வாள்க்கையே வெற்த்துப்போச்சுபா! மூடம்பாக்கத்துப் பொன்னியின் செல்வ வாள் குறிப்புகள், வெறுப்புகள்

21/01/2020

கல்கி, தன்னுடைய அதிபுனைவு ரயில்வண்டித் தொடர் சரித்திரக் காப்பியப் (ஹ்ம்ம்… இது எல்லாம்கூட அக்கால வெண்முரசுதான், ஆச்சரியமாக இல்லை?) புதினத்தில், இந்த வாள் குறித்து என்ன எழுதியிருக்கிறார்? ஏதாவது எழுதியிருக்கிறாரா??

இதற்கு முந்தைய ஜன்னியின் ஜொள்வப் பதிவுகள்:

-0-0-0-0-0-

கல்கி அவர்கள் எழுதி, இன்னமும் சக்கப்போடு போட்டுப் பிழியப் பட்டுக்கொண்டிருக்கும் ‘பொன்னியின் செல்வன்’ தொடர் நாவலைப் படித்துக் கிறங்கிப் போகாதவர்கள் அக்காலங்களில்* யாருமில்லை, அடியேன் உட்பட.  (*ஹ்ம்ம்… கநாசு, நகுபோலியன் அவர்களைத் தவிர – எனக்குத் தெரிந்து பொன்னியின்செல்வன், சிவகாமியின்சபதம்  இத்யாதிகளைத் தரமாகக் கிண்டல் செய்தததைப் போல வேறெவரும் செய்ததில்லை; பிற்காலங்களில் ஜேஜே, தன் குறிப்புகளில் கொஞ்சம் செய்திருக்கிறான் என நினைவு)

…வெந்தயத் தேவனாக பாவித்துக்கொண்டு, துணிவுலர்த்தும்கோல் ரசவாதம் கண்டு உருமாறிய  வாளினால் மந்திரவாதி ரவிதாசன்களையும் கொள்ளிவாய்ப் பிசாசுகளையும் எவ்வளவோமுறை என் சிறுவயதில் கொன்றிருக்கிறேன். எனக்கு அம்மை/ஸ்போடகம் காய்ச்சியபோது உடம்பில் ஏற்பட்ட தழும்புகளை வைத்துக்கொண்டு, அவற்றை போரில் ஏற்பட்ட விழுப்புண் வடுக்களாகக் கருதி என்னை மழவராயராகவோ அல்லது பழுவேட்டரைய எழவராகவோ கூட பாவித்துக் கொண்டிருக்கிறேன், பாவியாகிய யான், என நினைவு. Mea culpa.

சரி.

பொசெ-யில், பல வாட்கள், வீச்சுகள், குதிரைகள், சண்டைகள் வருகின்றன. ஆனால்  பொன்னியின்செல்வக் கதையை முன்னும்பின்னும் நகர்த்தல்களில், நந்தினியால்(?) அல்லது ஆபத்துதவிகளால்(??) அல்லது… … ஆதித்தகரிகாலன் பழிவாங்கப்பட்டுக் கொல்லப்படுவதில் ஒரேயொரு விதமான வாள்தான் (அந்தக்கால திராவிட அடிமையான பாண்டிய அரச சுப.வீரபாண்டியன் அவர்களுடையதாகவும் இருக்கலாம்) முக்கியமாகப் பொருட் படுத்தப்படுகிறது.

இதைத்தான் அந்தப் போஸ்டர் வாள் பிரதிபலிக்கவேண்டும் எனப் பார்த்தால் – அதன் விவரணையில் மீன்லச்சினைதான் இருக்கிறது.

-0-0-0-0-

கீழே, எனக்குக் கிடைத்த மட்டில் இந்த வாள்வரும் பகுதியின் மேற்கோள்கள்:

மூன்றாம் பாகம் – அத்தியாயம் 11, ‘கொல்லுப் பட்டறை’ +  அத்தியாயம் 12, ‘தீயிலே தள்ளு’

ஐந்தாம் பாகம் – அத்தியாயம் 37: இரும்பு நெஞ்சு இளகியது + போர்வாளின் பாகங்கள், வடிவமைப்பு + அத்தியாயம் 38: நடித்தது நாடகமா? +  அத்தியாயம் 40: ‘நான் கொன்றேன்’

வேறெந்த வாளும் இப்படிப் பாடப்படாத நிலையில்…மீன் என்பது எப்படி ரசவாதமாற்றம் அடைந்து சிங்கம்புலியானது?

சரி, சரி. படைப்பூக்கத்துடன் சோழர்களுடன் புலியைத் தொடர்புபடுத்தி, புலி கேனையம்பாக்கச் சந்தடிசாக்கில் கமுக்கமான நுழைந்துவிட்டது எனலாம்.

…ஆனால் சிங்கம்? இதுவும் மேலதிகப் படைப்பூக்கம்தான். வெறும் கேனையம்பாக்கத்துப் பீலாதான். இது சிங்கமல்ல, அசிங்கம்.

இதற்கு, கோடம்பாக்கத்துக் கேனையர்கள், ஒரேயொரு தரவாவது கொடுக்கமுடியுமா? இல்லை, ‘எல்லாமே சினிமாப் புனைவுதாண்டா, உருப்படாத வெட்டிக்கேளிக்கைதாண்டா’ தானா?

இருந்தாலும் சரித்திரம் தரித்திரம் எனச் சொல்லிக்கொண்டால், அதற்காவது தொழிற்சுத்தத்துடன் இருக்கவேண்டாவா? அதற்காக முறையாக ஆராய்ச்சி செய்யக்கூடாதா? அல்லது முட்டாக்கூ இடிச்சபுளித் தமிழ்சினிமா ரசிகர்களுக்கு இதுவே அதிகம் என்ற பேராசானிய மனச்சாய்வா?

இல்லை இந்த வாள் ஒரு புதிய – கதையிலும் வரலாற்றிலும் இல்லாத, ராஜராஜனின் வாளாக, வரித்துக்கொள்ளப்படப்போகிறதா?

பாவீங்க்ளா!

ஏண்டா இப்டீ, எங்க ராஜராஜங்கிட்ட ஒரு டப்பா ஜிகினா அட்டை வாளைக் கூடக் கொட்க்காம, வெட்டியா ஒரு ஃபோட்டோஷாப் வாளக் கொடுக்றீங்க? பொற்க்கீங்க்ளா!

இத்த வெச்சிக்கினு அவன் தன் மசுரக் கூட ஷவரம் செஞ்சிக்க முடியாதேடா, சோம்பேறி முட்டாக்கூவான்களா…

-0-0-0-0-0-

பிலாக்கணம் தொடரும்…

 

 

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s