மஹாபாரதம்: மொழிபெயர்ப்புகள், மொழிமாற்றங்கள், வாசிப்பனுபவங்கள் – குறிப்புகள்

19/01/2020

1. அவ்வப்போது அருள்செல்வப் பேரரசன் அவர்களின் (கிஸோரி மோஹன் கங்கூலி அவர்களின் ஆங்கில மொழிபெயர்ப்பு வழி) தமிழாக்க மஹாபாரதத்தைப் படிப்பவன். நான் படித்துள்ளவரை அவர், முடிந்தவரை தரமாகவும் ஆத்மார்த்தமாகவும் இந்தப் பணியைச் செய்துவந்திருக்கிறார் எனத்தான் எனக்குப் படுகிறது.

இன்று (அன்பர் ஒருவர் அனுப்பிய ‘மீம்’ ஒன்றின் வழியாக) அவருடைய மஹாமஹோ முயற்சி முடிவுற்றது என அறிந்தேன்.

…அடுத்த இரண்டுமூன்று வருடங்களில் இந்த வடிவத்தை முழுவதையும் அதற்கென்று நேரம் ஒதுக்கி, உட்கார்ந்து படிக்கவேண்டும். அருள்செல்வப் பேரரசன் அவர்கள் செய்திருப்பது ஒரு வேள்வி. வாழ்த்துகள்.

-0-0-0-0-

2. ஜெயமோகன் அவர்களின் வெண்முரசை அளவுக்கு மீறிய, சுத்தமாகவே தர்க்கரீதியற்ற ஆர்வத்துடன் எதிர்பார்த்து…

ஜெயமோகன்(மஹாமஹோபாரதம்) = வெண்முரசு 02/01/2014

…இத்தனைக்கும் சுமார் 35 ஆண்டுகளாக, அவருடைய எழுத்துகளை அனுபவித்திருக்கிறேன்வேறு! முதலில் சில அத்தியாயங்களை விடாமல் படித்து… …உடனடியாகப் போர்க்காலரீதியில் பல பிரச்சினைகளில் மாட்டிக்கொண்டு திக்குமுக்காடிவிட்டேன், என்ன செய்ய. :-(

…தொங்கல் விவரணைகள், அதீத கற்பனாவளம், மானேதேனே, அநியாயத்துக்கு அட்ச்சிவுடுதல், நேரடியான பிழைகள், ஜவ்வுமிட்டாய், நைந்த சொற்றொடர்கள், தேவையேயற்ற, எந்த முந்தைய வடிவிலுமில்லாத பத்திபத்தியாக விரிந்த அசட்டுப்பிசட்டு அலங்கோலங்கள், தர்க்கரீதியின்மை என… …பலப்பல விஷயங்கள் ரவுண்டு கட்டிக்கொண்டு மண்டையில் அட்ச்சி – நான் எப்போதுமே சிலாகிக்கும் அவருடைய நேர்த்தி மிகுந்த எழுதும் திறனையும், சொற்களைச் செதுக்குதலையும் மீறி – என்னை முகம் மலர வைத்துவிட்டன.

சர்வ நிச்சயமாக, என் நல்லூழ் போதாமைதான். My GoGiveInkSelf. (இதன்காரணமான என் நிரந்தர முகமலர்ச்சியையும் மாளா ஆச்சரியத்தையும், பல வகைகளிலும் ற்றொம்பவே நெகிழ்ந்து தெரிவித்திருக்கிறேன் – ஒருமாதிரிக்கு, இப்பதிவின் அடியில் சிலசுட்டிகள்)

சில சமயங்களில், நேரடி அரட்டைகளில், ஒரிருவர் வெண்முரசைச் சிலாகித்துப் பேசும்போது நான் அதற்கு எதிர்மறையாக, தரவுகளுடன் பேசினால் – அவர்களுக்குப் பொசுக்கென்று கோபமும் வந்திருக்கிறது. அதேசமயம் சிலபல இளைஞர்கள் வெண்முரசால் கவரப்பட்டிருக்கிறார்கள் என்பதையும் அறிவேன். எப்படியும், ஜெயமோகனுக்கும் அவர் எதனை என்ன எப்படி வேண்டுமானாலும் எழுத உரிமை இருக்கிறது என்பதையும் ஒப்புக்கொள்கிறேன்.

என்னுடைய தனிப்பட்ட பிரச்சினை என்னவென்றால் – எனக்கு, முன்னமே பெரும் பிதாமகர்கள் பலரின் முழுநீள மஹாபாரத ஆக்கங்களைப் படிக்கும் வாய்ப்பு கிட்டியிருக்கிறது. ஓரளவுக்கு அவ்வப்போது மூலத்தையும். பல பிற நாகரீகங்களின் படுநீள, பண்டைய செவ்வியல் புனைவுகளையும், பல காவியங்களையும்  (இலியட் ஆடிஸ்ஸி உட்பட) ஓரளவுக்குப் படித்திருக்கிறேன்.

+ இக்காலத்து வகையறாக்களையும்.  அதனால் என் பார்வை இப்படி இருக்கிறது.

