செங்கோட்டை ஸ்ரீ ஆவுடைஅக்காள் அவர்கள் – சில குறிப்புகள்

01/10/2020

என் தாயாருக்கு வயது 82  ஆகிறது; நினைவுப் பிறழ்வுகள், அதுதொடர்பான மனோதத்துவ ரீதி சிக்கல்கள், பாரனொயா எனப் பல ஆண்டுகளாக ஓடிக்கொண்டிருக்கிறது. Waiting for Godot…

…Of course, like everyone of us – but perhaps, she is slightly ahead in the queue, may be. இருந்தாலும் சில சமயங்களில் அவர் மூளையில் கவிழ்ந்திருக்கும் கடும் மூடுபனி விலகும். பளிச்சென்று, ஸ்பஷ்டமாகக் கொஞ்ச நேரம் பேசுவார். ஆன்மிகத் தேடலும் கரிசனமும் மினுங்க, மின்னல் கீற்றுகளாக சிந்தனைகளும் நினைவுகளும் தெளிந்தோடும்.

நேற்று அம்மாதிரியான நாள். ஸ்ரீ ஆவுடைஅக்காள் அவர்களுக்கு நன்றியுடன்.

“ராமு, அப்புறம் நீ ஆவுடைஅக்காள் பாடல்திரட்டு படிச்சியா?”

நான்: “ஆஹா! என்னமா எழுதியிருக்காங்க அவங்க! அனுபவிச்சே படிச்சேன்மா!”

சுமார் 25 வருடங்களுக்கு முன் நடந்த (தடைபட்ட) உரையாடலை நேற்று தொடர்ந்தோம், சிலாகித்துப் பேசினோம். (நடுவில் ஓடிய ஆண்டுகள் அவருடைய ப்ரக்ஞையில் இல்லை)

ஆச்சரியமும் அமைதியும். சுமார் முக்கால்மணி நேரமாவது அக்காள் பற்றிப் பேசியிருப்போம். அதாவது, கருமேகம் மறுபடியும் அவர் மூளையின்மீது கவியும் வரை.

-0-0-0-0-0-

1996: அப்போது நான் என் சிறு நிறுவனங்களுக்காகத் தீவிரமாக ஓடியாடிக் கொண்டிருந்த காலம். பெங்களூருக்கு அனுப்பிக் கொடுத்திருந்த என் தொழிற்சாலைகளின் தயாரிப்புகளுக்குப் பணம் நியாயமாக வந்துசேராமல், என் ‘கஷ்டமர்கள்’ இழுத்தடித்துக் கொண்டிருந்தார்கள்.

இதில் ஒன்று கர்நாடக அரசு நிறுவனம் – ஸப்ளை செய்து அவர்கள் என் உற்பத்தியை உபயோகப் படுத்தினாலும், மூன்று வருடங்கள் ஆகியும் முதலில் கொடுத்த 10% முன்பணத்துக்கு அப்பாற்பட்டு ஒரு பைசாவையும் எனக்குக் கொடுக்கவில்லை, இந்த அயோக்கியர்கள். மாறாகக் கூசாமல், 12% கையூட்டு கேட்டார்கள். “இதே, உங்கள் தமிழகமாக இருந்திருந்தால் நீங்கள் 20% தரவேண்டியிருக்கும்! உங்களுக்கு இது தெரியாதா?” (அப்போது தமிழகத்தில் கருணாநிதி ஆட்சி, எனக் குறிப்பிடவேண்டியதில்லை)

என்னுடைய நிலைபாடு என்னவென்றால் – என் தயாரிப்பில் குறை இருந்தால் சொல்லுங்கள்; பிறரை விட விலை அதிகம் என்றால் சொல்லுங்கள். ஆனால், அவர்களுக்கு அது பிரச்சினையில்லை – என்னாலும் ‘அனுசரித்துப் போக’ முடியவில்லை. முயலவுமில்லை. திமிறிக் கொண்டிருந்தேன்.

