கவிதை எனும் வன்முறை: சமயவேல் முழி பெயர்ப்புகளினூடே (நம்) இறுதிப்பயணம்

24/12/2019

அம்மணிகளே, அம்மணர்களே, இதுவொரு எச்சரிக்கை; இந்தப் பதிவானது — ஒருமாதிரி அலக்கியத் திறனாய்வு மசுர்பிளப்புக் கட்டுரைபோல அமையலாம்; ஆகவே தாராளமாக மிரண்டு ஓடவும்.

… ஆனால்… இருந்தாலும் உங்கள் மூளையும் (என்னுடையதைப் போலவே) வெந்து கழன்றே ஆகவேண்டுமேன்றால் – அதாவது, இந்தச் சோககீதத்தையும் தாங்கள் படித்தேயாகவேண்டும் என்று நீங்கள் அடம்பிடித்தால், அதுவும் தமிழனையும் தமிழையும் தமிழ்க்கவிஞ்ஜர்கள் படுத்தும் பாட்டைப் பற்றிய பிலாக்கணத்தைக் கேட்டு, கூடச்சேர்ந்து ஒப்பாரி வைக்கவேண்டுமென்ற விருப்பமிருந்தால்… ….ஹ்ம்ம், பிறகு, உங்கள் விருப்பம்.

என்னுடைய முதற்கேள்வியென்னவென்றால்: ஆங்கிலத்திலிருந்து முழிபெயர்ப்பு செய்யும் மகாமகோ விற்பன்னரின் பெயர் சமயவேல், சரி. ஆனால், தமிழிலிருந்து ஆங்கிலத்துக்கு அவரே ஒருமாதிரி எதிர்முழிபெயர்த்தால், அவர் பெயரை ReligiousSpear என எழுதுவாரா? இல்லை – நம் செல்ல #எஸ்ரா அதனையும் திருத்தி, TimelyValley என ‘கொடைக்கானலிலிருந்து ஐநூறே கிலோமீட்டர் தொலைவில் வில்லாக்கள்’ ரியல்எஸ்டேட் வகை முழிபெயர்ப்பு செய்து நம்மையெல்லாம் மகிழ்ச்சிக்கடலில் முழுகடிப்பாரா, அல்லது நேரத்துக்குச்சமவெளியில் உருட்டியெடுப்பாரா?

இந்தப் பதிவு ஏடாகூடமாக ஆரம்பிக்கிறதே, நிறுத்திவிடவேண்டுமோ என யோசிப்பதற்குள்ளேயே… ஐயய்யோ… முழிபெயர்ப்புகள் சக்கரவியூகம் அமைத்து ரவுண்டுகட்டித் தாக்க ஆரம்பித்துவிட்டனவே!

! இனி யோசிப்பதற்கோ தயங்குவதற்கோ அவசியமேயில்லை. வெற்றிவேல் வீரவேல் சமயவேல் ப்ளூவேல்…

-0-0-0-0-0-

பிரச்சினை என்னவென்றால் – மகாமகோ கவிஞ்ஜர் பீலாநாயகிப் பெருந்தேவி (இவருடைய பராக்கிரமம், அக்கிரமம் பற்றிய பெருமைகள் ஊரறிந்த விஷயங்கள்தாம் – நானுமே அவரைப் புகழ்ந்து அப்படியிப்படி என்றெல்லாம் எழுதி இறும்பூதடைந்திருக்கிறேன்!) அவர்களின் நண்பரும் அடிப்பொடியுமான மற்றுமொரு அதேஅதேடைப்பிஸ்ட் கவிஞ்ஜர் சமயவேலைப் பற்றிச் சில நாட்களுக்கு முன் பெருமிதமாக எழுதித் தொலைத்திருந்தேன். அதற்குப் பிறகு அதையெல்லாம் கெட்டகனவாக நினைத்து எல்லோரும் மறந்திருப்பார்கள், ஆக சந்தடிசாக்கில் நாமும் மறந்துவிடலாம் என்றால்…

