ஒரு வழியாக…

05/02/2020

இன்னொரு வழி. :-)

கிட்டத்தட்ட 16 வருடங்கள் நேரடியாகவும், ஒரு படி அகன்றும், முழுநேர/பகுதிநேரரீதிகளில் பெரும்பாலும் ஆர்வக்கோளாறுதர தன்னார்வலத்தனமாக பள்ளிகிள்ளி கல்விகில்வி என அலைந்துதிரிந்து ஏதோ பெரீய்ய மசுறு களப்பணி கிளப்பணி செய்து சாதித்துவிட்டதாக கிறக்கத்திலிருந்த பின்…

போதும்டாசாமியோவ்.

= உடலில் முடி அனைத்தும் நரைத்துவிட்டது. என்னுடைய நடவடிக்கைகள் காரணமாக சிலபல பழங்கால நண்பர்கள் fell by the wayside, அவர்களும் அன்புடன் சொல்லிப் பார்த்தார்கள், “டேய், வாயையும் குண்டியையும் பொத்திக்கினு சும்மா இர்டா! பெர்ஸ்ஸா எள்த வந்த்ட்டான்!”

இந்த ஒழுக்கவாதி அறவியல் அறிவுரைக்காரர்களில் இரண்டுபிரிவினர்:

அ. “வெறும் அலக்கியம்/வெமர்சனம் போதுமே – உனக்கெதற்கு அரசியல்?  அதிலும், நீ சிலபல எழுத்தாளர்களைத் தொடர்ந்து கேலி செய்வதை நிறுத்தவேண்டும்” வகையறாக்கள்.

…என் மதிப்புக்கும் அன்புக்குமுரிய  ஒரு நெடுநாள்  (ஆகவே, வருடத்துக்கு ஒருமுறை ஃபோன் செய்து நல்லமனதுடன் அறிவுரைக்கும்) நண்பர், “வொனக்குத் தெரியுமே, அந்தப் பொண்ணுக்கு, நீ எழுதறது பிடிக்கலடா? வொன்ன எனக்குத் தெரியும், ஆனா பிற்த்தியாருக்குத் தெரியாதே! அத்தொட்டு, எப்பப் பாத்தாலும் திட்டாத. ஆக்கங்களை விமர்சனம் செய்யி, ஆனால் அதனை எழுதும் ஆசானிமிகளை விமர்சனம் செய்யாதே” டட்டடா டட்டடா.

2020 வந்துவிட்டது. இந்த வருடம் எப்போது இந்த முறைவாசல் பரிசம்போடல் ஃபோன்கால் வரும் என ஒரு பயபீதி நடுக்கத்தில் இருக்கிறேன், என்ன செய்ய!

ஆனால், நான், வெறுமனே திட்டிக்கொண்டிருப்பதில் மட்டும் ஈடுபடவில்லை, குறைந்த பட்சம், சிலசமயங்களிலாவது அப்படியில்லை எனத்தான் நினைக்கிறேன். பிரமையாகவும் இருக்கலாம். மஹாமஹோ அன்னமாச்சாரியா அவர்கள் பாடியது போல – ‘பிரமை ஒக்கட்டே’ வாழ்க்கையில் ஸாஸ்வதம். நன்றி.

இவர்களாவது பரவாயில்லை.

ஆ. இடதுசாரி லிபரல்தன அறிவுஜீவிகள். !!

இந்த அயோக்கியர்களைப் போன்ற சகிப்புத்தன்மையற்ற அரைவேக்காட்டான்களை, மெத்தப்படித்த முட்டாக்கூவான்களை, நான் இதுவரை கண்டதேயில்லை. (எவ்வளவோ அற்ப அயோக்கிய திராவிடக் கழுதைகளுடன் நன்றாகவே பழகிவிட்டிருக்கும், நிறைஅனுபவமிருக்கும் நான் சொல்கிறேன். ஏனெனில் திராவிடர்களானவர்கள் பெரும்பாலும் முட்டாக்கூவான்கள்; ஆனால் லிபரல்காரர்கள் திரியாவரமும் புத்திசாலித்தனக் கேனயமும் மிக்கவர்கள்!)

