புடைப்புத்துவாவும் விளம்பரத்தைகளும்
12/09/2020
மேலேகீழே படிப்பதற்கு முன்னர், புடைப்பிலக்கியத்தின் அடிப்படை, சொறிசிரங்கு போன்றவற்றை அறிவீர்.
…
…
சரி, படித்தீர்களா?
தேவரீர் கொஞ்சம் சொறிந்துகொள்வதை நிப்பாட்டிவிட்டு மேலும், களிம்பு ஏதாவது கிடைத்தால் நன்றாகத் தடவிக்கொண்டபின்னர் படிக்கலாம்.
-0-0-0-0-0-
நேற்று, ஒரு நண்பர், அள்ள அள்ளக் குறையாத அளவிடமுடியாத களஞ்சியமார் அவர்களின் அரைகூவலைப் பற்றிய ஒரு விளம்பரத்தை அனுப்பியிருந்தார்
ஒரு விஷயத்தை இங்கு தெளிவுபடுத்தவேண்டும்: எனக்கு மிகவும் பிடித்தமான கேளிக்கைக்காரர்களில், ஹ்ம்ம்ம், கேளிக்கைமுதல்வாதிகளில், எம் பறவையரசர் அலகிலாக் கறுப்பனாரும் ஒருவர் என்பதுதான் அது…
இன்று, இன்னொரு விளம்பரத்தை, அதே, நட்புத்துரோகத்தைத் தொடர்ந்துசெய்யும் நண்பர் அனுப்பியிருக்கிறார்.
ற்றொம்ப முக்கியண்டே!
(வேலைவெட்டியற்ற ராஸ்கல்ஸ்; இந்த வெட்டியொட்டாளர்களையும் கொட்டையை நசுக்கி ஒழித்துவிட்டால் எனக்கு எல்லையற்ற நிம்மதி கிடைக்குமோ?)
ரிட்டயர்மெண்ட் வாழ்க்கை அலுவலக அக்கப்போர்களில்லாமை காரணமாக போரடிப்பதால் – ஏதோ லடாக் போய் கூடாரத்தில் தங்கி, பாரதசீன லடாய் எழவை நேரில் அப்படியே நடக்க நடக்க, சுடச் சுடப் பார்த்ததுபோல் அவ்ளோ பில்ட்-அப். போர்க்கால ரீதி அலசல், விளக்கல், பிசுக்கல்… + ஏகோபித்த பிலுக்கல்.
பிரச்சினை என்னவென்றால், ஒருவர் குண்டாக (‘கொஞ்சம் பாடியாக’) இருப்பதனால் மட்டுமே வெடிகுண்டு பற்றி அனுபவரீதியான அறிவும், எல்லையிலா பாண்டித்தியமும் அமையாது அல்லவா?
…சிரித்துச் சிரித்து மாளவேயில்லை, போங்கள்… அவருடைய பார்வையாளர்கள் + வாசகர்களின் ரெவல் அப்படி என நினைக்கிறேன். ஏதோ நெட்ஃப்ளிக்ஸ் பிலிம்மாரீ ஏதோ காட்டப்போகிறார் என நினைத்து விட்டுவிடுவார்களோ என்னவோ…
அல்லது கிருஷ்ணன் என்ற பெயரினால், அப்படியே தம் கற்பனைக் கழுதையை ஓட்டிக்கொண்டுபோய், தன்னைத்தானே தேரோட்டி சஞ்சயன் என நினைத்துக்கொண்டு, தூரத்திலிருந்தே பாரதப் போரை நேரில் பார்க்கும் ஞானத்ருஷ்டியைப் பெற்றுக்கொண்டுவிட்டாரா?
அதனால் உட்கார்ந்த இடத்திலிருந்தே அலுங்காமல் நலுங்காமல் பாரதசீனக் கசமுசாவை ஆழ்ந்து பார்த்து, தம்முடைய கூறுகெட்ட கண்ணில்லாத கபோதி த்ருதராஷ்டிர மூடர்கூட்ட அரைகுறைகளுக்காகப் பாலபாடம் எடுக்கிறாரா?
