இஸ்லாம், கல்லெறிதல் சடங்குகள், வன்முறையின் ஊற்றுக்கண்கள் – குறிப்புகள் (2/4)

08/05/2020

இஸ்லாமியக் கல்லெறிதல் கலாச்சாரப் புராணத்தின், நவாப்ராணியம்மாள் உபபுராணம் முந்தைய  (கல்லெறிதலே பண்பாடாக (அல்லது குரூர வன்முறையே வழிபாடாக) என்பது போல, சில ஒருமாதிரி குறிப்புகள் (1/4) 07/05/2020) பதிவிலிருந்து தொடர்கிறது…

…அவர்கள் அஷ்ரஃப்கள். இந்திய முஸ்லீம்களிலேயே கூட மிக உயர் ஜாதியினராக, உச்சாணிக்கிளையினராகத் தங்களைக் கருதிக்கொண்டு மற்றவர்களை, ஏன், பிற கீழ்ஜாதி முஸ்லீம்களையுமேகூடத் துச்சமாக மிதிப்பவர்கள்; எடுத்தெறிந்துபேசி அசிங்கமாக அவமரியாதை செய்பவர்கள்.

நான் சொல்வேன்: அகில பாரதத்திலேயே வன்மமும் அகங்காரமும் மிக்க படுமோசமான ஜாதிவெறியர்கள் என்றால் அவர்கள் இந்த அஷ்ரஃப்களாகத்தான் இருப்பர்; நம் தமிழகச் சூழலிலேகூட (நவாப் பரம்பரை, பர்ஷியா, ஆஃப்கனிஸ்தான் மூதாதையினர் அப்படியிப்படி எனக் கருதிக்கொள்பவர்களை) அப்படித்தான் சொல்வேன், அதுதான் உண்மையாக இருக்கும்.

சரி. நண்பனின் மூதாதையர்கள், பாரசீகம் + ஆஃப்கனிஸ்தானிலிருந்து இங்கு வந்திருக்கும் ஸூன்னிகள். ஜமீன்தார் வழிமுறையினர் – உள்ளுக்குள்ளேயே, ஜாதிக்குள்ளேமட்டுமே திருமணம், நெருங்கிய சொந்தங்களையே மாமாங்கங்களாக மணம் செய்து குடும்பம் பெருக்கிய ஜாதியினர். பழைய பெருங்காய டப்பியில், அப்போதும் கணிசமாகப் பெருங்காயமும் இருந்தது என நினைவு. நிலம்புலம் தோட்டம்துரவு ஆள்அம்பு என…

(எது எப்படியோ! எனக்கு என் தோல் நிறம் குறித்து ஒரு மசுத்துக்கும் அவமான உணர்ச்சியில்லை – ஆனால் நண்பன் துடித்துப்போய், தன் அம்மாஜானிடம் ஏதோ பேசினான் என்பது நினைவில் இருக்கிறது, பாவம் அவன்…

ஆனால் ஒன்றைக் குறிப்பிடவேண்டும். என் குடும்பத்தில் இம்மாதிரி வெறிபிடித்தவர்கள் இல்லை; அப்படி யாராவது இருந்து (அவர் என் தாயாராகவே இருந்தால்கூட) நான் இரண்டிலொன்று என ஒருகை பார்த்திருப்பேன் – அவமரியாதை செய்யப்பட்டவரின் கட்சியில் இருந்திருப்பேன்; ஆனால் பிரச்சினை என்னவென்றால், ஜாதிமதகட்சிதேச வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு, நம்மில் பெரும்பாலோர் நபும்ஸகர்கள்; ‘நமக்கெதுக்கு வம்பு’ வகை முதுகெலும்பற்றோர். இந்த நண்பனும் அப்படித்தான் – ஒரு பேடிதான். சொல்லப்போனால் இந்தப் பொதுவிதிக்கு விதிவிலக்குகள் மிகக் குறைவு.)