வெண்முரசைச் சிலாகிக்கும் பலருக்கு (அதாவது எனக்கு நேரடியாகத் தெரிந்த அளவில்) 1) தமிழுடனான அறிமுகம் அவ்வளவு இல்லை – அவர்களில் பெரும்பாலானாவர்கள், நீளமிகு தமிழ் ஆக்கங்களைப் படிப்பதற்கான அறிமுகத்தையே ஜெயமோகனிடம்தான் பெற்றிருக்கிறார்கள். ஆகவே ராஜவிசுவாசம். 2) மஹாபாரதத்துடனான அவர்களது முந்தைய அறிமுகம், அதிகபட்சம் வியாசர் விருந்து. அவ்வளவுதான். 3) ஸம்ஸ்க்ருத மூலம் கிட்டவே எவரும் போகவில்லை. 4) பிறமொழிகளிலும் (ஆங்கிலம் உட்பட) நீண்ட காப்பியங்களைப் படித்திருக்கும் அனுபவமில்லை.

இவற்றால்தான், வெண்முரசைப் பொறுத்தவரையில் வாசக அனுபவ விரிசல் என எனக்கு ஒரு அனுமானம்.

என்னுடைய இன்னொரு பார்வை இப்படி ஓடும். அது என்னவென்றால்:

மொழிபெயர்ப்புகள் மூலமாக, ஒரு ஆக்கத்தை அதன் கலாச்சாரப் பின்புலத்தில் ஓரளவுக்கு அனுபவிக்கமுடியும். நன்றாகவே துய்த்து மகிழமுடியும். ஒரு பிரச்சினையுமில்லை.

ஆனால், நான் ஜெர்மன் (அல்லது ரஷ்ய) மொழியை அறியாமல் – ஆனால் அதன் பலப்பல அலக்கிய இலக்கியங்களின் ஆங்கில மொழிமாற்றங்களை/பெயர்ப்புகளைப் படித்து மகிழ்ந்திருக்கிறேன் என்று சொல்கிறேன் என்றால் – நான் ஆட்டொமெடிக்காக ஜெர்மன் கலாச்சார வல்லுநனோ ஜெர்மன் மொழியின் ஆழத்தின் வீச்சையோ ஆழத்தையோ அறிந்தவனாகிவிடமுடியாது. மூலத்தில் வந்தவொன்றைப் பற்றி, அதன் பெயர்ப்புகளை மட்டுமே வைத்துக்கொண்டு ஒரு ரோமத்தையும் பெரிதாகப் பிடுங்கி விடமுடியாது. அதற்கு நேர்மையாக இருக்கமுடியாது.

இதே விஷயத்தை நம் தமிழுக்கும் சொல்வேன். தமிழில் பாரதியைப் படிக்காமல், அவனுடைய ஆங்கில மொழிபெயர்ப்புகளை மட்டுமே படித்துவிட்டு, நான் தொழில்முறை பாரதிவல்லுநனாகி விடமுடியாது அல்லவா? நான் அப்படிச் சொல்லி, பாரதியை ஆங்கில வழியாக என் தாய்மொழியான தாய்-ல் உருவாக்க முயன்றால்… அதுவும் சரிதான், ஆனால் நான் மினுக்கிக் கொள்ள முடியாது.

க்ரேக்க மொழியை அறியாமல், ஒருவன் இலியட், ஆடிஸ்ஸி விற்பன்னனாகி விடமுடியாது. அதனை மீளுருவாக்கக் காப்பி(!)யத்தை இன்னொரு மொழிவழியாகப் பிறிதொரு மொழியில் செய்துவிட்டு, அது காப்பியம் ஸ்கேன்னியம் எனச் சொல்ல முடியாது.

ஆனால் ஸம்ஸ்க்ருதத்துக்கு மட்டும் இந்த விதி ஒத்துவராது. ஏனெனில் நம் பிதாமகர்களில் பலர் வெறும் மொழிபெயர்ப்புகளை மட்டும் தான் (அதுவும் அதிகபட்சம் – மாறாக விக்கீபிடியாதான் பொதுவாகவே அடைக்கலம்) படித்திருக்கிறார்கள்.

சில வருடங்களுக்கு முன், நான் அர்த்த ஸாஸ்திரத்தையும் மனுஸ்ம்ர்தியையும் – அதன் மூலத்தையும், தற்கால மொழிமாற்ற+பொழிப்புரைகளையும், ஒருசேர வெறிபிடித்தவன் போலப் படித்தபோது அசந்துபோனேன். ஏனெனில், பரப்புரைகளுக்கும் மூலங்களுக்கும் இடையே பலப்பல விரிசல்கள்.
இதேபோல புருஷஸூக்தம் மூலமும்.

நம் கலாச்சாரத்தின் பிரச்சார சாரப் பிரச்சினைகளில் இதுவுமொன்று. நம் கலாச்சாரங்களின் பலகூறுகள்  நமக்கு அதன் வேற்றுக்கலாச்சார மாற்றிகள் மூலமாகவே, வேற்றுமொழிகள் ஊடாகவே பெரும்பாலும் வந்தடைந்திருக்கின்றன.

நமக்கோ மூலங்களைப் படிக்கவிடாத தாமஸ குணம், திகைக்க வைக்கும் சோம்பேறித்தனம். அல்லது வெறுப்பு. கோனார் துணைவன் மூலமாக மட்டுமே ‘யாதும் ஊரே, யாவரும் உளறிர்.’ நம் தாழ்மையான நிதர்சன உண்மையை நிரவி, புளுகுபுளுகாக திராவிட/தமிழ மேன்மையில் மிதப்பதற்குக் கேட்பானேன்!

