அசோகமித்திரன் அவர்களின் ‘கரைந்த நிழல்கள்,’ நம் தண்டக்கருமாந்திரப் போராளி இளைஞர்கள் – குறிப்புகள்

03/01/2020

இந்த, எளிதாக விவரிக்க இயலாத, ஆகவே என் மனதைக் கொள்ளைகொண்ட சிறு நாவலை, நான் 1977வாக்கில் உயர் நிலைப் பள்ளியில் இருக்கும்போதுதான் முதலில் படித்தேன்…

…அப்போது அனுபவங்கள் குறைவானதால், சிலவிஷயங்கள் புரிந்தன – பல அப்படியில்லை – ஆனால் கொஞ்சம் கலங்கிவிட்டிருந்தேன்; பின்னர், 1985வாக்கில் அன்னம் அதன் மூன்றாம் பதிப்பை வெளியிட்டபோது, என் பகுதிநேர வேலைச்சம்பளத்தில் இரண்டாவதாக வாங்கி அசைபோட்ட புத்தகம் இது. முதலாவதாக வாங்கியது: கெடெல்-எஷர்-பாஹ்.

‘கரைந்த நிழல்கள்’ புத்தகத்தின் பலபகுதிகளை மேற்கோள் காட்டிக்கொண்டே ஒரு வியாக்கியானமும் அளிக்காமல் – நம் ஊகங்களுக்கும் மறுவூகங்களுக்கும் வேண்டிய இடம் கொடுத்துக்கொண்டே விகசிக்கலாம். இதன் எளிமையை ஆழத்தை மாளாஅழகை, விஷயங்களைக் கோடிமட்டும் காட்டிவிட்டுத் தொடர்ந்து அகன்றுகொண்டேயிருக்கும் தன்மையை ++.

பல பாத்திரங்கள், சில சித்திரங்கள், ஒரு நிகழ்விலிருந்து இன்னொன்றுக்கு வழுக்கிக்கொண்டு செல்லாமை, திகைக்கவைக்கும் எளிமை, சாம்பல் நிறம்  – முதற்பார்வைக்கு ஒருமாதிரி முழுமையற்ற தன்மையைக் கொடுக்கும் வகைப் புனைவு. படிப்பவரின் பரிணாம வளர்ச்சிக்குகந்த விதத்தில், அவர்கள் ரசனை அனுபவம்/பயிற்சிக்கேற்ப விரியும் உரையாடல் தன்மை.

சரி. இப்புத்தகத்திலிருந்து மேற்கோள்வகை excerpts மட்டும் கொடுத்தே – கர்வத்துடன் அவையே என்னுடைய expertise எழவைக் காண்பிப்பதாக நான் மினுக்கிக்கொள்ளாமல் – இது ஒருமாதிரி excerptise என்பதில் மட்டுமே ஆழ்ந்து இவற்றைப் பகிர்கிறேன் என மகிழவும். யாம் பெற்றபேறு பெறுக இவ்வையகம்.

-0-0-0-0-

ராம ஐயங்கார் (தன்னுழைப்பில் மேலுக்கு வந்த ஆள் – சாம்பல் நிறத்தோன்) அவர்களின் மகன் பாச்சா.

செல்வத்தில் வளர்ந்தவன். ஆகவே திமிர்பிடித்து ஒருமாதிரி எல்லாவற்றுக்கும் தான் பாத்தியதைப்பட்டவனாக வரித்துக்கொண்டு மினுக்கும் இளைஞன். A run-of-the-mill youth with an arrogant sense of entitlement…

உழைப்பில் நம்பிக்கையில்லை, ஈடுபடுதலும் இல்லை – ஆனால் ஏகத்துக்கும் நுனிநாக்கு ஸோஷலிஸ்ம். தடிமாடுபோல வளர்ந்தும், தான் தன்னைச் சுற்றியிருப்பவர்களைச் சுரண்டித்தான் வாழ்ந்தாலும் – ஆனால் அதுகுறித்த ப்ரக்ஞையே இல்லாமல் வளையவந்து ஊருக்கு ஸோஷலிஸ அறிவுரை கொடுப்பவன். பெற்றோர்களுக்கு எதிராக ஆஹாவெனஎழுந்ததுபார் யுகப் புர்ச்சி – ஆனால் அதையும் அவர்களிடம் உண்டியலை குலுக்கியாட்டிக்கொண்டு மட்டுமே!

பலப்பல விஷயங்களில் எனக்கு இந்த பாச்சா, என் சில அக்கால நண்பர்களையும், ஏன் இக்கால அறிமுகங்களையும்கூட நினைவூட்டுபவன்.

டாடா இன்ஸ்டிட்யூட் ஆஃப் ஸோஷியல் ஸைன்ஸஸ், ஜேஎன்யு, ஆம்பேட்கர், அஷோகா, ஆஸிம்ப்ரேம்ஜி, அலிகட் வகைக் கலா(!)சாலை(!!)களையும் அவற்றின் பெரும்பாலும் திமிர்பிடித்த மேதாவிப் பேராசிரியர்களையும், பெரும்பாலான கூறுகெட்ட தண்டக்கருமாந்திர மாணவர்களையும் நினைவு படுத்துபவன். அரசின், சமூகத்தின், தொழில்முனைவோர்களின், தொழில் நுட்பத்தின், வரிகட்டும் பொதுஜனங்களின் — உபரிவுருவாக்கங்களையும் சகலசாத்தியக்கூறுகளையும் உதவியாகத் துளிக்கூடவெட்கமில்லாமல் பெற்றுக்கொண்டு — தானம் கொடுத்தவர்களை அவ்வமைப்புகளை, இடதுசாரித்தன உச்சாடனத்துடன் எட்டி மிதிப்பவன், துச்சமாக மதிப்பவன். சொகுசுப் போராளி. தண்டக்கருமாந்திர ‘அறிவுஜீவி.’

