மௌலானா அபுல்கலாம் ஆஸாத், இர்ஃபன் ஹபீப்கள், கட்டுக்கதைகள், உண்மைகள் – சில குறிப்புகள்

29/12/2019

சிறுவயதில் நானும் சுதந்திர தினம், குடியரசு தினம் போன்ற சிலபல பள்ளி நிகழ்வுக் ‘கொண்டாட்டங்களில்’ வெகு மும்முரமாக ஈடுபட்டிருக்கிறேன்; பேச்சுப்போட்டி, திருக்குரள்வளை புடைக்க ஒப்பித்தல், ‘பைபிள் மலைப்பிரசங்கமும் காந்திஜியும்’… … நையாண்டி (வேறு யாரை? கழுதை கெட்டால் குட்டிச்சுவர்தானே? எல்லாம் – பேரறிஞ்ஜர் அண்ணாத்துரை கலைஞ்ஜர் கர்ணாநிதி +  சிவாஜி எம்ஜிஆர் எம்ஆர்ராதா நம்பியார் போல மிமிக்ரி செய்து பேசுதல்தான்) என ஓடிக்கொண்டிருந்ததும் ஒருகாலம்.

“டேய்! ஃப்யூச்சர்ல நீ பெரிய பேச்சாளனா வருவடா!”  (ஆஹா! ஆய்ட்டேன் பார்டா!)

ஆனால் ஏழாம் வகுப்பிற்குப் பின் இந்தப் பைத்தியக்காரத்தனத்தை ஏரக்கட்டிவிட்டேன், பல காரணங்கள்.

ஒருகாரணம், எச்சரிக்கை – எனக்கு இருவயது இளைய, என் தம்பி, அதே கேடுகெட்ட பள்ளியில் ஆறாவது சேர்ந்துவிட்டான். வீட்டில் “அண்ணா ஸ்கூல்ல கண்டபடி மரியாதையே இல்லாம பசங்ககூட பேசறான்மா, அவனுக்குத் தான் ஹீரோன்னு நெனப்பு” எனப் போட்டுக்கொடுத்து விடக்கூடும் டைப். எந்தத் தம்பி/தங்கை தான் வீட்டில் கோள்மூட்டாதவன்/ள், சொல்லுங்கள்? (இதைப் படிக்கக்கூடும் என் அக்காள், நான் அவளைப் பற்றி அந்தக் காலத்தில், வீட்டில் ஏகத்துக்கும் கோள்மூட்டியிருப்பதை வெளியே பகிரங்கமாகச் சொல்லாதவரை, ஷேமம், நன்றி!)

இரண்டாவது – ஆனால் முக்கியமான காரணம் என்னவென்றால்:

1) நான் அந்தக் காலங்களில் ஒரு மசுரும்  பெரிதாகத் தெரியாமல், படிப்பறிவில்லாமல்,

‘காந்தி இந்தியாவின் தந்தை, வெள்ளையனே வெளியேறு இயக்கத்தை நடத்தினார், நமக்குக் கத்தியின்றி ரத்தமின்றி அஹிம்ஸாவழியில் சுதந்திரத்தை வாங்கிக் கொடுத்தார்… ….’

+ ‘சாச்சா நேருவுக்கு ரோஜாப்பூ மிகவும் பிடிக்கும். அவர் சட்டைப் பித்தானோட்டையில் அதனைக் குத்திக்கொள்வார். தாய் பெயர் சொரூபராணி, தந்தை மோதிலால் நேரு, பாரிஸ்டர். நேருஜி சிறையில் வாடினார். காந்திஜியுடன் சேர்ந்து சுதந்திரம் வாங்கிக் கொடுத்தார். அவர் இந்தியாவுக்குக் கொடுத்த கொடைகள் மதச்சார்பின்மையும் சமத்துவ சமுதாயமும் விஞ்ஞானநோக்கும்; அவர் மகள் இந்திரா பிரியதர்சினி நம் பிரதமர், 1971ல் பாகிஸ்தானுக்கு எதிராக வெற்றியீட்டிய வீரமிக்கவர், இருபது அம்சத்திட்டம்… …’

+ ‘மௌலானா அபுல்கலாம் ஆஸாத் சுதந்திரப் போராட்டவீரர், இந்தியாவின் முதல்  கல்வியமைச்சர், அவர் தேசியவாத முஸ்லீம், ஒரு காங்கிரஸ்காரராக, பிரிவினை வாத மொஹம்மத் அலி ஜின்னாவுக்கு எதிராகப் போர்க்கொடி உயர்த்தினார்!’

+ டட்டடா டட்டடா என்றெல்லாம் சாவிகொடுத்த சோளக்கொல்லைப்பொம்மை போல உளறிக்கொட்டிக் கொண்டிருக்கிறேன், என்று ஓரளவு புரிந்துவிட்டது.

2) நான் போகவேண்டிய தூரம் அதிகம் என்றும். (யோசித்துப் பார்த்தால், இன்று வரை இந்தப் ‘போகவேண்டிய தூரம் அதிகமாகிக்கொண்டே போவது, பல பிரிவுகள் உருவாவது’ என்பது சரியே! மலைச்சிகரங்களில், தொடர்களில் ஏறும் அனுபவம். மேலே செல்லச் செல்ல (அப்படி நினைக்கும்போதே!), ஏறிவிட்டோம் என மகிழ்வதற்குள்ளேயே இன்னொரு சிகரம், பக்கத்தில் பலப்பல பிற சிகரங்கள், மலைகள்… அலுப்பும் விகசிப்பும் ஒருங்கே!)

