வளர்மதி சிகாமணி, ராமானுஜம் நரஸிம்ஹன், பரமசிவம் மதியழகன், ஜான் விக்டர், பாரதீய கணிதம் – சில குறிப்புகள்

16/03/2020

நம் தங்கத் தமிழகத்தில், திராவிடர்களின் காத்திரமான போங்களிப்புகளையும் மீறி, அப்படியும் இப்படியும் கொஞ்சம் நம்பிக்கை கொடுக்கும் விஷயங்கள் நடக்கின்றனதான்.

இவற்றில் சிலவற்றை அறிந்துகொள்ள வாய்ப்பு கிடைத்திருப்பதில் கொஞ்சம் சந்தோஷமே. :-)

–0-0-0-0–

1987-88 காலகட்டங்களில், நான் உலோகக் கலவைகள் உருக்கி வார்க்கப்பட்டு திடமாக்கப்படுவது குறித்த (IHCP – Inverse Heat Conduction Problem) எனும் சுவையான மசுர்ப் பிளப்புகளில் ஈடுபாட்டுடன் வளையவந்துகொண்டிருந்தேன். பரிசோதனைகள், பர்டர்பேஷன் எனப்படும் அலைக்கழிக்கப்படுதல் வகை அணுகுமுறைகள், எஃப்டிஎம் வகை ந்யூமெரிக்கல் அனலிஸிஸ், ஃப்ரேக்டல்கள், அனலாக் துணுக்குகளை விதம் விதமாகத் திரட்டுவது, அவற்றை டிஜிட்டல் துணுக்குகளாக மாற்றுவது (இது குறித்த 8+16 பிட் ஹார்ட் வேர் டப்பா உருவாக்கம் – இப்போதெல்லாம் இவை பெரிய்ய விஷயங்களே அல்ல, ஆனால் அப்போது அப்படியிருந்திருக்கவில்லை), கணிநி டப்பா தட்டுவது (பாஸ்கல்+ஸி மொழிகள், சில நேரடி மெஷின்மொழி நிரல்கள்), சாதா ஆடியோ கேஸட்டுகளில் (நம் செல்ல ‘அந்தக் காலத்து’ ஒலிப்பேழைகள்தாம்!) துணுக்குகளை சேமிப்பது, துணுக்குகளை வைத்து ஸிமுலேஷன்களை உருவாக்கிப் புளகாங்கிதம் அடைவது என விரிந்து, என் வாழ்க்கையில் சுமார் 18 மாதங்களைக் கபளீகரம் செய்த நாட்கள் அவை!

அச்சமயம் – இந்த மாடலிங் நிரல்களை எழுதும்போதுதான் தான் நான் டிஃபரென்ஷியல் கால்குலஸ் எனும் ‘வகையீட்டு நுண்கணிதம்’ வகை எழவின் மூலமாக அனுபூதி நிலையை அடைந்தேன். அச்சமயத்திலிருந்து அவ்வப்போது இந்த நுண்கணிதப் பித்து முளைக்கும், பின் ஆனந்தமாகத் தூங்கப்போகும்.

மூன்று நான்கு ஆண்டுகளுக்குப் பின் 1990களின் ஆரம்பத்தில், இந்தக் கால்குலஸ் அழகின்ஊற்றுக்கண்களின் பாரதீய அடிப்படைகளை அறிந்துகொள்ள சந்தர்ப்பம் வாய்த்தது. மேலும் – அவை தடுத்தாட்கொள்ளப்பட்டு’மேற்கத்திய மயம்’ ஆக்கப்பட்டவை என்பதையும் அறிந்துகொண்டு திகைத்தேன். (பாரதத்திலிருந்துதான் அனைத்தும் சென்றன எனச் சொல்லவரவில்லை, ஆனால், நம் பாரம்பரியப் பங்களிப்புகளை நாம் மறந்துவிட்டு, நம் புத்தகங்களில் வெளியார்/சான்றோர்களின் பெயர்களை மட்டும் குறிப்பிடுவது, நம்மைக் குறித்து நாமே அறியாமல் தாழ்வுணர்ச்சி கொள்வது என்பவையெல்லாம் வரலாற்று ரீதியாகவே கூடச் சரியில்லை என்பது என் எண்ணம், தேசபக்தி சமாச்சாரங்களையே விடுங்கள்!)