ஏனெனில், ஒரு இருபதுஇருபத்தைந்து வருடங்கள் முன்கூட, இவர்களில் பலருடன் தொடர்பில் இருந்திருந்தாலும் (தயைசெய்து, இதற்காக என்னை மன்னிப்பீர்களா?) அவர்களை ஒப்புக்கொள்ளமுடியவில்லையானாலும் புரிந்துகொள்ள முயற்சி செய்திருக்கிறேன். அவர்களில் பலர் களப்பணி செய்தார்களோ இல்லையோ, ஆனால் – படிப்பாளிகளாகவும், பொறுப்புணர்ச்சி மிக்கவர்களாகவும் இருந்தார்கள் எனவேறு நினைவு!

ஆனால், பொதுவாகவே இக்காலங்களில், இவர்களில் 99%பேர் அரைகுறை தண்டக்கருமாந்திரங்கள். படிப்பும் இல்லை, வாசிப்புமில்லை, அடிப்படைப் பொறுப்புணர்ச்சியுமில்லை – வெறும் பரிசுத்த அயோக்கியர்கள்தாம். அதிகபட்சம் டீவி,  ந்யூயார்க்டைம்ஸ், வாஷிங்க்டன்போஸ்ட், ஃப்ரண்ட்லைன், தஹிந்து, ஈபிடபிள்யு போன்ற அற்பப் பரப்புரை தண்டங்கள்தாம் அவர்களுக்கு வேதங்கள். உட்கார்ந்த இடத்திலிருந்தே வக்கணையாக உளறிக்கொட்டுபவர்கள் இவர்கள். நிஜவாழ்வில் ஒரு துரும்பையும் அசைக்காது ஒரு மசுத்தையும் சாதிக்காது இருந்தாலும் — லிபரலாக இடதுசாரித்தனம் பேசிக்கொண்டே, பங்குச்சந்தை களேபர கம்மாடிட்டி ட்ரேடிங் செய்பவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் வேலை செய்து சம்பாதித்து, அதே பன்னாட்டு நிறுவனங்களுக்கும் தொழில்நுட்பங்களுக்கும் எதிராகக் கொடிதூக்கும் தறுதலைகளை உசுப்பிவிடுபவர்கள்……

என்ன சொல்ல வருகிறேன் என்றால், இந்த அரைகுறை லிபரல் ஆட்களுக்கு (என் அக்கால வகுப்பு/அரசியல் தோழர்களுடனான ஒரு மேதாவி-லிபரல் குழாம் இருக்கிறது – அதில் நடந்த அழிச்சாட்டியங்கள் இவை!), என்னுடைய அரசியல் நிலைபாடுகள் பிடிக்கவில்லை. ஒவ்வொருமுறை அவர்கள் அரைகுறைத்தன மேதாவித்தனத்துடன் பாரதத்தையும் நம் பாரம்பரியங்களையும் பற்றிக் குறைகூறும்போதெல்லாம், நம் வரலாறுகளைக் குறித்து அமோகமாக உளறிக்கொட்டும்போதெல்லாம், அவற்றை நான் தரவுகளுடன் எதிர்கொண்டது அவர்களில் பலருக்கு ஒத்துவரவில்லை.

ஆனால் — நியாயமாக, அவர்கள் பிறருக்கு அளப்பரிய அலப்பரை அறிவுரைகளை அள்ளித்தெளிப்பது போல – தங்களுக்கும் ஆங்கே பொசிந்துகொள்ளவேண்டுமா வேண்டாமா? தங்கள் அசிங்கத் தவறுகளைத் திருத்திக்கொள்ளவேண்டுமா வேண்டாமா?