எம் பறவைமுனியப்பரின் நகைச்சுவை உணர்ச்சிக்கு எல்லையே இல்லை.
கூவிக்கூவி விற்கிறார், நாம் கேவிக்கேவி அழுவதைத் தவிர வேறு வழியே இல்லையோ!
சுயவிளம்பரம் எனக்கும் மிகமிகப் பிடிக்கும் என்றாலும், பொதுவாழ்விலும் தனிப்பட்ட முறையிலும் அதன் முக்கியத்துவத்தை அறிந்து அதற்கும் மரியாதை கொடுப்பவன் என்றாலும்…
…இப்படியா நம் பறவையரசர், ஜெயமோகம் செய்வார்? ;-)
எனக்கே சங்கடமாகவும் வெட்கமாகவும் இருக்கிறதே! :-(
-0-0-0-0-
விளம்பரத்தைகள்.
ஆனால், எனக்குப் பரத்தைகளின்மேல் மிகவும் மதிப்புண்டு – அதாவது தொழில்முறை பரத்தையர்களைப் பற்றியும் அவர்களது முக்கியமான சமூகப் பங்களிப்புகளைப் பற்றியும் சொல்கிறேன். ஸேஃப்டி வால்வ்கள் எனவும் நினைத்துக் கொண்டால், ஒத்துவரும்.
ஆனால் விளம்பரத்தைகள் என்பவர்கள், வெறும் வெட்டி விளம்பரத்துக்காகவும் அரிப்பைத் தணித்துக்கொள்வதற்காகவும், அமெச்சூர்த்தனமாகச் செயல்படுபவர்கள். பெரும்பாலும் உள்ளீடற்றவர்கள். புடைப்புமுதல்வாதிகள். ஏதோ தம்மிடம் படுபீதியளிக்கும் வகையில் ஞானம் இருப்பதாக நம்புபவர்கள்.
அல்லது தாங்கள் ஏதோ ஒரு வகையில் மிகவுயர்ந்த பீடத்தில் அமர்ந்துகொண்டிருப்பவர்களாக, கஞ்சாப்புகைப் போதையில் ஆழ்ந்தவர்கள்…
அமெச் சூரர்கள். ஒரேயடியாக, அநியாயத்துக்கு Grandstanding செய்பவர்கள். அதாவது:
“டேய்ங்க்ளா! என்னப் பாருங்க்டா!! நான் எவ்ளோபெரீஈஈஈய்ய்ய அறிஞ்ஜன்னிட்டு தெர்ஞ்சிக்கிங்குடா!
என்னோட அறம் பத்தீ தெரியுமாடா வொங்க்ளுக்கு?? எப்பேர்க்கொத்த ஓளுக்கசீலண்டா நானு…
யென்னோட அறச்சீற்றம் மானம் வரெ வொசரண்டா! என்ன மாறீ நியாயசீலன் எங்கேடா கீரான்?
நாந்தாண்டா எல்லாம் அற்ஞ்ஜ ஏவாம்பரம்! இத்தையாவது நீங்க பிர்ஞ்சிக்குநு லைக் போட்டாக்கதாண்டா வொங்க்ளுக்கு விமோசனம்!!
நாஞ் சொல்றத கேளுங்க்டா… எம் பின்னாடியே வாங்கடா! அப்பப்பா நான் வுட்ற குசுவ குட்ச்சாகூட வொங்க புத்திசாலீத்தனம் அதிவமாய்ருண்டா…“
இந்த விளம்பரத்தைகளில், பரப்புரைப்பிரியர்களில் – ஏறத்தாழ அனைத்து தமிழ் அலக்கியவாதிகளும், அறிவுஜீவிக்கூவான்களும் (= புடைப்பாளர்களும் புடைப்பாளிகளும்) அடக்கம்.
