பேலியோ, கீடோ அடிப்பொடிக் குஞ்சாமணிகளுக்கு…

23/03/2020

…ஒரு சவால். (ஏனெனில் உங்கள் அறிவிலித்தனமான கொசுக்கடி பொறுக்கமுடியாமல் போய்க்கொண்டிருக்கிறது!)

நானாக உங்களை வம்புக்கு வலிக்காமல் இருந்தாலும் நீங்களே உங்கள் முட்டாள்தனத்தை, படிப்பறிவின்மையை, புளுகுபுளுகாக அட்ச்சுவுடும் தன்மையைப் பறைசாற்றிக் கொள்கிறீர்கள். ஓரிரு மின்னஞ்சல்களுக்குப் பதிலளித்தால், அவற்றைக் கண்டுகொள்ளாமல்  மறுபடியும் மறுபடியும் உங்கள் பேலியோ பிணங்களைத் தூக்கிக்கொண்டு முருங்கை மரத்தில் ஏறும் வேதாளர்களாக மாறிவிடுகிறீர்கள்… சோப்ளாங்கி தண்டப் பேலியோ தடிகீடோன்களாக வேட்டையாடல் புஜபலம் காண்பிக்கிறீர்கள் அல்லது கார்ப் ஸ்டார்ச் இல்லாமல், விரைகளை/தானியங்களை உண்ணாமல் மாமிச ப்ரொட்டீன் ஃபேட் க்ளூகோஸ் ஆலிவ் ஆய்ல் வெண்ணெய் இந்த மசுரையெல்லாம்தான் அக்காலத்தில் உண்டார்கள் என ஒர்ரே ஆகாத்தியம், தேவையா?

இந்த அழகில் உங்கள் கும்பலில் ஐக்கியமாகியிருக்கும் ஒரு நபர், வைரஸ்களுக்கு ரத்தத்தில் உள்ள க்ளூகோஸ்தான் உணவு என்கிறார். எந்த மண்டையை எந்தப் …ண்டையில் மோதி நசுக்குவது என்றே புரியவில்லை. இவ்ளோதாதானாடா வொங்களோட மூள??

முந்தைய பேலியோ எழவு குறித்த பதிவுகள்:

வோத்தாடேய்! இன்னொரு தபா எங்கிட்ட பேலியோ டயட்டுன்னிட்டு வந்தீங்க, ங்கொம்மாள, கொன்னே புடுவேன், கம்மினாட்டிங்களா… 25/11/2016

உப்புமாவோயிஸம்29/11/2016

பேலியோ ஜிஹாதிகள்13/12/2016

பேலியோ டயட் எழவு – சில மேலதிகக் குறிப்புகள்15/12/2016

ஜல்லிக்கட்டு, ஜல்லியடித்தல், ஜல்லிக்கட்டுடைத்தல் – சில குறிப்புகள் (+ கொஞ்சம் பேலியோடயட் கோமாளிகள் பற்றி) (பாகம் 1/2)21/01/2017

சமூகவளைத்தலப் பெருச்சாளிக் கூவான்களின் நெடிய பாரம்பரியமும், தொடரும் அவதாரங்களும்…07/03/2017

ஹைய்யா! பேலியோவெறிமுதல்வாதத்துக்குப் பிறகு… புத்தம்புதிய…07/04/2017

மாரடைப்பு வர காரணிகள் – ஒரு பேலியோ அலசல் 15/09/2017

-0-0-0-0-0-

ஒரு தன்னிலை விளக்கம்: நான் சாகபட்சிணி. + பால் (காஃபி!), தயிர் விரும்பி. ஆனால் மாமிச உணவை (=பிறர் உண்பதை) வெறுப்பவன் அல்ல. அவரவருக்கு அவரவர் வழி, இது சுதந்திரபூமி என விட்டுவிடுவேன். ‘அன்றன்றுள்ள அப்பம்‘ – படத்தை (Our Daily Bread(2005)) மனக்கிலேசத்துடன் விரும்பவன் என்றாலும்.