நம் கல்வியின் நிலை, அப்படியாப்பட்ட பராக்கிரமம் மிக்கது.

-0-0-0-0-0-

ஆனால்.

வெண்முரசு மொழிபெயர்ப்பு அல்ல அதுயிது எல்லாம்,  எனக்கும் தெரியும். ஆனால் கலாச்சாரம் பற்றிச் சொல்கிறேன். அது ஒருமாதிரி மீளுருவாக்கம், காப்பியம், மானேதேனேயம், அட்ச்சிவுட்டாலஜி, புத்துருவாக்கம், புழுதிவாக்கம், மாரத்தன்ரன்னம் என்பதையெல்லாம் நான் அறியாமலில்லை.

இதற்காக, ஜெயமோகன் அவர்கள் வெண்முரசுக்கு அளிக்கும் அபரிமிதமான உழைப்பையும் அர்ப்பணிப்பையும் குறைத்து மதிப்பிட மாட்டேன், சரியா? அதுவும் வேள்விதான்.

(இதன் விளைவு எனக்குத்தான் ஒத்துவரவில்லை; இது என் சொந்தப் பிரச்சினைதான், என்ன செய்ய.)

-0-0-0-0-0-

3. எனக்கு முதலில் மஹாபாரதம் அறிமுகமானது ராஜாஜி அவர்களின் வியாசர் விருந்து வழியாக. சுமார் நான்கு வயதில் அதனைப் படித்திருந்தேன். சிலபல காரணங்களினாலும், சுற்றுச்சூழல்களினாலும் மூன்று வயதிலிருந்தே தமிழை நன்றாகப் படிக்க ஆரம்பித்திருந்தேன். பின்னர், எழுத்துகூட்டி ஆங்கிலத்தில் அதே ராஜாஜி அவர்களின் ஆங்கில வடிவு  மஹாபாரதத்தைப் படித்தேன் – இது சுமார் ஒன்பதுபத்து வயதில் என நினைக்கிறேன்.

4. கிஸோரி மோஹன் கங்கூலி அவர்களின் முழுமையான மஹாபாரத ஆங்கில மொழிபெயர்ப்பினை விழுந்துவிழுந்து படித்தது சுமார் 13-14 வயதில். (இச்சமயம், லிஃப்கோ டிக்ஷனரி எனக்கு உதவியதைப் போல…)

என் விடலைப் பருவத்தில் இரண்டு ஆண்டுகள் (மட்டுமே) ஸம்ஸ்க்ருதத்தை ஓரளவு முறையாகப் படிக்க, பயிற்சி பெற வாய்ப்பு இருந்ததும் அதனை நான் ஓரளவுக்காவது உபயோகப்படுத்திக் கொண்டதும் என் நல்லூழ் எனச் சொல்வேன்.

5. மன்மத நாத் தத்/ஸாஸ்த்ரி அவர்களின் மஹாபாரதத்து ஆங்கில மொழிபெயர்ப்பைப் படிக்க ஆரம்பித்தேன். சொல்லப்போனால், இது கிஸோரி மோஹன் அவர்களின் மொழிபெயர்ப்பின் நடையைவிட உன்னதமாக இருந்தது என நினைவு; இதற்குக் காரணம், மன்மத நாத் அவர்கள் கிஸோரிமோஹன் அவர்களைவிட மிகமிக நிறைய மொழிபெயர்ப்பு அனுபவம் வாய்ந்தவர் என்பதாக இருக்கலாம்…

பிரச்சினை என்னவென்றால், எனக்குக்  கிடைத்தது  மன்மதநாத் அவர்களின் கைவண்ணத்து அனுஷாஸன பர்வம் மட்டுமேதான். அதுவும் என் கல்லூரியின் மகோன்னதமான நூலகத்திலிருந்து கிடைத்தது – இது என் பதினேழு வயதில்போல நடந்தது. பின்னர் இவருடைய மூன்று நான்கு பர்வங்களைப் படித்திருக்கிறேன்.

6. பிறகு இடதுசாரித்தன வெறி. பாரதத்தின் எந்தக் கூறை/படிமத்தைப் பார்த்தாலும் அதனை இளக்காரத்துடன் அணுகும், அரைகுறை அரைவேக்காட்டுத் தன்மை. சுமார் 4-5 வருடம் அப்படியுமிப்படியும் ஓடியது. பின்னர் படிப்பு முடிப்பு தொழில்கிழில் என பலப்பல இன்னபிற எழவுகள்.

ஆனால்… 25 வயது வாக்கில் ஒரு திடத்துக்கு வந்துவிட்டேன் என நினைக்கிறேன்.

