தமிழகத்து வீரியமுறையில், திராவிடமரபணு மாற்றப்படாத ஆர்கனிக் ‘பிஹெச்டி’ சாகுபடி செய்வது எப்படி?

17/10/2020

ஓரளவுக்குத் தெரிந்த அன்பன் ஒருவனுக்கு (சககிழக்கோட்டான், ~56 வயது ஆகிறது) எப்படியாவது மேற்படிப்பு படிக்கவேண்டும் என்று ஆசை. இந்த வயதில்… அதுவும் பிஹெச்டி பண்ணவேண்டும் என்று.

(டாக்டர் பட்டம் தேவையென்றால், முக இசுடாலிர் போல, அதனை சல்லீஸாக இங்கிலாந்தில் வாங்கிக்கொள்ளவேண்டியதுதானே! அவர்கள்தாம் அண்ணா பல்கலைக்கழகம் அண்ணாமலை தண்டக்கருமாந்திரம் போலக் கூவிக்கூவி விற்கிறார்களே! அதற்கு ஏன் உழைக்கவேண்டும், சொல்லுங்கள்?)

…உளவியலில் அதுவும் கல்விசார் உளவியலில் குறிப்பிடத்தக்க ஆராய்ச்சிகள் செய்து புகழ்பெற்று போஸ்ட்டாக் செய்து அமெரிக்க பாஸ்டன் எம்ஐடியில் லைஃப்லாங் கின்டர்கார்டன் குழுவோடு இணைந்து உலகளாவிய ரெவலில் ஊடாட, ஊக்க போனஸாக பாரதக் கல்விக்கும் அபயம் கொடுக்க என்றெல்லாம், அவனுக்கு ஒரு திட்டம். (இரண்டுமூன்று வருடங்கள்முன், இவனுக்கு இந்தக் குழுவைப் பற்றி ஓரளவுக்கு அறிமுகம் தந்து உசுப்பிவிட்டது என் தவறோ என எனக்குச் சந்தேகம்)

இவன் ஒரு எம்டெக் வகை கஞ்சினீர். பன்னாட்டு நிறுவனம் ஒன்றில் தகவல் தொழில் நுட்ப பஜனை செய்து பெங்களூரிலேயே மூன்று ‘வில்லா’ வகை வில்லத்தனமான வீடுகள்++; மேலும் சென்னை + புணேயிலும்  ஒன்றொன்று – வீடுகளை பராமரிப்பு செய்வதே முழு நேரத்தொழிலாகிவிட்டது அதுவும் வீடுகளை வாடகைக்கு விட்டு பின்னர் மீட்டு மறுபடியும் குடியேற்றி… ஒரே தொல்லை, ப்ரோக்கரேஜ் அதிகமாகிவிட்டது என நொந்து கொண்டிருக்கும் போதே… “காவேரிக்கரையோரம் திம்மாச்சிவரத்தில் (மனைவியின் ஊர்) அல்லது ஷெண்பகத்தோப்பு நீர்த்தேக்க ஏரியருகில் (இவன்மூதாதைகள் ஊர்,  அல்லது பாலாறு/மிருகாண்ட நதிதீரம்) ஒருஇன்னொரு வீடுகட்டிக்கொண்டு அங்கேயே ஸெட்டில் ஆகிவிடலாமா எனப் பார்க்கிறேன்!”

இவர்களையெல்லாம் எப்படிப் புரிந்துகொள்வது என்றே தெரியவில்லை. பரிதாபமாக இருக்கிறது. மீயறிவு என்பதே ஒரு மசுத்துக்கும்கூட இல்லையே!

எனக்கு இப்படி வீடுகளைச் சேகரம் செய்வதில் பெரிய பிரச்சினை இல்லை (சர்வ நிச்சயமாகப் பொறாமையும் இல்லை), ஏனெனில் பாரதத்தின் ஜிஎன்பி இவற்றாலும் ஏறுகிறது, பலருக்கு வேலை கிடைக்கிறது, பணப்புழக்கம் அதிகமாகிறது என்பவைபோல எனக்குச் செல்லமான முட்டுக்கொடுத்தல்கள்; ஆனால், ஏன் இந்தத் தலைமேல் இழுத்துப் போட்டுக்கொண்ட கஷ்டம் + உலகத்திலில்லாத பிரச்சினை என ஒரே ஓலம்? ஏன், விற்றோ வேறு யாருக்குத் தத்தமாகவோ கொடுத்தால் என்ன?

இருக்கும் பலவற்றில், ஒருவீட்டில் (அவன் ஜாதி சார்ந்த ஏழைக் குழந்தைகளுக்கேகூட) விடுதி  நடத்தி, அவனளவில் பாரதத்தின் கல்வி நிலையே மேம்படுத்தினால் என்ன? (ஆனால் மாட்டான்கள்)

அவனுடைய மனைவி அவர்களும்  எவ்வளவுதான், பெங்களூர் பணக்காரர்களுக்கான கமர்ஷியல் ஸ்ட்ரீட்டில் திருவுலா சென்று  உயர்தர கமர்கட் வாங்கிக் குவித்துக் கொண்டிருக்க முடியும், சொல்லுங்கள்; இவரும் ஒருகாலத்தில் புத்திசாலியாக செயலூக்கத்துடன் இருந்தார், பாவம்; பின்னர் அசிரத்தை வந்துவிட்டது என நினைக்கிறேன், அதுவும் கண்ணெதிரில் நான் பார்க்கப் பார்க்கவே – சிலபல வருடங்கள் நான் பெங்களூரில் இல்லாமல் ஊர்சுற்றிக்கொண்டிருந்தேன் – திரும்ப வந்து பார்த்தால் –  ஆரோக்கியமாக இருந்த அவர் ஒன்றிரண்டு வருடங்களில் ஈபிஎன்டி (Ever Pregnant Never Delivered) அம்மணியானார், தேவையா? நாராசம். :-( (கணவனுக்கு இன்னமும் படுமோசமான தொப்பை!)

