சுட்டிகள், குறுங்குறிப்புகள் இன்னபிற (5/n)

31/07/2020

19->22

19. என்னுடைய ~முப்பது வருடங்களுக்கு முந்தைய  ‘காணக்கண்கோடி வேண்டும் கைதலையெழுத்துத் தமிழை’ உங்களுக்கு வெகுமதியாக அளிப்பதில் பெருமைப்படுகிறேன். (இது என்னுடைய எழவெடுத்த அனுதினக் குறிப்புகளில் இருந்து)

நான் பாக்கியசாலி. திலகவதியின் [இவர் ஒரு பொலீஸ் உயரதிகாரி] சிறுகதைகள் ‘முப்பதுகோடி முகங்களாக’ தொலைக்காட்சியில்  உருவெடுப்பதை 18.9.91 அன்று கண்டுகளித்தேன். [இது, நம் சென்னை தூர்தர்ஷன் தயாரித்த நாடகவரிசை – நம் வரிப்பணம் ஸ்வாஹா!]

மாதிரிக்கு ஏஎஸ் பன்னீர்செல்வம் ஆச்சரியப்பட்டுப் பேசுவதாக வரும் வசனம் -“நீங்கள் ஏழைகளாக இருந்தாலும் நேர்மையாக இருக்கிறீர்களே!”

வசனம்: சஞ்சயன். [இவர் இலங்கையின் அரைகுறை எழுத்தாளர்களில் ஒருவர்: செ. யோகநாதன் என நினைக்கிறேன்/நினைவு]

– இவர் என்ன செய்வார் பாவம்! ஒர்ரிஜினல் கதை திலகவதியால் பண்ணப்பட்டதாயிற்றே! இவருக்கு [திலகவதி] நல்லவேளை, நல்ல நாவலாசிரியை என்றுதான் சாந்தோம் கலைத்தொடர்பு நிலையத்தினர் தெரிவுசெய்து பரிசு அளித்தனர். நம் பாக்கியம்.

மக்களின் வரிப்பணம் எப்படி முப்பதுகோடி முகங்களாக மாறுகிறது என்பது நாம் அறிந்துதெளிந்து புளகாங்கிதம் அடையவேண்டிய விஷயம்.

ஏஎஸ்பன்னீர்செல்வம், ஏஎஸ்பன்னீர்செல்வம் எனவொரு தண்டக்கருமாந்திரமார், ஊடகத் துறையில் ஆங்கிலபிஸ் தமிள்பிஸ் எனச் செங்கோலோச்சிவருகிறார் அல்லவா? (இவர்தாம்  உதிரி தினசரி ‘த ஹிந்து’வின் தற்போதையஆஸ்தான ரீடர்ஸ் எடிட்டர் எழவாளர்)

அவர் இன்னொரு தண்டக் கருமாந்திர இலக்கியாயினியின் (மன்னிக்கவும், இவர் போராளிப்புயலி பெருந்தேவியல்லர்!) சிறுகதையின் நாடகமாக்கத்தில் ஒரு காலத்தில் பங்குபெற்றவர். நடிகராக. அப்போதுமேகூட! நடிப்பு நேர்மையாளர்கள்!

அவர்தாம், இந்த ‘நீங்கள் ஏழைகளாக இருந்தாலும் நேர்மையாக இருக்கிறீர்களே’ எனும் தத்துவார்த்தமான வசனத்தை உதிர்த்த பண்பாளர்.

பின்னர் ஒரு சமயம் என் நண்பர் ஒருவர் (எனக்கும் திராவிட ஏஎஸ்பி பெரியாருக்கும் பொதுவானவர்) அவரிடம் எனய்யா இப்படிப்பட்ட வசனமெல்லாம் பேசுகிறீர்கள் எனக் கேட்டதற்கு, நம் திராவிட ஊடகப்பெரியார் சொன்ன பதில்கள். 1) ஹிஹ்ஹி 2) நடிப்பு வசனம் வேறு என் கருத்துவேறு 3) தொழில் வேறு தனிப்பட்ட என் கருத்து வேறு.