ஆனால், இவற்றுக்கெல்லாம் மாறாக – என்னை அந்தக் குழுமத்திலிருந்து விலக்கவேண்டும், ப்ளாக் செய்யவேண்டும், ‘ரொம்ப ஆடுகிறான், அடக்க வேண்டும்,’ … … இன்னபிற என அப்படியொரு செயலூக்கம், இயக்கம், குசுபுசு என ஒர்ரே அரசியல் அழுவாச்சி. பேடிகள். தம் முட்டாள்தனங்களையும் திரியாவர அழுகுணி ஆட்டங்களையும் மட்டும் சகித்து, அதற்கு மாறானவற்றைச் சகிக்காத துர்க்குண டுபாக்குர்கள். இவர்களால்தான் இடதுசாரி-லிபரல் என்றாலே பொறுக்கி எனவொரு முடிவுக்கு வந்திருக்கிறேன்.

இதில் ஒருசில நபும்ஸகர்கள். தனியாகத் தொடர்புகொண்டு, “என்னால் அவர்களை பகைத்துக்கொள்ளமுடியாது, அதனால்தான் நான் பகிரங்கமாக உனக்கு ஆதரவாகப் பேசவில்லை. என்னைப் புரிந்துகொள்வாயா, மன்னிப்பாயா?”

முதுகெலும்பற்ற பேடிகளை நான் மிக நன்றாகவே புரிந்துகொள்கிறேன். வீரமிலா நாய்கள். அறம் கிறம் காந்தி அஹிம்ஸை ரகுபதிராகவராஜாராம் மதச்சார்பின்மை ஸோஷலிஸ்ம் சமூகநீதி ப்ராஹ்மணியம் ஜாதிவெறி ‘கேஸ்ட் ப்ராப்ளம்’ மனிதவுரிமை மண்ணாங்கட்டி மசுறு என முழ நீளத்துக்குப் பேசச்சொல்லுங்கள். குண்டிகிழியும். கூடவே நம் செவிப்பறையும்.

சொல்லப்போனால், கிட்டத்தட்ட நாற்பது வருடங்களாக, மிக நன்றாகப் பழக்கமிருக்கும்ந்த இந்த இடதுசாரிப் பொறுக்கிகள் சிலரின் சார்பாக அவர்களுடைய ‘என்ஆர்ஐ அனாதை’  மயமாக்கப்பட்ட பாரதவாழ் பெற்றோர்களுக்குப் பலப்பல முறை சேவகம் செய்திருக்கிறேன். சிலரின் பிள்ளைகளுடன் மாதக்கணக்கில் ‘கேரியர் கௌன்ஸெல்லிங்’ வகை ‘எதிர்காலத்தில் எந்த மசுரைப் படித்து எந்த நிறுவனத்தை மொட்டையடிக்கலாம்’ அறிவுரைவேறு கொடுத்திருக்கிறேன். வேலையும் வாங்கிக் கொடுத்திருக்கிறேன்.

…ஆனால், நான் பாரதத்தில் இருக்கும் தீவிரவாதங்களைப் பற்றிய தார்மீக விமர்சனத்தைச் செய்து, மோதி-யோகி-அமித்ஷா பற்றி ஆதரவு நிலையெடுத்து, அசைக்கமுடியாத தரவுகளுடன் பேசினால், இவர்களுக்கு, அது என்னுடைய சகிப்பின்மையாகிவிடுகிறது!

…ஆக – சென்ற வருடமுடிவில், ஒரு வழியாக, இந்த அற்பர்களுடன் எனக்கு ஒரு மசுத்துக்கும் ஒரு சங்காத்தமும் வேண்டாம் என முடிவுசெய்து, பின்னர் அவர்கள் தொடர்புள்ள எந்த நிறுவனத்துடனும் தொடர்பில் இருக்கப்போவதில்லை என ஒரு ஸ்திரமான நிலைக்கு வந்துவிட்டேன். அனைத்திலிருந்தும் வெளியேறிவிட்டேன்.