1993லேயே சுமார் பத்துலட்சம் போல வரவேண்டியிருந்தது. (இதில் எட்டு இன்றைய தேதிவரை வந்துசேரவில்லை)  – என் ஸப்ளையர்களுக்கோ நான் பணம் ஃபைஸல் பண்ணவேண்டும் (செய்தேன்). இதற்கான ஆராய்ச்சிக்கும் நிறைய செலவழித்திருந்தேன். வெளியில் மார்வாடிகளிடம் (‘லேவாதேவி’ எனப்படும் லேனாதேனா) வேறு சம்பளம் கொடுப்பதற்காகக் கொஞ்சம் கடன் வாங்கியிருந்தேன். ஆக, கிடுக்கிப் பிடியில் மாட்டிக்கொண்டு முழித்தேன். ஏண்டா பொட்டி தட்டிச் சுளுவாகச் சம்பாதிக்காமல் மேனுஃபேக்சரிங் பக்கம் சென்றேன் எனக் கொஞ்சம் கஷ்டமாகிவிட்டது. மீள்வேனா என்றே சந்தேகமாக இருந்தது. இந்த அழகில் எனக்குத் திருமணம் வேறு ஆகியிருந்தது, தேவையா?

என் வகுப்புத் தோழர்களிடம் கேட்டிருந்தால் உடனடியாகப் பணம் அனுப்பியிருப்பார்கள், சில உறவினர்களிடமும் கேட்டிருக்கலாம்; ஆனால் எனக்கோ வீம்பு. அமெரிக்காவில் அவர்கள் பணிசெய்து அனுப்பும் டாலரில் உயிர் தரிப்பதற்கு நாக்கைப் பிடுங்கிக்கொண்டு சாகலாம் எனவொரு தேவையற்ற, இப்போது நினைத்தால் நகைக்கத்தக்க பிடிவாதம்; அடியில் கண்ட சொத்தைத் தவிர வேறொரு நிதியோ அல்லது அசையா சொத்தோ இல்லை, இருந்தாலும் படு விரைப்பு.

(எப்படியோ மீண்டு, என் கடன்களை எல்லாம் அடைத்தேன் – சரி. இதற்குப் பிறகாவது தொழில்முனைவேன் பேர்வழி என அலைவது நின்றதா என்றால்… அவை தொடரும் கிளைக்கதைகள்…)

1996: ஒருமாதிரிக் கலவரத்தில் இருந்த இந்தச் சமயத்தில், ஓரிரவு  என் அம்மாவுடன் பொதுவாகப் பேசிக்கொண்டிருந்தேன் (அவருக்கு என் இடியாப்பச் சிக்கல் பிரச்சினைகள் + சிறு வெற்றிகள் குறித்தெல்லாம்  ஒன்றும் தெரியாது, பரப்ரஹ்மம்); என் பார்வை அவர் மேஜைமேல் திறந்து வைத்திருந்த என் அம்மாவின் நோட்டுப் புத்தகம் பக்கம் சென்றது. அதில் மணிமணியாக ஞானமார்க்கக் கவிதைகளாக எழுதி வைத்திருந்தார். புரட்டிப் பார்த்தபோது அவை அற்புதமாக இருந்தமை ப்ரத்யட்சமாகத் தெரிந்தது. நான் இருந்த நிலையில் ஓரளவுக்கு எனக்கு ஆசுவாசத்தையும் அளித்தன என நினைக்கிறேன்.

“ஏன் அம்மா, நீயா இதையெல்லாம் எழுதினாய்?” எனக் கேட்டால், என் தாயாரின் உறவினர் ஒருவர் தன் கையெழுத்தில் படியெடுத்திருந்ததை, தான் நகல் எடுத்து எழுதிக்கொண்டேன் என்றார். அவருடைய அழகான கையெழுத்தில் சுமார் 300-400 பக்கங்களுக்கு அது இருந்தது; ஃபூல்ஸ்கேப் காகிதக் கத்தையை மடித்துத் தைத்து தானே ஒரு நோட்டுப் புத்தகத்தைச் செய்துகொண்டிருக்கிறார்.

யார் இதை எழுதினார்கள் என்றால், “இவங்கதாண்டா செங்கோட்டை ஸ்ரீ ஆவுடையக்காள்! பெரிய மஹான்!”

“ரொம்பப் ப்ரமாதமான அத்வைதி; நிறைய புஸ்தகம் எல்லாம் எழுதியிருக்கிறார், நம் பாரதிக்கு ஆதர்சமாகக் கூட இருந்திருக்கவேண்டும்… … சின்ன வயசிலேயே விதவையாயிட்டார்… … பின் நிறைய படிச்சு, நிறைய அனுபவங்கள், ஜொலிக்கும் மூளை… தமிழிலும் எழுதும் திறன்… பக்திமான்…”

கதை தொடர்ந்தது.