(இவர்கள் கூண்டோடு நல்லடக்கம் செய்யப்பட்டால், பூமிக்குக் கொஞ்சம் உரமாகலாம், ஆனால் பாவம் பூமாதேவி, அவளுக்கு நல்லதுதான் நடக்கவேண்டும்… என்றாலும்…)
இந்த விளம்பரத்தைகளுக்கு இன்னும் சிலபல விஷயங்களும் வெகுவாக ஓத்துழைக்கின்றன என்பதையும் ஓத்துக் கொள்கிறேன்.
அதாவது: அவர்களுடைய…
1) பணிமூப்பு கொடுக்கும் உல்லாசமும், பென்ஷன் வகையறாவும்
2) வாழ்க்கையில் பெஞ்ச் நாற்காலி டாய்லெட்ஸீட் போன்றவற்றைத் தேய்த்துத்தேய்த்தே காலட்சேபம் செய்திருக்கும் காரணத்தால், உடலில் இன்னமும் இருக்கும் ஏகப்பட்ட உபரிசக்தி
3) வேலை செய்துகொண்டிருக்கும் குயுக்திமூளை
4) அவர்கள் வாசகர்களை/அடிவருடிகளை அதாவது அவர்கள் தரத்தைக் குறித்த மிகவும் சரியான-கீழான அபிப்ராயம்
5) ஸோஷியல் மீடியா
6) சொகுசாக உட்கார வசதியான நாற்காலி + தட்டச்சு விசைப் பலகை + இணையம்
7) தன்னை ஓரளவுக்கு அறிந்துள்ளதால் இருக்கும் சுயவெறுப்பு
8) அழிச்சாட்டியத்தனத்துடன் வெளியில் கவிழ்த்த ஏதுவான மொழிப் பாண்டித்தியம்.
நன்றி.
பின்குறிப்பு: இன்றிரவு தமிழ்கூறும் நல்லுலகம் முழுவதும், ‘லடாக்கில் என்னதான் நடக்கிறது’ எனும் படுபீதியளிக்கும் பயங்கர உண்மையைத் தெரிந்துகொண்டுவிடப்போகிறது என்பதை நினைத்தால்…
இன்னொன்று: நானும் ஒரு விளம்பரத்தை போல உருமாறினால், உடனடியாகப் போர்க்கால ரீதியில் ஒத்திசைவு என்பது, ஓத்திசைவு எனவாகும் என்பதை அறிவிக்கிறேன்.
ணன்ரீ.
12/09/2020 at 13:52
ஓ!
இன்னொரு படுஃபேமஸ் புடைப்பாளர் + விளம்பரத்தை ஒருவரைக் குறிப்பிட மறந்துவிட்டேனே! மன்னிப்பீர்களா?
அவர்தாம் ‘இந்திரா பார்த்தசாரதி’ எனத் தம்மை அழைத்துக்கொள்ளும் ஆதிகால ‘இந்திரா சௌந்திரராஜன்.’ கண்டமேனிக்கும் எழுதிக் குவித்தவர். கீழ்வெண்மணி நிகழ்வுக்கு ஃப்ராய்டிய போங்காட்ட முட்டுக் கொடுத்தவர். (எல்லாம் கருத்துரிமை, மாற்று வரலாறு… அம்மணிகளே அம்மணர்களே! என்ன செய்வது, சொல்லுங்கள்…)
ஒர்ரே லிபரல் கும்மாளம் தாங்கமுடியவில்லை.
இப்படி ரிட்டையர் ஆகிவிட்டுக் காலாகாலத்தில் மண்டையைப் போடாமல், என் சககிழக்கோட்டான்கள் கொடுக்கும் தொல்லை இருக்கிறதே…
12/09/2020 at 16:41
உங்கள் நண்பர் பத்ரி சேஷாத்ரி ஹிந்தி குறித்து முக நூல் பதிவொன்றை எழுதியுள்ளார். இதை படிக்கும் போது உங்களைத்தான் நினைத்துக் கொண்டேன். இதற்கு டாக்டர் ஷாலினி உள்ளிட்ட ‘திராவிட அறிஞர்கள் ஏகோபித்த லைக் போட்டிருக்கிறார்கள். அவரது பதிவு இது//
1. பள்ளிகளில் மூன்றாவது மொழி என்ற ஒன்று தேவையே இல்லை. அது இந்தியாக இருந்தாலும் சரி, வேறு எதுவாக இருந்தாலும் சரி. இது தமிழகத்துக்கு மட்டுமல்ல, அனைத்து மாநிலங்களுக்கும் பொருந்தும்.
