“டேய்! இந்தக் கலர் சட்டைய நீ போட்டுக்கவே கூடாது, யெனக்கு இத சுத்தமா புடிக்காதுன்னு தெரியும்ல…”

03/01/2020

“…இப்ப அதக் கள்ட்டிப்போடு! இல்லாக்காட்டீ வொன்னை அன்ஃப்ரெண்ட் செஞ்ச்ருவேன், ப்ளாக் பண்ணிப்டுவேன்!”

-0-0-0-0-0-

!?

இப்படி உங்கள் ‘நண்பர்’ யாராவது உங்களிடம் கோபப்பட்டுச் சொன்னால், நீங்கள் அவரைப் பற்றி என்ன நினைப்பீர்கள் அல்லது பதிலுக்கு என்ன சொல்வீர்கள், சொல்லுங்கள்?

நீங்கள் பதிலளிக்கத் தோதாக கீழே சில ஒருமாதிரி பதில்கள்:

அ. ய்யோவ்! இன்னாதூஊஊஊ? ஜோக்கா அடிக்றே?? ஹிஹ்ஹீ! ஆனாக்க வொன் ஜோக்கு பிர்லியே நைய்னா!

ஆ. ஐய்யய்யோ! இன்னாமாறீ இத்கெல்லாம் பொஸ்க்னு கோவப்பட்றே! மன்னிச்டுபா, இனிமே இந்த சட்டய நான் போடவேமாட்டேம்பா!

இ. இதயல்லாம் சட்ட பண்ணாம இருபா, ஏற்கனவே கொஸ்க்கடி ஸாவ்டிக்குது, எங்கிட்ட வேற கலர் சட்டயே இல்லபா, யின்னாத்த ஸெய்றது ஸொல்லு…

ஈ. ஸர்ரி. நீ வேற சட்ட வாங்கிக்குடு, அப்பால பாக்கலாம்.

உ. ஓ! வேற இன்னா கலர் வொன்க்குப் புட்க்குன்னிட்டு ஸொல்லு, அமேஸான் ‘தமாகா ஆஃபர்’ல இம்மீடியட்டா ஆர்டர் பண்ணிட்றேன்!

ஊ. நான் இன்னா கலர் சட்ட போட்ணும்னிட்டு நீ சட்டம் போடாதபா, வுட்ரூ…

எ. என்னிக்காச்சும் வொங்கிட்ட ஒம் மூஞ்ச மாத்திக்கன்னு சொல்லிருக்கனா? நீ மட்டும் ஏம்ப்பா இப்டீ??

ஏ. பரவால்ல, எனக்கு என் சட்டயோட கலர் புட்ச்சிர்க்கு. ஆள வுட்டாப் போதும்.

ஏ. இவ்ளோதானா வொன்னோட டக்கு? இதெல்லாம் ஒரு அறிவொரையா? மெர்ட்டலா? எச்சரிக்கையா?? எல்லாம் என் நேரம்… இதயெல்லாம் கேட்டுக்னு கீறேன்பாரு…

ஐ. யோவ்! யெங்க #கீள்டீலயே இந்தக் கலர் சொக்கா போட்டுக்கினு இர்ந்தானுங்கோ! அங்க கெட்ச்ச கரித்துண்டே அல்லாத்தயும் கதகதயா சொல்லிச்சேடா! எம்பாட்டன் பூட்டன், எங்க மண்பானே கலரே அந்தக் கலர்தாண்டா! ஸங்ககால்த்ல தெர்வள்வர் புக்ல அப்டீயே கீதே, இத்தே கலர அவ்னுங்க சங்கீங்கோ யூஸ்பண்ணாங்கன்னிட்டு ஸொல்லலே? லெமூர்யாவ்ல இர்ந்திச்சின்னிட்டு ஸன் டீவில ஆறாய்ச்சிசெஞ்சி முடிவ் சொன்னாங்க்ளே! கலைங்கரே ஸொல்லிட்டாரே! கேஸ் க்ளோஸ்டு. அத்தொட்டு நீதான் வொன் சட்டைய மாத்தீ என்சட்டை கலர்ல போட்டுக்ணும்!