…பின்னர், அந்த அம்மணி – ஒருவழியாக, ‘Battalion of Bored Housewives of Bangalore‘ (BoBHoB) எனும் ராணுவப் படை ஜோதியில் ஐக்கியமாகி விட்டார். கணவன் அலுவலகத்துக்குக் கிளம்பியவுடன் இன்னொரு காரில் அவரும் கைப்பையை ஆட்டிக்கொண்டு திக்விஜயத்துக்குக் கிளம்பிவிடுவார். பெங்களூரின் கமர்ஷியல் தெருவில் தினம் மும்மாரி பெய்கிறதா எனச் சகபடைவீர பொபோப்களுடன்,  நுணுக்கமாக நுனிவரை நுங்கெடுத்து மேற்பார்வை செய்யவேண்டுமல்லவா, பாவம்?

மேலும் கார் ஓட்டுநருக்கு தினமும் ஏதாவது வேலை கொடுக்கவேண்டும். அவர்களை எப்படிச் சும்மா உட்கார விடுவது எனும் நல்லெண்ணம். இதுவும் சரிதான்! பின்னர் கிட்டி பார்ட்டி அதுயிதுவென மூக்குப் பிடிக்கச் சாப்பிட்டுவிட்டு ஒரு மாதத்திற்கு ஒருமுறை வந்தனாலுத்ரா VLCC அம்மணியின் கொழுப்பிளக்கி மருத்துவம். ஒரு மாதம் குண்டாகிக்கொண்டே இருப்பார். பின் ஒன்றிரண்டு வாரங்களில் ஒருமாதிரி இளைப்பு. சரித்திர தரித்திர சக்கரம். வளர்குண்டி தேய்குண்டி எனவும் வைத்துக்கொள்ளலாம், ஒரு பிரச்சினையுமில்லை.

“குண்டி பெருத்தோர் குதிர் பெருத்தோரே” என வள்ளுவர் சும்மாவா சொன்னார் மணிமேகலையில்?

சரி. அவன், தன் பிள்ளைகளை — உதவாக்கரை அஷோகா, ஆஸிம்ப்ரேம்ஜி பல்கொலைக்கழகங்களில் லிபரல் ஆர்ட்ஸ் எழவுகளில் சேர்த்துவிட்டிருக்கிறான். குளிரூட்டப்பட்ட் அறைகளில் உட்கார்ந்து ஏழ்மையை ஆழ்ந்து அவதானிக்கும் அற்புதப் பாடத்திட்டங்கள்.

ஆகவே, வேறு வழியில்லை. பிள்ளைகள் மேன்மேலும் ஏகோபித்து வளர்ந்து வேர்களற்ற ஒட்டுண்ணி இடதுசாரி-லிபரல்களாகி உலகம் முழுவதற்கும் முழுப்புரட்சிக்கு ஆயத்தம் செய்யப்போவதற்கு உத்திரவாதம். பின்னர் அமெரிக்காவில் உட்கார்ந்துகொண்டு, ஒழிந்த நேரத்தில் அரவிந்தன்கண்ணையன் அவர்கள்போல பாரதத்துக்கு ஏகத்துக்கும் கூறுகெட்ட அறிவுரை கொடுப்பார்கள் என்பதும் குறிப்பிடத்தக்க ஒரு சாத்தியக் கூறே!

-0-0-0-0-0-

சரி. பிஹெச்டி விரும்பி பக்கம் வருவோம்.

கிழபோல்ட்டின் வீடெனும் கூடு இன்னமும் கொஞ்ச நாட்களில், அவன் பறவைக்குஞ்சுகள் சிறகடித்துப் பறந்தபின், ஒருமாதிரி காலியாகி சுரத்தில்லாமல் போய்விடும் அல்லவா? அந்தச் சமயத்திலாவது அவனுடைய நெடுங்கால ஆசையை நிறைவேற்றிக் கொள்ளலாம் என அவனுக்கு ஒரு ஆசை. “இந்தியாவில் கல்வியின் வளர்ச்சிக்கு ஏதாவது செய்யவேண்டும்! ஆராய்ச்சி ஆராய்ச்சீ!!”

“ஏண்டா? பாலாற்றங்கரையில் உட்கார்ந்துகொண்டு எப்படி அமெரிக்காவில் பிஹெச்டி ஆராய்ச்சிகீராய்ச்சீ எனச் செய்யப்போகிறாய்?” எனக் கேட்டால்… “டேய், உனக்கு எல்லாமே நக்கல்தான்!”

“எப்படியும் அமெரிக்கா போய்தான் பாரதத்தின் மேன்மைக்குப் பாடுபடவேண்டுமென்றில்லையே! அந்த செலவில் நீ இங்கேயே எத்தையானும் காத்திரமாக ஆராய்ச்சி செய்யலாமே!” என்றால்…

பிஹெச்டி டாக்டர் பட்டம் மாஞ்சா நூல் டீல் வுடுதல்… எனச் சுற்றிச் சுற்றித் தட்டாமாலை…

பலநாட்கள்-வகை ஊடலுக்குப் பின் மறுபடியும் அவன் பேசினான்…. சுற்றிச் சுற்றி அதே சீரங்கம்தான்!

மேற்படிப்பு பற்றியெல்லாம் மறுபடியும் பேச்சு வந்தது. நான் அவனிடம் சொன்னேன், “டேய், கைவசம் இரண்டுமூன்று கல்வி குறித்த தொழில்நுட்பம்சார் வர்த்தக ஐடியாக்கள் இருக்கின்றன. ஆராய்ச்சியும் செய்யலாம், ஒரு பிரச்சினையுமில்லை; அவை – நம் பாரதத்துக்கு ஏற்ற, ஸ்கேல் ஆகக்கூடிய விஷயங்கள்;  ஏற்கனவே இந்தத் துறையிலும் பள்ளிக்கல்வியின் நிலை பற்றியும் கொஞ்சம் கொஞ்சம் பரிச்சயமும் இருக்கிறது. நீ முதல் போடு, நான் இன்னும் இரண்டு பையன்களைச் சேர்த்து வேலையைத் தொடங்குகிறேன்; என் செலவை நான் பார்த்துக்கொள்கிறேன்” என்றால்… (அவன் சோம்பேறி; ஆனால், ‘ரிஸ்க் டேக்கிங்’  + ‘தொழில் முனைதல்’ பற்றியெல்லாம் இளைஞர்களுக்கு ஏகத்துக்கும்  முழநீள நீதிபோதனையும் ஊக்கமும் கொடுக்கமுடியும்… வெட்டி, பெத்தபேச்சுத் திராவிடன், வேறென்ன சொல்ல)

…பின்னர், சீனாக்கார கோவிட் வந்தது.

