மூத்த காங்கிரஸ் தொண்டரும், விடுதலைப்போராட்ட வீராங்கனையுமான ப்ரியங்கா வாத்ரா-வின் பரிந்துரை: ராஜீவ்காந்தியுடன் இன்னமும் 15 அப்பாவிகளைப் பார்ஸேல் செய்த விடுதலைப்போராளிப் புளிகளுக்கு, ‘கொலைமாமணி’ விருது கொடுக்கவேண்டும்!
21/05/2020
ஹ்ஹ! இந்தப் பரிந்துரை வருமென்று எதிர்பார்த்து, சிரமேற்கொண்டு…
..தமிழக திராவிட அரசு, ஏற்கனவே ‘கொலைமாமணி விருது’ வகையறா ‘ஆவன’ செய்துவிட்டதை அறியமாட்டார், ப்ரியங்காவார்!
ராஜீவ்காந்தியின் நினைவேந்தலுக்கு, இதனைவிடத் தகுதியான செயல்பாடுதான் உண்டா?
ராஜீவ்காந்தி + 15 பேர்களைக் கொன்ற சாதனையாளர்களுக்கு தமிழக அரசின் விருது! 20/09/2018
வளர்க கொலைகள்! வாழ்க கொலைமாமணிகள்!
—
22/05/2020 at 09:10
ராஜன் கதை ஒரு ஃபேபிளின் தன்மையுடன் இருக்கிறது. இந்த வகையில் பல வடிவங்களை இந்தக் கதைவரிசையில் முயற்சி செய்திருக்கிறீர்கள். நிழல்காகம் போன்ற கதைகளில் தத்துவ விவாதம் வழியாக ஃபேபிள் சிறுகதைக்குரிய சப்டெக்ஸ்ட் கொண்டதாக ஆக்கப்பட்டுள்ளது. இந்தக்கதையில் யதார்த்தவாதக் கதை நகர்ந்து சென்று ஃபேபிள் ஆக மாறுகிறது.
ஆனால் இந்தவகையான கதைகளில் எப்போதுமே நுட்பமான குறிப்புகளை கொடுத்துவிடுவீர்கள். கதைக்குள் பேச்சுவழியாக அது வந்துவிடும். இன்னொரு முறை கதையை வாசித்தால் அந்த மென்மையான முள்ளை கண்டுபிடித்துவிட முடியும். இந்தக்கதையில் அவைகளை அப்படியே விட்டுவிட்டிருக்கிறீர்கள். அவைகளை அறிந்தால் இந்தக்கதை மேலே திறக்கும் என நினைக்கிறேன்.
22/05/2020 at 13:58
டேய்! பதிவுக்கும் இந்தப் பின்னூட்டத்துக்கும் ஏதாவது தொடர்பிருக்கிறதா? என்ன எழவு இது?
வேறெங்கோ அடிக்கவேண்டிய நெகிழ்வாலஜி கட்டுடைப்புக் குப்பைக் கல்லை இங்கா விட்டெறிவது?
வெட்கமாக இல்லை?? – இப்படித் தொடர்பில்லாமல் கழுதைத்தனமாகப் பின்னூட்டமிடுவதற்கு??
23/05/2020 at 21:26
சார்,அந்த அனாமதேயம் ஆசானுக்கு எழுதியதை உங்களுக்கு தவறுதலாக அனுப்பிவிட்டார் என நினைக்கிறேன்!
24/05/2020 at 07:24
:-) ஹ்ம்ம், சரிதான்!
(உருகி நெகிழ்ந்து உருண்டு பிறாண்டுவதில், தேர்ந்தவாசகர்கள் பெரும்பேராசானையே விஞ்சிவிடுவார்கள் போல?)
24/05/2020 at 12:46
ராஜீவ் கொலை தொடர்பாக அமைக்கப்பட்ட பல்நோக்கு விசாரணை குழுமம் இருபத்தி இரண்டு வருஷமா என்ன பண்ணுது?என்ற மர்மத்தையும் யாராவது சொன்னால் நன்று.
24/05/2020 at 15:33
ஐயா, புரிகிறது. பல பிரச்சினைகள் இருக்கின்றன.
1. வெறி பிரபாகரன் உயிரோடு உலவிக்கொண்டிருப்பதற்கு அப்பாற்பட்டு தன்னை வெளிப்படுத்திக் கொள்வார் என, பழ நெடுமாறன் ஐயா சொல்லிவந்தது நினைவிலிருக்கலாம். முதலில் இதனைச் சரிபார்க்கவேண்டும்.
2. நான்தாண்டேதமிழேன் கட்சி சீமார் உண்மையில் பிரபாகரனே எனும் ஒரு தரப்பு இருக்கிறது.
3. கர்ணாநிதியைப் புகழ்ந்து பாடிய ஸர்க்காரியா கமிஷன் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு நாற்பது ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டன. அதன் மீதான நடவடிக்கை என்ன என்பதுகூட எவருக்கும் புரிபடவில்லை. இந்த அழகில் முடிந்தவரை அந்தக் கமிஷன் அறிக்கையை வெளியில் எளிதில் அகப்படாதவாறு பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்வேறு, நம் திராவிடர்கள்.
மேலும், வெண்முரசு வேறு எப்போது முடியும் எனக் கவலையாக இருக்கிறது…
இந்த அழகில்… … கொமட்ல குத்தட்டா?