விட்டால், ஏமாந்தால் – இவனும் சேகுவேரா லக்கான் தெர்ரிதா க்ராம்ஷி புர்ச்சி பின்நவீனத்துவம் என முழ நீளத்துக்குப் பேசக்கூடும். ஏன், ராமச்சந்திரகுஹா ரொமிலாதாபர் அமர்த்யாஷென் நோம்சாம்ஸ்கி என்றெல்லாமும் கூட. கழுதை கெட்டால் குட்டிச்சுவர்.

சரி. கீழே, பாச்சாவுக்கு ராம ஐயங்காரின் உபதேசம், ‘கரைந்த நிழல்கள் கீதை’  –  மூன்று ஸ்கேன்களில். படித்து யோசிக்கவும். நன்றி.

END

10 Responses to “அசோகமித்திரன் அவர்களின் ‘கரைந்த நிழல்கள்,’ நம் தண்டக்கருமாந்திரப் போராளி இளைஞர்கள் – குறிப்புகள்”

 1. Raj Chandra Says:

  அசோகமித்திரன் கதைகளை எத்தனை முறைகள் படித்தாலும் ஏதாவது புதிதாக மாட்டும்.  அவரின் செகந்திராபாத் கதைகளைப் பற்றி நான் புரிந்துகொண்ட வரையில் வரைந்தது.  சொல்வனம் ஆசிரியர் குழு பொறுமையாக திருத்தி செப்பனிட்டார்கள். பிழைகள் என்னுடையது.
  https://solvanam.com/2014/07/16/%e0%ae%85%e0%ae%9a%e0%af%8b%e0%ae%95%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9a%e0%af%86%e0%ae%95%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf/


  • ஐயா, நன்றி அடுத்த சில நாட்களில் உங்கள் கட்டுரையைப் படிக்கிறேன்.

   குறிப்பிடத்தக்க இலக்கியக்காரர்களில் ஒருவரான நம் அசோகமித்திரனையும், நம் அலக்கியக்காரர்கள் அரசியல்படுத்தியெடுத்து இஷ்டத்துக்கு வதந்திகளைப் பரப்பினார்கள் என்பதை நினைத்தால்தான் எனக்கு ஆச்சரியம்.

   ஆனால், எல்லாமே புனைவுதான். #எபோமா

   இந்த  #எபோமா பற்றியும் நேற்றுதான் என்னவென அறிந்துகொண்டேன்.

   Life is full of surprises. #எபோராச! ;-)

 2. dagalti Says:

  Excerpt from G.V.Desani’s foreword(!) to his All About H.Hatterr

  I wanted to worship beauty. Sane reflection, and I realised that beauty costs, expense and effort. Even the wish to see the sun set in the Himalayas was a wish unfulfilled without a ticket to, boarding the very early train to, and the uphill climbing.

  Why trouble? Why not dream instead? Convinced, I provided me an arm-chair, and induced experience. Thus I realised Beauty, and Beauty-experience. Such visions.

  My late father, heard of this. He walked me into my corner of the house, tactics! and offered to cut me off with a shilling. Which threat was my cue to speak.

  ‘From now I’ll be guided, Sir kinsman. I’ll be up early. In bed till noon’s a fault I’ll daily mend. Change my diet too. Much milk, I appreciate, isn’t good for me. Just allow me three days’ lamentation, and no more day-dreams! Count on me to do the Admirable Acts. My goal’s to acquire properties, goods. By craft, by cunning, I have both; by legal sanction, by religious warrant, on my side, both, by right imperial motive, and any old otherwise, I know how!’

  He asked me if I was serious. How did I propose going about it?

  By doing the approved acts. I’ll organise. I’ll lead. Enthusiasm is the key-note. Man’s got to increase the size of things, bigger and bigger! Got to go fast, faster and faster! Got to add to the available things, more and more! Excelsior!

  The interview over. Three days’ reflection and Sanity.

  To achieve ease by so much unease! To want and fight for things that all want (an unsocial act), to stick to the family and later on raise an & co. of my own, whom I must prefer to any other man’s (an unsocial act), to cause competition, to spend a life-time doing , when the armchair is there, mine already!

  Resolved, I’d be content with smaller and smaller, go slower and slower, have lesser and lesser. If necessary, the least.

  He accused me of bad faith, cut me off, and kept the shilling.

 3. Arun Says:

  //எதுவும் திடீரென மடிவதில்லை. எதுவும் திடீரெனப் பிறந்து விடுவதுமில்லை. ஒவ்வொருவனுக்கும் ஒரு சாம்ராஜ்யம் பெரியதோ சிறியதோ இருக்கிறது. அதை அவன் விழிப்போடு கைவசம் வைத்துக்கொள்ளத் தவறும் ஒவ்வொரு கணத்திலும் அதன் மீது இருபது படையெடுப்புகள் நிகழ்கின்றன.

  நீ என்றாவது திவாலாகப் போனால் இதை நினைவு வைத்துக்கொள். நீ ஒரே நாளில் திவாலாகவில்லை.//

  கீதையேதான்.ஸ்கேன் பக்கங்களுக்கு மிக்க நன்றி சார்.


 4. Δ7.5? You are most welcome, siree.


Leave a Reply to suswilc Cancel reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s