டயமண்டூகம் Vs ஸிக்மண்டூகம்: ஸப்பாஷ், ஸர்யான போட்டீ!

21/12/2019

பெரிதாக எழுத அவகாசமில்லாமல் இருந்தாலும், சிறு குபீர்ஜோக் ஒன்றைப் பகிர்ந்துகொள்வதில் புல்லரித்துக் கொள்பவனே நான்தான்!

#தவளைக்குறிப்புகள்

ஜோக்:

நான்கு குறிப்புகள்

#ஒன்று:  சிலகாலம் முன்னர், கவிஞ்ஜர் என அநியாயத்துக்குத் தொடர்ந்து கொடுங்குற்றம் சாட்டப்படும் பாவப்பட்ட வைரமுத்து,  ஆண்டாள் பற்றி எத்தையோ வாய்க்குவந்தாற்போல லிபரல்-ஸெக்யூலர்தனமாக உளறிக்கொட்டி, பாவம் திண்டாடிவிட்டார். ஆனால், அவர் ஒரு தொழில்முறைக் கோமாளி. அவருடைய ஸவுண்ட்வுடுதல் என்பது டயமண்டூகத்தின் தவளைக் கூச்சல், அவர் கூலிக்கு மாரடிக்கும் போங்காட்டத் தொழிலில் இருப்பவர் பாவம், ஆகவே விட்டுவிடலாம். (எப்படியும், ஏகத்துக்கும் அவரைப் புரட்டி எடுத்துவிட்டார்கள் என்பதென் நினைவு + மேலும் #மீடூ விவகாரங்களில் மாட்டிக்கொண்டதால், தன்னுடைய முன்பக்க வாலையும்  சுருட்டிக் கோமணத்துக்குள் அடக்கிக்கொண்டு விட்டார் எனவும், எல்லாம் நல்லதற்கே!)

#இரண்டு: ஆனால், காலாவதியாகிப்போய், ஸிக்மண்ட் ஃப்ராய்ட் அவர்களுடைய ஒவ்வொரு கோட்பாடும் தரவுகளுடன் கேள்விகேட்கப்பட்டுத் தூக்கியெறியப் பட்டாலும், இன்னமும் கலவிமுதல்வாதம் வழியாகவே உலகத்தின் அனைத்து விஷயங்களையும் புரிந்துகொள்ள முயல்பவர்களும் இருக்கிறார்கள்.

“நீ நிற்பதே ஆண்குறி நிற்பது போன்றதுதான்!”  ”

“கிழிந்த உடையைத் தைப்பதும் காமத்தின் வெளிப்பாடே – ஊசியின் காதில் நூலை நுழைப்பதிலிருந்து இது ஆரம்பிக்கிறதன்றோ?”

“மானுடர்கள் உணவை உண்ண வாயைத் திறப்பது அதற்குள் உணவை அளிப்பது போன்றவை ஆண்-பெண் கலவியின் குறியீடுகளே!”

“வீட்டு வாசல் என்பதே யோனி; பூட்டின் சாவி ஆண்குறியின் குறியீடே!”

(சுயமைதுன ஸ்னாப்-ஃபிட் இன்பம் காணவிழையும் ஆர்ஜே45 ஸாக்கெட்டும் கனெக்டரும்; ஆனால் நீளம் போதாது போலிருக்கே, என்ன செய்ய!)

“ஆர்ஜே45 கனெக்டரைப் பார்த்தான் உங்களுக்கு என்ன நினைவு வருகிறது?”

… …

வடைஅமெரிக்க அறிவுஜீவி அன்பர் அரவிந்தன் கண்ணையனார், திடீரென்று இப்போது கண்டுபிடித்துச் சொல்வதைப் போலவே, எனக்குத் தெரிந்து முப்பது முப்பத்தைந்து வருடங்களுக்கு முன்பே தமிழில் பெருஞ்சிந்தனையாளர்கள் சிந்தித்துத் தீர்த்துவிட்டார்கள் (அதுவும், சாட்சாத் அதே ஆண்டாளைக் கட்டுடைத்தே!) என்பதை நம்மில் பலர் (ஆனானப்பட்ட அந்த வடைஅமெரிக்கர் உட்பட!) அறியவில்லை என்பதை நம்மில் எவ்ளோ பேர் அறிந்திருக்கிறோம்?

