இதுதாண்டா ஸூஃபி! இவ்ளோதாண்டா ரூமி!!

12/03/2020

(அல்லது) ஜலாலுத்தீன் ரூமி, ஸூஃபிக்களின் ஹிந்துக்கள் குறித்த பார்வை, ஆன்மிக பஜனை – குறிப்புகள்.

சரி. எனக்கு மாளா அலுப்புதரும்  நெகிழ்வாலஜி கதையாடல்களில் ஒன்று இந்த ஸூஃபிக்கள் குறித்தது.

…அதேபோல உங்களுக்கு மாளா அலுப்பு (ஒருவேளை ஆச்சரியமும்) அளிக்கக் கூடுவது இந்த 1800+ வார்த்தை-நீளப் பதிவு. (இதுவரை நான் எழுதியுள்ள 1100+ ஒத்திசைவு பதிவுகளில், ஒப்பு நோக்க, இதுதான் நிறைய நேரம் எடுத்துக்கொண்டது என நினைக்கிறேன். நிறைய தரவுகளைச் சரிபார்க்கவேண்டிவந்தது தான் இதற்கு முக்கியக் காரணம். இந்தக் காரணத்தால்தான் நான், முந்தைய பதிவில் ‘எவ்ளோ பேர் இதனை படிப்பீர்கள்‘ எனக் கேட்டேன். ஏனெனில், வழக்கம்போல சகஏழரைகள் மட்டுமே படிக்கப் போவதாக இருந்தால், ஆங்கிலத்திலேயே எழுதிவிடலாமே என்றும் நினைத்தேன்… எது எப்படியோ, உங்கள் நிலைமை, தற்போது கவலைக்கிடம்தான், என்ன செய்ய!)

பொதுவாகவே, நம் போக்கற்ற நெக்குருகும் மதச்சார்பற்ற +கூறுகெட்ட ஆன்மிகவாதிகளின் புளகாங்கிதமடைதல், அவர்களை இப்படிச் சொல்லவைக்கும்; அதாவது,

ஸூஃபிக்களின் ஆன்மிகம் அற்புதமானது. மத நல்லிணக்கத்துக்கு வழி வகுத்தது. சகிப்புத்தன்மையையும் மானுடர்களின்-மதங்களின் ஒருங்கிணைப்பையும் சமதர்மச் சமுதாயத்தையும் உயர்த்திப் பிடித்தது. பாரதத்தின் ஹிந்து-முஸ்லீம் சமாதானத்துக்கும் அமைதிக்கும் அடிக்கல்லிட்டது… டட்டடா டட்டடா…”

இதற்கு என் கருணையும் சகோதரத்துவ நெகிழ்வும் மாளாஅன்பும் நிறைந்த எதிரிகொள்ளலும் எள்ளலும்:

போங்கடே முட்டாக்கூ சும்பன்களா!

நன்றி.

-0-0-0-0-

உங்கள் பிரச்சினைகள் என்னவென்றால் –

1. நான் வேண்டுமளவு (அதாவது, எனக்கு வேண்டுமளவுக்குத்தான்!) ஸூஃபி நெகிழ்வாலஜி படித்திருக்கிறேன். அதில்  இருக்கும் மானுடநேயம் பற்றிய குறிப்பிடத்தக்க வரிகளைப் படித்து புளாகங்கிதமடைந்து மகிழ்ந்தும் + வெறிச்சித்திரங்களைக் கண்டு துக்கித்தும் போயிருக்கிறேன். (எல்லாம், ஆன்மேரி ஷிம்மெல் போன்ற சான்றோர்கள் வழிதான்; அதுவும் ஆக்டா இரானிகா போன்ற பெருமதிப்புக்குரிய சஞ்சிகைகளிலிருந்துதான். கோல்மன் பார்க்ஸ் போன்றவர்களின் தண்டக்கருமாந்திர ‘எஸ்ஸென்ஷியல் ரூமி’ மொழிமாற்ற உரைகளையும் தான்!)

2. ஸூஃபிகள் பலப்பலரின் வரலாறுகளை –  காஃபிர்களின் ரத்தம் ஓட, கோவில்கள் அழித்தொழிக்கப்பட, ஏகோபித்த வெறிபிடித்து அவர்கள் இஸ்லாம் மார்க்கத்தைப் பரப்பியதையும் – நேரடியாகக் ‘களத்தில்’ இறங்கியும், மற்றபடி இஸ்லாமிய அரசர்களுக்கு ஒத்து ஊதி வன்முறைகளை ஆதரித்ததையும்  – அறிவேன். (சான்றுகளுடன் – தில்லியின் ஹஸ்ரத் நிஸாமுத்தீன் வழித்தோன்றல்களிலிருந்து மொய்னுத்தீன் சிஷ்திவரை, ஃபரீதுத்தின் அத்தர் உட்பட… …)

…எனக்குத் தெரிந்து இதற்கு விதிவிலக்கே இல்லை, உங்களுக்கு யாராவது அப்பழுக்கற்ற மனிதநேய ஆன்மிகவாதி ஸூஃபி பற்றித் தெரிந்தால் சொல்லுங்கள், கற்றுக் கொள்கிறேன்!

3. ஸூஃபியானா கலாம் வகை இசையைப் போற்றி மகிழ்ந்திருக்கிறேன், இனிமேலும் போற்றி மகிழ்வேன். ஒரிருமுறை இவைகுறித்து எழுதியிருக்கிறேன் என நினைவு. எனக்குப் பிடித்தவர்களின் ஒருவர் ராஜஸ்தானின் பிகனீர் சார்ந்த மீர் முக்தியார் அலி. ஒருகாலத்தில் நான் வேலைசெய்துகொண்டிருந்த பள்ளியில் கபீர்-விழா எனவொன்று நடத்தப்பட்டதில், பாரதத்தின் பலபாகங்களிலிருந்து ஸூஃபியானா இசைக் கலைஞர்களை வரவழைத்துக் கொண்டாடியதில் ஒரு அங்கமும் வகித்திருக்கிறேன்.

4. எனக்கும் எம்மதமும் someமதம்தான். ஆனால் பாரதத்தில்  பிறந்த ‘மதங்களென்று’  இங்கு தழைத்திருக்கும் பாரம்பரியங்களைப் பற்றி யாராவது சொன்னால் கொஞ்சம் நமட்டுச் சிரிப்புச் சிரித்துக்கொண்டு அகன்று விடுவேன். தண்டவாதம் செய்யமாட்டேன். ஏனெனில் நம்மில் பலர் (அடியேன் உட்பட) அறிவிலிகள். வரலாற்றுப் ப்ரக்ஞை அற்றவர்கள்.

5. நிலைமை இப்படி இருக்கையிலே, ஸூஃபிகள் குறித்த, தரவுகளேயற்ற அபிமானமும் காதலும் எனக்குப் பொதுவாகவே புரிவதில்லை. இதுவரை நான் சந்தித்துள்ள ‘ஸூஃபி என்றாலே  சொக்கிப்போய் நெக்குருகுபவர்’ ஒருவர் கூட எந்த ஸூஃபியையும் முழுவதும் அறிந்துகொள்ளவில்லை, சரியாகப் படிக்கவும் இல்லை, என்ன செய்ய! சொல்லப் போனால் ஸூஃபிகளின் ஹகிக்வா/முறைமைகள் அனைத்தும் இஸ்லாமிய ஷாரியத் ‘நீதி’களுக்கு மட்டுமே கட்டுப்பட்டவை. ஷஹாதா சொல்வது போல, அல்லாவை மட்டுமே ஒரேயொரு இறைவனாகவும், அல்லாவின் தூதராக மொஹம்மத்தை மட்டுமே வரிப்பதையும், வேறெந்த மார்க்கத்தையும் மதிக்காமல் ஒழிக்க நினைப்பதையும் அடிப்படையாகக் கொண்டவை!

எந்த ஸூஃபி இதுவரை ஹிந்து கோவில்களுக்குச் சென்று வழிபட்டிருக்கிறார் சொல்லுங்கள்? மாறாக – ராஜஸ்தானின் அஜ்மெர்/ஆஜ்மீர் நகரின், இன்றுகூடக் கொண்டாடப்படும்(!) க்வாஜா மொயினுத்தீன் சிஷ்தியின் ஹிந்துவெறுப்பு எந்த அளவுக்கு இருந்தது என்றால் – அவர் அஜ்மெரின் அன்னாஸாகர் பகுதியில் கோவில்களுக்கு நடுவே ஒரு பசுமாட்டை வெட்டிச் சமைத்து உண்டார். (ஆனால் இதே, சிஷ்தி பெரிய ஆன்மிகவாதியாகவும், ஹிந்து-இஸ்லாம் சகோதரத்துவப் பாலம் அமைப்பாளர் மட்டுமாகவே, ஒரு மசுறு தரவுகூட இல்லாமல் போற்றப்படுகிறார்! நம் வரலாற்றுப் ப்ரக்ஞைதான் என்னே!)

