டாலின்.

போர்கள் நடக்கும்போதெல்லாம் படுபீதியளிக்கும் பின்புல இசைக்காக வெண்முரசு, அத்தியாயம்அத்தியாயமாக புத்தகம்புத்தகமாகக் கொட்டியெடுத்தல்.

கஜினி மொஹம்மத் கண்ணை உருட்டியுருட்டி வில்ல வேடத்தில் (சமகால வரலாற்றுரீதி ‘மேட்ச் கட்’ இருந்தால்)  இயல்பாக வாழ்க்கையில் நடிக்கும் ‘த ஒன் அண்ட் ஒன்லி’ ப்ரகாஷ்ராஜ்.

‘பொன்னியின் செல்வன்’ போன்ற உன்னத வரலாற்றுக் காவியங்களைத் திரைப்படமாக்கலில் ஏற்படக்கூடும் பிரச்சினைகளை, ஒரிஜினல் கதைக்கும் திரைக்கதையாக்கத்துக்கும் வழக்கப்போலச் சம்பந்தமேயில்லாமல் — அரசவை விதூஷக பிட்ரோலில் ‘மன்னா, வேந்தே!’ கௌரவ நடிகராக ராஹுல்காந்தி அறிமுகம் செய்யப்பட்டால்,  அவரும் அவர் வழக்கம்போலவே மதச்சார்போ மூளைச்சார்போ இல்லாமல் இயல்பாக இருந்து உளறிக்கொட்டி ஆசிர்வதித்து — அவற்றை நீக்கலாம்.

அக்மார்க், ஒரிஜினல் நகைச்சுவைக்காக வடிவேலு விவேக் எனப் போகவேண்டாம். அகழ்வாராய்ச்சியாள அமர்நாத் ராமகிருஷ்ணா, தகவல்தொழில்நுட்ப வரலாற்றுவல்லுநர் ஐஏஎஸ் உதயசந்திரன், கம்யூனிஸ்ட் அருணன், போராளி உதயகுமார்/பியூஷ்மனுஷ், 1000 கோடிக்கணக்கில் ஊழல் முதல் 4500 வருட ஒலைச்சுவடி/கல்வெட்டு வரை புகுந்து விளையாடும் ஆ.இராசா போன்றவர்களை இயல்பாகப் பேசவிட்டால் போதும்; தண்டக்கருமாந்திரங்கள், அமர்க்களப்படுத்தியெடுத்து விடுவார்கள்.

நன்றி.

–00–

தமிழக வரலாற்றிலேயே மிக முக்கியம் வாய்ந்த திரைப்படத் திறனாய்வுக் கட்டுரையாகத் திகழப்போகும் இந்த அளப்பரிய ஆய்வுக்கு  ‘உதவி’யாக இருந்த விஷயங்கள்:

15 Responses to “ஐயய்யோ! மணிரத்னம் ‘பொன்னியின் செல்வன்’ பிலிம் எடுக்கப்போகிறாராமே?”

 1. mugamoodi Says:

  ஊரே பற்றி எரிகிறது

 2. mugamoodi Says:

  குடியுரிமைச் சட்டத் திருத்தம் குறித்து கருத்து? இந்துத்துவ பார்ப்பன ஆதிக்கம் பற்றிக் கவலையே இல்லையா? எதுவுமே இல்லையா?


  • கருத்துகள் இருக்கலாம், முட்டியடி எதிர்வினைகளில் எனக்கு அவ்வளவு நம்பிக்கை இல்லை. நீங்கள் பதிவுக்குத் தொடர்பாக ஏதாவது சொல்லவேண்டுமென்றால் பின்னூட்டங்களிடலாம் – பிற உளறல்களுக்கு மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளலாம்.

   மற்றபடி நீங்கள் வேண்டுமளவு குடித்து போதையில் தள்ளாடி உளறிக்கொட்டக் குடியுரிமை இருக்கிறது. ஜமாய்க்கவும்.

  • A. Seshagiri Says:

   முகமூடிக்கு சமர்ப்பணம் (பொறுமையாக முழுவதையும் பார்க்கவும்)

 3. K.Muthuramskrishnan Says:

  சார் எனக்கு ஒரு ரோல் வாங்கிக் கொடுங்கள்

 4. mugamoodi Says:

  Patchirajan Ananthakrishnan is supporting
  the protests against CAB.
  So what is your stance?

  You will support Modi though he is a
  fascist? Sorry to say you have lost balance.