என் மங்கல் நினைவுகளில், நாகார்ஜுனன் / தமிழவன் / க.பூரணசந்திரன் போன்றவர்கள் இப்படியெல்லாம் மாற்றி ரோசிச்சிருக்கிறார்கள் – அமைப்பியல் பின்நவீனத்துவம் பின்னமைப்பியல் குண்டியியல் ஆண்குறியீட்டியல் எனப் பலவாறாகவும் ஃப்ராய்ட் யூங் லக்கான் தெர்ரிதா க்ராம்ஷி (X நகரஹி) என்று கலந்தடித்துக் கதம்பச்சோற்றையும்  (பாவம், அந்தக் காலத்தில் நம்மூர் பெயருதிர்ப்புக் குசுவாளர்களிடையே ஸ்லாவொய் ழீழிக் அல்லது ஸைஸெக் புழக்கத்தில் இருந்திருக்கவில்லை, சோகம்!)  —  சிலசமயங்களில் எல்லாவற்றிற்கும் பின்னாலும் இருப்பது காமமோ அல்லது வன்முறையோதான் என்கிற ரீதியில் எல்லாம், மானாவாரியாக எழுதிப் பரிமாறியிருக்கின்றனர். (எல்லாம் அதே பின்னடித்த அரைகுறை ‘தனிச் சுற்றுக்கு மட்டும்’ சிற்றிதழெழவுகளில் தான்!)

ஒருசமயம், இதனைப் பொறுக்கமுடியாமல், நானும் (அதேபோல ஒரு பின்னடித்த ‘நன்கொடை ரூபா பத்து மட்டும்’) பத்திரிகையில் (தமிழவன் அவர்களைக் கிண்டலடித்து என நினைவு)  ஸிக்மண்ட் ஃப்ராய்டின் அடிப்பொடிகள் தமிழகத்தில் ஸிக்மண்டூகங்கள் எனத்தான் கருதப்படமுடியும்’ என்கிற ரீதியில் எழுதியிருந்தேன்.

-0-0-0-0-

தற்போது தூசிதட்டி ‘பாலியல் ரீதியாக இலக்கியத் திறனாய்வை அணுகும்’  இரண்டாம் தலைமுறை ஸிக்மண்டூகங்கள் கிளம்பி கொர் டர் புர் எனக் காட்டுக்கூச்சலிட ஆரம்பித்துவிட்டன போலும், என்ன செய்ய!

பிரச்சினை என்னவென்றால், ஸிக்மண்டூகங்கள் – பாரதத்திலும் இந்தப் பாலியல் உடலுறவு – அவை சார்ந்த விகசிப்புகள் ஒடுக்கப்பட்டு வந்துள்ளதாக நினைக்கின்றன. இப்படி மறுதலிக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட உணர்வுகள் பிறவழிகளில் பிற்காலங்களில் சமனம் செய்யப்படுவதாகவும் பினாத்துகின்றன. இட்  ஈகொ ஸுப்பர்ஈகொ, பீனிஸ் என்வி, ஈடிபஸ் காம்ப்ளெக்ஸ், எலக்ட்ரா காம்ப்ளக்ஸ் என உருகுகின்றன.

உண்மை என்னவென்றால், விக்டோரிய ஒழுக்கவியல்வாதங்களுக்கும் அப்ரஹாமிய ‘முதற் பாவம்’ ஒரிஜினல் ஸின் போன்ற கருத்துவாதங்களுக்கும் – பாரதப் பாரம்பரியங்களுக்கும் ஒரு மசுத்துக்கும் தொடர்பே இருந்திருக்கவில்லை. பாரதத்தில் ஆண்-பெண் சேர்க்கை தொடர்பான உடற்கூறுகள் குறித்த குற்றவுணர்ச்சிகளோ, உயிரியல்ரீதியான உந்துதலுக்கு, அழகான விகசிக்கவைக்கும் காமத்துக்கு எதிர்ப்புணர்ச்சிகளோ இருந்ததில்லை.

