சுட்டிகள், குறுங்குறிப்புகள் இன்னபிற (4/n)

22/07/2020

15->18.

15. கல்லார் ஒருவர் உளறேல்… பொய்யெனப் பெய்யும் பிழை.

அண்மையில், ஒரு குளுவானார், கோமணம் அவிழும் புளகாங்கிதத்துடன் புல்லரிப்பு ரீதியில், வெண்முரசு புகழ் ஜெயமோகன் அவர்களை, ‘நவீன வியாசர்’ என விளித்திருக்கிறார். (இதற்கான ஸ்க்ரீன்ஷாட் ஒரு அடுத்ததலைமுறை ஏழரை மூலம் வந்தது – ஆனால் அது ஆபாசமாக இருந்த காரணத்தால் பதிக்கவில்லை)

இது ஒரு புறமிருக்க, 4 விஷயங்கள்.

1. பாரதத்தில் – கருத்துரிமை கருத்தரிப்புரிமை கருத்தழிப்புரிமை எனப் பலவுரிமைகள் உண்டு.  உரியடி உற்சவத்துக்குமேகூட  ஒவ்வொரு சவத்துக்கும் உரிமை உண்டு. இதில் நாம் நிறை காண முடியாது.

2. வியாசர்பாடி வியாசர்பாடி எனவொரு பகுதி சென்னையில் இருக்கிறது. அதனைக் குறித்து வியாசர் பாடினாரா? அல்லது வியாசர் போட்டுக்கொண்டிருந்த மார்க்கச்சை இங்கே நழுவிவீழ்ந்தபோது அதனைப் பயபக்தியுடன் கையில் ஏந்திய திராவிடர் ஒருவர் அதற்கு ஒரு கோவில்கட்டி அதனைப் பாடியதால் வியாசர்பாடி எனக் கருதப் பட்டதா? அல்லது வியாசர் தன் பாடி பில்டிங் ஆர்னால்ட்ஷிவாஜிநகர் விவகாரத்தை அங்கு செய்தாரா?  இப்படி வியாசர் என்றால் டர்புர்ரென்று வியாக்கியானம் கொடுக்கும் பராக்கிரமம் மிக்கவர்கள் நாமன்றோ?

யாராவது இடக்குக்கூவான் எதிர்க் கேள்வி எதிரிக்கேள்வி கேட்டால், “மோனியர்-வில்லியம்ஸ் ஸம்ஸ்க்ருத-ஆங்கில அகராதியிலேயே அப்படித்தான் இருக்கிறது!” என ஒரே போடாகப் போட்டுவிடலாம். பிரச்சினை ஒன்றுமில்லை.

3. வியாசர் என்றால் (ஸம்ஸ்க்ருதத்தில்) ~பகுப்பவர் (சும்மா, கூறுகூறாகக் கத்தரிக்காயைப் பிரிப்பது அல்ல, விஷயங்களை ஆழமாகவும் அவற்றின் பின்புலங்களிலும் வைத்து அறிந்துகொள்வது) என அர்த்தம். பரிணாம ரீதியில் அவ்வப்போது அக்கால/தற்கால நிலவரங்களுக்கு ஏற்ப அடிப்படை உண்மைகளை (ஞானத்தை, அதாவது வேதத்தை) பகுப்பவர் என்று. பௌராணிக மரபில், பாரதப் பாரம்பரியத்தில் கிட்டத்தட்ட 30 வேதவியாசர்கள் (28?)  அதாவது வேதப் பகுப்பாளர்கள் இருந்திருக்கிறார்கள் எனக் குறிப்புகள் இருக்கின்றன. மஹாபாரதத்தை எழுதித்தொகுத்த வேதவியாசர் அவர்களின் பெயர் க்ருஷ்ண த்வைபயனர் எனவும் குறிப்புகள் இருக்கின்றன

வியாசர் அல்லது வேதவியாசர் என்பதெல்லாம் ஒரு ‘டைட்டில்’ வகைப் பெயர்கள். மரியாதையுடன் ஒருவரைக் குறிப்பிடும் சொற்கள்.

ஒரு எதிர்மறை எடுத்துக்காட்டு வேண்டுமென்றால் – இது கலைங்கர் என்பதுபோல. ஆனால் ‘நவீன கலைங்கர்’ என ஒருவர் நம் திராவிடச் சூழலில் உருவாகி வரமுடியாது. கொட்டையை நசுக்கிவிடுவார்கள் நம் பேடித் திராவிடர்கள்.

ஆனால் நவீன வியாசர் என ஒருவரைக் குறிப்பிடலாம். ஒரு பிரச்சினையுமில்லை. ஹிந்துத்துவர்கள் சிரித்துக்கொண்டே அகன்று விடுவார்கள்; அவர்களுக்கு நகைச்சுவை உணர்ச்சியும் தாஸ்தி.