நல்ல நடு நிலைமைடா! ஊருக்கு – ஒய்ங்காஇர்ங்க நேர்மை அறம் ஊடக தர்மம் நாணயம் மயிறு மட்டை என உபதேசம், வூட்ல…*&#@%

எப்படிப்பட்ட விரிசல் அயோக்கியர்கள் நம் அறிவுஜீவிக் கூவான்கள்!

நல்லா வெளங்கிடும்டா டமிலகம்!

20. என் அன்புக்கும் மரியாதைக்கும் (ஏன், ஆராதனைக்குமேகூட) உரிய அம்மணி மீனாக்ஷி ஜெய்ன் அவர்களால், திறக்கப்பட்ட கண்கள் அநேகம்! அவர் ஜொலிக்கும் படிப்பாளி, பண்பாளர், கடின உழைப்புக்குத் தயங்காதவர். (மஹாமஹோ கிரிலால் ஜெய்ன் அவர்களின் புதல்வி – இவரைப் பற்றியும் ஒரு முடிந்தபோது ஒரு சிறு குறிப்பையாவது எழுதவேண்டும்)

அயோத்யா பற்றி மாய்ந்துமாய்ந்து உழைத்து, தரவுகளைச் சேகரம் செய்து, நேர்மையான, பப்பரப்பாவற்ற (இப்போது எனக்கு இவற்றின் எதிர்மறையாளரான ரொமிலா தாபர் அவர்கள் நினைவுக்கு வருகிறார்) அற்புதமான ஆராய்ச்சிப் புத்தகங்களை எழுதியிருப்பவர் + தொகுத்திருப்பவர். கீழேயுள்ளவை தற்போது என்னிடமிருக்கும் புத்தகங்கள். (இன்னமும் இரண்டு வெளியே சுற்றுக்குப் போயிருக்கின்றன என நினைக்கிறேன். இந்தப் புத்தக இரவல் காரர்களை ஒழிக்கவேண்டும்…)

இவை ஒருபுறமிருக்க – மீனாக்ஷி ஜெய்ன் அவர்கள் பங்குபெறும் ஒரு முக்கியமான பேச்சுக்கச்சேரி வரும் ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 2, 2020) நடைபெற இருக்கிறது. அவசியம் பங்குபெறவும். கீழே அது குறித்துச் சுற்றுக்கு வந்த தகவல்கள்.

“As India gets ready to witness the historic event of the Bhoomi Poojan of the #RamMandir, do NOT miss this webinar with Padmashri Dr. Meenakshi Jain, who exposed the lies of the ‘eminent historians’ like Irfan Habib who lied in court.

Link for registration: https://indicacademy.zoom.us/webinar/register/WN_FSZtQS9IQwWT0UH7p4xvQA

ஜெய் ஸ்ரீராம்!

21. தடிமன்தோலனாக இருக்கும் எனக்கே ஆச்சரியத்தைத் தரும்வகையில் – அவ்வளவு நன்றாகவும், இடைஞ்சலோ இரைச்சலோ காட்டுக்கூச்சலோ கோபதாபங்களோ இல்லாமலும் வந்திருக்கும் ஒரு முக்கியமான விடியோ பேச்சுக்கச்சேரிப் பரிவர்த்தனை. செறிவுமிகுந்த உரையாடல்.

Genesis of caste, contemporary discrimination and the way forward

பாரதியர்களுக்கு (ஜாதி, வர்ண வரிசை இன்னபிற குறித்து) மிக முக்கியமான செய்திகளைக் கொண்டுள்ளது; பங்குபெறுபவர்கள் இளைஞர்கள். அழகு.(ஆனால் மூன்று மணிநேரம்!)

ஓப் (அல்லது ஆப்) இந்தியா தளத்து அம்மணி நூபுர் ஷர்மா அவர்கள் (+ இளம் வழக்குரைஞர் ஸாய்தீபக் அவர்கள்) ஒருங்கிணைத்திருப்பது.

இப்படிப்பட்ட உணர்ச்சிகரமான விஷயங்கள் தர்க்க, ஆவண பூர்வமாக விஸ்தாரமாக விவாதிக்கப் படுவது, அதுவும் மிகவும் பண்புடனும் பரஸ்பர மரியாதையுடனும் நடத்தப்படுவது, எனக்கு, பாரதத்தின் ஒளிரும் எதிர்காலத்தைச் சுட்டுவதாகப் படுகிறது.