ஆறுமாதம் பேச்சுமூச்சேயில்லை; சரி, ஓழிந்தான் சோம்பேறி நடிகத் தடியன் (ஒரு குப்பை குறைந்தது) எனக் கோவிட் கடிக்கு நன்றி சொல்லிக்கொண்டிருந்தபோது…

-0-0-0-0-0-

…இரண்டு நாட்கள் முன்னால் திடீரென்று கூப்பிட்டு முழ நீளத்துக்கும் இரண்டு மணிநேரத்துக்கு மேலாகவும் பேசினான்.

அதன் ஒருமாதிரியான சாராம்சம் கீழே; என்னை உண்மையாலுமே திடுக்கிடவைத்தது இது. தமிழகத்தின் உயர்கல்வி நிலையைப் பற்றி எனக்குத் தெரியும் -ஆனால், அது இந்த அளவுக்கு மோசம் எனத் தெரிந்திருக்கவில்லை.

…எல்லாம் திராவிடத்தின் கொடை – வேறென்ன சொல்ல…

-0-0-0-0-0-

அவனுடைய கதைக்கு முன்பாக நம் செல்லத் தமிழகத்தின் பிஹெச்டி எம்ஃபில் வகை (PhD, M.Phil) படிப்பெழவுகளைப் பற்றிய சில புள்ளி விவரங்கள்…

2017-18 வருடத்துக்கான விவரங்கள்

அகில பாரதத்தில் பிஹெச்டி ‘பட்ட’த்துக்கான சேர்க்கை – 161, 412
நம் தங்கத் தமிழகத்தில் – 29, 778!

பாரதத்தில் நம் தமிழக பிஹெச்டி கூவான்களின் சதவீதம் – 18.45%

அகில பாரதத்தில் எம்ஃபில் ‘பட்ட’த்துக்கான சேர்க்கை – 34, 109
நம் தங்கத் தமிழகத்தில் – 17, 179!

பாரதத்தில் நம் தமிழக எம்ஃபில் கூவான்களின் சதவீதம் – 50.37% !!

2018-19 வருடத்துக்கான விவரங்கள்

அகில பாரதத்தில் பிஹெச்டி ‘பட்ட’த்துக்கான சேர்க்கை – 169, 170
நம் தங்கத் தமிழகத்தில் – 25, 820 !

பாரதத்தில் நம் தமிழக பிஹெச்டி கூவான்களின் சதவீதம் – 15.26%

அகில பாரதத்தில் எம்ஃபில் ‘பட்ட’த்துக்கான சேர்க்கை – 30, 692
நம் தங்கத் தமிழகத்தில் – 12, 425!

பாரதத்தில் நம் தமிழக எம்ஃபில் கூவான்களின் சதவீதம் – 40.48%!!

திருட்டுத்தனம் செய்வதற்கும் ஒரு அளவு வேண்டும். கேவலம், பாரதத்தின் மக்கட்தொகையில் 6% கூட இல்லாத ஒரு திராவிட கும்பல் இந்த அளவுக்கு அட்டூழியம் செய்து, தமிழகத்தையும் காயடிப்பது.

இது குறித்து சென்றவருடம் நான் எழுதிய பதிவு:

தமிழகத்தில் உயர்கல்வி – ‘பிஹெச்டி’க்களும் பரிதாபங்களும் :-(  03/04/2019

கீழே, ஒரு தண்டக்கருமாந்திர, தமிழகம்சார் பிஹெச்டி தீஸிஸ்ஸின் அவல நிலை!

நான்கைந்து ஆண்டுகள் முன்பு வரை, நான், இந்த ஊழல்களெல்லாவற்றையும் – நம் கம்யூனிஸ்ட் புரட்டாளப் பொறுக்கியார் கன்னையா குமார் போல திருட்டுத் தீவட்டி ஜர்னல்களை, நம் தமிழர்களும் ஏகோபித்து ஆதரிக்கும் அளவுதான் என்பதாக நினைத்துக்கொண்டிருந்தேன். அந்த ரெவல்தான் என ஆசுவாசம் கொண்டிருந்தேன்.

ஏகோபித்து ஒப்பேற்றும் அதிசராசரிப் பேடிகள் என்பதையும்…

இருந்தாலும் இந்த அளவா படுமோசமான அயோக்கியர்களாக இருப்போம்?

-0-0-0-0-

என் அன்புக்கும் கரித்துக்கொட்டுவதற்கும் உரிய, நண்ப பிஹெச்டிதாசன் தமிழகத்தில் எந்தெந்த எழவெடுத்த பல்கொலைக்கலகங்களில் தரமான (அதுவும் கல்வி, மனோதத்துப்பித்துவம் குறித்த) ஆராய்ச்சி செய்யலாம் எனத் தேடியிருக்கிறான். ஒன்றும் தேரவில்லை. பின்னர் கல்விசார் தொழில் நுட்பம் குறித்து ஏதாவது பல்கொலைக்கலகம் ஆய்கிறதா என்று பார்த்தான். இல்லை.