இங்கு, ஆதாமேவாள் தர ‘ஸெக்ஸ் என்பதே பாவம்’ எனும் அப்ரஹாமிய கழிசடைத்தனம் இல்லை; பாலுறவு என்பது கண்டிக்கத்தக்கதாகவோ தண்டிக்கத்தக்கதாகவோ இருந்திருக்கவில்லை; கடவுளர்கள் மானுடரூபங்களில் வழிபடப்பட்டு, அவர்களும் நிர்வாண நிலையிலும் உருவகிக்கப்பட்டிருக்கின்றனர் – இந்த இயல்பான நிலையானது, பாரதத்தில் ‘பாவத்தின் சம்பளம் மரணம்’ எனப் பார்க்கப் படவில்லை; ஏனெனில் பாரதத்தில் காமம் என்பதும் உயிரிகளின் இயல்பு எனத்தான் ஒத்திசைந்து ஒப்புக்கொள்ளப்பட்டிருக்கிறது. (இஸ்லாம், க்றிஸ்தவத் திரிபுகள் வந்தபின் இவையெங்கு இருக்கின்றன என்பது வேறு விஷயம்)

தற்காலத்தில் தமிழிலோ ஸம்ஸ்க்ருதத்திலோ மூலநூல்களைப் படிக்கும், அவற்றை அறிந்துகொள்ளும்  வகைத் திறமையோ, சிரத்தையோ இல்லாத காரணத்தால் – ஆங்கிலத்தில் யோசித்து எழுதும் வெண்டி டொனிகர், ஆட்ரீ ட்ருஷ்கி போன்ற ‘ஃப்ராய்டிய வழிமுறைகளில்’ பாரதப் பாரம்பரியங்களை அணுகும் மண்வெட்டிகள் மட்டுமேதான் இந்த ஸிக்மண்டூககங்களுக்கு உதவுகின்றன. அவற்றையே வேதவாக்காகக் கருதி, ஸிக்மண்டுக்கள் அவற்றிலும் ஒன்றிரண்டு புத்தகங்களை மட்டும் படித்துவிட்டு தபக் ஜிபக் என அப்படியொரு குதியாட்டம் போடுகின்றன.

ஆகவேதான் – அவ்வப்போது – புதிதாக ஏதோ சிந்திக்கிறேன், மாற்றி ரோசிக்கிறேன் எனப் புதிதாகப் சிலபல அரதப்பழைய விஷயங்களை அறிந்துகொள்ளும் அரைகுறைகளுக்கு விமோசனமேயில்லை; நமக்கும்தான், என்ன செய்ய!

(நானும் கடந்த 40 ஆண்டுகளாக இம்மாதிரி சரித்திரச் சக்கரங்களின் மாளா சுழற்சிகளைப் பார்க்கிறேன், சோகம்! ஒவ்வொரு சிலஆண்டுகளுக்கு ஒருமுறையும் ஹெகல், மார்க்ஸ், ஃப்ராய்ட் எனப் புதிதாகப் படித்துவிட்டு, எதைக் கண்டாலும் வர்க்கம், மூலம், பாலுறவு,  காமம், கொலைவெறி, புர்ச்சி, பூர்ஷ்வா, ஃபாஸ்ஷிஸ்ம், இம்பீரியலிஸ்ம், டயலெக்டிகல் மெட்டீரியலிஸ்ம்,  எனக் கண்டமேனிக்கும் உருகிவழியும் புத்துருக்குப் புத்தம்புது மலங்குமலங்கேஸ்வர இளம் அறிவுஜீவிகளைக் கண்டாலே அலர்ஜியாகி விடுகிறது!)

இவையெல்லாம் ஒருபுறமிருக்க…

ஸிக்மண்டூகங்கள் இப்படிக் கேள்வி கேட்பதற்கும், பொதுவாக அவற்றுக்கு இருக்கும் சிந்தனைப்போக்குகளையும் அணுகுமுறைகளையும் ஸிக்மண்டு ஃப்ராய்ட் பூர்வமாக, நாமும் அணுக்கமாக அணுகலாம்.

அதாவது, நாமும் இந்த ஃப்ராய்டிய மனோதத்துப்பித்துவத் திறனாய்வு, மண்ணாங்கட்டி, தெருப்புழுதி எனச் செய்தால் – இப்படியெல்லாம் ஸிக்மண்டூகங்களை பதில்கேள்வி கேட்கலாம்…

ஸிக்மண்டூகம் சிறுவயதில் தன் தாயாரைக் காமப்பார்வை பார்த்ததின் எச்சம்தான் இப்படி ஆண்டாளைக் கேட்கவைக்கிறதோ?

