சுட்டிகள், குறுங்குறிப்புகள் இன்னபிற (2/n)

07/06/2020

விடாது குறிப்பு! ஹா!

7. பாரதக் கல்வி முறைமை/சட்டகம் குறித்த  மிக முக்கியமான ஆங்கிலக் கட்டுரை. நண்பர் ‘மரகதம்’ அவர்கள் எழுதியது. பாரத தர்மம் சார் கல்விமுறைக்காக விழையும் ஒவ்வொரு தகப்பனும் தாயும் படித்து அசை போடவேண்டியது இந்தக் கட்டுரை. அவசியம், பொறுமையாகப் படிக்கவும்.

Our Palace of Purusharth: Journey to a Dharmic Framework for Parents and Children – http://indiafacts.org/our-palace-of-purusharth/

அதே பதிவில் இருக்கும் ஆவணம் – பாரத தர்மத்தைக் குறித்தும், புருஷார்த்தங்களைப் பற்றித் தெரிந்துகொள்வதற்கும் படிப்பிப்பதற்குமான கால/துறை அட்டவணை: Dharmic Timetable: Purusharth_Schedule

-0-0-0-0-

8. ஹாலாத் (~ நிலைமை / சூழ்நிலை) ஹிந்தி ‘ராப்’ இசை-விடியொ – அவசியம் பார்க்கவும்; பாஷை புரியாவிட்டாலும், படங்கள் இருக்கின்றன. ‘ராப்’ அடிப்படை இலக்கணங்களும் ஒத்துழைக்கின்றன.ஆறரை நிமிடங்கள். நல்ல இசை.

வெறிபிடித்து அலைந்து பொதுச்சொத்துகளை அழித்தொழிக்கும் போராளிகளைப் பற்றியும், இஸ்லாமியத் தீவிரவாதத்தின், பிரிவினைவாதங்களைப் பற்றியும் விரிகிறது இது.

பேடித்தனங்களைத் தோலுரிக்கிறது; இம்மாதிரி விஷயங்கள், இம்மாதிரி வசீகர-தற்கால வடிவங்களில், நம் தமிழக இளைஞர்களை வந்தடையவேண்டும் என்பது என் அவா.

குறைந்தபட்சம் நாம் இவற்றைப் பற்றிச் சிந்திக்கவாவது ஆரம்பிக்கவேண்டுமல்லவா? கலவரங்களைக் குறித்த நிலவரங்களை நமக்கு அடுத்த தலைமுறைகளுக்கு எடுத்துச் செல்லவேண்டுமல்லவா? நம் நிகழ்வரலாறுகளிலிருந்து நாம் படிப்பினைகள் பெறவேண்டுமல்லவா?

Halaat | हालात | Hindi Rap that EXPOSED #TukdeTukdeGang | 2020: https://www.youtube.com/watch?v=3vkF5Ov1lv4

சுமார் 1:54  நிமிட அளவில், தீவிர இஸ்லாமியர்களால் படுகொலை செய்யப்பட்ட நம் பாவப்பட்ட பாமக ராமலிங்கம் அவர்களும் குறிப்பிடப் படுகிறார்.

-0-0-0-0-0-

9. 1997 வாக்கில் எழுத ஆரம்பித்த, படுபுத்திசாலி மகாமகோ வர்ஷா போஸ்லே  அவர்கள் (இவர் என் அபிமானத்துக்குரிய பாடகி ஆஷா போஸ்லே அவர்களின் மகள்; இவரும் பாடகிதான்!) ரீடிஃப்.காம் இணையதளத்தில் வசீகரமான வரலாற்றுத் தேவையான ஹிந்துத்துவ நிலைபாட்டை எடுத்து, பாரதத்தின் ஆன்மிக / லௌகீக / அரசியல் வளர்ச்சியின் தேவைபற்றியும், பாரதத்தின் எதிரிகளைப் பற்றியும் பலப்பல மிக முக்கியமான கட்டுரைகளை எழுதினார். 1997க்கு முன்பும் நிறைய எழுதியிருக்கிறார் என நினைவு – ஆனால் ரீடிஃப் கட்டுரைகள் என் நினைவில் இருக்கின்றன.

