தயை செய்து…

26/12/2019

…பறவையரசர் அலகிலாக் கறுப்பனார், ஸிக்மண்டூகனார் இரட்டைக்கண்ணனார், ஆசைவென்றோன், நல்லகறுப்பனார் போன்றவர்கள் ‘இப்படிச் சொன்னார்கள்’ அல்லது ‘இப்படியும் சொன்னார்கள்’ என ஒரு எழவு ஸ்க்ரீன்ஷாட்டையோ சுட்டியையோ அனுப்பவேண்டா.

ஏனெனில், இதுவரை எனக்கு எந்த விஷயம்/மின்னஞ்சல் என வந்தாலும் (அவை சொற்பமாக இருப்பதால்?) அதற்கு முடிந்தவரை மரியாதையுடனோ அல்லது அவமரியாதையுடனோ எதிர்வினையாற்றுவதை வழக்கமாக வைத்திருக்கிறேன். இருந்தாலும், எனக்கு அலுத்துவிட்டது. வேலைவெட்டியில்லாமல் தன்னிச்சையாக, சக்ரவியூகத்தில் அகப்பட்டுக்கொண்டது போல ஒரு உணர்ச்சி.

…அவர்களுக்கும் கருத்துரிமை மசுத்துரிமை என இருக்கிறது; நேரமும் இருக்கிறது போல; ஆக அவர்கள் – என்னவேண்டுமானாலும், எதையும், எப்போது வேண்டுமானாலும் உதிர்க்கலாம்.

ஆனால், அதற்காக நீங்கள் – எனக்கு, பேதியில்போகும் உரிமையைத் தானம் கொடுக்கவேண்டிய அவசியம் இல்லை; தற்கொலை உணர்ச்சி அதிகமானால், நானே அவர்கள் தளத்திற்குப் போய் அல்லது ஃபேஸ்புக் எழவில் ஃபேக் ஐடி ஒன்றைத் தயாரித்து, கம்மோடில் உட்கார்ந்து படித்துக்கொள்கிறேன்.

ஆகவே உதவி, நகைச்சுவை, ‘உன் கருத்து(!) என்ன’ என்கிற பெயரில் உபத்திரவம் (deputy liquid)  தரவேண்டா. இருக்கும் சொற்ப சகஏழரைகளுடனேயே மாரடிக்கமுடியவில்லை வேறு!

நன்றி.

18 Responses to “தயை செய்து…”

 1. Ramesh Narayanan Says:

  அப்பா (abba), ஞானம் பொறந்துது ஓய், ஞானம், இனி நற்பேறுதான், உய்ய வேண்டியதுதான் பாக்கி,’வால்த்துக்கல்’

 2. dagalti Says:

  வலதுதோள் தேவதை:

  ஐயாவ கொஞ்சம் ஃப்ரீயா விடுங்கப்பா.
  அவர் 1/2, 2/3 அப்ப்டின்னு எங்களை எல்லாம் தொங்கல்ல விட்ட பின்விறகு சோலி எவ்வளோ கெடக்குல்ல.

  இடதுதோள் சாத்தான்:

  அதெல்லாஞ்சரி, ஆனால் பரமிமேலழகர் இல்லாது எளியோம் குறளறிவது எங்ஙனம்?

 3. dagalti Says:

  Btw if I’m not wrong, ‘ராம’ என்பதன் பொருள் ‘நல்ல’ அல்ல, ‘அழகு’ என்பதே, இல்லையா?

  ரம்யம், அபிராமி போன்றவற்றிர்க்கும் இதே வேர் என்று சொல்லக்கேள்வி.


  • http://spokensanskrit.org/index.php?tran_input=rAma&direct=se&script=ia&link=yes&mode=3 – scroll down. print or (s)quint or whatever please! there are many meanings closer to what is given.

   however, if you have complaints, lemme say that it is in alignment with the illustrious auteur’s formidable translation capabilities.

   besides ‘beauty’ in terms of self or creation is not applicable in the case of the target.

   • Dagalti Says:

    Ah ok. Thank You.

    I had heard the meaning ‘beauty’ in a meeting where Pulavar vetriazhagan spoke. He mentioned how, after having been seized with the urge to tamilize his name (Jayaraman) he was quite unsatisfied with some names he tried like vetrichelvan.