சரி. மற்றபடி அந்த அம்மணியார், கலகலவென்று எல்லாரிடமும் (ஆனால் நவாப்ராணி தோரணையில்தான்) பேசிக் கொண்டிருந்தார். வீரப் பிரதாபங்கள். சுற்றியிருப்பவர்கள் வாஹ்…வாஹ் என ஆமோதித்தால், பேசுவதற்கு வேறு ஏதாவது முக்கிய காரணமோ சொல்வதில் அர்த்தமோ வேண்டுமா என்ன? (நம் செல்ல அலக்கிய அலப்பரைகளின் அலக்கியக் கூட்டங்களையும் அமர்வுகளையும் நினைவுகூறவும்…)

நான் அந்தக் கூட்டத்திலிருந்து சற்று விலகி விஷயங்களைப் பார்த்துக்கொண்டு, கேட்டுக் கொண்டிருந்தேன்.

பொதுவாக, எனக்கு என் வாயையும் (ஏன், அனைத்து ஓட்டைகளையும்) மூடிக்கொண்டு , கூட்டங்களிலும் அமர்வுகளிலும் பிறர் பேசுவதை, நடவடிக்கைகளை, உடல்மொழிகளை, அவற்றிடையே உள்ள விரிசல்களை – ஆழ்ந்து கவனிப்பதை ஒரு வழக்கமாக உருவாக்கிக் கொண்டிருக்கிறேன். இம்மாதிரி சமயங்களில், நான் ஒரு மிருகக் காட்சிசாலையில் இருப்பதாகக் கற்பனை செய்துகொண்டால், மனக் கிலேசங்கள், வெறுப்புகள் படபடப்புகள் போன்றவை குறைந்து, மனம் கொஞ்சம் லேசாகிவிடுவதைக் கவனித்திருக்கிறேன். இச்சமயங்களில் – மிகமிக அவசியம் என்று தோன்றினால் ஓழிய, வாயைத் திறக்கவே மாட்டேன். (இந்த வழிமுறையில் ஒரு சௌகரியமும் இருக்கிறது: நம் வாயை மூடிக் கொண்டிருந்தால், அவ்வளவாக நம் முட்டாள்தனம் வெளிப்பட்டுவிடாது அல்லவா? மேலும், பிறர், நாம் ஒரு பெரிய்ய அறிவுஜீவி என்றெல்லாம் வேறு கற்பனை செய்துகொள்வார்கள் – நம்முடைய ப்ரேண்டுக்கு நல்லதுதானே இது, சொல்லுங்கள்? ;-) )

-0-0-0-0-

சரி… அவர் பேச்சில் ஒர்ரே ஆஹ்லி-ஈ-தௌலத் (ஆளும் இனம்/ஜாதி) ஆஹ்லி-ஈ-ஸாதத் (மார்க்கத்தைக் காப்பாற்றும் இனம்/ஜாதி) வகை ஜாதிமதவெறி. சுயதம்பட்டம். கூட இருந்த அரைகுறைகளின் ஆமோதிப்பு. இந்த அளவோடு நிறுத்திக்கொண்டிருக்கலாம். ஆனால் அவர், முந்தைய வருடம் தம் கணவருடன் தான் செய்த ஹஜ் பயணத்தைப் பற்றிப் பேச ஆரம்பித்தார். எனக்கு அசுவாரசியமாகவும் வெறுப்பாகவும் இருந்தது – இப்படியும் மானுடர்கள் இருப்பார்களா என்று! ஆனாலும் சுவற்றுப் பல்லியாக இருந்து நாடகங்களை கவனித்துக்கொண்டிருந்தேன்.

ஹஜ் பயணம் பயபக்தி என்றால் ஒரளவுக்குப் பரவாயில்லை. ஆனால் மக்கா/மெக்கா பக்க மீனாவில் உள்ள சாத்தான் பாறைகளைக் கல்லால் அடிப்பது பற்றி அவ்வளவு விவரணை.

எப்படி அவர் கணவருக்கு சரியாகக் கல்லெறிய வரவில்லை எனவும் தான் அடித்த ஒவ்வொரு கல்லும் பாறையில் பட்டுத் தெறித்தது பற்றியும் புளகாங்கிதம்.