“போங்கடா மயிராண்டிகளா! உங்கள் உயர்குழுமங்களில் நீங்களே வேண்டுமளவு லிபரல்பொறுக்கித்தன இடதுசாரிச் சுயமைதுனம் செய்துகொண்டு இன்புறுங்கள், பிறத்தியாருக்கு உபதேசம் செய்யுங்கள்; சொகுசாக உட்கார்ந்துகொண்டு, ஒரு மசுரு பின்புலமுமில்லாமல், பாரதத்தைப் பரிபாலனம் செய்ய அறிவுரைகள் அட்ச்சிவுடுங்கள்… நன்றி.”

நிம்மதி. ஸ்ஸ்ஸ்… அப்பாடா!

+ “படிச்சவன் சூதும் பாவமும் பண்ணினால், போவான்,போவான், ஐயோவென்று போவான்!”

-0-0-0-0-

…இன்னொரு பக்கம், இந்த ஒத்திசைவு எழவை 2011 ட்ரியோட்ரியோவென ஓட்ட ஆரம்பித்த முதல், மேலதிகமாகப் பலரைத் தேவைமெனக்கெட்டு எதிரிகளாக்கிக்கொண்டிருக்கிறேன். (இதற்கு அரசியல்சரியற்ற தன்மையும், பொறுக்கமுடியாத கிண்டலும் காரணங்களாக இருக்கலாம் என்றாலும் – சிக்கலான ஒருமாதிரி பனிபடர்ந்த, எளிதில் பிடிபடாத எழுத்து நடையும் ஒரு காரணம் என்பதையும் அறிந்திருக்கிறேன். ஆனால் எனக்குப் புதிர்களை அவிழ்ப்பது போன்ற க்ராஸ்வர்ட் விஷயங்களான கிறுக்குத்தனங்களும் பிடிக்கும் – ஆகவே என் பதிவுகளை நானே படிப்பது என்பதே எனக்கு ஒரு சுயமைதுனப் புதிரவிழ்த்தல்தான், சரியா? ஆக, பிற பாவப்பட்ட ஏழரைகளும் ஒத்திசைவெழவைப் படிப்பது என்பது ஒரு ஊக்கபோனஸ் மட்டுமே!)

…அதே சமயம், விட்டுவிட்டு ஓடிய பலருக்குப் பதிலாகச் சில அணுக்கமான நண்பர்களும் (பெரும்பாலும் முகம்தெரியாதவர்கள்!) உருவாகியிருக்கிறார்கள்.  பரிணாம வளர்ச்சிதான்.  நன்றி. (ஆனால் இவர்களும் ஒருநாள் அம்பேல் ஆகக்கூடும், எப்படியும் இந்த இருவழிச்சாலையில் யாருக்கும் ஒரு பிரச்சினையும் இல்லை,  பழையன கழிதலும் புதியன கழிதலும் வழுவல கால வகையினானே தானே தந்தானே!)

இந்த 16சொச்ச ஆண்டுகளில், குறைந்தபட்சம் இந்த ‘கல்வி’ எனும் மாமிருகத்தைப் பற்றிய தளத்திலாவது, Skin in the game என்றால் என்ன என்பதை, அதன் பல பரிமாணங்களில் புரிந்துகொள்ள பல வாய்ப்புகள் கிடைத்தன. சிடுக்கல்களைப் புரிந்துகொள்ளாமல், ஏன், அவற்றைப் பற்றிய அடிப்படை அறிவோ ப்ரக்ஞையோகூட இல்லாமல் (அதுவும் ஒரு பெரிய சுக்கும் களத்தில் செய்யாமல்) சௌகரியமாக விட்டேற்றிக் கருத்துதிர்ப்பவர்களைக் கண்டால், ரெண்டுபுத்தகங்களைப் படித்ததாகப் பாவலா செய்துகொண்டு அறிவுரைப்பவர்களைக் கண்டால், எனக்கு ஏற்பட்டுக்கொண்டிருந்த ஆச்சரியமும் மனயிருளும் அகன்றன.

ஏனெனில் அம்மணிகளே, அம்மணர்களே! நம்மில் சுமார் (அடியேன் உட்பட) 99% அப்படித்தான் என்பதை நான் புரிந்துகொண்டு பலவருடங்களாகிவிட்டன.