ஸிக்மண்டூகம், தன்னுடைய தாய்க்காமம் குறித்த குற்றவுணர்ச்சியால்தான், தன் தாய்நாட்டை மறுதலித்து வடைஅமெரிக்கனானதோ?

ஸிக்மண்டூகம், சிறுவயதில் தன் கண்டிப்புக்காரத் தந்தையால் ஓடுக்கப்பட்டதால்தான் இப்படி இந்த வயசான காலத்தில் வீரிட்டெழும்பி நேரு ஸோஷலிஸ்ம் என – ஆனால் முரணியக்கத்தில் முரண்டுபிடித்துக்கொண்டு கேபிடலிஸத்தில் சொகுசாக உட்கார்ந்துகொண்டு கூவுகிறதோ?

ஸிக்மண்டூகம் தனது தந்தையை, தன்னுடைய தாய்மீதான காமத்துக்கு ஒரு போட்டியாளராகக் கருதியதால்தான் தந்தையின் போற்றுதற்குரிய தொழிலில் இறங்காமல், ஒரு சுக்குக்கும் உதவாத தகவல்தொழில் நுட்பத் தண்டத்துறையைச் சரணடைந்ததோ?

… …

‘காமத்தில் இதெல்லாம் காமனப்பா’ என இப்படியே அரைகுறை ஃப்ராய்டியக் கேள்விகளை இடக்காகக் கேட்டுக்கொண்டே இருக்கலாம் – இதற்கெல்லாம் முடிவே இருக்காது. ஆனால், நான் ஒன்றும் அரைவிந்தன் (கண்)^2ன் அல்லனே!

ஆகவே.

#மூன்று:  தவளைகள் என ஞானக்கூத்தன் எழுதிய கவிதை வரிகள் நினைவுக்கு வருகின்றன.

தவளையின் கூச்சல் கேட்டுத்
தமிழ்க்கூச்சல் என்றான் கம்பன்
ஆயிரம் வருஷம் போச்சு
போயிற்றா தவளைக் கூச்சல்

திரும்பிவிடக் காலெடுத்து வைத்தபோது
தோள்மீது ஒரு குதிப்பு தள்ளப்பட்டேன்
கிசுகிசுத்துப் பலபேர்கள் சூழ்ந்து கொண்டார்
என்றெண்ணி நான் பார்த்தேன் தவளைக்கூட்டம்

ஒவ்வொன்றும் ஆளுயரம் முன்கால் தூக்கிப்
பின்காலில் நின்றிருக்கும் வயிறு மூட்டை
ஒவ்வொன்றும் விரகத்தால் என்னைத் தீண்டி
முத்தமிடக் கூச்சலிட்டு ஓடப்பார்த்தேன்

ஒருதவளை பாடிற்று. ஒன்றென் தோளைத்
தட்டிற்று. மற்றொன்று ஆடை நீக்கி
அதிசயமாய்த் தேடிற்று. கூச்சலிட்டேன்

ஐயய்யோ! இங்கும் அதே ஸிக்மண்டூகமா? விரகமா கமகமா? :-( டயமண்டூகமும் ஸிக்மண்டூகமும் ரவுண்ட் கட்டிக்கொண்டு அடிக்கின்றனவே! ஐயகோ!

இணையத்தில், இதன் முழு வடிவம் கிடைக்கிறது:  https://www.gnanakoothan.com/2006/07/30/%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/

#நான்கு: அரிஸ்டொஃபனீஸ் அவர்களின் 2400 வருடங்களுக்கு முந்தைய ‘தவளைகள்’ நாடகம் நினைவுக்கு வருகிறது. இது அற்புதனமான பகடி.

படிக்க: https://ia802703.us.archive.org/19/items/frogstranslatedi00arisuoft/frogstranslatedi00arisuoft_bw.pdf

கேட்க: https://librivox.org/search?title=The+Frogs&author=ARISTOPHANES&reader=&keywords=&genre_id=0&status=all&project_type=either&recorded_language=&sort_order=catalog_date&search_page=1&search_form=advanced

இதனை இன்றிரவு வாசித்தால்தான்,  வெறுத்துப்போய் இந்த ஸிக்மண்டூகத்தின் விட்டேற்றி ஆண்டாள்-ஃப்ராய்ட் பற்றிய கருத்தைக் குறித்து எழுதியிருக்கும் இந்தக் காட்டுரையில்போய் இவ்வளவு நேரம் செலவழித்ததற்கு, எனக்கு விமோசனம்.

