கொரோனா வைரஸ்ஸிடமிருந்து கூடத் தப்பிவிடலாம், ஆனால்…

19/03/2020

…இந்த கோவிட்19 வைரஸிடமிருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்வது எப்படி, இது எப்படிப் பரவுகிறது, இனி என்னாவாகும் டட்டடா டட்டடா

… …என, சர்வதிக்குகளிலிருந்தும் செய்தித் துணுக்குகளைக் கண்டமேனிக்கும் தலையோ வாலோ அல்லது மூளையோகூட இல்லாமல், சேகரம் செய்து ரவுண்டு கட்டிக்கொண்டு அடிக்கும் கழுத்தறுப்பு அறிவுரையாளக் கிருமிகளிலிருந்து, கருத்துதிர்ப்புக் கேவலர்களிடமிருந்து, சர்வநிச்சயமாகக் கதிமோட்சமேயில்லை.

(பெரும்பேராசான் ஜெயமோகன் அவர்கள் நம்மேல் கருணை வைத்தால், இக்கிருமிகளானவை, செய்திசேகர் (s/o குலசேகர்) குலத்தைச் சார்ந்தவை என மோனியர்வில்லியம்ஸ் வியாக்கியானம் கொடுப்பார்)

…அனுபவித்துக்கொண்டேதான் சொல்கிறேன், சிரிக்காதீர்கள்!

-0-0-0-0-

நேற்றுவரை வைரஸ் என்றால் எஸ்ராமகிருஷ்ணத்தனமாக ‘வயிற்றின் நாம்’ என்கிற முழிபெயர்ப்புத் தமிழளவில் கூட அறியாமல் இருந்தவர்கள், திடுதிப்பென்று எல்லாம்தெரிந்த ஏகாம்பரேஸ்வரர்களாகிப் படுத்தும் பாடு தாளமுடியவில்லை.

ஒத்திசைவு மூலமாக மட்டுமே அறிய நேர்ந்த அன்பர்கள் என்றால் பரவாயில்லை. எப்படியும் அவர்களை நேரில் பார்க்கப்போவதில்லை, ஆக, இங்கிதம் மண்ணாங்கட்டி தெருப்புழுதி மசுரெல்லாம் தேவையில்லை என்கிற தைரியத்தில் சவட்டி எடுத்துவிடலாம் – அல்லது கண்டுகொள்ளாமல் அகன்றுவிடலாம்.

ஆனால் சொந்தக்கார* முட்டாக்கூவான்களையும், எருமை நண்ப தண்டக்கருமாந்திரர்களையும் பொறுத்துக் கொள்ளவே முடியவில்லை. ஒரு படிப்பும் வாசிப்பும் இல்லை, சொந்த மூளையை உபயோகித்தும் வருடக்கணக்காகிவிட்டது – ஆனால் கருமாந்திர சிரத்தையாக வெட்டி வாட்ஸ்அப் குப்பைகளை அனுப்பவேண்டியதுதான் கடமை. தரித்திரங்கள்.

[*ஜீன்கள், க்ரொமஸோம்கள் வழியாகவும் புத்திசாலித்தனம் ஸ்வீகரிக்கப்படலாமாம்… ஆனால் எனக்கு இந்த மரபணுவியல் ஜெனெடிக்ஸ் வகையறா மேல் நம்பிக்கையே போய்விட்டது! எனக்கு எப்படி இவர்கள் உறவினராக இருக்கமுடியும்? பணிவுடன் சுயதம்பட்டமில்லாமல் ரோசிக்கிறேன்… ;-) ]

தாமிரப் பாத்திரத்தில் தண்ணீர் குடித்தால் கொரானா வராது.

பூண்டை அக்குளில் வைத்துக்கொண்டால் சுகாதாரம்.