-0-0-0-0-0-

நிலைமை இப்படி இருக்கையிலே, நேற்று (28 டிஸெம்பர், 2019) கேரளாவில் இந்திய வரலாற்று காங்க்ரெஸ் அமர்வில் ஒரு மகிழ்ச்சிகரமான நிகழ்ச்சி அரங்கேறியதைக் குறித்து அறிந்து இறும்பூதடைந்தேன்.

இடதுசாரி உளறாற்றாள வரலாற்றாளர்கள் ஏகத்துக்கும் உளறிக்கொட்டும் நிகழ்வில், பொறுமையாகப் பேச்சாளர்களைக் கேட்டுக் கொண்டிருந்த பின்னர், அம்மாநில ஆளுநர் ஆரிஃப் மொஹெம்மத்கான் அவர்கள் (பலபத்தாண்டுகளாக நான் தொடர்ந்து மதிக்கும் – படிப்பாளிகளில், நேர்மையாளர்களில் ஒருவர் – ஆனால் ஜேஎன்யு-அலிகட்முஸ்லீம்பல்கலைக்கழக வகைப் பொறுக்கி அரசியல்கலையை அறியாதவர், பாவம்!) ஏதோ ‘மௌலானா’ அபுல்கலாம் ஆஸாத் என்னவோ சொன்னார் என மேற்கோள் காட்டிப் பேசுவதற்குள்…

இந்த தண்டக்கருமாந்திர இர்ஃபான் ஹபீப் அவர்களுக்கு ஒர்ரே கோபம். தாபம். கூத்தாடல்.

(அயோத்யா விஷயத்திலும்) வாய்கூசாமல் புளுகிவிட்டு, தம் கட்சிக்காரர்களுக்கே பொய் உத்திரவாதங்கள் கொடுத்துக் காலைவாரிவிட்டு, சந்தேகாஸ்பதமான இடதுசொறி ‘வரலாற்றாராய்ச்சி’ பலப்பல செய்து, நம் குழந்தைகளுக்கான பாடப்புத்தகங்களைக் குப்பைத்தனமாக எழுதி… அதற்குமேலும் பல தரமான வரலாற்றாய்வாளர்களை முடக்கிய வரலாற்றரசியல்வாதிப் பேடித்தனம், வேறு எதைத்தான் உருப்படியாகச் செய்யவிடும், சொல்லுங்கள்?

மேடையில் ஆரிஃப் அவர்களைத் தடுக்கமுயற்சித்து, இந்தக் கிழட்டுவயதிலும் மேடையில் கதக்களியாடி, மட்டுமரியாதையில்லாமல் இந்த ஆபாச நடவடிக்கை! அதனை மரியாதையாகத் தடுக்கமுயன்ற ஆளுநரின் உதவியாளர்களுக்கு எதிராகத் திமிறி – ‘நீ கோட்ஸே பற்றிப் பேசு, ஆஸாத் பற்றிப் பேசாதே’ என்பதுபோல, திருவாய் மலர்ந்தருளியிருக்கிறார். தேவையா?

ஆனால், இந்த மௌலானா ஆஸாத் அவர்கள்,  இப்படி இடதுசாரிகளின் பாத்தியதைக்குட்பட்டவராக, அவர்கள் மதச்சார்பின்மைத் திலகச் சொத்தாகப் பார்க்கப்படவேண்டியதன் பின்புலம் என்ன?

இதுதான்: அவர்கள் தூக்கிக்கொண்டாடும் மௌலானா ஒரு அப்பட்டமான ஜிஹாதி, இஸ்லாமிய வெறியருமாகவும் இருந்திருக்கிறார்.

அதனால்தான்.

இடதுசாரிப் பேடிகள் யாரையாவது, எதையாவது இப்படி அளவுக்கு மீறி ஆதரித்தால், சர்வ நிச்சயமாக அதில் பலப்பல வில்லங்கங்கள் இருக்கும் என்பதுதான், என்பது மட்டுமேதான் உண்மை.

-0-0-0-0-

இன்றுகாலையில் தான் இந்த விஷயத்தைக் கேள்விப்பட்டேன். ஆகவே பழங்குறிப்புகளைத் தூசிதட்டி, பட்டி பார்த்து டிங்கரிங் செய்து பதிப்பிக்கிறேன்.

சுமார் இருபத்தைந்துமுப்பது வருடங்களுக்கு முன், நான் ஏதோ, பாரதத்தின் முஸ்லீம்களின்மீதான எதிர்மறை தாக்கங்கள் குறித்த அகழ்வாராய்ச்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தேன். அப்போது எனக்குக் கிடைத்த, பெருந்துக்கம் தந்த விஷயம் இது. உண்மையாக நடந்த விஷயம்.  இது முதலில் எனக்குத் தெரியவந்தது, ஒரு கிழக்குவங்க (இப்போதைய பங்க்ளாதேஷ்) ஹிந்து அகதியின் (1969-70 வாக்கில் மேற்குவங்காளத்திற்கு வந்து சேர்ந்தவர்) மகன் மூலமாக. உருதுமொழி விற்பன்னர் ஒருவரிடம் அப்போதே விஷயங்களைச் சரிபார்த்துக்கொண்டேன்.

இதனைப் படிப்பவர்களுக்கு – மௌலானா அபுல்கலாம் ஆஸாத் அப்படியொன்றும் மண்டைக்குமேல் தூக்கிக் கொண்டாடப்பட வேண்டியவரே அல்லர் என்பதும், எல்லாம் நம் அஸ்ஸாதுல்லா ஒவைஸிகளைப் போன்றவர்தாம், ஆனால் நன்றாக விஷயங்களை மறைக்கத் தெரிந்தவர் என்பதும் தெரியும்.