7. ஆக, முப்பது வயதுக்கு மேல்தான் மஹாமஹோ ஜேஏபி வேன் ப்வீட்டெனன் அவர்களின் மொழிபெயர்ப்பு படிக்கக் கிடைத்தது. ஒரேயொரு பர்வம் – ஆதி பர்வம் மட்டும்தான் கிடைத்தது. அழகு. (அவர் போய்ச்சேர்ந்து நிறைய வருடங்களாகி விட்டன, யாராவது இம்முயற்சியைத் தொடர்கிறார்களா என இணையத்தில் நோண்டவேண்டும்)

8. அதற்குப் பிறகு சுமார் 15-20 ஆண்டுகள் மஹாபாரதம் அருகிலேயே போகவில்லை. அப்படியே இருந்திருக்கலாம். :-(

ஆனால், வெண்முரசுக்குப் போய் ஓங்கியடிக்கப்பட்டேன்; பேராசானால் சக்ரவ்யூகத்தில் அமிழ்த்தப்பட்டுத் தாக்கப்படும்போது அவ்வப்போது பேரரசன் அவர்களின் மொழிபெயர்ப்பு கொஞ்சம் ஆசுவாசம் அளித்ததும் உண்மை.

வெண்முரசை விட்டுவிடுதலையானது என்னுடைய வரலாற்றுத் தேவை.

… + அமர் சித்ரகதா காமிக் வடிவ மஹாபாரதத்தை என் பிள்ளைகளுடன் சேர்ந்து ஐந்து வருடங்கள் முன்னால் படித்தேன்.

9. மூர்த்தி க்ளாஸ்ஸிகல் லைப்ரரி (இன்ஃபொஸிஸ் நாராயணமூர்த்தி அவர்களின் மகன் கொடுத்த நல்கை மூலம் நடத்தப்படுவது இது – மஹாமஹோ பேராசிரியர் ஷெல்டன் பொல்லக் அவர்களின் தலைமையில் நடைபெறுகிறது) ஒரு மஹாபாரத வடிவைக் கொணர்ந்துகொண்டிருக்கிறது என்கிறார்கள் – எனக்கு இதனைப் படிக்க ஏலவில்லை.

அரசியல்ரீதியான காரணங்களால் மாட்டேன் எனவும் நினைக்கிறேன். பார்க்கலாம் இந்த மசானவைராக்கியம் எப்படிப்போகிறதென்று. மஹாபாரதம் என்றாலே எனக்கு ஒரு பலவீனம், என்ன செய்ய.

10. சென்ற (2019) ஆண்டின் முடிவில் (மிகுந்த யோசனைக்குப் பின். ஏனெனில் வீட்டில் புத்தகங்களின் எண்ணிக்கையைக் குறைக்கவே முயன்றுகொண்டிருக்கிறோம்; + பணச்செலவழிப்பை மட்டுறுத்தல் + கொஞ்சம்கொஞ்சமாக மின்புத்தகங்களிடமும் சரணாகதிவேறு!) மஹாமஹோ பிபேக் தேப்ராய் அவர்களின் அழகான ஆங்கில மஹாபாரத மொழிமாற்றத்தை வாங்கினோம். சுகம். பத்து புத்தகங்கள். இப்போது இரண்டாவது புத்தகத்தில் இருக்கிறேன்.

(என் மனைவி, அண்மையில், ட்வீட்களால் ஆன ஒரு மஹாபாரத வடிவின் ஒரு ஆர்வக்கோளாறு புத்தகத்தை வாங்கினார் – நான் புரட்டிப் பார்த்தேன்; சுகமில்லை – நான் ஒர்ரேயடியாகப் பழம் பஞ்சாங்கமில்லை, இருந்தாலும் நாக்கு ஏகத்துக்கும் தள்ளிவிட்டது; விஸ்தாரமான வர்ணனைகளில்லாத ‘பவர்பாயிண்ட்’ புல்லட் போன்ற வலுக்கட்டாயமான இயல்பற்ற  ‘மாற்றி ரோசிச்சி எழுதப்படும்’ முயற்சிகளில் எனக்கு அவ்வளவு பிடித்தமில்லை)

11. பலப்பல வருடங்களாக (ஏன் மாமாங்கங்களாகவேகூட!) பந்தார்கர் ஓரியண்டல் ரீஸெர்ச் இன்ஸ்டிட்யூட்டின் ‘போரி’ க்ரிட்டிகல் எடிஷன் ஸம்ஸ்க்ருத மஹாபாரதத்தை, எழுத்துக்கூட்டியாவது படிக்கவேண்டும் என்று ஒரு அளவுக்கும் தகுதிக்கும் மீறிய ஆசை. அதனுடன் கும்பகோணப் பதிப்பையும் படிக்கவேண்டும் என்று.

12. ஆகவே இணையத்தில் கிடைக்கும் மேற்படி போரி+கும்பகோணம் பதிப்புகளையும் பெரியவர் பிபேக் தேப்ராய் மொழிபெயர்ப்போடு இணைத்துப் படித்துக் கொண்டிருக்கிறேன். கொஞ்சம் ரொம்பவே மெதுவாகத்தான் படிப்பு ஓடிக்கொண்டிருக்கிறது. ஆனாலும் ஆதிபர்வம் முடிந்தேவிட்டதே எனவும் ஒரு சிறுசோகம். மன்மதநாத் தத் அவர்களின் பிற மொழிபெயர்ப்புகளையும் புத்தகங்களையும் தேடிப்பிடித்துப் படிக்கவேண்டும். கொட்டிக் கிடக்கின்றன பொக்கிஷங்கள்.

