இறும்பூதளிக்கும் செய்தி: என் புத்தகங்கள் நாட்டுடைமையாக்கப்பட்டுவிட்டன!

18/01/2020

தமிழக அரசே! நன்றி! நன்றி!! நன்றி!!!

ஆனால், இது எளிதாக நடந்துவிட்ட விஷயமில்லை. ஏனெனில், இந்த நாட்டுடைமை விஷயம், எழுத்தாளர்கள் இறந்தபின்னர்தாம் அவர்களுக்குக் கிடைக்கும் பாக்கியமாம், என்ன கொடுமை! :-(

ஆகவே, நான் ஏற்கனவே இறந்துவிட்ட விஷயத்தை அவர்களுக்குத் தெரியப் படுத்தி, சான்றாக என் மறைவைக் குறித்த அஞ்சலிக் கட்டுரையையும் (இதற்கு கெஸட்டட் ஆஃபீஸர் கையொப்பத்துடன், ஒரு பிரசித்தி பெற்ற நோட்டரி பப்ளிக் வழக்குரைஞரின் இலச்சினையையும் அந்த அரிய ஆவணத்தில் பெற்று விண்ணப்பித்தது முக்கியமான விஷயம் என்பதையும் கவனிக்கவும்!) இணைத்தபின், தமிழக அரசு என் மறைவை ஏகோபித்து ஆமோதித்து என் புத்தகங்களை நாட்டுடைமையாக்கியது, என் நல்லூழ்.

-0-0-0-0-0-

எனக்கே இந்த விஷயங்கள் எல்லாம் மறந்துவிட்டன; அன்பர்,  ‘அறிவொளி சங்கர்’ என்பார் என்னை இதுகுறித்துக் கேட்டவுடன் தான் இந்தச் சந்தோஷ விஷயத்தை உங்களிடம் பரிமாறிக்கொள்ளவேண்டும் எனும் உந்துதல்.

நன்றி. ஒத்திசைவு, இம்மாதிரி வாசகர்களையும் பெற்றிருப்பது, உண்மையாகவே மகிழ்ச்சி தரும் விஷயம். மேலும், தமிழகத்தின் சராசரி வாசகர்தரத்தின் உரைகற்கள் இவர்களைப் போன்றவர்கள்தாம் என்பதும். நெகிழ்ச்சியாக இருக்கிறது.

பின்குறிப்பு: என் நண்பர் ஒருவர், ‘அறிவொளி சங்கர்’ என்பார் ஃபேஸ்புக் எழவில் உலாவரும் ஒளிக்கதிராக வெளிச்சத்தைப் பரப்பி வருகிறார் என்கிறார். எனக்கு, இவர்தான் என் புத்தகங்களை வாங்குவதற்கு அல்லாடும் செல்ல அன்பரா எனத் தெரியவில்லை.  எப்படியும் இருக்கலாம், இந்த ஏடாகூடமான உலகில் என்னவேண்டுமானாலும் நடக்கலாம். ஏனெனில் சாகிற சமயத்தில் சங்கராசங்கர்களும், படுபீதியளிக்கும் அறிவொளிகளும் திராவிடத்தில் சகஜமப்பா.

இந்தச் சபிக்கப்பட்ட தமிழகத்தின் அதிஅற்புதச் சூழலில், தமிழ் புத்தகப் பதிப்பாளர்களின் நிலையை நினைத்தால் கதி கலங்குகிறது. நம்மைப்போல வாசகர்கள் வாசிக்கவேண்டிய நரகங்களையே விடுங்கள்…

பின்பின்குறிப்பு: நான் ஏற்கனவே இறந்துவிட்டிருப்பதால், இந்த ‘அறிவொளி சங்கர்’  பின்னூட்டத்தைப் படித்தவுடன் மறுபடியும் ஆனந்தமாக இறக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. அதனால்தான் இந்தப் பதிவையும் கோஸ்ட்-ரைட்டிங் செய்ய முடிந்திருக்கிறது.

பின்பின்பின்குறிப்பு: நீங்கள் முடிந்தபோது அவசியம் என்னைப் பார்க்க வரவும்.

நன்றி, மறுபடியும்.

3 Responses to “இறும்பூதளிக்கும் செய்தி: என் புத்தகங்கள் நாட்டுடைமையாக்கப்பட்டுவிட்டன!”


 1. ஹ்ம்ம். என்ன செய்வது சொல்லுங்கள், இந்த நாட்டுடைமை எழவுக்காக, நான் இறந்திருக்கவேண்டிய அவசியமேயில்லை. இப்போதுதான் என் மரமண்டைக்கு உதிக்கிறது. :-(

  வெறுமனே, என் வீட்டுக் கதவிடுக்கின் பின்னால் ஒளிந்துகொண்டிருந்தால், நானும் ஒரு ‘மறைந்த தமிழறிஞராக’ ஆகியிருப்பேனே!

  கண் கெட்டபின்னர் சூர்யோதயம், என்னத்தைச் சொல்ல. :-(

  எது எப்படியோ, உங்கள் அனைவருக்கும் ஆவியுலகத்திலிருந்து ஆசிகள்.

  வெண்முரசு முடிந்தபின் சொல்லுங்கள்; பயபீதியில்லாமல் உடனடியாக அடுத்த ஜென்மம் எடுத்து வருகிறேன், நன்றி!

 2. Kannan Says:

  ஐயா, உங்களுடைய அடுத்த புத்தகம் ‘எவண்டா டாய்’ 
  எப்போது கிடைக்கும் என்று சொல்ல முடியுமா ?

  அம்பது காப்பிக்கான ஆர்டர் ரெடியாக உள்ளது.


  • நன்றி – அவை நெஸ்கஃபே அல்லது ப்ரூ வகையா அல்லது என் உள்ளங்கவர் கோதாஸ்  ஃபில்டர் பொடி காப்பியா எனச் சொன்னால் முடிவெடுப்பது சுலபம்.


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s