வளரும் பாரதம், மேன்மையை நோக்கி பாரதம் எனும் கனவுகளைத் தேக்கியுள்ள ஒவ்வொருவரும் படிக்கவேண்டிய கட்டுரைத் தொகுப்பு இது – அனைத்துக் கட்டுரைகளும் ஆன்லைனில் படிக்கக் கிடக்கின்றன.

http://www.rediff.com/news/var2002.htm

…ஆனால், ஆழ்ந்த வாசிப்பாலும் சிந்தனைகளாலும் (அதன் வழியான ஆவேசங்களால், வருத்தங்களால் ஏற்பட்ட மனோதத்துவப் பிரச்சினைகளாலும்) மிகவும் கஷ்டப்பட்ட, தன்னைத் துன்புறுத்திக்கொண்ட வர்ஷா அவர்கள், ஒருவழியாக 2012 வாக்கில் தன்னைத்தானே பொட்டில் சுட்டுக்கொண்டு போய்ச் சேர்ந்தார்.

-0-0-0-0-0-

10. மஹாமஹோ பெரும்பேராசான் வெற்றிவிரும்பியார் அவர்கள்   இந்தப் பதிவில் இப்படி எழுதியிருக்கிறார்….

ஆனால், அவரே அவர் சொல்வதற்கு மாறாக, அப்படியும் மகத்தான தன்னம்பிக்கையுடனும், மாளா ஞானத்துடனும் எழுதியிருக்கிறாரே…

நீயும் இடித்திருக்கிறாயே…

….எனவொரு (அதே) அன்பர் தேவைமெனக்கெட்டுக் கேட்டிருக்கிறார்!

என்னைப் பொறுத்தவரை, அதுவும்  தமிழ அலக்கியக் கொடுங்கோல்காரர்களைக் குறித்து, நான் ஒரு மிகை ஆன்மிக அனுபூதி நிலையில், நுண்ணறிவுடைய நுணலனைத்த நுண்ணுர்வுடன் நுணுக்கமாக அடிநுனி வரை அடைக்கப்பட்டிருக்கும் நுண்ணரசியல் குறித்து நுண்ணயர்ச்சியுடன்கூடிய நுண்பயபீதியுடன் இருக்கிறேன் என்பதில் எனக்கு நுண்மாற்றுக் கருத்துமில்லை. :-(

ஏனெனில், நுண்வெற்றிவிரும்பியார் என்ன எழுதினாலும் அது புனைவுதான், புனைவுமட்டுமேதான் என்றவொரு கதிமோட்ச நுண்நிலைக்கு நான் வந்து கொஞ்ச நுண்காலம் ஆகிவிட்டது.

அதாவது – அவர், ‘நான் உயிரியல் பற்றி அளவோடு எழுதுகிறேன்‘ என்பதும் புனைவு.

இதுதாண்டா ஆமைஓடு, ங்கோத்தா, இப்டீதாண்டா வளர்து அது‘ என்று அளவில்லாமல், படு தெகிர்யத்துடன்  உயிரியலின் மயிரியல்வழி நுண்அட்ச்சிவிடுவதும் ஒரு புனைவு.

எடுத்துக்காட்டாக – தலா ஒன்றொன்று ஆமைவடை, ஆமைஓடு (ஊக்கபோனஸாக, உள்ளே ஊமையாக இருக்கும் ஆமையுடன்) எடுத்துக்கொள்ளலாம். ஆழ்ந்து அவதானிக்கலாம். ஓடாந்திரி ஆமையோடு ஓட முயலலாம். யானையுடன் பொருதிய முயலகன் பற்றியும் அகத்தில் கண் கொண்டு ஆய்ந்தறியலாம்

(சரி. கீழே இருக்கும் கூறுகளிலிருந்து தலா ஒன்றைக் கூறுகெட்டு எடுத்துக்கொள்ளலாம்)

…ஆமைவடை தன் வடிவத்தை ஆமையிடமிருந்து பெற்றதா  (=ஆமைமுதல்வாதம்) அல்லது ஆமை, தன் வடிவத்தை ஆமைவடையின் முப்பரிமாணங்களிலிருந்து பெற்றதா (=ஆமைவடைமுதல்வாதம்) என்கிற மசுர் பிளக்கும் பிரச்சினையை, அணுவியல் ரீதியில் அணுக்கமாக அணுஅணுவாக அணுகலாம்.