6. மன்னிக்கவும் இந்த அனல்-ஹக் கதையாடல் பற்றியும் அறிவேன். இதற்கும் ஸூஃபிக்களும் ஒரு தொடர்புமில்லை. அவர்கள் அதற்கு ஒரு பெருமையும் தேடமுடியாது. அந்தக் கதை என்னவென்றால் – மன்ஸூர் அல்-ஹஜ் எனும் ஸூஃபி ஞானி ‘நானே உண்மை’ எனப் பக்திப் பரவசத்தில் கத்தியதால், அவர் இஸ்லாமிய அரசரால், இஸ்லாமிய தெய்வ நிந்தனைக் குற்றம் சாட்டப்பட்டுத் தூக்கிலிடப்பட்டார் என்பதுதான். (வைக்கம் மொஹம்மத் பஷீர் அவர்கள் எழுதிய ‘அனர்க நிமிஷம்’ கதைத் தொகுப்பில் (~1980) வந்தவொரு மன்ஸூர் கட்டுக் கதையை வைத்து இன்னமும் ஸூஃபி மஸாலா சேர்த்து – ஏதோ ஸூஃபிகள் மெய்த்தேடல், அஹம் ப்ர்ஹ்மாஸ்மி, அதுதான் அனல் ஹக் என்றெல்லாம் கதையடிக்கிறார்கள் – பஷீர் எழுதியது ஒரு வெறும் கதை, அவர் ஏதோ ஆன்மிக அவியல் கொத்துபுரோட்டா செய்ய, அதைப் போய்…)

ஆனால் உண்மை என்ன? மன்ஸூர் (பொதுயுகம் 857–922) என்பவர் ஒரு ஸூஃபி ஞானியல்லர். அவர் ஒரு சாதா பாரசீக முஸ்லீம்.  மன்ஸூர் ஊர்சுற்றியாக ஆன்மிகத் தேடலில்(!) அலைந்துகொண்டிருந்தபோது பாரதத்தின் கஷ்மீரப் பகுதியிலும் சுற்றிக்கொண்டிருந்தார்; அப்போது, அத்வைதம் குறித்த கோட்பாடுகளை ஆவல் கொண்டு படித்து ‘நானே உண்மை’ என பக்திப் பரவசத்தில் கூவினார் – அனா-அல் ஹக் (Anā al-Ḥaqq – I am Truth) என்று. அவர் சர்வ நிச்சயமாக ஸூஃபி ஞானியல்லர். வெறும் ஞானியாகத்தான் இருந்தார், நல்லவேளை!

இதைப் பொறுக்காத ஸூஃபிகள் (ஆம், ஸூஃபிகள்!) இந்த மன்ஸூரை ஒரு சிவபக்தர் எனச் சித்திரித்து ஆகவே காஃபிர் என வரித்துக் கேவலப் படுத்தினர்; இது கொஞ்ச காலம் நடந்தது.

பின்னர், இதே மன்ஸூர், பாக்தாத் காலிஃப்புக்கு எதிரான ‘சதித்திட்ட’ங்களில் ஈடுபட்டபோது – ஊக்கபோனஸாக, இந்த ‘அனல் ஹக்’ விஷயம்  தூசி தட்டப்பட்டு இஸ்லாமிய காலிஃபிடம் போட்டுக் கொடுக்கப் பட்டது. ஸூஃபிகளும் ஆன்மிக மகிழ்ச்சியுடன், தெய்வ நிந்தனைக்கான இஸ்லாமிய தண்டனையை  (= கொடுமையான துன்புறுத்தல் + சாவு) மிகுந்த சகோதரத்துவத்துடனும் மானுடநேயத்துடனும் அவர்கள் வழமையே போல மன்ஸூருக்குப் பெற்றுத் தந்தனர். கேல் கதம். நன்றி.

(இந்தக் கதைக்கு – ஏதோ ஸூஃபி ஒருவர் மத நல்லிணக்கத்துக்காகத் தூக்குதண்டனை பெற்றார் என்று ஸூஃபிகளுக்கு நல்லபெயர் சேர்க்கிறார்கள்; ஆனால், ஸூஃபிகளுக்கு இந்த விஷயத்திலும் எதிர்மறைத் தொடர்புதான்! மன்னிக்கவும்!!)

7. ஆனால், இருக்கும் ஸூஃபிகளில் நல்ல ஸூஃபி என்று யாரையாவது வேறுவழியில்லாமல் மண்டையிலும் (+அதற்கு ஒத்தியைபுள்ள உடற்பாகத்திலும்) அடித்துக்கொண்டு, ‘அரசியல் சரித்தனம்’ காரணமாக ஒப்புக்கொண்டேயாகவேண்டுமானால் அது ஓரளவுக்கு (ஓரளவுக்குத்தான்!) இந்த ஜலாலுத்தீன் ரூமி அவர்களாக இருக்கலாம்.  ஏனெனில் “அமெரிக்கா காரனுங்களே ரூமிய ஒரு பெரீய்ய கவிஞ்ஜரா ஒத்துக்கினாங்கபா! அப்பால, நம்ப திர்ட்டு பிலிம் வசனகர்த்தா ஜாவேத் அக்தர் கட்ஜுவுக்கும் இந்த ரூமிய புட்க்குமாம்பா! இந்த ப்ரூஃப் போதும்பா! அத்தொட்டுதான்!”

(ஆனால் இந்த ரூமியும்… …. அழிச்சாட்டிய ஸூஃபி பொதுவிதி சார்ந்தவர், விதிவிலக்கல்லர் என்பதும் தான், இந்தப் பதிவின் சாராம்சம்)

-0-0-0-0-

என் பிரச்சினை என்னவென்றால், நம் செல்ல லிபரலான்மிக-இடதுசாரிகள் சந்தர்ப்பம் கிடைத்தபோதெல்லாம் ‘ரூமி அப்டீ சொல்லிப்புட்டார்’ ஸூஃபி ஆன்மிகம் ஸூனியம் என்றெல்லாம் என்னிடம் கதைக்கும்போதுதான் கொஞ்சம் திணறல் ஆகி விடுகிறது.

ஊரெல்லாம், இணையமெல்லாம் ரூமி பெயர் சொல்லி ஆன்மிகமசுர்க்கூச்செறிதலில் அமோகமாக ஈடுபட்டு, ஜோதியில் கலந்து உய்யும்போது – அறியாமைச் சோம்பேறித்தனத்தின் காரணமாகவோ அல்லது காரியார்த்தக் கமுக்கத்தினாலோ, கழிசடைக் குப்பைகளைக் கண்டுகொள்ளாமல் போவது உசிதம் அல்ல என எனக்குப் படுகிறது. எதற்குமே ஒரு சமனம் தேவைதானே! (எனக்கு மட்டும் இதில் விதிவிலக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது!)

எது எப்படியோ

… நான் பொதுவாக மதிக்கும் காந்தியர்களில் ஒருவர் (இவருடன் சேர்ந்து, இவருடைய காந்திய ஆஸ்ரம அமைப்புக்காகக் கொஞ்சம் ‘பணி’களை ஒருகாலத்தில் ஆற்றுஆற்று என ஆற்றியிருக்கிறேன் என்பதையும், மேலதிக விவரங்களைத் தெரிவிக்கவியலாத என் ‘இங்கிதம் பார்க்கும்‘  இயலாமையையும் தெரிவித்துக்கொள்கிறேன்) அவ்வப்போது  எத்தையாவது ‘யாதும் ஊரே, யாவரும் கேளிர்’ போன்ற நெகிழ்வாலஜி சமாச்சாரங்களை அனுப்புவார். இவற்றில் பலப்பல மிகவும் அனுபூதி நிலையைக் குறித்தவையாக, ஸர்வமத சம்பாவனையாக இருந்தாலும் எனக்கு அவை பொதுவாகவே கொஞ்சம் கேளிக்கை சமாச்சாரமாகவே இருக்கும். ஆனால் அவருக்கு எதிர்வினை ஒன்றையும் அனுப்பமாட்டேன் – ஏனெனில், இம்மாதிரிச் செய்ய ஆரம்பித்தால் எனக்கு, என்னைவிட வயதான நண்பர்கள் என ஓரிருவர் தாம் எஞ்சுவர் என்பது எனக்குத் தெரியாமலில்லை. ;-) (ஆகவே, இத்தையும் படிக்கும் இளைஞ்ஜர்களே, இளைஞ்ஜிகளே! தொடர்ந்து ஆதரவு தாரீர்!!)

அண்மையில் இந்த தில்லி ஷஹீன்பாக் ஜிஹாதிய அழிச்சாட்டியம் தொடர்பாக அவருக்கு ஏதோ அறவுணர்ச்சி மிகுந்துவிட்டபடியால் அறிவுரை சொல்லவேண்டிய அவசியம் வந்துவிட்டது போலும்! ஏனெனில் ஒரு சமர்த்தான காந்திய-லிபரலாக அவர் பார்வையில், நடந்தது – ஒரு ‘முஸ்லீம் ஜெனொஸைட்’ என ஒரு தமிழ்சினிமாத்தர சிக்கலவிழ்த்தலுக்கு வந்துவிட்டிருக்கிறார். ஆகவே! (இத்தனைக்கும் இவர் மெத்தப் படித்தவர், பொதுவாக என் அன்புக்கும் உரியவர்வேறு! ஆனால், அவருடனான என் முன்னனுபவங்களின்படி — தரவுகளைக் காட்டினால், ஸிஏஏ பற்றிப் பேசினால், திடீரெக்ஸ் செவிடராகிவிடுவார் – ஏனெனில் ஊடகப் பப்பரப்பாக்களின் ஆகாத்தியத்துக்கு வெகுசிலரே அடிமையாகாமல் இருக்க முடியுமல்லவா?)