கவிஞ்ஜர் (ஆண்) ஒரு, ஆத்துமாவுக்கு அற்புத சுகமளிக்கும், குஞ்சாமணியைத் தட்டியெழுப்பும் (“உங்கள் மேல் என் கவிதையை ஏவுவேன். அது மட்டுமில்லாமல் நன்றாக ஸ்தோத்தரித்து வெச்சிசெய்வேன். ஆமென்”) முளிபெயர்ப்பூக் கழுதைப் புத்தகம் ஒன்றை எழுதியிருக்கிறார் என விஷயத்தைக் கேள்விப்பட்டேன்; கொஞ்சம் நடுக்கமாகத்தான் இருந்தது – ஆனால், அதைக் கேள்விப்பட்டு முடிப்பதற்குள் அதில் வந்திருக்கும் மூன்று கவிதைகளை தேடிப்பிடித்து அதன் கோணாமாணா அட்டைப்படத்துடன் எனக்கு அனுப்பியிருக்கிறார் ஒரு அனுகூலசத்ரு அன்பர்.

எனக்கு இது தேவையா?

…எப்படித்தான் இம்மாதிரி விஷயங்களை மோப்பம் பிடித்து அகழ்வாராய்ச்சி செய்து அனுப்புகிறார்களோ, பாவிகள்! இத்தனைக்கும், இந்தத் தண்டக்கருமாந்திரத்தைப் பதிப்பித்திருக்கும் ‘தமிழ்வெளி’ பதிப்பக இணையதளத்தில் கூட இந்த எழவைப் பற்றி ஒன்றும் இல்லை! இன்று இத்தளத்திற்குச் சென்று பார்த்தேன்! திராபைப் புத்தகங்கள்தாம் பெரும்பாலும் – ஒன்றையும் படிக்கவில்லை, பாடு(படுத்தும்)பொருட்களையும் எள்த்தாளர்களையும் வைத்துச் சொல்கிறேன் – உளறல்பொய்திலகவதி ஸ்வாதி ‘கத்தரிக்காய்’ சதுர்வேதி அம்மையார் புத்தகம் ஒன்றையும்வேறு இந்த தண்டக்கருமாந்திரங்கள் வெளியிட்டிருக்கிறார்கள் என என் நினைவு! அல்லது இதனை வெளியிட்டது வேறு ஏதாவது எழவாளர்களோ, சரியாக நினைவில்லை. எப்படியும் ஐயகோ தான்!

க்ளோரியா ஃபோர்டெஸ் கார்ஸியா (Gloria Fuertes Garcia) எனும் ஸ்பானியக் கவிதாயினியின் கவிதைகளுக்கு முதலில் நான், ஒரு மாண்டிஸொரி ஆசிரியனாகத்தான் அறிமுகம் கிடைக்கப்பெற்றேன். 2004-5 வாக்கில் நடந்த விஷயமிது. இந்த அம்மணி குழந்தைகளுக்கான நிறைய எளிமையான கவிதைகள் எழுதியிருக்கிறார், பாவம். இதில் ஒன்றிரண்டு கவிதைகளை மூன்றாம்-நான்காம் வகுப்புத்தர குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்தினோம் என நினைக்கிறேன்.

இப்போது பதினைந்து வருடங்களுக்குப் பின் யோசித்துப் பார்த்தால் – அவரிடம் கவிதைத்தரம் எனப் பெரிதாகச் சொல்லிக்கொள்ளும்படி இல்லை எனத்தான் என் மதிப்பு. ஆனால் இவரை ஆய்ந்து அவர் கவிதைகளை விட ரெண்டாயிரம் மடங்கு பெரிய அளவில் பொழிப்புரைகள் வந்திருக்கின்றன என்பதை அறிந்து அப்போதே எனக்குப் பேதி வந்தது என, என் அடிவயிற்றைத் தொட்டுச் சத்தியம் செய்து சொல்கிறேன். (பிரச்சினை என்னவென்றால் – அவர் பெரிய கவிதாயினியாக இருக்கலாம் என்பதையும் ஒப்புக்கொள்கிறேன் – ஏனெனில் அவருடைய அனைத்துக் கவிதைகளையும் படித்து, ஒருமாதிரி ஒத்துக்கொள்ளக்கூடிய அனுமானத்தை நான் வந்தடையவில்லை)