“…டேய் ராமு, நீ அவசியம் ஆவுடைஅக்காளைப் படிக்கணும்டா,  உனக்கு ரொம்பப் பிடிக்கும்…”

ஆனால் – எனக்குக் கொஞ்சம் எதிர்க்களித்துவிட்டது; என் கவலைகள் எனக்கு; ஆகவே அசுவாரசியமாகச் சரியென்று சொன்னேன்.

“சரி, உனக்கு நேரம் கிடைக்கறப்போ படிச்ச அப்புறம் பேசலாம்…”

“சரி.”

முதல் திறப்பு:ஆனால், எல்லாவற்றுக்கும் நேரம் எனவொன்று வரவேண்டுமே! :-(

-0-0-0-0-

சுமார் 1999-1000  வாக்கில் சிலபல நண்பர்களுடன் (அவர்கள் பாரததத்துவத்தின் ஏழாம் தரிசனம் ஒன்றை, புத்தம்புதிதான 20ஆம் நூற்றாண்டு தர்ம தரிசனத்தை ஆர்வத்துடன் உருவாக்கிக் கொண்டிருந்தனர் – மத்யஸ்த் தரிசனம், ஜீவன் வித்யா, மஹாமஹோ அக்ரஹார் நாகராஜ் ஸர்மன் அவர்கள் போட்ட விதை) பேசிக்கொண்டிருந்தபோது  மறுபடியும் இந்தப் பெயர் அடிபட்டது.

அற்புதமான கவிதாயினி, பெருமதிப்புக்குரிய அத்வைதி என்றெல்லாம் சொன்னார்கள், தமிழ் தெரிந்தவர்கள் படிக்கவேண்டும் எனவும் சொன்னார்கள். (ஆனால், அவர்களோ,  பஞ்சாபி பிஹாரி மலையாளிகள், கன்னடர்கள், மராத்தியர்கள் இன்னபிறர்!)

ஆனால், அச்சமயம் தரிசனங்கள், அத்வைதம், த்வைதம் பற்றியெல்லாம் கொஞ்சம் அசுவாரசியமாக இருந்தது  அசிரத்தையும் கூட. ஆனால், மாத்வம் அப்படியிப்படி என ஆர்வத்துடன் படித்துக்கொண்டிருந்தேன். பிறகு எல்லாவற்றையும் அப்படியே லூஸ்ல வுட்டுவிட்டேன். வெட்கக் கேடு.

இரண்டாம் திறப்பு: எல்லாவற்றுக்கும் நேரம் எனவொன்று வரவேண்டுமே! :-(

-0-0-0-0-0-

பின்னர், பல்லாண்டுகள் கழித்து, நான் மிகமிக மதிக்கும் புதுச்சேரி அரவிந்த ஆஸ்ரம அன்பர் ஒருவர் பரிந்துரைத்தார். ஆவுடைஅக்காள் அவர்களிடம் என்னை அறிமுகம் செய்துகொள்ளவேண்டிய தருணம் வந்துவிட்டது.

மூன்றாம் திறப்பு. இந்தச் சமயம், என் தாமஸ குணத்தை அடக்கினேன்.

ஆக… 2013 வாக்கில் ஒருவழியாகக் கீழ்கண்ட அருமையான புத்தகத்தைப் படித்தேன். பின்னர் சிலபல மற்றவற்றையும், எழுத்துக்கூட்டி.

கீழே வைக்கவே முடியவில்லை; சொக்கவைக்கும் நடை. ஞானப் பெருக்கு. ஆவுடைஅக்காள் ஒரு ஜொலிக்கும் தத்துவாசிரியராகவும், கவிதாயினியாகவும் எடுத்தகாரியத்தை முடிக்கும் திறன் படைத்தவராகவும் மிகுந்த செயலூக்கம் கொண்டவராகவும் இருந்திருக்கிறார்கள் என அறிந்துகொண்டேன்.

அம்மணி அவர்களின் தாக்கத்து பாரதியிடம் நிறையவே இருந்திருக்கிறது. இதற்குக் காரணம், இவர்களுடைய ஊற்றுக்கண்கள் பாரததத்துவத்தில் இருந்திருக்கின்றன என்பது தான் சரி. மற்றபடி சொற்றொடர்கள், உவமானவுவமேயங்களில் பல ஒற்றுமைகள் இருந்திருக்கின்றன…

கண்ட குப்பை ழான்போத்ரியார் லக்கான் டெற்றிடா ஸைஸீக் எழவு பின் நவீனத்துவ கும்பல் வகையறாக்களுடன்/தத்துப்பித்துவவாதிகளுடன் போக்கற்று அலைந்துகொண்டிருப்பவர்கள் இது பற்றி ஆராயலாம்; உருப்படியாகவும் இருக்கும்.