ஏமாந்தால், ஒரு மத நல்லிணக்கப் புல்லரிப்பு ரூமி கவிதைக் கழுதையை அனுப்பிவிடுவார் – இது பலரிடம் உள்ள ஒரு வியாதிதான். எத்தையாவது அனுப்பி தன்னுடைய மதச்சார்பின்மை மதநல்லிணக்க அறத்தின் உயர்வை, தன்னுடைய அறச்சீற்றப்பிழம்புத் தனத்தை பகிரங்கமாகவும் வெட்கமேயில்லாமலும் பறைசாற்றாத அறிவுஜீவி என ஒருவனாவது (அல்லது ஒருத்தியாவது) இருக்கிறார்களா என்ன, சொல்லுங்கள்??

ஆக, ஒரு நீஈஈஈஈஈஈள மின்னஞ்சல். அதில் ஒரு பாகம், ரூமி! (இது லிபரல்போலிவாதத்தில் முக்கியபங்கு வகிப்பது – ரூமி இல்லாவிட்டால் வேறெதையேனும் காமி – கபீர், காந்தி எனப் பலப்பலர் இருக்கின்றனரே!)

இந்த முழு நீள அறச்சீற்றச் சித்திரவதையையும் பொறுத்துக்கொண்டு படித்து வாய்மூடி என்வேலையைப் பார்த்துக்கொண்டு ‘ஒன்றுமே நடக்காததுபோல’  செல்லலாமென்றால் – அதே மின்னஞ்சல் கிடைக்கப்பெற்ற 30 ஆண்டுகால சகா ஒருவருக்கு, காந்தியரின் அழிச்சாட்டியம் அளவுக்கு மீறிப்போனதாகப் பட்டு, தேவை மெனெக்கட்டு எனக்கு ஃபோன் போட்டு “டேய்! எவ்ளோ நாள்டா இந்த ஆன்மிக வன்முறைய பொற்த்துக்கினு இர்ப்ப, பொற்த்தது போதுண்டா, பொங்கியெழ்டா மவ்னே!

‘சரி ஐயன்மீர்! மேற்படி போங்காட்ட காந்தியருக்குப் பணிவாகவும், தரவுகளுடனும் பதிலளிக்கிறேன்’ என்று சொன்னேன். (அதற்கு முன்னால் இந்தப் பதிவு)

-0-0-0-0-

ஏறத்தாழ விதம்விதமான அவருடைய மொழிபெயர்ப்புகளையும், உலகளாவி ஒப்புக்கொள்ளப்பட்ட சான்றோர்களின் அனுமானங்களையும் படித்திருக்கும் அடியேனின், தரவுகளின் பாற்பட்ட, ரூமியின் மீதான துணிபு:

ரூமி ஒரு ‘மிஸ்டிகல்’ கவிஞ்ஜராகப் பெரிதாகப் பிறரால் (எடுத்துக்காட்டாக, என் அருமை எஸ்ராமகிருஷ்ணன் போன்ற தமிழலக்கிய அறிஞர்களால், ஏன், லத்தீ அமெரிக்க சாருநிவேதிதாவால்கூட) கருதப்படலாம்.

ஆனால் ரூமி கவித்துவம் சொட்டும் கவிதை ஒன்றுகூட எழுதவில்லை; எல்லாம் ‘ரன் ஆஃப் த மில்’ மிகைச் சராசரி நெகிழ்வாலஜி எழவுதான். மேலும் அவரும் ஒரு சாதாரண மத/இனவெறி அயோக்கிய ஸூஃபி மதபோதகர்தான்.

ஹிந்துக்களைக் கறுப்பர்கள் (கறுப்பு என்பது அடிப்படையில் ஒரு பிரச்சினையுமில்லை – ஆனால் ரூமி இந்த வார்த்தையை உபயோகிப்பது, சர்வ நிச்சயமாக வாயோர நுரைதள்ளும் கேவலத்தனத்துடன்தான்!) என்றும், அவிசுவாசிகள் ஆகவே அவர்களுக்கு வீடுபேறு இல்லை என்றும் தொடர்ந்து பல இடங்களில் கரித்துக் கொட்டியிருக்கிறார்.

துருக்கியர்களுக்கும் ஹிந்துக்கள்/நீக்ரோக்களுக்கும் வேறுபாடுகள் பல பார்த்து, முன்னவர்களை மேலிடத்தில் வைக்கிறார். ஹிந்துக்களைத் தாழ்த்தி மட்டமாகக் கருதுகிறார்.

ஹிந்துவை முக்கியமாக –  அசிங்கமான, கறுப்பான, தீய சகுனமாக – மேலும், ‘அழுக்கான கறுப்பு நாய்’ என்றெல்லாம் வர்ணிக்கிறார். (எனக்குப் புல்லரிப்புதான் வருகுதய்யா!)

இதன் மூலங்களை நான் கொடுக்கமுடியும். ஆனால் கொடுக்கவில்லை. (இது குறித்த என் 40 வருடம் பழைய குறிப்புகள் கிடைக்கவில்லை, எங்கே போயினவோ; கிடைத்ததும் பதிக்கிறேன். ஆனால் ரூமியார் அவர்களின் ‘ஹிந்து = கறுப்பு அழுக்கு நாய்’ பதம் உண்மையே! )

ரூமியின் மஸ்னவீ தொகுப்புகளில் இருந்து (தண்டக்கருமாந்திர கோல்மன் பார்க்ஸ் அவர்களின் நேர்மையேயற்ற முழிபெயர்ப்பிலிருந்து அல்ல!), ரூமியின் மத/இனவெறிக்கு ஏகப்பட்ட, நூற்றுக்கணக்கான தரவுகளைக் கொடுக்கமுடியும்… :-(

ஹிந்துக்களையும் நீக்ரோக்களையும் அழகற்றவர்கள், அசிங்கமானவர்கள், கயாமத் (‘ஜட்ஜ்மெண்ட் டே’) அல்லது இறப்பிற்குப் பின் தன் ரூபங்களுக்கேற்ற வகையில் அவர்கள் தங்களைப் புரிந்துகொள்வார்கள் என்கிறார், நம் செல்ல ரூமி.

நாமும் இவரைத் தலைமேல் வைத்துக் கொண்டாடுகிறோம், கேவலம்.

மேற்கண்ட ஸ்க்ரீன்ஷாட்கள் மஹாமஹோ ஆன்மேரீ ஷிம்மெல் எனும் நான் மிகவும் மதிக்கும் இஸ்லாமிய/பாரசீக/ஸூஃபி அறிஞரும் ஆராய்ச்சியாளரின் ‘த ட்ரையும்ஃபன்ட் ஸன்‘ எனும் புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டுள்ளன.

-0-0-0-0-

ரூமி எழுதிய இந்த மஸ்னவி (அல்லது மேஸ்னவீ) ஒரு பெரிய்ய  நெடும் ‘ஆன்மிகக் கவிதை’ வகை. ‘மஸ்னவி-யே மானவி‘ – ஆன்மிகக் குறள் என ஒருமாதிரி பாரசீக மொழியில் பெயர்க்கப்படக்கூடுவது; சுமார் ரூமியின் வாழ் நாட்களில் கடைசி பதினைந்து ஆண்டுகளில் எழுதப்பட்ட  25000 ‘குறள்கள்;’ ஆறு புத்தகங்களில் அடக்கம். பெரும்பாலும் கொர்-ஆன், ஹடீத்கள், ஸுன்னாஹ். ஸிரா, பலப்பல தஃப்ஸீர்கள் போன்றவற்றில் இருந்து உருவப்பட்ட பாடுபொருட்கள். ஆன்மிக, சகோதரத்துவ, மனித நேய பாவங்களின் உச்சம்!

+ இது, ஏறத்தாழ பாரசீக மொழியில் கொர்-ஆன் அளவுக்கு அந்தஸ்தை இன்று வரை பெற்றுள்ளது. ஆகவேயும் உலகளவில் புகழ்பெற்றது. நமக்கு ஆன்மிகம் என்றாலே வெல்லக்கட்டியாயிற்றே, அம்மணிகளே அம்மணர்களே! ஆகவே, இந்த ஆன்மிகவெள்ளத்தில் லிபரல்-காந்திய-இடதுசாரிகளும் இணைந்தால், வெள்ளையடிப்புக்கும் கேட்கவா வேண்டும், சொல்லுங்கள்?

அதிலிருந்து சிலபல எடுத்துக்காட்டுகளைக் கொடுத்து, என் துணிபை நிறுவுகிறேன்.

ரூமியின் பார்வையில்,  [இதுவரை இஸ்லாம் மயம் ஆக்கப்படாத] பகுதிகளெல்லாம் இருண்ட ஹிந்துஸ்தான். இது துருக்கிய/துளுக்க வழியில் ஒழிக்கப்படவேண்டும்…  இதை, இப்படித் தரவுகள் பூர்வமாக எழுதியிருப்பது அதே ஷிம்மெல் அம்மணிதான். மேற்கண்ட திரைச்சொட்டு அவருடைய அழகான ஆதாரபூர்வமான, A Two-Colored Brocade: The Imagery of Persian Poetry – புத்தகத்திலிருந்து.