மேலும் இவர் சுதந்திரபாரதத்தின் முதல் கல்வியமைச்சராக வேறு இருந்தவர்! அழிச்சாட்டியம் செய்து, மக்களின் வரிப்பணத்தை வீணாக்கிக்கொண்டிருக்கும் பல, கல்விசார்ந்து இயங்கும் நிறுவனங்களுக்கும், அமைப்புகளுக்கும் இவர்தான் அல்லாஹ்சுழி போட்டார்.

இவர் பின்புலம் இப்படி ஜிஹாதியாக இருந்திருக்கும்போது, அரசால் போஷகம் செய்யப்பட்ட பார்வைகளில்/துறைகளில் கப்பலோட்டித் திரவியம்தேடியிருக்கும் இடதுசாரி இர்ஃபன் ஹபீப்கள் கூத்தாடுவதற்குக் கேட்பானேன்? (இந்த ஹபீப்கள் வேலை செய்யும் அலிகட் முஸ்லீம் பல்கலைக்கழகத்துக்கு எவ்வளவோ ‘உதவி’ வேறு செய்திருக்கிறாரே இந்த ஆஸாத்!)

…சொல்லப்போனால் – ஆஸாத், ‘சாச்சா’ நேரு போன்றவர்கள் விதைத்த விஷ, பாரத-எதிர்ப் பார்வைகளால்தான் நம் பாரதத்தில் கல்வியின் நிலை, தற்போது இப்படி ‘உறவினர்களுக்குச் சொல்லியனுப்பிவிடவேண்டிய’ நிலையில் இருக்கிறது.

-0-0-0-0-

ஆஸாத் என்பது அவர் புனைபெயர். மௌலானா என்பதற்கு பண்டிதர் என்கிறமாதிரி பொருள். ஸையத் + ஹுஸ்ஸைய்ன் என்றால் அவர் மூதாதையர்கள் மொஹெம்மத் ரஸூல் வழி வந்தவர்கள் எனப் பெத்தபேச்சுப் பொருள். அவர் பெயர் ‘மௌலானா ஸையத்’ அபுல் கலாம் குலாம் முஹியுத்தீன் அஹெம்மத் பின் கைருத்தீன் அல்-‘ஹுஸ்ஸைய்னி’ ‘ஆஸாத்.’

கொஞ்சம் மூச்சுமுட்டுவதால், அவரை ‘ஆஸாத்’ என்றே குறிப்பிடுகிறேன். 1888ல் இப்போதைய ஸவுதி அரேபியாவில் இருக்கும் மக்கா நகரில் பிறந்தவர் இவர். மஸுதிகளிலும் இன்னபிற ஜல்ஸாக்களிலும், ஒரு தீவிரவாத இஸ்லாமிய மதபோதகராக, தீப்பொறி பறக்கவெல்லாம் பேசியிருப்பவர்.

சரி. 27 அக்டோபர், 1914 அன்று, கொல்கொத்தாவில், முஸ்லீம்களிடையே நடத்திய உரையில், கீழ்க்கண்டவாறு பேசியிருக்கிறார். (அவருக்கு அப்போது 26 வயது, நானும் சுமார் 22-23 வயதில் ஒரு திடத்துக்கு வந்துவிட்டேன். ஆனால், என்னைப்போலல்லாமல் அவர் ஒரு படிப்பாளி + புத்திசாலியும் கூட; ஆக, சுமார் 15 வயதிலேயே அவருக்கு ஒரு இஸ்லாமிய, ஜிஹாதிய திடம் வந்திருக்கவேண்டும்!)

(குத்பத்-ஏ-ஆஸாத் – ஆஸாத் அவர்களின் சொற்பொழிவுகள் – என 2010ல் தொகுக்கப்பட்டு மக்தபா-ஏ-ஜமால் எனும் லஹூர் பதிப்பகத்தால் வெளியிடப்பட்ட உர்தூ புத்தகத்தில் இந்த 1914 பேச்சு வெளியிடப் பட்டிருக்கிறது; ஆனால் எனக்கு இதனுடைய ஒருபடி, சுமார் முப்பது வருடங்கள் முன்னால் கிடைத்தது; உர்து அறிந்த அன்பர் ஒருவரிடம் அதன் ஆங்கில மொழியாக்கமும் கிடைத்தது.

அதன் முழுவடிவத்தையும் தமிழில் ஒருமாதிரி முழிபெயர்த்தேன்; அதனை ஒரு சிறு பேம்ஃப்லெட் போலக் கொணரலாம் எனவும் நினைத்தேன்; ஆனால், சிலபல காரணங்களால் ஏலவில்லை.

…இன்றுகாலையில் என் சொந்த ‘ஆவணக்காப்பகத்தின்’ தூசிக்களஞ்சியத்தில் இதனைத் தேடினால் கிடைக்கவில்லை. இரண்டு மணிநேரங்கள் வியர்த்தம். ஆகவே, விரக்தி. ஆனால், துஃபெய்ல் அஹ்மெத் அவர்கள், இதே பேச்சைக் குறித்து 2016ல் எழுதிய ஒரு ஆங்கிலப் பதிவு காணக் கிடைத்தது, நல்லவேளை இது கிடைத்தது, ஏனெனில் என் நினைவுகள் சரியானவையா என்றே எனக்குச் சந்தேகம் வந்துவிட்டிருந்தது; இது முழுமையானதல்ல என்றாலும், இது முக்கியம். இந்தப் பேச்சின் முழு ஸ்கேனும், குத்பத்-ஏ-ஆஸாத் புத்தகப் பக்கங்களில் இங்கே;   சரி. அந்தப் பேச்சிலிருந்து சில பகுதிகள் – முடிந்தவரை, சரியாக பெயர்த்திருக்கிறேன்; சந்தேகப் படுபவர்கள், உர்தூ தெரிந்தவர்கள் சரிபார்த்துக்கொள்ளவும்!