பின்னர் சமூகவியல் என்று, கொஞ்சம் தள்ளி யோசித்தான். முதலில் சொல்லிக்கொண்டிருந்தபடி அவன் திட்டம் என்னவென்றால், மூன்று நான்கு வருடங்கள் தொழில் நுட்பம் சார் கல்விமுறைமைகள் குறித்து தமிழகத்தில் ஆராய்ந்துவிட்டு, மேலதிகமாகப் பீராய பாஸ்டன் போலச் செல்லலாமோ என்று…

பிரச்சினை என்னவென்றால், கல்தோன்றி மண் தோன்றாக் காலத்திலிருந்து கல்விக்கும் கலவிக்கும் ஆறுவித்தியாசம் கூடக் கண்டுபிடிக்கமுடியாத அறிவிலிதான் திராவிடத் தமிழன்; வெறும் அறிவிலியாக, நிரக்ஷரகுக்ஷியாக இருந்தால் பரவாயில்லை – ஆனால் அவன் அயோக்கியன்; அதனால் தான் நாம் இப்படி இருக்கிறோம்.

நம் செல்லத் தமிழகத்து வரலாறு முழுவதையும் இந்த ஒரே உண்மையினால் விளக்கமுடியும்.

ஆக, அவன் இந்தச் சாகசப் பயணத்தில் சென்றடைந்தது ஒன்றிரண்டு கல்விமாமாக்களை! இவர்களும் கல்வித்தந்தைகள் எனப் பவனி வரும் பொறுக்கிகளின் மாமன்-மச்சான் உறவுமுறைதான். ஆகவே, ‘அறிவியல் பூர்வமாக ஊழல்’ செய்யும் திராவிடத்திறனை இதிலும் நுணுக்கமாகவும் துப்புரவாகவும் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றனர். இருந்தாலும், இது குடிசைத் தொழில் போல இல்லை, ஜாம்ஜாமென்று வெளிப்படையாகவே நடக்கிறதுபோல! (ஜூலை 2021 முதல் துணைப் பேராசிரியராக வேண்டுமானால், அவசியம் அந்தத் துறையில் பிஹெச்டி செய்திருக்கவேண்டும் + பதிக்கப்பட்ட ஆராய்ச்சி அறிக்கைகள் கல்வி நிறுவன ரேங்கிங்/தரவரிசைகளுக்குக் பயன்படுத்தப்படும்,  என பாரதத்தின் மத்திய அரசு அறிவித்ததிலிருந்து, திராவிட பிஹெச்டி விற்பனை, ஊழல் அறிக்கைகள் விவகாரம் இன்னமும் மும்முரமாக நடக்கிறதுபோல!)

அவனுக்கு வந்ததே ப்ரெய்ன்வேவ்.

‘இந்தக் கழிசடைகள் மூலமாகச் சென்றால் –  இரண்டு வருடங்களிலேயே பிஹெச்டி முடித்துவிட்டு பின்னர் ஸீரியஸ்ஸாக அமெரிக்காவில் மேலே ஏதாவது காத்திரமாகச் செய்யலாம்.’

அதாவது, தமிழக பல்கொலைக்கழகத்தில் அலுங்காமல் நலுங்காமல், காதும்காதும் வைத்தாற்போல, பிஹெச்டி செய்துவிடலாம் என்று. நப்பாசை.

…இதெல்லாம் அவன் எனக்கு இரண்டு நாட்கள் முன்னால் அவன் சொல்லத்தான் தெரியவந்தது; ஆனால் அவன் ப்ரோக்கர் மூலம்கீலம் எனச் செய்தால், உடனடியாக அவன் பெயரை வெளிப்படுத்திவிடுவேன், அசிங்கமாகிவிடும் என நான் பயமுறுத்தியதில், பாவம் வெறுத்துவிட்டான்.

அவனும் பதில் வீம்புக்கு, ‘நானும் அப்படியே உனக்குச் செய்வேன்;’ நானும், ‘போடா மயிராண்டீ, முட்ஞ்சதப் பண்ணிக்க, எனக்கு என்னப் பாத்துக்கத் தெர்யுண்டா மூதி!”

நான் தொடர்ந்தேன். இந்த விஷயத்தில் மேலதிகமாக முனைந்தால் – ‘ஆராய்ச்சியில்’ ஒரு சிறுபகுதிக்குக் கூட ப்ரோக்கர் வழி போனால், உறவைத் துப்புரவாகக் கத்தரித்து விடுவேன் எனவும் சொன்னேன். அவன் துடித்துப் போய்விட்டான்.

சுபம். :-(

நான் உண்மையைத்தான் சொன்னேன். இதைப் போலப் பலப்பலருடன் லடாய் ஆகி முட்டிக்கொண்டு கத்தரித்திருக்கிறேன்; ஒருவருடம் முன்புகூட நான் அவ்வப்போது பணிசெய்து கொண்டிருந்த அந்தச் சமய ‘கல்வி'(!) நண்பர்களோடு இதேமாதிரி அறமற்ற அட்டூழியக் காரணங்களுக்காக முட்டிக்கொண்டுவிட்டது. இப்போது அவர்கள் பக்கம்கூடத் தலைவைத்துப் படுப்பதில்லை.

என்னுடைய ஆழ்ந்த நம்பிக்கை, மூடநம்பிக்கை என்றே வைத்துக்கொள்ளுங்கள்! வியாபாரத்தைப் பெருக்க,  “படிச்சவன் சூதும்வாதும் பண்ணினால், போவான் போவான், ஐயோவென்று போவான்!”

ஆக, அவன் இந்தக் கல்விமாமா ப்ரோக்கர்கள் பக்கம் செல்லமாட்டான் என நினைக்கவே எனக்கு ஆசை!

-0-0-0-0-

எது எப்படியோ, கீழே தமிழக பிஹெச்டி ‘ரேட் கார்ட்’ அல்லது மெனு:

(இதில் பேரம் பேசமுடியும் போல; எண்ணிக்கைகளில் +/- 25 சதவீதம் முன்னே பின்னே இருக்கலாம் – ஆனால் இதன் மூலமாகப் பலப்பலர் தமிழகத்தில் பிஹெச்டி ‘செய்திருக்கிறார்கள்’ என்பதில் சந்தேகமேயில்லை)

இந்த க்வோட்/விலைவாசி துறைக்கு ஏற்றாற்போலவும் தலைப்புக்கேற்றவாறும் மாறும். பிஹெச்டிதாசன் துறைக்குக் கொஞ்சம் அதிகம் எனச் சொன்னான்.