இதே போன்ற இழிபார்வையை, வெறுப்பியத்தை – யூதர்கள், கறுப்பர்கள்/நீக்ரோக்கள் மேலும் வைக்கிறார் நம் செல்ல ரூமி. ஆனால், அவருடைய ஹிந்துக்கள் + ஹிந்துஸ்தான் மீதான மாளா வெறுப்பும், அசூயையும்,  இன்னமும் உக்கிரம் வாய்ந்தது, கேவலத்தனமும் மிக்கது;  இவற்றுக்கு எடுத்துக்காட்டுகளாக, கீழ்கண்ட மஸ்னவி பகுதிகளை உங்கள் பார்வைக்குக் கொணர்கிறேன்.

“இந்தக் கண்ணாடி முகத்தைக் கறுப்பாகக் காட்டுகிறது’ எனச் சொல்லி, கண்ணாடியில் தன்முகத்தைக் கண்டு வெறுத்துப்போன ஒரு ஹிந்து, கண்ணாடியை எரித்தான்…” … [மஸ்னவி, 2ஆம் புத்தகம், செய்யுள் 2688]

கறுப்பு, சனி என ஹிந்துக்களையும் ஹிந்துஸ்தானையும் கொடூரமாகச் சித்திரித்து ஆரம்பிக்கும் மஸ்னவி ரூமியின் ஆன்மிகம், ஏகோபித்து வெறுப்பியத்தைப் பரப்புகிறது; நாமும் அதற்கு ஸூஃபி மனிதநேய மாளாஅன்பு நெடுங்கருணை நடனம்…

‘எவனொருவன் தந்திர/ஏமாற்றுக்கார ஹிந்துபோல இருக்கிறானோ அவனுக்குத் தன் சுயவுருவம் இறுதித்தீர்ப்பு நாள் அன்றுதான் அறியப் படக்கூடும்… … [மஸ்னவி, 1ஆம் புத்தகம், செய்யுள் 2918]

ஆமாம்யா ரூமி. ஹிந்து என்றாலே ஃப்ராட் தான். நன்றி!

“மீனின் [வெறும்] படத்திற்கு கடலுக்கும் நிலத்துக்குமுள்ள வேறுபாடா முக்கியம்? [அதேபோல] ஹிந்துவின் நிறத்துக்கு சவுக்காரமும் அமிலத்துக்கும் உள்ள வேறுபாடா முக்கியம்?” … … [மஸ்னவி, 1ஆம் புத்தகம், செய்யுள் 2765]

சரி ஐயா ரூமி. ஹிந்து என்றாலே, உங்கள் நோக்கத்தில், உங்கள் கறுப்பு-வெள்ளை (=ஹிந்து-இஸ்லாமியன் அல்லது =ஹிந்து-துருக்கியன்) பார்வையில் அசிங்கமானவன் என்று விட்டுவிடுங்கள்.
ஆச்சரியமாக இருக்கிறது! இப்படியேவா உங்கள் ஆன்மிகம் தொடர்கிறது? இந்தக் கழிசடைகளையா மக்கள் பாராயணம் செய்து புளகாங்கிதமுறுகிறார்கள்??

[மஸ்னவி, 1ஆம் புத்தகம், செய்யுள் 3524, 5]

ஐயா ரூமிக்கு விதம்விதமாக கறுப்பு-வெள்ளை ஹிந்து-துளுக்கன் படுமோசம்-மிகமகிழ்ச்சி எனச் சொல்லிச் சொல்லி மாளவில்லை, என்ன செய்வது சொல்லுங்கள். :-(

100% ஆன்மிக உருகல் கியாரண்டி என்றால் சும்மாவா?

“யானை எப்போது ஹிந்துஸ்தான் பற்றிக் கனவு காண்கிறதோ, அப்போது அது யானைப்பாகன் ஆணையை மதிக்காமல், தீய/கொடுந்தன்மை உடைத்ததாகிவிடுகிறது.”   [மஸ்னவி, 3ஆம் புத்தகம், செய்யுள் 4202]

சரி, யானை என்பது ஒரு உருவகம்தான். (யானை குறித்த வெறுப்பு ஐயா ரூமியாருக்கு இல்லாமலிருக்கலாம் என்பதும் ஒரு சாத்தியக் கூறு! ஆனால் அந்த யானையானது ஹிந்து யானையாக இருந்தால் என்ன சொல்லியிருப்பார் நம் செல்ல ரூமி?)

“…யானை ஹிந்துஸ்தான் பற்றிக் கனவு காண ஆரம்பித்துவிட்டால் அந்த கிராமம் சிதைந்து விட்டது என அர்த்தம் – அங்கிருந்து ஒரு வரியையும் வசூலிக்க முடியாது”  [மஸ்னவி, 5ஆம் புத்தகம், செய்யுள் 1892]

ஹிந்துஸ்தான் என்றாலே பாழாப்போவதுதான், ஐயன்மீர்! ரூமியே சொல்லிப்புட்டார்! சரியா? ;-)

ஹிந்துஸ்தான் பற்றி [கனவில்] நினைக்கக் கூடும், [/பொருட்படுத்தக்கூடும்] எவனும் தூக்கம் கலைந்தெழுந்தால், பைத்தியம் பிடித்தலைவான்.   [மஸ்னவி, 4ஆம் புத்தகம், செய்யுள் 3080]
ஆமய்யா ஆம். பாரதத்தின் அனைவரும் பைத்தியங்கள்தாம்! இல்லாவிட்டால் உங்களைப் போன்ற தண்டக் கருமாந்திர வெறியர்களைப் போற்றிக்கொண்டிருப்போமா?

“ஹிந்துஸ்தானில் இருக்கும் கழுதை, ஹிந்துஸ்தானை விட்டகன்று வெளி நாடுகளுக்குச் செல்லாமலிருப்பதால், அது ஹிந்துஸ்தான் பற்றிக் கனவு காணவேண்டிய அவசியமேயில்லை.” [மஸ்னவி, 4ஆம் புத்தகம், செய்யுள் 3069]

ரூமிக்கு உருகார் இப்பூமியில் இருக்கார், ஆம்!

என் போலி ஆன்மிக ஸூஃபித் தூக்கத்திலிருந்து நான் விழித்தெழுந்துச் சுமார் இரண்டு மாமாங்களாகி விட்டன. நன்றி.

(என் மொழிமாற்றங்கள் சுத்தசுயம்புக்கள் அல்ல; ஆனால் அவற்றின் குறிக்கோள், முடிந்தவரை மூலத்தின் சூழலை அப்படியே பிரதிபலிப்பது; மேலே ரூமியைப் படித்து நேரத்தை வீணாக்க, அவருடைய கண்றாவிகளை நேரடியாகப் படித்துக் கொள்ளலாம், நன்றி!)

-0-0-0-0-0-

என்ன சொல்கிறேன் என்றால்:

1. ஸூஃபிக்கள் என்றால் நாமெல்லாம் (பாரத இஸ்லாமியர்கள் உட்பட) ஆன்மிக மசுர்க்கூச்செறிந்து கொள்ளவேண்டிய அவசியமில்லை.

2. ஸூஃபிக்கள் மதமாற்ற வாதிகள்; இவர்களில் பலர், சாட்சாத் மதவெறியே பிடித்தவர்கள். கொடுங்கோல் தில்லி ஸுல்தான்களுக்கும் மொகலாயர்களுக்கும் துணை போனவர்கள். படு கேவலமானவர்கள். கோவில்களை இடித்து மஸூதிகளாக்கினவர்கள், பிற நம்பிக்கையாளர்களின் கொலைகளைச் சிரமேற்கொண்டு செய்தவர்கள். (கஷ்மீர/ஆஃப்கனிய வரலாறுகள், இவ்விதத்தில் ரத்தம் தோய்ந்தவை; ஏன், கோல்கொண்டா பீதர் அஹ்மெத்நகர் போன்ற பிரதேசங்களிலும்தான் இப்படிப்பட்ட பராக்கிரமங்கள் அரங்கேற்றப் பட்டன!).

3. ஆகவே, உங்களையும் என்னையும் போல, ஸூஃபிகளும் சாதாரண விருப்பு-வெறுப்புள்ள மனிதர்களே.

4. ஆனால் – நாம் அன்னபட்சிகள் போல அவர்கள் சொன்ன ‘நல்லவற்றை’ மட்டும் எடுத்துக்கொண்டு பிறவற்றைக் கடாசவேண்டிய அவசியமில்லை. ஏனெனில் அவர்கள் ‘மாதிரி மானுடர்கள்’ – நாமெல்லாம் அவர்கள் வழி ஒழுகுவதே அறம், அவர்கள் போற்றத்தக்க உதாரண புருஷர்கள் என நம்பிக் கொண்டிருந்திருக்கிறோம். ஆகவே, அவர்களைத் துப்புரவாகக் கடாசுவதே உத்தமம்.

