மைஸூர்பாக் கட்டியை அப்படியே வாய்க்குள் போட்டு அதனை உமிழ்நீரால் குளிப்பாட்டிக் கரைப்பது சரியா? அல்லது அதனைக் கடித்துப் பொடிப்பொடியாக்கி உண்ண வேண்டுமா?

28/06/2020

​பிரச்சினை, பிரச்சினை

…ஒருசமயம் வீட்டில் வேறு எவரும் இல்லாதபோது) மிகுந்த குண்டுஒல்லி தெகிர்யத்துடன் (+மாளா தன்னம்பிக்கையுடனும்), குடும்பத்தி லுள்ளவர்கள் திரும்பிவரும்போது ஒரு மாதிரி இனிய ஆச்சரியத்தை அளிக்கலாம் என்று என்னுடைய இந்த மைஸூர்பாக் ப்ராஜெக்டினை ஆரம்பித்தது, என்  மனதில் இன்னமும் கருமையாக நினைவில் இருக்கிறது. :-(

சனியன்.

இலுப்புச் சட்டியில் சர்க்கரையைக் கரைப்பதிலிருந்து ஆரம்பித்தது, இந்தச் சுள்ளிக்காட்டு இதிஹாஸம்; விறகு அடுப்பு + புகை + வெண்ணைய், நீர் கலந்து சர்க்கரையை உருக்குதல் என… சர்க்கரை பாகாகி டமாலென்று ஒரத்தில் கருக்கல்… ஐயோ!

…அவசரம் அவசரமாக அடுப்பிலிருந்து வாணலியை இறக்கி… கண்ணெரிதல்… கொஞ்சம் வாணலியில் இருந்த கொழகொழா ஜந்து குளிர்ந்து அது மறுபடியும் உறைய ஆரம்பித்து… அடேய், கம்பிப்பதம்?? எங்கேடா மீனாட்சியம்மாளின் ‘சமைத்துப் பார்?’

மீனாட்சி, ஐஸக் அஸிமோவின் ஃபௌண்டேஷன் ட்ரிலஜி பின்னால் பயத்தில் உறைந்து ஓளிந்து கொண்டிருந்தாள், விட்டேனா பார்…

 …ஆக, முன்பே சலித்த கடலைமாவை சலிப்பில்லாமல் கொஞ்சம் கொஞ்சமாகக் கலந்து சட்டுவத்தால் பிசின் மாதிரிக் கொதிப்பதைப் பதம்பார்த்து… சட்டுவத்தால் குழப்பக் குழம்பைத் தூக்கித்தூக்கிப் பார்த்து  V வடிவத்தில் வழிகிறதா என அவதானித்து… போறுண்டாப்பா

ஐயய்யோ! ஒரு பெரிய தாம்பாளத்தில் நெய் தடவி  தயாராக வைத்திருக்க வேண்டுமே!  (தேட்றா தாம்பாளத்தை!)

அதற்குள் ஐயகோ… மைஸூர்பாக் கலவை கெட்டிக்க ஆரம்பிக்க… … வாணலியை எட்றா அடுப்பிலிருந்து…

தாம்பாளம்… நெய்….  தடவுடா! (நாக்கில் ஏகத்துக்கும் உமிழ் நீர்!)  வாணலியை மறுபடியும் அடுப்பில் வைத்து… அடேய் கீழே ரெண்டு விறகு வைடா! அடுப்பு அணைந்துகொண்டிருக்கிறது….

அதற்குள்… என்ன களேபரம்! :-( என்னருமை மைஸுர்பாக் குழம்பு அநியாயத்துக்குக் கெட்டித்துப் போய்  கான்க்ரீட்டை விட உறுதி வாய்ந்ததாக மாறிவிட்டது. கருமைவேறு, க்ருஷ்ணா க்ருஷ்ணா… :-( சட்டுவத்தைக் கூட அதிலிருந்து உருவி எடுக்க முடியவில்லை.

விடாது கருப்பு. :-(

…பின்னர் மிகுந்த, மனதையும் உடலையும் தளரவைக்கும் கடின உழைப்புக்குப் பின் (ஹ்ம்ம், இம்மாதிரி அனுபவங்களால், அவை எனக்குக் கொடுத்துள்ள பயிற்சியால் – என்னால் வெண்முரசின் அத்தியாயங்களை வெகு சுளுவாகப் படித்துவிடமுடிகிறது என்பதையும் ஒப்புக்கொள்ளவேண்டும்!) வாணலியையும் கரண்டியையும் இனிய க்ருஷ்ணனிடம் இருந்து மீட்டேன்.