அவசியம் பார்க்கவும்.

22. அட்ச்சிவுடுவது என்பது இக்காலங்களில் மிகவும் அதிகமாகிவிட்டது. சம்பந்தா சம்பந்தமில்லாமல், ஹோம்வர்க் செய்யாமல் அரைகுறைக் கருத்தாக்கங்களால் நிரம்பிய ஹீலியம் பலூன்களைப் பறக்கவிடுகிறார்கள் பலர், அதுவும் வரலாற்றாள தண்டக்கருமாந்திரங்கள். இவற்றையும் நம்பி ட்விட்டரில் குட்டி பலூன்கள் வந்தமணியம் வேறு! மிகவும் வருத்தம் தரும் விஷயமிது.

1600 வருடங்களாகத் தொடர்ந்து பொலிந்ததாமே நம் சோழ சாம்ராஜ்யம்! உண்மையா என்ன? (

பிரச்சினை என்னவென்றால், நாம் படாசோம்பேறிகள்! மிகச் சுளுவாகப் புளகாங்கிதமடைபவர்கள்!)

 

10 Responses to “சுட்டிகள், குறுங்குறிப்புகள் இன்னபிற (5/n)”


 1. No. I did NOT ‘write’ that poem part of which is visible behind the journal scribble. (I note to crop ALL pictures/photos, leaving-in only the relevant content in the future, what a pain!)

  I had copied that ‘poem’ from somewhere, with a view to taking off on it, rubbishing it – which I never did anyway. (this was also some 30+ years ago!)

  I think some guys spend way too much time on this blog, scrutinizing every damn punctuation mark etc! Bleddy go get a life, laddies and gentalmen! Don’t be freakin’ lusers!

  Also: This info in advance. I did NOT make those cutesy vises. I bought them for my random bits of work. Dont ask about it. grr

 2. Kannan Says:

  கல்வெட்டு படிக்கத்தெரிந்தவர்வள் உடனடியாக மேடைக்கு வரவும்.

  நானே பரவால்ல போலருக்கு :<


  • யோவ்! நீங்கள் ஆண்ஜாதியா பொஞ்சாதியா என்ன ஜாதி எனத் தெரியாது, தெரிந்திருந்தால் சம்பந்தாசம்பந்தமிலாமல் [ஜாதி]த்திமிர் எனச் சொல்லி வக்கணையாகத் திட்டியிருக்கலாம்! :-(

   சரி. கல்வெட்டு என என் தமிழ்ச்சுருக்கெழுத்தைக் கிண்டல் செய்பவர் முகவரியைத் தெரிவித்தால் உடனடியாக ஆட்டோவில் வந்து அரிவாளாலேயே வெட்டுகிறேன்.

   எவ்வளவு ஒத்திசைவில் கற்று என்ன புண்ணியம். ஆக பயன் என் கொல். வோட்றா. ஆதி அரிவன் முதற்றே வெட்டு.

 3. Sivaaa Says:

  உடையார் வாசித்து ரோமாஞ்சனம் அடைந்து வருகிறேன். இது போன்ற ஒரு எபக்டில் எழுதியிருப்பார்.

 4. Muthukumar Says:

  Sir,

  / 1600 வருடங்களாகத் தொடர்ந்து பொலிந்ததாமே நம் சோழ சாம்ராஜ்யம்! உண்மையா என்ன?/

  What we have learned from scholars also an issue.
  /*Also I agree*/if(write in public) do home work;

  https://archive.org/details/flawed-narratives-history-in-the-old-ncert-textbooks-of-satish-chandra-by-meenakshi-jain/page/7/mode/2up

  (Flawed Narratives -History in the old NCERT Textbooks -A random survey of Satish Chandra’s ‘Medieval India’ (NCERT 2000))

  The Same Author (Point 20), has explained point by point in the above book- what we have been taught in our school in the past !
  Also I want to mention: I was “taught” – Akbar was the great. I have corrected this from our blog!!


  • 🙏🏿 Sir, thanks!

   In fact in 2002 or thereabouts Meenakshi Jain wrote an NCERT school text book for 9th Std kids – actually on Medieval history. It was commissioned by NCERT and was published also.