13. மேற்கண்டவை தவிர, ஐராவதி கார்வே அவர்களின் யுகாந்தா, எஸ்எல் பைரப்பா அவர்களின் பர்வ போன்றவற்றையும் ஆங்கிலவடிவங்களில் படித்திருக்கிறேன். நம் வில்லிபாரதம் புத்தகத்தைப் பலதடவை ஆரம்பித்து விட்டிருக்கிறேன். பார்க்கலாம், அடுத்த சில ஆண்டுகளில் அதனை முழுமையாகவும் பொறுமையாகவும் படிப்பேனா என்று. (ஏனெனில், மூலங்களைப் படிப்பதில் இப்போதெல்லாம் முனைப்பு அதிகமாகிவிட்டிருக்கிறது)

14. நான் ஆசிர்வதிக்கப்பட்டவன்.

“கர்வத்துடன், மாளா தற்பெருமை பேசியே உன்னை  வெச்சிசெஞ்சி வெறுக்கடிக்கப் பண்ணுவேன்.”

0-0-0-0-0

மஜாபாரதம், மஹாபாரதம் குறித்த முந்தைய பதிவுகளில் சில:

28 Responses to “மஹாபாரதம்: மொழிபெயர்ப்புகள், மொழிமாற்றங்கள், வாசிப்பனுபவங்கள் – குறிப்புகள்”

 1. அநிருத்தன் Says:

  டேய், ஜெமோ செய்யரது வேள்வின்னு சொல்ர.

  ஆனா ஏண்டா ஜெமோவ திரும்ப திரும்ப சீண்டர? வேற வேலயே இல்லியா? ஸ்கூல்ல தெர்த்திட்டாங்களா/

  பாப்பாரகெழமே, ரிட்டையர்டு ஆயிட்டு மூலைல கெடக்காம ஏண்டா டெய்லி கூவற

  பாவண்டா ஒன்னோட வாசகனுங்க. முட்டாப் பயலுக
  போயி ஆவுர வேலயப் பாருங்கடா போக்கத்த பொறம்போக்குகளா


  • ஐயா நன்றி. மிகைப் புகழ்ச்சி வேண்டா.

   சொற்ப ஏழரைகளை விட உங்களைப் போன்றவர்கள்தான் ஓடிவந்து பதிவுகளை ஆர்வமாகப் படிக்கிறீர்கள் போல.

   சரி. வேள்வி. ஜெயமோகனும் வேள்வி செய்கிறார் என நான் எழுதியதைக் குறித்து.

   வேள்வியானது அதற்குரிய நியமங்களுடன், உச்சாடனங்களுடன் சரியாகச் செய்யப்படாவிட்டால், அந்த வேள்வித்தீயிலிருந்து இராக்கதர்கள் வீறிட்டெழும்பி விளாசக் கிளம்பி வருவார்கள். பிறகு இராக்கம்மா இகையைத் இதட்டுதான். முடிந்தால் ஆங்கே முதுகும் தட்டப்படும்.

   அவர் வேள்வியில் பல பிரச்சினைகள், அலங்கோலங்கள். ஆகவே அதிலிருந்து கோபதாபத்துடனும் கோரப்பசியோடும் உதித்தவன்தான் அடியேனான இராக்கதன்.

   சில சமயங்களில் இரான்கதன் கூட.  கூடுதல் விவரங்களுக்கு இணையத்தை அணுகவும்.

   நன்றி + போங்கடே.

   இராக்கதன்.

 2. K.Muthuramskrishnan Says:

  கும்பகோணம் பதிப்பு வாங்கி தொட்டுத் தொட்டுத் பார்த்துக் கொண்டிருக்கிறேன். இந்தப் பதிப்பை அரும்பத உரையுடன் ஒரு பையன் இணையத்தில் வெளியிடத் துவங்கினார்.அப்போது நானும் அந்தப் பையனும் ஆசானின் குழும உறுப்பினர்கள்.அந்தப் பையன் குழுமத்தில் நந்தன் என்ற சொல்லுக்குப் பொருள் கேட்க நான் ஒன்று சொல்ல ஆசான் ஒன்று சொல்ல அதன்பின்னர் அந்த லிங்க் ஆசான் உத்தரவால்? நிறுத்தப்பட்டது.வெண்முரசு முதல் 3 புத்தகத்தோடு முடித்துக் கொண்டேன்.அதன் பினர் இங்கே எழுதப் போய்’ என்னை ஒன்றும் தெரியாத முட்டாள என்று ஒரே ஒப்பாரி


  • ஐயா, கவலைப் படாதீர்கள்!

   ஒப்பாரி வள்ளல் அவர்களால் வாழ்த்தப் பட்ட பேறு உங்களுக்கு மட்டும்தான் கிடைத்தது எனக் கர்வப்படுகிறீர்களே, உங்களுக்கு இது அறமாகப் படுகிறதா?? உங்களுக்கு அடுத்தது நான் நின்று அர்ச்சனை பெறப்பட்டதை மறந்துவிட்டீரோ? :-(

   கோபத்துடன்,

   கதார்கதன்,  இவன் கதையை ஓங்கி உதார் காட்டுபவன், இரான்கதன், இராக்கதன் தம்பி.

