ஜவாஹர்லால் ‘சாச்சா’ நேருவின் அருளால்…

23/02/2020

ஆ!

இது கொடுங்கனவா அல்லது நனிநனவா எனத் தெரியவில்லை. ஆனாலும் பாதகமில்லை. ஆனால் உங்கள் தொந்திரவு தாங்கமுடியவில்லை. ஒவ்வொரு முறை – இது நேருவின் கொடை, அது நேருவின் அருள் என்று நீங்கள் சொல்லும்போதும், நான் உங்களிடம் அதற்கான ஆதாரங்களைக் கேட்பேன். அவை காத்திரமாகக்கூட இருக்கவேண்டாம் – கோடி காண்பித்தால்போதும், மிச்சத்தை நான் பார்த்துக்கொள்கிறேன், சரியென்றால் சரி, இல்லையென்றால் இல்லை என மேற்கொண்டு பார்த்துக்கொள்ளலாம். என் அடிப்படை நேர்மையில் உங்களுக்கு நம்பிக்கை உண்டு அல்லவா என்பேன்.

…நீங்கள் சரியென்பீர்கள் – ஆனால் ஒரு தரவு, ஒரு பாயின்டர், ஒரேயொரு நிரூபணம்கூட உங்களிடமிருந்து வராது. (ஏனெனில் நீங்களெல்லாம் படுபிஸி ஆசாமிகள். பட்டயக் கணக்காளராக அழகாக,  ஒய்ங்குமருவாதியாக லக்ஷணமாக, பொய்க்கணக்கு எழுதவேண்டும்.  உங்கள் பிரம்மாண்ட நிறுவனத்தின் shareholder value எழவுகளை அதிகப்படுத்தவேண்டும். குடும்பத்துடன் தென்னமெரிக்கச் சுற்றுப்பயணம் போகவேண்டும். ஒவ்வொரு மலையின் முன்னும் பின்னும் குண்டுகுண்டாக பாதிமலையை மறைத்துக்கொண்டு நின்று ஸெல்ஃபி எடுக்கவேண்டும். ஊக்கபோனஸாக, அவ்வப்போது எனக்கு நேரு மஹாத்மியம் அனுப்பவேண்டும். போங்கடா பரதேசீங்களா!)

ஆனால், நான் ‘விட்டேனா பார்’ ஜாதியானதால் – தரவுகளுடன், தாங்கள் உதிர்த்த கருத்து சரியல்ல என, அது அப்படியாப்பட்டதல்ல என ஆதாரபூர்வமாக நிறுவியவுடன், நீங்கள் அதனை ஒப்புக்கொள்ளாமல், ஏன் கண்டுகொள்ளாமலேகூட அடுத்த தலைப்புக்குப் போய், அதற்குக் காரணமும் உங்கள் நேரு என்கிறீர்கள். என் உயிரை எடுக்கிறீர்கள். என்னால் தாங்க முடியவில்லை.

பலமுறை இப்படி நடந்தாகிவிட்டது. பொறுக்கமுடியாமல் சிலமுறை இவற்றைக் குறித்து ஒத்திசைவு பதிவுகளும் ட்வீட்களும் நேரடி ‘டிஎம்’களும் செய்திருக்கிறேன். கீழே சிலவற்றைக் கொடுக்கிறேன். (உங்களுக்கு நேரு மீது இனம்புரியாத பரிவு, கனிவு, காதல், பக்தி என்பதுடன், என்மேல் இனம்புரியாத கோபமும் இருக்கிறது என நினைக்கிறேன்; ஆனால் இந்த எழவுகளை அப்படியே விட்டுவிடலாமே! என்னை ஏன் படுத்தி எடுக்கிறீர்?)

நேரு ‘பாரத விடுதலைக்காக’ சிறையில் வாடினார். அதற்காகவாவது கொண்டாடக் கூடாதா?

சரி. நான் (இதுவரை) சிறைக்கும் போகவில்லை (ஆனால் லாக்-அப்பில் ஒரு இரவை மட்டும், செய்யாத குற்றத்துக்காக, ஜட்டியுடன் கூனிக்குறுகிப்போய்க் கழித்திருக்கிறேன் – இது வேறு கதை) – மேலும் சுதந்திரத்துக்காகச் சிறைசெல்லும் வாய்ப்பும் கிட்டவில்லை. (உங்களுக்கும் தானே?); ஏனெனில் என் பெற்றோர் திருமணம் புரிந்துகொண்டதே 1956ல்தான். ஆனால் என் பெற்றோர் வழி மூதாதையர் இருவர் இதற்காகச் சிறைவாசம் செய்திருக்கின்றனர்.