அட்வான்ஸ்/முன்பணம்: ரூ 10, 000/-

சுளுவான பல்கலைக்கழகம்/கல்விநிறுவனம் ‘கண்டுபிடித்துக்’ கொஞ்சம் காகிதம்/ஆவணங்கள் தயாரிக்க: ரூ. 25, 000/-

வடிகட்டும் தேர்வுகளுக்கு பாவலா காட்ட: ரூ 30, 000/-  (இது பிஹெச்டிதாசனுக்குப் புரியவில்லை – இதெல்லாம் மத்திய அரசு அமைப்பு ரெவலில் நடப்பது அல்லவா? அல்லது டீம்ட்/டூம்ட் பல்கொலைக்கழகங்கள் இதற்கும் டிமிக்கி கொடுக்க முடியுமோ?)

கோர்ஸ்வர்க் ஒப்பேற்றல்: ரூ 50, 000/- (இதிலெல்லாம் எப்படிப் போலி ஆவணங்களை உருவாக்குவார்கள்?)

பிஹெச்டிதாசனே ஆராய்ச்சி செய்து, ஆய்வுமுடிவுகளை வைத்து புரோக்கர் ஒரு ஒப்புக்கொள்ளத்தக்க மொழியில் அறிக்கையைத்  (ஆர்டிகிள், டெக்னிகல் ரிப்போர்ட்) தயார் செய்ய வேண்டுமென்றால்: ரூ1, 00, 000/-

கல்வி-தொழில் நுட்பம் சார்பாக ஆராய்ச்சி செய்து, முடிவுகளைப் பகுத்து, ஒரு காத்திரமான ஆராய்ச்சிஅறிக்கை எழுதி, யுஜிஸி ஆணையத்தால் அனுமதிக்கப்பட்ட துறைசார் ஜர்னல் / சஞ்சிகையில் பதிக்க:  ரூ. 1, 80, 000.

மாறாக, பிஹெச்டிதாசனே முழுவதும் அறிக்கையை எழுதி, அது பதிப்பிக்கப்படவேண்டும் என்றால் ரூ 50, 000/- (ஆனால் அறிக்கையைச் சரியானபடி எழுதகொள்ள, எடிட்டர்களின் கேள்விகளை எதிர்கொள்ள பிஹெச்டிதாசன் தயாராக இருக்கவேண்டும்; ப்ரோக்கர் உதவமாட்டார்! அவர் தொடர்புகளை ஏற்படுத்திக்கொடுப்பதோடு சரி)

வெறும் தீஸிஸ் எழுத: ரூ 80, 000/- (அதாவது, பிஹெச்டி தீஸிஸ் ஆய்வுரை மட்டும் எழுத – பிற முன்னேற்பாடுகளை பிஹெச்டிதாசனே செய்துகொள்ள வேண்டும்)

அனைத்து வேலைகளையும் புரோக்கர் செய்யவேண்டுமென்றால் குறைந்த பட்சம் ரூ 4, 50, 000/- (இதற்கு, பிஹெச்டிதாசனுக்குக் கை நாட்டு போடத்தெரிந்திருந்தால் போதும்!)

அண்ணா பல்கலைக்கழகத்துப் பிஹெச்டி வேண்டுமென்றால் – ரூ 6 – 7,00, 000/- ஆகும்.

இது தற்போதைய நிலவரம்.

மொத்த சுழற்சியும் 1-2 ஆண்டுகள் எடுக்கும். ஆனால் மேலும் சிலவருடங்கள் ‘ஆராய்ச்சி’ நடந்ததைப்போலக் கணக்கு காண்பிக்கப்படும்.

ஆராய்ச்சிஅறிக்கை, தீஸிஸ் ஆய்வுரை எழுதுபவர்கள், துறை வல்லுநர்கள்(!); மேலும், பெரும்பாலும் அவர்கள்தாம் மூத்த ஆராய்ச்சியாளர்களாகவும், பிஹெச்டி ஆய்வானது, தெரிவு செய்யப்படுவதற்கான குழுவிலும் இருப்பவர்கள். ‘அட்ஜஸ்ட்’ செய்துகொள்வார்கள்.

தரகர் மாமாக்கள், தேவையானால் வெளி நாட்டுப் பேராசிரியர்களையும் ‘பாக்கெட்டில்’ போட்டுக்கொள்ளக்கூடும் பராக்கிரமம் மிக்கவர்கள், ஒரு பிரச்சினையும் இல்லை. என்ன மேலதிகமாகச் செலவு ஆகலாம்.

பிஹெச்டிதாசன் எம்ஐடி போகவேண்டியிருப்பதால், எல்லாம் பக்காவாக இருக்கவேண்டுமில்லையா. மேலும் அவருக்கு வயது 50+. ஆகவே “அதிக பட்சம் பத்து லகரத்துல* முட்ச்சிடலாம் சார்!”

* கண்டிஷன்ஸ் அப்ளை.

பிஹெச்டிதாசன், அந்த திராவிடக் கல்விமாமாவிடம் ‘உங்களுடைய நம்பகத் தன்மை என்ன’ எனக் கேட்டதற்கு அந்த நபர் காண்பித்த ஜாபிதாவில் தற்போதைய அண்ணா பல்கலைக்கழகப் பேராசிரியர்களும் அடக்கம் (என் நண்பர் வாயடைத்துப் போனார்!) – மேலும் அவர், “வேணும்னா அவ்ங்க ஃபோன் நம்பர் தர்ரேன், வெரிஃபை பண்ணிக்குங்க” என்றிருக்கிறார்; ஆகவே சங்ககாலப் பாரம்பரியம் உடைய மாமாவேலைதான் இது. பராக்கிரமம் மிக்கது.

ஆகவே, தொடரும் தொன்மம்:

“கருணாநிதி திமுககாரன்லாம் லஞ்சம் வாங்குவான்! ஆனாக்க காரியத்த துப்புரவா செஞ்சிகொட்த்ருவான்! நம்பகத்தன்மெ தாஸ்தீ!”

–0-0-0-0–

:-(

ஆகவே, அம்மணிகளே அம்மணர்களே!