   பின்குறிப்பு: குடமூக்கின் இறையை அணுகிப் பிரார்த்தனை செய்து, ‘சான்றிதழ் அளிப்போர் சங்கம்’ புகழ், அண்ணல் அரவிந்தனார் கண்ணையனாரிடமிருந்து நீங்கள் ‘ஹிந்துத்துவர் அல்லர், வெறும் ஹிந்துதான்’ என ஒரு கையொப்பம் வாங்கினால் – உங்களுக்கு அந்தக் கும்பகோணப் பதிப்பைப் படிக்கும் பாக்கியம் கிடைக்கும், என பாக்கியம் ராமசாமி சொல்கிறார். நன்றி.


 3. I also strongly recommend a few more books (based on Mahabharatha/Dharma) for the 7.5s:

  1. The difficulty of being Good by Gurcharan Das (https://www.amazon.in/Difficulty-Being-Good-Subtle-Dharma/dp/0143418971)
  2. The Madrasbhashai Mahabharata (this was written by me (I took it as a challenge from an oldenday 7.5/n) quite a while back, the MSS is missing though, happily for you)

  Sorry. More recos will get added as and when.

 4. KVR Ghavan Says:

  // பாப்பாரகெழமே, ரிட்டையர்டு ஆயிட்டு மூலைல கெடக்காம ஏண்டா டெய்லி கூவற

  பாவண்டா ஒன்னோட வாசகனுங்க. முட்டாப் பயலுக
  போயி ஆவுர வேலயப் பாருங்கடா போக்கத்த பொறம்போக்குகளா//

  தம்பி, அநிறுத்து….
  மிலிட்டரி ஓட்டலுக்குள் நுழைந்து விட்டு ஏன் கூச்சலிடுகிறாய்.
  இங்கு தினம் தினம் நாட்டுக்கோழி (ஜெமோ) எறாCஎஸ்ரா), ஆட்டுக்கறி (சாரு) எல்லாம் வறுபடும். பிடிக்காவிட்டால் பொத்திக் கொண்டு (மூக்கை) ஓடவும்.
  எடைக் கணக்கில் எழுதப்படுவதெல்லாம் சுவைக்கணக்கில் வராது தம்பி…..


  • நீங்கள் அம்மணியா அம்மணரா? புத்ஸா?? (யாராக இருந்தாலும், நீங்கள் அனிருத்தரா அல்லது பிரம்மராயரா எனத் தெரியவில்லை)

   இப்போதைக்கு எனக்கு வக்காலத்து வாங்கத்தான் வருகிறீர்கள், வக்காலோளிக்காக இல்லை என நினைத்துக்கொண்டு… ….

 5. Raj Chandra Says:

  நானும் வியாஸர் விருந்து வழியேதான் தொடங்கினேன் (13 வயதில்). போரும், பின் வரும் பகுதிகளும் பல காலங்களுக்கு என்னைத் தொந்திரவு செய்திருக்கிறது. அதன் பிறகு கிஸாரி அவர்களின் தொகுப்பு கிண்டிலில் தரவிறக்கினாலும் படிக்க முடியவில்லை…காரணம் மகாபாரதம் படிக்க கிண்டில் சரியான மீடியம் அல்ல என்பதே (எனக்கு)

  ஆனால் ஜெமோ-வின் வெண்முரசு ஆரம்பித்தவுடன் தீவிரமாகத் தேடி கும்பகோணம் பதிப்பு மற்றும் பிபேக் தேப்ராய் மொழிபெயர்த்தவை வாங்கினேன். ஸல்ய பர்வம் வரை படித்தாகிவிட்டது (கவனிக்க: படிக்க மட்டுமே செய்திருக்கிறேன். உள்வாங்கி, அனுபவித்து, ஆராய இன்னும் 3-4 முறைகள் படிக்கவேண்டும். அதுவரை வாழ்வேன் என்ற நம்பிக்கையுடன் :) ). உருப்படியாக இரண்டு வருடங்கள் இதற்கு செலவழித்தேன்.

  என்னைப் போன்ற ஆத்மாக்களுக்குள் இருக்கும் மகாபாரதப் பொறியை ஊதிவிட்டதற்கு ஜெமோ-வுக்கு நன்றி சொல்லவேண்டும்.

  பிபேக் தேப்ராய் புத்தகங்களைப் படிக்கும்போது அவர் கொடுக்கும் அடிக்குறிப்புகள் மிக உதவியாக இருக்கிறது. கீதைப் பகுதி மட்டும் கும்பகோணப் பதிப்பில் படித்தேன்.

  2020 குறிக்கோள் சம்ஸ்கிருதம் கற்றுக்கொள்ளல்…அது நடந்துவிட்டால் பின் மூலப்பிரதி பாராயணம்…பார்ப்போம்.

  ஜேஏபி வேன் ப்வீட்டெனன் ஆரம்பித்ததை மற்றவர்கள் தொடர்வதாக விக்கி சொல்கிறார்:
  Another English prose translation of the full epic, based on the Critical Edition, is in progress, published by University of Chicago Press. It was initiated by Indologist J. A. B. van Buitenen (books 1–5) and, following a 20-year hiatus caused by the death of van Buitenen, is being continued by D. Gitomer of DePaul University (book 6), J. L. Fitzgerald of Brown University (books 11–13) and Wendy Doniger of the University of Chicago (books 14–18).