4. மேலும். ஜெயமோகன் அவர்களும், பகுத்துப் பிரித்து மேய்பவர். வியாசர்.  அடிக்கடி, இதனை

“நான் எந்தவொரு விஷயத்தையும் இரண்டுவிதமாக அணுகி மூன்று விதமாகப் புரிந்துகொண்டு நான்கு விதங்களில் விளக்கி ஐந்து விதங்களில் சொதப்பி ஆறு விதங்களில் முன்பதிவுகளை அழித்து ஏழு விதங்களில் மீளுருவாக்கமாக எழுதி எட்டு விதங்களில் வாசகர் கடிதம் எழுதிக்கொண்டு ஒன்பது வாசகர்களிடம் கொண்டு செல்கிறேன்; அவர்கள் பத்து விதங்களில் அதனைப் புரிந்து கொள்வார்கள். ஆகவே நான் தான் ஒட்டுமொத்த தமிழ, பாரத மனச்சாட்சிக்கும் கலாச்சாரத்துக்கும் பிரதிநிதி!”

…என்கிற ரீதியில் பலமுறை எழுதியிருக்கிறார்.

ஆகவே அவர் வியாசரில்லாமல் வேறு எவர்தான் வியாசராகக்கூடும், சொல்லுங்கள்?

அவரிடம் ஒரேயொரு கோரிக்கைதான் வைக்க முடியும்.

ஐயன்மீர்! தாங்கள் நவீன வியாசர் என்பதில் எமக்கு ஒரு மாற்றுக்கருத்துமில்லை.

ஆனால், இஸ்லாமின் மொஹெம்மத் நபி செய்ததுபோல, “நான் தான் கடைசி வியாசன். எனக்குப் பிறகு எந்தவொரு கொம்பனும் வியாசனாக ஆகவே முடியாது! முட்யவே முட்யாத்!!” என அழிச்சாட்டிய அட்டூழியம் செய்யாமலிருந்தால் சரி.

ஏனெனில் நான் என்னை, இனிமேலிருந்து ‘பின் நவீனத்துவ வியாசன்’ என்றழைத்துக்கொல்ல ஒரு திட்டம் கைவசமிருக்கிறது.

நன்றி.

​-0-0-0-0-

16. சுமார் 35 வருடங்களுக்கு முன், சுந்தரராவ் எனும் கணிதக்காரர் எழுதிய ஒரு புத்தகத்தை ( Geometric Exercises in Paper Folding, 1893ல் பதிப்பிக்கப் பட்டது) வைத்துக்கொண்டு பள்ளிப் பிள்ளைகளிடம் விளையாடியது நினைவுக்கு வருகிறது.

அது குறித்து எழுதிய ஒத்திசைவு குறிப்பு: சுந்தர ராவ்: காகித மடிப்புகளின் மூலம் வடிவவியல்/கணிதம் கற்றுக்கொள்வது எப்படி? (1893) 06/05/2017

வரும் சனிக்கிழமை – 25 ஜூலை அன்று, வராஹமிஹிரா அறிவியல் மன்றக்கார ஆர்வலர்கள் ஒரு பேச்சுக் கச்சேரியை இது குறித்து நடத்தப் போகிறார்கள் எனக் கேள்விப்பட்டேன்.

ட்விட்டர் அறிவிப்பு.

ஃபேஸ்புக் அறிவிப்பு.

இதனை நடத்தப்போகிறவர் குறித்து (ஸ்ரீ அருண் ஸ்ரீனிவாஸா அவர்கள்) நான் அறியேன். ஆனால் பொதுவாகவே வராஹமிஹிரா காரர்கள் தரம் வாய்ந்தவர்கள்.

ஆகவே, உங்களுக்கு நம்முடைய அறிவியல் பாரம்பரியங்கள் – நம் முன்னோடிகள் குறித்து அறியவேண்டுமென்றால் – மேலும் நம் குழந்தைகளுடன் விளையாட்டுரீதியில் விஷயங்களைக் கற்றுக்கொள்ளவேண்டும்  எனப் பட்டால் – அவசியம் இதில் பங்குபெறவும்.

-0-0-0-0-

17. வெளிச்சத்தின் மறுபக்கம் – ஸேவாலயா முரளி அவர்களுடன் ஒரு பொதிகை நேர்காணல்.