ஆக, (என்சொந்த, தர்க்கரீதியற்ற எதிர்பார்ப்புகளால்) நிறைய ஏமாற்றங்கள். சில விகசிப்புகள். பெரும்பாலும் திருப்தி. இடுக்கண் வந்தாலும் வராவிட்டாலும் ஏகத்துக்கும் சுயபகடி சிரிப்புமயம். நகுமுகம் தெலிஸி இன்னபிற + ஹிஹி ஹாஹா என்றாலும்.

-0-0-0-0-

…இனி, இப்போதைக்கு (சுமார் 4+ வருடங்கள்போல) இம்மாதிரி பிறத்தியாருக்குக் கல்வி-கலவி புகட்டல் போன்ற இன்பலாகிரி விஷயங்களை மூட்டை கட்டிவிடலாம் என முடிவுசெய்துவிட்டேன்.

ஏனெனில்: சொந்தப் பிள்ளைகளுக்கு, குடும்பத்துக்கு எனச் செய்யவேண்டிய பலவிஷயங்கள் இருக்கின்றன. சேமிப்புகள் சுரண்டப்பட்டுக்கொண்டிருக்கும் இக்காலகட்டங்களில், வாழ மிச்சமிருக்கும் நாட்களைப் பிறர்மேல் துளிக்கூடச் சார்ந்திருக்காமல் கழிக்க, கொஞ்சம் சம்பாதிக்கவும்வேண்டும். இதென்னடா சோகம்…

பலப்பல அரைகுறை நிலையில் கவலைக்கிடமாக இருக்கும் சிறியபெரிய ப்ராஜெக்ட்கள் வரலாறுவுளறாறு, மின்னியல், பறக்கும்யந்திரங்கள்,  இலக்கற்ற பயணம், தச்சுவேலை, நூதனத் தோட்டமுறைமைகள் எனவும் இருக்கின்றன. என்னைப் பாதித்த (நேர்மறை/எதிர்மறை) புத்தகங்களைப் பற்றித் தொடர்ந்து எழுதவேண்டும் எனவொரு முனைப்பும் பலப்பல நாட்களாக இருக்கிறதுவேறு.

கொஞ்சம் ஸீரியஸ்ஸாகவே(!) எழுதலாம்(!!) எனவும் ஒரு திட்டம்.

…ஆனால், என் செல்லத் தமிழை ஒழிப்பதா அல்லது அந்தக் கேடுகெட்டக் காலனிய ஆங்கிலத்தையேவா அல்லது இரண்டையும் கலந்துகட்டிக் கொலை செய்வதா என்பதை முடிவு செய்யவில்லை; இந்த அழகில், பலவருடங்களுக்குப் பின் ஹிந்தியையும் ஸம்ஸ்க்ருதத்தையும் ஒருகை பார்க்கலாமா எனவொரு துக்கிரித்தனம்வேறு. ஹிந்தியை, நான் தனியொருவனாகவே ஒழிக்கமுடியும் என்பதையும் நம்பும் வெறியன் நான் – இதற்கு ஒத்திசைவுத் தமிழ் வழியாக வேண்டுமளவு பயிற்சியெடுத்திருக்கிறேன்வேறு!

சரி. சக ஏழரைகளுக்கும், நான் வெட்கத்தைவிட்டுக் கேட்கும்போதோ அல்லது கேட்காமலேயோ, நான் தொடர்பிலிருந்த பள்ளிக்கு நேரடியாகவும், இன்னமும் பலவாகவும் உதவி செய்த நண்பர்களுக்கும் அன்பர்களுக்கும் நன்றி. இவர்களில் சிலர் தொடர்ந்து உதவி செய்துகொண்டிருக்கிறார்கள் என்பது, நான் இன்னமும்,  எனக்கு அறிமுகமான சகலவிதமான அனைவரையும் முகம்சுளிக்க வைக்கும்படி வெறுப்பேற்றவில்லை என்பதைக் குறிக்கும் என்னுடைய மாளா ஆச்சரியம்.

