குஞ்சரமல்லன் புராணம்

13/02/2020

திருவிளையாடற்புராணப் பனி படர்ந்த…

…படலங்களொன்றில், மல்லன் எனும்பேர் கொண்டிருந்த மறம் ஓம்பிய ஒரு அறவான், அரத்தால் தன் குஞ்சினை அறுத்து, ஒறுத்து, அரவாணியாகிப் பின்னர் குஞ்சரமல்லன் என்றழைத்துப் போற்றப்பட்டான் என்பதை நம்மில் எவ்ளோ பேர் அறிவோம்?

ஹ்ம்ம்… ஒருவரும் அரிந்திருக்க வாய்ப்பு இல்லை. அப்படி இருந்தாலும் அரிக்கப்பட்டிருந்தால் அரியும் சிவனே ஒன்று எனும் வடைபோச்சே அனுபோதி நிலையில் திராவிடச் சுயமைதுனம் கூடச் செய்துகொள்ளமுடியாமல், மரத்தினடியில் ஏதோ புத்திலாங்கே புதிர்தோய்ந்த புத்தனாக புட்டத்தைச் சொறிந்துகொண்டு, புத்தம்புதிதாக, பாரதவரலாற்றிலேயே முதல்முறையாக, குஞ்சரஸூத்தா (Kunjara Sutta in Pali) படிப்பித்து எழுதியிருக்கலாம்.

அது எழுதப்பட்டிருந்தால், அதில் ரத்தம் தோய்ந்திருக்கும் அனாதிகால அர்த்தங்களை அறிய – பாஷோ முதல் ஓஷோ வரை ஆஷையுடன் ஓடிவந்து கோஷ்டமிட்டு வியாக்கியானம் அளித்திருப்பர். ஆனால் நமக்கு, அந்த நல்லூழ் லபிக்கவில்லை. ஆகவே நம் இலுப்பைப் பூக்கள் ஆகாத்தியம் செய்வதுதாம் சாஸ்வதம்… (கிஸான் கெட்சப் பாட்டில் முழுவதும் தீர்க்கப்படல்?) (மன்னிக்கவும்)

எஸ்ராமகிருஷ்ண ஜென் உவாச:

எவ்வளவு குஞ்சுகளை இந்த அரம் பதம் பார்த்திருக்கும்! எவ்வளவு அரங்களை, நம் அறக்குஞ்சு, வரலாறு காணாத காம நீட்சியில், பயம் கலந்த பேராதரவுடன் நோக்கியிருக்கும்!

ஜெயமோக அரம் தகதகத்துப் பகபகர்கிறது:

அன்றிப் பிறிதோன்று நோக்கா ஆகச்சிறந்த அன்றில் பறவை, அகத்தில் அறைந்த தருணத்தில், அகராதி பிடித்த மோனியர்வில்லியம்ஸ் தன்னை ஒறுத்து ஆண்குறியீட்டை அறுத்தெறிந்து, ஆங்கே ஸம்ஸ்க்ருதத்திலிருந்து அகவிலக்கம் கொண்டு வான்மிசை ஏகி நிலமிசைப் பண் பாடினார், “பாரதத்தைத் துளைத்தேழ் கடுகைப் புகுத்தி, தாளித்தால் வெண்முரசு.

சாருவே விளிம்பாக:

ஹ்ஹ! இதெல்லாம் பெரிய விஷயமேயில்லை. மூவாயிரம் வருடங்களாக தென்னமெரிக்கச் சிலேயில் பிறக்கும் சிறு குழந்தைகள், பிறந்த ஒருவாரத்திலேயே தன் குறிகளைத் தாமே நீக்கிக் கொண்டு குறியீடுகளற்ற தற்குறிகளாவதை லத்தீனமெரிக்காவில் நானே நேரடியாகப்பார்த்திருக்கிறேன். மோதியின் ஹிந்துத்துவா வெறி ஒழிக.