மேலும், நான் உங்களைப் போல கடையில் பேலியோ கருமாந்திரங்களை வாங்கி (=வேட்டையாடி(!) விளையாடி(!!)) உணவை வாங்கி உண்டு மினுக்குபவனல்லன். என்னால் என் குடும்பத்துக்குத் தேவையான உணவை விளைவிப்பதற்குத் தேவையான ‘தில்’லும், அனுபவமும், சக்தியும் இருக்கிறது. இருந்தாலும் உங்களைப் போல பேடித்தனமாகப் பேசமாட்டேன். மேலும் உணவைப் பற்றியும் அதன் அறிவியலையும், வரலாறுகளையும் ஓரளவு அறிவேன்.

என் பிரச்சினை – பேலியோ மதமாற்ற வெறியர்களான நீங்களே ஓடிவந்து என்மேல் விழுவதால்தான். மற்றபடி நீங்கள் பேலியோ ஜாலியோ என ஏகோபித்து உளறுவதில் எனக்கு ஒரு பிரச்சினையும் இல்லை. நீங்கள் பேலியோ சாப்பிட்டால் என்ன, ஃபேஸ்புக்கில் பைஸெப்ஸ் ஸிக்ஸ்பேக் அப்ஸ் படம் போட்டுக்கொண்டால் என்ன, நரகல்லை நக்கினால் என்ன, எனக்குக் கவலையில்லை. சரியா? (இப்படி என்மேல் வெறி நாய்போல விழுந்து பிடுங்கினாலொழிய – பொதுவாக உங்களுடைய பேத்தல்கள் திராவிடப் பேச்சுவகைதானே என விட்டுவிடுவேன் – ஆனால்… மிகவும் படுத்துகிறீர்கள்… அதனால்தான் இந்த இரண்டாம் சுற்று)

பேலியோ உணவு என நீங்கள் பஜனை செய்யும் அரைகுறைத்தனத்துக்கு, அது பேலியோ(!) காலத்தில் ஏகோபித்து உலகளாவி இருந்தமைக்கு – அதையே விடுங்கள், இக்காலத்தில் இந்த எழவுதான் மானுடர்களுக்கு ஏகோபித்து ஒத்துவரும் என்றாவது  – எந்த ஒரு விதத்திலாவது, அகழ்வாராய்ச்சி, தாவரவியல், மிருகவியல், மானுடவரலாற்றியல், பரிமாணவியல், புவியியல்,  மானுடஉடற்கூறுவியல், நுண்ணுயிரியல், உணவுப் பரிணாமவியல்,  ஊட்டச்சத்து நுட்பங்கள், உணவு அறிவியல் – ஏன் சாதா பொதுஅறிவியல் பொதுப்புத்தி சார்பாகவே கூட  +++ +++ ரீதியாக ஒரேயொரு ஒப்புக்கொள்ளப்பட்ட, சரிபார்க்கக்கூடிய சான்றாவது, ஒரு ருசுக் குசுவாவது இருக்கிறதா? பெரிதாக உளற வந்து விட்டீர்கள்.

உங்களுக்கு ஒரு ஹோம்வர்க்.

இந்தப் பேலியோ டயட் எழவு தொடர்பாக – மஹாமஹோ க்றிஸ்டினா வாரின்னர் (ஒக்லஹாமா பல்கலைக்கழகப் பேராசிரியர்) + மஹாமஹோ காதரீன் மில்டன் (பர்க்லீ பல்கலைக் கழகம், பேராசிரியர்) – இவர்கள் இருவருடைய தரவுகள் சார்ந்த பேச்சுக்களுக்கான சுட்டிகள் கீழே:

(Christina Warinner) Anthropologist Debunks the Paleo Diet: https://www.youtube.com/watch?v=FNIoKmMq6cs