-0-0-0-0-

…ஒருமாதிரி மூலத்திற்குக் கிட்டேவருவதுபோல — இவருடைய பேச்சின் பின்புலத்தில் துருக்கியின் இஸ்லாமியவெறி காலிஃபேட் பிரச்சினைகள், ஸுன்னி-வஹ்ஹாபி-ஸலாஃபிய மதவெறி, அலிகட் முஸ்லீம் பல்கலைக்கழகத்தை ஸ்தாபனம் செய்தல், காஃபிர்களுக்குப் பாடம்புகட்டல், ரத்தக்களறிக்கு மோமின்களைத் தயார்செய்தல் எனப் பலப்பல விஷயங்கள்…

மோமின்கள் [சாதாரண விசுவாசி முஸ்லீம்கள்] ஒருவரையொருவர், கட்டிடத்தில் செங்கற்கள் ஒன்றுக்கொன்று உதவியாக இருப்பதுபோல, ஆதரிக்கவேண்டும்.

காஃபிர்களிடம் [முஸ்லீம் அல்லாதவர்]  மிக மோசமாக/முரடாக நடந்துகொள்ளுங்கள்; அதே சமயம், அதற்கு மாறாக நம்மவர்களிடம் [மோமின்கள்] மிகக் கரிசனத்துடனும் கருணையுடனும் இருங்கள்.

மில்லத்-ஏ-இஸ்லாம் [முஸ்லீம் சமுதாயம்] என்பது ஒரு உலகளாகவிய அமைப்பு, ஒரே நிறுவனம்! நாட்டு எல்லைகளுக்குக் கட்டுப்பட்டதல்ல!

உலகளாவிய பிரத்ரி [முஸ்லீம் சகோதரத்துவம்] அல்லாஹ்வால் ஏற்படுத்தப்பட்டது; உலகில் எந்த சொந்தம் வேண்டுமானாலும் உடையலாம், ஆனால் பிரத்ரி உடையாது. எந்தச் சக்தியாலும் அதனை உடைக்கமுடியாது.

தவ்ஹீத்தைப்  [இஸ்லாமிய மார்க்கம்/வழி] பின்பற்றுபவர்களுக்கு, இஸ்லாமிய சகோதரத்துவம் என்பதன் வழியாக, பலகடவுள் நம்பிக்கையாளர்களின் [ஹிந்துக்கள்] தாக்குதல்களை நாம் எதிர்கொள்வது என்பது புதிய விஷயம் அல்ல.

நினைவில் நிறுத்திக் கொள்ளுங்கள்! இன்று இஸ்லாமுக்கோ முஸ்லீம்களுக்கோ எந்தவொரு தேசிய அல்லது வட்டார போராட்டமும் ஒத்துவராது.

என் நம்பிக்கையின்படி, [இந்திய தேசிய] சுதந்திரப் போராட்டம் உட்பட அனைத்தும் சாத்தானின் சதிவலைகளே. அவையெல்லாம், தூங்கிக்கொண்டிருக்கும் நம்மை [முஸ்லீம்களை] எழ விடாமல் செய்யும் மந்திரமாயங்களே!

ஓ சகோதரர்களே! இதை நினைவிலிருத்துங்கள்! கொலைகொள்ளைகளை வெறுத்தொதுக்குதல், அமைதி, சமரசம் எல்லாம் சொல்வதற்கும் கேட்பதற்கும் நன்றாக இருக்கலாம். ஆனால் துரதிருஷ்டவசமாக, நம்முலகத்தில் உண்மையான சக்தி என்னவென்றால் அது வாளின் சக்திதான். வாழ்வின் ஊற்றுக்கண், வாழ்க்கையின் அடிப்படை நீராதாரம் என்பது – ரத்த ஆறுகளிலும் ஊற்றுகளிலும் தான் இருக்கிறது.

அஹிம்ஸா, அமைதிவழிக் காரர்களின் கையிலிருக்கும் கொடி பட்டொளிவீசிப் பறக்கலாம்; ஆனால் எவனுடைய கை ரத்தம் தோய்ந்த வாளைப் பிடித்துக் கொண்டிருக்கிறதோ, அவன் தான் உயிரோடிருக்கமுடியும்.

இதுதான் [வாள்] உலகளாவிய நீதியை நிலை நாட்டுவதற்கான முஸ்லீம் அரசின் ஊற்றுக்கண். [உலகத்தில் இப்போது] துருக்கி காலிஃபின் கையில் இருக்கும் வாள்தான், அல்லாவின் மதத்தைக் காப்பாற்ற இருப்பது.

விசுவாசிகளுக்கும் [மோமின்] குஃபர்களுக்கும் [பிற மதத்தைச் சார்ந்தவர்கள்] இடையே உள்ள வித்தியாசங்களை அறியுங்கள். கொர்-ஆன் வசனம் 2.14ல் சொல்லியபடி…

…நடிப்பவர்களை இனம் கண்டுகொள்ளுங்கள்… இந்த முனஃபக்கீன்கள் [கபடவேடதாரி முஸ்லீம்கள்] முஸ்லீம்களோடு இருக்கும்போது தம்மை முஸ்லீம்களாகக் குறிப்பிட்டுக்கொள்வார்கள்; ஆனால், தனியாக சாத்தான்களின் [ஹிந்துக்கள், முஸ்லீம் அல்லாதவர்] வீடுகளுக்குச் செல்லும்போது, நாங்கள் இருதயபூர்வமாக உங்களுடன்தாம் இருக்கிறோம் என்று சொல்வார்கள்…