சும்மா வெட்டியாக ‘ஷெல்லியும் கில்லியும்: மானுடத்துவத்தின் நேயம்’  எனவும் ‘ஜல்லியும் பாரதியும்: கீழடிக் கற்காலச் சிந்தனை வளம்’ எனவும் குப்பைகளைக் கொட்டி பிஹெச்டி பண்ணுவதற்குப் பதில் உபயோககரமான அகழ்வாராய்ச்சிகளைச் செய்யலாம்.

எது எப்படியோ… என் அக்காளைப் பற்றி எழுதவேண்டும் என நினைத்து, நினைத்து… … :-(

-0-0-0-0-0-

2020: மேலும் ஏழு வருடங்கள் கழிந்தன. நேற்றிரவு என் தாயாருடன் ஆவுடை அக்காள் அவர்களைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தேன்.

கிட்டத்தட்ட 90 நாட்களாக விட்டுவிட்டு கருகும்மென மேகங்கள் சூழ்ந்து தொடர்ந்து (ஏறத்தாழ) மழை பெய்துகொண்டிருந்த நியதிக்குப்பிறகு இன்றுதான் நல்ல சூரியவெளிச்சம். அதனால்தானோ என்னவோ, இன்று என் நூலகத்தில் இந்தப் புத்தகத்தை மறுபடியும் பார்த்தேன். ஆனந்தம். இப்பதிவை எழுத ஆரம்பித்தேன்.

+ வேறு யாராவது இதுகுறித்து எழுதியிருக்கிறார்களா என இன்று இணையத்தில் கொஞ்சம் தேடினேன்.

1. என் மதிப்புக்கும் மரியாதைக்கும் உரிய நாஞ்சில்நாடன் அவர்கள். செங்கோட்டை ஸ்ரீ ஆவுடை அக்காள் (பக்தி, யோக, ஞான, வேதாந்த ஸமரஸ) பாடல் திரட்டு  – நூல் அறிமுகம்– என 2010 ஆகஸ்ட் மாதத்திலேயே ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். (சொல்வனம்)

இதிலுள்ள பல அனெக்டொடல் / தன்னனுபவக் குறிப்பு விவரங்களுக்கு அப்பாற்பட்டு ஓரளவு சுருக்கமாக அக்காளின் வாழ்க்கைத் சரித்திரத்தையும் நாஞ்சில் நாடன் அவர்கள் கொடுத்திருக்கிறார். ஆகவே அக்காள் அவர்களைக் குறித்து நான் ஒன்றும் எழுதவில்லை, அதற்கு அவசியமுமில்லை.

மேலதிக விவரங்களுக்கு, அக்காளின் பாடல்திரட்டு சென்றடைந்து விமோசனம் பெறலாம்.

இதில் வேண்டிய அளவு வாழ்க்கைச் சுருக்கமும் இருக்கிறது. மிக நல்ல புத்தகம், அருமையான முயற்சி. பொக்கிஷம்.

2. ‘இனிய ஈயம்’ புகழ் (தங்கமானவர் என நான் நினைத்த பித்தளை) இளைஞர், இதைக் குறித்தும் என் பெரும்பேராசானுக்கு ஒரு கடிதம் எழுதியிருக்கிறார்.

-0-0-0-0-0-

இதற்கு அப்பாற்பட்டு, அக்காள் அவர்கள் மிகச் செறிவான தத்துவ விசாரப் புத்தகங்களையும்  (வேதாந்தம், நியாயம்…) உரைகளையும் (ஸம்ஸ்க்ருதத்திலும்) எழுதியிருக்கிறார்.  தர்க்கரீதியில் ஜொலிக்கிறார் + மஹாமஹோ த்ர்யம்பகஸாஸ்த்ரி அவர்களின் புத்தகங்களுக்கு அழகான கோனார் உரையும் எழுதியிருக்கிறார்.

இப்போது என்னுடைய ஆச்சரியங்கள் இரண்டு:

1. மறுபடியும் மறுபடியும் அதே ஞானி எனக்குத் திறப்புகளை அளிக்கக் காத்திருக்கும்போது, நான் ஏன் பலப்பல ஆண்டுகளாக மகோன்னத மயிர்பிளப்புகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்திருக்கிறேன்?