சரி. வந்த மூன்று சமயவேல்களும் சமயஈட்டிகள்! படுதிராபை முழிபெயர்ப்புகள். ஆகவே நல்லெண்ணம் கொண்டு, உங்கள் ஆரோக்கியத்திற்காக – அந்த எழவெடுத்த மூன்றில், சுமாராக இருக்கும் ஒன்றைப் பற்றி மட்டும் கொஞ்சம் பட்டிபார்க்கலாமா?

ஆனால், இதிலுமே கூட, சமயவேலார், வெந்த ஃபோர்டெஸில் வேலைப் பாய்ச்சியிருக்கிறார். மேலே தொடரவே படுகேவலமாக இருக்கிறது… என்ன செய்ய.

இந்தக் கவிதையின் ஆங்கில மொழிமாற்றத் தலைப்பு: Birds nest அதாவது ‘பறவைகள் கூடுகட்டுகின்றன’ – சர்வ நிச்சயமாகப் ‘பறவைகள் கூடு’ அல்ல. ஆனால்  ஃபோர்டெஸ் என்பதையே ப்யூர்டஸ் எனப் படுத்தி எடுத்துள்ள பராக்கிரமம் மிக்க கவிஞ்ஜருக்கு, இதெல்லாம் எம்மாத்திரம். :-(

இனி வரிவரியாக – ஆங்கில வடிவத்தையும் (மொழிபெயர்ப்பு: ஃபிலிப் லீவைன், சமயவேலாயணத்தையும் பார்க்கலாமா?

Birds nest  –  எனது கைகளில் பறவைக்கூடுகள்

1. Birds nest in my arms, எனது கைகளில் பறவைக்கூடுகள்.
2. on my shoulders, behind my knees, எனது தோள்களின் மேல், எனது முழங்கால்களுக்குப் பின்னால்
3. between my breasts there are quails, எனது முலைகளுக்கிடையில் காடைகள் இருக்கின்றன
4. they must think I’m a tree. நானொரு மரமென பறவைகள் நினைக்கின்றன
5. The swans think I’m a fountain, அன்னப்பறவைகள் நானொரு நீரூற்று என நினைக்கின்றன
6. they all come down and drink when I talk. அவர்கள் எல்லோரும் கீழேவந்து நான் பேசுவதை அருந்துகிறார்கள்
7. When sheep pass, they pass over me, ஆடுகள் கடக்கும் போது என் மேல் உரசுகின்றன
8. and perched on my fingers, the sparrows eat, சிட்டுக் குருவிகள் என் விரல்களைக் கொத்தித் தின்கின்றன
9. the ants think I’m earth, என்னை பூமியென எறும்புகள் நினைக்கின்றன
10. and men think I’m nothing. ஆண்கள் என்னை எதுவுமில்லையென நினைக்கிறார்கள்

-0-0-0-0-0-

சரி. இதுதாண்டா முழிபெயர்ப்பு, பரவாயில்லை அல்லவா? எங்கிருந்து இதனை ஆரம்பிக்கலாம்? வரிக்குவரி சிரித்து அழுது மூத்திரம் வந்து சளி சிந்தி… …மாளவில்லையே! ஐயோ!!

அடேய் அல்லது அஹோ சமயவேல்!!!

1. பறவைகள் என் கரங்களில் கூடு கட்டுகின்றன என்பதுதானே சரி – இதில் எங்கேடா வந்தது பன்மை? கூடுகள்??