சிபிஎஸ்இயில் இருக்கிறதே என்றால், அது ஏன் நம் பிரச்னையாக இருக்கவேண்டும்? சிபிஎஸ்இயிலும் தேவை இல்லை என்பதே என் கருத்து.
மாற்றாக, எத்தனை மொழிகளை வேண்டுமானாலும் விருப்பப் பாடங்களாகக் கொடுக்கலாம். எவை எவை, எப்படி கற்றுத்தரவேண்டும் என்பதை அந்தந்தப் பகுதியில் உள்ள பள்ளிகள் (தனியாராக இருந்தாலும் சரி, அரசுப் பள்ளியாக இருந்தாலும் சரி) தாங்களே முடிவு செய்துகொள்ளலாம் என்று விட்டுவிடலாம்.
இல்லை, சிறுவயதில்தான் மொழிகளைக் கற்பது எளிது, அப்போது எத்தனை மொழிகளை வேண்டுமானாலும் சொல்லிக்கொடுத்துவிடலாம் என்று குழந்தைகளைத் துன்புறுத்துவது அநியாயம். கொடூரம்.
அதுவும் அத்தனையிலும் பரீட்சை என்றெல்லாம் சொல்வது அடுக்காது.
தனி விருப்பமாக யார் வேண்டுமானாலும் எத்தனை மொழிகளை வேண்டுமானாலும் கற்றுக்கொண்டு போகட்டும்.
2. அடுத்து, ஆங்கிலம் என்ற மொழி அவசியம் என்பதையும் நான் ஏற்கவில்லை. ஆங்கிலத்தின் தேவையே இல்லாமல் பள்ளி இறுதித் தேர்வை எழுதும் வாய்ப்பு தரப்படவேண்டும் என்று கருதுகிறேன். இன்று NIOS முறையில் படிப்போருக்கு இந்த வாய்ப்பு உள்ளது. தமிழ் என்னும் ஒரு மொழிப்பாடம், தமிழிலேயே வேறு நான்கு பாடங்கள் என்று எடுத்து பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றுவிடலாம். பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வையும் அவ்வாறே எழுதமுடியும் என்று நினைக்கிறேன்.
அதனால் ஆங்கிலத்தை நீக்கிவிடவேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆங்கிலத்தின் தேவையின்றி பள்ளி இறுதித்தேர்வு எழுதும் வாய்ப்பு வேண்டும். அவ்வளவுதான். மற்றபடி ஆங்கில மீடியத்திலேயே படித்து ஷேக்ஸ்பியருக்கே சவால் விடுமளவு பிளந்துகட்டுபவர்களைப் பற்றி நான் ஏன் கவலைப்படப்போகிறேன்.
3. இதுகுறித்து நான் எழுதிய ஆங்கிலப் பதிவின்கீழ் வந்த பின்னூட்டங்கள் அனைத்தையும் படித்துவிட்டேன். அவற்றுக்கான பதில்களை இங்கே எழுதி இந்த இழையை வேறுபக்கம் தள்ளிச் செல்ல விரும்பவில்லை.
