சிசுவுற்பத்திச் சிந்தாமணி

10/01/2020

தேன்சுவை குடித்தவற்கே தெரியும்; சிசுவுற்பத்திச் சிந்தாமணியின் அருமை, படித்தவற்கே தெரியும்.

சென்னையிலிருந்து பதிப்பிக்கப்பட்ட ‘மாதர் மனோரஞ்சனி’ சஞ்சிகையின் மே 1908 இதழில், இந்த விளம்பரம் வந்திருந்தது.

சிந்தாமணியை முழுவதும் சுவைக்க லபிக்கவில்லை என்றாலும், குறைந்தபட்சம் இந்த விளம்பரத்தையாவது 108முறை வாசித்தால், மனமுருகிப் பாராயணம் செய்தால் –  படிப்பவர்களுக்கு திராவிடஸ்தான் சர்வ நிச்சயமாகப் பலிக்கும்.

#கீழடி அகழ்வாராய்ச்சியில் பொதுயுகத்துக்கு 2000 வருடங்கள் முன்பு யாப்பு செய்யப்பட்ட முதல் தமிழ்ச்சங்கத்தின் அனைத்து ஆக்கங்களும், படிகள் சரிபார்த்து தோல்பைண்டு செய்யப்பட்டுக் கிடைக்கும்; ஆச்சரியப் படத்தக்கவகையில் அவற்றின் மின்நூல்களும் தரவிரக்கிக்கொள்ள முதச.காம் தளம் கூடக் கிடைக்கும்! பண்டைத் திராவிடனின் தொழில் நுட்பம்தான் என்னே!

அது மட்டுமல்ல –  லெமூரியப் பண்பாடுகளின் உச்சங்களின் மிச்சங்களும் எச்சங்களும் ஆஸ்த்ரேலியாவுக்கும் மடகாஸ்கருக்கும் நட்ட நடுவில் தோண்டத் தோண்டத் திகட்டாமல் கிடைக்கும்…

திராவிடர்களின் போர்க்கொடியினால், பிராம்மணர்கள் எல்லோரும் கைபர்போலன் வழியே திரும்பி, இரான் சென்று, ஆனால் – அங்கும் அவர்களுக்கே உரித்தான குசும்புடன் அயொத்துல்லாஹ்களின் கோமணத்தை உருவுவர். இதனால் மகிழ்ந்த இரானியக் குடிமக்கள், வந்தேறிகளைப் போற்றி அவர்களை மதகுருக்களாக்கிக் கொள்வர் – குருமார்களும், பறப்பதையெல்லாம் சுடுவது என்றலையும் இரானியர்களுக்கு வடை சுடுவதிலிருந்து ஆரம்பித்துப் பயிற்சி கொடுப்பர். குருதட்சிணையாக, தங்களைத் துரத்திய திராவிடர்களுக்குப் பாடம் புகட்டவேண்டும் என்பர். ஆக, தமிழகத்தின்மீது இரானிய ஷியாக்களின் படையெடுப்பு நிகழும். திராவிடர்கள் அதற்குப் பயப்படாமல்,  நிதானமாக – இரானியர்களுக்கு மணிரத்னம் திரைப்படங்கள் காண்பிப்பர் – அதன் காரணமாக, நெஞ்சடைத்த இரானியர்கள், பாவம், கூண்டோடு தற்கொலை செய்துகொள்வர். அப்படிச் செய்யாத கல் நெஞ்சர்கள் மீது ஏவ, தமிழர்களின் தனிப்பெரும் அணுகுண்டு ப்ரம்மாஸ்திரமான கொடும்ஆயுத எஸ்ராமகிருஷ்ணன் உபயோகப்படுவார்.

…இவை இப்படி இருக்கையிலே… உதயநிதி இசுடாலிர் சென்னை மேயராக வளையவந்து மேய விருப்பம் வாய்க்கும். இசுடாலிருக்கும் நிரந்தர எதிர்க்கட்சித் தலைவராக இருந்து, ஏகோபித்து உளறிக்கொட்ட மேடைப்பேச்சுகளில் வாய்ப்புக் கிடைக்கும்.

ஸன் டீவி அலுவலகம், விடுதலைச் சிறுத்தைகள் பிரைவேட் லிமிட்டெட் நிறுவனத்தின் தலைமை அலுவலக வளாகமாக மாறும்.

உதயநிதியின் காலடியில் வைகோ புரளுவார். புகைப்படம் வெளிவந்தால் புரளியென்பார். இத்தாலியின் மாஜினி அப்படிச் செய்யமாட்டான் எனச் சூளுரைத்து, உடனடியாக மேடையில் குணசித்திரவேடத்தில் அழுவார். திராவிடர்கழக வீரமணி பொயு 2030ம் ஆண்டிலும், சூரிய கிரஹணச் சமயத்தில் மக்களின் மூட நம்பிக்கையைச் சாடி, உண்ணும் விரதத்தை அரங்கேற்றுவார். (இவை இரண்டும் மாறவே மாட்டா, மன்னிக்கவும்!)

