தொடரும் எளியகுடிமக ஜெயமோக சோககீதம்

26/01/2020

வேறு எவ்வாறும் இதனைச் சிறப்பிக்க, போற்றிப் பாடிட முடியாது. :-(

…துளிக்கூடச் சொரணையேயில்லாமல், தொடர்ந்து தொல்லைதரும் அன்பர் ஒருவரின்  ‘இதைப் படித்தாயா?’ தொணதொணப்பு தாங்கமுடியாமலும், என் பெரும்பேராசானுமேகூட அவ்வப்போது சரியாகவே, ஒப்புக்கொள்ளும்படிக்கே எழுதி என்னைப் பொய்ப்பித்து விடுவார் எனும் நான் ஆத்மார்த்தமாக நம்பும் வதந்தியின் காரணமாகவும், இதனைப் படிக்க நேர்ந்தது.

குடிமக்கள் கணக்கெடுப்பு பற்றி முடிவாக… https://www.jeyamohan.in/128701

சரி. இதுவும் –  அதிசராசரி, ஆனால் நீட்டிமுழக்கும்,  அயோக்கியத்தனமான பிறழ்பார்வையும் மலினமும் நிரம்பிய காட்டுரை என நான் கருதுகிறேன். ஏனெனில் அவருடைய வழக்கம் போலவே, இக்காட்டுரையிலும் பலப்பல அறப் பாவலா பப்பரப்பாக்கள். அவற்றுக்கு இரண்டு சிறு உதாரணங்கள், அவர் கட்டுரையிலிருந்தே கொடுக்கிறேன்.

…ஆகவே ‘குடிமக்கள் கணக்கெடுப்பு பற்றி முடிவாக’ என ஆரம்பித்து, தொகுத்து, வகுத்து, கூட்டி, கழித்து, பெருக்கி என விரியும் அந்தக் காட்டுரையில் இப்படி எழுதுகிறார்:

“…அது [=குடியுரிமைச் சட்டத் திருத்தம் 2019]  ஒரு சாதாரண நிர்வாகச் செயல்பாடு மட்டுமே. அதை ஓர் அரசாணை வழியாகவே நிறைவேற்றியிருக்க முடியும். பாராளுமன்றத்தில் ஒரு தீர்மானத்தைக் கொண்டுவந்து அதை நாடளாவிய விவாதமாக ஆக்கவேண்டிய தேவையே இல்லை. அது உள்நோக்கம் கொண்ட செயல்பாடு.”

இதிலிருந்து ஜெயமோகன் அவர்கள், ஒரு மஹோன்னதமான இந்தியல் அரசமைப்புச் சட்ட வல்லுநர் என்பதற்கு அப்பாற்பட்டு, நடைமுறை அரசநிர்வாகம் குறித்தும் ஏகோபித்து அறிந்தவர் என்றும் தெளிவாகிறது.

ஏனெனில் ஐயன்மீர் — அரசாணைகள், நிர்வாகச் செயல்பாடுகள் குறித்த இப்படியாப்பட்ட அதிஅற்புதப் புரிதல்களுக்கு, திரைக்கதைவஜனம் எழுதும் திருப்பணி அனுபவம் போதுமன்றோ?

தன் கற்பனை வளத்தைத் தாமே மெச்சிக்கொண்டு, தான் சொன்னதுதான் உண்மை என அவர் திருவாய் (அல்லது திருக்கீபோர்ட்) மலர்ந்தருளி யிருப்பதாலேயே நிறுவிவிட்டு, உடனடி உட்டாலக்கடியாக – ‘அது உள்நோக்கம் கொண்ட செயல்பாடு‘ எனவொரு சிறுதாவல் பெருந்தாவல் வகையறா!

எப்படி ஒருவரால், தொடர்ந்து இப்படியே எழுதித்தள்ள முடிகிறது, ஹ்ம்ம்?

“அந்த அச்சத்தை இந்தியா முழுக்க பரப்பி, நாட்டைக் கவ்வும் கலவரமாக ஆக்கும்பொருட்டு திட்டமிட்டு உருவாக்கப்பட்டதே இந்து அகதிகளுக்கு மட்டும் குடியுரிமை என்னும் மேலதிகத் திருத்தம்.”