ஒ. இன்னாபா! நம்க்கு நம்ப வாள்க்கைல சொக்கா கலரா ற்றொம்ப முக்கியம்? அத்த பத்தி கவ்லே படாம, நம்பொ வொலகத்த குலுக்ற ப்ரச்னேய பேசுவ்யா… அத வுட்டுட்டு…  மணிரத்னம்சாரோட புதுசார் சினிமாசார் பத்திசார் பேசலாண்டாசார்! நாளெக்கீசார் போஸ்டர்சார் ரீலீஸ்சார் பண்றானுவோவேறசார்!

ஓ. இந்த கலர்ல சட்ட மட்டும்தான் போடக்கூடாதா? அல்லாகாட்டி அந்தக் கலர்ல கீற அத்தினி வெவகாரமும் கூடாதா? கோமணக் கல்ரூ? ஸாப்பாட் கலரு? ஸாராயக் கலரூ??

ஔ. <எனக்கு வொன்னமாறீ ஸைக்கோ நண்பனும் வோணும், எனிக்குப் புட்ச்ச என்னோட கலர்சட்டயும் வோணும், இப்ப இன்னா ஸெய்றதுண்ணு தெர்லயே! இப்டி 2020 புதுவர்ஷத்ல மாட்டிக்கினு முளிப்பேன்னிட்டு தெர்ஞ்சிருந்தா, 2019லயே உள்ளிர்ப்பு மறியல் ஸெஞ்சிர்ப்பனேடா…>

ஃ. <எப்டியாச்சும் இந்த ஃப்ரெண்டன் ஆள்ட்டேர்ந்து டபாய்ச்சி பிச்சிக்கினு தப்ச்சி ஓடிட்ணும், இல்லாகாட்டி, டேஞ்ஜர். என் டவுசர்கிட்ட போவான் நெக்ஸ்டா… தேவையா சொல்லுபா>


<வேறு ஏதாவது எதிர்வினை…>

உங்களுக்கு என்ன தோன்றுகிறது? நீங்கள், யோசிக்கும் திறமைபடைத்தவராக இருந்தால், இம்மாதிரி அழிச்சாட்டிய நண்ப அன்பர்களை எப்படி எதிர்கொள்வீர்கள்?

ஆனால் ஒருபக்கம் பார்த்தால் – இம்மாதிரிக் கிடுக்கிப்பிடிப் பிரச்சினைகள் நம் வாழ்க்கையில் சாதாரணமாக, ரணமாக நடப்பவைதாம். அருமையெருமை நண்பர்கள்அன்பர்கள் பாட்டன்பூட்டன் அப்பன்மகன் மனைவிதுணைவி குடும்பத்தினர் உறவினர்கள் பக்கத்துவீட்டுக்காரர் எனவந்தால், சிலபல சமயங்களில், இப்படியப்படி என இருக்கும், சிலசமயம் மாரடைக்கும்படிக்கு நடந்துகொள்வார்கள், தொடர்பற்றும் தலைகீழாகவும் பேசிக் கழுத்தறுப்பார்கள்; ஆக, நமக்குச் சரியாகப் பிடிபடாத அல்லாத ஒத்துவராத விஷயங்களை ‘ஸ்வல்பா அட்ஜஸ்ட் மாடி’ என இங்கிதம் பார்த்தும் கண்டுகொள்ளாமல் கடந்து/நடந்து கொள்ளலாம்.

ஆனால்… … எல்லா சமயங்களிலும் இப்படிக் கடைத்தேற அல்லது தப்பிக்க முடியுமா? நம் அனைவரிடமும் அதற்கேற்ற நகைச்சுவை உணர்ச்சி இருக்கிறதா? அல்லது தடித்ததோல் நொதுமல்நிலையும் தாங்குதிறனும் இருக்கின்றனவா?

