ஸூஃபி ஜலாலுத்தீன் ‘ரூமி’ மொஹெம்மத் பால்கி (1207-73 CE) அவர்களைக் குறித்தும் அவருடைய எழுத்துகளைப் பற்றியும்…

11/03/2020

…உங்களுக்கு முன்னறிமுகம் உள்ளதா?

எந்த மொழியின் வழியாக? தமிழிலா ஆங்கிலத்திலா அல்லது பாரசீக/அரபி மொழி வழியிலா – அல்லது கலந்துகட்டியா? அமெரிக்காவில் இன்னமும் பரவலாக அறியப்படும் பிரபலமாக விற்கும் ஆன்மிக/ஸூஃபி கவிஞர் அவர்தாம் எனும் ஆச்சரியம் தரும் உண்மை என்பது உங்களுக்குத் தெரியுமா?

ஆன்மிகம் ஸ்பிரிட்சுவாலிட்டி மதநல்லிணக்கம் அன்புவழி சன்மார்க்கம்… …என்றால் ரூமியின் வரிகளை மேற்கோள் காட்டாமல், இந்தக் காலகட்டங்களில் பேசவே முடியாது என்பது ஒரு உலகளாவிய பிரத்தியட்சமான உண்மை என்பதை அறிவீர்களா?

ஸூஃபிகள்,  குறிப்பாக, ரூமி அவர்கள் குறித்து உங்கள் கருத்துகள் என்ன?

ஏ. எஸ். முகம்மது ‘நாகூர் ரூமி’  ரஃபி அவர்கள் எழுதி கிழக்கு பதிப்பகம் வெளியிட்டுள்ள  ‘சூஃபி வழி ஓர் எளிய அறிமுகம்‘ + அவர் மொழிபெயர்த்து அளித்துள்ள ‘கவிஞானி ஜலாலுத்தீன் ரூமியின் கதைகள், கவிதைகள்’ எனும் சந்தியா பதிப்பகப் புத்தகம் போன்றவற்றைப் புரட்டியிருக்கிறீர்களா, படித்திருக்கிறீர்களா?

நானும் – வாழ்க்கையில் பெரிதாக ஒரு பெரிய முடியையும் பிடுங்கி விடவில்லையானாலும், ஸுஃபியானா கலாம் எனும் இசைவடிவத்தைப் பலபத்தாண்டுகளாக விரும்புபவன்.

மேலும், அறிவிலித்தனமான அழிச்சாட்டியங்களும் மதக்கலவரக் கொடுமைகளும் ஜிஹாத்களும் பலவழியாக நடந்துவரும் இந்தக் காலகட்டங்களில் ஸூஃபிகளின் பாதை (அல்லது ரூமியின் கருத்துகள்) ஒத்துவருமா என்றெல்லாம் யோசிப்பவன். (ற்றொம்ப முக்கியண்டே!)

ஆக, இதைப் பற்றி 1000+ வார்த்தைகளில் வழக்கம்போலவே ஒரு நீஈஈஈஈளக் காட்டுரை ஒன்றை சிடுக்கல்தமிழில் அடுத்த சில நாட்களில் எழுதினால் எவ்வளவு பேர் படிப்பீர்கள்? ஏழரைகளில் பாதியாவது?? மூணேமுக்கால்கள்?? (பயப்படாதீர்கள்! வீட்டுக்கு வந்து உதைக்க மாட்டேன்!)

கேள்விகள், கேள்விகள்

(மேற்கோள் படங்கள், கண்டமேனிக்கும் கூக்ள் செய்து எடுக்கப்பட்டவை)

29 Responses to “ஸூஃபி ஜலாலுத்தீன் ‘ரூமி’ மொஹெம்மத் பால்கி (1207-73 CE) அவர்களைக் குறித்தும் அவருடைய எழுத்துகளைப் பற்றியும்…”


 1. பதிலளிக்க ஊக்கம்:

  சரி, மூணேமுக்கால்களில் ஒருவர் இங்கு பதில்சொன்னால் கூடப் போதும்.

  மிச்சமிருக்கக்கூடும், தங்களை வெளியில் காட்டிக்கொள்ள வெட்கப்படும் ரெண்டேமுக்கால்கள் மற்றபடி மின்னஞ்சல்/குறுஞ்செய்தி எழவுகளில் ஏகோபித்து ஆதரவை நல்கலாம்.

  நன்றி!

 2. jay673 Says:

  Please do. engalukku ongala vitta vEra yAr irukkAnga ?