5. சொல்லப்போனால் – ஸூஃபி ஸ்பெஷலிஸ்ட் ரூமி போன்றவர்களின் அட்டூழியங்களையும், அவர்களுடைய – பிற மதங்கள்/நம்பிக்கையாளர்கள் மீதான மாளாவெறுப்பினையும் கலவரத்துடன் பயபீதியில் மதச்சார்பின்மையுடன் ஒப்புக்கொள்ள முடிந்தால் –  நம் லோக்கல் நித்யானந்தா போன்றவர்களுக்கு சர்வ நிச்சயமாகக் கோவில் கட்டிக் கொண்டாடிக் கும்பிடலாம் – குற்றவுணர்ச்சியே தேவையில்லை, போங்கள்!

6. ஸூஃபிகளில் ஏன் உதாரண மங்கைகள் என ஒருவர்கூட  பரவலாக அறியப்பட்டவராக, போற்றத் தக்கவராக இல்லை என்பது நாம் யோசிக்கவேண்டிய கேள்விதான்! நம்மூர் மீரா-ஆண்டாள் போல ஏனங்கே மீருன்னிஸா, நூர்-பக்தின் ஆண்டலுஸியா ஸாஹிபா என்றெல்லாம் இல்லை? …??  (உடனே கூக்ள் செய்துவிட்டு கார்டோபாவின் ஃபாத்திமா, மார்ச்செனாவின் ஷம்ஸ், ஃபாத்திமா நிஷாபுரி, டமாஸ்கஸின் ஆயிஷா, நம் ஷாஜஹானின் செல்லமகள் (பெயர் எனக்கு மறந்துவிட்டது) போன்றவர்கள் இருந்தார்களே என்று சொல்லாதீர்கள் – அவர்களுடைய வரலாறுகள் ஸுன்னிகளாலும் (வஹ்ஹாபியத்தையே விடுங்கள்) ஷியாக்களாலும் இருட்டடிப்பு செய்யப்பட்டது என்பதற்கு அப்பாற்பட்டு, அவர்கள் பொருட்படுத்தத் தக்க ஸூஃபி ஞானிகளாக இருந்திருக்கவில்லை, கருதவும் படவில்லை என்பதுதான் வரலாறுகள் சுட்டுவது. இந்தப் பெயர்களுக்காக நீங்கள் கூக்ள் செய்யவேண்டிவந்ததே என் துணிபுக்கு ஒரு தரவு. இதுதாண்டா ஸூஃபிஸ்ம்!)

7. ரூமி போன்றவர்கள் போற்றத்தக்க, கொண்டாடத் தக்கவர்களானால், ஏன் நீங்கள், கடையோனாகிய என்னையும் கொண்டாடக் கூடாது?

8. மாறாக, ஜலாலுத்தீன் ரூமியின் ஆன்மிக, ‘மிஸ்டிகல்’ ஜொள்ளொழுகல்களை உங்களுக்கு வானுயரப் போற்றியே தீரவேண்டுமென்றால், ஊக்கபோனஸாக, குறைந்த பட்சம், அவருடைய அசிங்கமான இன/மதவெறியையும் அவருடைய இன்னொருபக்கமாக எடுத்துக்கொண்டு, அதனையும், நம் சகமனிதர்களில் ஒருவரான அவருடைய சாம்பல் நிறத்தின் அங்கமாகக் கருதி உய்யவும்.

நன்றி. :-(

19 Responses to “இதுதாண்டா ஸூஃபி! இவ்ளோதாண்டா ரூமி!!”

 1. Sivaaa Says:

  சூபிக்களின் மத மாற்ற நடவடிக்கைகள் வன்முறைக்கு துணை போனது குறித்தெல்லாம் ஏற்கன்வே அறிந்திருக்கிறேன்(காரணம் இந்த சூபிக்கள் எனப்படுபவர்கள் 90% ஸுன்னிக்கள் என்பது தான்). இருந்தும் அது இஸ்லாத்தின் ஆன்மிக பரிமாணம் என்றே கருதி வந்திருக்கிறேன். நீங்கள் குறிப்பிடும் தகவல்கள் குறிப்பாக அல் ஹிலாஜ் மன்சூர் கொலை குறித்தவை மிகவும் புதியது மற்றும் அதிர்ச்சி அளிக்கக்கூடியது. இது ஒரு புறமிருக்க தமிழ் நாட்டில் நாகூர் தர்கா உள்ளிட்ட தர்காக்கள் சார்ந்த சூபிஸம் ஒப்பு நோக்க வன்முறையற்றது என்றே நம்புகிறேன்.
  மீரா ஆண்டாள் போன்ற பெண் சூபி குறித்து கேட்டீர்கள்.
  Rabia al adawiyya அவ்வாறு தான் கருதப்படுகிறார்.


  • ஐயா சிவா, தங்கள் பின்னூட்டத்துக்கு நன்றி. முடிந்தவரை சுருக்கமாக பதிலளிக்கிறேன். ஒரு பதிவிலோ அல்லது பின்னூட்டங்களிலோ துப்புரவாக முடியும் விஷயமல்ல, இந்த ஸூஃபி ஆன்மிக வதந்திகளை எதிர்கொள்ளும் வேலை. ஏனெனில் காலங்காலமாக நம் வரலாறுகளில் பொய்மைகளும் சிடுக்குகளும் பிறழ்பார்வைகளும் வந்து சேர்ந்துகொண்டே இருக்கின்றன. இருந்தாலும், நம்மால் முடிந்தவரை பார்க்கலாம்.

   1. //சூபிக்களின் மத மாற்ற நடவடிக்கைகள் வன்முறைக்கு துணை போனது குறித்தெல்லாம் ஏற்கனவே அறிந்திருக்கிறேன்(காரணம் இந்த சூபிக்கள் எனப்படுபவர்கள் 90% ஸுன்னிக்கள் என்பது தான்). //

   துணைபோனது பின்னர்தாம். ஆனால், அவர்கள் மதரீதியான வன்முறையின் ஊற்றுக்கண்களாகவும் இருந்திருப்பதை, வரலாறுகள் சொல்கின்றன. சில எடுத்துக்காட்டுகள்:

   அ. பஞ்சாபின் நக்வஷ்பந்தி பரம்பரை ஸூஃபியாரான அஹ்மெத் ஸிர்ஹிண்டி (இவர் ஞானியாகப் போற்றப்படுபவர், இன்னாள் வரை!) சீக்கிய குரு அர்ஜன்தேவ் அவர்களை மங்கோலிய/மொகலாயர் ஜஹாங்கீர் கும்பல் படுகொலை செய்ததை ‘இஸ்லாமின் போற்றத்தக்க வெற்றி’யாக வர்ணித்தார்.

   ஆ. ஷைக் அல்-ஜுனைய்த் (பொதுயுகம் 8/9வது நூற்றாண்டு) எனும் பெரும்பேரும் புகழும் பெற்ற மூத்த ஸூஃபியார் சொன்னபடி, “இறைதூதரின் [மொஹெம்மத்] அடிச்சுவடுகளைப் பின்பற்றுபவதைத் தவிர, அனைத்து ஆன்மிகப் பாதைகளும் [ஸூஃபிகளுக்குத்] தடைசெய்யப்பட்டுள்ளன.” கவனிக்கவும்: இன்றுவரை இவர் சொல்வார்த்தை உலகளாவிய ஆன்மிக ஸூஃபியார்களுக்கு அமிர்தம். ஆகவே பிறபாதைகள் துச்சம், வெறுத்து ஒழிக்கத் தக்கவை.
   பாவப்பட்ட ஸுன்னிகளும் சரி, இன்னமும் பாவப்பட்ட ஷியாக்களும் சரி – ஸூஃபியார்களைப் பொறுத்தவரை இவ்விஷயங்களில் பேதமில்லை.

   2. // இருந்தும் அது இஸ்லாத்தின் ஆன்மிக பரிமாணம் என்றே கருதி வந்திருக்கிறேன். //

   ஹ்ம்ம். இஸ்லாம் X ஆன்மிகம் என்று இன்னொரு தொடரை தாங்கள் எழுத முடியுமா? (ஆனால், சிலபல விதிவிலக்கு அழகு முஸ்லீம்களையும் நான் தனிப்பட்ட முறையிலும் அறிந்திருக்கிறேன்; ஆனால் அவர்கள் தங்களை ஞானிகள் என்று சொல்லிக்கொள்ள வெட்கமும், தங்களை சர்வமத/தெய்வ மதிப்பாளர்கள் என வெளிப்படுத்திக்கொள்வதில் – பயமும் உடையவர்கள், என்ன செய்ய!)

   3. //நீங்கள் குறிப்பிடும் தகவல்கள் குறிப்பாக அல் ஹிலாஜ் மன்சூர் கொலை குறித்தவை மிகவும் புதியது மற்றும் அதிர்ச்சி அளிக்கக்கூடியது. //

   அவை வெறும் தகவல்கள் அல்ல. ஆணித்தரமான தரவுகள் பல உடைய வரலாறுதான். சுட்டியில் கொடுத்துள்ள லுயி மேஸின்யன் அவர்களின் புத்தகத்தைப் புரட்டலாம். (ஒரு ஆரம்பத்துக்காக)

   +அதிர்ச்சியடையவேண்டாம். எல்லாம் நார்மல்தான், என்ன செய்ய.

   4. //தமிழ் நாட்டில் நாகூர் தர்கா உள்ளிட்ட தர்காக்கள் சார்ந்த சூபிஸம் ஒப்பு நோக்க வன்முறையற்றது என்றே நம்புகிறேன்.