ஏனெனில் – ஏறத்தாழ நடு1980கள் வரை, நான் இந்திய அறிவியல், கணிதம், தொழில் நுட்பம் தொடர்புடைய பாரம்பரியங்கள் பற்றியெல்லாம் (ஒரு மசுரும் அறிந்திருக்கவில்லை என்றாலுமேகூட) ஒரு இளக்காரத்தனத்துடன் தான் இருந்தேன். இது என்னைக் குறித்து நான் வெட்கப்படும் விஷயம்தான். ஆனால் அவை உண்மை. (இது பற்றி ஓரிரு முறை இந்த ஒத்திசைவெழவில் எழுதியிருக்கிறேன்கூட)

ஹ்ம்ம்ம்…

அதுமட்டுமல்ல, ஜார்ஜ் பூல் (‘பூலியன் அல்ஜீப்ரா’ அழகை வடித்தெடுத்ததாக நம்பப்படுபவர்), டிமொர்கன் (‘இன்டக் ஷன்’ எனும் உய்த்தறிந்து புரிந்துகொள்ளல் முறை தர்க்கரீதியை உருவாக்கியவர் என அறியப்படுபவர்) சார்ல்ஸ் பேப்பேஜ் (‘முதலில்’ ஒரு கணிநி யந்திரந்தை வடிவமைத்ததாக நம்பப் படுபவர்) போன்றவர்களின் மேதமைக்கான ஊற்றுக்கண்கள் யாவை என்பதைப் பற்றியும் புரிந்துகொள்ள வாய்ப்புகள் கிடைத்தன. ஆனால் அவற்றைப் பற்றிக் குறிப்புகள் எடுத்துக்கொண்டேனே தவிர ஒன்றும் எழுதவில்லை.

ஆனால் சிலகாலம் முன் ட்விட்டர் பக்கம் போனவுடன் ஓரிரு முறை இவற்றைப் பற்றிச் கடுகுக் குறிப்புகளை எழுதியிருக்கிறேன்: ஒன்று, இரண்டு.

…இவற்றைப் பற்றி விரிவாக, முடிந்தால், அதுவும் அவசியமானால், பின்னொரு சமயம் எழுதுகிறேன்.

-0-0-0-0-0-0-

ஆனால், இப்பதிவை எழுத ஆரம்பித்தது – கீழ்கண்ட புத்தகத்தை இரண்டு நாட்கள் முன் புரட்டியதனால் ஏற்பட்டது. ஏதோ பர்டர்பேஷன் தொடர்பான சிறுஇழவினை மேலதிகமாகப் புரிந்துகொள்ள தேடிக்கொண்டிருந்ததில் ஒரு கல்லூரி நூலகத்தில் இப்புத்தகத்தைப் பிடித்தேன்.

சபாஷ்.

வளர்மதி சிகாமணி, ராமானுஜம் நரஸிம்ஹன், பரமசிவம் மதியழகன், ஜான் விக்டர் எனும் இந்தியர்களும், திருஷ்டிசுற்றிப்போடுவதற்காக ஒரு வெள்ளைக்காரரும் (?? ஜான் மில்லர்) சேர்ந்து எழுதியுள்ள இந்தப் புத்தகத்தில் சிலபல தரமான அணுகுமுறைக் கட்டுரைகள் இருக்கின்றன. வளர்மதி அவர்களுடைய பர்டர்பேஷன் குறித்த ஆய்வுக்கட்டுரையை முழுவதும் படித்தேன். பிடித்தமானதாக இருந்தது. பிறருடைய கட்டுரைகளைப் புரட்டினேன். (பிரச்சினை என்னவென்றால் – இந்த ஆவலில், நண்பர் ஒருவருக்கு 7மணிக்கு மேல் தொலைபேசுவதாக இருந்து, ஆனால் அதைத் துப்புரவாக மறந்தேவிட்டேன் – என்ன செய்வது!)

இப்புத்தகம் வந்திருப்பதில் எனக்கு மஹா திருப்தி.

(இந்த ஆராய்ச்சிகளைப் பிறர் செய்திருக்கிறார்களா, இது முதல்தரமானதா, இது முதன்முறையாக வெளிக்கொணரப்பட்ட ஆராய்ச்சி முடிவா என்றெல்லாம் எனக்குத் தெரியாது; அதற்கேற்ற பின்புல அறிவில்லை. ஆனால், என்னைப் பொறுத்தவரை, இவை பரவாயில்லை என்பதில் எனக்கு மாற்றுக்கருத்தில்லை; அதாவது என்னாலேயே(!) ஓரளவுக்குப் புரிந்துகொள்ளமுடிந்தது, அவ்வளவுதான்!