எதுக்கும் ஸேஃபா இருக்கலாமேன்னிட்டு பத்து டஜன் மாஸ்க் ஆர்டர் செஞ்சிட்டேன். (இதில் ஸ்ரீரங்கத்தில் இருக்கும் சககிழடார் ஒருவர், அமெரிக்காவில் டாய்லெட் பேப்பரை பதுக்கும் கோலாகலங்களைக் கேள்விப்பட்டு, தேவையேயில்லாமல் ஒரு குசுவையும் புரிந்துகொள்ளாமல் ‘அமெரிக்கா காரன் செஞ்சால் சரியாத்தான் இருக்கும். நமக்கு இப்ப புரியாட்டாலும் அப்புறம் (!) புரியும்’ மூன்று டஜன் ரோல், அமேஸானில் வாங்கியிருக்கிறார். அவர் மூஞ்சில என் பீச்சக் கைய வெக்ய.’)

இன்னொரு இடதுsorry அன்பர் – வயது 75+ ஆகியும் விவேகமில்லை. இன்னமும் ஸ்டாலினுடையதைப் பிடித்துக்கொண்டு அப்படியொரு தொங்கல், குஞ்சறு நிலை, என்ன செய்ய. இவர் பார்வையில் ‘கொரோனா வைரஸ் ஒரு அமெரிக்க- இஸ்ரேலிய சதி; சீனாவின் கம்யூனிஸத்தை(!!) நேரடியாக எதிர்கொள்ளாமல், இப்படி ஐந்தாம்படை வேலை செய்கிறார்கள்.’

யோவ் இதற்கெல்லாம் என்னய்யா ஆதாரம் வெச்சிருக்கீர் எனக்கேட்டால், மார்க்ஸிஸ்ட் மந்திகளின் வழமையேபோல இன்னொருகிளைக்குத் தாவி, “அது மட்டுமல்ல, கொள்ளைலாபம் அடிக்க நினைக்கும் பன்னாட்டு மருந்து நிறுவனங்களும் இதில் அடக்கம், கூட்டணி வைத்திருக்கிறார்கள்!”
நன்றி. இந்த தண்டச்சோற்றுப் போராளி உண்டிக்குலுக்கி  வினவுக்கும்பல் கடையை மூடியதற்கும் அமெரிக்க-இஸ்ரேல் பன்னாட்டு நிறுவனச் சதிதான் காரணம் எனப் பிலாக்கணம் வைக்காமலிருக்கிறார்களே, இந்தச் சனியன்கள், என ஆசுவாசமடையவேண்டியதுதான்!

இந்த இரண்டாம் எருமை நண்பப் பிரிவில் – சிலபல பேலியோ மூடர்களும் உண்டு –  அதுவும், அதிலும் இருக்கும் ஒரு அதிமுட்டாக்கூ உபபிரிவான ‘வீகன்(!) பேலியோ(!!)’ குண்டர்கள், தொப்பை பெருத்த பிள்ளைத்தாச்சிகள் – இன்னமும் மோசம்! இந்த மஹாதண்ட நாயகர்களின் கூற்று: ‘பேலியோ(!) காலத்தில் இந்தக் கொரானா வைரஸ் இருந்திருக்கவில்லை! அதற்கும் ‘பேலியோ’ உணவுமுறைதானே காரணமாக இருக்கவேண்டும்?’ – அறிவிலிகள், நேரில் பார்த்ததுபோல் அப்படியொரு படுதெகிர்ய அழிச்சாட்டியம்.

சிரிப்பை அடக்கமுடியாமல், தப்பித் தவறி ஏதோ பதில் கேள்வி கேட்கப் போய், அவரிடம் இன்னொரு தரவை வாங்கிக் கட்டிக்கொண்டேன், பெருமையுடன் அவர் பேலியோவின் பராக்கிரமத்தை விரித்தது இப்படி: “அந்தமான் நிக்கோபாரில் பேலியோகால பழக்கங்களை உடைய ஜார்வாக்கள் இருக்கிறார்கள். இந்தியாவிலேயே இதுவரை அவர்களை மட்டும்தான் கொரானா வைரஸ் அட்டாக் செய்ய முடியவில்லை. இதிலிருந்து உனக்கு என்ன தெரிகிறது?”