  இதில் ஃபிட்ஸ்ஜெரால்ட் புத்தகங்கள் கிடைக்கின்றன. வாங்க வேண்டும். நீங்கள் சொன்ன வகையில் மன்மத்நாத் தொகுதிகள் இந்தியப் பயணத்தில் வாங்கலாம் (வீட்டுக்கார அம்மணியிடம் அடி வாங்குவேன், இடப்பற்றாக்குறை காரணமாக ;) )…அருட்செல்வ பேரரசன் நல்ல வேளையாக கிண்டிலில் சில தொகுதிகளை வெளியிட்டதால் அவைகளை வாங்கிவிட்டேன்.

  ரமேஷ் மேனன் கங்கூலியின் மொழிபெயர்ப்பை தற்கால ஆங்கில வடிவில் வெளியிட்டுள்ளதாகக் கேள்விப்பட்டேன்.


  • விரிவான கருத்துகளுக்கு நன்றி.

   நானும் ரமேஷ்மேனன் அவர்களின் மீளுருவாக்கம் பற்றிக் கேள்விப் பட்டிருக்கிறேன். (தற்கால ஆங்கிலம், ‘இளைஞ்ஜர்களுக்கான மஹாபாரதம்’ மாதிரி விஷயம் என்றால் எனக்குக் கொஞ்சம் கதிகலங்குகிறது – இத்தனைக்கும் மெட்ராஸ்பாஷையில் மஹாபாரதச் சுருக்கத்தை எழுதியிருப்பவன்; ஆகவே இவரைப் படிக்கமாட்டேன் என நினைக்கிறேன்… முன்முடிவுகள், முன்முடிவுகள்… காலம் அவ்வளவு இல்லைவேறு; feeling very mortal.)

   பின்குறிப்பு: ஐயய்யோ! நீங்கள் ஒரு என்ஆர்ஐ-யா? என் மதிப்பில் உடனடியாகத் தாழ்ந்துவிட்டீர்கள் எனும் உண்மையை அறியவும். தாங்கள், இந்த எழவெடுத்த என்ஆர்ஐயாக மட்டுமில்லாமல் –  ஐடி தொழிலில் அல்லது இன்னமும் படுமோசமான ஆடிட்டர் தொழிலில் இருந்தால் இன்னமும் அப்படியாகிவிடும் என முன்கூட்டியே சொல்லிவிடுகிறேன்.

   • Raj Chandra Says:

    >>>காலம் அவ்வளவு இல்லை
    எனக்கும் அதே…

    >>>ஐயய்யோ! நீங்கள் ஒரு என்ஆர்ஐ-யா? என் மதிப்பில் உடனடியாகத் தாழ்ந்துவிட்டீர்கள் எனும் உண்மையை அறியவும்.
    — இத்தனை நாளா என்னை உயர்வாக நினைத்த ஒரே மனிதர் நீங்கள்தான்.  :))))

    >>>இந்த எழவெடுத்த என்ஆர்ஐயாக மட்டுமில்லாமல் – ஐடி தொழிலில்
    —அதே…நான் ஒரு மென்பொருளாளன் :)))


    • சரி, சரி. என்ன செய்ய. இனிமேல் எல்லாம் சரியாகிவிடும். மனிதன் என்றால் சறுக்கல்கள் இருக்கத்தான் செய்யும். கவலை வேண்டேல். கொடுங்கஷ்டங்களில் இருந்து கூடியவிரைவில் மீள வாழ்த்துகள்.

     + உங்களுக்காக ஒரு ஸ்பெஷல் ஆஃபர்: பொதுவாகச் சபிக்கப்படும் தகுதிகளைக் கொண்டிருக்கும் ஜந்துவான நீவிர், பெரியமனதுடன் மன்னிக்கப்பட்டீர்.

     பிகு: ஆனால் கவனிக்கவும்: நீங்கள் ஒரு நேருவிய-ஸோஷலிஸ்டும் எனத் தெரியவந்தால், முன்னறிவிப்பு இன்றி, தாங்கள் ஏழரைகளின் பூலோக சொர்க்கத்திலிருந்து தள்ளிவிடப்பட்டு இன்னொரு ஏவாள் பின்னால் ஏவலாளாகச் செல்லவேண்டிவரும்.

     • Raj Chandra Says:

      >>>பெரியமனதுடன் மன்னிக்கப்பட்டீர்…
      – தன்யன் ஆனேன்.

      >>>சோஷலிஸ்ட் கிடையாது.  ஆனால் நேருவை மதிப்பவன்.  அதுக்காக மத்ததெல்லாம் இந்துத்வா சதி என்று கூவும் கழக வீரனும் இல்லை(ஏவாளின் ஏவலனாகும் தகுதியை இழந்துவிட்டேன் :))) ).

     • contactmouli Says:

      உங்கள் ரசிகர்கள்/வாசகர்கள் பலர் (நான் உட்பட), ஐ.டி. / “மென்பொருளாளர்கள்” தான் என்று நினைக்கிறேன். :)


      • ‘முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்.’

       எனக்கும்தான், என்ன செய்வது சொல்லுங்கள், கர்மா.

       பின்குறிப்பு: மொத்தம் ஏழரை வைத்துக்கொண்டு ரொம்பவும் இளிப்பது எனக்குத் தகாது.