இதுவாவது பரவாயில்லை. ஆனால், அவருடைய முகமே விகாரமாகி விட்டது. கண்ணில் வெறியும் குரோதமும். ஏதோ சாத்தானே நேரில் வந்துவிட்டதுபோல அவ்வளவு ஒரு ரௌத்திரம். ரத்தக் கொதிப்பு. கேட்டுக்கொண்டிருந்த அனைவருக்கும் அந்தக் கொதிப்பு மடைமாற்றம் செய்யப்பட்டதுவேறு…

எனக்கோ ஆச்சரியம் + பயமும். ஏதோ கட்டைகுட்டையாகக் கறுப்பாக இருக்கும் என்னையும் குஃபர்-சாத்தான் எனக் கருதிக் கல்லால் அடிக்க ஆரம்பித்துவிட்டால்… என எண்ணம் ஓடியது. இப்படியா வெறுப்பு, ஏகோபித்த குவியம் பெற்று ஒரு மார்க்கத்தையே ஒருங்கிணைக்கும் எனும் கேள்வி எழும்பியது…

அன்றுதான் – இஸ்லாமும் முஸ்லீம்களும் எதனைச் ‘சாத்தான்’ என்று கருதுகிறார்களோ, யாரை சாத்தானின் முகவர்கள் என்று கருதுகிறார்களோ, அதனை/அவர்களை வெறுத்தொழிக்கவே, புல்பூண்டில்லாமல் செய்யவே, குறைந்தபட்சம் கல்லாலடித்துச் சின்னாபின்னம் செய்யவே பயிற்சி கொடுக்கப் படுகிறார்கள் என்கிற உண்மை பட்டவர்த்தனமாகத் தெரிந்தது.

உலகத்தில் வேறொரு மார்க்கமே இல்லாமல், தார்-அல்-இஸ்லாம் ஆக உலகம் ஒருங்கிணைக்கும்வரை இந்தச் சாத்தான்/காஃபிர்கள் (குறைந்த பட்சம்) கல்லால் அடிக்கப்பட்டு ஒழிக்கப்படவேண்டியவர்களே என்பதும்… அதுவும் இஸ்லாம் மார்க்கம் அமைதிமார்க்கம் என்பது எப்படிப்பட்ட புளுகு என்பதும் – ஏனெனில் ஆக்ரோஷத்துடன் மத உச்சாடனத்துடன் பெரும் திரள்களாகச் சேர்ந்து கல்லெறிதல் என்பது ஒரு முக்கியமாக போற்றப்படும் சடங்கு. மதக் கடமை.

அதாவது – இந்தக் கல்லெறிதல், இஸ்லாம் மதத்தின் ஒரு நேரடிக் கூறு, ஒவ்வொரு முஸ்லீமும் தம் வாழ்நாளில் செய்யவேண்டிய ஹஜ் யாத்திரையின் முக்கியமான அங்கம்.

அதுவும் – இந்தக் கல்லெறிதலானது – ஏதோ ஒருமுறை ‘ஸாஸ்திரத்துக்காக’ என்ற கதையோ பஜனையோ இல்லாமல், தொடர்ந்து சிலபல முறை அரங்கேற்றப் படவேண்டும்… ரீஇன்ஃபோர்ஸ்மெண்ட். இந்த வெறி என்பது வழிபாடு.

‘கஞ்சா அடித்தால் சிவனைக் காணலாம்’ எனக் கிண்டல் செய்யப்படுவதைப் போல, ஆனால் ‘அழிச்சாட்டிய வெறியுடன் கல்லடித்தால் அல்லாஹ்வைக் காணலாம்’ வகை எளிமையான வெறுப்பியம்.

எனக்கு எவ்வளவோ முஸ்லீம் நண்பர்கள் அதற்கும் முன்னமும் இருந்தார்கள், பின்னும் இருக்கிறார்கள் – ஆனால் அன்றுதான் நான் ஒரு காஃபிர் என்று நேரடியாக அழைக்கப்பட்டு, காஃபிர்களின் கதி என்னவாகும் எனத் தெளிவாக அறிவுரை கொடுக்கப்பட்டேன்.

-0-0-0-0-0-

கொஞ்ச நாட்கள் இந்தச் சங்கடமும் அமைதியின்மையும் நீடித்தது என்பது நன்றாக நினைவிருக்கிறது – ஏனெனில் அக்காலங்களில் நான் ற்றொம்ப ற்றொம்ப கங்கா-ஜமுனி தெஹ்ஸீப் வகை ஹிந்து-முஸ்லீம் பாய்-பாய் காரன்.