(Katharine Milton) Discusses Evolution and the Human Diet: https://www.youtube.com/watch?v=YoOCazy29tM

(இவை இரண்டையும் அக்கப்போருக்காகக் கூடப் பார்க்கவேண்டாம், அவற்றின் நேர்மையான, அறிவியல்பூர்வமான தரவுகளுக்காகவும் குமிழியிடும் நகைச்சுவைக்காகவும் கூடப் பார்க்கலாம்; இவ்விரண்டு அம்மணிகளும் சொல்வதென்னவென்றால் – நம் முன்னோர்களும் அவர்களின் முன்தோன்றி உயிரினங்களும் பெரும்பாலும் சைவ உணவைத்தான் உண்டார்களென்றும், அதற்காகத்தான் அவர்கள் பரிணாம வளர்ச்சியில் பலகூறுகள் தெரிவு செய்யப்பட்டன என்றும்…)

-0-0-0-0-0-

பேலியோ குண்டர்களே! தற்கொலைப் படைச்சிரங்குகளே!

இவற்றின் உள்ள பலப்பல மிகச்சுவையான பேலியோ உடைத்தெடுப்புகளில் – ஒன்று, ஒன்றேயொன்றுக்காவது – தரவுகள் சார்ந்து, சரியான பதிலளிக்க முடியுமா?

இல்லையேல், வொங்க வொடம்புல கீற அத்தினி ஓட்டையையும் மூடிக்கினு ஓடுங்கடா, அற்பனுங்களா…

இதுபோதாதென்றால் ஒரு 12-15 மிக ஆழமான, பேலியோ மோசடியை உடைக்கும் ஆராய்ச்சிகள், தரமான முடிவுகள் இருக்கின்றன. மேற்கண்ட (ஓரளவுக்கு எளிமையான) யூட்யூப் வகைகளை நீங்கள் பார்த்து அதில் சுமார் பாதிக்கு நேர்மையான (உங்கள் விலாங்குமீன் போல வழுக்கும் பேலியோ வெண்ணையைத் தடவாமல்) பதிலைத் தரமுடியுமானால், இவற்றில் தேவையானவற்றைத் தருகிறேன்.

அவற்றுக்கும் பதிலளிக்கமுடியுமானால், நானே பேலியோ பக்தனாகிவிடுகிறேன்.

அதுவரை எந்த பேலியோ ஜென்மமும் கீடோ கிருமியும் பின்னூட்டமும் அளிக்கவேண்டாம், மின்னஞ்சலும் அனுப்பவேண்டாம். இனிமேலும் உங்களைப் போன்ற தண்டக் கருமாந்திரச் சோம்பேறித் தொப்பைமிகு முட்டாக்கூக்களுடன் பொறுமையாக உரையாடவெல்லாம் முடியாது என்கிற இறும்பூது அளிக்கும் நிலையை சென்றடைந்துவிட்டேன்.

-0-0-0-0-

போங்கடா, போக்கத்த பேலியோ மண்டையனுங்க்ளா. (அல்லது) வொங்க மூக்குல கோவிட்19 வைரஸ்ஸ யேத்திவுட்டுக்கினு ஸாவுங்கடே!

நன்றி.

 

20 Responses to “பேலியோ, கீடோ அடிப்பொடிக் குஞ்சாமணிகளுக்கு…”

 1. Navin Says:

  Dear Ram,

  Would you able to share those links. ( 12-15 மிக ஆழமான, பேலியோ மோசடியை உடைக்கும் ஆராய்ச்சிகள்).

  I am already in war with some of the Polio folks

  Thanks
  Navin

 2. Navinkumar L Says:

  Dear Ram,

  Would you able to share those links. ( 12-15 மிக ஆழமான, பேலியோ மோசடியை உடைக்கும் ஆராய்ச்சிகள்).

  I am already in war with some of the Polio folks

  Thanks
  Navin


  • Noted. Will do in some time please.