 6. Vijay Vanbakkam Says:

  தமிழ்நாட்டில் 100 வருஷங்களுக்கு முன் சில சமஸ்கிருத அறிஞர்கள் பல வருஷங்களாக உழைத்து சமஸ்கிருதத்திலிருந்து தமிழுக்கு மொழி பெயர்த்துள்ளனர். தமிழர்கள் முதலில் அதைத்தான் அணுகவேண்டும்

  https://archive.org/search.php?query=tamil%20mahabharatam%20AND%20mediatype:texts

  https://archive.org/search.php?query=tamil%20mahabharatam%20AND%20mediatype:texts

  திஹிந்துவின் அந்த நாள் மதிப்பீடுகள்

  http://srimahabharathaparvangal.blogspot.in/2013/08/blog-post.html


  • ஐயா,  சுட்டிகளுக்கும் நினைவுறுத்தல்களுக்கும் நன்றி.

   சர்வ நிச்சயமாக இதனைப் படிக்கவேண்டும். நானும் இதன் இரண்டு பர்வங்களை ஒருகாலத்தில் படித்திருக்கிறேன். (என் தந்தைவழிச் சின்னத்தாத்தாவின் தகர ‘ட்ரங்க் பெட்டி’யில் செல்லரித்த புத்தகக் சேகரத்தில் இதுவும் இருந்தது; நான் இதனைப் பற்றிக் குறிப்பிட மறந்துவிட்டேன். இன்னொரு நண்பர் ரமணன் ஜகன்னாதன் அவர்கள் இதுபற்றி ஒருசமயத்தில் குறிப்பிட்டாரென நினைவு)

   மேலே, முத்துராமகிருஷ்ணன் அவர்களும் இதுபற்றிக் குறிப்பிட்டிருக்கிறார்.

   ஆனால், இந்த வடிவம் முழுவதும் ஆர்கைவ் தளத்தில் இருக்கிறது என்பதை நான் அறியவில்லை. மிக்க நன்றி. (மஹாபாரதத்துக்கு என்றே மிச்சமிருக்கும் வாழ்நாளை ஒதுக்கலாம்போல!)

   • Vijay Vanbakkam Says:

    1880-1950 காலத்தில் பல ஹிந்து மத சம்பந்தபட்ட நூல்கள் சமஸ்கிருதத்திலிருது மொழி பெயர்க்கப்பட்டுள்ளன . ஆர்கைவில் தேடினால் பல பொக்கிஷங்கள் கிடைக்கும்

 7. jay673 Says:

  Thank you for this post. I did mention the Kumbakonam pathippu and the book has been mostly lying idle since its purchase. Mr. Venkatraman, who owns the rights and published the volumes, asked me to read at least dharmar’s conversation with yaksha, even if I don’t read all the volumes :-) probably he knew ;-)

  Wrote on a friend’s FB wall this morning in a discussion on the necessity to repeat certain truths “The stories by repeating the same truism in different contexts also help to understand the complexities that real-life throw at us. On one side you have Pancha thantra and hitopadesa and on the other side stories like that of harichandra. Not to forget Mahabharata which challenges us and points out the difficulty in defining good or bad in absolute terms”.

  Continuing on Mahabharatha, I want to mention the book “On the Meaning of the Mahabharata” by V. S. Sukthankar. I saw it first in Dharmadispatch’s reading list. It is available to download in archives.org ( hard copy available for sale on Amazon.in). As with many books of late, started reading the soft copy and left it at the end of the first essay. But loved what I have read so far. I recommend this book to the 15/2

 8. dagalti Says:

  / வியாசர் விருந்து வழியாக. சுமார் நான்கு வயதில் அதனைப் படித்திருந்தேன்/
  நேரம் கிடைக்கும்போது உங்கள் யுகேஜி வாசகானுபவங்களைப் பற்றி விரிவாக எழுதவும்.


  • ஐயா, கிண்டல் ரசிக்கப்பட்டது. இருந்தாலும்.

   நான் எல்கேஜி யுகேஜி கிடையாது. நேரடியாக ஒன்றாவது.  ஆலந்தூர் முனிஸிபாலிட்டி பள்ளி. தமிழ்வழிக் கல்வி.

   ஒத்திசைவில் பெரும்பாலும் என் சுயபுராணம்தான். ஆக, இதையெல்லாம் நேரம்செலவழித்துப் படிக்கவேண்டிய அவசியத்தை வளர்த்திக்கொள்ளவேண்டா. நன்றி.

 9. Dagalti Says:

  கிண்டல் பாதி ஆர்வம் மீதி

  It is not common for 4yo to fluently read such prose.
  அதுனால வேற எதெதெல்லாம் அப்போ படிச்சீங்கன்னு தெரிஞ்சா ஒப்பிட்டு பெருமூச்சு விட்டுக்கலாம்னு..


  • சரி. உங்களிடம் பகிர்வதற்கு என்ன?

   மூன்று வயதில், ‘மாமனாரின் இன்பவெறி’ படத்துக்குக் கதைவசனம் எழுதினேன்.

 10. Vijay Vanbakkam Says:

  Changes – Roman instead of Tamil numerals for pages. Due to change in font size, new edition is 2 pages bigger (till page 69).


 11. […] இன்னொரு, ‘கான்டேக்ட்மௌலி’ எனவொரு அன்பரும், இதேபோல ஒரு பிலாக்கணம். https://othisaivu.wordpress.com/2020/01/19/post-1095/#comment-12628 […]


Leave a Reply to Vijay Vanbakkam Cancel reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s