நேரு, திட்டமிடுதல், டவுசர் கழற்றுதல், ஜெயமோகன் – எதிர்வினைக் குறிப்புகள்

28/02/2020

ஜவாஹர்லால் ‘சாச்சா’ நேருவின் அருளால்…‘ பதிவுக்கு வந்த பின்னூட்டத்துக்கு எதிர்வினை இது;  பொன். முத்துக்குமார் அவர்களுடைய பின்னூட்டம் கீழே…

ஐயா, உங்கள் பின்னூட்டத்துக்கு நன்றி.

1. ‘முன்னேற்றம்’ நிகழ்ந்தது. ஆனால் அந்தச் சதித்திட்டப் பாவத்துக்கு, சாச்சா நேருவை மட்டும் குற்றம் சொல்வது தகாது. பாவம், அவர்.

என்னுடன் சேர்ந்து அவருடைய கோமணத்தைத் தாங்களுமா கழட்ட முயற்சிக்கிறீர்கள்? இது தகுமா??

…இவை ஒருபுறம் துவைப்பதற்காகக் கீழே கிடக்க, நேரு அவர்கள் ஒன்றுமே செய்யாமலும் இல்லை. அப்படிப் பொத்தாம்பொதுவாகச் சொன்னால் சரியல்ல. ஆனால் திட்டமிடுதல் என்பது வேறு, சிலவற்றை நிறைவேற்றுவது என்பது வேறு; பலகாலத்துக்குப் பின், நான் வந்தடைந்துள்ள என் புரிதல் என்னவென்றால், சாச்சா இல்லாமல் இருந்திருந்தாலும் இவை நிறைவேறியிருக்கும் – ஆனால் இம்மாதிரி ‘அப்படியில்லையெனில் இப்படியாகியிருக்கலாம்’ விவாதங்களுக்கு முடிவே இல்லை!

மேலும், என் வாழ்க்கையைக் குறித்த மகத்தான திட்டமிடுதல் காரணமாகத்தான், குமாஸ்தாவேலை செய்து மாதச் சம்பளம் வாங்குகிறேன் என்பதும் பெருமையான விஷயம்தான்; ஏனெனில் நான் குமாஸ்தா வேலை செய்வதால்தானே என் நிறுவனம், க்வார்ட்டருக்குக் க்வார்ட்டர் வளர்ச்சியடைந்து முன்னேற்றப் பாதையில் பீடுநடை போடுகிறது? ஆக, என் நிறுவனத்தின் வளர்ச்சியை நான்தானே திட்டமிட்டு நிர்ணயிக்கிறேன்?

இப்படியும் மாற்றி ரோசிக்கலாம்.

2. அவர் 1938ல் ஆரம்பித்து ஏகத்துக்கும் சொதப்பிய, முழுமையேயற்ற, தொடர்ந்து சோம்பேறித்தன அரைகுறை நிலையிலேயே பரிதாபகரமாக இருந்த ‘தேசிய திட்டக் கமிட்டி’ பற்றி இன்னொரு சமயம். (இதுதாண்டா திட்டமிடுதல் குறித்த திட்டலிடுதல்!)

3. நீர்க்கட்டுமானங்களைக் குறித்த திட்டமிடுதல்களுக்கு ஆம்பேட்கர் அவர்கள்தான் காரணம், நேரு மட்டும் அல்ல. நேரு அவர்களுக்கு, ஸ்டாலினிய ஸோஷலிஸ கட்டுமானங்கள் பிடித்திருந்தன, ஆக பெருந்திட்டங்கள் அவருக்கு முக்கியமானவையாகப் பட்டன என்றாலும்…

சொல்லப்போனால் – இந்திய அரசியல் சட்டத்தின் வரைவுக் கமிட்டி கிமிட்டி எல்லாம், ஆம்பேட்கரின் குமாஸ்தா பணி. நிறைய கட்-பேஸ்ட் வேலை. (அந்தக் காலத்திலேயே நம்மாட்கள் ஐடி கன்ஸல்டன்ட் வேலையில் முன்னோடி விற்பன்னர்கள்!)

ஆச்சரியப் படத்தக்க விதத்தில் இது தூக்கிப் பிடிக்கப்படுகிறது.