(மேலும், நம்மூரில் முன்னெடுக்கப்படும் ஓரளவுக்காவது தரமான முயற்சிகளைக் குறித்து நாமே ஒரு மசுரையும் பேசாமல் இருந்தால், #கீழடி போன்ற அடிப்படைகளற்ற அற்பத் தினவெடுத்தல் குறித்த புளகாங்கிதங்கள்தாம் நமக்கு ஸாஸ்வதம்.

“கீழடியில் நாம் அந்தக் காலத்திலேயே புடுங்கிய நாகரிக மசுரை”ப் பற்றிப் பேசியே திராவிட முட்டிமைதுனம் செய்துகொள்வதால் ஆய பயனென் கொல்?  ஜல்லிக்கட்டு கில்லிதாண்டு கிட்டிப்புள் கதாநாயகிகளின் தொப்புள் என்று பேசி அற்ப எழுச்சிகளைப் பெறுவதால் என்ன லாபம், சொல்லுங்கள்?

ஏகோபித்து உளறிக்கொட்டுவதற்கு மாறாக, நாம் உண்மையிலேயே செய்யும்/செய்த நல்ல (போற்றத்தக்க என்பதையே விடுங்கள், ஒப்புக்கொள்ள முடிந்தால் போதும்!) விஷயங்களைப் பற்றித் தரவுகள் ரீதியாக நாம் எப்போது பேசத் தொடங்கப் போகிறோம்? கேள்விகள், கேள்விகள்…)

-0-0-0-0-0-

சரி.

2015 ஜனவரியில், நம் திருச்சியில் – யூஜிஸி, உயர்கணிதத்துக்கான தேசிய ஆணையம் (University Grants Commission + National Board for Higher Mathematics) இணைந்து கொடுத்த நிதியில் நடத்தப்பெற்ற ஒரு கான்ஃபரன்ஸ்/விழாவில் சமர்ப்பிக்கப்பட்ட கணித ஆராய்ச்சிகளின் ஆவணங்கள் – இப்புத்தகத்தில் இருக்கின்றன.

இந்த ஆராய்ச்சியாளர்கள், பெரும்பாலும் திருச்சியின் பிஷப் ஹீபர் கல்லூரிக்காரர்கள். ராமானுஜம் மதுரைப் பல்கலைக்கழகத்தவர்.

அனைவரும் மேலே செழித்து வளர, நேர்மையாகவும் மேன்மை மிக்கதாகவும் ஆராய்ச்சிகளைச் செய்து பதிப்பிக்க என் வாழ்த்துகள்.

ஆக – இன்னமும் பாரத ஆன்மாவில், கல்லூரிகளில் சிறிதளவாவது – இந்தத் தரம்+மேன்மை குறித்த முன்னெடுப்புகள் – குறிப்பிடத்தக்க அளவில் இருக்கின்றன என எடுத்துக்கொள்ளலாமோ. மகிழ்ச்சிதரும் விஷயம்தான். :-)

அல்லது ‘எங்கேடா என் கஞ்சா‘ என முடியுமா இது?

-0-0-0-0-0-0-0-

பிரச்சினை என்னவென்றால் – நம் தமிழகச் சூழலில் நாம் அதிசராசரித்தனத்தையே பேணி வளர்க்கிறோம்.

ஆனால்.

தாங்கொணா அளவில் திரைப்படம், ஊடக ஜிகினா, போக்கற்ற அரசியல், பின்நவீனத்துவ மசுர்ப்பிடுங்கித்தனம், போராளிக் குசுவிடல்கள், அலக்கிய உளறிக்கொட்டல்கள், சமூக நீதி மண்ணாங்கட்டித் தெருப்புழுதிகள் பற்றி மட்டுமே வாயோயாமல் வாந்தி எடுத்தே பழக்கப்பட்ட நம் திராவிடத் தமிழ்ச் சூழலில், நல்ல விஷயங்களையும் – முக்கியமாக, நமக்கு நம் எதிர்காலத்தைக் குறித்த நம்பிக்கை தரும் விஷயங்களையும் அறிந்துகொள்ள வேண்டுமல்லவா?

ஐயய்யோ! இப்படியே போனால், நாம் உருப்பட்டே விடுவோமோ?

பயமாக இருக்கிறதே!

;-)

8 Responses to “வளர்மதி சிகாமணி, ராமானுஜம் நரஸிம்ஹன், பரமசிவம் மதியழகன், ஜான் விக்டர், பாரதீய கணிதம் – சில குறிப்புகள்”

 1. Sridhar Says:

  நான் பிஷப் ஹீபர் கல்லூரி சென்ற காலத்தில் பல நல்லாசிரியர்கள் இருந்தனர். Prof. கிருஷ்ணமாச்சாரி, Prof. இருதயராஜ், மற்றும் விஜயன் கனகராஜ், ராதா தியாகராஜன் என்று சிலர் இன்னும் நினைவில் இருக்கிறார்கள். Hope their legacy continues.