இதைப் படிக்கும் உங்களுக்கும் பிஹெச்டி தேவையென்றால், வரிசையாக வரவும். நானும் ஒரு ஸப்-ப்ரோக்கர், மன்னிக்கவும், திராவிடப்ரோக்கர் செம்ப்ரோக்கராகி விடலாமெனத் தீர்மானித்துவிட்டேன்.

நன்றி.

பின்குறிப்பு: அண்ணா பல்கலைக்கழக வைஸ்சான்ஸல்லர் பிவி ஸூரப்பா, பாவம், மிகவும் வெறுத்துப்போய் இந்த அயோக்கியத் தனங்களுக்கெதிராகப் போராடினார் என நினைவு; இன்றைய நிலவரம் கலவரமா அல்லது அவருடைய துறவறமா எனத் தெரியவில்லை. (ஹ்ம்ம், சொல்லப்போனால் இந்தச் செய்தி எனக்குக் காற்றுவாக்கில் வந்த, என்னால் ஊர்ஜிதம் செய்யப்படாத விஷயம்தான்! ஆனால் இந்தப் பதிவிலுள்ள பிற விஷயங்கள் அப்படியல்ல!)

18 Responses to “தமிழகத்து வீரியமுறையில், திராவிடமரபணு மாற்றப்படாத ஆர்கனிக் ‘பிஹெச்டி’ சாகுபடி செய்வது எப்படி?”


 1. ராம் தமிழகத்தில் இருந்து பெறப்படும் எந்த கல்வி சான்றிதழுக்கும் மதிப்பு இல்லை என்று மற்றவர்கள் அறிவிக்கும் வரை இவர்கள் ஓயமாட்டார்கள்.


 2. அன்புள்ள ராஜ்மோஹன்பாபு, எனக்கு என்ன ஆச்சரியமென்றால் – ஒரு நக்கீரனோ ஜூனியர்விகடனோ இந்த அவலம் குறித்து ஒரு ‘இன்வெஸ்டிகேடிவ் ஜர்னலிஸ்ம்’ எழவையும் (எனக்குத் தெரிந்து) செய்யவில்லையே என்பதுதான்! (ஆனால் எனக்கு இதுகுறித்து எப்படி ஆச்சரியம் வரலாம் என்று எனக்கு இப்போது ஆச்சரியமாக இருக்கிறது)

  எப்படிப்பட்ட அசிங்கம் இது! அதுவும் மாமாங்கங்களாக நடந்துகொண்டிருக்கிறது!

  இது இப்படி என்றால் – ‘கல்விப் பணி’யில் கல்லூரி/பல்கொலைக்கழகங்களில் சேர கொடுக்கவேண்டிய லஞ்சம் இருக்கிறதே. 50 60 லட்சம் என்பதெல்லாம் ஒரு பெரிய விஷயமேயில்லை. (இந்த விஷயம் சென்னை, மதுரை காமராஜர், பாரதியார் பாரதிதாசன் என அனைத்துக் குப்பைக் கூடங்களிலும் நடக்கிறது எனவும் நேரடியாக இதனால் அடிவாங்கிய ஆசாமிகளிடமிருந்து கேட்டிருக்கிறேன். காலம் காலமாக அண்ணா பல்கலையில் நடக்கும் விஷயம்தான் இது!)

  அதுவும் – இதனை திராவிட அரசியல்வாதிகள் வாங்குகிறார்கள் என்றால், நம்மால் ஆதூரத்துடன் புரிந்துகொள்ள முடியும் – ஆனால் பேராசிரியர்களும் வைஸ்சான்ஸல்லர்களும் இப்படி அசிங்கமாக வாங்கினால்?

  முடை நாற்றம் எடுக்கிறது – உயர்கல்வியும். ச்சீ.

  வேதனையாகவும் இருக்கிறது.

  • சும்பக்கூ திராவிடத் தடியன் Says:

   ஐயா, நீங்கள் இத்தனை வெள்ளந்தியாகவா இருப்பீர்கள்? கேவலம் 2-3 ஆண்டுகள் தனியார் கல்லூரியில் காலட்சேபம் செய்துவரும் கடைக்குட்டிகளுக்கே இந்த ரேட் விவரங்கள் அத்துபடி ஆயிற்றே! இதில் ஜர்னலிசத்திற்கு என்ன வேலை? பல்கலைக்கழகங்களையே விடுங்கள், கார்ப்பரேசனில் தூய்மைப்பணியாளராகச் சேர்வதாக இருந்தாலும் அதற்கான ரேட் கைமாறாமல் தமிழகத்தில் ஓரணுவும் அசையாது என்பது பாமரனுக்கும் பாலபாடமாயிற்றே! இதில் இன்வெஸ்டிகேடிவ் ஜர்னலிசம் வேறு ஒரு கேடா? அதுவும் யார் செய்வது? அவர்கள் இன்வெஸ்டிகேஷன் எங்கே நிலைகொண்டிருக்குமென்பது வெள்ளிடை மலை. மற்றபடி தற்போதைய மார்க்கெட் நிலவரப்படி உதவிப்பேராசிரியரே நூறு லகரங்களை நோக்கி பீடுநடை போட்டுக் கொண்டிருக்கிறார்,தமிலண்டா!


   • ஐயா சும்பக்கூவாரே!

    பின்னூட்டங்களுக்கு நன்றி.:-(

    நான் வெள்ளந்தி ஆசாமியில்லை; அவ்வப்போது அரசல்புரசலாக இந்த ஹிமாலய முடை நாற்ற திராவிடவூழல்கள் பற்றி விஷயங்களைக் கேள்விப்பட்டாலும் (குப்பை சாணிபேப்பர் சஞ்சிகைகளில் ஆய்வுக்கட்டுரை பதிப்பு, ஒப்பேற்றுதல், பணியிடங்களை நிரப்புவதில் பெரும் ஊழல், பெண்மணிகளைச் சின்னாபின்னம் செய்தல், அமோக ஜாதிவெறி, பொய்பொய்யாக ப்ராஜெக்ட் ரிப்போர்ட் தயாரித்தல் இன்னபிற), அவற்றைப்பற்றி மேலதிகமாகத் தெரிந்துகொள்ள முயற்சிக்கவில்லை.