ஓ, அன்புள்ள சகோதரர்களே! நான் இப்போது சொல்லப்போவதைக் கேட்டு நீங்கள் பயப்பட்டால், அது விசித்திரமாக இருக்கும்… நான் சொல்கிறேன்… அல்லாவையும் அவனுடைய தூதனையையும் [மொஹெம்மத் ரஸுல்] அவனுடைய புத்தகத்தையும் [கொர்-ஆன்] நம்பும் மோமின் [சாதா/சக முஸ்லீம்]  ஒவ்வொருவரும் இன்று, ஸபீலில்லாஹ்வின் ஜிஹாத் [அல்லாஹ்வின் வழி/மார்க்கத்துக்கான போர்] செய்யவேண்டிய நேரம் வந்துவிட்டது…

[பிறருடன்] நட்பும் விரோதமும் மானுடர்களின் தேவைகளுக்காக அல்ல – அவை அல்லாஹ்வின் மார்க்கத்துக்காக மட்டுமே!

இஸ்லாம் என்பது அல்லாவுக்கும் மோமின்களுக்கு மிடையேயான கொடுக்கல்-வாங்கல்தான்.

என்று நாம் முஸ்லீம்கள் என ஒப்புக்கொண்டோமோ, அன்றே நாம் இஸ்லாமுக்காக நம் உயிர்கள் விற்கப்பட்டுவிட்டன என்பதை அறிந்துகொள்ளவேண்டும்…

(ஒரு எடுத்துக்காட்டாகத்தான் மேலேயுள்ள சிலபல பகுதிகள் – ஆனால் இந்தப் பேச்சு முழுவதும் அப்படியொரு வெறி, பாவம் மோமின்கள்!)

-0-0-0-0-

இவர் பிற்காலத்தில், பாரததேசத்திற்கும் சுதந்திரத்துக்கும் போராடல் என்னும் கதையாடல்கள் எல்லாம், கொர்-ஆன் ஆமோதித்த தக்வியா அல்லது தக்கியா எனும் ‘பொய் சொல்லல்’ வகையில்தாம் வரவேண்டும்; பிற/ஹிந்துமதவெறுப்பு, வாள் வன்முறை, அப்பட்டமாகக் கொலைகொள்ளைகளுக்குச் சாதாரண மக்களைத் தூண்டுதல் என்பதெல்லாம் எனக்கு அப்படித்தான் படிப்பிக்கின்றன.

இடதுசாரி வெறியிய இர்ஃபன்ஹபீப்களால், மௌலானா ஆஸாத் ஏகபோக உரிமை கொண்டாடப்படுவதில், ஆகவே, ஆச்சரியமே இருக்கக்கூடாது!

இன்னொரு விஷயம்: ஆரிஃப் மொஹம்மத்கான், சர்வ நிச்சயமாக, ஒரு பண்புள்ள அறிஞர் என்பதை என் சொந்த அனுபவத்தை வைத்துச் சொல்வேன். ~முப்பது வருடங்களுக்கு முன் அவருடைய ஒரு பேச்சுக்கச்சேரிக்குச் சென்றிருக்கும்போது, இரண்டுமூன்று தடவை (இள ரத்தம் காரணமாக எனவொரு சால்ஜாப்பு) அவருடைய உரையில் இருந்த சிலபிழைகளை நானும் என் நண்பனும் (மரியாதையுடன் தான்!) சுட்டிக்காட்டினோம் எனவும் அவற்றை அவர், சபையில் ஒப்புக்கொண்டு மேலே தொடர்ந்தார் எனவும் நினைவு, சர்வ நிச்சயமாக அவர் பெரியவர்தாம்.

அண்மையில் புதுச்சேரியில் நடந்த பாண்டிலிட்ஃபெஸ்டில் – அதேபோல, அவர் மொஹெம்மத் இக்பால் பற்றிப்  பேசும்போது, அறிவியலாளர் ஆனந்த் ரங்கநாதன் அவர்கள், அவரை மேடையிலேயே (மரியாதையாகத்தான்!) திருத்தினார் எனவும்; உண்மையைச் சொல்லவேண்டும்; ஆனந்த் அவர்கள் சுட்டிக்காட்டியபோது, அவர் சொன்னது உண்மையாக இருந்தாலும், எனக்குக் கொஞ்சம் சங்கடமாக இருந்தது; ஆரிஃப் அவர்களை இப்படி நெளிய வைத்துவிட்டாரேயென்று. ஆனால் அதனையும் இயல்பாக எடுத்துக்கொண்டு,  ஆரிஃப் அவர்கள் பெருந்தன்மையுடன் ஒப்புக்கொண்டார் என்பதும் நினைவுக்கு வருகிறது. பெரியவர்தாம்!

ஆரிஃப் போன்ற மதிக்கத்தக்க ஆளுமைகளைச் சிறுமைப்படுத்தி அவர்கள்மீது அபாண்டமாகக் குற்றம் சொல்பவர்கள், காட்டுக் கூச்சலிடும் பதர்கள், இஸ்லாமியர்களின் நன்மைக்கு எதிரானவர்கள் மட்டுமல்லாது, பாரதத்திற்கு எதிரானவர்கள் + கடைந்தெடுத்த பொறுக்கிகள் என்பதில் எனக்கு ஐயமேயில்லை.

இர்ஃபன்ஹபீப்களை நான் இனம்கண்டுகொள்ளவேண்டும்.