ஹ்ம்ம்? எனக்கா?? ‘பேலியோ தண்டச் சோற்றுத்  (/மாமிச) தடிராமன்களுக்கு, முதலில் மூளையென ஒன்று முதலில் இருந்தால் அதுவும் உடனடியாகத் தூக்குப் போட்டுக்கொண்டு போர்க்கால ரீதியில் மோட்சத்தை அடைந்துவிடும் என்பது?”

(இந்த நியான்டர்தல் முட்டாப்பரதேசிகளை இன்னொரு முறை கவனித்து ஆவன செய்யவேண்டும்)

இதில் ஒருவரின் மகள் அமேரீக்காஆஆவில் (‘ஸ்டேட்ஸ்’) குப்பை கொட்டிக்கொண்டிருக்கிறார். அவருக்கு ஒரு கைக்குழந்தைவேறு.  வசிப்பது கேடுகெட்ட, என்ஆர்ஐ கழுதை கெட்டால் குட்டிச்சுவரான ந்யூஜெர்ஸியில். அன்பருக்கு திகில், புத்துருக்குக் குட்டிப் பேத்தியைக் கொரோனா கொள்ளை கொண்டுவிடுமோ?

+ஊக்கபோனஸாக, சுயநலப் பேய்களான அமெரிக்க என்ஆர்ஐகளின் வழமையே போல, அன்பரின் மனைவியும் (65+)  ‘பொண்ணுக்கு உதவிசெய்ய’  அமேரீக்காஆஆவில் இலவசமாக அடிமைத்தொழில்… அன்பர் புலம்பல். ‘அவளுக்கும் ஆர்த்ரிடிஸ், எவ்ளோ கஷ்டப்பட்றா! அவள வாக் கூட போகவிடமாட்டேன்றா என் பொண்ணு… பேத்திக்கு தொத்திக்கினு கொரோனா வந்திடும்னு பயம்… …’ கேட்டுக்கொண்டேன்.

நானும் என்னால் முடிந்த அளவில் ஆசுவாசப் படுத்த முயன்றேன். +ஆதூரமாக நாலுவார்த்தை சொல்லவும்.

நல்லவர்தாம். ஆனால் திடீரென்று அவருக்குத் தோன்றியது, படபடப்பு ஆர்வத்துடன் அவர் சொன்னது – “அப்ப, இந்த  வைரல்லா பரவுதுன்னு நெட்ல சொல்லுவாங்களே – அதிலேந்துதான் இந்த கொரோனா இப்டி பரவறதுனால வைரஸ்னு சொல்றாங்களா?’ என்பது போல.

இந்த ட்யூப்லைட்களுக்கு ஒத்திசைவில் என்ன வேலை, சொல்லுங்கள்? என்னத்தப் பட்ச்சி என்ன மசுரைப் புரிந்துகொள்கிறாரோ, தேவுடா!

இந்தக் கும்பலில் கூடக் கூத்தடிக்க, அன்புக்கும் ஆச்சரியத்துக்குமுரிய ஒரு நெடுநாள் இஸ்லாமிய அன்பர் வேறு, படு ஸீரியஸ்ஸாக: “அல்லாஹ்வைச் சரணடையுங்கள், கொரானாவாவது, மொரானோவாவது! ஒரு பிரச்சினையும் இல்லை.” பதிலுக்கு, ‘முதலில் உங்கள் செல்ல ஸவூதியின் மக்கா காபா கல்லை நிர்வகிக்கும் முல்லாகாரர்களுக்கு அதைச் சொல்லுங்கள், அவர்கள் எல்லாவற்றையும் அடைத்துமூடி ஒளிந்துகொண்டிருக்கிறார்களாமே’ என நான் கிண்டல் செய்தால், சுணக்கம். ‘வரவர நீங்க ஆன்மிகம்னாலே கிண்டல் பண்றீங்க.’

