பாவப்பட்ட பொன்னியின் செல்வன், போர்வாள், வடிவமைப்புப் பிரச்சினைகள், மூடம்பாக்கத்துத் திருடர்கள் – குறிப்புகள்

20/01/2020

இதன் முந்தைய ‘டீஸர்’ பதிவு: ய்யேய்! இதென்னடா பொன்னியின்செல்வனோட போர்வாளுக்கு வந்த சோதனே!

சரி.

-0-0–0-0-

இந்தக் கோடம்மூடம்பாக்கக் கூவான்களுக்கு, அதன் மிகப்பெரும்பான்மைப் பொறுக்கிகளுக்கு – அடிப்படைச் சிரத்தையோ மூளையோ இல்லை எனும் நாமும் நாடுமறிந்த உண்மைக்கு அப்பாற்பட்டு — இசையிலிருந்து, கதை, நடிப்பு, இயக்கம், போஸ்டர் வரை எல்லாவற்றையும் பொதுவாக அட்டைக் காப்பி அல்லது ஈயடிச்சான்காப்பி அல்லது படைப்புசக்தியுடன் கமுக்கக்காப்பி அடித்துமட்டுமே பழக்கம் என்பதையும், இதில் பாலச்சந்தர் முதல் பாரஞ்சித் மிஷ்கின் வரை ஒரு விதிவிலக்கும் இல்லை என்பதையும் நானொன்றும் நேரடியாகவோ/பிறர்மூலமோ அறியாமலில்லை.

அவர்களுடைய லிபரல்மனிதவுரிமை வாயோர நுரைதள்ளல்களையும், தொழில் நுட்பங்களை உபயோகித்துக்கொண்டே செய்யும் பேடித்தனமான தொழில்நுட்பயெதிர்ப்பையும், திருட்டுத்தனம் செய்துகொண்டே அறம்பற்றி ஊராருக்குச் செய்யும் அமோக உபதேசத்தையும் உணராமலில்லை.

எளிய அறம்சார் குடிமக்களாக தம்மை வரித்து, மற்றபடி மினுக்கிக்கொண்டு, ஜேப்படிக்காரர்களுடன் இழிந்து இருப்பதையும் அவர்களைச் சார்ந்து வாழ்வதையும் + ‘மூல ஆவணங்களைப் படித்ததாகச் சொல்லிவிட்டேன், ஆகவே படித்துவிட்டேன் என நினைத்துக்கொள்ளுங்கள், அதனால்தான் என் வழக்கம்போலவே படுதெகிர்யமாக உளறுவேன்‘ என்று அழிச்சாட்டியம் செய்யும் நம் ‘புல்லுக்கும் ஆங்கே பொசியப்படும்’ அறவான்களையும் குற்றம் சொல்லவில்லை. அவரவர்க்கு அவரவர் அளவு.

இருந்தாலும் இந்தப் பதர்களை அவ்வப்போது வைக்கவேண்டிய இடத்தில் வைக்காவிட்டால், இந்தப் புதுபம்பரத் தொகுறுதல் அதிகமாகிவிடும். ஆகவே.

இந்த வாள் எழவை (மட்டும்), கீழேயுள்ள விஷயங்களை முன்வைத்து அணுகலாமா? இவற்றின் மூலமாக மணிரத்னம்சார் (பொதுவாகவே, எல்லா சார்களின்) அபத்தத்தை நிறுவலாமா?

 • மணிரத்னம்சார் பட போஸ்டர் திருடல் விவரம் (முதல் திருடல், முற்றும் திருடல்)
 • எஃகு-போர்வாள் வெண்கலச்சிலைகளுடன் எனக்குள்ள முன்னனுபவம்/தொழிலறிவு/அறிமுகம்
 • பொன்னியின்செல்வனில் வாளின் பங்கு என்ன? வாட்களின் விவரணைகள் எப்படி இருக்கின்றன, குறிப்பிடப்பட்டுள்ளன?
 • சோழர்கள் உபயோகித்திருக்கக்கூடிய போர்வாட்கள், போர்வாளின் பாகங்கள், வடிவமைப்பு அடிப்படைகள்
 • போஸ்டர் அட்டைக்கத்திப் போர்வாளின் அதியற்புத வளம்
 • ஒரு எளிமையான, பொருத்தமான போஸ்டர் எழவினை, திருடாமல், அடிப்படை ஆராய்ச்சிசெய்து வடிவமைக்கச் சிரத்தையில்லை – இவர்கள் கூரையேறி ஆஸ்கர் வைகுண்டம் போகப் போகிறார்களாம். ங்கொம்மாள, வெட்கமாக இல்லை?

–0-0-0–

முதலில் இந்தப் போஸ்டர் விவகாரத்தை எடுத்துக்கொள்வோம்.

மூடம்பாக்கத்துக் கழிசடைகளின் (2020, ஜனவரி) வடிவமைப்பு கீழே.

ஆனால், மேத்யூ ‘மேட்’ க்ரிகண்டி (அமெரிக்க இளைஞர், வடிவமைப்பாளர்) ஃபெப்ருவரி 26, 2015 அன்றே ப்ரேவ்ஹார்ட் படத்தின் பின்புலத்தை வைத்து அமைத்த ஒரு போஸ்டர் டிஸைன் கீழே.