   • The Paleo Diet and the American Weight Loss Utopia, 1975–2014, Adrienne Rose Johnson, Utopian Studies, Vol. 26, No. 1, SPECIAL ISSUE: UTOPIA AND FOOD (2015), pp. 101-124

    Paleo Diets, GMOs and Food Taboos, Michael Shermer, Scientific American, Vol. 312, No. 4 (APRIL 2015), pp. 78-79

    The plant component of an Acheulian diet at Gesher Benot Ya‘aqov, Israel, Yoel Melamed, Mordechai E. Kislev, Eli Geffen, Simcha Lev-Yadun, Naama Goren-Inbar, Proceedings of the National Academy of Sciences of the United States of America, Vol. 113, No. 51 (December 20, 2016), pp. 14674-14679

    Paleolithic Diet, Evolution, and Carcinogens, Devra Lee Davis, Science, New Series, Vol. 238, No. 4834 (Dec. 18, 1987), pp. 1633-1634

    Prehistoric Diet From the Lower Pecos Region of Texas, Kristin D. SobolikSource: Plains Anthropologist, Vol. 36, No. 135 (May 1991), pp. 139-152

    (once you are done with the above, will post the second list)

 3. blank Says:

  How can a veg pappaan comment about keto meat diet?


  • Lousy idiot, why NOT?

   By your Paleo inspired logic,

   1. You are NOT a fuckin’ englishman or a north_american – so how the hell can you use english?

   2. Obviously, you despicable creep is not a brahmin, so how the fuck can you comment on one?

   I always knew that anyone who is a fanboy of this paleo nonsense is deficient in intelligence and is an agmark retard. You merely have become, an yet another example for the rule.

   Happy drooling even when you froth at the mouth.

   And, btw, thanks for voluntarily accepting the honours.

   __r.


   • Also Lazy bozo,

    3. If you are NOT living in ‘Paleo’ times, which you critter are NOT – then why the hell try to pretend to eat your stupid ‘Paleo’ nonsense?

    Just because – all your ‘hunting’ is reduced to looking for brandnames in supermarket shelves, and all your fuckin’ ‘gathering’ is all about, gathering your used underwears from around your house… you are NOT living in Paleo times, get it? – assuming that it existed uniformly all over the world in terms of time spread – with same parameters. (which it was/is not)

    Only rank idiots like you, work based on illogical logic.

    If you Paleo Fools even have an iota of honesty (leave alone scholarship) you would just go commit suicide, of course the Paleo way. (but instead, you show your powerful ignorance, rather grandly!)

    __r.

 4. அப்துல்லாஹ் Says:

  அஸ்ஸலாமு அலைக்கும்

  இசுலாமிய ஹராம் உணவு முறையே உலகில் சிறந்த உணவுமுறை.கண்ட வவ்வால் பன்றி பூரான் என்று தின்றதன் விளைவே இத்தகைய நச்சு கிருமிகள்.எங்கள் திருக்குரான் அன்றே இவற்றை தடை செய்தது.


  • ஐயா ஹராம் ஹலால்! நல்ல நகைச்சுவை உணர்ச்சி உங்களுக்கு!!

   உங்கள் ஸஹீ இஸ்லாம் படி, உங்கள் நபி, தான் பல்லியைச் சாப்பிடுவதில்லை என்று சொன்னாலும், பிறர் பல்லியை உண்பதைத் தடைசெய்யமாட்டேன் என்றுதான் சொல்லியிருக்கிறார் அன்றோ? அதை ஹராம் என்று சொல்லவில்லை இல்லையா?

   http://www.sahihmuslim.com/sps/smm/sahihmuslim.cfm?scn=dspchaptersfull&BookID=21&ChapterID=823

   மேலும் ஷியா பிரிவு அஹடித்களில், வௌவால் (வவ்வால்) வானுயரப் புகழப்பட்டுள்ளதை “வௌவால் இயற்கையின் அதிஅற்புத ஆச்சரியங்களில் ஒன்று” அறிவீரா?