ஆகவே, கொஞ்சம் வருத்தத்துடன், மஹாமஹோ ஷங்கர் குஹா நியோகி அவர்களிடமும் இதுகுறித்து ப்ரஸ்தாபித்தேன் – ஆனால் அவர் ஒன்றும் திட்டவட்டமாகச் சொல்லவில்லை; இதற்குக் காரணம் அவருடைய குவியம் வேறெங்கோ இருந்ததால் இருந்திருக்கலாம்…

(…என்பது என்னுடைய ஒரு சால்ஜாப்போ? :-( ஷங்கர் அவர்களை ஒரு அதிமனிதனாக வரித்திருந்த நான், அவருக்குச் செய்யும் முட்டுக்கொடுத்தலோ??  அவரும் இந்த ஒரு விஷயத்தில் ஒரு சராசரி, சாதாரண இடதுசாரி ஸெக்யூலர் திலகம் மட்டுமேதானோ? அதனால் அவருக்கு, அடிப்படை நியாயத்துடனேகூட இஸ்லாமை விமர்சிக்கத் தெம்பில்லையோ? தெரியவில்லையே! :-( ஈஸ்வரா!)

சரி. குழப்பங்கள், குழப்பங்கள்

-0-0-0-0-0-

ஹஜ் பயணத்தில் கல்லெறிச் சடங்கு பற்றிக் கொஞ்சம் சுருக்கமாக, பின்புலச் செய்திகளுக்காக வேண்டி, பார்க்கலாம். (தாராளமாகக் கண்டமேனிக்கும் தரவிரக்கம் செய்த படங்களை உபயோகித்திருக்கிறேன், மன்னித்து மருளவும்)

ஹஜ் பயணத்தில் பெரும்பாலும், பழைய ஏற்பாடு (ஓல்ட் டெஸ்டமெண்ட்) டோராஹ் வகை யூதத் தொன்மங்களின் மறுஅரங்கேற்றம்தான். (இவற்றை இப்படிச் சடங்கு ரீதியாக யூதர்களோ அல்லது க்றிஸ்தவர்களோ செய்வதில்லை என்பது எனக்கு எப்போதுமே ஆச்சரியம் கொடுக்கும் விஷயம்தான்!)

ஆனால், இவற்றுக்கு மேற்பட்டு கொஞ்சம் மேலதிக பழைய அரேபியப் பாலைவனக் குழுக்களின் நம்பிக்கைகள்/தொன்மங்கள் குறித்த சடங்குகளும் பின்னர் மொஹெம்மத் ஒருங்கிணைப்புக்காக உருவாக்கிய, பரப்புரை செய்து மிகவும் பெரிதுபடுத்திய சில சடங்குகளும் இருக்கின்றன. இவற்றின் ஒட்டுமொத்த, சமைத்தெடுக்கப்பட்ட வடிவம்தான், நாமறியும் ஹஜ் என்பது. பொதுவாக ~~ஜூலைமாத இறுதி – ஆகஸ்ட் ஆரம்பத்தில் நடப்பது.

ஹஜ் பயணத்தில் ஒரு சிறு பங்குதான், முன்னேற்பாடுச் சடங்குதான் முதல் நாள் அதற்கேற்ற உடைகளை அணிந்துகொண்டு++

ஹஜ் பயணிகளின் அதிகாரபூர்வ உடைகள் (ரிச்சர்ட் பர்ட்டன் எழுதி 1857ல் பதிப்பிக்கப்பட்ட ‘மக்காவுக்கும் மதீனாவுக்கும் பயணம்’ புத்தகத்தின் பக்கம் 58. Sir Richard Burton’s book ‘Pilgrimage to Mecca and Medina’)

…பயணிகள் ‘இஹ்ரம்’ எனப்படும் ஆசார நிலையை அடைவது – பின்னர் சிறுசடங்கான ‘உம்ராஹ்’ – மக்காவிலுள்ள கறுப்பு நிறக் காபா கற்கட்டமைப்பைச் சுற்றிவருவது. ஹஜ் பயணம் என்றால் இந்த பிம்பம்தான் நம் பெரும்பாலோர் மண்டையில் இருக்கும். (ஆனால், இது சரியில்லை)

கும்பல் திரள் அலைமோதும் நேரத்துப் படம்.