ஆமாங்க, உங்க பார்வைல, ஆன்மிகம் என்றால் முட்டாக்கூத்தனம். ஆனாக்க, எனக்கு அப்டி இல்லை. நன்றி.  (இதை மனதுக்குள் சொல்லிக்கொண்டேன் – அவரிடம் மேலும் பேசவில்லை. பொறுமை காத்தேன். ஏனெனில் இவர் மகன் எனக்குப் பிடித்தமான சிஷ்யகேடிகளில் ஒருவன் –  இனி எவ்வளவு நாட்களுக்கு என்பது தெரியவில்லை எனினும்!)

அவர் தன் முயற்சியில் மனம் தளராது தொடர்ந்தார். “அப்துல்கலாம் இப்ப நம்பகூட இல்லை. அவர் மட்டும் இப்ப உசிரோட இருந்தா, இந்த கொரோனா வைரஸ்ஸுக்கு மருந்து கண்டுபிடிச்சிருப்பாரு. பெரிய்ய ராக்கெட் செஞ்சி வானத்துல வுட்ட அவருக்கு இந்த துக்கிணியூண்டு வைரஸ் ஒரு பெரிய விஷயமாவே இருந்திர்க்காது இல்லயா?”

:-( [வாயடைப்பு] எப்டீல்லாம் மாத்தீ ரோசிக்கறனானுவோ.

நல்லவேளை, எனக்கு (இதுவரை) அதீத வெறிபிடித்த க்றிஸ்தவ அன்பர்களின் அறிமுகம் இல்லை – இருந்திருந்தால் அவர்களும் ‘யேஸ்ஸுவைச் சரணடை பாவியே! கர்த்தரானவர் கொரோனாவைக் கொத்துபுரோட்டா வெச்சிசெஞ்சி ஸ்தோத்தரித்து பரிசுத்தம் பண்ணுவார்’ எனச் சொல்லியிருப்பார்களோ என்ன எழவோ.

-0-0-0-0-

மற்றபடி, ஒத்திசைவைத் தொடர்ந்து வேலைவெட்டியற்றுப் படிக்கும் சகஏழரைகளுக்கு என் அன்பான ஆசிகள்:

நீங்க அல்லாரும் கொரோனாவைரஸ்ல ஐயோன்னு போவீங்க்டா, பாவீங்க்ளா!

வொங்ககிட்டேர்ந்து தப்பிக்க இனிமேக்காட்டி நானு ரெண்டு வெஷயம் பண்ணப்போறேன்…

1. ஈமெயிலு, ஃபோனு, இண்டெர்னெட்டு, அல்லாத்தையும் யிம்மீடியட்டா ஸ்விட்சாஃப்.

2. ரெண்டு முழு ஷட்டில்காக் புர்க்கா வாங்கிக்கினு அத்தப் போட்டுக்கினுதான் வூட்டவுட்டு வெள்ல வரப்போரேன்.

பொறம்போக்கு நாயிங்க்ளா, இப்டீ என்ன ஸெய்ய வெச்சிட்டீங்க்ளேடா!

:-(

பிற்சேர்க்கை: கீழ்கண்ட மூவரில் ஒருவர்/ஒன்று உண்மையாகவே ஒரு மேன்னக்கின். மாடல் பொம்மை. மற்ற இருவரில் ஒருவர் அடியேன். நான் யார் என்றுச் சரியாகக் கண்டுபிடித்தால், உங்களுக்கு வைரலாக ஒரு கோவிட்19 வைரஸ் இலவச ஆஃபர். (அப்டியே அள்ளிக்குங்க!)

போனஸ் ஆஃபர்: மீதமிருப்பவர்களில் யார்/எது மேன்னகின் எனக் கண்டுபிடிப்பவர்களுக்கு, எனக்கு ஒரு ஐந்து நிமிடம் போல, கோவிட்19 குறித்து அறிவுரை வழங்க டோக்கன் வழங்கப்படும்.

வரிசையாக வரவும்.

நன்றி.