ஒரு மணி நேர உழைப்பு, அலுப்பு, வெறுப்பு. + சமையலறைச் சுத்திகரிப்பு

கொடும்போர் நடந்ததற்கான, கொலை அரங்கேறியதற்கான தடயங்கள் அனைத்தையும் யோசித்து யோசித்து அகற்றினேன். (நன்றி ஷெர்லக் ஹோம்ஸ்!)

-0-0-0-0-0-

மனைவியார்  அவர்கள் சிறிது நேரம் கழித்து குழந்தைகள் சகிதமாக வந்தார். அப்போதுதான் சுத்திகரிப்பு சுத்தியினிப்புகளை ஒருவழியாக முடித்திருந்த நான், ஒன்றுமே நடக்காதது போல கையில் ஒரு புத்தகத்தை வைத்துக்கொண்டு புங்க மரத்தின் அடியில் விரக்தியுடன் உட்கார்ந்துகொண்டிருந்தேன்…

மனைவி: “ஆ! சமையலறை எப்படி இவ்வளவு சுத்தமாக ஆகிவிட்டது! ஆச்சரியமாக இருக்கிறது? ஏனிப்படி பேய் உழைப்பு, தேவையா?”

நான்: “இல்லை அன்பே! நான் பெண்ணியவாதியல்லவா? இதெல்லாம் பெரிய விஷயமா?? ஏதோ என்னால் முடிந்தது… ஹா!”

மனைவி, வேலை செய்துகொண்டே: “எல்லாம் சரி. சர்க்கரை எப்படி அத்தனையும் தீர்ந்துவிட்டது? புரியவில்லையே! நெய் வாசனைவேறு, ஏதோ கருகியிருக்கிறது…”

ஆ! ஐயய்யோ! திருடனைத் தேள் கொட்டிவிட்டதே!

“…மேலும், நீ தலைகீழாக உன் புத்தகத்தைப் பிடித்துக்கொண்டிருக்கிறாய்வேறு! என்ன பைத்தியமா? இதுதான் நீ மைண்ட்ஃபுல்லாகப் படிப்பதன் அழகா??”

நான்: “இல்லை கண்ணே! நான் தலைகீழாகவும் புத்தகங்களைப் படிக்கமுடியுமா எனவொரு லேட்டஸ்ட் ப்ராஜெக்டில் மும்முரமாக இருக்கிறேன்!”

-0-0-0-0-0-

ஆக, மைஸூர் பாக் என்றாலே எனக்குக் கொஞ்சம் பயம் கலந்த மரியாதை இருப்பதில் உங்களுக்கு ஒரு ஆச்சரியமும் இருக்கக் கூடாது.

இருந்தாலும் சிலபல இனிய நண்பத்துரோகிகள் சிலசமயங்களில் மைஸுர்பாக் துணுக்குகளை அனுப்பிவிடுகிறார்கள். அப்படி சுமார் ஒருவாரம் முன்பு வந்தது இது… இதைச் சாப்பிட்டு எனக்குத் தலைசுற்றலே வந்துவிட்டது…

இன்னாமேரீ படுபீதியளிக்கும் பயங்கர மைஸூர்பாக் அட்டாக்! :-( (கருப்பின் நினைவுகள் வந்துவிட்டனவே!)

​என் உயிரினும் உயிரான மைஸுர்பாக் எனும் இனிய Mysore PAK சிலகாலத்தில் பலப்பல காரணங்களால் கொஞ்சம் என்னை வெறுக்கவைத்து ஆகவே என் செல்ல, My Sore PAK  ஆக உருமாற்றம் கண்டபின் —  அதன் பொறுக்கமுடியாத தொடர் காமாலைக்கண் தகிடுதத்தங்களால் புளித்துப் போய் My Sour PAK என ரஸவாதமாற்றம் அடைந்துள்ளதை நினைத்தால்…

ஆனாலும் எனக்குப் பிடித்த, இன்ப லாகிரி அளிக்கும் மஹோன்னத இனிப்பு என்னவென்றால் மைஸூர்பாக் தான்.

கேள்வி என்னவென்றால் – இந்த மைஸூர்பாக்கிஸத்தை என்ன செய்யலாம் என்பதுதான். எவ்வளவு முறைதான் உடைத்த மைஸூர்பாக்கினையே உடைப்பது, சொல்லுங்கள்? :-(

பார்க்கலாம்.

:-(

4 Responses to “மைஸூர்பாக் கட்டியை அப்படியே வாய்க்குள் போட்டு அதனை உமிழ்நீரால் குளிப்பாட்டிக் கரைப்பது சரியா? அல்லது அதனைக் கடித்துப் பொடிப்பொடியாக்கி உண்ண வேண்டுமா?”