தொடர்பீலாவாத டகீலாநந்தா ‘க்ருஷ் அஷோக்‘ அவர்கள் சாப்பாட்டுக் க்ருஷ்ணர். ஆகவே அவர் அபத்தரீதி ஆமைவடைமுதல்வாதியாக இருப்பார்.

…ஆனால் நுண்ஆசானோ, ஓசோன் லேயருக்கும் அப்பால்  நுண்சஞ்சாரம் செய்பவராதலால் அவர் ஆமை நுண்முதல்வாதியாக இருப்பார்.

நுண்கருத்துச் சுதந்திரம் எனவொரு நுண்ஜந்து இருக்கிறதே, ஐயன்மீர்! :-(

இன்னொரு விஷயம், இதெல்லாம் ஓரளவு நுண்தமிழ் நுண்விளிம்பாலஜி அலக்கியத்துடன் பரிச்சயம் இருக்கும் நுண்அபாக்கியவான்களுக்குத் தெரிந்திருக்கலாம்:

“நுண்புனைவு தன்னைத்தானே நுண்புனைவோன் வழியாகப் புனைபுனையென்று நுண்நுங்கெடுத்து நுண்புனைந்து கொள்கிறதுவேறு, என்பதே ஒரு புனைவு என்பதும் நுண்புனைவுதான்!”

ஆகவே, போங்கடே.

உங்கள் நுண்பிரச்சினை க்ளோஸ்ட்.

ஆள வுடுப்பா. நுண்ஜூட்.

அவசரப் பின்நுண்குறிப்பு: நம் வணக்கத்துக்கும் மரியாதைக்கும் உரிய பெரும்பேராசான் அவர்கள், மருதத்திணை வெள்ளாமைக்கும், நெய்தல்திணை கடலாமைக்கும் உள்ள தொடர்புகளைப் பற்றி ஒருமாதிரி ஆற்றாமையுடன் இன்னொரு உயிரியல் புதினம் ஒன்றை எழுதிக் கொண்டிருக்கிறார் என்று… …

முடிந்தபோதெல்லாம், நுண்வேலைகளுக்கு இடையே நான் நுண்வெட்டியாக இருக்கும்போதெல்லாம் — இம்மாதிரி நுண்சுட்டிகள், நுண்பரிந்துரைகள் வரலாம். கொஞ்சம் நுண்ஸீரியஸ். கொஞ்சம் நுண்நகைச்சுவை.

நுண்நன்றி.

 

 

 

13 Responses to “சுட்டிகள், குறுங்குறிப்புகள் இன்னபிற (2/n)”


 1. நுண்பின்னூட்டம் இடலாமா?


  • நுண்கண்டிப்பாக! தாராளமாக நுண்ணிடலாம். ;-)

   • பொன்.முத்துக்குமார் Says:

    அது நுண்ணூட்டம் என்று அழைக்கப்படுமா ?


    • யோவ்! :-)

     உம் நுண்கிண்டல் மெச்சப்பட்டது. ‘நுண்ணூட்டம்’ தமிழகராதியில் கோர்க்கப்படும்.

    • பொன்.முத்துக்குமார் Says:

     உமது நுண்மெச்சலால் நுண்புளகாங்கிதம் அடைந்தோம். நுண்கிண்டலைக்கூட நுண்டல் எனலாமே (சுண்டல் போல). (டாய்ய்ய்ய் அடங்கமாட்டியா நீ) மிகவும் நுண்றி.


    • எம் நுண்ணுயிலில், பாத்தியதை உள்ள வாரிசுதாரரான உமக்கே ஒத்திசைவு வந்தடைவதற்கு ஆவன செய்யப் படும்.

 2. AK Says:

  நுண் இடிப்பாரை இல்லாத ஏமரா வெற்றிவிரும்பியான்
  கெடுப்பார் இலானும் கெடும்.

  ஆதலால் தொடர்ந்து நுண்ணிடிக .

 3. Alagappaiyengar Seshagiri Says:

  அரே ராம் பாய்! அசலாமு அலேகும்!! ( உச்சரிப்பு சரியா தெரியவில்லை) இது எப்போதிலிருந்து ?கவனிக்கவே இல்லையே !
  “ஹலால்” சான்றிதழைத்தான் சொன்னேன்.எவ்வளவு கொடுத்தீர்கள் ?


 4. […] மகிழ்ச்சியுடன் பதித்தும், இன்றுதான் ஒருவர் இதனை கவனித்திருக்கிறார். […]


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s