    Then, one day upon reading குகப்படலம் he was very much taken by the phrase

    அல்லை ஆண்டு அமைந்த மேனி அழகன் which குகன் used to describe Rama

    (The darkness of whose beauteous one whose form beats இருள் itself) and upon further study felt Kamban was pretty much referring to, rather than describing, Rama when he used அழகன்.

    So he chose to name himself வெற்றியழகன்

 4. A.Seshagiri Says:

  என்ன நீங்கள் பொசுக்கென்று தடை உத்தரவு போட்டுவிட்டீர்கள்!.பறவை அரசரின் பதிவு ஒன்றிற்கு உங்களிடம் விளக்கம் கேட்கலாம் (சம்பந்த பட்டவரிடமிருந்து பதில் வரவில்லையென்றால்)என்று நினைத்திருந்தேன்.ஐயகோ இப்போது நான் என்ன செய்ய?

 5. Kannan Says:

  லேட்டஸ்ட்டா ஆசானுக்கு மலேசியாவில் விருது கொடுத்ததைப் பற்றி உங்கள் 
  கருத்து….ஓ சாரி அதைத்தான் கேட்கக்கூடாதுன்னு சொல்லீட்டீங்களே :(


  • 🐸இல்லையில்லை. இதோ பிடியுங்கள், மாற்றுக் கருத்தை…

   வூட்டுக்கு பக்கத்ல கீற தொட்டகுப்பி கிராமத்தில் சிவன்கோவிலுக்கு ஒரு எருதை அளித்திருக்கிறார்கள். நன்றி!

   ஆனால், மலேசியா பெயர்ப்பரிணாமம் பற்றி மோனியர்வில்லியம்ஸ் அகராதி என்ன சொல்கிறது? புலன்களை ஒடுக்கி ஆன்மீக விசாரணை செய்யமுடியுமா, ப்ளீஸ்?

 6. Aathma Says:

  ஐய்யகோ.இப்படி ஒரு நிலைக்கு ஆளாக்கி விட்டீர்களா. தங்களிடம் கருத்து கேட்காமல் எங்கு போய் கேட்போம். பாவமாக இல்லையா?


  • நல்ல கிண்டல்; இதுதானே வேணுமென்கிறது. :-)

   நீங்கள் ஒன்றும் அனுப்பவில்லை என்பதால்… … பிறர்மேல் குற்றம்சுமத்தாமல் இருக்கமுடியாதல்லவா?

   ஸீரியஸ்ஸாக.

   தற்போதைக்கு ஜெயமோகன் அவர்களைத் தவிர வேறு யாரிடத்தில் ஞானம், மோட்சம் பெறமுடியுமென்பது புலப்படவில்லை. எல்லாப்புகழும் அவருக்கே.

   இல்லையேல் – அரவிந்தன் கண்ணையன், பக்ஷிராஜன் அனந்தகிருஷ்ணன், நிசப்தம் மணிகண்டன் போன்றவர்களை அணுகலாம். மாரிதாஸ் அவர்கள், இலக்கிய/லோகாயத விஷயங்களில் நாட்டமுடையவராகத் தெரியவில்லை.

   பத்ரிசேஷாத்ரி, ரங்கரத்னம் கோபு, பிஸிஏகே நாயர் போன்றவர்களை சர்வ நிச்சயமாக அணுகலாம்; அவர்கள் ஒத்திசைவு ஸர்ட்டிஃபைட். ஆனால், தயைசெய்வார்களா எனத் தெரியாது. YMMV.

 7. Aathma Says:

  அபலவிதமான விருதுகள் வாங்குவதும் கொடுப்பதுமாக இருக்கிறார். மேலும் பல அலுவல்கள். எப்படி டிஸ்டர்ப் பண்றது


  • யோவ்! இதையெல்லாமா சொல்லித் தருவது?

   என்னை ‘வெறுப்பியத்துக்கு அடிமை’யானவனாகச் சித்திரித்தோ வெண்முரசை விண்ணளாவப் புகழ்ந்து ‘வியாசன்கூட உங்களிடம் கற்றுக்கொள்ள ஏகத்துக்கும் இருக்கிறது’ எனவோ ஒரு மின்னஞ்சலைத் தட்டிவிட்டு உங்கள் கேள்விகளையும் சந்தடிசாக்கில் கேட்டுக்கொள்ளலாமே!


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s