என்னுடைய சொந்த அறிவியல் தொழில்நுட்ப வரலாற்றுரீதியான சந்தேகம் என்னவென்றால் – இந்தக் குஞ்சரமல்லன்,  சோழகாலத்து குழந்தைப்பேறுக் குஞ்சாமணி மருத்துவனோ? குஞ்சாமணிப் பிரதேசங்களுக்கு ஆவன செய்யும் வாஸெக்டமி (vasectomy) அறுவை சிகிச்சை வல்லுநனோ? எந்தக் குஞ்சில் எந்த அரமோ, யார் கண்டார்கள்! கீழடி அகழ்வாராய்ச்சி இன்னமும் செய்யப்பட்டால் இம்மாதிரி கீழடி அறுசுவை உண்மைகள் வெளிவந்து நமக்கு வெவ்வே காட்டலாமோ?

அரேபியாவுக்கும் ஆஃப்ரிகா ஆன்ரிகா போன்றவற்றுக்கெல்லாம் ஸுன்னத் கல்யாணம் அறிமுகமானதே, சோழர்கள் காலத்தில் குஞ்சரமல்லனார் தலைமையில், அவருடைய வழிகாட்டுதலில் – இதற்கான உபகரணங்களும் தொழிற்பயிற்சியும் ஏற்றுமதி செய்ய ஆரம்பித்த பின்புதானோ??

–0-0-0-0–

ஆனால்.

இந்த தஞ்சைப் பெருவுடையார் கோவில் கும்பாபிஷேகம் நடக்க முஸ்தீபுகள் ஆரம்பித்தவுடன், நம் திராவிடப் பித்தர்களும் திடீரெக்ஸ் சைவக் கிழார்களும், தணித்தமிள் ஆற்வொளற்களும், படுத்த ஆரம்பித்து விட்டார்கள். விக்கீபிடியா படித்த ஞானத்தை வைத்துக்கொண்டு நம்மை விக்கிவிக்கி அழவைத்துவிட்டார்கள்.

ஆகமம் இப்படியல்ல, அது அப்படி. ஆனால் இப்படித்தான். திருக்குறளே ஒரு ஆகம சாஸ்திரம்தான்.

சிலப்பதிகாரத்தில் இல்லாத அதி காரமா? அதிலில்லாத ஏகோபித்த மிளகாய் நெடியா? குறுந்தொகையில் இல்லாத சிற்றாகமமா? பெரும்பாணாற்றுப்படையிலில்லாத பேராகமமா? கொத்தமல்லித் தழையை அரிந்து போட்ட மிளகுரசத்தில் இல்லாத கமகமாவா?

உலகெங்கும் உள்ள இலக்கணக்குறி பங்க்சுவேஷன் வகை நிறுத்தற்குறிகளெல்லாம் திராவிடர்களால்தானே கண்டுபிடிக்கப்பட்டன. கமாகமம் எனும் ஆதியந்தாதிக் காப்பியத்தில் கமா முதல் முற்றுப்புள்ளி வரை கண்டுபிடித்தவனே கீழடித் தமிழந்தானே?

-0-0-0-0-0-

ஆகமம் என எழுத்துக்கூட்டிப் படிக்க நேற்று கற்றுக்கொண்டவர்கள் எல்லாம், முழ நீளத்துக்குப் பேசவந்துவிட்டார்கள். ஒர்ரே வாட்ஸ்அப் மயம். என் தூரத்து நண்பர்களில் ஒருவர் – மழைக்குக் கூடக் கோவில் பக்கம் ஒதுங்காதவர் இப்படி ஒரு திடீரெக்ஸ் துறை வல்லுநர்.

இவருடைய தகப்பனார் ஓதுவார். இவர் ஒதுங்குவார்.

ஒரு படிப்பில்லை. வாசிப்பில்லை. சங்க இலக்கியத்தையே விடுங்கள். இக்காலக் குமுத விகட இலக்கியம் கூடப் பரிச்சயமில்லை. சமய இலக்கியங்களென்றால் கிலோ எவ்வளவு லிட்டர். சமய இலக்கியத்துக்கும் சமையல் இலக்கியத்துக்கும் ஆறு வித்தியாசம் அறியாப் பெருந்தகை. ‘முத்தைத் திரு…’ திருப்புகழ் பாடல் கண்ணதாசனால் எழுதப்பட்டது.

ஜெயமோகன் பெயரை அறிந்திருக்கிறார்!  ஆனால் அது ஏதோ பிலிம் பார்த்தல் தொடர்பாக. (இவர் போய் எப்படி என்னையடைந்தார், நானும் அவரை பல்லைக் கடித்துக்கொண்டு பொறுத்துக்கொண்டிருந்தேன், என்பது ஒரு நெஞ்சடைக்க வைக்கும் சோககாவியம்; இவர் தகப்பனார் ஒரு அறிவாளி, பக்தர் – அவருக்குப் போய் இப்படியொரு குப்பைமேனி குசுபுத்திரன், என்ன செய்ய!)

