சென்னை புத்தகச்சந்தை 2020ல் வெளியிடப்படும் எனது ஏழு புதிய புத்தகங்கள்!

17/01/2020

ஆதரிக்கத் தவறாதீர்!

-0-0-0-

பலப்பல விஷயங்களில் ஆழமாகப் புகுந்து விளையாடும் என்னைப் பற்றி நீங்கள் ஏற்கனவே அறிவீர்கள் என்றாலும், கீழ்கண்டவை உங்களை அப்படியே புரட்டிப்போடும் தன்மை மிக்கவை… ஆகவே.

சுயப்பிரதாபம் போதும். விஷயத்துக்கு வருகிறேன்.

பெரியவர் PAK அவர்களும், வடைஅமெரிக்காவில் வசிக்கும் பெரும்பேறு பெற்றதனாலேயே பெரியவராகிவிட்ட YAK (யாங்கீபூட்ல் அரவிந்தன் கண்ணையன்தான் இவர்!) அவர்களும், வழக்கம்போலவே கொள்கைக் கூட்டணி அமைத்து – இப்புத்தங்களை வெளியிடுவதற்குச் சம்மதம் அளித்திருக்கிறார்கள். (ஆனால் சம்மதம் என்பதில் மதம் என்பதை மட்டும் நீக்கிவிடமுடியுமா எனக் கேட்கிறார்கள், என்ன செய்வது சொல்லுங்கள்! சம்மதம் என்றாலே ஹிந்துத்துவாவா? அது ஏதாவது ஒரு சம்திங் மதம் என விட்டுவிடலாமே எனத் தீனமான குரலில் கோரிக்கை வைத்தால், அவர்கள் லிபரல்ஸெக்யூலர்வாதத்துக்கு அது ஒத்துவராதாம், என்ன செய்ய!)

ஆகவே அவர்கள் சம்மதம் கொடுக்கவேண்டாம், ஆனால் ‘ஒப்புதல்’ கொடுக்கமுடியுமா எனக் கேட்டேன். ஆனால் அதில் பஜ்ரங்தல் அமைப்பின் ஒரு பகுதி இருக்கிறதே என முடியாதென்றார்கள். ஐயய்யோ!

பிறகு ஒருவழியாக உலகப்பொதுமொழியாகிய ஆங்கிலத்தில் பேசி ஒருவழியாக அவர்களைச் சம்மதிக்கவைப்பதற்குள் போதும்போதுமென்றாகிவிட்டது, போங்கள்…

எப்படியோ, என் புத்தகங்கள் அமோகமாக விற்றால் சரி.

-0-0-0-0-

கூடிய விரைவில், உங்களுக்கு ஷாக் அளிக்கக்கூடிய வகையில், இவைகள் அனைத்தும் மின்புத்தகங்களாகவும் – குறிப்பாக, கிண்டில் புத்தகங்களாகக் கிண்டப்பட்டும் கிடைக்கும் என்பதை, என் அன்புக்கும் மரியாதைக்கும் உரிய பதிப்பாளர் பத்ரிசேஷாத்ரி அவர்கள், வருத்தத்துடன் தெரிவிக்கிறார் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவிப்பவனே நான்தான்!

 1. உபபெருங்காயணம்
 2. பழைய இம்மைக்ரன்ட்
 3. ஸ்வேதடமாரம்
 4. அந்தக் காலத்தில் திராவிடம் இல்லை
 5. “முதலாளியாடா நீ? பன்னாட்டு நிறுவனக்காரனா?? … ட்டூமீல்ல்ல்ல்ல்!” …. c/o Bill Gates (ஆ! சுட்டுட்டாங்க, சுட்டுட்டாங்க…)
 6. ஆறிய திராவிட இயக்க உளறாறு
 7. பொந்துத்துவா – ஒரு எளிய அறிமுகம்

மேற்கண்டவை கீழக்குறைவான விவரங்கள்.

மேலதிக விவரங்களுக்கு, கீழ்கண்ட சுட்டிகளைச் சரணடையவும்.

நற்செய்தி: 2015 சென்னை புத்தகச் சந்தையில் நான் எழுதிய…  31/12/2014

இதுதாண்டா (பல)புத்தக வெளியீடு!  02/01/2015

நன்றி.

5 Responses to “சென்னை புத்தகச்சந்தை 2020ல் வெளியிடப்படும் எனது ஏழு புதிய புத்தகங்கள்!”

 1. அறிவொளி சங்கர் Says:

  பதிப்பகம் யார் சார்? புக்பேர்ல கிடைக்குமா


  • அன்பின் ஐயா, கேட்டதற்கு நன்றி. விவரங்கள் கீழே, அதாவது இந்த வரிக்கு அடியில்.

   1. ‘பதிப்பகம் யார்’ அல்ல. ‘பதிப்பகம் எது: ‘

   பதில்:  அவை பதிப்பகங்கள். ஒன்றுக்கு மேற்பட்டவை. ஏன், ரெண்டுக்கும் மேற்பட்டவை. என் ஆக்கங்கள் நாட்டுடமையாக்கப் பட்டுவிட்டன. ஆக, சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், காலச்சுவடு, உயிர்மை, விகடன் போன்ற பதிப்பகங்கள் அனைத்தும் வெளியிட்டிருக்கின்றன. பத்ரிசேஷாத்ரி என்னுடைய ராயல்டீயைக் கொடுக்காமல், வெறும் கும்பகோணம் டிகிரிகாப்பியைக் கொடுத்ததால், கிழக்கு பதிப்பகத்துடனான என் உறவைக் கத்தரித்து விட்டேன்.

   2. புக்பேர்ல கிடைக்குமா?

   பதில்: அந்தந்த புக் அந்தந்த பேர்ல கிடைக்கும்.

   அன்பருக்கு, என்னுடைய பதில் கேள்வி: உங்கள் ‘அறிவொளி’ எந்தக் கடையில் ஆஃபரில் கிடைத்தது? எனக்கும் அது வேண்டுமாதலால் விவரங்களைக் கொடுக்க இறைஞ்சுகிறேன்.

   வாழ்க ஒளியுடன்,

   வக்கால் ஒளி.


 2. […] என்பார் என்னை இதுகுறித்துக் கேட்டவுடன் தான் இந்தச் சந்தோஷ விஷயத்தை […]


 3. உங்கள் அனைத்து நூல்களும் பெரும் வெற்றியடைந்து, அதனால் வாசகர்கள் பேரெழுச்சி பெற்று, தங்களுக்கு சாகித்திய அக்காதெமி ( கவனிக்க: ஹி விலக்கியுள்ளேன்) விருது கிடைக்க வாழ்த்துகிறேன். மீண்டும் வரும் ஆண்டு புத்தகத் திருவிழாவில் இணைவோம். (புக் ஃபேர் என்ற ஆங்கிலத்தையும் விலக்கியுள்ளேன் என்பதையும் கவனிக்க..


Leave a Reply to அறிவொளி சங்கர் Cancel reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s