கீழே, சீனாக்கார கோவிட்-19 பயத்தால் – நியாயமான, போற்றத்தக்க முன்னெச்சரிக்கையுடன் இருக்கும் சமயம்….

பின்னர் ஸஃபா, மார்வா எனப்படும் இரு குன்றுகளின் (குன்றுகள் என்கிறார்கள், இவை வெறும் கொஞ்சம் பெரிய பாறைகள்) இடையே ஏழுமுறை அப்படியும் இப்படியும் ஓடவேண்டும்…

…இது இப்ராஹீம்/அப்ரஹாமின் மனைவி ஹாஜர் (அல்லது ஹகர்), தன் குழந்தை இஷ்மைல்-ன் தாகத்தைத் தணிக்கக் குடி நீரை ஓடோடித் தேடியகதையின் மறு அரங்கேற்றம்.

(மேற்குறிப்பிட்ட நவாப் அம்மணி, இதனைச் செய்வதற்குள் மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்கிவிட்டது என்றார்…. இதை ஓடாமல் அலுங்காமல் நலுங்காமல் செய்ய வீல்சேர் வகை நடைவண்டிகளும், குளிரூட்டப்பட்ட வழியும் இப்போது இருக்கின்றனவாமே!

மேலும் இக்காலங்களில் யாரும் ஓடுவதில்லை. சாவகாசமான நடைதான்.)

பின்னர், ஹகருக்கு கேப்ரியல்/ஜெப்ரீல் ஆசியில் கிடைத்ததாக நம்பப்படும் ஸம்-ஸம்/Zam-Zam (ஜம்-ஜம்) நீரூணிக்கு வந்து நீரை அருந்துதல்.  அந்த நீரை புட்டியில்/ப்ளாஸ்டிக் டப்பியில் பிடித்து தம்மூர் திரும்பி, ‘புனித நீரை’ சக அன்பர்களுக்கு அளித்தல்.

 

ஸவுதி அரேபியாவிலிருந்து பெட்ரோலியத்துக்கு அடுத்தபடி பெரிய ஏற்றுமதி, இந்த புட்டியில் அடைக்கப்பட்ட ஸம்-ஸம் நீராகத்தான் இருக்கும்!

இதற்குப் பிறகு தான் ஹஜ் பயணம் என்பது, உண்மையில் ஆரம்பிக்கிறது — அதாவது, ஹஜ் பயணத்தின் முக்கியமான பிற அங்கங்கள் ஆரம்பிக்கின்றன.

முதல் நாள்: மக்கா/மெக்காவுக்குக் கிழக்கேயுள்ள மினா நகரத்தில் கழிக்கவேண்டும். (இதனருகில் கூடார நகரம் அமைக்கப்பட்டு சகல வசதிகளும் உடைய (குளிரூட்டிகள் உட்பட!) தற்காலிகக் குடியிருப்புகள் இருக்கின்றன. நவீன வசதிகளுடன் ஆசாரமாகக் கடும் விரதமிருக்கலாம்.)

இரண்டாம் நாள்: மொஹெம்மத் தன்னுடைய கடைசி மதப்பிரச்சாரத்தைச் செய்ததாக நம்பப்படும் அராஃபத் குன்று பக்கச் சமவெளிக்குச் (இது பொட்டல்காடு, கொஞ்சம்போலப் பாறைகள் நிறைந்தது – ஆகவே, சமவெளி, பச்சைப் பசேல் என்றெல்லாம் கற்பனை செய்துகொள்ளவேண்டா!) சென்று அங்கே கழித்தல்.

(அராஃபத் குன்றுச் சூழல்: அதே ரிச்சர்ட் பர்ட்டன் புத்தகத்திலிருந்து, அவர் வரைந்த படம், 1850கள்)

அராஃபத் தினத்தன்று இங்கு பிரார்த்தனை செய்தால், அல்லாஹ் நிறையபேர்களை நரகத்தீயிலிருந்து மீட்டு சொர்க்கத்தில் இடம்தருவார் என்பது ஒரு நம்பிக்கை.