இதிலிருந்து என்ன தெரிகிறது என்றால், க்ரிகண்டி அவர்கள், 2015லிருந்து 2020க்கு டைம்-ட்ராவல் வகை எழவொன்றைச் செய்து, எதிர்காலத்துக்கு வந்து பொசெ மணிரத்னம் பட போஸ்டர் ஐடியாவைத் திருடிச் சென்று உல்ட்டா செய்துவிட்டார், என்ன செய்ய.  ஐடியாவைத் திருடி, பின்னர் பொன்னியின்செல்வ வாள் படத்தையும் இடதுபக்கக் கொள்ளையர்கூட்ட ஜாபிதாவையும் அழித்துவிட்டு வாள்படத்தையும் வசதியாக மாற்றிவிட்டார், பாருங்கள்! படுகேவலம். :-(

அது மட்டுமல்ல – பொன்னியின்செல்வன் கதையின் எந்த நிகழ்வும் மலைப் பிராந்தியங்களில் நடக்காமல் இருந்தாலும், பொன்னியின்செல்வ சோழர்கள் இப்படியாப்பட்ட வாட்களை உபயோகிக்காமல் இருந்தாலும் – எவ்வளவு மோசமாக இப்படி, மறுபடியும் முற்காலத்துக்குச் சென்று மணிரத்னம்சார் போஸ்டரை இப்படிக் கெடுத்துவிட்டார் பாருங்கள்!

இதுகுறித்து அவருக்கு உண்மை விவரம் வேண்டி, ஒரு மின்னஞ்சலை, சுமார் இரண்டுவாரங்களுக்கு முன் அனுப்பினேன்.  இதுவரை அவரிடமிருந்து பதிலில்லை; போய்ச் சேர்ந்ததா எனவும் தெரியவில்லை.  எதுஎப்படியோ, என் மின்னஞ்சலை அனுப்பி இவ்வளவு காலமாகிவிட்டபடியால்… …

ஆக, அவர் தன் திருட்டையும் அழிச்சாட்டியத்தையும் குறித்து வெட்கப்பட்டுத்தான் பதிலளிக்கவில்லை என நினைக்கிறேன். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

0-0-0-0-0-

எப்படியும் எனக்கு, இந்த மேட் அவர்கள் மீது கொடும் கோபம். இப்படியா துளிக்கூட வெட்கமோ மானமோ சூடோ சொரணையோ இல்லாமல் திருடுவார்கள்? திருடவும் திருடிவிட்டு கமுக்கமாக இருப்பார்கள்?? ச்சீ.

தமிழனின் கலையாக்கங்களை, அதுவும் சினிமா தொடர்பான விஷயங்களைத் திருடித்திருடித்தான், அமெரிக்கா, ஜெர்மனி, தைவான், சீனா, ஜப்பான், ஃப்ரான்ஸ் முதலிய நாடுகளில் திரைப்பட ரசிகர்களின் பேராதரவு பெற்று விளங்குகிறார்கள் – இந்த வெளிநாட்டுக் கோபால்பல்பொடிக் கொள்ளைக்காரர்கள் என்பதை நாம் அறியமாட்டோமோ என்ன! ஹ்!

சரி. :-(

இனி ஒவ்வொன்றாக பிற பகுதிகள் வரும். (எல்லாவற்றையும் முடித்தவுடன்தான், அவற்றை ஒருசேர (மன்னிக்கவும், சோழ) பதிப்பதாக இருந்தேன் – ஆனால் காலம்கிடக்கிற கிடப்பில், முடியமுடிய முடிந்தபோதெல்லாம் – நான்கைந்து சிறுபதிவுகளாக இந்த வரிசை வரும்)

நன்றி. :-(

4 Responses to “பாவப்பட்ட பொன்னியின் செல்வன், போர்வாள், வடிவமைப்புப் பிரச்சினைகள், மூடம்பாக்கத்துத் திருடர்கள் – குறிப்புகள்”

 1. Kannan Says:

  Mani copies from everything and everyone and that is a well known fact. Compared to what he did earlier, this is a minor offence.

  Nayagan, as everyone by now, is a scene by scene ripoff and poorly at it. In alaipaythey, a song sequence has the resemblance of Baccardi tv commercial at that time. Ayutha Ezuthhu, he copied from a Mexican director.

  He might be reviewing Braveheart over and over for inspirations now.


 2. ஐயோ ஏழரைசார்களே!

  :-( நான் தவறு செய்துவிட்டேன். மேட்க்ரிகண்டிசார் என அவரை விளிக்காமல், வெறுமனே மேட் என்று அழைத்துவிட்டிருப்பதால், மரியாதைக்குறைவு என அவர் கோபித்துக்கொண்டு விட்டார் போல!

  அதுகண்டி அதனால்தான், மேட்க்ரிகண்டிசார் எனக்கு பதிலளிக்கவில்லை.

  வருத்தத்துடன்,

  சார்பதிவாளர்.


Leave a Reply to Kannan Cancel reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s