2. (யோசித்தால் இது பெரிய ஆச்சரியமில்லை, இருந்தாலும்)  இப்படிப்பட்டவர்கள் உலாவந்த நம் தமிழகமும் நம் தமிழும், ஏனிப்படிக் கவைத்குதவாத திராவிடத்தால் வீழ்ந்தன?

இரண்டிற்கும் விடைகள்:

1) நானோ, நம் தமிழச் சமூகமோ – நமக்குத் தேவையான அளவு சூடுகாய்ச்சப் படவில்லை, பாரதத்தின் வடப்பகுதிகள் அழித்தொழிக்கப்பட்ட அளவுக்கு இல்லவேயில்லை என்றாலும், நாம் பாதிரிகளாலும் அவர்களது திராவிடப் பிரிவினைப் பிரச்சாரங்களாலும் கருத்தாக்கங்களிலாலும் இன்றளவும் துப்புரவாகக் காயடிக்கப் பட்டுள்ளவர்கள்; தொடர்ந்து முயற்சி செய்து தம்கொட்டைகளைத் தாங்களே நசுக்கிக் கொள்பவர்களுக்கு, வளர்ச்சிக்கும் மேன்மைக்குமான  சாத்தியக் கூறுகள் குறைவு.

2) நம் அழிச்சாட்டிய சோம்பேறித்தனம், தாமஸ குணம் என்பது ஒரு தொடரும் வரலாற்றுண்மை.

END

18 Responses to “செங்கோட்டை ஸ்ரீ ஆவுடைஅக்காள் அவர்கள் – சில குறிப்புகள்”


 1. அக்காள் அவர்களின் 10 பாடல்கள் – பாம்பே சகோதரிகள் பாடியது – ஸ்வாமி நித்யானந்தகிரி முன்னுரையுடன்…

  (சுமார் ஒருமணி நேரம்)


 2. நன்றி சார் அக்காள் அவர்களை அறிமுகப்படுத்தியதற்கு. அம்மாவிற்கு என்னுடைய அன்பு

 3. K.Muthuramskrishnan Says:

  எனக்கும் அம்மாதான் அறிமுகப் படுத்தினார்.மீண்டும் படிக்கிறேன்.நன்றி.

 4. Swami Says:

  Thanks for this!
  Namaskaram

 5. Kannan Says:

  Not related to the main content of the post but with the bribery incident. In the same period or couple of years earlier, an ITI principal demanded commission for the bills we raised for servicing their systems.

  I paid 3.5k upfront for the bill amount of 15k. But the guys in the office demanded their own share and dragged it for one more year.

  Finally we gave up in disgust. That guy’s face is etched in my brain forever as a symbol of corruption.


  • :-( I understand that. May be, since these things HAVE to be handled as an entrepreneur – if not for selling, at least with the statutory authorities and in dealing with the factors of production – one has to employ an individual to deal with such thingies. That is, if one has the luxury. (at least all these underbelly nauseating stuff become ‘once-removed’ then)

   Of course, this corruption is one thing; but the brazenness of it is something else.

   There seemed to be no guilt or a sense of shame in asking for bribe – it was all treated as a matter of routine. As if taking bribe is their fundamental right, or a stellar fact-of-life even! (it is not even that they were living in indigent circumstances)

   …My friends who lived in China for quite a few years told me vivid stories about the Communist party sponsored corruption endemic there, the horror!

   (only consolation that we are yet to reach that level, perhaps excepting Tamilnadu, in Bharat)

 6. Kannan Says:

  Brazenness, yes the guy didn’t give damn about receiving the money across the table.

  I was sweating profusely watching him demand another vendor to decorate his house for Christmas :(

 7. Ravichandran Says:

  Shouldn’t there be sociological study of corruption, based on religion, caste, economic strata, govt, private, occupation industry etc


  • Sir, there is enough and more of such studies. Since I tried to understand the history, idea etc – I have read quite a bit of research on it. Many of them are not useful for us plebs.

   I have come to the conclusion that, the moral fabric of the child gets developed in its formative years – when the parents are the primary role models. Other influences that come later (especially during adolescence) are add-ons and they do have significant effects – but not as much as the parental/familial factors.

   (Can MK Stalin’s grand kids be honest people/citizens later?)

   There are also ‘momentary lapses of reason’ that happen in adulthood., in times of temporary weaknesses. Corruption has nothing to do with one’s financial or social status.
   (Why would MK Stalin continue to be corrupt?)