என்னவோ, நாடாளுமன்ற மாடியில் குடியிருந்து விஷயங்களை நேரில் பார்த்தது போல, இப்படியொரு சதிவலைப் பூத மர்மக்கதைச் சித்திரத்தை விரிக்கிறார், நம் பெரும்பேராசானார், என்ன செய்ய!

இத்தனைக்கும் இந்தச் சட்டத் திருத்த எத்தனம் மாமாங்கங்களாக பாரதியஜனதா கட்சித் திட்டத்தில், தேர்தல் அறிக்கைகளில் இருக்கிறது. இதற்கான முகாந்திரங்கள் பாபுஜி அவர்களிடமிருந்து சாச்சாஜி அவர்கள் ஊடாக, நம் பல அக்காலத் தலைவர்களின் செயல்பாடுகளில் இருக்கின்றன, சுமார் 70 வருடங்களாக இப்படித்தான்! ஏன், காங்க்ரஸ் கட்சியே இதே திருத்தத்துக்கு ஒரு மாமாங்கம் முன்னமே அச்சாரம் போட்டிருக்கிறது. சதிவலை? உள் நோக்கம்?? (பெரும்பேராசான் புகைக்கும் புல் எனக்கும் ஆங்கே பொசியுமா?)

…என்னடா இது, திரும்பத் திரும்ப, கொஞ்சம் கூட அலுப்போ பொறுப்புணர்ச்சியோ இல்லாமல்,  முருங்கமரத்தில் ஏறிக்கொண்டே இருக்கிறதே இந்தக் கதைகதையாகவும் கத்தைகத்தையாகவும் கதைக்கும் வேதாளத்தனம், என்று ஆச்சரியப்பட்டால்…

இப்படி ஒரு டிஸ்க்ளெய்மர்:

“இன்றைய சூழலில் ஒருவன் உண்மை நிலையை உணர முதலில் தன்னை எளியகுடிமகனாக நிறுத்தி தன் புரிதலை நம்பி, நீதியுணர்வைச் சார்ந்து பேசவேண்டியிருக்கிறது.”

கேஸ் க்ளோஸ்ட். மன்னிக்கவும்.

…வழக்கம் போலவே நமக்கெல்லாம் நன்றாகவே அறிமுகமான அந்த ‘எளிய குடிமகன்‘ வந்துவிட்டார் பராக். அதுவும் ‘தன் புரிதலை நம்பி‘க்கொண்டு… மேலே ஒரு ஆசாமியும், ஒருகேள்வி கேட்கமுடியாது. போங்கடே.

பீலாவுடுவதையும், நாக்கோ/தட்டச்சுவிசைப்பலகையோ கூசாமல், தொடர்ந்து வாய்க்குவந்தபடி அறச்சீற்ற வதந்தி பரப்புவதையும் பார்த்தால்… …சிரிப்புத்தான் வருகுதய்யா.

நன்றி. (இதற்குமேல் அக்குவேறு ஆணிவேறாக இந்த எழவையெல்லாம் ஆழ்ந்து படித்துத் துன்புற வேண்டிய அவசியம் எனக்கில்லை; சொரணையற்ற உங்களுக்கு (அன்பரைக் குறிப்பிடுகிறேன்) எப்படியோ தெரியவில்லை. ஆளைவிடும்!)

ஒரு பதில்: ஆம், கருத்துரிமை நம் எல்லோருக்கும் இருக்கிறது; சர்வ நிச்சயமாக, ஜெயமோகன் உட்பட. ஆனால், வக்கணையான அறச்சீற்றத்துடன் ஏகோபித்து வாரிவழங்கப்படும் கருத்துகள், தரவுகளின் பாற்பட்டு இருந்தால் நலம், ஏனெனில் அவர் சொல்வதை வேதவாக்காக எடுத்துக்கொண்டலையும் ஒரு தறிகெட்ட கும்பலும் இருக்கிறது. அதனால், அவருக்குப் பொறுப்புணர்ச்சி வேண்டும் என நான் விழைவதற்கு அப்பாற்பட்டு, அவருடைய திறமைக்கும் தகுதிக்கும், இப்படிப் பொய்பொய்யாக இருக்கவேண்டிய அவசியமே இல்லை என்பது என் கருத்து.