நேரு 9 வருடங்கள்போலச் சிறையில் இருந்திருக்கிறார்.  உண்மைதான். என் மூதாதையர்கள் 12 வருடங்களுக்கு மேலாக இருந்திருக்கின்றனர். பின்னவர்கள் பாடப்படவில்லை, ‘தியாகி பென்ஷன்’ கூட வாங்கவில்லை. சொல்லப்போனால் – இவர்களைப் போலப் பலப்பலர் இருந்தார்கள். நேருவுக்குக் கிடைத்த  பலப்பல சிறைவசதிகள் அவர்களுக்குக் கிடைக்கவில்லை. மாறாக, குரூரமான சித்திரவதைகள்தாம் கிடைத்தன. பாவப்பட்ட ஸாவர்க்கருக்கும் அதே கதை; திலகர், நம் வவுசிதம்பரம் பிள்ளை, சுப்ரமணியசிவா போன்றவர்களுக்கெல்லாம் அடிப்படை வசதிகள் கூடக் கிடைக்கவில்லை. சிறையில் அல்ல, ஆனால் லாலா லஜ்பத்ராய் தடியடியால் மாண்டார். (அவர்கள் தங்கள் புகழ் பாடப்படவேண்டும் என்று கருதிச் சிறை செல்லவில்லை – அவர்கள் தன்னலமில்லாதவர்கள், தாங்கள் நம்பிய குறிக்கோட்களுக்காகச் சென்றனர்; மேலும் அவர்கள் புகழில் நான் குளிர்காய நினைக்கவில்லை, கவனிக்கவும்)

நேரு செய்தது பெரிய விஷயம் அல்ல எனச் சொல்லவில்லை. ஆனால், அதன் காரணமாக மட்டுமே அவர் புகழப்படவேண்டும் என்பதுமில்லை. அவர் சிறையில் ‘வாடவும்’ இல்லை. மன்னிக்கவும். ஏனெனில் அவருடைய சிறைவாசத்தில் அவர் செக்கிழுக்கவில்லை. கல்லுடைக்கவுமில்லை. கொஞ்சம் சொகுசாகத்தான் இருந்தார்.

நேருவின் புத்தகங்கள் வரலாற்று ஆவணங்கள்.

நீங்கள் நேருவின் மீது வைக்கும் அவதூறுகளுக்கு ஒரு எல்லை வேண்டும். அவருடைய புத்தகங்கள், என் அக்காள் தட்டச்சு இன்ஸ்டிட்யூட்டில் ஆங்கிலத்தில் டைப் செய்யக் கற்றுக்கொண்டபோது, பயிற்சிக்காக மிகவும் உபயோககரமாக இருந்தன என்பதற்கு அப்பாற்பட்டு, அவை வெறும் குறிப்புகளே, அதிலும் ஏகப்பட்ட சொதப்பல்கள், அபுரிதல்கள். இவற்றை நானும் படித்திருக்கிறேன் – அவற்றின் சுவாரசிய நடைக்காக, ஆங்கிலத்துக்காக. உளராறாறுக்காக அல்ல. (அண்மையில் இது குறித்து ஓப்-இந்தியா தளத்தில் கொஞ்சம் ரசக்குறைவாக எழுதியிருக்கிறேன் – முடிந்தால் படித்து மேலும் திட்டவும்)

ஆனால்… இவர் எழுதியவற்றைப்போய் வரலாற்று ஆவணம்கோமணம் என்றெல்லாம் சொல்ல, குண்டுதைரியம் வேண்டும்.

நேருவின் தகப்பனார் மோதிலால் சிறுவயது சமயத்தில் ஏழ்மையில் இருந்தாலும், தன் சுயமுயற்சியால் பெரிய வக்கீலாகவும் பணக்காரராகவும் ஆனவர். நேருவுக்கு ஏழ்மையின் பிழியும் கொடுமை சிறுவயதிலேயே பரிச்சயமாக இருந்தது.