  P.S. Ongalukkum dhAn ;-)

 3. anonymous Says:

  -1 YOU BIGOT ISLAMOPHOBE


  • ???

   ஐயய்யோ! +1 -1 = 0 ஆகிவிட்டதே!

   எழுதவேண்டாமோ? ;-)

  • Sridharan Says:

   இதுபோன்ற ஜிஹாதிய, வஹாபிய நபும்ஸகர்கள் பரப்புவதும், நம்மூர் தீராவிடர் முதல் லிபராண்டுகள் ஈறாக கயமையுடன் முட்டுக்கொடுப்பதும் மட்டுமே அக்மார்க் நயம் பிராண்ட் இஸ்லாம் அல்ல என்பதை உணர்த்தவும், உண்மையாகவே அன்பை/அமைதியை வலியுறுத்திய இஸ்லாமிய ஞானிகளும் இருந்தார்கள் என்பதை அறியத்தரவும் கண்டிப்பாக நீங்கள் எழுதவேண்டும்.


   • ஐயா, நன்றி! ஆனால் ஒரு பட்சி சொல்கிறது, “உங்களுக்கு வெ. ராமசாமி ஏமாற்றம் தரப்போகிறான்! ஜாக்கிரதை!!”

 4. K.Muthuramskrishnan Says:

  புரிகிறதோ இல்லையோ சிரமபட்டாவது உமது எழுத்துக்கள் அனைத்தையும் படித்து வருகிறேன்.இதையும் படித்து வைக்கிறேன்

 5. Vinothkumar Says:

  ராம்,
  எழுதுங்கள், உங்களுடைய மொழி நடை இத்தனை வருடங்களில் எனக்குப் பழக்கப்பட்டுவிட்டது. நிச்சயம் படிக்க ஆவல்.

  நன்றி

 6. dagalti Says:

  சாமிசெய் அண்டம் நெடியதாம் அஃதிலே
  நாமளே யாவையும் கற்றிட ஏலுமோ
  ரூமியை கற்றவன் பாவனை நானெய்த
  தாமதம் இன்றியே தா


  • யோவ்! ரூமியே பரவாயில்லை போம்.

   • dagalti Says:

    ஆனா ஒண்ணுங்க,
    போடப்போற ஒரே ஒரு 1/nக்காக, உவேசா குறுந்தொகை பதிப்புக்கு விளம்பரம் கொடுத்து கையொப்பம் வாங்கிக்கிட்ட ரேஞ்சுக்கு இப்படி கணக்கெடுப்பு எல்லாம்…. :-)

 7. Raj Chandra Says:

  Please do.

 8. Muthukumar Says:

  முடிவை ஒத்திசைவின் “மஞ்சள்” திரையில் காண ஆவல் .

 9. Arun Says:

  Eager to read this sir.

 10. Kannan Says:

  +1

 11. hemaravii Says:

  Waiting Sir


  • அம்மணி, உங்கள் பொறுமைக்கு இந்த எருமை நன்றி நவில்கிறது.

   பார்க்கலாம் – ரூமி மொங்கரிங் ஒழிக்கப்படவேண்டியதொன்றுதான்.


 12. என்ன எழுதினாலும் எழரைகள் படிப்பார்கள். எனவே ஆசான் சொன்ன மாதிரி தைரியமுடன் கொலை புரிக


  • :-) ஏறத்தாழ கொலை செய்து முடித்துவிட்டேன். தடயங்களை அழிக்கவேண்டியதுதான் பாக்கி.

   நன்றி! ;-)


 13. […] நான், முந்தைய பதிவில் ‘எவ்ளோ பேர் இதனை படிப்பீர்கள்‘ எனக் கேட்டேன். ஏனெனில், வழக்கம்போல […]

 14. vijay Says:

  திரு இராம்,
  மேலே குறிப்பிட்ட புத்தகங்கள்,உட்பட இஸ்லாம் பற்றி இதுவரை ஆழமாக எதுவும் படித்ததில்லை.அறிந்த,படித்த வரையில்,வன்முறையில்,வேறுஎந்த மதங்களும் புரிந்திராத மனித அழிப்புகளின் ஊடாக திணிக்கப்பட்ட மதமாகவே தெரியவருகின்றது.இது வரையிலும் நடைமுறையில் எனக்கு அப்படித்தான் தெரிகின்றது.இந்த மதத்தின் நான் அறியாத முகத்தை நீங்கள் தெரியப்படுத்தினால்,அறிந்து கொள்ளலாம்.


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s