கொரோனா அலக்கியம் பகீர்! :-(

25/03/2020

இருக்கு, பயம்மா இருக்கு… (நன்றி: மணிரத்னம்) :-(

குக்கூஊஊஊஊஊஊஊஊஊஊ….. …..ஊஊஊஊஊ…. (நன்றி: இளையராஜா) :-((

நம் அயோக்கியத் தமிழ் எள்த்தாளர்களுக்கு, தங்கள் படைப்பு புடைப்பு இன்னபிற க்ரியா சக்திகளைப் பேரூக்கம் கொண்டு பரிமாற இன்னமும் நிறைய நேரம் கிடைக்கப் போகிறது.

தனிமை வெறுமை க்வாரண்டைன் டர்பெண்டைன் உள்ளிருத்தல் உள்வாங்கல் வெளித்தள்ளல் ஐஸோலேஷன் ஷர்பத்நேஷன்  கூட்டம் உள்நோக்கல் சுயம் அகக்கொரோனா புறக்கொரோனா பதிற்றுக்கொரோனா கொரோனாயணம் வைரஸ்ஸார் விருந்து தத்துப்பித்துவம் சுயபரிசோதனை மண்ணாங்கட்டி தெருப்புழுதி என கூக்ள் வாசிப்பனுபவக் காரர்கள் படை திரண்டுவந்து தங்கள் அனுபவங்களைப் பிழிந்து கலந்துகட்டிக் கலகப் பிரதிச் சக்கைகளாக எழுதிப் போட்டுத்தள்ளப் போகிறார்கள் என்பதை நினைத்தால்…

கதி கலங்குகிறதே!

இதையும் தாண்டி, வரலாற்றறிஞ்ஜ மண்வெட்டிதாசர்கள் தங்கள் குப்பைபடிந்த வரலாற்று உளறாற்றுப் புத்தகங்களைக் கிண்டி – அந்தக் காலத்திலேயே இப்படி நடந்தது, இப்போதும் இப்படி நடக்கிறது, ஆனால் அப்படி நடக்கவேண்டும், நாம் வரலாற்றிலிருந்து பாடம் கற்றுக் கொள்வதேயில்லையே அதுயிது என கோடைக்காலத் தள்ளுபடி அறிவுரை அளிப்பவர்களும் கட்டுரை கட்டுரையாக எழுதித் தள்ளப் போகிறார்களே என்பதை நினைத்தால்…

இந்த லாக்-டவ்ன் உள்ளிருப்புக்கான பரிந்துரைத்தல்களை ஹிந்துத்துவ ஃபாஸ்ஷிஸ வெறிக்கான முதற்படியாகக் கருதுபவர்களும் இதற்காகத் தேவை மெனக்கெட்டுக் கிவிதை எழுதுபவர்களும் புற்றீசல்போலக் கிளம்பப் போகிறார்களே என்பதை நினைத்தால்…

பாசிசம் பாயாசம் அல்ல!

(மப்பு புத்திரன்)

முதலில் அவர்கள் கொரோனாவுக்காக வந்தார்கள்

ஐஸோலேட் செய்தார்கள்

எனக்கு வரவில்லையே, அதனால் விட்டுவிட்டேன்

பின் மறுபடியும் வந்தார்கள்

க்வாரண்டைன் செய்தார்கள்

எனக்கு வரவில்லையே, அதனால் விட்டுவிட்டேன்

பின்னர் மறுபடியும் வந்தார்கள்

லாக்-டவுன் செய்தார்கள்

எனக்கு வரவில்லையே, அதனால் விட்டுவிட்டேன்

….


பின்னர் மறுபடியும் வந்தார்கள்

எனக்கு வந்தார்கள்

ஆனால் எனக்காக யாருமே இல்லை

-0-0-0-0-

Tamil Litter-ature in times of Corona Virus!

I dread it more than I dread the damn Corona Virus. Oh what to do. :-(

-0-0-0-0-

இருக்கு, பயம்மா இருக்கு…

குக்கூஊஊஊஊஊஊஊஊஊஊ….. …..ஊஊஊஊஊ….

உங்களுக்கூ?? :-(

9 Responses to “கொரோனா அலக்கியம் பகீர்! :-(”

 1. Ranga Says:

  Vaareer,caronovilum ilakkiyam padaikka. Karona?

 2. dagalti Says:

  In his debut novel ‘The TigerClaw Tree’, P.A.Krishnan mentions the following exchange:
  Rajaji writes a poem about nuclear non-proliferation.
  The novel’s protagonists elder friend, an avuncular Congress lawyer writes a letter to Rajaji: ‘Sir, I read your poem against he atom-bomb. Honestly, I prefer the bomb”

  Rajaji replies: On second thoughts, I share your preference.


  • But, what about that author fav of yours?

   I really wonder as to how his ‘novel’s protagonists elder friend’ sarcastically write a letter to PAK about Sri PAK’s infinite(simal) whizdom & desultory comments on current affairs? A rib-tickling fantasy??

   Anyway. To offset the effect of all Tamil poets/poetesses we would require the whole stockpile of nuclear weapons, oh what to do.

   Life is so unclear. *sniff*

   • dagalti Says:

    ஆனோ பத்ரா: க்ரதவோ யந்து விஷ்வத:

    (தேவரீர் உட்பட) எல்லாரிடமிருந்தும் கவனமாகத் தேர்ந்தெடுத்துப் படித்துக்கொள்ள எமக்குக் கிடைத்த ஆப்தவாக்யம்.

    இந்த வாட்டபௌட் கேள்விகளை அலேக்காக தாண்டி விடலாம்.

    யாரிடமும் அகத்தை திறந்து வைத்துக்கொண்டு ஆகர்ஷிக்கவிட வேண்டியதில்லை.

    என்ன ஒன்று, சுயத்தை உடைக்கவிட்டு மீண்டும் கட்டி எழுப்பி புத்துயிர்ப்பு அடையும் ப்ராசஸ் ஏதோ இருக்கிறதாமே. அது சாத்தியபடாது. பரால்ல.

    btw

    Make do with the good available says Rama:

    “பெற்றார் உழை பெற்ற பயன் பெறும் பெற்றி அலால்
    அற்றார் நவை என்றலுக்கு ஆகுநர் ஆர்கொல்?” என்றான்

    அதாவது, லல்லா அட்ஜஸ்ட் பண்ணிக்க தான் சொல்றார். ஆனா லக்‌ஷம்ணன் ப்ரதம பக்த் இல்லைய்யா? அதான் ஒரே பிகு பண்றாப்ல.

 3. மிஸ்பாஹு Says:

  நீ ஒரு பார்ப்பன அடிமை!இதற்குமேல் என்ன விவாதிக்க உள்ளது?


  • இது, ராஜன், ராஜன்லீக்ஸ் – எல்லாம் ஒரே தண்டக்கருமாந்திர சாணிப்பரம்பரை அனாமதேயத்தின் பல ரூபங்கள்.

   ஆகவே. ;-)

   • சுத்திசைவு Says:

    நல்லா பெனாத்து ..சீக்கிரமே கீழ்பாக்கில் நீ இருப்பாய்


    • நல்லெண்ணத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

     மற்றபடி, பேலியோ விளைவு தலைக்கேறிவிட்டதுபோல!

 4. A. Seshagiri Says:

  இது ஒருவகையான திமுகவின் அரசியல் கொ ரானா நிஜக்கொரானாவைக் காட்டிலும் மிகக்கொடியது. தங்கள் கருத்தென்ன ?


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s