-0-0-0-0-0-

1992ல், காங்கிரஸ் அரசு மௌலானா ஆஸாத் அவர்களுக்கு ‘பாரத ரத்னா’ பார்ஸல் செய்து கொடுத்தது.  இது Bharat RATna என்பதாகவும் இருக்கலாம் எனவொரு மாற்றுச்சிந்தனை.

ஆஸாத் பிறந்த நாளான, 11 நவம்பர், ஒவ்வொருவருடமும் ‘தேசியக் கல்வி தினமாகக்’ கொண்டாடப்பட்டுவருகிறது. (நான் வேலை செய்திருக்கும் பள்ளிகளில் முடிந்தவரை, அது கொண்டாடப்பட்ட சமயத்தில், ஸாத்வீகமான முறையில் இவருடைய மேற்படிப் பேச்சையும் குறிப்பிட முயன்றிருக்கிறேன், அவரைப் பற்றி முழுமையாகத் தெரிந்துகொள்வதும் கல்விதானே என்கிற ரீதியில்; ஆனால் ஒரேயொரு பள்ளியைத் தவிர இதற்கு இடம் கொடுக்கப்படவில்லை; நானும் அதற்கெதிராகத் திமிறியெழுந்து, போராட்டம் கீராட்டம் எனப் பேயாட்டம் ஆடவில்லை; ஏனெனில், நான் ஒரு கடைந்தெடுத்த இர்ஃபன்ஹபீப் அல்லன்; ஓரளவுக்காவது நிறுவனங்களுக்கும், பிறர் கூட்டும் சபைகளுக்கும் மரியாதை தருபவன்; ஆகவே!)

…பிறகு மக்களனைவரும் நெடுங்காலமாகச் சந்தோஷமாகவும் மதச்சார்பின்மையுடனும் படுலிபரல்களாகவும் பாவப்பட்ட காஃபிர்களாகவும் செத்துக்கொண்டிருக்கின்றனர்.

நன்றி.

 

16 Responses to “மௌலானா அபுல்கலாம் ஆஸாத், இர்ஃபன் ஹபீப்கள், கட்டுக்கதைகள், உண்மைகள் – சில குறிப்புகள்”


 1. An explanation from the venerable Arif Mohammed Khan about the despicable heckling of the infantile Irfan Habib — https://twitter.com/ANI/status/1211277963414687744

 2. Sridhar Says:

  மெளலானா ஆசாத் எங்கு, என்ன படித்தார், என்ன பேசினார், செய்தார் என்று அதிக விவரங்கள் படித்த நினைவில்லை. ராஜேந்திர பிரஸாத், கிருபளானி போன்ற தலைவர்களுள் ஒருவராகத்தான் அவரை அறிந்திருத்தேன்.

  ஆரிஃப் முகம்மது கான் என்ன மேற்கோள் காட்டினார் என்று தெரியவில்லை. ஆனால் தமக்கு வசதிப்பட்ட கருத்துக்களை, காந்தி சொன்னார், அம்பேத்கர் சொன்னார் என்று மேற்கோள் காட்டும் இந்தக் காலத்தில், ஒருவருடைய உண்மையான சாதனையை அவர்கள் விட்டுச் சென்ற சமூகத்தில்தான் காணமுடியும். ‘அவரவர் எச்சத்தால் காணப்படும்’ .

  அப்படிப் பார்த்தால், ஆசாதின் சாதனை, இன்றைய முஸ்லிம்களின் வளர்ச்சியின்மையில் தான் பார்க்க வேண்டும். வாய்ப்புகள் இருந்தும் ஜெஹாத், ஷரியா என்று தங்களை குறுக்கிக் கொண்டதற்கு , இந்தியாவின் முதல் கல்வி அமைச்சர் ஆஸாதாக இல்லாமல், மெளலானாவாக இருந்ததுதான்.

  இதை இன்னொரு கலாமுடன் ஒப்பிட்டுப் பார்த்தால், DRDO, ISRO என்று இந்தியாவின் சாதனைகள் நினைவுக்கு வரும். இந்த கலாம், பெரும்பான்மை முஸ்லிம்களுக்கு ஆதர்சமில்லை என்பது சமூக சோகம்.


  • ஐயா ஸ்ரீதர், கருத்துகளுக்கு நன்றி. (இன்னொரு அன்பருடன் இதனை எழுதுவதற்கு முன் விவாதித்தபோது, இதனை ஒரு ஹிட்-ஜாப் என்றார்! தேவையேயில்லாமல் கல்லடிக்கிறாய் என்றார். ஆனால் ஹிட்-ஜாப்கள் பெரும்பாலும் ஆதாரமற்று அடிமடியில் கைவைத்து அடிப்பவை. நான் அப்படிச் செய்யவில்லை என்பதுதான் என் அனுமானம் – மாறாக பொய்களை எழுதியிருக்கிறேன் என்றால், அவை சமகாலத் தரவுகளுடன் சுட்டிக்காட்டப்பட்டால், தாராளமாக மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன். ஒருவிஷயம்: ஹிட்ஜாப் செய்பவர்களுக்கு உரையாடல்களில் ஆசையில்லை. பலவீனமான இடங்களில் முகாந்திரமில்லாமல் அடிப்பது பின்னர் கண்டுகொள்ளாமல் ஓடுவதுதான் அவர்கள் செய்வது. நான் அப்படிச் செய்திருக்கிறேனா என்பதைச் சகஏழரைகளே முடிவு செய்துகொள்ளலாம்.)