 

19 Responses to “டயமண்டூகம் Vs ஸிக்மண்டூகம்: ஸப்பாஷ், ஸர்யான போட்டீ!”

 1. Sivaaa Says:

  இது தான் பிஏகே விற்கும் இந்த மண்டூகங்களுக்கும் உள்ள வேறுபாடு. பிஏகே மார்க்சியராக இருந்தாலும் நம் கலாச்சாரத்தில் வேரூன்றியவர்.


  • ஐயா, உங்கள் கருத்தும் நல்லெண்ணமும் புரியாமலில்லை; அரவிந்தன் கண்ணையனும் ஒரு நல்லெண்ண விடலைதான் என்பது என் நல்லெண்ணம், பாவம்.

   பெரியவர் பிஏகே கலாச்சாரத்தில் வேரூன்றியிருக்கலாம் எனும் சாத்தியக்கூறு இருக்கிறது என்பதும் உங்கள் நல்லெண்ணத்தின் வெளிப்பாடு. ஆனால், அவர் அட்ச்சிவுடுவதை அவ்வப்போது படிக்க நேர்வது நான் படும்பாடு.

   டி. ராஜேந்தர்.
   பின்குறிப்பு: ற்றொம்பத் துள்ளினால் சமயவேலின் கவிதைகளை உங்கள்மீது கடாசுவேன். ஆமென்.

 2. jasdiaz Says:

  I keep reading Sigmund Freud had been proved wrong etc. But how come he is still relevant? He and his psychoanalysis theory should have disappeared from history long back. Though I prefer Carl Roger’s Client-centred approach for psychological treatments, particularly REBT and its derivatives, I can’t help remembering Freud when I come across TV serials like “Crime Patrol” & “Saudhan India” (my wife is an ardent fan!) or all murder/assault/rape news in our daily newspapers. Finally, it appears almost everything finally originates from sex and Freud was right and we are trying to cover it up with our Victorian mentality (BTW did it really had any effect on Indians considering even during the peak of British Empire, there were hardly few thousand British in India leaving aside few battalions of British troops restricted to cantonments?).

  In my opinion, Aravindan has not said anything that is so horrible to invite your wrath. I read Andal’s poems when I was doing my graduation back in the late ’60s and I loved them. It was in our Tamil syllabus and secularists were not active then. Even now I remember her poems when I hear a few people going around singing them early December mornings.

  Can you recommend a good, sensible book that proves Freud was wrong?


  • Sir, as always, thanks for your considered, balanced views. Must admit, I do love Andal, AK’s hubris even. This is also because, I adore dealing with rebellious (+clueless) kids, especially adolescents.

   AK did not say anything horrible – but his ‘newbie enthu’ about Freud, am aFreud, irked me. When one reads Freud kinda guys for the first time, in any superficial depth, one cannot but see sexual acts represented everywhere. Like the proverbial nail at the end of our digits and the fantastically mean looking car – Hummer. Sorry. I was generally motorally speaking.

   …Likewise, in our India, anything good (if one has only read/internalized the eulogies of Chacha chachahchaah Nehru) is ascribable only to that gent. (or to the Mughals, as I have proven at such a scholarly depth: TEN contributions of Mughals to Bharat, I’d bet you wouldn’t know anything about – https://myvoice.opindia.com/2019/06/ten-contributions-of-mughals-to-bharat-id-bet-you-wouldnt-know-anything-about/ )

   Another thing that got me into a shock was that, AK was at pains to state that he was ‘serious’ – so the firangiland erudite Scholar needed a tasteless debunking by a Commoner pleb like me. Oh what to do.

   About Psychiatry/analysis: I have this considered opinion that, it is mostly bunkum; can give you refs of some good papers. (if you need them)

   Litereary Criticism itself is Voodoo and is a major running joke. If you layer it on Psychonanalysis – imagine as John Lennon said.

   I have no idea of the serials TV or otherwise, so am clueless/AravindanKannaiyan when it comes to this. (I think after I watched a couple of episodes of Junoon, some decades back, I died)

   Bharat has had the benefit of the colonials before the Brits – via AraboTurkic-Islamic jihadism; in fact, even the purdah (covering of the head/face that one associates with the north Indian womenfolk) system so widely prevalent is traceable to those colonials – but these can be dealt with later, may be.