  On Mon, 16 Mar, 2020, 08:05 ஒத்திசைவு… ओ̸̡̰̥̠̬̯͕̫̭̰̾͑̓̀͂̀͝͡थ्̡̱̻̺͍̹̳̜̫͇͓͙͍̗͕̋͌͑̇͌̔̑́͐͗̂̒̕͜͝थ̶̨̢̡̤͔̞͌̋͑͌̌̔̕͝͝ि̴͖͚̥̜̗̂̒̍͆̓͌̊̐̾स̢͕̺̫͇̙̱͋̽͗̅̏͜͟ै̴̧̬̺̪̗̼̜̎͆̋̄͑͌व̢̞̤͙̹͇̓́̌̈́̄ु̶͖̭̯̼̲̱͍͓͙̋͌̔́̄̈́̚͞͡ . . . o̵̦͓̜̠͉̔̿͋̾̐̿́͘͠͞ t̨̰͍̺̯̥̲͓̺́̇̈́͒͆̾̍͡͠ͅ h̡̧̪̬̗̘̯͒͌̀̋̋̔̓͗̐͘͢ͅ ī͓̼̙̻͙͛̀̋̿́́̉͠ š̢̬͙̲̘̥̐̑̆̐̔͘ a̛̛̺̱͈̭̳̞͖̪̔̐̈̾͂̚̚ i̵̧̱͕̥̺̯̫̻̼͗̈́̔̾͐̔́̏͑́ v̗̣͈̭̩͖͓͚̝̔̂̾̌͜͝ ư̴̱͖͔͌̾̓̽̈͘͜͜ͅ . ., wrote:

  > வெ. ராமசாமி posted: “நம் தங்கத் தமிழகத்தில், திராவிடர்களின் காத்திரமான > போங்களிப்புகளையும் மீறி, அப்படியும் இப்படியும் கொஞ்சம் நம்பிக்கை கொடுக்கும் > விஷயங்கள் நடக்கின்றனதான். இவற்றில் சிலவற்றை அறிந்துகொள்ள வாய்ப்பு > கிடைத்திருப்பதில் கொஞ்சம் சந்தோஷமே. :-) –0-0-0-0– 1987-8” >


  • :-) வாழ்க்கையை ட்ரியோ ட்ரியோ என ஓட்டிக்கொண்டு செல்வதில் நம்பிக்கைகள் முக்கியம்தான்.

   எல்லா இடங்களிலும், சுமார் ~10% கருத்துகள்/மக்கள் ஒப்புக் கொள்ளக்கூடிய அளவில் இருக்கும்/இருப்பர் என்பது என் லோகானுபவத்தில் ஒரு பாலபாடம். (ஏன், உலகத்திலேயே படுமோசமான திராவிட-ஜிஹாதி-இவாஞ்ஜெலிக்கல் கும்பல்களிலும்கூட 0.001% இப்படித் தேறலாமோ என்ன எழவோ!)

   ஆனால் இந்தக் குறுஞ்சதவீத அன்பர்களைக் கண்டுகொள்வதற்குக் கூட, நுகர்வோர்களாகிய நாம் பிரம்மப் பிரயத்தனம் செய்யவேண்டியிருக்கிறது, என்ன செய்ய! (+ probably it is high-time, folks in the know, who have even some sense/semblance of excellence in a given field (or fields), started recording their ideas/recos and thoughts – what do you think?)

   ஆனால் — கமலகாசன் போராளிக்குசுவிட்டார், ரஜினி (இன்னொரு முறை) கர்ஜினி செய்தார், இசுடாலிர்/வீரமணி/சீமார் பகிரங்கமாக மேடையில் திராவிட முட்டிமைதுனம் செய்தார், வொளறிக் கொட்டினார் என்றே பேசுவதுதான் படு ஈஸி. என்ன செய்ய. இவற்றுக்கெல்லாம் தரவுகள் கோடிக்கணக்கில் கொட்டிக் கிடக்கின்றனவேறு!

   பொதுவாகவே நம் தமிழர்கள், வெகு சுளுவாக திருப்தியடைந்துவிடும் ஜாதிகள், இல்லையா? :-(

 2. Sivaaa Says:

  ஏன் வட இந்தியாவில் இது போன்ற முன்னெடுப்புகள் நடைபெறுவதில்லை? இங்கே முன்னெடுக்கப்படுவதற்குக் காரணம் ஓரளவு அறிவார்ந்த திராவிட பின்னணி தானே?