ஒரு கேள்வி:  இவ்வளவு அவசரமாக, ஜெயமோகன் எங்கே கிளம்பிப் போய்க்கொண்டிருக்கிறார்? ஹ்ம்ம்??

ஒரு சிந்தனை: இப்படியே போனால், நல்ல நோக்கங்களுடன் நடத்தப்படுவதாக என்னால் நம்பப்படும் விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் சார்பாக, கீழ்கண்ட இரு விருதுகளும் அளிக்கப்பட்டால், அவற்றைப் பெற்றவர்கள், தான்தோன்றித்தனமாகவும், ஒருமசுத்துக்கும் பின்புலங்களை அறியாமலும், துளிக்கூடப் பொறுப்புணர்ச்சி இல்லாமலும், வாய்க்கு வந்ததையெல்லாம் அதிகாரபூர்வமாக அட்ச்சிவுடச் சௌகரியமாக இருக்கும்.

 • “எளிய குடிமகன்”
 • “தன்புரிதலை நம்பி”

இந்த இரு விருதுகளையும், முதலில் நம் பெரும்பேராசானுக்கே அளித்து அவருடைய பங்களிப்புகளை ஏகோபித்து மெச்சவேண்டும், மேலும் அவருடைய பராக்கிரமும் காத்திரமும் வீச்சும் ஆழமும் மேன்மேலும் பல்கிப் பெருகி – உலகப் பொருளாதாரம், மங்கோலியத் தமிழ் இலக்கியம், ஜப்பான் ஸாமுராய் வாட்களைச் செப்பனிடுவது எப்படி, அரவிந்தன்கண்ணையன் திருப்புகழந்தாதி, புதிய வரலாற்றுப் புதினமாக ‘அறக்கிழவன், அறக்கிழவி, அறக்குழவிகள்’ என பாபுஜியின் வரலாறு… … உள்ளிட்ட பலவற்றையும் எழுத வாழ்த்தவேண்டும் என்பது என்பது என் அவா.

உங்களுக்கு?

11 Responses to “தொடரும் எளியகுடிமக ஜெயமோக சோககீதம்”

 1. Aathma Says:

  Please understand his situation sir..

 2. Giri Says:

  After CAA came into existence, many people have become experts on the Constitution of India!
  And JeMo has become an expert on administration also.
  He says that he has seen himself the problems caused by illegal immigrants from Bangladesh. But he also says that the government should have done the enumeration “silently”!(சத்தமில்லாமல்) Only he can explain how.
  It is also to be noted that his opinion comes after a month of the implementation of the act. That shows that his reaction is after seeing the reactions to the act.

 3. Noname Says:

  பத்மவிருதாளர்கள் பற்றி இப்படி ஜெமோ எழுதியதைப் படித்தீர்களா? இவரையா குற்றம் காண்கிறீர்கள்?

  https://www.jeyamohan.in/129590


  • ஹ்ம்ம்? ஆம். நீங்கள் சுட்டிகொடுத்ததனால் படித்தேன். (இனி கொடுக்காதீர்கள்!)

   அதனைப் படித்ததிலிருந்து, எனக்கு மூன்று விஷயங்கள் தெளிவுபடுகின்றன.

   1. அற நெகிழ்வாலஜி எனவொரு புதிய துறையும் அதன் துரைமார் அவர்களும் தோன்றிவிட்டனர். பராக்!

   2. இதையே இடதுசாரிகளோ, அல்லது (தப்பித் தவறி) ராஹுல்காந்தி போன்ற தண்டக்கருமாந்திரர் யாராவது மத்தியரசமைத்து அது (தப்பித் தவறி) இப்படி உண்மையாகவே களப்பணி செய்தவர்களுக்கு பத்ம விருதுகள் அளித்திருந்தால் – உங்கள் அபிமானத்துக்குரிய பெரும்பேராசான் எப்படித் திருக்கூத்தாடியிருப்பார், இன்றைய காந்தி நேற்றைய பூந்தி என ராஹுலாரை வர்ணித்துப் புல்லுக்கும் ஆங்கே பொசியக் காத்திருப்பார் எனும் திருக்கல்யாணத்தைப் பார்க்கமுடியாமல் போகிறதே என்று… (எப்படித் துளிக்கூட, மத்திய அரசின் இன்றைய தன்மை, அதன் தலைமை, கட்சிப் பாரம்பரியம், நாட்டுப்பணி செய்பவர்களின்மீதான கரிசனம், அரசவைப் புலவர்களுக்கும், சாமரம் வீசுபவர்களுக்கும் இடமில்லாமை –  என ஒரு வார்த்தை, ஒரு வார்த்தைகூடச் சொல்லாமல் பொத்தாம்பொதுவாக அறமாக நீட்டி முழக்கமுடிகிறது, உங்கள் தலீவரால்? ஹ்ம்ம்?? பயங்கரமான தொழில் நுட்ப அரம்தான் இவர்!!)