ஏனெனில் -அரசியலமைப்புச் சட்டம் உருவாக அமைக்கப்பட்ட பல கிளைக்கமிட்டிகளில், இருபத்து சொச்சத்தில் ஒன்றுதான் இந்த ‘வரைவுக் கமிட்டி’ – இந்தத் தொகுக்கும் குமாஸ்தா வேலைக்குத்தான் ஆம்பேட்கர் தலைவராக இருந்தார்! அதனால் – அவர்தாம் ‘இந்திய அரசியலமைப்புத் திட்டத்தின் தந்தை’ என்பது அவர்மீது மாளாப்பழி சுமத்துவது. இது எப்படி இருக்கிறதென்றால், விக்கீபீடியாவில் எழுதுபவர்களெல்லாம் அந்தந்தத் துறைகளின் தந்தைகள் என்று சொல்வதுபோல! சரியாகச் சொல்லவேண்டுமென்றால், இந்த கான்ஸ்டிட்யுயண்ட் அஸ்ஸெம்ப்ளிதான் (இந்திய அரசியலமைப்பு தொகுப்பு/நிர்ணய மன்றம்?) இந்திய சாஸனத்தின் தாய், தந்தை, தாத்தா, பாட்டி எல்லாம்!

…ஆனால் கமிட்டிகளில் உட்கார்ந்து பிறர்பேச்சைக் கேட்பதே ஒரு பெரியவேலை என்பதையும் ஒப்புக்கொள்கிறேன்! அதுவும், பாரதப் புலத்தில் பத்துபேர் இருந்தால் பத்தாயிரம் கருத்துகள் இருக்கும் நிலையில் – அசாத்திய பொறுமையும், சாதுர்யமும், ஜனநாயகத்தில் மரியாதையும், புதுயுகம் படைக்கும் கனவும் இருந்தால்தான் முடியும். இவை ஆம்பேட்கரிடம் நிறையவே இருந்தன. இந்த ஒரு காரணத்துக்காக, சர்வ நிச்சயமாக அவரைப் போற்றலாம்.

ஆனால், அவர் மின்சாரவுற்பத்தி, நீர்வளமேளாண்மை  திட்டவரைவுகள் போன்றவற்றுக்குச் செய்த மஹோன்னதங்கள் நம்மில் பலரால் மறக்கப்பட்டுவிட்டன. இவைதாம், ஆம்பேட்கரின் காத்திரமான, தொலைநோக்குடன் சிந்திக்கப்பட்ட பங்களிப்புகள்.

பாஜக அரசு 2016ல் மறுபதிப்பு செய்த, இது குறித்த ஒரு அறிக்கையைப் படிக்கவும்: http://www.cwc.gov.in/sites/default/files/ambedkars-book.pdf

4. 1944-45ல் எட்டு தொழில் முனைவோர்களால் வரையப்பட்டு, இரு அறிக்கைகளாக வெளிவந்த ‘பாம்பே திட்டம்‘ என்பதைத்தான் ஒரு முன்னோடித்திட்டம் எனச் சொல்லவேண்டும். நேருவுக்கும் இந்தத் திட்ட வரைவுக்கும் தொடர்பில்லை. (ஆனால் இதன் பலப்பல கருத்துகள் பின்னாட்களில், ‘ ஐந்தாண்டுத் திட்டங்களில்’ உபயோகிக்கப்பட்டன; இதனைக் குறித்த என் பழங்குறிப்புகள் எங்கேபோயின எனத் தெரியவில்லை – கிடைத்தால் பதிக்கிறேன்)

இந்தத் திட்டவரைவிலிருந்துதான் –  சகலவிதமான பெருந்தொழிற்சாலைகள் உருவாக்கம், அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கான திட்டங்கள் போன்றவை எடுத்துக்கொள்ளப்பட்டன.

5. சாச்சா நேருவின் செல்லங்களின் ஒருவரான பி.ஸி. மஹலனோபிஷ் அவர்களின் ஸோஷலிஸ எக்ஸெல் ஸ்ப்ரெட்ஷீட் வகை திட்டமிடுதல் பற்றியும் இன்னொரு சமயம் எழுதவேண்டும்.