   மிகுந்த யோசனைக்குப் பின், இந்தப் பழம்பஞ்சாங்கங்களை எழுதலாமா வேண்டாமா என்ற அல்லாடலின் பின்னர்தாம் இப்பதிவு. ஏனெனில் சில விஷயங்களைப் பற்றிப் பேசுவதில் பொதுவாகவே நமக்கு  ஆசையில்லை, பயமும் உண்டு என்பதற்கு அப்பாற்பட்டு – இதையெல்லாம் கிளறுவானேன் என்கிற மனப்பான்மையும் சோம்பேறித்தனமும்.  (ஆனால், இந்த எழவெடுத்த தண்டக்கருமாந்திர இர்ஃபன் ஹபீபின் ஆகாத்தியம் என்னை நிமிண்டியது என்பதையும் நான் ஒப்புக்கொள்ளவேண்டும் – இல்லாவிடில் சர்வ நிச்சயமாக இப்பதிவை எழுதியிருக்கமாட்டேன்)

   பொதுவாகவே, நமக்குத் தோதான, சலவை செய்யப்பட்ட விஷயங்களை மட்டும் அதுவும் ரத்தக்கறைகளை வெளியே தெரியாதவாறு மடித்துத் துப்புரவாக விஷயங்களை வெளியாட்களுக்குக் காண்பிப்பதில், நமது இடது வரலாற்றாள லும்பன்கள் பெரும் சாதனைகளைச் செய்திருக்கிறார்கள். அதே சமயம் பாரம்பரியங்களில் இருக்கும் சிறு அழுக்குகளை மாபெரும் ரத்தக்கறைகளாகக் கொடூரமாகச் சித்திரித்த ரஸவாதமாற்றத்தையும், அவர்களுடைய காலனியத் தகப்பன்களுத் திருப்திதரும் வகையில் செய்திருக்கிறார்கள், தொடர்கிறார்கள். இதற்கெல்லாம் நம் போக்கற்ற அறிவுஜீவிகளின் ஜால்ரா வேறு.
   ஆஸாத் அவர்களின் ஆளுமை – நேரடியாகவே பாரதத்து முஸ்லீம்களின் தற்கால அழிச்சாட்டிய நிலைக்கு அடிகோலியிருக்கிறது. மஸுதிக்குள் ஒரு பேச்சு, வெளியே இன்னொரு பேச்சு எனும் இரட்டைவேடங்கள் – அதன் (முன்னரே யோசித்து வடிவமைக்கப்பட்ட) பலனைத்தான் அளித்திருக்கின்றன.

   ஆயிரம் வருடங்களுக்கும் மேலாக, இன்றுவரை மஸுதி வெள்ளிக்கிழமை மாலை ஜும்மாக்களில் ‘இஸ்லாம் ஒன்றுதான் மார்க்கம், பிற அனைத்தும் ஒழிக்கத்தக்கவை, அல்லாஹ்வல்லாத அனைத்துக் கடவுளர்களும் பிறநம்பிக்கையாளர்களும் ஒழிக்கப்படுவது இஸ்லாமுக்குப் புரியும் சேவை’  என்கிறரீதியில் பரப்புரை தொடர்வதற்கும், வெளியே நம் இடதுசாரிகள்+அறிவுஜீவிகள் மஸூதியுள்வாதத்தைக் கண்டுகொள்ளாமல், மதச்சார்பின்மையையும் சகிப்புத்தன்மையையும் பிற நம்பிக்கையாளர்களுக்குப் பெருந்தன்மையுடன் போதிப்பதும் ஆஸாத் காலத்துக்கு முன்பும் இருந்தது. பின்னரும் தொடர்கிறது. ஆகவே கஸ்வா-ஏ-ஹிந்த் ஆனந்தமாகத் தொடர்கிறது.

   ஏபிஜெ அப்துல்கலாம் – இந்தக் கலாம் அவர்கள் பற்றியும் குறிப்பிட மறந்துவிட்டேன். சுட்டிக்காட்டியதற்கு நன்றி. அவருடைய பொறியியல், மேலாண்மை குறித்த சாகசங்கள் பற்றி இரண்டுவிதமான கருத்துகள் இருக்கலாம் – ஆனால், தொடர்ந்து, பாரதம் எனும் கனவு பற்றிப் பேசி, ஒரு ஒருங்கிணைப்பு சக்தியாக இயங்கிவந்த பெரியவர் அவர். அவரால் செயலூக்கம் பெற்ற சில இளைஞர்களை நானறிவேன்.

   இருந்தாலும், அவரை ‘பாப்பார கலாம்’ என அழைத்த பலப்பல முட்டாள் தற்குறி முஸ்லீம் இளைஞர்களையும், அவரைக் காஃபிர்(!) என்றழைத்து ஹிந்துக்களை இழிவு செய்வதைப்போலச் செய்தவர்களையும் (உத்தரப் பிரதேசத்தில்!) அறிவேன்.

   ஏனெனில், இஸ்லாமின் வடிவமைப்பில், அதன் தற்காலத்திய செயல்முறைப் படுத்தல்களில், கலாம் போன்றவர்கள் மிகமிகச் சிறுபான்மை விதிவிலக்குகளே; விட்டிருந்தால் உம்மா காரர்கள், கொர்-ஆன் /ஷாரியா விதிகள் படி அவருக்கு நீதிபரிபாலனம் செய்து (=சிரச்சேதம்) இன்புற்றிருப்பார்கள், பாவம்!

   …காரணங்களை, ஆஸாத் அவர்களே தீவிரமாக விளக்கியிருக்கிறார். ஆம்பேட்கர் அவர்களும் பாரத-பாகிஸ்தாம் பிரிவினை சமயத்தில் இவற்றுக்கெல்லாம் ஒரு சுருக்கமான பொழிப்புரை இட்டிருக்கிறார்.