   நீங்கள் சொல்வது ஓரளவு உண்மைதான். ஆனால் தமிழக இஸ்லாமியச் சான்றோர்களை ஸூஃபிகள் என்று அழைக்கமுடியாது. ஸூஃபிகளுக்கு விதிக்கப்பட்டுள்ள பாரம்பரியங்கள் தமிழக தர்காகாரர்களுக்கு இல்லை. ஏன், நம்மூர் முஸ்லீம் இளைஞர்களே இந்த தர்காக்களை ‘பிணச் சாமிகள்’ வசிக்கும் இடங்கள் எனக் கேவலமாகச் சித்திரிப்பதைப் பார்த்திருக்கிறேன்.

   நக்வஷ்பந்தி, அஜ்மெர்கார சிஷ்டிகள், ஸுஹ்ரவர்திகள், கலந்தரி, ஃபிர்தௌஸி, மஹத்வி… …++  போன்ற வட இந்திய ஸூஃபிகள், ஏன் தென்னிந்தியாவின் பீதர்/ஹைதராபாத்-கர்நாடக பிரதேச கத்ரியா ஸூஃபியார்கள் கூட,  நம்மூர் தர்கா விஷயங்களை ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை என்பதை நேரில், என் சொந்த அனுபவத்தில் பார்த்திருக்கிறேன்.

   இவை ஒரு புறமிருக்க – அசல் தமிழக ஸூஃபிகள் என்று சொல்லலாமென்றால் – ஒருவேளை பழனிபாபாக்களும், கோவை வெடிகுண்டு மதானிகளும் அதில் சேரலாமோ என்ன எழவோ.

   இதைத் தவிர, முஸ்லீம் சமூகத்துக்கே கேடு விளைவிக்கும் தீவிர இஸ்லாம்வாத இளம் குஞ்சாமணிகளும் நிறைய பேர், நம் தங்கத் தமிழகத்தில் வளர்ந்துவருகிறார்கள் – இவர்களெல்லாம் வருங்காலத்தில் ஸூஃபிகள் எனக் கருதப் படலாமோ? (அதாவது ஸூஃபியார்களின் பாரம்பரியத்தின்படிதான்)

   இன்னொரு விஷயம்: காயல்பட்டினத்து எம்ஐ நூஹு என்பவர் 1962ல் ‘நான்கு ஆத்மஞானிகள்’ என தமிழக இஸ்லாமியச் சான்றோர்களைப் பற்றிய ஒரு புத்தகத்தை எழுதியுள்ளார். இதில் அவர் (எனக்குத் தெரிந்து, +நினைவிருப்பது, ஏனெனில் எப்போதோ படித்தது) ஒருமுறை கூட ஸூஃபி என்ற பதத்தை இச்சான்றோர்களைக் குறித்து விவரிக்க உபயோகிக்கவில்லை. (நூஹூ அவர்கள் குறிப்பிட்ட அச்சான்றோர்களெல்லாம் ஒருமாதிரி ஆன்மிகவாதிகளே!)

   இன்னமும் இதுகுறித்துத் தரவுகள் இருக்கின்றன. சட்டென்று என் குறிப்புகளைத் தேடியளிக்கமுடியவில்லை. மன்னிக்கவும்.

   என்ன சொல்கிறேன் என்றால் பீதருக்குத் தெற்கே நிறைய தர்காக்கள் இருக்கின்றன. அமோகமாக ஹிந்துக்களாலும் கொண்டாடப் படுகின்றன. ஆனால் அவை ஸூஃபி பாரம்பரியம்(!) உள்ளவையா என்பது சந்தேகமே. உங்களுக்குத் தெரிந்தால் சொல்லவும். கற்றுக்கொள்கிறேன். (தமிழகத்தில் இந்த  வேற்றுநாட்டு ஸூஃபி கும்பல் பொறுக்கிகள் செய்தத்தைக் குறித்துப் பின்னர் எழுதுகிறேன்)


   • + ரபியா அல் அதவியா பற்றிக் குறிப்பிட்டிருக்கிறீர்கள். இவரும், பாவம், நான் முன்னமே குறிப்பிட்டுள்ளது போல ஸூஃபி மகளிர் பொதுவிதி சார்ந்தவர்தாம். ரபியாவின் பிரதம சீடரும்  ஸூஃபி வெறுப்பியத்தின் ஊற்றுக் கண்களில் ஒருவருமான ஃபரிதுத்தீன் அத்தர் அவர்களின் – அம்மணி குறித்த கருத்துகள் சுவையானவை. ஆனால் இவை பற்றி அவசியமென்று பட்டால், பின்னொரு சமயம்…

 2. vijay Says:

  திரு இராம்,
  //மேலே குறிப்பிட்ட புத்தகங்கள்,உட்பட இஸ்லாம் பற்றி இதுவரை ஆழமாக எதுவும் படித்ததில்லை.அறிந்த,படித்த வரையில்,வன்முறையில்,வேறுஎந்த மதங்களும் புரிந்திராத மனித அழிப்புகளின் ஊடாக திணிக்கப்பட்ட மதமாகவே தெரியவருகின்றது.இது வரையிலும் நடைமுறையில் எனக்கு அப்படித்தான் தெரிகின்றது.இந்த மதத்தின் நான் அறியாத முகத்தை நீங்கள் தெரியப்படுத்தினால்,அறிந்து கொள்ளலாம்//.
  இது நான் முந்தைய பதிவிற்கு எழுதிய பின்னூட்டம்.இவர்கள் பற்றிய எனது கணிப்பு சரிதான் என்பதை உங்களின் இப்பதிவு உறுதி செய்கின்றது


  • ஹ்ம்ம். :-( ஐயா, கருத்துக்கு நன்றி.

   இச்சமயம், என்னுடைய முஸ்லீம் நண்பர்கள், அறிமுகங்களை நினைத்துக் கொள்கிறேன். சிடுக்கல் பிரச்சினைதான். அனுதாபம், கோபதாபம், ரத்தம் தோய்ந்த வரலாறுகள் இவற்றையெல்லாம் மீறித்தான் எதிர்காலம் உருவாகிவரவேண்டும். பார்க்கலாம்.

   ஆனால், எனக்குக் கல்விமேல் கொஞ்சம் நம்பிக்கை இருக்கிறது. தொழில் நுட்பங்கள் மீதும்.

   எது எப்படியோ, வரலாறு நம் அனைவரையும் விடுதலை செய்யக்கூட வேண்டாம் – தறுதலை செய்யாமலிருந்தால் போதும்.

 3. Sridharan Says:

  அன்பே வடிவான ஸூபிகளைப் பற்றிய விரிவான அறிமுகத்திற்கு நன்றி ஐயா! இவர்களைப் போல அனைத்தையும் அன்பின் வடிவாகக் கண்டவர்கள் எவருமிலர், இம்மண்ணில் உருவான தத்துவங்கள் முதல் ஜென் தத்துவங்கள் வரை அனைத்தையும் ஒருசேர ஸூபிகள் ஊதித்தள்ளிவிடுவார்கள் என்ற பிம்பம் காலம்காலமாக பரப்ப்பட்டுவருகிறது, பரவலாக நம்பவும்படுகிறது. அவர்களைப்பற்றிய உண்மைகளைத் தரவுகளுடன் தந்தமைக்கு நன்றி!(ஆம், உண்மையாகவே நீங்கள் ஏமாற்றிவிட்டீர்கள்!)


  • ஐயா, என்ன செய்வது சொல்லுங்கள். நான் ஒன்றும் அளவுக்குமீறி  இட்டுக்கட்டிச் சொல்லவில்லை.

   இப்பதிவில் எழுதப் பட்டவை எல்லாம் பதிக்கப்பட்ட, ஆவணபூர்வமான வரலாறுகளின் பாற்பட்டே இருக்கின்றன.

   ஆனால் நமக்குத் தான் கண்மறைப்புகள் அதிகமாக இருக்கின்றன.ஒன்றையும் தெரிந்துகொள்ளாமல் ஒன்றுமே நடக்காதமாதிரி ஒரு கஞ்சாப் படலத்தில் நடந்துகொண்டிருக்கிறோம். உண்மைகளைப் பண்புடன் சுட்டினாலே, ‘உனக்கு வெறி/வெறுப்பியம்’ எனக் கோபப் படுகிறோம், என்ன செய்ய, சொல்லுங்கள்?

   நமக்குத் தேவை, கல்வி. இதன் மூலமாக மட்டுமே நாம் ரத்தம் தோய்ந்த வரலாறுகளைத் தாண்டமுடியும்.

 4. K.Muthuramskrishnan Says:

  வெறுப்பு அரசியல் செய்கிறீர்கள் என்று கிளம்பி வருவார்கள். ரூமி. ரபியா கவிதைகளைப் படித்து விட்டு இருந்த மயக்கம் சற்றே குறைந்து


  • ஐயா, ஏற்கனவே வந்துவிட்டார்கள். மகிழ்ச்சிதானே!

   ஜிஹாதிப் பூனைகளுக்கும் நம் அயோக்கிய லிபரல்-இடதுசாரி பூனைக்குட்டிகளுக்கும் மணிகட்டுவது என்பது ஒரு முழு நேரத் தொழில்தானோ? ;-)

   என்னுடைய மாளா வருத்தம் என்னவென்றால், நவ காந்தியர்களும்கூட இந்த வெள்ளையடித்தலில் ஈடுபடுகிறார்கள், என்ன செய்ய.