(முடிந்தால், தொடர்ந்து உதவி செய்யவும். இப்படிச் சேகரம் செய்யப்படும் நிதியானது – நியாயமாக, விரயம் செய்யப்படாமல், அறவுணர்வோடும் ஜாக்கிரதையாகவும் உபயோகிக்கப்படும் என்பதற்கு நான் தனிப்பட்ட முறையில் கியாரண்டி)

-0-0-0-0-

கீழேயிருப்பது முக்கியம்.

இன்றுவரை – கிழட்டுக் கிறுக்குக் கர்வியென்றாலும், நான் களப்பணி(!) செய்கிறேன் – என நானே சமைத்துள்ள பிம்பத்தின் காரணமாக – அல்லது பொய்சால்ஜாப்பின் காரணமாக – மண்டையிலடித்துக்கொண்டு என்னை அட்ஜஸ்ட் செய்துகொள்பவர்கள், என் சகலவிதமாக சகட்டுமேனிக் கருத்து(!)களுக்கும் சங்கடத்துடன் நெளிந்து, ஆனால், பொதுவாக மரியாதையாக இருந்தவர்கள் உடனடியாக அகலவேண்டிய தருணமிது.

விட்டால், இந்த வாய்ப்பு மறுபடியும் கிடைக்காது.

[இளம்விளம்பரக்காரியின் வழுக்கும், சீண்டும், கிளுகிளுப்புத் தளுக்புளுக் தமிங்கலத்தில்] என்ன வெய்ட் பண்ணிட்றுக்கீங்க? உட்னட்யாக இந்த ஆஃபரை அப்டியே அள்ளிக்குங்க. வுட்டுட்டு தெற்ச்சி வோடுங்க!

நன்றி.

ஆகவே. (நானே என், ஒரே தனித்துவமிக்க ஏழரையாக ஆகப்போகின்றேன் என்பதை நினைத்தால்… உள்ளம் உருகுதய்யா, ராமைய்யா, என்னைப் பாடுகையிலே…)

..and um, the myth of narcissyphus continues… yes!

END

 

19 Responses to “ஒரு வழியாக…”

 1. Kannan Says:

  😢

 2. nparamasivam1951 Says:

  எனக்கு நல்ல ஒரு வழி காட்டினீர்கள்.
  அந்த “கும்பல்”களிடமிருந்து நானும்
  விலகிவிட இருக்கிறேன் (உங்களை
  ஆசான ஏற்றுக்கொண்டு)


  • ஐய்யோ ஐயா, ஆசான்கீசான் எனக் கூசான்மல் சொல்லவேண்டா!

   எல்லாருக்கும் என் வழி ஒத்துவரவேண்டிய அவசியமில்லை. எனக்கு ஏகத்துக்கும் வயதாகிவிட்டது, ஆகவே அரைகுறைகளுடன் ஊடாடவேண்டுமென்றால் மாளா அலுப்பு.

   சொல்லப்போனால் , கருதுகோள்களில் எதிர்நிலை உள்ளவர்களுடன் விவாதம்/தர்க்கம் செய்ய, அவர்களிடமிருந்தும் கற்றுக்கொள்ள ஆவலுடன் இருந்த எனக்கு – அவர்கள் பெரும்பாலும் அந்த அணுகுமுறைகளுக்குத் தகுதியானவர்கள் அல்லர் எனப் படும் அளவுக்கு வெறுத்துப்போய்விட்டேன். குப்பைகள்.

   எதுஎப்படியோ – உங்களுக்கு,  உங்களுடைய உடல்மன ஆரோக்கியத்தைக் கருத்தில் கொண்டு கேன்ஸர் வியாதிக்கான ரணசிகித்சை அல்லது களிம்புதடவலைச் செய்யவும், நன்றி.

   YMMV.