2. on my shoulders என்பதற்கு என் தோள்களில் என்றால் போதாதா? கவிதை என்றால் சொற்சிக்கனம் வேண்டுமடா! எதற்கு அந்த மேல் ஃபீமேல் எழவு??

3. அது என்ன மசுத்துக்கு இந்த கவித்துவ ‘முலை?’ ஸெக்ஸியாக இருக்கவேண்டுமா என்ன? வெறுமனே மார்பகம் என்றால் அதன் அளவு குறைந்தாவிடுமாடா?

4. ‘பறவைகள்’ என எழுதியே ஆகவேண்டுமா?  ‘நானொரு மரமென அவை நினைக்கின்றன’ இல்லை  ‘நானொரு மரமென நினைக்கின்றன’ என எழுதினாலே போதுமே? கவிதையை உரை நடையாக மாற்றி அதனையும் உரை ஓட்டமாக ஓடச்செய்கிறீரே? தேவையா?

5. என்ன மசுத்துக்கு ‘அன்னப்பறவைகள்?’ அன்னங்கள் என்றால் போதாதா? அது வெறும் ஊற்றாக இருந்தாற்போதும். ஊற்றில் ஊறி வருவது பேச்சாகிறது அடுத்த வரியில். ஏனப்பா, வரிவரியாகவா கூகுள்மொழிமாற்றியை வைத்து முழிபெயர்ப்புச் செய்வாய்?

6. திடீரென்று உயர்திணை. பறவைகள், அவர்கள்! யோவ்! நான் பேசுவதையே பறவைகள் அருந்துவதில்லை. பேச்சின் சாரம்தான் அருந்தப்படுகிறது. மேலும் அது வாட் அல்ல, வென். ஐயோ!

7. ஆமாம். ஆடுகள் உரசுகின்றன. ஒர்ரே இன்பம்ஸ். ஆடுகளின் இன்பவெறி. எனக்கும் இன்பலாகிரி!  ‘கடக்கின்றன’ எனவொரு வார்த்தை இருக்கிறதே பாவீ!

8. அடேய்! அது ‘கைவிரல்களில் அமர்ந்த குருவிகள் உண்கின்றன’ அவ்ளோதான்! அவை என் கைவிரல்களைக் கொத்திக் கொத்துபுரோட்டா செய்து சாப்பிடவில்லை! அஹோய், இதனை முழிபெயர்க்கும்போது தலப்பாக்கட்டி பிரியாணி நினைவு வந்து பசி ஏகத்துக்கும் எகிறி விட்டதோ?

9. பூமி என்றில்லாமல் வெறும் நிலமாக இருக்கலாமே இது! அடேய், மேலும் கவிதையில் இப்படி எழுதினால், அதுவும் மூலத்துக்குக் கிட்டே வரும்படி இருந்தால் ‘நிலமென எறும்புகள் நினைக்கின்றன என்னை’ கொஞ்சம் நன்றாக இருக்கும் இல்லையா? உரை நடையை ஒட்ச்சி ஒட்ச்சி உளறிக்கொட்டினால் அது கவிதையாகிவிடாதுடா!

10. and எங்கே! கவிதாயினி என்ன சொல்லவருகிறார் என்று புரிந்ததா மௌடீகரே! ‘அவ்ளோ விஷயம், பராக்கிரமம் என்னிடம் இருக்கிறது, உலக ஜீவராசிகள் என்னுடன் ஒத்திசைந்து இருக்கின்றன. ஆனால் நீ மட்டும் மானுடா, என்னைக் கண்டுகொள்ள மாட்டேனென்கிறாயே’ என்கிற தொனி எங்கேடா போச்சு?

இப்படியொரு போக்கற்ற தொழிற்சுத்தமற்ற, அறமற்ற, குப்பை அசட்டை தண்டமசுறு முழிபெயர்ப்பு.

இந்த தண்டத்தையும் பதிப்பிக்க ஒரு தண்டகருமாந்திரப் பதிப்பகம்.