தகப்பனார் பூர்வஜென்மத்தில் கொடும்பாவம் புரிந்திருக்கவேண்டும். எஸ்ராமகிருஷ்ணன் படித்திருப்பாரோ?

இந்த ஒதுங்குவாரும் தமிழ் கிமிழ் தமிழில்தான் குடமுழுக்கு செய்யவேண்டும் அதுஇது எனப் படுத்தல். ஸம்ஸ்க்ருதத்தில் இல்லாதது தமிழில் இருக்கிறது. தமிழில் இல்லாதது ஸம்ஸ்க்ருதத்தில் இருக்கிறதா? ஹ்? தொடர்பேயற்ற, மௌடீகப் புல்லரிப்புகள்.

சரி, தமிழில் எவ்வளவு எழுத்துக்குறிகள் இருக்கின்றன (மெய், உயிர் இன்னபிற), ஸம்ஸ்க்ருதத்தில் எவ்வளவு என்றால் ததிங்கிணத்தோம். ‘அதெல்லாமா முக்கியம்?’

இந்தக் கூ அவர்கள், என்னிடம், ‘குஞ்சரமல்லன்’ என்பது தூயதமிழ் மொழிப் பெயர்தான் என ஒரு முழநீள வியாக்கியானம். அரண்டுவிட்டேன். இதிலுள்ள அரசியல், திராவிடம்-ஆரியம், வடக்கு ஒடுக்குகிறது, ஹிந்துத்துவா எனப் பழங்கஞ்சியாற்றினார்.

இன்னமும் எனக்கிருக்கும் ஒருசில அருமை நண்பர்களைத் திருப்தி செய்வதற்காக அவர்களுடைய எருமை நண்பர்களிடம் குலாவ வேண்டிய காலகட்டமிது, என்ன செய்ய!

ஆகவே.

-0-0-0-0-

திராவிடத்துக்கு நன்றியுடன், உலக வரலாற்றிலேயே முதன்முறையாக பொற்காலத்திலிருந்து அரதப் பழைய கொடுங்கற்காலத்தை நோக்கிப் பீடை நடை போட்டுக்கொண்டிருக்கும் சமூகம் நம் தமிழச் சமூகம் என்றால், நாமெல்லாம் அதற்குப் பெருமைப் படவேண்டுமா வேண்டாமா? சொல்லுங்கள், ஹ்ம்ம்?

பின்குறிப்பு: இப்போது எனக்கு இந்த எழவெடுத்த குஞ்சரமல்லனார் யாரென்றே மறந்துவிட்டது, உதவமுடியுமா? :-(

7 Responses to “குஞ்சரமல்லன் புராணம்”

 1. K.Muthuramakrishnan Says:

  Kunjara mallan is the chief sculptor who built the Big temple.

 2. Sridhar Says:

  கௌபீன சுத்தம் இல்லாத ஒருவனை குஞ்சறமல்லன் என்றார்களோ?


  • ஓ! அப்படியும் இருக்கலாம்.  இது ஒரு புதிய கோணம்தான். ஆனால் எவ்வளவு நேரம் தான் குனிந்து பார்ப்பது, சொல்லுங்கள்?

   ஆனால் எனக்குத் தெரிந்தவரை என் ஆகம சிற்ப சண்டேஸ்வர ஆசான் கடலூர் சீனு அவர்கள் எனக்கு அருளியுள்ளபடி அது கௌபீனம் அல்ல, புல்பீனம் தான்.

   ஆசான் சொல்லுக்கு எதிர்சொல்தான் சொல்லப்படக்கூடுமோ?

 3. nparamasivam1951 Says:

  எனக்குத் தெரியும், எப்போது ஜென், செயமோ சாருவே என படிக்க ஆரம்பித்தோர்களோ, அப்போதே நாம் என்ன சொல்ல ஆரம்பித்தோம் என்பது மறந்து விடும்.


 4. ‘புது முரசு’ என்றொரு புதினம் துவங்கலாமே.


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s