  • Sir, mask, somehow, I ‘d like to suspect that you represent a mosque – but I know for a fact that you are but only a deracinated flotsam, that too a diseased one from the distant comforts(!) of the USA. A two-bit lumpen at best – neither useful to USA nor to India – probably not even to your hapless family.

   So what if that gent PAK supports the opposition to a govt decision; okay fine, yes, he has the same kudiyurimai that I had mentioned  in your context earlier.  But, why do I need to even care?

   And you want me to oppose him supporting those lousy lumpen idiots (who haven’t obviously bothered to understand the whole context, documents etc), supposedly students, opposing the gov decision to handle & oppose the feedstock of breakingindia forces? Or you want me to support him? It is all bloody confusing, you see.

   And sorry, in any case PAK is no gold-standard of mine.

   Incidentally, he writes his full name as Pakshirajan etc, NOT Patchirajan. Am happy that you did not write Pattinirajan. Thanks! You can’t even bloody get a name right and here you are commenting on things that are like totally out of depth for you. Scum.

   This PAK, except when he gives a tough fight (with evidence) against your DMK/DK goons’ idiocies – is mostly opinionated and operates from a semi-literate (without evidence) perspective. To be on record, once I have been forced to take his ideas to the cleaners when he ‘liberal’ly built up a socialist anti-imperialist theory around that scumbag Tipu. Though he continues to peddle such illustrious nonsense, I do not want to do those kinds of debunking etc again, so do not taunt me. Anyway, I am tired of these thingies and all these sparring take a toll on my life force. Let him continue to over generalize based on a sample size of one or even less.

   But stupid & lazy guys like you ‘mugamoodi’ should remember that, what PAK says should be understood in terms of monkey-balancing. IMO, when he thinks he has castigated the assorted Dravida illiterates too much, as a way of say chomskian self-censorship, he also gratuitously vilifies the hindutva ghost, sabre rattles and whips brahmins or whoever. (of course, as I keep saying – if only there were no possibilities of LIKES in Socmedia, these guys would behave in a much saner way, mebbe)

   This, IMO, to show to the world that he is ‘balanced’ and so all those kazhai-k-koothadi acts ensue. (he may have changed these daya, dunno, they were all perhaps momentary lapses of reason, I dunno again –  but am too tired to keep track of him though I get screenshots of his bursts of ‘balance’ off and on, thanks to stupid jokers who do not have anything better to do in their mater-copulating lives)

   But I have never said I have BALANCE. I am NOT unbiased. I am always biased  – that is, in favor of truth and evidence based critical thinking. And, I do not mind course-correcting myself based on emergent evidence. In any case, I do NOT care about critters like you. However, YMMV.

   And yes. You may think Modi is a fascist. It is your kudiyurimai as explained earlier.

   I have had enough with useless fellows like you, so please go back to whichever hell-hole that you came from.

   At least try to earn a honest living, for a change.

   ’nuff said.

   END

 5. mugamoodi Says:

  So, you are calling Pak a monkey?


  • Read my response again. Did I? (this proves that you are scum and given to the liberal habit of twisting everything)

   Again, I have respect for our simian brethren. I would not indulge in rubbishing monkeys. Thanks.

 6. nparamasivam1951 Says:

  என்ன இது, பொன்னியின் செல்வன் பற்றி கருத்து கேட்டால், குடியுரிமை, தொப்பி என பாதை மாறுகிறது. இது கலகிக்கு / மணிக்கு செய்யும் அபசாரம். (ஆனாலும் இங்கு உள்ள இஸ்லாமியருக்கு ஒரு பாதிப்பும் இல்லை என்றாலும் பொது சொத்துக்களை அவர்கள் பாழ்படுத்துவது தவறு)


  • ஹ்ம்ம். நீங்கள் சொல்வது சரிதான். நானும் இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன்.

   Sometimes, old farts could be unreasonable & nauseating – especially when they belong to the liberal-left part of hell – more so when they meaninglessly support jihadi-abrahamic parts of hell.

 7. vijay Says:

  // உணர்ச்சி வசப்பட்டு உதட்டைக் கடித்துப் புருவங்களை நெறித்து நடனமாடவிட்டு, கணீர்க் குரலில் வசனங்களைக் கத்தி முழ நீளத்துக்குப் பேசி, நடிகர் திலகம் சிவாஜி கணேசனாக ஏற்கனவே நடித்து நொந்துபோயுள்ள அருள்மொழி ராஜகேசரி ராஜராஜ சோழனுக்கு,// பாவம்,இராசராசன்.


Leave a Reply to வெ. ராமசாமி Cancel reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s