கவிதைகளைக் காப்பி செய்து, அக்கப்போருக்காக அனுப்ப ஒரு இளம் தமிழார்வலக் குஞ்சாமணி.

அவற்றையும் படித்து வேக, மாரடைக்க நான்.

எல்லாரும் மயிராண்டிகள்.

நன்றி.

-0-0-0-0-0-

ஏண்டா பாவீங்க்ளா! எழுத்தாளரும் உலகத்தரம் வாய்ந்த தமிழ்<->ஆங்கில மொழிபெயர்ப்பாளருமான கல்யாணராமன் அவர்களின் காலடியில் அமர்ந்துகொண்டு, மொழிபெயர்ப்பின் அடிப்படைகளையாவது அறிந்துகொண்டால், அரைகுறைகளே, நீங்கள் குறைந்தா போய்விடுவீர்கள்?

இப்படிப் படிப்பறிவோ, கலாச்சார அறிவோ, ஏன் பொது அறிவோகூட இல்லாமல், ஆங்கிலத்தையும் அறியாமல் தமிழிலும் ஏடாகூடமாக எழுதும் உங்களைப் போன்றவர்கள் – ஸ்பானியக் கவிதைகளை ஆங்கிலவழியாக முழிபெயர்த்தேயாகவேண்டும் என யாராவது அழுதார்களா?

-0-0-0-0-0-

ஆனால், கவிஞ்ஜர் சமயவேல் அவர்கள் கவிஞ்ஜர் பெருந்தேவி அவர்களின் ஃபேஸ்புக் பக்கத்தில் இப்படி முன்னமே எழுதியிருக்கிறார். முன்னெச்சரிக்கை இது.

எனக்குத்தான் இதை அறிந்திருந்தாலும், நினைவிருந்திருக்கவில்லை. மேலும், அறிவில்லை. நேரமும் சரியில்லை.

முழிபெயர்ப்பிலேயே இவ்ளோ பராக்கிரமத்துடன் கொல்லும் சமயவேல், சொந்தக் கவிதைவழியாக அணுகுண்டு மழையே பொழிந்துவிடுவார் எனப் பயமாக இருக்கிறதே! :-(

ஆனால், யோசிக்கிறேன் – இந்தக் கழுதையாளர்களும் கழுதையாயினிகளும் இந்த குடியுரிமைத் திருத்தம், குடிமக்கள் ரெஜிஸ்டர் பற்றியெல்லாம் தங்கள் மேலான கருத்துகளை அவர்கள் பாணியில் கவிதைகளாக எழுதினால், நன்றாக இருக்குமே!

ஆனால், யோசித்தபின் கதிகலங்குகிறது.

ட்டேய்! ஓடுங்கடா!!

….

….

ட்ட்டேய் ! வொங்க கோமணம் நழ்வ்ற்தத் தெரியாம அப்டியே கீள வுட்டுட்டு, கோமணத்தக் காணம் குஞ்சாமணியயும் காணம்னிட்டு அப்டீ ஏண்டா அவ்ளோ ஃபாஸ்டா, என்ன மட்டும் இங்கிட்டு தனியா வுட்டுட்டு ஓட்றீங்கோ??

:-(

சுபம்.

 

11 Responses to “கவிதை எனும் வன்முறை: சமயவேல் முழி பெயர்ப்புகளினூடே (நம்) இறுதிப்பயணம்”

 1. Aathma Says:

  ஒரே கூத்துதான் போங்கள்..கவித கவித..btw..is men gender sensitive there?


  • ஐயா! அது வெறும்கூத்தல்ல, கவிஞ்ஜ ஊழிக்கூத்து.

   இல்லையேல் சமயவேலால் கண்ணைக் குத்து.

   ற்றொம்ப சிரித்துத் துள்ளினால், ஒரு பத்து தமிழ்ப் புத்தகங்களை உங்களுக்கு குரியர் செய்துவிடுவேன்.

