காமாலைக்கண் பார்வைகள்

11/02/2020

சரி. ‘ராஜ்சந்த்ரா’ உவாச:

https://othisaivu.wordpress.com/2020/02/09/post-1104/#comment-12640

இன்னொரு, ‘கான்டேக்ட்மௌலி’ எனவொரு அன்பரும், இதேபோல ஒரு பிலாக்கணம்.

https://othisaivu.wordpress.com/2020/01/19/post-1095/#comment-12628

ஐயாமார்களே, ஐயோ!

1. கைவசம் எஸ்ரா புத்தகம் ஒன்றுகூட ஸ்டாக் இல்லை. எல்லாவற்றையும் கழித்துக்கட்டிவிட்டேன்போல! (பாவம், அவற்றை எடுத்துச் சென்றவர்கள்)

…1995க்குப் பின் வெளியிடப்பட்டு நான் வாங்கியுமுள்ள அரவிந்தன் நீலகண்டன், நாஞ்சில் நாடன், அருண் நரசிம்மன், இமையம், வேணுகோபால், ஜெயமோகன் போன்றவர்களின் சிலபல புத்தகங்களைத் தவிர, பிறவற்றை ஃபைஸல் செய்துவிட்டேன். நன்றி. (எனக்கு அறிமுகமில்லாமல் இருக்கும் பரிதாப நிலையில் சிலபல நல்ல எழுத்தாளர்கள் இருக்கலாம்; பாவம், அவர்கள். சபிக்கப்பட்டவர்கள்.)

ஆகவே, எஸ்ராயில்லாமைக்கு நன்றியுடன், என் உடைகள் (கோமணங்கள் உட்பட) நெகிழாமல் அனைத்தும் டைட்-டாக இருக்கின்றன. இறுக்கமான இருத்தலியல். ஆக, வாழ்க்கையின் படுபீதியளிக்கக்கூடும் அம்மணி+அம்மணர்கள் தொடர்பான நிகழ்வுகளை எதிர்கொள்ள, எங்காவது ஒளிந்துகொள்ள, மண்ணில் புதைய, பழகிக்கொள்ள வேண்டும்.

2. எல்லாவற்றுக்கும் ஒரு விதி (அதாவது தலைவிதி) இருக்கிறது. அதாவது விதிவிலக்குகள் இருக்கின்றன. என்னுடைய தொடரும் பிரமைகளில் ஒன்று என்னவென்றால், விதிவிலக்குகளுக்கு மட்டுமேதான் இம்மாதிரி விஷயங்களில் ஈடுபட பொறுமையும் நேரமும் வேலைவெட்டியற்ற தன்மையும் இருக்கும் (எடுத்துக்காட்டாக: இந்தத் தளத்தைப் படிக்க). ஆகவே விசனப் படவேண்டாம். நீங்கள் ஒரு குளுவான் அல்லர், போதுமா? (இருந்தாலும் சிலசமயம் சிலபல ஜந்துக்கள் வந்துவீழ்ந்துவிடுகிறன, அநிருத்தன் அவர்கள் போல… இதுதான் பிடிபடுவதில்லை – ஆனால் இந்த அநிருத்தன்  யார் என்பதில் எனக்குக் கொஞ்சம் சந்தேகம் இருக்கிறது)

3. நானும் தகவல் தொழில் நுட்பத் துறையில் ஒரு மண்புழு ப்ரொக்ராம்மராகவும் உயரப் பறக்கும் கழுகு துரைமாராகவும் இருந்திருக்கிறேன். +தொழில் முனைவோனாகவும். பெரும்பாலும் ப்ராடக்ட்ஸ் மட்டும் தான். ஸிமுலேஷன், மானிட்டர் கருவிகளிலிருந்து டேட்டா சேகரம், டெலிகாம், க்ராஃபிக்ஸ், அறிவியலுக்கான கணிநி முறைமைகள், ஓப்பன்ஸோர்ஸ்++ எனச் சுமார் ரெண்டு மாமாங்கங்களுக்கும் மேலாக வாழ்க்கை ஓடியிருக்கிறது. 2005வாக்கில் இதையெல்லாம் ஒருவழியாக நிப்பாட்டிவிட்டு, பள்ளிகளுக்குச் சென்றேன் – பின்னர் அண்மையில் இரண்டு வருடங்களுக்கு பள்ளிக்கல்வி தொடர்பான ஒரு ஐடி எழவில் இருந்தேன். Mea culpa.

ஆக, என் சராசரித்தனங்களையும், பொதுவாகவே இந்த ஐடி துறையின் (அதாவது ஸர்வீஸஸ்/சேவை வகையறாக்களின்) சராசரித்தனத்தையும் அறிவேன். இத்துறையில், அதில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு, தகுதிக்கும் பங்களிப்புக்கும் மிகமீறிய சம்பளத்தை, முக்கியத்துவத்தைத் தருவதை, நான் தொழில்முறையிலோ தனிப்பட்டமுறையிலோ செய்ய விரும்புவதில்லை. அவ்வளவுதான்.