   இஸ்லாமியப் பாரம்பரியங்களில், தேள்களை ‘எதிரிகளை வீழ்த்த வல்ல சக்தி’யைக் கொடுப்பவை எனக் கொண்டாடியது தெரியுமா?

   முதலில் உங்கள் கொர்-ஆன் ஹடீத்களை ஒழுங்காகப் படித்துவிட்டு, முஸ்லீம் பாரம்பரியங்களை அறிந்துகொண்டுவிட்டு, பின்னர் வரவும். சாவகாசமாகப் பேசலாம்.

   … பின்னர், சந்தடிசாக்கில் டகீல் விடலாம்.

 5. A.Seshagiri Says:

  ஐயோ பாவம் ! ‘பாய்க்கும்’ வடை போச்சா!!


  • என்ன செய்வது, சொல்லுங்கள்? அவர்தாம் பாவம், இங்கு வந்து விழுந்தார். :-(

   இன்னொன்று: லிஸார்ட் என்பது அரேபிய வகைப் பெரும் ஓணான் எனப் புரிந்துகொள்வதுதான் சரி. எப்படி இருந்தாலும் இந்த ஹடீத்கள்/பாரம்பரியங்கள் இஸ்லாமிய சான்றோர்களால் ஒப்புக் கொள்ளப்பட்டவை என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும் என நினைக்கிறேன்.

   ஒருவர் விவரங்களைக் கேட்டிருக்கிறார், முடிந்தபோது இது குறித்த சுருக்கமான குறிப்புகளை எழுதுகிறேன்.

   (ஏனெனில் தரவுகளில்லாமல் அட்ச்சிவுட நானொன்றும் தமிழ் அலக்கியக்காரனல்லன், நன்றி.)

 6. Rajan Says:

  அல்லோபதியின் அடிப்படைகளே தவறுகள் மலிந்த ஒன்று.உதாரணமாக சர்க்கரை வியாதியை எடுத்துக்கொள்வோம்.ரத்தத்தில் எவ்வளவு சர்க்கரை அளவு என்று பார்த்து அது அதிகமாக இருந்தால் சர்க்கரை வியாதி என்கிறது அல்லோபதி.
  உண்மையில் இந்த அடிப்படை பிழை நிறைந்த ஒன்று.
  உண்மையில் பார்க்க வேண்டியது Insulin Resistance ஐ அளக்கும் HOMA-IR பரிசோதனைதான் சரியான ஒன்று,காரணம் இன்சுலினை எதிர்க்கும் தன்மையை உடல் பெற்றுவிட்டால் பிறகு இன்சுலின் ஏற்கப்படாமல் அதனால் ரத்த சர்க்கரை அளவு அதிகரிக்கும்.
  .
  சரி எதனால் இன்சுலின் எதிர்ப்பு ஏற்படுகிறது?Insulin spikes அடிக்கடி நிகழும்போது!அதாவது அடிக்கடி மாவுசத்து/சர்க்கரை அல்லது இரண்டும் கலந்துகட்டி தின்று/குடித்து கொண்டு இருக்கும்போது!உதாரணமாக நம்மூரில் விற்கும் ஒரு பிஸ்கட் பாக்கெட்டில் ரேஷன் கடையில் உள்ள மொத்த சர்க்கரையை விட அதிகளவு உள்ளது.ஆனால் இதை எந்த மருத்துவரும் சொல்லமாட்டார்!என்ன செய்கிறார்கள்?மெட்பார்மின் கொடுத்து எல்லா ரத்த சர்க்கரையையும் லிவரில் கொண்டு கொட்டிவிடுகிறார்கள்.பிறகு ரத்த சர்க்கரை அளவு கீழே விழும்!உடனே போர்பன் பிஸ்கட் துன்னு என்பார் மருத்துவர்!உடனே சர்க்கரை அளவு ஏறும்!அதே நேரம் இன்சுலின் எதிர்ப்பும்தான்!அதனால் அடுத்த முறை மெட்பார்மின் டோசெஜை இருமடங்காக்குவார்!இது தொடர்கதை….
  .
  கார்போஹைட்ரேட்தான் உண்மையான எமன்!அது சர்க்கரை வியாதியை மட்டுமல்ல ரத்த கொதிப்பு இதய நோய்(இப்போது வரை எமன் என்று சொல்லப்பட்ட உணவில் உள்ள கொலஸ்ட்ரால் மற்றும் saturated fat இரண்டுமே எந்த தீங்கையும் ஏற்படுத்துவதில்லை என்பதை கண்டுபிடித்துள்ளார்கள்.),நோய் எதிர்ப்பு சக்தி குறைதல்(அதிக இன்சுலின் spike என்பது அதிக கார்டிசால் அதனால் நோய் எதிர்ப்பு வீழும்).
  ஆனால் இங்குள்ள மருத்துவர்கள் சர்க்கரை வியாதி உள்ளவர்கள் மில்க் பிகிஸ் க்ரீம் பிஸ்கட் போன்றவைகளை திங்காமல் மாரி பிஸ்கட் தின்னு என்கிறார்கள்.அடப்பாவிகளா அதிலும் அதே அளவு சர்க்கரை உள்ளதடா!
  .
  இந்த விஷ சுழலில் இருந்து மீள ஒரே வழி கீட்டோ தான்!வழக்கம் போல லூசுத்தனமா ஏதாவது எதுகை மோனையில் உளறி கொட்டி கொண்டிரு!ஆங்!மறக்காமல் நிறைய கார்பஸ் திங்கவும்!மெட்பார்மின் மாத்திரை உற்பத்தியாளர்கள் மகிழ்வார்கள்!