   All said and done, the questions of Corruption are best placed before Dharma (as in Yakshaprashnam).

 8. Ravichandran Says:

  Beautiful narration about avudaiakkal amma. Shared with interested contacts


  • ஐயா, நன்றி; ஆனால் ஆவுடைஅக்காள் பற்றி, நான் நிறைய எழுதவில்லை; நாஞ்சில் நாடன் அவர்கள், அந்தப் புத்தகத்தின் துணையுடன் அழகாக எழுதியிருக்கிறார்.

   இம்மாதிரிப் பலர் இருந்திருக்கிறார்கள்; அவர்களைக் குறித்து, எனக்குத் தெரிந்தவரை சிறு குறிப்புகளாகவாவது எழுதுகிறேன்.

 9. vijay Says:

  திரு இராம் ,உங்களின் தாயாரின் வழிகாட்டல்,அறிமுகம் இருந்துமே ,இத்தனை வருடங்கள் தாண்டியிருக்கின்றது இதை நீங்கள் படிப்பதற்கு.இப்படியிருக்க திராவிடர்கள் பற்றி சொல்லவும் வேண்டுமா?.நாஞ்சில் எழுதியிருப்பது போல் ,சமய சமாச்சாரங்கள் எனக்கு பிடிபடாவிட்டாலும் ,அவரின் அழகு தமிழுக்காக,இப் புத்தகம் படிப்பேன். கும்மாங்குத்துக்களுக்கிடையில் இப்படியான அறிமுகங்கள் அவசியம்.


  • 🙏🏾😭 எதற்கும் காலம் வரவேண்டும், என நினைக்கிறேன்.

   என் சோம்பேறித்தனத்துக்கு முட்டுக் கொடுக்கவில்லை; ஆனால் நம் வாழ்நாளின் பல்வேறு சமயங்களில் நாம் சிலவிஷயங்களுக்கு முன்னுரிமை கொடுத்து அவற்றில் ஈடுபாடு கொள்கிறோம் அவற்றில் சில வியர்த்தம், சில அப்படியுமிப்படியும், சில நம் தெளிதலுக்கு ஒத்துவருபவை.
   (but, when I think of opportunity costs, many have been terrible, the horror, the horror!)

   என் வாழ்க்கையில் நான் குறைந்தது ஐந்தாறு வருடங்களாவது – கம்யூனிஸ- ஈவெரா சித்தாந்தங்களை(!) ஆழமாகப் படித்து, கொஞ்சம் களத்தில் பிணியும் செய்வதில் வியர்த்தம் செய்திருக்கிறேன். (கொஞ்சம் கற்றும் கொண்டிருக்கிறேன் – உலகம் சாம்பல் நிறம்)

   + நீர் தன் மட்டத்தை அடையும். சிலசமயம் உயர் சில சமயம் படு.

   + குரு தயாராக இருக்கும்போது அவனுக்கு ஒரு சீடன் தோன்றுவான்.

   :-)

 10. Karthikeyan Says:

  பாவம் இதெல்லாம் உங்கள் கண்ணுக்குபட்டிருக்காது…

  https://www.jeyamohan.in/7900/
  https://solvanam.com/2013/12/15/ஆச்சரியம்-தரும்-ஆவுடை-அக/
  https://samicheenan.blogspot.com/2016/03/blog-post.html

 11. Karthikeyan Says:

  ஆலையந்தோறும் அலைந்து திரிந்தது போரும் போரும்
  மனதாலயம் தன்னில் அரனாரிருப்பதைப் பாரும் பாரும்
  உன் தெய்வம் என்தெய்வம் என்று உழன்றதும் போரும் போரும்
  தன்னுள் தெய்வம் என்றெண்ணி இருப்பதைப் பாரும் பாரும்
  ஓதிப் படித்ததோர் மந்திர கர்மங்கங்களும் போரும் போரும்
  புத்தி யுக்தி அனுபவத்தால் முக்தி கிடைத்ததைப் பாரும் பாரும்

 12. anony Says:

  எப்பேர்ப்பட்ட ஞானிகள் வாழ்ந்த நாடு!!! ஹ்ம்ம்.
  திராவிடம் மட்டும் அல்ல எந்த விடமாக இருந்தாலும் காலம் அடித்து செல்லத்தான் போகிறது. ராவணனும் துரியோதனனும் நிர்கதி ஆகவில்லையா? இந்த கிறுக்கர் கூட்டத்திற்கும் அதே முடிவுதான்.


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s