 

17 Responses to “கொரோனா வைரஸ்ஸிடமிருந்து கூடத் தப்பிவிடலாம், ஆனால்…”

 1. Raj Chandra Says:

  All-in-all-expert பா. ராகவன் எழுதப்போகும் கொரோனா அறிவுசார் (?!$#&%) புத்தகங்கள், கடலூர் சீனு அழுகைப் பதிவுகளைப் படிக்க (புரண்டு அழுது எழுதினால்தான் ஆசான் தன் வலையில் பதிவு செய்வார் என்று புரளி) மனதை இப்போதே தயாராக்கிக் கொள்ளவும்.  


  • யோவ்! :-)

   அந்தக் காலத்தில் இரவில் காவல்ரோந்து போகிறவர்கள், ‘பாரா உஷார்’ என்று உரக்கச் சப்தம் எழுப்பிக்கொண்டு செல்வார்கள். (இது களவாணிகள் தற்காலிகமாக கப்சிப்பென்று ஒளிந்துகொள்வதற்காக இருக்கலாம்)

   நீங்கள் உரக்கச் சொல்கிறீர்கள்! நாங்களும் மாட்டிக்கொள்ளாமல் இருக்க ஒளிந்துகொள்கிறோம். நன்றி.

   [இருந்தாலும் நடுக்கமாக இருக்கிறதே, என்ன செய்ய! :-( ]

 2. A .Seshagiri Says:

  “பாராஉஷார்” ஜோராக இருக்கு !மற்றபடி படத்தில் இடது ஒரத்தில் இருப்பவர்தான் நீங்கள்!

 3. A.Seshagiri Says:

  இந்த இலுமனாட்டி கம்னாட்டியின் (ஹீலர் பாஸ்கராம்) அயோக்யத்தனத்தை பாருங்கள்!

 4. Em Says:

  Hi Ram,
  I think a mutant of Corona called “Stupida/idiota” has afflicted people’s brains making them spew even more nonsensical stuff than usual. It spreads mainly through social media. One person told me that the Indian govt is creating this panic to to suppress the CAA protests. When asked what CAA has to do with all the other countries, he said maybe thay all have stuff to hide from their own people. I couldn’t bang my head because I was in a moving vehicle(also because I have not been affected by this new virus).

  Dude, where is my Nobel?(for my discovery).

  Saha 7&⁰⁰1/2s, please stay safe and more importantly, sane.

 5. Navinkumar L Says:

  Hi Ram,
  “+ஊக்கபோனஸாக, சுயநலப் பேய்களான அமெரிக்க என்ஆர்ஐ”

  Few of Othisaivu 7 1/2 are அமெரிக்க NRI . Hope you are not labeled them

  – Navin


  • Sir, thanks for the cautionary note. I very well know this. There are significant exceptions to the ‘சுயநலப் பேய்’ general rule. But, they are only exceptions. They are in the categories of stellar entrepreneurs, academics, respected citizens or even ordinary good folks who go about doing their work. They are not disposables in the society nor are insecure and do not consider themselves so, in any context.

   And these exceptions may or may not include all of about a whopping 1.5 (!) NRI people unfortunate enough to regularly read this blog. (Am guessing here – but, all I can say is that, if folks read this blog continuously – in fact, I do read this blog fairly regularly ;-) – then there is a certain openness to ideas, though they may not all be palatable; they may not agree with all of what is said. They may not like the random ‘humour’ and the use of language and ‘lewd’ comments, but still… the willingness on their part to get a regular exposure/dose to randomness itself may qualify them to be exceptions. But you must also understand that I like my weed. Oru Weedu, oru ulagam etc.)

   But sir, I also very personally know of/about many, many such ‘general rule’ சுயநலப் பேய் folks – classmates (30+ years now), professional co-workers (25+ years now) and quite a few casual acquaintances over the years.

   I also have a few relatives who fit the ‘endlessly selfish’ general rule. They are the entitled scum on earth. Over a period of many years, I have completely cut myself off from most of this general rule category. Not that I am completely an impolite moron, or an arrogant bastard even, I still have meaningful conversations even with strangers, I still correspond politely to a few people that are in touch with me – but it is just that, certain categories of people that fit my stereotype of சுயநலப் பேய், completely turn me off.