  • அட தண்டக்கருமாந்திரமே! ‘அல்லோபதி’ என்பது தற்காலத்து அறிவியல்பூர்வமான மருந்து/சிகிச்சை வகையல்ல! இந்தப் பெயரை அந்த ஹோமியோபதி ஆசாமி ஹானிமன் வைத்த கதையைக் கூட அறியாமல் பினாத்தவேண்டாம்.

   இந்த அடிப்படை கூடத் தெரியாமல் நீங்கள் உளற ஆரம்பிக்கும்போதுதான் தோன்றியது – நீவிர் கீடோபேலியோ எழவாளர் என்பது. ஆகவே மூளையில்லாமல் உளறுகிறீர்.

   பரிதாபமாக இருக்கிறது. போய் ரெண்டு கரண்டி வெண்ணைய் சாப்பிடவும், கூட, நீங்களே உழைத்து ஈட்டியோடு ஓடிஓடி வேட்டையாடிய மானின் மாமிசத்தையும்.

 7. Rajan Says:

  இதற்குமேலும் சொரிய விரும்பினால் டாக்டர் பேர்க் உள்ளார்.அவரிடம் நேரடியாக கேள்வி கேட்டு அந்த பதில்களை பெற்று தெளிவு பெறவும்!
  https://www.youtube.com/user/drericberg123


  • ஆடு தானாக வந்தது தலையை தருகின்றது. சபாஷ் சரியான போட்டி


   • ஐயா நவீன்! இந்த தண்டக் கருமாந்திரங்களுடன் கழிக்கும் நேரம் வீண். பேசாமல் ஆவுற வேலயப் பார்க்கவும்.


  • நல்ல கோமாளி. அஸிட்டிக் அமிலம் பற்றிய பீலா நன்றாகவே இருக்கிறது. – The REAL Reason Apple Cider Vinegar Works for Losing Weight – MUST WATCH! –

   உங்களுக்கேற்ற ஜோடி!


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s