 5. முகம்மது ரியாஜ் Says:

  இதுவரை வலைபூ படித்தேன். உங்களுக்கு இந்துவெறி அதிகமாயிடிச்சு. முஸ்லீம்ணாலே பொய் சொல்லுறிங்க. ரூமி பற்றி  நீங்க சொல்றது அத்தனையும் பொய் முதல்ல நாகூர்ரூமி படிங்க.  உங்களுக்கு சூபி மார்க்கம் பிடிக்கலை எண்றால் அது மோசமாயிடுமா? திருக்குர்ரான் படிச்சிருக்கீங்களா? நபிகள் நாயகம் (சல்)வரல்லாறு தெரியுமா

  இனிமேல் எனக்கு உங்கமீது நம்பிக்கையில்லை. நீங்களும் ஒரு சங்கிமங்கி. காவிவெறி தலைக்கு மேலே ஆயிட்டிருக்கு. மோடியும் ஷாவும் நீங்களும் சேர்ந்து நாட்டை ஒழிக்கறதுன்னு முடிவுல இருக்கீங்க. இனிமேல்


  • அன்புள்ள முகம்மது ரியாஜ்,

   உங்கள் கோபம் புரிகிறது – ஆனால் அதனை ஒப்புக்கொள்ள முடியாது. நீங்கள் இனிமேல் ஒத்திசைவைப் படிக்கப் போவதில்லை எனச் சொல்கிறீர்கள், அதுவும் பெரிய விஷயமில்லை – எங்கோ நன்றாக உடல்/மன ஆரோக்கியத்துடன் இருந்தால் சரி.

   இனி, உங்கள் ஆதங்கங்களுக்கும் குற்றச்சாட்டுகளுக்கும் வரலாம்.

   // உங்களுக்கு இந்துவெறி அதிகமாயிடிச்சு.

   இது உங்கள் கருத்து. எனக்கு ஒரு பிரச்சினையுமில்லை.

   // முஸ்லீம்ணாலே பொய் சொல்லுறிங்க.

   இல்லை. உங்கள் (நம்?) சமூகத்தை நினைத்து நிறைய வருத்தப் படுகிறேன், அவ்வளவுதான். சொல்லப்போனால் அலைந்து திரிந்து, தேடிப் பிடித்து, சண்டை போட்டு முஸ்லீம் இளைஞர்கள் குறைந்த பட்சம் 90 பேருக்கு நல்லவேலை வாங்கிக் கொடுத்திருக்கிறேன் – இதனால், அதே முஸ்லீம் இளைஞர்களால் எனக்கு ஏற்பட்ட பிரச்சினைகளைப் பற்றியும் விலாவாரியாக எழுதப் போகிறேன்.

   +என் தகப்பனார் வீட்டினை முஸ்லீம் ஒருவருக்கு வாடகைக்கு விட்டு அல்லல் பட்டிருக்கிறேன். பல குழந்தைகளுக்கு ஏதோ கல்விப் பயிற்சியும் அளித்திருக்கிறேன். ஆகவே, எனக்கு, முஸ்லீம் என்றாலே பொய் சொல்லவேண்டிய அவசியம் இல்லை. வெறுப்பும் இல்லை. இன்னமும் பல முஸ்லீம் நண்பர்கள் இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் படித்தவர்கள், பண்பாளர்கள். நன்றி. (மேலும் நீங்கள் எவ்வளவு ஹிந்துக்களுக்கு என்னென்ன இதுவரை செய்திருக்கிறீர்கள் (சமூக-நல்லிணக்கம் காரணமாக) அல்லது உங்கள் சமூகத்தின் மேன்மைக்கே எவ்வளவு செய்திருக்கிறீர்கள் என்பதை நீங்களும் நானும் அறிவோம். தயவு செய்து, ‘புண் பட்டது’ போல நடிக்காதீர்கள்!)

   // ரூமி பற்றி  நீங்க சொல்றது அத்தனையும் பொய் முதல்ல நாகூர்ரூமி படிங்க.  உங்களுக்கு சூபி மார்க்கம் பிடிக்கலை எண்றால் அது மோசமாயிடுமா?

   இல்லை. நான் சொன்னவை அனைத்துக்கும் அசைக்கமுடியாத, நேரடியான, உங்களாலுமே சரிபார்க்கக்கூடிய தரவுகள் இருக்கின்றன. மன்னிக்கவும்.  (சொல்லப்போனால் இன்னமும் பலப்பல இருக்கின்றன – ஆனால், நான் தான் இந்த ஸூஃபி/ரூமிகளின் மோசடிகளில் மேன்மேலும் அமிழ்ந்து வயிற்றில் அமிலம் சுரப்பதை விரும்பவில்லை)

   நீங்கள்தாம் ஒருமுடியும் ஆழ்ந்து படிக்கவில்லை.

   நாகூர்ரூமி அவர்களையும் படித்திருக்கிறேன் – ஆனால் அவருடைய அனைத்துப் புத்தகங்களையும் அல்ல. அவர் நல்ல மனிதராக இருக்கலாம் – ஆனால் எதிர்மறை விஷயங்களைக் கண்டுகொள்ளாமல் கமுக்கமாக வெள்ளையடிப்பிலும் அவர் நிபுணர். அவ்வளவுதாம். அவரவருக்கு அவரவர் பார்வை. அவர் எழுதியிருப்பதுதான் வரலாறு என ஆகாத்தியம் செய்தால்தான் பிரச்சினை.

   // திருக்குர்ரான் படிச்சிருக்கீங்களா? நபிகள் நாயகம் (சல்)வரல்லாறு தெரியுமா

   பலமுறை. பல தஃப்ஸீர்களுடன் படித்திருக்கிறேன். இதே கேள்வியை ஏன் இப்படித் திருப்பித் திருப்பிக் கேட்கிறீர்கள்? ஒவ்வொரு முறை நீங்கள் அவை குறித்து உளறும்போதும் தரவுகளுடன் பதிலளித்த பின்னமுமா இப்படி??

   எனக்கு மொஹம்மத் அவர்களின் ‘வரலாறுகளும்’ தெரியும்.  அப்படி ஒருவர் உண்மையிலேயே இருந்தாரா, அல்லது யேஸ்ஸு போல அவரும் கொஞ்சம்போல காம்பொஸிட்டாக ஜோடிக்கப்பட்டவரா என்பதும் கொஞ்சம் பிரச்சினை. மற்றபடி தற்போதைய மக்கா-தான் ஒரிஜினல் மக்கா-வா அல்லது வேறேதாவதா என்பதில் ஆரம்பித்து பலப்பல தரவுபூர்வமான சந்தேகங்கள். ஆனால், இவையெல்லாம் உங்கள் நம்பிக்கை பாற்பட்ட விஷயங்கள், அவ்ளோதான்.

   எனக்கு எப்படியும் ஒரு பிரச்சினையும் இல்லை. தேவையற்றுக் கிளறுவதிலும் ஆர்வமில்லை. ஆனால், என்னுடைய கோரிக்கை என்னவென்றால், என்னை அளவுக்கு மீறிச் சோதிக்காதீர்கள் – என் பொறுமைக்கும் எல்லையுண்டு.

   மற்றபடி – தங்களுடன் கொர்-ஆனின், ஹடித்களின், ஸுன்னாக்களின், ஸிராவின் எந்தக் கூறையும் – உங்களுக்கும் விருப்பம் இருந்தால், விவாதிக்கவே ஆசை. தங்களுடன் பலமுறை, பலசுற்றுகள் இவ்விஷயங்களில் வந்தாயிற்று. இருந்தாலும் பரவாயில்லை. பின்னர் உங்கள் இஷ்டம். (கொஞ்சம் யோசித்தால், இப்படி எழுதியபின்னர், எனக்குமே உங்கள்கூட அலுப்பாகிவிட்டது)

   //இனிமேல் எனக்கு உங்கமீது நம்பிக்கையில்லை.

   பரவாயில்லை.

   // நீங்களும் ஒரு சங்கிமங்கி. காவிவெறி தலைக்கு மேலே ஆயிட்டிருக்கு.

   மின்னஞ்சலிலேயே இதற்கும்மேல் எவ்வளவோ திட்டியிருக்கிறீர்கள். நான் உணர்ச்சிவசப் படவேயில்லை என்பதை உணரவும். தொடர்ந்து, முடிந்தவரை சாராம்சங்களுக்குப் பதிலளித்தே வந்துள்ளேன் என்பதையும். எப்படி இருந்தாலும், உங்களைப் போலல்லாமல் – உங்கள் திட்டலுக்குப் பதிலாக உங்களை இழிவு செய்யமாட்டேன், உங்கள் மதத்தையும் தேவையற்ற இழிசொல்பேசி பொச்சரிப்பை நிவர்த்தி செய்துகொள்ளமாட்டேன். இதுவரை செய்ததுமில்லை. ஏனெனில், உங்களைப் போலல்லாமல் நான் வளர்ந்த விடலையல்லன். என் திறமையில் நம்பிக்கையுள்ளவன். சுயமரியாதையுள்ளவன். ஓரளவு படிப்பறிவும் உடையவன். உங்களையும் மதித்து, இன்னாள் வரை பொறுமையாக உரையாடி வந்துள்ளவன்.