    அலுப்பும், திராவிடர்களைப் பற்றிய என் முன்முடிவுகளும்  காரணங்கள்.

    …ஆனால் – இதுவரை இந்த அளவில் முழுச் சுற்று பிஹெச்டியையும் தொழில்முறையில் தயாரிப்பார்கள், அதுவும் ரேட்கார்ட் போட்டு இத்தனை அறிவியல்பூர்வமாகச் செய்வார்கள் என அவ்வளவு விவரங்களைத் தெரிந்துகொள்ளவில்லை – அறியாமைதான், ஆகவே கொஞ்சம் அசந்துவிட்டேன் + கசந்தும்.

    நாம் எங்கே சென்றுகொண்டிருக்கிறோம்?

    • சும்பக்கூ திராவிடத் தடியன் Says:

     மீண்டும் நீங்கள் வெள்ளந்தி(இந்த விஷயத்தில்)என்பதைத்தான் நிருபித்துள்ளீர்கள், இதுவரை உங்களை அப்படி நினைக்கத் துணிந்நதில்லை. நான் யாரென்று உங்களுக்குத் தெரியும், ஒரு பெயராகவாவது, என்னுடைய அனுபமென்பது மிகச்சொற்பமே, ஆனால் எனக்கே இந்த விபரங்கள் தெரியும், சமீபத்தில் இந்த விஷயங்கள் வெளியே கசிந்தபோது (பெயரளவிற்கு) விசாரணை விளக்குமாறு என பப்பரப்பா செய்தி வந்தபோது, ஒரு துணைவேந்தர் மாற்றப்பட்டார், ஒரு முன்னாள் பதிவாளர் தற்கொலை செய்துகொண்டார், அதோடு எல்லாம் முடிந்தது. ஏதேனும் மாற்றம் நிகழ்ந்ததா? ஒரு கூந்தலும் இல்லை. இதைத் தெரிந்து கொள்ளாமல் இருக்கும்வரை மன அமைதிக்கு பங்கமில்லை. நீண்டநாட்களாகவே உங்களுக்கு எழுதவேண்டுமென நினைத்துக்கொண்டிருந்தேன், ஆனால் அது மாபெரும் புலம்பலிலக்கியமாகிவிடும் ஆபத்து இருந்தது, அதுமட்டுமின்றி நீங்கள் கூறும் அலுப்பும், வெறுப்பும் சேர்ந்துகொண்டதும் காரணம். ஆனால் இன்று பதில் சொல்லாமல் இருக்க முடியவில்லை.
     சர்வநிச்சயமாக நாம் தீராவிட ஜன்னத்தை நோக்கித்தான் சென்றுகொண்டிருக்கிறோம், அதிலென்ன சந்தேகம்? சொர்க்கம் தொட்டுவிடும் தூரமே!


     • ஐயா, நீங்கள் குறிப்பிடும் விஷயம் துணைவேந்தர்(!) தற்கொலை விவகாரம் பப்பரப்பா பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது.

      பலப்பல சமகால நிகழ்வுகள் குறித்த அறிவு எனக்குச் சர்வ நிச்சயமாக இல்லை. டீவி, பத்திரிகை சகவாசம் இல்லாததால் அல்ல இது – வெறும் பாதுகாப்பு உணர்ச்சியும் அசிரத்தையும் தான்.

      அந்த வகையிலும் அறியாமை அதிகம். இழப்புகள் இருக்கலாம். எதற்கும் ஒரு விலை கொடுத்துத்தானே ஆகவேண்டும்?

      பின்னூட்டப் பின்குறிப்பு: உங்கள் மின்னஞ்சல் முகவரியைப் பார்த்தேன். கொஞ்சம் புரிந்துகொண்டேன். ஆனால் நீங்களும் ஒரு புனைபெயர் ஆசாமியாக இருக்கலாம். நாம் முன்னெப்போதாவது (நேரில்) உரையாடியிருக்கிறோமா, அரட்டை அடித்திருக்கிறோமா என நினைவில்லை; அப்படி இருந்தால், (இருக்காவிட்டாலும் கூட) என்னை மன்னித்து ஒரு ஓலை அனுப்பவும்; மீண்டும் நன்றி.

      • சும்பக்கூ திராவிடத் தடியன் Says:

       இந்த கழிசடைகளைப் பற்றி தெரிந்துகொள்ளாமலிருப்பதால் ஒரு நஷ்டமுமில்லை, இலாபம் மட்டுமே, மனம்நொந்து நமது கையறு நிலையை நினைத்துப் புழுங்கவேண்டியதில்லை. (ஓலை அனுப்பிவிட்டேன்).

      • சும்பக்கூ திராவிடத் தடியன் Says:

       தற்கொலை செய்து கொண்டவர் முன்னாள் பதிவாளர்.

 3. Mouli Says:

  கோரா தமிழில் அவ்வப்போது டீ ஆத்திக் கொண்டிருப்பேன்.

  அங்கு இப்படித்தான் – ஒரு அதிமேதாவிக் கல்வியாளர். தமிழகத்தின் ஒரு பெரிய பல்கலைக் கழகத்தில் ஒரு முக்கியப் பொறுப்பில் இருப்பவர். “பி.எச்.டி”. எப்போது பார்த்தாலும் “பார்ப்பனர் இல்லையென்றால், இந்தத் தமிழகத்தின் ரேஞ்சே வேற. அவர்களை இங்கிருந்து விரட்டி அடிக்க வேண்டும்….” என்று கதைப்பார். வழக்கம் போல, ஹிந்து மத துவேஷம்.

  இப்படிப்பட்ட மேதாவியா – என்று வியந்து அவரைப் பற்றி கூகிள் செய்து பார்த்தால், கணினி சம்பந்தமாக அவர் எழுதியுள்ள/பங்களித்துள்ள “பேப்பர்” பலவற்றிலும் ஏற்கனவே பதிப்பிக்கப்பட்ட “பேப்பர்”-களிலிருந்து பத்திகள் முதற்கொண்டு அச்சு அசலாகக் காப்பி!