   But later. thanks to the LeLi cabal it was pulled. Despicable act of censorship by the cabal. NCERT merely capitulated to the demand of the LeLi goons. Shameful!

   Will see if I could get the book online somewhere.

   Akbar actually means ‘great’ in the desert languages – as in allahu akbar – god is great! So when our idiots say ‘Akbar, the Great’ – actually they say, ‘Great, the Great.’

   Great, no?

   Also, Akbar poisoned his brother, who he saw as his rival. Moreover, just to wipe out the lineage of his brother, he made his kids (actually Akbar’s nephews) ‘vanish’ off Lahore.

   These are not mentioned in regular books – since you made me recollect this info, will extract from notes and write about it…

   ars longa, muthukumar – and vita brevis.

 5. dagalti Says:

  2002 வாக்கில் திமுக அரசு நடத்திய சங்கமம் விழாவின் பகுதியாக ஒரு இலக்கிய உரைவரிசையும் நடந்தது. ஃபிலிம் சேம்பர் அரங்கில்.

  திராவிட இலக்கியக் கொடைகளுக்கு அங்கீகாரம் இல்லையே என்று அங்கலாய்ப்புகள்.
  நட்சத்திர பேச்சாளர் வைரமுத்து.
  ஒரு பேச்சாளர் பன்னீர்செல்வம் (sic): ‘அவங்க நம் எழுத்தை அடுக்குமொழி, வார்த்தைஜாலம்னு சொல்லி புறம் தள்ளுவாங்க. அவங்க லா.ச.ரா அப்படின்னு ஒருத்தரைக் கொண்டாடுவாங்க. அவர் *வெறும்* வார்த்தை ஜாலம்ங்க”

  ரைட்டு விடு!

 6. Sesha a.seshagiri Says:

  சார்,உங்களின் இந்த பதிவின் மூலம் அயோத்தியா ராம் ஜென்மபூமி யை பற்றிய இதிகாச புராண,சரித்திர மற்றும்
  சட்ட ரீதியான ஆதாரங்களுடன் கூடிய வல்லுனர்களின் நேரடி கருத்துக்களை கேட்கும் / காணும் வாய்ப்பு கிடைத்தது .நன்றி.குறிப்பாக திருமதி மீனாக்ஷி ஜெயின் ,திரு .நரசிம்ஹா அவர்களின் உரை பல உண்மைகளை அறியப்படுத்தியது.தமிழ்நாடு திராவிட லும்பர்கர்களை காட்டிலும் அகிலஇந்திய ரீதியில் இடதுசாரிகளும் அவர்களின் போலி அறிவுஜீவிகளும் எவ்வளவு தூரத்திற்கு இந்துமதத்திற்கும் ,இந்துக்களுக்கும் விரோதமாக (இசுலாமியர்களை அநியாயமாக தூண்டிவிட்டும் )இருந்திருக்கிறார்கள்/இருக்கிறார்கள்
  என்பதை தெளிவாக புரிந்துகொள்ளமுடிகிறது.


  • 👍🏿🙏🏿 ஐயா!

   திராவிடர்கள் முட்டாக்கூவான்கள், ஆனால் வெறியர்கள்.

   இடதுசாரிலிபரல் பொறுக்கிகளும் நேருவியஸோஷலிஸ அரைகுறைகளும் வெறியர்கள்தாம். ஆனால் தங்கள் வெறியை நன்றாகப் பூசிமெழுகி அதற்கு சமூக நீதி பளப்பளா பெய்ண்ட் அடிப்பதில் வல்லவர்கள். கொஞ்சம் புத்திசாலிகளும்கூட.

   ஆக – திராவிடம் என்பது, படிப்பறிவும் அறிவியலும் வளர்ந்தால் மறைந்துவிடும்; அது உள்ளீடுமற்றது.

   ஆனால், அடுத்த கும்பல் அப்படியல்ல. ஒழிய நெடு நாட்களாகும்.

   ஏனெனில், நன்றாக வேரூன்றிப் பல்கிப் பெருகித் தழைத்திருக்கிறார்கள் இந்த உதிரி ஜன்மங்கள்.


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s