   Why Freud is still being quoted: Many reasons.

   1. It is fashionable to quote him, when one wants to sound knowledgeable.

   2. It is a ‘liberal’ tendency. (If I say ‘robbing peter to pay paul’ I may sound like a rowdyish, but if I say ‘Nehruvian Socialism’ I sound liberal)

   3. Nostradamus is oh so famous. He is also quoted widely and wildly in the whatsapp scholarly circles. So is Freud in ‘learned’ circles.

   4. Every few years, some guy chances upon Freud and is bowled over; natural, because, if you had just read Marx for the first time when you are 16, imagine.

   5. If Freud had brown/black skin – he would have been consigned to the dustbins of twistory loooong back.

   6. There are waves of ignorance/avidya that periodically happen. More so with the Social Media. I am sure that, many followers of AK would have now been ‘bowled over’ by this angle of AK, and they will carry on their own torches of wisdom. And they in turn… … the cycles of blissful twistory would continue.

   7. Any talk about Sex titillates, rightly so thanks to Freud – so when one is afraid/queasy about directly talking Sex, one can always ‘refer’ to the experts/Freuds – and in their shadows, nurture our secret adolescentish fantasies.

   ’nuff blathered – gotta go cook now.

   Sir, Freud was not only wrong; he was also an outright liar and a fraud. I can give you many journal article refs to support this claim (um, actually a fact) – but just read this one book by Frederick Crews, please – Freud: Making of an illusion. It may help.

   Take care.

 3. K.Muthuramskrishnan Says:

  மார்கழி வந்தால் எனக்கு பொங்கல் ஞாபகம் வருகிறது சிலருக்கு ஆண்டாளின் கற்பு நினைவு க்கு வருகிறது


  • ஐயா, ஆண்டாளின் ‘கற்பு’ பற்றி இருக்கட்டும்.

   இந்த அரவேக்காட்டு அரவிந்தன்கண்ணையன் அவர்களின் பாரத வெற்பு தான் எனக்குப் பிடிபடமாட்டேனென்கிறது.

 4. nparamasivam1951 Says:

  ஆக,
  இரண்டாம் தலைமுறை ஸிக்மண்டூகம்=ஃப்ராய்ட். Equation 1
  ஃப்ராய்ட் = ஃப்ராட். Equation 2
  ஆக, நீங்கள் நிரூபித்தது,
  ஃப்ராட் = ஸிக்மண்டூகம்
  சப்பாஷ்.
  But, this one line is super – Preaching Nehruvian Socialism while enjoying Capitalism.
  Simply super.


  • அதேபோலத்தான் பெரியவர் பிஏகே அவர்களின் ‘கிராமப்புறப் பாட்டாளி வர்க்கத்தின்’ திரண்டெழுதல் குறித்த அரைகூவலும், அவருடைய சொந்தவாழ்க்கையில் அவர் முதலாளித்துவ முதலீடுகள் செய்துள்ள லட்சணமும். விரிசல்கள் மட்டுமே நிரம்பியவர்கள், நம் இடதுsorry லிபரல்கள்.


 5. இதுவரை யாருமே என்னுடைய க்ராம்ஷி (X நகரஹி) நகைச்சுவை(!)யைப் புரிந்துகொள்ளவில்லையே என்பதை நினைத்தால், நெஞ்சு பொறுக்கியில்லையே… (சிவாஜிகணேசனின் சிம்மக்குரலில்) :-(

 6. Ganapathi subramanian Krishnamurthy Says:

  Sir,
  I just read the article now. While reading I did enjoy the Gram She X Nagara He… Sorry I was a bit late in reading.. commenting.
  Ganapathi Subramanian

 7. Siva Says:

  கோதை பிறந்த ஊர் கோவிந்தன் வாழும் ஊரில் பிறந்த எனக்கு இந்த கழிசடைகளின் திமிரெடுத்த உளறல்களையும் சகிக்க வேண்டியிருக்கிறது.

  “so am clueless/AravindanKannaiyan”, super!

  Two unrelated questions 1) who according to you is a decent Tamil actor? (I understand it is not Sivaji :)
  2) பெரியகுளத்துக்காரரான நீங்கள் ஏன் மதுரை / தென் மாவட்ட மொழியில் அப்பப்ப எழுதுறதில்ல? Your other regional bashais including madras bashai semma!