4. இன்னொரு கும்பலும் இப்படி, ஐடி அழிச்சாட்டியர்கள் போல இருக்கிறது. அவர்கள் – சார்ட்டர்ட் அக்கௌண்டண்ட் வகையறாக்கள். The lesser I talk about them, the better it is for my health. இவர்கள் கும்பலாகத் திருத்த அல்லது துரத்தப்பட்டால், தேசத்துக்கு 50% சுபிட்சம் க்யாரண்டி என நினைக்கிறேன்.

5. இரண்டு மாமாங்கங்களுக்கு முன்னால் இன்னொரு பூதகணத்தைப் பார்த்தேன். படுபீதியளிக்கும் பயங்கரமான காம்பினேஷன்.

பராக்கிரமமிக்க ஓமக்குச்சி நரசிம்மன்களாக இருந்தாலும், இந்த ஆசாமிகளானவர்கள் –  திராவிடத் தமிழர் + பட்டயக் கணக்காளர் + ஐடி தொழிலில் CONஸல்டண்ட் ஆக குணசித்திரவேடங்களில் நடிப்பவர்கள். ஒன்றுக்குமேல் ஒன்றாக மூன்று தொழில்முறை அதீதசராசரி அடுக்குகள்! தாளமுடியவில்லை.

பொறுக்கவே முடியாத மிகைமினுக்கல், தகரடப்பாக்கள். (இதில் ஒருவர் எனக்கு ஒரு சமயம், ஹெச்.323 ப்ரொட்டொகொல் பற்றி, டெலிகாம் பற்றியோ இன்டெர்நெட் பற்றியோ ஒரு சிறு குசுவைக்கூட அறியாமல், பாடம் எடுத்தார். ஆடிட்டன் சொன்னான், ஆடிட்டேன் நான்! தொழில்முறையில் பொய்க்கணக்கு எழுதும் ஒரு சார்ட்டர்ட் அக்கௌண்டனுக்குத் தான் இந்தக் குண்டு தெகிர்யம் வரும். ஆனால் – சுற்றி உட்கார்ந்துகொண்டிருந்த வெள்ளைக்காரர்களுக்கு நடுவே, சக இந்தியரான இவரைக் கீழ்மைப் படுத்தவேண்டாம், தோலுரிக்கவேண்டாம், அசிங்கப்படுத்தவேண்டாம், விட்டுக்கொடுக்கவேண்டாம் எனப் பல்லைக் கடித்துக்கொண்டு வாளாவிருந்தேன். ~1999 வாக்கில் இது நடந்தது என நினைவு… தேசபக்தி(!) எனும் ஜந்துவுக்காக, சுவையான கொலைகளைச் செய்யாமலிருக்கவேண்டியிருக்கிறது பாருங்கள்! சோகம்!!)

நல்லவேளை, எனக்கு அறிமுகமான இப்படியாப்பட்ட இருவர் அமெரிக்காவில்தான் இருக்கிறார்கள். இவர்கள் மட்டும் பாரதத்தில் இருந்திருந்தால், இந்த நேரம் நான் மரணதண்டனை வரிசையில் இருப்பேன். இந்த எழவெடுத்த ஒத்திசைவு குறிப்புகளுக்குப் பதிலாக ‘தூக்குமேடைக் குறிப்புகள்‘ மட்டும்தான் எழுதியிருப்பேன்.

6. இன்னொரு இப்படியாப்பட்ட கும்பல் – சமூக அறிவியல், மானுடவியல், நாட்டுப்புறவியல், நாட்டார் தொல்லியல், ஸௌத்ஏஷியன், ஸப் ஆல்டெர்ன் ஸ்டடீஸ்,  கல்வியியல், அந்தவியல், வெந்தவியல், அரைவேக்காட்டியல் என அமோகமாக ஜல்லியடித்துக்கொண்டிருக்கும் அழிச்சாட்டிய அற்பர்கள் (=பெரும்பேராசிரியர்களும் மாணவக் குஞ்சாமணிகளும்) குறித்தது. நான் ஆட்சிக்கு வந்தால், இவர்கள் எல்லோரையும் நேர்மையாக உழைத்துச் சம்பாதித்து உண்ணச் சட்டம் கொண்டுவருவேன். இல்லையேல், போர்க்கால ரீதியில் ஐடி குமாஸ்தாக்களாக ஆணையிடுவேன். ஏன், பெண்ணையுமிடுவேன்.