பொய் சொல்வதற்கு ஒரு அளவுவேண்டும். மோதிலால் ஏழ்மையில் ஏகத்துக்கும் வாடினார் எனச் சொன்னால், உங்களைப் போன்ற இன்னொரு அன்பர் குண்டுராமகிருஷ்ணன்கூட நம்பமாட்டார்.

மோதிலால் நேருவின் தந்தை, கங்காதர் நேரு – தில்லியில் (மொகலாய அரசரான பஹதூர்ஷா ஸஃபர் ஆட்சியில்)  ஒரு கொட்வால் – ஆக இருந்தார். நம்மூர் கொத்தவால் என்பதுதான் இது. கோட்டையின் அதிபர் என விரியும். அரச அதிகார வர்க்கத்தில் இது ஒரு முக்கியமான பணி. 1857ல் இந்தப் பணி ஒரு முடிவுக்கு வந்தவுடன் அங்கிருந்து குடிபெயர்ந்து ஆக்ரா, இலாஹாபாத் (அதாவது ப்ரயாக்ராஜ்) சென்று ஸெட்டில் ஆனார். கொஞ்சம் கஷ்டப்பட்டார்கள், மேலும் மோதிலாலின் சகோதரர் பக்கத்து ராஜபுதனத்து அரசு ஒன்றுக்கு திவான் (முதலமைச்சர் / பிரதம மந்திரி) ஆக இருந்தார். இவர் மோதிலாலை மேல் நாட்டுப் படிப்புக்கு அனுப்பினார். அவரும் திரும்பிவந்து வழக்குரைஞர் தொழிலில் கோலோச்சினார். அவரும் புத்திசாலிதாம். உழைத்துத்தான் இன்னமும் பெரும்பணக்காரரானார். ஜவஹரின் வாழ்க்கை இப்படித்தான் ஆரம்பித்தது. தாம் ஒரு ஸ்பாய்ல்ட் சைல்ட் (செல்லம் கொடுத்துக் கெடுத்துக் குட்டிச்சுவராக்கப்பட்ட குழந்தை – Spoilt Child) என்றெல்லாம்கூட தன்னைப் பற்றிச் சொல்லியிருக்கிறார், ஆனால் நீங்கள்தாம் அவர் ஏழைக்குடும்பம் என்றெல்லாம் வக்காலத்து வாங்குகிறீர்கள்!

ஆம், நம் நேரு, அவருடைய சிறுவயதிலேயே பிழியும் ஏழ்மையுடன் பரிச்சயம் கொண்டிருந்தார். அவரும் ஒரு கௌதம புத்தர்தாம். நன்றி.

ஆனால் – உங்கள் பார்வையில் இது ஏழ்மை என்றால் அது சரியாகத்தான் இருக்கும். அமெரிக்காவிலேயே இரண்டு வீடுகள், சென்னையில் மூன்று வீடுகள், உதகமண்டலத்தில் ஒரு பண்ணைவீடு, குன்னூர் வெல்லிங்டன் ஜிம்கானா க்ளப்பில் உறுப்பினன் என ஒர்ரே சமயத்தில் பல இடங்களில் வாழும் உங்களுக்கு ஏழ்மை பற்றிய பரிச்சயம் மிகவும் அதிகமாகத்தான் இருக்கும்.

உங்களுக்கு ஒரு கொசுறு கேள்வி: ராஹுல்காந்தி ப்ரியங்கா வாத்ரா போன்ற இக்கால லும்பன்களின், இஸ்லாமியதீவிரவாதத்துக்கு வால்பிடிக்கும் தன்மையும் பண்பும் – அவர்களுக்குப் பாரம்பரியமாக வந்துசேர்ந்த விஷயமோ? (ஏனெனில், அவர்களுடைய மூதாதையர்களுக்கு இஸ்லாமியத் தீவிரவாத முகலாயர்களுக்கு வால்பிடித்து அதிகாரம்பெற்ற பராக்கிரமும் இருக்கிறதே!)

இஸ்ரோ – பாரத விசும்பு ஆராய்ச்சி நிறுவனம் என்பதே ஜவஹர்லால் நேருவின் கொடைதான்!