ஸ்ரீ முரளி அவர்களின் சமூகசேவைகள் அழகானவை; பாபுஜி, பாரதி, விவேகானந்தர் போன்றவர்களின் சிந்தனைகளை பௌதீகரீதியாக மேலெடுத்துச்செல்லும் இவருடைய முனைவுகள் போற்றத்தக்கவை. சிறார் கல்வி, தொழிற்கல்வி, மருத்துவமனை, முதியோர் நலம், கிராம அபிவிருத்தி… எனப் பலப்பல விஷயங்களில் போற்றத்தக்க விஷயங்களைத் தொடர்ந்து அயர்வில்லாமல் செய்துவருகிறார்.

ஸ்ரீ முத்துராமகிருஷ்ணன் (சக ஏழரைகளில் ஒருவரும், ஜெயமோகனால் அளவுக்கதிகமாகப் புகழ்பாடப்பெற்றவதுமான இரட்டைப் பெருமைகளுக்கு உரித்தானவர்!)  அவர்கள் வழியாகத்தான் இம்மாதிரி உதாரணபுருஷர் இருப்பதைக் தெரிந்துகொண்டேன். ஒன்றிரண்டு வருடங்கள் முன்னால் ஒருமுறை இந்த அமைப்பினர் நடத்தும் திருநின்றவூர் பக்க கசுவா கிராமப் பள்ளிக்கும்  ஏழரை கைங்கரியத்தில் சென்றிருக்கிறேன். (அதன் மாதிரி ‘அறிவியல்’ லேப் என் உள்ளத்தைக் கொள்ளை கொண்ட விஷயங்களில் ஒன்று)

முத்துராமகிருஷ்ணன் அவர்களும் தன்னுடைய தனிப்பட்ட முறையில் பலப்பல நற்காரியங்களில் ஈடுபடுவதற்கு அப்பாற்பட்டு, ஸேவாலயா அமைப்பின் அறங்காவலர்களில் ஒருவராகவும், வழிகாட்டியாகவும், களப்பணியாளராகவும் இருக்கிறார்.

சரி. விடியோவை அவசியம் பார்க்கவும். சுமார் 20 நிமிடங்கள்.

சர்வ நிச்சயமாக ஸேவாலயாவும் முத்துராமகிருஷ்ணன்களும் போஷகம் செய்யத் தக்கவர்கள். கொண்டாடப் படவேண்டியவர்கள்.

-0-0-0-0-

18.

திராவிடத் திரு(ட்டு)மந்திரம்

ஒன்றே குளம் ஒருவனே கொக்கு
ஒன்றே கொக்கு ஒருவனே புறங்கையை நக்கு
ஒன்றே கொள்ளை ஒருவனே திராவிடன்
ஒன்றே மயிர்-மை ஒருவனே தலை-மை

(– விக் ரம ஊர் வசியம் (அல்லது) மசி-யம் (நச்சுனார்க்கசந்தர் உரை))

மேலும் படிக்க: ‘ஒன்றே குலம், ஒன்றே குளமான வரலாறு’ – எந்நேரமும் குளம், ஆறு, ஏரி, கான்ட்ராக்ட் என ஊழல் நினைப்பில் இருக்கிறதா தி.மு.க?

END

11 Responses to “சுட்டிகள், குறுங்குறிப்புகள் இன்னபிற (4/n)”

 1. Ramesh Narayanan Says:

  15. …’கரையெல்லாம் செண்பகப்பூ’ தோட்டத்துச் சொந்தக்காரரான வீரபத்ர வியாசன், எங்கவூர் ‘த ஹிந்து’ ஏஜென்டான பிஎம்வி வியாசன் என வேதவ்வியாசக் கொடிவழி வந்த ஒர்ஜினல்கள் இருக்க… யாரங்கே, இந்த ந(க்)கல் வியாசனை இழுத்துக் கொண்டு வாருங்கள்

 2. Muthukumar Says:

  Point 18


 3. //ஆகவே, உங்களுக்கு நம்முடைய அறிவியல் பாரம்பரியங்கள் – நம் முன்னோடிகள் குறித்து அறியவேண்டுமென்றால் – மேலும் நம் குழந்தைகளுடன் விளையாட்டுரீதியில் விஷயங்களைக் கற்றுக்கொள்ளவேண்டும் எனப் பட்டால் – அவசியம் இதில் பங்குபெறவும்.//

  Badri’s post on the same
  Currently, Varahamihira Science Forum lecture is on – by Prof Arun Srinivasa on “Learning Geometry through Paper folding”. https://youtu.be/iPOYASn6nFo

  The talk is based on a book published by Sundara Rao in the 19th century! Yes. You can get it from archive dot org link below.

  https://archive.org/details/tsundararowsgeo00rowrich

  Regards,
  Venkatramanan

 4. dagalti Says:

  NEP பற்றி…


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s