-0-0-0-0-

…மற்றபடி ஒவ்வொரு துறையிலும் (பட்டயக் கணக்குத் தொழில் உட்பட, ஆச்சரியமாக இல்லை?) இருக்கும் 90:10 விதியை அறிவேன்; அதாவது, எந்தவொரு பணிச் சூழலிலும், 90 பேர் பஜனைகுமாஸ்தாக்களாக இருந்தால் 10 பேர்தான் (அதிகப்படிக் கணக்கு) அறத்துடனும் மூளையுடனும் செயலூக்கத்துடனும் வேலை செய்வர் என்பதை அனுபவபூர்வமாக அறிவேன். (ஏனிப்படி என்பதை, பின்னொரு பதிவில் எழுதுகிறேன்)

ஊக்கபோனஸ் பகுப்புகள்:

. இடதுசாரி, அறிவுஜீவிய லிபரல் லும்பன்கள். இவர்களைப் பொதுவாகக் கழித்துக்கட்டிவிட்டேன். நன்றி.

. கடைசிக் கும்பல் (இப்போதைக்கு) தமிழக அலக்கிய, பிலிம், நிகழ்கலைக் காரர்கள். நனி நகைச்சுவையாளர்கள். தன்னிகரற்ற தற்குறிகள்.

. திராவிடர்களுக்கு இந்தப் பகுப்புமுறைகளின் அருகில் வரக்கூட யோக்கியதை இல்லை. மன்னிக்கவும்.

(கவனம்: மேற்படி எல்லாவற்றுக்கும் விதிவிலக்குகள் (சிலபல ஆடிட்டர்கள் உட்பட, இவர்களில் சிலர், பிரதிபலன் எதிர்பாராமல், என்னை நண்பனாகக் கருதுகிறார்கள், பாவம்) இருக்கின்றன/ர்; ஆகவே, கொதிக்கவேண்டாம். நான் பேசுவது என் சுயானுபவத்தைச் சார்ந்தது மட்டுமே. மேலும், எனக்கு நானே ஒரு விதிவிலக்கு. இதையெல்லாம் படிக்க நேர்வது உங்கள் தலைவிதி, இதற்கு விதிவிலக்கில்லை; மற்றபடி, இரவு தூங்கப்போவதற்குமுன் அவசியம், கண்டிப்பாகப் பல் துலக்கவும். நன்றி!)

6 Responses to “காமாலைக்கண் பார்வைகள்”

 1. Ex-Friend Says:

  Disappointing, sorry.

 2. Leny Says:

  என்ன சார் சொல்றீங்க… உங்களுக்கு கிராஃபிக்ஸ் தெரியுமா? கொஞ்சம் விவரமா என்ன தெரியும்னு சொல்றீங்களா? போட்டோஷாப் தெரியும் அதால கிராஃபிக்ஸ் தெரியும்னு அடிச்சு உட்டேன்னு சொல்லாதீங்க…

  நன்றி,
  லெனி


  • ? நான் செய்தது ஸைன்டிஃபிக் விஸுவலைஸேஷனுக்கான வால்யூம் ரென்டரிங் சமாச்சாரம்.

   எனக்கு ஃபோட்டோஷாப் தெரியாது. அதனை உபயோகித்ததே இல்லை.

   மற்றபடி, மரியாதையுடன் கேட்டால், ஒருவேளை சரியான பதில் கிடைக்கலாம்.

   நீங்கள் இதையெல்லாம் வந்து படித்தேயாகவேண்டிய அவசியம் இல்லை. மற்றபடி உங்கள் இஷ்டம்.

   நன்றி.

   • Leny Says:

    உங்கள் பாணியில் கேட்டேன்… ஏன் சார் இவ்வளவு கோபம்… உங்களின் டேட்டாவை OpenGL / OpenVG போன்றவை வழியாக rendering செய்தீர்களா அல்லது Unity 3D, Autodesk 3DS Max / Maya போன்ற tool களின் வழியாக செய்தீர்களா?
    OpenGL மற்றும் Shaders போன்றவற்றில் automotive graphics பயன்பாடு தொடர்பான சில சந்தேகங்கள் உள்ளன. அதனால் கேட்டேன். மரியாதை குறைவு ஏதுமில்லை.
    நன்றி!


    • Dear Leny – Ok, noted. I got irked because I was handling a few other conversations about the content of the post, with some useless fellows. Anyway, apologies.

     This was circa 1998-2000. It was for a USA, DoD weapons programme. Ran on FreeBSD 3.0, VAX/VMS (ft?), Tru64. HPTC area. All custom libraries. C & LISP based, daisy chained. I did only a part of the volume rendering lib for (probably) fission visualization. OpenGL was not  used; it was too primitive at that time. Unity wasn’t even there. No SFX needed at all. No Shader req too. Haven’t heard of Autodesk thingies. Just heard of Maya, that’s about it. To be clear, after some 2 years, from the fag end of 2002, I was not involved in any HPTC.

     In other words, am old and am not current with the graphics scene. At all. So being ignorant, I can’t help you in anyway. Algorithms may be, but perhaps all I did in those days is now available as some library or the other. No need to know the innards at all, which is fine. Besides, I do not have the time. Main thing is, am outdated.

     Thanks for asking, and allowing me a trip down the memory lane.


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s