   3. // அதேசமயம் பத்ம விருதுகள் பெற்றமையாலேயே ஒருவர் தகுதி கொண்டவர் அல்ல.

   ஹ்ம்ம். அதேபோல, தமிழில் எழுதுவதனாலேயே ஒருவர் தமிழெழுத்தாளத் தகுதி கொண்டவர் அல்ல.

   // கலை, இலக்கியம்,சேவை துறைகளில் சாதனையாற்றியவர்களை மட்டுமே அவ்வாறு எழுதும் நூலில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.நண்பர்கள் முயலலாம்

   இது மிக முக்கியமானது. இத்தனை நாள், தமிழ் அலக்கியவாதிகளைப் போய், ‘கலாச்சாரத்தின் / சமூகத்தின் மனச்சாட்சி’ என ஒர்ரேயடியாக அவர் சொல்லிவந்தது டகீல் என அவரே ஒப்புக்கொண்டு, பிறருக்கும் இடஒதுக்கீடு செய்திருப்பது மெச்சத் தகுந்ததே!

   என்னமோடாப்பா.

   எங்கு சென்றுகொண்டிருக்கிறார், இவர்?


 4. From a friend:

  பாழாய்ப்போன தமிழ் சினிமாவிலிருந்து சொல்வதென்றால் – ஈயம் பூசின மாதிரியும் இருக்கணும், பூசாத மாதிரியும் இருக்கணும்.

  கடவுளே! கமலகாசனாருடன் சேர்ந்து செயமோகனாரும் சாவடிக்கிறார்.

 5. Noname Says:

  “அவற்றைப்பற்றிச் சொல்ல எனக்கு என்ன தகுதி என்றால் நான் கலைஞன் படைப்பாளி என்பதனால். ஐயமே இல்லாமல் இத்தலைமுறையின் தலைசிறந்த படைப்பாளி என்பதனால். இன்று உலகமொழிகளில் எதிலும் எனக்கிணையான எழுத்தாளர்கள் மிகச்சிலரே என்பதனால். ஓர் உளவியலாளன் அல்லது சமூகவியலாளனுடன் நான் பேசுவதென்றால்கூட அத்துறையில் எனக்கிணையான முதன்மைகொண்டவருடன் மட்டுமே பேசுவேன்.”

  https://www.jeyamohan.in/
  https://www.jeyamohan.in/129281


  • :-) உங்களுக்கு நல்ல நகைச்சுவை உணர்ச்சி இருக்கிறது. அவருக்கும். (பின்னதை நான் எப்போதுமே சொல்லிவந்திருக்கிறேன்)

 6. அல் பசினோ Says:

  ஏங்காணும் பக்கத்து மளிகை கடைல புளிச்ச மாவு வாங்குவதென்றால் கூட செட்ராஸ் டாக்கீஸ்காரன் கார் அனுப்புறான்.நீர் அனுப்புவீரா?இப்படி முற்போக்கா என்னை காட்டிக்கொண்டால்தான் கார் வரும்!மகனை உதவி இயக்குனர் ஆக்கி அப்படியே விமலகாசன் ஆசியில் ஒரு ஸ்டான்லி குப்ரிக் ஆக்க பலரின் தயவு கிடைக்கும்!குடியுரிமை சட்டத்தால் அரேபிய பித்தர்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை என்ற உண்மையை சொன்னால் மேற்சொன்னவைகள் கிடைக்குமா?-ஆசான் அறச்சீற்றத்தில் அரற்றியது.


Leave a Reply to Aathma Cancel reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s