நான் சொன்னதால் உடனே மத்திய அரசு மாறிவிடப் போவதில்லை. ஆனால் உள்ளூர் பாஜகவினர் இதுகுறித்து சிந்திப்பது நலன் பயக்கும் என்று நினைக்கிறேன். தேசிய கல்விக் கொள்கையில் நலன் தரும் பல பெரும் மாற்றங்கள் உள்ளன. இந்த மொழிக் கொள்கை தொடர்பான தேவையற்ற ஆணி, கவனத்தைச் சிதறடிக்கிறது. அதுகுறித்து மட்டும்தான் விவாதமும் நடக்கிறது.//
ஆக இந்தி அரக்கியை ஒழிப்போம் :)
12/09/2020 at 17:39
எனக்கு முழுவிஷயமும் பிடிபடவில்லை, முழு பின்புலமில்லை.
இருந்தாலும் – இதில் பத்ரி சொல்லியிருப்பது ஓரளவுக்குப் புரிகிறது. சிலவற்றை ஒப்புக் கொள்கிறேன். சிலவற்றை அப்படியில்லை.
ஷாலினியார் யார் என்றறியேன். ஆகவே, அவர் ஆதரித்தால் அல்லது எதிர்த்தால் – ஒரு விஷயத்தின் திடம் எப்படி இருக்கலாம் என எனக்கு அனுமானிக்க இயலவில்லை. (எனக்குப் பலப்பல விஷயங்களைக் குறித்து அறிவில்லை – ஷாலினி இளந்திரையன் எனவொருவர் இருந்தார – திக டைப்; அவரா இவர்? இருக்கலாம் – ஆனால் இதனைத் தெரிந்துகொள்ள ஆசையோ தேவையோ எனக்கு இதுவரை இல்லை)
பொதுவாக, அறிவார்ந்த தளங்களில் திராவிடர்களால் ஊடாடமுடியாது எனவொரு திடமான நம்பிக்கை வேறு எனக்கு.
என்னைப் பொறுத்தவரை நம் பாரதத்தில், தமிழகத்தில் (மட்டுமாவது) மூன்றுமொழிகள் இருக்கவேண்டும். ஆனால் மூன்றாவது மொழிக்குப் தேர்வுகள் வேண்டாம். ஓரளவு நன்றாக பேச, புரிந்துகொள்ள முடிந்தால் போதும். இது ஹிந்தியாக இருக்கலாம்.
இதன் முக்கிய காரணம் என்னவென்றால், நம் தமிழ் கடந்த சில நூற்றாண்டுகளாக ஒரு மலட்டுமொழியாக உருமாறிவிட்டது; + திராவிடத்துக்குப் பின் மொழி வளரவில்லை – ஆனால் அதுகுறித்த வெறியும் உணர்ச்சிவெள்ளங்களும் அதிகமாயிருக்கின்றன.
இது தடுத்து நிறுத்தப் படவேண்டும்.
ஆகவே.
திணிப்பு கூடாதென்றாலும். நிறைய
மொழிகள் தெரிந்தால் பலப்பல அனுகூலங்கள் இருக்கின்றன. சிந்தனை செய்வதுகூட இன்னமும் திடமாக இருக்கும்.
இது குறித்து அண்மையில் சில அருமையான புத்தகங்கள் படித்தேன்; அவற்றைப் பற்றிச் சிறு குறிப்புகளையாவது எழுதுகிறேன்.
12/09/2020 at 19:09
அவர் தீவிரமாக தாய் மொழியில் மட்டுமே அனைத்தையும் கற்பிக்கலாம் என்கிறார். ஹிந்தி மட்டுமல்ல ஆங்கிலம் கூட கட்டாயம் தேவையில்லை என்கிறார். தாய் மொழி வழியில் கற்பது மட்டுமே போதும். என் சந்தேகம் உண்மையில் தாய் மொழியிலேயே அனைத்தையும் கற்பதால் சிறப்பான அணுகூலம் ஏதேனும் உள்ளதா? இன்றைக்கு இந்த குரல்கள் ஓங்கி ஒலிக்கத் தொடங்கியுள்ளன.
13/09/2020 at 12:37
ஐயா, இருக்கிறது. சர்வ நிச்சயமாக அனுகூலம் இருக்கிறது.