(2010களின் நடுவே எடுத்த படம்)

இதைத்தான் ஹஜ் பயணத்தின் ஒரு மாதிரி முக்கியமான கட்டம் என்று சொல்லலாம். பயணத்தில் ஆன்மிக ரீதியில் உச்சகட்டம். எனவும்.

தல்பீயாஹ் (சிறு பிரார்த்தனை)  — லப்பைகா இல்ஹாலுமா லப்பைக்கா (என ஆரம்பிக்கும் வரிகள்) – உன் ஊழியத்திற்காக, அல்லாஹ்வே, உன் ஊழியத்தில் – எனும் வரிகள் உச்சாடனம் செய்யப்பட்ட பின்னர் அருகில் இருக்கும் முஸ்டாலிஃபாஹ் சமவெளியில் இரவைக் கழிக்கவேண்டும். (பலர் இப்படிச் செய்யாமல் மினாவின் குளிரூட்டப்பட்ட கூடாரங்களுக்குச் சென்றுவிடுவதுதான் பெரும்பாலும் நடக்கிறது)

இந்த இரண்டாம் நாள் மாலையில் முஸ்டாலிஃபாஹ் வெளியில், அடுத்த மூன்று நாட்களுக்குக் கல்லெறிய, கற்களைப் பொறுக்குவது நடக்கும். ஆனால் பலர், மினா கூடாரவெளியிலேயே இவற்றைச் சேகரம் செய்வார்கள்.

–0-0-0-0–

அடுத்த பதிவில் தொடர்கிறது… —>>> கல்லெறிதலே பண்பாடாக (அல்லது குரூர வன்முறையே வழிபாடாக) என்பது போல, சில ஒருமாதிரி குறிப்புகள் (3/4)

 

 

2 Responses to “இஸ்லாம், கல்லெறிதல் சடங்குகள், வன்முறையின் ஊற்றுக்கண்கள் – குறிப்புகள் (2/4)”


  1. /* பிறர் பேசுவதை, நடவடிக்கைகளை, உடல்மொழிகளை, அவற்றிடையே உள்ள விரிசல்களை – ஆழ்ந்து கவனிப்பதை ஒரு வழக்கமாக உருவாக்கிக் கொண்டிருக்கிறேன். இம்மாதிரி சமயங்களில், நான் ஒரு மிருகக் காட்சிசாலையில் இருப்பதாகக் கற்பனை செய்துகொண்டால், மனக் கிலேசங்கள், வெறுப்புகள் படபடப்புகள் போன்றவை குறைந்து, மனம் கொஞ்சம் லேசாகிவிடுவதைக் கவனித்திருக்கிறேன்.*/ — தமிழ் இலக்கியச் சூழலையும், ஆங்கில / தமிழ் ஒளிவழி விவாதக் காணொளி நகர்வுகளையும் நினைவுபடுத்தியது. ஒலியை நிறுத்திவிட்டு காணொளியை மட்டும் ஓடவிட்டால் திரையில் நெளியும் உடல் பாவனைகளில் இருந்து வெறுப்புமிழும் எண்ண அலைகள் வெளிப்படும். அதையுன் நினைவுபடுத்தியது.

  2. ராஜேஷ் Says:

    (இந்த வழிமுறையில் ஒரு சௌகரியமும் இருக்கிறது: நம் வாயை மூடிக் கொண்டிருந்தால், அவ்வளவாக நம் முட்டாள்தனம் வெளிப்பட்டுவிடாது அல்லவா? மேலும், பிறர், நாம் ஒரு பெரிய்ய அறிவுஜீவி என்றெல்லாம் வேறு கற்பனை செய்துகொள்வார்கள் – நம்முடைய ப்ரேண்டுக்கு நல்லதுதானே இது, சொல்லுங்கள்? ;-) )////…இனி இதை பின்பற்றுகிறேன்.அருமையான யோசனைக்கு நன்றி.மேற்கண்ட காமண்டை பதிவிட்ட அந்த சாருக்கும்.


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s