   “பாவியே! உனக்கு நரகத்தை பார்ஸல் பண்ணி அனுப்புவேன்.”

   • Kannan Says:

    இது என்னோட ஐடியா, உங்களுக்கு ஐந்து கவுஜ புத்தகம் அனுப்ப நினைத்திருந்தேன்.

    பாவத்தின் சம்பளம் கவுஜ.

    :(


    • அன்புடையீர்!

     தாங்கள் பணமாகவே அனுப்பலாம். (அதாவது, நான் பிணமாகவேண்டாம் என ஒரு நல்லெண்ணம் தங்களிடம் இருந்தால்)

     நன்றி.

     ற்றொம்பத் துள்ளினால், சமயவேலுடன் வந்து கவுஜகளை உங்கள்மீது பாய்ச்சுவேன்.

 2. Ramesh Narayanan Says:

  குஞ்சாமணியும் இல்லாத்த, கோவணவும் இல்லாத்த த்ராவிடக் கொழுந்துக்கு ஒர்ரே புளகாங்கிதம், போறாதா, அதனால இது தான் ஸரி


  • ஐயா, சமயவேல் திராவிடக் கொழுந்தல்லர் என நினைக்கிறேன்;  பாவம், ஏதோ கவிஞ்ஜர் எனவொரு பிரமை. அவ்ளோதான்.

   இன்னொரு பிரமையாலஜிஸ்ட் பெண்ணீயத்தின் இளிக்கும் அடிப்பொடி வேறு.

   மன்னித்துவிடுங்கள்.

 3. Sridhar Says:

  Facebook இல் நீங்கள் இல்லாத குறையை, ஒத்திசைவின் வழியாக, உங்கள் மனைவிக்கு மட்டுமல்லாது, பல கருத்துக்களுக்கும் கணவானாக இருந்து கவிஞ்ஜர்களை அழச்செய்து விடுகிறீர்கள்.

  பலவின்பாலும், ‘நினைக்கின்றன’ போன்ற சொல்லமைப்புகளும் கவிதையைக் கொன்று புதைத்து, மொழிபெயர்ப்பை நடுகின்றன.

  (☝️ வாக்கியம், நான்கு வரிகளில் அமைக்கப்பட்டதால், கவிதையாகிறது.)


  • 🐸யோவ் IntellectDeer!

   புத்திமான் பெலவான் ஆவான்.
   கண்ணியவான் கணவான் ஆவான்.

   இந்த ஜெபத்தை ஜெபித்துஸ் ஸ்தோத்தரித்து பாவங்களைக் கழுவி ஊற்றிக் கொள். இல்லையேல்,சமயவேலால் உன் கண்ணைக் குத்துவேன்.

   ஆமென். அல்லது, பெண்முதல்வாத அவுமென்.

 4. p Says:

  Samaiyavel is a Citizen of Lemon :-P


  • ?? யோவ்! என்னப்பா இது? மண்டையில் தேய்த்துக்கொள்ளவா?


   • அன்பர் அனுப்பியிருக்கும் இன்னொரு திரைச்சொட்டு.

    null

    சமயவேல் அவர்கள் இதை எந்தப் பின்புலத்தில் சொல்லி (எங்கேயோ போய்விட்டார் தெய்வமே!) என்று தெரியவில்லை. ஆனால் அது எதுவாக இருந்தாலும், அவர் தன் லெமண்டியா அரசாங்கத்திடம் இறைஞ்சி ஒரேயொரு எலுமிச்சம்பழத்தை பெற்றுக்கொண்டு அதைப் பப்பாதியாக வெட்டி, அவர் தலைக்கு ஒன்று எனக்கு ஒன்று எனத் தேய்த்துக்கொள்ளக் கொடுத்தால் நலம்.

    மிடீலடா சாமீ!

    டேய்! அவுர  இன்னாவோணும்னாலும் வெச்சி செய்யுங்கடா, என்ன இத்தோட வுட்றுங்கடா, ப்ளீஸ்!


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s