இல்லை. அவருக்கும் இதற்கும் ஸ்நானப் ப்ராப்திகூட இல்லை. மன்னிக்கவும். இதுகுறித்த என் பதிவு:

‘History’ of ISRO, @TrueIndology, Liberal liars, ‘Of course, Nehru did everything!’ – notes 29/03/2019

நேருவிய ஸோஷலிஸத்தின் மேன்மையால்தான் இந்தியா இப்போது இந்த லெவலில் இருக்கிறது – இல்லாவிட்டால் இது அதோகதியாகத்தான் ஆகியிருக்கும். நேருவிய ஸோஷலிஸம், கம்யூனிஸமும் காந்தியிஸமும் கலந்தது.

ஹ்ம்ம். முதலில் ஒரு விஷயம். உங்களைப் போன்ற நேருவியஸோஷலிஸ ஆசாமிகள் அமெரிக்கா போகாமல், தொடர்ந்து இங்கேயே இருந்திருந்தால், நம் பாரதம் இன்னமும் அதோகதியாக ஆகியிருக்கும் என நினைக்கிறேன். நல்லவேளை அமெரிக்காவின் நஷ்டம், பாரதத்தின் பாக்கிய லாபம். நன்றி.

உங்கள்மூலமாகத்தான் இந்தப் புத்தம்புது பெப்ஸோடெண்ட்  (உங்களுடைய) வாய்துர்நாற்றத்தை நீக்கும் பற்களைப் பளிச்சிடவைக்கும் ஐஷ்வர்யாராயை உங்கள்மீதான காதலில் விழுந்துருக வைக்கும் ஃபார்முலா – அதாவது நேருவிய ஸோஷலிஸம் = கம்யூனிஸ்ம் + காந்தியம் எனக் கேள்விப்படுகிறேன். எனக்குப் பயபீதியில் மூத்திரம்வந்து வேஷ்டி நனைந்தேவிட்டது, இப்படி என்னை ஏன் பயமுறுத்துகிறீர்கள்?

ஸீரியஸ்ஸாக –  இந்த ஸோஷலிஸ எழவு குறித்து பெரும் உரையாடல்கள் பாபுஜி-நேரு (+இன்னும் சிலர்) மத்தியில் நடந்திருக்கின்றன. இது குறித்து, ஸம்பூர்ணாநந்தா அவர்களுடன் பாபுஜி நடத்திய கடிதபூர்வ உரையாடலைக் கொடுத்திருக்கிறேன் – ஆனால் நீங்கள் ஒரு மசுத்தையும் படிக்கமாட்டீர்கள்! நான் உங்களுக்குக் கடன் கொடுத்த ஷஷி பைரதி அவர்களின் புத்தகம் நான்கு வருடங்களுக்குப் பின்னரும் திருப்பப் படவில்லை!

நேரு – குடும்ப அரசியல்தனங்களில் ஈடுபடவில்லை.

இல்லை. சர்வ நிச்சயமாக, நன்றாகத் தெரிந்துகொண்டே தனக்கும் தம் குடும்பத்துக்கும் வசதிகளைச் செய்துகொண்டார். தனக்காக தன் தகப்பன், பாபுஜியைப் பலமுறை தொடர்ந்து தொந்திரவு செய்தபோது அதனைக் கண்டுகொள்ளாமல் கண்ணியத்துடனும் பொறுமையுடனும் இருந்தார். பாபுஜி அவரை ஆதரித்து, வேறுவழியில்லாமல் அவர் காங்க்ரெஸ் தலைவரானபோது பெருந்தன்மையுடன் அதனை ஒப்புக்கொண்டார்.

மேலும் தனக்குத் தன் தகப்பன் செய்ததுபோல தானும் தன் மகளுக்குச் செய்தார். என்னே அவர் பண்பு.

பலமுறை இதுகுறித்து உங்களுடன் மாரடித்தாகி விட்டது. அண்மையில் உங்கள் அரைகுறை தண்டக்கருமாந்திர நண்பர் ராமச்ரூமர்சந்திரகுஹா இதுகுறித்து வதந்தித்தனமாக உளறிக்கொட்டியபோது பொறுக்கமுடியாமல் ஒரு ஆங்கிலப்பதிவும் இட்டிருக்கிறேன்- இன்னொருமுறை படிக்கவும்.