6. போற்றத்தக்க தலைவராகக் கருதிக் கொண்டாடப் பட்டாலும், மானுடரீதியில் சபலங்களுக்கு (நம்மைப் போலத்தான்!) இடங்கொடுத்த, போட்டிமனப்பான்மையுடைத்த, கொஞ்சம் ஏதேச்சாதிகாரியாகவும் திகழ்ந்த சாச்சா நேரு, தன்காலத்தில் ‘குடும்பத்துக்காக’ ஒன்றும் செய்துகொள்ளவில்லை எனச் சொல்லமுடியாது. அதேபோல, பணரீதியாகத் திருடினார், அளவுக்கு மிகமிக அதிகமாக இந்திராவைத் தூக்கிப் பிடித்தார் என்றெல்லாம் சொன்னால் அது அபாண்டம். ஆகவே, சர்வ நிச்சயமாக,  சாச்சா அவர்களை, நம் திமுக முக மு.கருணாநிதி திருடர்கள் அளவுக்கு இறக்கவேமுடியாது. தாங்கள் சொல்வது சரியே.

ஓப்பு நோக்க – மலைச்சிகரத்தையும் கிடுகிடுபள்ளத்தில் நெளிந்தோடி, முடைநாற்றமெடுக்கும் திராவிடச் சாக்கடையையும் ஒப்பிடமுடியாதுதான்.

7. மத்தாய் பற்றி ஜெயமோகன் சொல்வது: ஜெயமோகன் அவர்களை ஒரு புனைவு எழுத்தாளர், நகைச்சுவை உணர்ச்சி மிக்கவர், புத்திசாலி என்கிற ரீதிகளில்  மதிக்கிறேன். கூடவே அவருடைய கருத்துரிமையையும்.

ஆனால் ‘அவர் எழுதுவது எல்லாமே புனைவுதாண்டா கொமாரு’ என்கிற அனுபூதி நிலைக்கு நான் வந்து கொஞ்சகாலம் ஆகியிருக்கிறது; என் உடல்-மன ஆரோக்கியத்தைக் கருதி அவர் தளத்தின் பக்கமே போகாமலிருக்கிறேன். ஆகவே.

+ மத்தாய் சொல்வதில் சிலவற்றை மட்டும் சௌகரியத்துடன் எடுத்துக்கொள்ள முடியாது. மேலும் மத்தாய், பப்பரப்பா ஆசாமி. ஆகவே அவர் என்ன சொன்னாலும் அதற்கான முகாந்திரம் இல்லாவிட்டால், பிற தரவுகள் இல்லாவிட்டால் – அவற்றைக் கருத்தில் கொள்ளவேண்டிய அவசியமில்லை. அவர் வெறும் ஒரு மதிமாறயுவகிருஷ்ண ரகம்தான். பொதுவாக மத்தாயுறு தயிர், ஏகத்துக்கும் புளிக்கும்.

பின்குறிப்பு: இந்த ஆசாமி 2002-3 வாக்கில் நான் வேலை(!)செய்துகொண்டிருந்த நிறுவனத்தில், ஒரு ‘டொமெய்ன் கன்ஸல்டன்ட்’ பஜனையதிகாரி. தமிழர். அவ்வப்போது ஒத்திசைவைப் படித்திருக்கிறார். சிலநாட்களுக்கு முன், அவருடைய, நகைப்புக்கிடமான போலி-லிபரல்வாதத்தினால் – ‘நட்பினைக்’ கத்தறித்துவிட்டேன்.

கேல் கதம்.

5 Responses to “நேரு, திட்டமிடுதல், டவுசர் கழற்றுதல், ஜெயமோகன் – எதிர்வினைக் குறிப்புகள்”

  1. Sivaaa Says:

    உங்கள் ஆட்களின் டெல்லி வன்முறைக்கு இன்னும் முட்டு குடுக்கவில்லையா கோப்பால்

  2. பொன்.முத்துக்குமார் Says:

    ராம், விளக்கமாக தனிப்பதிவாகவே இடுவீர்கள் என்று நினைக்கவில்லை. மிகவும் நன்றி.

    அன்புடன்
    பொன்.முத்துக்குமார்


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s