 3. Dagalti Says:

  தகவீர் புகலும் சகலம் நுகரோம்
  அகமெய்ப் பகுதி வகையாய் நுகர்வோம்
  மிகையை நகுவோம் நிகரில் பகையோய்
  நகரோம் அகலோம் அகலாய்த் திகழ்வாய்

 4. vijay Says:

  திரு இராம்
  நிச உலகை புரிந்து விட்டீர்கள். வாழ்துக்கள். //ஏனெனில்: சொந்தப் பிள்ளைகளுக்கு, குடும்பத்துக்கு எனச் செய்யவேண்டிய பலவிஷயங்கள் இருக்கின்றன. சேமிப்புகள் சுரண்டப்பட்டுக்கொண்டிருக்கும் இக்காலகட்டங்களில், வாழ மிச்சமிருக்கும் நாட்களைப் பிறர்மேல் துளிக்கூடச் சார்ந்திருக்காமல் கழிக்க, கொஞ்சம் சம்பாதிக்கவும்வேண்டும். இதென்னடா சோகம//


  • கருத்துக்கு நன்றி. உலகம் ஒன்றும் புரியாமல் இருந்திருக்கவில்லை ஐயன்மீர்.

   ஆனால் மெத்தப்படித்தவர்களில் பலரிடம் இருக்கும் சூதையும் கோழைத்தனத்தையும் நான் குறைத்து மதிப்பிட்டிருந்தேன். இதுதான் சோகம்.

   பணம் என்பது ஒரு பெரும் பிரச்சினையில்லை. என்னுடைய நோக்கில் அது ‘இன்று வரும், நாளையும் வரும்’ – இரண்டொருமுறை இந்த ரீதியில் எழுதியிருக்கிறேன் என நினைவுகூட. பிரச்சினை என்பது = கொடுக்கப்படவேண்டிய கால அவகாசம் + உழைப்பு; இதுவரை செய்யாதவற்றைச் செய்யவேண்டும். And, one is feeling mortal.


 5. …Two related twitter threads – whose main drifts are in consonance with this post and buttress it. (I do not know the details or the proximate causes of the threads, but they are not that important as the main line, IMO)

  The worst of the lot, the deep cantankerous cancer, are the educated, utterly selfish, arrogant & entitled elite scum. Yes.

  And it is so obvious why they stick together & support each other, against all ethics or even a modicum of honesty…

  Another post by my good ol’ pal ‘Maragatham’ is an essential read, it is slightly turgid, but recommended none the less.

  http://indiafacts.org/self-sacrifice-hindu-sheep-in-the-liberal-church/

  Going thru these links is mandatory (and womandatory, just in case) homework for the 7.5s.

 6. Swami Says:

  👌👍


 7. […] சேர்ந்து கூத்தாடிவிட்டேன், இனி பிறவிஷயங்களையும்  […]

 8. Mahesh Says:

  Wishing you well for your future endeavours. Personally I am looking forward to the below:
  “என்னைப் பாதித்த (நேர்மறை/எதிர்மறை) புத்தகங்களைப் பற்றித் தொடர்ந்து எழுதவேண்டும் எனவொரு முனைப்பும் பலப்பல நாட்களாக இருக்கிறதுவேறு.

  கொஞ்சம் ஸீரியஸ்ஸாகவே(!) எழுதலாம்(!!) எனவும் ஒரு திட்டம்.”
  Hope they are in English / Tamil..!

  Also, a good time to take pause and say a big thanks for what you have been sharing.

  Mahesh


 9. இந்த பதிவின் மூலம் நீங்கள் கூற விரும்புவது என்ன சார்? ஒன்றுமே புரியவில்லையே! 🤔


  • ஐயா, நன்றி! எனக்கும் இதனை ஒப்புக்கொள்ள, முதலில் தயக்கமாக இருந்தது. இப்போது நீங்களே கேட்டுவிட்டீர்கள்.

   எனக்கும்தான் புரியவில்லை. நான் கண்டுகொள்ளாமல் போகவில்லையா? இதை இப்படியா பட்டென்று போட்டு உடைப்பது?

 10. nparamasivam1951 Says:

  🙏🙏🙏


 11. […] லும்பன்கள். இவர்களைப் பொதுவாகக் கழித்துக்கட்டிவிட்டேன். […]


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s