“Nehru was not a dynast” – Yet another canard from Prof Ramachandra Guha 06/07/2018

நேரு – மனிதவுரிமைப் போராளி, மனிதம் மிக்கவர். பிறருடைய உரிமைகளையும் சுதந்திரத்தையும் மதித்தவர்.

ஹாங்! டகீல் வுடுவதற்கும் ஒரு அளவு வேண்டும். அவருடைய பலப்பல அட்டூழியங்களில் ஒன்றாக, நம் தரம்பால் அவர்களுக்கு உங்கள் நேரு என்ன செய்தார் என்று தெரியுமா? மறுபடியும் இது குறித்தும் எழுதியிருக்கிறேன் – அதையும் படிக்கவும்.

Ramachandra Guha’s usual selective amnesia, ‘democratic credentials’ of Nehru and venerable Dharampal – some notes 26/06/2018

அவருடைய நிர்வாகத் திறமை, போர்க்காலத் தலைமை பற்றியெல்லாம் அறிந்திருக்கிறாயா?

ஆஹ்ஹா! அறிந்திருக்கிறேன். ஓரளவு குறிப்புகளும் எழுதியிருக்கிறேன். அவருடைய சீன, பாகிஸ்தானிய அணுகுமுறைகள் குறித்தும். அந்தக் கழுதைகளுக்கு அப்பாற்பட்டும் அவருடைய கோலாகல கல்யாணகுணங்களையும்… சரியா?

உங்கள் நேருவின், புரிந்துகொள்ளவே இயலாத சின்னத்தனம். இது சர்தார் படேல் அவர்களில் இறப்பிற்குப் பின் அவர் நடந்துகொண்டமுறை!

நிர்வாகம்: ” என் குமாஸ்தா சொல்கிறார் – அந்த அதிகாரிக்கு முள்கரண்டியையும் கத்தியையும் வைத்து உண்ணமுடியாது, ஆகவே அந்த அதிகாரி இந்தப் பதவிக்கு லாயக்கில்லை!”

அதி அற்புதமாக, பாரதத்தின் வடகிழக்கை கண்டமேனிக்கும் நிர்வாகம் செய்து அதனை மேலும் தனிமைப் படுத்தியது!

போதுமா?

-0-0-0-0-

நீங்கள் ஒரு கருத்துலக சோம்பேறி. கடன்வாங்கிய, சரிபார்க்கப்படாத கருத்துகளைப் பரப்புவது மட்டுமல்லாமல், மினுக்கிக்கொண்டு அலைகிறீர்கள். (பிற விஷயங்களில் – ஹ்ம்ம், குறைந்த பட்சம் ஒரு விஷயத்திலாவது – நீங்கள் இப்படியில்லை என்பது தெரியும்; ஏனிப்படி அழிச்சாட்டியம் செய்கிறீர்கள்??)

நீங்கள் ஒரு பட்டயக் கணக்காளர், சரி. ஒவ்வொரு தொழிலுக்கும் (ஏன், உங்களுடைய போக்கற்ற ஆடிட்டன் தொழிலுக்குமேகூட!) தர்மம் என ஒன்று உண்டு. அதுவும் சரி. இந்த லாப நஷ்டக் கணக்கீடு வகையறாக்களில் பாரதம் (பண்டைய காலத்திலேயே) கொடுத்த கொடைகள் பற்றிச் சொன்னபோது நீங்கள் நம்பவில்லை. இதெல்லாம் அர்த்த ஷாஸ்திரத்தில் இருக்கிறது என்றேன், மூலத்தைப் புரட்டிக்கூடப் பார்க்காமல், ‘உனக்கு மூளை கழன்றுவிட்டது, நீ ஹிந்துத்துவா வெறியனாகிவிட்டாய், எதற்கெடுத்தாலும் இந்தியாஇந்தியா என்று அரற்றுகிறாய்!’ என்றீர்கள்; ஆனால் (உங்களுக்குப் பிடித்ததுபோல) வெள்ளைக்காரப் பேராசிரியர்  ஒருவர் இதுபற்றிச் சொன்னதுபற்றி ஆதாரபூர்வமாக நிறுவினேன். பிறகு உங்களிடமிருந்து பதிலில்லை. இதனைப் பிறகு ஷாமஸாஸ்த்ரி அவர்களின் பங்களிப்பைக் குறித்து விரிவு செய்து ஒரு ஒத்திசைவு பதிவிட்டேன். சில ட்வீட்களையும் செய்தேன்.