ஆனால் தமிழ்மொழி தாய்மொழியாக இருந்தால், அந்த அனுகூலம் பெரிதாக இல்லை.
ஏனெனில:
1. இயல்பாகவே பல பிரச்சினைகள் – தமிழ்மொழிக்கும் அதன் வரிவடிவத்துக்கும், டைக்லொஸியா உள்ளிட்ட பல பிரச்சினைகள் இருக்கின்றன.
2. அது ஏற்கனவே அறிவியல், கணிதம், தர்க்கம் தொழில் நுட்பம் போன்ற எல்லாவற்றிலும் பிற பாரத மொழிகளைக் காட்டிலும, பின் தங்கியிருந்தது, இருக்கிறது.
3. தனக்கும் புத்தியில்லை – பிற மொழிகளிலிருந்தும் கடன்வாங்க அப்படியொரு வெட்கம்; இருக்கும் திசைச்சொற்களையும் உச்சரிப்புகளையும் வெளியில் தள்ள ஆர்வம். எதையும் புதிதாகக் கற்றுக்கொள்ளமாட்டேன் என அப்படியொரு பிடிவாதம்.
4. தமிழில் ஏதாவது ஒரு சிறந்த அறிவியல்-கணித புத்தகம் – அதாவது ஒன்றாவது இருக்கிறதா? அதனை வைத்துக்கொண்டு படிப்பிப்பவர்கள் இருக்கிறார்களா? (நான் ஒரிஜினல் புத்தகங்களைச் சொல்லவில்லை, அவை சத்தியமாக நம் தமிழில் இல்லை – பிற பண்பாடுகளில் உள்ள ஞானத்தைத் தமிழில் கொடுக்கும் முயற்சிகள் – இவையும் இல்லை)
5. துப்புரவாக, நம் திராவிடம் தமிழைக் காயடித்துவிட்டது. அதன் எதிரறிவுஜீவியமும் கல்வியைப் பொறுக்கிமயமாக்கலும் ஏறத்தாழ 100% அளவில் இருக்கிறது.
6. சும்மா ஜப்பான் ரஷ்யா ஜெர்மனி என எடுத்துக்காட்டுவது கேவலம். அவை சரியானவை அல்ல; அங்கு
ஆநிரை கவர்தலோ திராவிடமோ இருந்திருக்கவில்லை.
+++ இன்னமும் சொல்வதற்கு நிறைய இருக்கின்றன சிவா, ஆனால்…
சரி. நான் தமிழ்வழியில்தான் பள்ளிக்கல்வியைப் படித்தவன். ஓரளவு சூட்டிகையான மாணவனாகத் தான் இருந்தேன்.
தமிழ் எனக்கு மிகவும் பிடித்தமானது. ஆனாலும் பொய் சொல்லமாட்டேன். என் அடிப்படை முனைவுகளையும் கச்சாப்பொருட்களையும் மீறி – தமிழ்மொழிக் கல்வியால் நிறைய சிரமப் பட்டிருக்கிறேன்.
பிற குழந்தைகளை அவ்வாறு என்னால் படுகுழியில் தள்ள முடியாது.
13/09/2020 at 17:04
ததாஸ்து
http://justexperience.blogspot.com/2020/09/blog-post_58.html
13/09/2020 at 19:13
👍🏿
//தக்ஷிண பாரத ஹிந்தி பிரச்சார சபாவைப் போல, ஏன் தக்ஷிண பாரத பாஷா சபாவை வட மாநிலங்களில், தென்னிந்திய மாநில மொழி வளர்ச்சித் துறை ஆரம்பித்தால் என்ன?