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? (நான் என்ன நினைக்கிறேன் என்றால்: இக்காலங்களில், இப்படி அழிச்சாட்டியமாகவும் பொறுப்பற்றும் சகிப்புத்தன்மையில்லாமலும் வெறித்தன்மையுடனும் நடந்துகொள்பவர்கள் மிகப்பெரும்பான்மையில் ‘இடதுசாரிsorry’ லிபரல் வட்டாரங்களில், ‘நேருவிய ஸோஷலிஸ’ மேனாமினுக்கிகளில், மதசார்பின்மைவாத ஏகாதிபத்தியங்களில், முன்னணி அறிவுரைவாதிகளில் ஐக்கியமாகி இருப்பவர்கள்…)

பின்குறிப்பு #1: ஒரு அன்பரிடம் இதே முக்கியமான கேள்வி (ஆனால், தளம்/களம் வேறு) பற்றி நேற்று நேற்றையமுன்தினம் ஒரு பேச்சு வந்தது. கொஞ்ச நேரம் இந்த மசுர்பிளக்கும் தத்துவார்த்தமான கேள்வி பற்றிச் சுற்றிவளைத்து அரட்டை அடித்தபின்னும் அவர் வழிக்கு வராததால் – நான் இதற்கான இடஞ்சுட்டிப் பொருள்விளக்கிப் பொதுவாக இடம்பொருளேவல் பற்றிச் சொன்னேன், அவர் மறுபேச்சில்லாமல் ஜகா வாங்கினார்… பார்க்கலாம், அவர் அதுகுறித்து இங்கு வந்து தன்னிலைவிளக்கப் பின்னூட்டமிடுகிறாரா என்று!

பின்குறிப்பு #2: ஏறத்தாழ இப்படிக் கோபப்பட்ட நண்பர், நம்மில் பலருக்கும் அறிமுகமானவர்தாம். பார்க்கலாம், சகஏழரைகளில் எவ்வளவுபேர் இதற்கு இடஞ்சுட்டிப் பொருள் விளக்குகிறீர்கள் என்று.

-0-0-0-0-0-

9 Responses to ““டேய்! இந்தக் கலர் சட்டைய நீ போட்டுக்கவே கூடாது, யெனக்கு இத சுத்தமா புடிக்காதுன்னு தெரியும்ல…””

 1. a Says:

  MODI

 2. dagalti Says:

  சட்டைநிறம் மட்டுமிலை சட்டையணி மாந்தரொடும்
  ஒட்டுறவு விட்டொழிய வில்லையெனில் கெட்டவனாம்
  அட்டபுய மாலவனின் தோலதனை சட்டையென
  ஒட்டியசீர் காழியனே காப்பு

 3. Sachidanandam Says:

  எமக்கும் புரியவில்லை சொக்கா!!!

 4. Sridhar Says:

  “…இப்ப அதக் கள்ட்டிப்போடு! இல்லாக்காட்டீ வொன்னை அன்ஃப்ரெண்ட் செஞ்ச்ருவேன், ப்ளாக் பண்ணிப்டுவேன்!”

  இத்தோட நின்னா பர்வால்லபா. செத்தா பொதைக்க விடமாட்டேன். நாறிப்பூடுவன்னு சொன்னா என்னாபா செய்றது?

  அதாவது பர்வால்ல. செத்ததுக்கு அப்புறம் நமக்கு தெர்யவா போவுது? உன்னியப் போட்டுத் தள்ளிடுவேன்னு சொன்னாக்கா நா என்னாபா செய்றது?

  எள்தி வெச்சிக்கன்னு சுன்னாம்பா.

  ஸொல்றவன் ஹபிபின்னு தான் ஸொல்றான். ஆனாக்க பட்டாக்கத்தி வெச்சிருக்கான்பா. ஆளவிட்டு கல்லால வேற அடிப்பாம்போல.

  அவஞ்சொன்னா, பச்ச,வெள்ள, கருப்புன்னு எது வேணாலும் போடுவேன். ஆனா காவி மட்டும் ஆவாது.. அஆங்.


  • : -) கோச்சிக்காதபா! வொம் பேட்டல நீதாம்பா கிங்கு!  ஜகா வாங்க்றேன்பா.

   ஐயன்மீர்! வேண்டுமளவு  ‘க்ளூ’ கொடுத்திருக்கிறீர் – அதுவும் என்னுடையது போலல்லாமல், நல்ல தூய்மையான டபுள் ரீஃபைன்ட் செம்பாஷை மெட்றாஸ்பாஷையில்; பார்க்கலாம் வேறு யாராவதும் இதனைக் கண்டுபிடிக்கிறார்களா என்று!


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s