   (At this point, you have correctly guessed that, I just cannot have many friends of relatives. Congratulations. My Weedu, my ularal.)

   So.

   I also do not pretend that I am a conscience keeper or epitome of ethics. I do not claim that I am unbiased. I am a package of a bunch of things, desirable and undesirable. But I do not want to be completely irresponsible – this is because am not a leftist or a liberal. I try to work on provable, evidence based ‘facts’ and build a narrative. I do not pass off rumours as my wisdom – am always willing to correct myself or examine myself if things are pointed out. (and writing a blog-journal is not my prime mode of being/living my life, thankfully!)

   Again, one advantage of being a public journal-keeper like an insignificant-me is that, to the extent that one is capable of, one can speak one’s mind without bothering about whether someone would get ‘hurt’ if one writes something.

   For me self-respect is more valuable than being respected.

   To elaborate on my point of சுயநலப் பேய் reference or the ‘general rule’ if you will, they go on somewhat like this.

   1. They are good at gaming the system and exploiting it to the hilt.

   2. They are nett consumers than providers of anything good to society. (I would dare say that, they are eminently dispensable & disposable)

   3. They exploit the convenient parts of individualistic notions of existence (say in USA), and the ‘vasudaiva kutumbakam’ parts of Indicness – but without giving anything tangible in return to any of them, they exploit things for their selfish ends.

   4. They exploit their families in India (including their parents) as runtime libraries – which they use to the hilt, and send to garbage clearance mechanisms, whatever that it left of the processing of the poor libraries.

   5. Many of this category are mediocre at best, even in their respective fields – but just because they have reached ‘States’ they think that they are something special. And, the way the pontificate on things in which they have negative expertise on, oh my! Oh, the illusions.

   That’s it for the time-being. Gotta bake my bread.Do the dishes. And, work in the garden. Yesterday, it rained rather beautifully in our area. It is a delightful morn. Lotsa Pakshijaalam. Gotta take a few books out from the library – to read during the morrow’s ‘Bharat Citizens’ Curfew.’

   Please. BFN.

   As always, YMMV.

   Hugs:

   __r.

 6. Navinkumar Lognathan Says:

  Dear Ram
  I always say to Very few folks Ram is Ram

  I could not agree with you more , about சுயநலப் பேய்

  I am trying my best not be like that but I am not exception

  With love
  Navin


  • Yov! Please do not spread rumors. 🙏🏿

   (முடிந்தால் தொடர்ந்து, மண்டையில் அடித்துக்கொண்டு வேண்டாவெறுப்பாகப் படிக்கவும்!)

   🐸

 7. Ramesh Says:

  Any virus thrives on the glucose present in the bloodstream.And from where does the blood get glucose?From carbs and sugar.So in Keto we avoid carbs(<20gm) and sugar.By eating fats and protein and veggies alone we stop the spike in glucose level hence the insulin level too.The fat we eat is directly converted to ketones which provides energy hence avoiding the glucose to energy path(If u don't believe me take a teaspoon full of Coconut oil empty stomach and just avoid eating anything else!U feel the energy is enough to go through a day). Once we starve the virus of glucose it will die eventually!So instead of unnecessarily blabbering on topics you don't know why don't you restrict yourself to asaan thrashing?


  • 🙏🏿 Sir, Ramesh! You made my day! “Any virus thrives on the glucose present in the bloodstream.”

   REALLY? And is there something called necessary blabbering?

   You have now conclusively proved that, even when one merely writes some desultory/thought-free stuff about this Keto/Paleo nonsense, something happens to the penthouse of the body.

   OTOH, if you were merely co-trolling the Paleo idiots, you are most welcome.
   🐸


 8. full disclosure note: This Ramesh is different from the two other Ramesh folks who occasionally hop over to this blog – and uses many aliases (even on this blog) but I do not want to go into that.

  However, this gent is also used to dropping casteist/casual slurs, oh what to do. Diversity?

 9. Ramesh Narayanan Says:

  Hey Ram,
  நான் அவனில்லை


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s