  • ஐயா, கேட்டதற்கு + கருத்துகளுக்கு நன்றி.

   ஆனால், ஒப்புக் கொள்ளமாட்டேன். முடிந்தபோதெல்லாம் நான், தரவுகளின் மீது கட்டமைக்கப்பட்டு பாரதத்துக்கும், முக்கியமாக நம் தமிழகத்துக்கும் ‘பேட்’ (bat) செய்வதை, வக்காலத்து வாங்குவதை – விரும்புபவன்; ஆகவே எழுதினேன்.

   பிற பாரதப் பகுதிகளில், தமிழகத்தை விடப் பலப்பல மடங்கு ஆழமும் வீரியமும் கொண்ட ஒரிஜினல் ஆராய்ச்சிகள் பல (மைக்ரொபயாலஜி, இயற்பியல், வரலாறு, புவியியல், கணிநியியல், வடிவமைப்பு, புள்ளியியல்++ என +++), பல இடங்களில் நடக்கின்றன என்பதை நேரடியாக அறிவேன்.

   அதே சமயம், தமிழகத்தில் – பாரதத்திலேயே மிகமிக உயர்ந்த அளவுக்கு உயர்கல்வி(யிலும்) அசிங்கமான போங்காட்டம், தொடர் திருட்டுத்தனம் நடைபெறுவதை அறிவேன் – எழுதியிமிருக்கிறேன். இதைவிடக் கேவலமான விஷ(ய)ம் ஒன்றில்லை!

   தமிழகத்தில் உயர்கல்வி – ‘பிஹெச்டி’க்களும் பரிதாபங்களும் :-( 03/04/2019
   https://othisaivu.wordpress.com/2019/02/07/post-938/

   புதுக்கல்லூரியின் அஹ்மது ஜுபைர், பாரதத்தில் அரேபிய தாக்கம், மதறாஸா கல்வி, அமோக அட்ச்சிவுடல் – குறிப்புகள் 07/02/2019
   https://othisaivu.wordpress.com/2019/02/07/post-938/

   நன்றாக இருக்கும் ஒருசில கேஸ்களையும் ஓரளவுக்கு, என் பார்வைக்கு வந்தவரை அறிவேன். (எடுத்துக்காட்டாக – மீன்களின் பாற்பண்பு பற்றி ஆய்வு செய்த அழகான தவமணி ஜெகஜ்ஜோதிவேல் பாண்டியன் ++ பற்றி – <https://othisaivu.wordpress.com/2018/12/02/post-914/ )

   நான் கண்ணில் விளக்கெண்ணை விட்டுத் தேடித்தான் தமிழகத்து அகழ்வாராய்ச்சிகளைப் பற்றி எழுதுகிறேன்.

   தமிழகத்தின் கல்விசார் மேல்நிலை(!) என்பது அதிசராசரிக் கயமை திராவிடத்தையும் மீறித்தான் எழும்புவது.

   That is, whatever a few (very very few) good things that have happened to higher education in our Tamilnadu – have happened NOT because of Dravidian movement, but IN SPITE of it. Thanks!

   நன்றி.

 3. Raj Chandra Says:

  I think Ms. Valarmathi Sigamani was my Applied Maths teacher when I studied in Bishop Heber. She is now HOD.


  • :-) Sir, I do not know any of them personally/directly.

   Guess they are funda. If this book is a sampling of their pudding, they must be, yeah?

   It would be great if Tier2 cities like Trichy, Salem become (eventually) tech/innovation hubs. Future of TN (and Bharat) is predicated on great start-ups and materialization of ideas, whaddaya think.

   (psst, pass me that joint…)

   No, seriously.

   • Raj Chandra Says:

    It is possible with some of the quality faculties in Trichy(don’t know about Salem). In BHC Maths and Physics departments are the best and I used to be in awe of some of the professors in those departments and sighed why mine had the mediocre. When I was there, they finished M.Sc. in Maths and then took a year diploma course in Computer Science to get a better future (if you call it). Hopefully that fever is gone now and do some real work based on the majors they are taking.

 4. jay673 Says:

  If I am right, Mrs. Valarmathi taught us an ancillary maths paper in 1990/91 as part of my BSc Physics course.

  The Physics department had people like Mr. P Ramakrishnan, Mr. A Devadoss, Mr. G.Immanuel Mohandoss and others who were the reason for my continued interest in the subject, not to forget Prof J.S.P.Ebenezer, who was the HOD.

  BHC in those days was under Bharathidasan University and had a reputation then ( despite students like yours truly :-D ). It is autonomous now and glad to see that the standards continue.


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s