நீங்கள் கப்சிப்.

ஆனால் நேற்று ஒரு மசுத்தையும் புரிந்துகொள்ளாமல், அறிவில்லாமல், பேடித்தனமாக – ஸாத்வி ப்ரக்யா அவர்களைப் பற்றிக் கேவலமாகக் கருத்துரைக்கிறீர்கள். உங்களைப் போன்ற ஜந்துக்கள், ஒத்திசைவைப் படித்து என்ன மயிரைப் புரிந்துகொள்கிறீர்கள் என்றே புரியவில்லை. ஏன் இங்குவந்து எத்தையோ படித்து ஒரு சுக்கையும் ஆழ்ந்து அறிய வக்கில்லாமல் நக்கல் பேச்சுடன் அலைகிறீர்கள்?

வெட்டிப் பழம்பெருமை விவகாரங்களில் எனக்கும் ஆர்வமில்லை; ஆனால் பாரதத்தின் காத்திரமான பங்களிப்புகள் எனப் பலப்பல துறைகளில் இருக்கின்றன – இவற்றைப் பற்றி ஆதாரங்களுடன் பேசினால்கூட உங்களுடைய அதிகபட்ச எதிர்வினை மௌடீகமான நக்கல் மட்டுமே!

ஒத்திசைவு, வேலைசெய்யும் மூளையை உடைய, ஆனால் குயுக்தியற்ற, கொஞ்சமேனும் தேசாபிமானம் உடைய மனிதர்களுக்கானது. உங்களைப் போன்ற ஜந்துக்களுக்கானது அல்ல.

சரி.

நேருவை நான் வெறுக்கவில்லை. ஏனெனில், அவரும் என்னைப்போலவே ஒரு சாதாரண மனிதர்தாம் என உணர்ந்திருக்கிறேன். ஆனால் – அவருக்கு மிகைப்பணக்காரப் பின்புலம் இருந்ததால், அவர் தந்தை அவருக்காகத் தொடர்ந்து காங்கிரஸிடம் காந்தியிடமும் ‘பேட்’ செய்ததால்  போற்றத்தக்கவராக உருவானார் என்கிறேன். மேலும் நமக்கு நேருவின் வெள்ளை நிறம் (அவருக்குக் கன்னம் குழிந்தமாதிரித் தெரியவில்லை!),  ஜோடனை செய்யப்பட்ட ஆங்கிலம், ஸோஷலிஸ ‘எல்லாரும் எல்லாமும் பெறவேண்டும்’ வேலை செய்கிறோமோ இல்லையோ பஜனை போன்றவையெல்லாம் அணுக்கமானவை!

பிரச்சினை என்னவென்றால் – என் தந்தை என்னை இப்படி முட்டுக்கொடுத்து நிறுத்தாமல் அழிச்சாட்டியம் செய்து பரோபகாரம் என வெளியுலகத்திலேயே கடனெழவைப் பணிசெய்து கிடந்ததால், ஆர்எஸ்பாரதி, மோகனரங்கன் போன்ற திராவிடப் பொறுக்கிக் கழுதைகளுடன் பொருதிக்கொண்டிருந்ததால் — எனக்காகச் சொத்தோ பித்தோ சேர்த்துவைக்காததால், நான் சம்பாத்திய-வேலைகளில் இருந்தபோது, என் மேலதிகாரிகளிடம் பேசி எனக்குப் பதவி உயர்வு பெற்றுத்தராததால்  – நான் பெரிய அளவில் உருவாகவில்லை என்பதையும் நான் பணிவன்புடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

ஆகவே, நீங்கள் சொல்வதுபோல – எனக்கு, இந்த 50+ வயதில் நேருவைப் பார்த்தால் பொறாமையாக இருக்கிறது. திருப்திதானே?