   ஊக்கபோனஸ்: ஆனால் தற்காலத்திலும் தொடரும் அயோக்கிய இவாஞ்செலிக்கல்களின் ஆகாத்தியம் – இந்த அயோக்கிய ஜிஹாதிகளைவிட ஆழமும் வீரியமும் கமுக்கமும் கொண்டது என்பதையும்  பாரதவாசிகள் மறக்கக்கூடாது.

   வரலாறு நம்மை விடுதலை செய்யலாம், ஆனால்…  பார்க்கலாம்.

 3. Sivaaa Says:

  இவர் முட்டாள் என்பது சாரச்சா நேருவிற்கு நன்றாகத் தெரியும். இருந்தாலும் முஸ்லிம் முகம் வேண்டும் என்பதற்காக அருகில் வைத்திருந்தார். அஷ்டே.


  • ஓ! இந்த விஷயங்களை நான் அறியேன். நேருவும் ஆஸாதும் ஒருவருக்கொருவர் மிகைபுகழ்ச்சியாகப் பேசியுள்ளவைகளை நான் அறிவேன், அவ்வளவுதான்.

   ஆனால், நேரு அவர்கள் ஒரு கைதேர்ந்த அரசியல்வாதி. இந்தக் கடைசி வார்த்தையை நான் பொதுவாக எதிர்மறையாக உபயோகிக்கமாட்டேன். ஆனால் அவருடைய பராக்கிரமம் அப்படி.

 4. உலகநாதன் Says:

  நன்றி நன்றி திரு ராமசாமி அவர்களே! இது நாள் வரையிலும் இருந்த பிம்பத்தை அடித்து நொறுக்கியதற்க்கு நன்றிகள் பல. இன்னும் அடித்து நொறுக்கி வேண்டிய பிம்பங்கள் எத்தனை எத்தனையோ??ஏ அப்பா!!!


  • ஹ்ம்ம், கருத்துக்கு நன்றி.

   ஐயா, ஆனால் நான் அடித்து நொறுக்க முயலவில்லை. சிலபல அக்கால நிகழ்வுகளை நினைவூட்டிக்கொண்டு  ஏழரைகளுடன் பகிர்ந்துகொண்டேன், அவ்வளவுதான்.

   (இக்காலங்களில், அசிங்கமான உண்மைக்குப் புறம்பான பரப்புரைகளைத் தொடர்ந்து எதிர்கொள்ள வேண்டியிருப்பதன் அவசியத்தையும், தரவுபூர்வமாக ஆவணரீதியாக கருத்துகளையும் எதிர்வினைகளையும் சமைத்துக்கொண்டு அவற்றைப் பதிப்பிக்கவேண்டிய அவசியத்தையும் உணர ஆரம்பித்திருக்கிறேன்)

   மிகவும் அருகில் போனால், கொஞ்சம் நோண்டினால் பெரும்பாலான நம் பெருந்தகைகள் இளித்துவிடுகிறார்கள், என்ன செய்ய.


 5. “Geriatric goon and quack historian Irfan Habib who was humiliated by the High Court for peddling lies, tries to heckle hon’ble governor Arif Mohammed Khan, barely concealing an excommunication threat.”


  • ஆஹா. படித்தேன். இறும்பூது. ஏனெனில் இது முழுமையான உளறல்.

   ஒரு 17 வயதுச் சிறுவன், மகோன்னதமான உலகத்தில் உள்ள ஞானத்தையெல்லாம் விக்கிபீடியா க்வோரா மூலமாகப் பிழிந்து கொட்டியிருக்கிறான், பாவம்.

   வெட்கமாக இல்லை, உங்களுக்கு? இந்த மசுத்தையெல்லாம் ஒத்திசைவுப் பின்னூட்டமாக இடுவதற்கு?

   ஒரு தராதரம் வேண்டாமா? த்தூ.

   • suswilc Says:

    😆 I too treat this boy’s post on par with yours.

    • suswilc Says:

     உளறல் Denying
     பாவம் sympathy
     மசுத்தையெல்லாம் scolding
     த்தூ Double scolding :D :D

     Understandable Ramasami :0)

 6. S Says:

  Mr/Ms/Dr Suswilc,

  The 17-year old must have stayed away from school or must have flunked in Civics in high school. For simplicity, let me summarize why the adolescent is wrong.

  The constitution provides enough mechanisms to address common man’s views and concerns, namely – executive, legislative and judiciary. Any change must be effected by this and fit in this framework.

  It also allows for peaceful protests to educate the common man/woman about the protestors’ views so that they can be influenced to bring about the change through legislature.

  If liberals think that they can change the world by simply protesting, they have no idea how democracy works.

  If you care to follow a few of the key tweeples like the @aranganathan72 mentioned above, you will realize that there is a huge difference between a being a liberal and being critical of the government. Liberals are identified by their lack of faculty called reasoning. In a way, they are mentally challenged.

  On Nehru, Article 370 and Ram Mandir, India before 300 years, the kid must have flunked his history too. Having a lot of foot-notes and references does not compensate for lack of application.

  Too bad you had to quote such a kid.

  S


  • Sir, thanks so much, much appreciated – for the kind words and balanced advice.

   May your tribe increase as also, um, my diatribe.

   Hugs.

   • suswilc Says:

    Hi
    Thanks for your “extensive” research on 17 year old’s post.

    It makes me smile that you believe the quora post belongs to a 17year old boy, but not the content of the post.


 7. […] மௌலானா அபுல்கலாம் ஆஸாத் அவர்களுடைய மதச்சார்பற்ற, படுலிபரலான ஜிஹாதிவெறி … குறித்த பழைய விஷயங்களை என் […]


Leave a Reply to வெ. ராமசாமி Cancel reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s