🙏🏿
14/09/2020 at 13:53
சார் இந்த பதிவுக்கு சம்பந்தமில்லாத ஒரு கேள்வி. நீட் பரிட்சையை குறித்து தமிழகத்தில் அதிக எதிர்மறை விமர்சனங்கள் எழுகிறதே. நீட் பரிட்சை உண்மையில் தேவையான ஒன்றா. மாநில கல்வியின் +1,+2 பாடத்திட்டம் CBSE யின் திட்டதை கிட்டத்தட்ட ஒத்துள்ளது சிறிய வேறுப்பாட்டுடன் என்று கேள்விப்பட்டிருக்கிறேன், ஆனபட்சத்தீல் நீட் போன்ற தேர்வை எதிர் கொள்வதில் ஏன் இந்த எதிர்மறை போக்கு
14/09/2020 at 14:14
ஐயா, பரவாயில்லை.
1. ரெண்டாம் க்லாஸ் அளவுகூட படிப்பில்லாத மூடர்கூட்டம் ஒன்று தமிழகத்தில் இருக்கிறது. சூர்யா, கமலகாசன், இசுடாலிர் போன்ற நிரந்தர விடலைகளும் பொறுக்கிகளும் தாம் இந்தச் சோம்பேறிக்கூவான்களுக்கு ஆதர்ச கழுதைகள்.
இந்த மயிராண்டிகள் எப்போதும் எத்தையாவது எதிர்த்துக்கொண்டே இருக்கவேண்டும். இல்லையேல் அவர்களுடைய உணர்ச்சிகர விசிலடிச்சான் குஞ்சுகளிடம் அவர்கள் கொட்டை வேகாது. அவ்வளவுதான்
2. நேஷனல் கர்ரிகுலம் ஃப்ரேம்வர்க் (NCF) எனவொன்று இருக்கிறது – தேசிய பாடத்திட்ட சட்டகம். இந்தச் சட்டகத்துக்குத் தான் நம் மாநிலக் கல்வித்திட்டங்கள், மத்திய அரசின் ஸிபிஎஸ்இ (CBSE), என்ஐஓஎஸ் (NIOS), தனியாரின் ஐஸிஎஸ்இ (ICSE) எல்லாம் ஒத்துவரவேண்டும்.
3. இந்த என்ஸிஎஃப் சட்டகத்துக்கு, என்ஸியிஆர்டி (NCERT) அமைப்பு, மாதிரிப் புத்தகங்களைப் பதிப்பித்திருக்கிறது. நம் தமிழகப் புத்தகங்களுக்கு இது எவ்வளவோ தேரலாம் என்றாலும் – இவை பெரும்பாலும் மார்க்ஸிய-லிபரல் பார்வையால் திரிக்கப் பட்டுள்ளவை.
4. ஸிபிஎஸ்இ பள்ளிகளின் கல்வித்திட்டத்தின் நடைமுறைப் படுத்தலுக்கு, என்ஸியிஆர்டி புத்தகங்கள் உபயோகிக்கப் படுகின்றன.
5. எல்லா கல்வித்திட்டங்களுக்கும் மூலம் என்ஸிஎஃப் – அதன் ஆழமும் வீச்சும் ஒவ்வொன்றுக்கும் சில வித்தியாசங்களும் தனித்தன்மைகளும் இருக்கின்றன.
அவ்வளவுதான்.
6. மற்றபடி நீட் தேர்வு ஒரு அரக்கன் என்றெல்லாம் இல்லை. முனைப்புள்ள நம் பிள்ளைகளுக்கு ஒரு பிரச்சினையும் இல்லை.
நம் திராவிடப் பேமானிகள், நடிகக் கூவான்கள் சொல்வதைக் கேட்டு சிரித்துக்கொண்டே நகரவும்.
அயோக்கியப் புழுக்கள்.
14/09/2020 at 14:43
Thanks Sir, ,” நம் திராவிடப் பேமானிகள், நடிகக் கூவான்கள் சொல்வதைக் கேட்டு சிரித்துக்கொண்டே நகரவும்.” இது தான் சரியான வழி. இதை படித்தவுடன் பஷிரின் விஷ்வ விக்தயமான மூக்கு 👃 நினைவில் வந்தது.
14/09/2020 at 15:17
ஆ! ‘உலகப் புகழ்பெற்ற மூக்கன்!!’ (மலரும் நினைவுகள்)
நன்றி! :-)