  • ஐயா நன்றி.

   1. நான் கொஞ்சம் பழைய பஞ்சாங்கம். தற்காலத் தற்குறித் திரைப்படங்களைக் குறித்த அறியாமைதான் அதிகம். நீங்கள் கேட்டவுடன் டபக்கென்று முன்வந்த சித்திரம், எஸ்வி ரங்காராவ் அவர்களுடையது. (இதற்கு நீங்கள் வெறுத்துப்போனால் அதற்கு நீங்கள்தாம் பொறுப்பு, சரியா?)

   2. 6 தலைமுறைகளுக்கு முன்னால் பெரியகுளத்தை விட்ட குடும்பம், என் தந்தைவழி மூதாதையர்களுடையது. அனைத்துஜாதி கிராம/திண்ணைப் பள்ளிக்கூடம் (வெள்ளையர்களின் அழிச்சாட்டியத்தால்) மூடப்பட்டபின் வேலைதேடி ராயலசீமாவுக்கும் ஆந்திராவுக்கும் பெயர்ந்த குடும்பம்.  சுமார் 50 வருடம் முன்புவரை, வருடாவருடம் அங்கு குலதெய்வ வழிபாட்டுக்குச் சென்றுகொண்டிருந்திருக்கிறார்கள் (பழநிக்கும்); இவற்றைக் குறிப்பிட்டும் இன்னும் பல கதைகளையும் எனக்குச் சொன்னது என் சின்னத்தாத்தா. 1973 வாக்கில் என்னுடன் இருமிஇருமிப் பேசிக்கொண்டிருக்கும்போதே கண்நிலைகுத்தி இறந்துபோனவர்.

   வெள்ளைப் பரங்கியர்கள், தமிழகத்து யானைக்கூட்டங்களை இதயமில்லாமல் அழித்தொழித்தது எப்படி? 12/12/2019 – https://othisaivu.wordpress.com/2019/12/12/post-1073/

   …அந்த யானைவேட்டை தொடர்பாகவும், ‘சொந்தவூர் தேடல்’ விவகாரமாகவும் பெரியகுளம் சென்றிந்தபோது, என்னால் எங்கள் பாரம்பரிய வீடு எது என்பதையோ, குலதெய்வக் கோவிலையோ அடையாளம் கண்டுகொள்ளமுடியவில்லை; அனேகமாகப் பின்னது, ஏதாவது பக்கத்து கிராமத்தில் இருந்திருக்கலாம். ஆனால் வீடு இருந்த அக்ரஹாரப் பகுதி முழுவதிலும் உதயசூரியன் அல்லது இரட்டைஇலை. அவர்கள் யாரிடமாவது விலைகொடுத்துத்தான் வாங்கியிருப்பார்கள் என நினைக்கிறேன்.

   சரி.

   ஆக, நான் பெருமையாக பெரியகுளம் சார்ந்தவன் என்று சொன்னாலும், எனக்கு மதுரைத்தமிழ் குறித்த அறியாமை அதிகம். மேலும் நான் பிறந்தது பெருந்துறை கிராமத்தில். ஈரோடு பக்கம். பெரும்பாலும் வளர்ந்தது, சென்னைப் புறநகர்ப் பகுதியில்.

   ஆகவேயும்.

   • Siva Says:

    விரிவான பதிலுக்கு நன்றி. பழைய நினைவுகளை கிளறி விட்டேனோ எனத்தோன்றினாலும்!
    I remember feeling helpless and angry as a child, watching https://www.youtube.com/watch?v=kKaCijVulqE


    • ! – நான் இந்தப் படத்தை(யும்) பார்த்ததில்லை.

     எஸ்ராவலுக்கு நன்றியுடன் அர்ஜுனசிதம்பரம். நன்றி. :-(

     • Siva Says:

      Sure. I don’t like to waste your time.

      But the 2nd sentence beats me. I mostly get your jokes / puns / வார்த்தை விளையாட்டு if they can be called that.

 8. Ramakrishnan Says:

  Dear sir,
  Additionally one more advanced psychology researh experiment suggestion – why alwars sing about perumal and krishna. AK is not curious about that?


Leave a Reply to வெ. ராமசாமி Cancel reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s