திமுக உடன்பிறப்புகள், தொடர்ந்து பிரியாணி இட்லிவடைக் கடைகளைப் பதம் பார்த்துக்கொண்டிருப்பர்; ஓய்வு நேரத்தில் இசுடாலிர் அவற்றுக்கு வருத்தம் தெரிவித்துக்கொண்டிருப்பார்; அவருக்கும் பொழுதுபோகவேண்டுமல்லவா?

கோழிச்சண்டையை தேசியமயமாக்கும் படியும், கோழிச்சண்டை வீரர்களுக்குக் கோழிமாமணி விருது கொடுக்கவேண்டும் என்றும் –  இல்லாவிட்டால் அணுவுலைகளை மூடவேண்டும் எனவும் தமிழக மாணவர்கள் போராட்டத்தில் குதிப்பர். இவர்களுக்கு ஆதரவாக, வடக்கில் பிரதமர் யோகி,  குஜராத்2002க்காக மன்னிப்பு கேட்கவேண்டும் என ஜேஎன்யு பல்கலைக்கழகத்தின் கிழட்டு மாணவர்கள் போராட்டம் செய்வர்.

தமிழகக் கம்யூனிஸ்ட்கள் தொடர்ந்து, புரட்சிக்குசு விட்டுக்கொண்டிருப்பர்.

ரஜினி: “நான் எப்போ வர்வேன்னிட்டு சொல்லெவே மெடியாது! ஹ்ஹ! ஆனா வெருவேன்!” எனத் தொடர்ந்து சொல்லிக்கொண்டிருப்பார்.

வொலக நாயகன், தன் பழைய, ஒரு மசுரும் பிடிபடாத மர்ம ட்வீட்களை, மய்யமாக மறுசுற்றுக்கு வுட்டுக்கொண்டிருப்பார். அவர் வாசகக் குஞ்சாமணிகள் அவற்றுக்குப் புதுப்புது அர்த்தங்கள் கண்டுபிடிப்பார்கள். அப்படி அவர்கள் கண்டுபிடிப்புகளில் குறியாக இருக்கும்போது, இன்னொரு பாவப்பட்ட இளம்பெண்ணுக்கு (நம்பர் 108) அவருடைய தோழியாக, ஒரு துணைக்கோள் போல வலம்வர, வாய்ப்புத் தருவார். மச்சீந்திரன்.

வெண்முரசு பொதுயுகம் 2030லும் முடிவடையாமல் இருந்துகொண்டிருக்குமாதலால், பாவப்பட்ட ராமாயணம், நாரோயில் ரேஷன்கடை வரிசையில், வேலைவாய்ப்புக்காக மனுகொடுத்துவிட்டுத் தொடர்ந்து பரிதாபமாகவும் பொறுமையுடனும் நின்றுகொண்டிருக்கும்.

மணிரத்னம், பொன்னியின் செல்வனின் மகத்தான பாக்ஸ் ஆஃபீஸ் தோல்வியை அடுத்து, பார்த்திபன் கனவையும் சிவகாமியின் சபதத்தையும் ஊக்கபோனஸ்ஸாக நந்திபுரத்து நாயகியையும் விட்டேனா பார் எனத் துரத்திப் பிடித்து அவர்கள் அனைவரையும் நுணுக்கமாக நுனிவரை சென்று நுங்கெடுத்துப் பதம் பார்ப்பார். வுட்டுடு, என்ன வுட்டுடு என அவையனைத்தும் கதறினாலும்,  மாட்டேன், நான் வுடமாட்டேன்… என அப்படியொரு கொலைவெறி, என்ன செய்ய. :-(

கடைசியில் கல்கி அவதாரம் எடுத்துவந்து கோடம்பாக்கத்தில் கோரதாண்டவம் ஆடி, அனைத்து நடிகக் கோமாளி கோமாளியாயினிகளின் குடலையும் உருவி மாலையாகப் போட்டுக்கொண்டு, தமிழகத்தில் சுபிட்சத்தை நிலவச் செய்வார்…

இன்னமும் இருக்கின்றன சிசுவுற்பத்திச் சிந்தாமணியின் மகாமகோ பாராயணப் பலன்கள்.

ஆனால் அவற்றையெல்லாம் பற்றி விவரமாகப் பேச, இன்றுதான் நெல்லை கண்ணனுக்கு ஜாமீன் வாங்கிக்கொடுத்திருக்கிறேன், சரியா?

-0-0-0-0-0-

ஆதலினால், சிசுவுற்பத்திச் சிந்தாமணியைப் பாராயணம் செய்வீர்!

One Response to “சிசுவுற்பத்திச் சிந்தாமணி”

  1. Kannan Says:

    Root cause of India’s trouble is finally revealed, I found a copy in my Grandpa’s trunk potti and it was buried under loads of ‘White Damaram’.

    :(


Leave a Reply to Kannan Cancel reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s