-0-0-0-0-

எது எப்படியோ – உங்கள் தொல்லை தாங்கமுடியவில்லை. உங்கள் மனைவி உங்களிடம் என்னத்தைக் கண்டாரோ, அவருடைய, உங்களுக்கான வக்காலத்தையும்தான்! தம்பதி சமேதராக என்னை ரவுண்டு கட்டிக்கொண்டு அடிக்கிறீர்கள்.

இன்றுமுதல், என்னைப் பொறுத்தவரை பாரதத்தில் என்ன நல்லது நடந்திருந்தாலும் அது நேரு பிறப்பதற்குப் பல்லாயிரம் ஆண்டுகள் முன்பே இருந்திருந்தாலும்கூட, அவர் அருளால்தான் நிகழ்ந்தது என வாயையும் குண்டியையும் மூடிக்கொண்டு ஒப்புக்கொள்கிறேன்.

இப்போது என்ன நல்லது நடந்தாலும் (காங்க்ரெஸ் தோற்பது போல) அதுவும் அவர் அருளால்தான் மட்டுமேயன்றிப் பிறிதொன்றால் இல்லை.

ஏன், ஒத்திசைவு தளமே நேருவின் அருளாலும் தயவாலும் பண்பாலும் தான் நடக்கிறது எனவும் பகிரங்கமாக அறிவிக்கிறேன். (ஒத்திசைவு முதல்பக்க முகப்பில் உங்கள் தொல்லை தாங்க முடியாமல் சுமார் ஆறு மாதங்களுக்கு ‘சாச்சா நேருவின் அருளால்…’ எனக் குறிப்பிட்டிருந்தேன் – இப்போது ‘नमस्ते सदा वत्सले मातृभूमे…’ என இருக்கிறது!)

நேருவிய ஸோஷலிஸம் (இது என்னமாதிரி விபரீத ஜந்து எனக்குத் தெரியாவிட்டாலும்) தான் பாரதத்துக்கு நன்மை பயத்தது. அதுமட்டுமே நன்மை பயக்கும். அது வாழ்க!

நேரு மயம் ஜகத்! ஆளை விடும்.

எப்படியும், இன்றிரவு நேருவியஸோஷலிஸம் கொடுங்கனவில் நாயகனாக வந்து கண்ணைக் குத்திவிடும் என நினைக்கிறேன். நன்றி.

ஆனால், நடுக்கமாக இருக்கிறது. :-(

 

 

10 Responses to “ஜவாஹர்லால் ‘சாச்சா’ நேருவின் அருளால்…”

 1. Anonymouse Says:

  How to spot a liberandu at 20 paces:
  * Claims to be atheist, worships Nehru
  * Shifts goalpost if loses arguments
  * Practices playing the “victim Card”
  * Attacks Hindu Gods to become secular
  * Applies Burnol® after ever U turn


 2. […] is from the same ACA bloke who is against CAA. Audittorr. Swivel-chair socialist. Incorrigible Nehru(!) & Dravidian […]

 3. பொன்.முத்துக்குமார் Says:

  என்ன ராம் இது, ஒரேயடியாக டவுசரைக் கழற்றிவிடுகிறீர்கள் ? அப்படியென்றால் ஐ.ஐ.டி-கள் ? சுதந்தரத்துக்குப்பின்னான தேச கட்டுமானத்தில் அவரது காத்திரமான பங்களிப்பு (பெருந்தொழிற்சாலைகள் உருவாக்கம், நீர்மேலாண்மை, அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கான திட்டங்கள் இன்னபிற) பெரிய அளவில் இல்லையா என்ன ?

  ஜெ.மோ எழுதின மத்தாய் அவர்களது நூல் மீதான மதிப்புரையில், மத்தாய், ’நேரு, குடும்பத்திற்காக வேண்டுமென்றே எதுவும் செய்துகொண்டார் என்று எழுதவில்லை’ என்றும், ’குடும்ப உறுப்பினர்கள் மேல் உள்ள பாசத்தால் கண்டுகொள்ளாமல் இருந்தார்’ என்பதுபோல எழுதியிருப்பதாகத்தான் எழுதியிருக்கிறார்.

  நிச்சயமாக மு.க அளவிற்கெல்லாம் அருவருக்கத்தக்க அளவிற்குச் சென்றிருக்கமாட்டார் என்றுதான் நினைக்கிறேன்.

  பி.கு : அதுசரி, யாருக்கான பதில் இது ? :)


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s