 1. nparamasivam1951 Says:

  Mr.Ananthakrishnan is contradicting his own views of 2019 in 2020. I have the head the word “blind-support” but I am seeing a “blind supporter of Nehru. Even after losing the 1962 war badly, and even after hundreds of Jawans lost their life and China grabbing sizeable Indian land, Nehru loved China. And Ananthakrishnan also agrees to that view point. What more can we expect from such men?


  • //What more can we expect from such men?

   See young Paramasivam, probably that was a rhetorical question.

   Still. It merits an answer.

   These folks are capable of much, much more. They will outperform their basic virulence, every time. E V E R Y time.

   Men of Straw. Weak men can NEVER be trusted. But, our Bharat’s then Government(via Congress (via People (via Gandhi (via Motilal & his nepotistic pressures))))) trusted this Man of Straw.

   And, the rest is not ONLY a terrible loss of Geography but also a debilitating onset of Twistory.

   And of course more men of straw, our very own clownish ‘cholak-kollai bommaigal’ actively bat for their ilk. All very understandable, no?

   🙏🏿👿🔥

 2. dagalti Says:

  Specifically what claim you contesting?
  Are you claiming that US’s offer was more than a feeler? 
Are you claiming it was formal offer and Nehru misrepresented it in parliament?

  His stance was rather clear that ‘India deserves a place we are not going to be a pawn in this attempt by US to expel Xina and include us (which they won’t succeed in anyway)’.

  Why is such a stance objectionable?
To understand it as mere Sinophilia is a tiresome misunderstanding when he was being quite practical (yes, Nehru the practical politician not the dreamy idealist lotus eater!).

  If UN was to truly realise its charter and not become another ‘League of Nations’ it needed to include a behemoth like PRC.
  It ought not be a hollow chamber for polar powers to play things out and not bypass the charter; then it was indeed sensible to take the stand he did then. THEN. 
Wasn’t it?

  In fact, a few years later when Russia sent a feeler, he rebuffed the same only to have Bulganin respond to him saying ‘we proposed the idea to get your view; you are right, this is not the time. Perhaps later’. Thereby it was rather clear, neither bloc had the intention nor wherewithal to ensconce India into some pre-eminent position in the UN (as Nehruphobes like to imagine).

  https://www.wilsoncenter.org/publication/not-the-cost-china-india-and-the-united-nations-security-council-1950

  One may justifiably ask the question, what good came of India’s principled stance when we were anyways attacked in 1962. We didn’t seem to develop any goodwill at all for all that abnegation.

  But didn’t the overt friction start only after the Tibetan uprising and specifically after the accommodation of Dalai Lama? (Am I wrong here?)

  {The selfsame Dalai Lama who most graciously said last year that ‘Nehru was self-centered’ for not giving up PM’ship to Jinnah. (உன்னைய மாஓகிட்டேர்ந்து காப்பாத்துனதுக்கு….சரி போ. நல்லா இருய்யா)}

  
f so, then how does that make Nehru’s justified stances of 50s incorrect retrospectively?

  About a decade back excerpts from G.Parthasarathi’s diary were made public where it was noted that Nehru apparently specifically instructed GP to not trust the Chinese, be skeptical about Panch-sheel spiel and bypass Krishna Menon, who was clouded by communist leaning.

  http://archive.indianexpress.com/news/dont-believe-in-hindichini-bhaibhai-nehru-told-envoy/570332/1

  And yet we see to this day, that Nehru is thought of as a communist sympathiser (he criticises communism as early as his autobiography) and as someone who was a wide-eyed idealist who reposed blind faith in the general goodness of our Xinese brothers.

  /புங்கமரம், விறகு/

  ஏதும் வனாந்தரத்தில் குடிலமைத்து வாழ்கிறீர்களா?


  • Chill. Will eventually write something.

   Am aware of the data pointed to by you. + may be some more, about the whole background of the resounding 1962 victory of Nehru/Congress over the Indian Armed Forces, at the ‘border.’

   I standby my stance. He was indeed CC. An accidental leader, who did not quit in spite of being aware of his terrible inadequacies and questionable credentials; there was neither absolute merit nor relative merit in him.

   Yes.

   Dealing Lama as well as his PM can never be trusted. Ungrateful leeches.

   These jokers complain about ‘rising intolerance!’ And Bharat is spending SO much funds on them apart from giving them all kinds of hedges.

   // ஏதும் வனாந்தரத்தில் குடிலமைத்து வாழ்கிறீர்களா?

   Was.


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s