   ஆனால், எது எப்படியோ… அவரவர்க்கு அவரவர் வழி, புதைகுழி. உங்களுக்கு பஹ்ரைய்னில். அவ்ளொதான்.

   // மோடியும் ஷாவும் நீங்களும் சேர்ந்து நாட்டை ஒழிக்கறதுன்னு முடிவுல இருக்கீங்க.

   ஐயா! என்னை ஏதோ உயர்தர ரேஞ்சுக்கு உயர்த்துகிறீர்கள். நான் வெகுசாதாரணன் மட்டுமே. ஆனால் — தரவுகளில்லாமல், சரியான படிப்பு-வாசிப்பில்லாமல்,  வெறியும் தலைக்கேறி உளறுவதை இதுவரை செய்யாதவன். ஒன்று சொல்லவேண்டும், வரவர, உங்களுக்கு இது சுளுவாக வருகிறது. வாழ்த்துகள்.

   நன்றி. டாட்டா. பைபை.

 6. dagalti Says:

  இதுபோல கிடைத்தற்கரிய தகவல்நிறை இடுகைகள் வருமாயின், உங்களை தொடர் கொந்தளிப்பில் இச்சூழல் வைத்திருக்க பிரார்த்திக்கிறேன்.

 7. A.Seshagiri Says:

  என்னவோ போங்க கடைசியில் வெறுமைதான் மிஞ்சுகிறது.உண்மையில் இஸ்லாத்தில் வஹாபியர்கள்தான் கொடுமைகளுக்கு அஞ்சாதவர்கள் என நினைத்திருந்தேன்,அவர்கள் அமைதி மார்க்கம் அமைதி மார்க்கம் என்று தங்களைப் பற்றி அடிக்கடி கூறிவருவதால் ஸுஃபிக்களெல்லாம் அந்த அமைதி வழியை பின்பற்றுவர்கள் என்று நினைத்திருந்தேன்.மேலும் சில இனிய இஸ்லாம் நண்பர்கள் அப்போது கிடைத்திருந்தார்கள்.இப்போது தொடர்பிலும்இல்லை,அவர்கள் மாறிவிட்டார்களா என்பதும் தெரியாது.ஏனெனில் அந்த சமுதாயத்தில் பெறும்பாலோர் தற்போது மிகவும் மூர்க்கமாக மாறிவிட்டார்கள் என்பது போல் தெரிகிறது.ஆனால் ஒரு பெரிய சந்தேகம் + விடை தெரியாத கேள்வி கல்வியறிவு ஒரளவு கூடிய இக்காலத்தில் கூட இதை இவ்வளவு தீவிரமாக ஏன் பின்பற்றுகிறார்கள்என்பது தான்?


  • நன்றி, நாகமலையாரே.
   பொதுவான சரடுகள் குறித்துத்தான் எழுதினேன். ஆக, சிலபல விதிவிலக்குகள் இருக்கலாம். விரக்திக்கு அவசியமில்லை.
   இரானில் இன்னமும் பல கலைகள் மேம்படுத்தப்பட்டுத்தான் வருகின்றன (சில சமகால ஸாஹித்யங்களைக் கேட்டால் கண்ணீர் தளும்பி விடுகிறது), அயதொல்லாஹ்களின் ஆகாத்தியத்தையும் மீறித்தான் இது நடக்கிறது. ஆனானப்பட்ட வஹ்ஹாபியவெறி ஸவூதி அரேபியாவில் கூட சில (சில மட்டும்தான், இருந்தாலும்) குறிப்பிடத்தக்க செழுமைகள் நடக்கின்றன.
   இருந்தாலும், நிலைமை ஓரளவு கவலைக்கிடம் எனத்தான் சொல்லவேண்டும்.ஏனெனில் நம் பாரதத்தில் இதற்கெல்லாம் முட்டுக் கொடுப்பது போல முஸ்லீம்களைத் தேவையேயற்று உசுப்பிவிட்டுப் பின்னர் பற்றியெரியும் தீயில் குளிர்காய்வது அவர்கள் சமூகப் பெருந்தலை அயோக்கியர்களுக்கும் பிற இடதுசாரி, அறிவுஜீவிய,  ஊடகப் பேடிகளுக்கும் வெல்லம். படிப்பறிவுள்ள முஸ்லீம் இளைஞர்களின் பாடு (என் பார்வையில்) கொஞ்சம் கஷ்டம்தான்.

   ஆகவே பாரதத்தில் கொஞ்சம் மேலதிகப் பிரச்சினை.அதே சமயம், ஜஹாங்கீர் ஷாஜஹான் அக்பர் ஔரங்க்ஸெப் திப்பு பாஹ்மனி/மதுரை ஸுல்தான்கள் (இப்படியே சுமார் வரை) தாங்கிய சமூகம்தான் பாரதம். (முட்டுக் கொடுக்கிறேன்)
   பார்க்கலாம், உலகம் எப்படி விரிகிறதென்று – எப்படியும் நம்மையும் மீறித்தான் அது நடக்கும்போல.

   முக்கியமாக: நான் ஒருவன் எழுதியதைப் படித்து மனக்கிலேசம் அடையவேண்டா. பிறரையும் படித்து மனத்தைத் தேற்றிக் கொள்ளவும். இதில் சககிழட்டு முட்டாள் கருத்துலகக் குண்டர்கள் வேறு கூத்தடிக்கிறார்கள். (அண்மைய எடுத்துக்காட்டு: இந்திரா பார்த்தசாரதி)

   அமைதியடைய கீழ்கண்ட அழகுகளைப் பார்க்கவும்.


   நஸீம்-உல்-மொல்க் மஸூதி – ஷிராஸ்


   குர்திஸ்தானின் துலாப் கிராமம்


   குர்திஸ்தானின் உரமன் (‘அஹுராவின் நிலம்’) கிராமம்

   நல்ல இசை கேட்கவேண்டுமானால், சொல்லவும் – முடிந்தவரை உதவுகிறேன். எதிர்காலத்தில் நம்பிக்கை வைக்கவேண்டாமா?

 8. Raj Chandra Says:

  The Darkening Age புத்தகம் மற்றும் பல தரவுகளைப் படிக்க ஆரம்பித்ததிலிருந்து மத சம்பந்தமாக, யாராவது புகழப்பட்டால், அவரின் நிழல் என்ன சொல்கிறது என்று பார்க்க ஆரம்பித்துவிட்டேன். அதனால் உங்கள் பதிவில் எந்த செக்யூலர் அதிர்ச்சியும் இல்லை (தவிர, தரவுகளோடு இருக்கும்போது அதிர்ச்சிக்கு அங்கே என்ன வேலை?!).

  ஆனால் புல்லே ஷா போன்றோரின் பாடல்களின் (எனக்கு பஞ்சாபி தெரியாது, அவ்வப்போது பாடலின் வார்த்தைகளுக்கு அகராதி பார்த்து சொல்ல வந்ததை ஒரு மாதிரி புரிந்து கொள்வேன்) உருக்கத்தை அனுபவிக்கும்போது ‘இப்படியெல்லாம் இருக்காது’ என்றும் தோன்றும்.

  (நீங்க போன பதிவில் குடுத்த பில்டப்-க்கு நான் வேறுவிதமான பதிவை எதிர்பார்த்தேன் :)))


  • ஆ! கேத்தரீன் நிக்ஸி அம்மையார்!

   ஐயா ராஜ்சந்த்ரா, கருத்துக்கு நன்றி. நான் சொன்ன மேற்கண்டவைக்குப் பொதுவாக விதிவிலக்குகள் இல்லை.

   ஆனால், ஸூஃபியானா கலாம் ((பெரும்பாலும்) நெக்குருகும் இசை) என்பது வேறு. இந்தக் கலாம் நம் ஏபிஜெ அப்துல்கலாம் அவர்கள்போல.

   ஸூஃபிகளுடன் இதனைக் குழப்பிக் கொள்ளமாட்டேன், எடுத்துக்காட்டாக மைஸூர் X மைஸூர்போண்டா.  இட்லி X குஷ்பு.

   இசை உள்ளிட்ட மஹாமஹோ கலைகளும் அறிவியல்/தொழில் நுட்பங்களும் நம்மை விடுதலை செய்யுமாமே? அப்படியா என்ன? ;-)

 9. அல் பசினோ Says:

  ரூமி மனசு ரொம்ப roomie என்று கேள்விபட்டிருக்கிறேன்!தனது பத்து வயதுக்கு உட்பட்ட மகளை(அவர்கள் வழக்கம் போல) ஏதோ ஒரு கெழ போல்டுக்கு நிக்கா பண்ணி குடுத்து பிறகு வருந்தி அழுது புலம்பி(கண்டிப்பா மனித புத்திரன் பாணியில் அதுக்கொரு வசன கவிதய எடுத்து விட்டிருப்பார் )யதாக எங்கோ படித்த நினைவு!இந்த இசைப்புழுதி சூபிக்களை வாழ்த்தி பாடும் பாடல்களை தமிழ் சினிமாவில் திணித்து மற்றொரு சாதனை புரிந்துவருகிறார்!(மவுலா கால் வலீம்)


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s