  இந்த லட்சணத்தில், வருங்கால மாணவர்களை உருவாக்குகிறார்கள்.


  • யோவ்!

   நீர் கோரமாக டீ ஆற்றுகிறீர். அவர் இயல்பாகக் காப்பி ஆற்றுகிறார்.

   இதில் என்ன பெரும் பிரச்சினை?

   யார் அவர்? கூச்சப்படாமல், ஒருமாதிரி க்ரிப்டிக் புதிர் போலக் கோடி காட்டவும்.

   ஏதாவது கார்வண்டியின் சாவி போலவா? அல்லது வசந்தசேனை அம்மணியா?

   • Mouli Says:

    கோரா-விலிருந்து பதில்; சும்மா ஒரேயொரு சாம்பிள்: https://qr.ae/pNuHhP


    • “இந்தியத் துணைக்கண்டத்தில் பேசப்படும் உலகின் முதன்மொழியான செம்மொழி தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளும் மக்களால் பேசப்பட்டு, ”
     🙄🤣😭

     Can’t believe that he is working as a Prof! Atrocious confidence that could come only from even more shallow levels of IQ.

     Krishnan Nallaperumal
     Senior Professor and Head, CITE, MS University, Tirunelveli

     ! Is that CITE or INCITE – definitely he does not seem to have ANY insight!

     :-(

     • Mouli Says:

      கோரா தமிழ் முழுக்க தேச விரோத முட்டாள் கும்பல் நிறைந்துள்ளது. அங்கு கொஞ்சமாவது counter voice இருக்க வேண்டுமென்று நானும், வேறு சில நண்பர்களோடு விடாமல் அங்கு குப்பை கொட்டிக் கொண்டிருக்கின்றேன். :(

    • Aathma Says:

     Atrocious..MS University known for these thugs..also they have a common divider..that’ll come out some day..

 4. சும்பக்கூ திராவிடத் தடியன் Says:

  ஐயா, உங்கள் நண்பர் ஏன் பிஹெச்டி குறித்து இத்தனை மெனக்கெட்டு ஆராய்ச்சி செய்கிறார் எனப் புரியவில்லை, ஆராய்ச்சியே செய்யாமல் ஆராய்ச்சிப் பட்டங்களை அள்ளிவழங்குவதுதானே நமது தனிப்பெரும் சாதனை, நமது தங்கத் தமிழகத்தின் உயர்கல்வி உன்னதங்கள் குறித்து இதுவரை அவர் அறிந்திருக்கவில்லையா?! இந்திய மக்கள் தொகையில் ஒற்றையிலக்க சதவீதமே இருந்தாலும், உயர்கல்வித் தகுதியில் 50 சதவீதத்தை அதிவேகத்தில் நெருங்கிக்கொண்டிருக்கிறோமே அதிலிருந்தே புரிந்திருக்கவேண்டுமே! இருந்த இடத்தைவிட்டு நகராமல், ஒரு விரலைக்கூட அசைக்காமல் ஆராய்ச்சிப் பட்டம் பெற இங்கே வாய்ப்புகள் கொட்டிக்கிடக்கின்றனவே, இதற்கெல்லாமா ஒருவர் இத்தனை ஆராய்ச்சி செய்வார்?! அணுவளவும் அசையாமல் அண்டசராசரத்தையே அலசி ஆராய்ந்து பட்டங்களைப் பெறுவதோடு மட்டுமின்றி, அதே சூட்டோடு பல்கலைக்கழகங்களில் பேராசிரியப் பணியையும் ‘வாங்கி’, பாப்பான் சதிகாரன், இந்தி திணிப்பு முதல் நீட் தேர்வு வரை பலரூபங்களில் திராவிடர்களாகிய நம்மை முடக்கிவைத்திருக்கிறான் என வகைதொகையின்றி முழங்கி கல்விச்சேவையாற்றும் வாய்ப்பு அவர் இருப்பிடம் தேடிவருமே! மொத்தவிற்பனையில் சல்லிசாக (பல பத்து லகரங்கள் தொடங்கி சில நூறு லகரங்களுக்குள்) முடித்துக் கொள்ளலாம், மார்க்கெட் நிலவரத்தைப் பொறுத்தை ரேட் சற்று கூடக் குறைய இருக்கும், அது உங்கள் நண்பருக்கு ஒன்றும் பெரிய விஷயமில்லை, ஹிஹிஹி. இந்த சூரப்பா போல ஒன்றிரண்டு பேர் இன்னும் நமது தங்கத் தமிழகத்தின் பல்கலைக்கழகங்களில் துணைவேந்தரர்களாக அமர்ந்துகொண்டு கல்வித்தரம் குறித்து கவலைப்படுகிறார்கள், என்ன நெஞ்சழுத்தம்! இதுபோன்ற புல்லுருவிகளை உள்ள நுழையவேவிடாமல் தடுப்பதில் தமிழகம் மிகக்கவனமாக இருந்து வந்தது, எப்படியோ அசந்தநேரத்தில் உள்ளே வந்துவிட்டார்கள், இவர்களைக் களையெடுக்கும் அரும்பணி போர்க்கால ரீதியில் நடந்துவருகிறது, உங்கள் நண்பர்வேறு 57களில் உள்ளார், மேற்படி தகுதிகள் வேறு (வில்லாக்கள் + வீடுகள் + சொத்துகள்/கொழுத்த வங்கிக் கணக்கு + இன்ன பிற) ஏராளமாக உள்ளன. ஆகவே, அவருக்கு முன்தேதியிட்டு ஆராய்ச்சிப் பட்டம் வழங்கி, தேவையான அனுபவங்களையும் இணைத்து நேரடித் துணைவேந்தராக அமரவைக்கும் வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன, இதுபோன்ற காம்போ வாய்ப்புகள் அடிக்கடி அமையாது, அவர் தயாராக இருக்கிறாரா எனக்கேட்டுச் சொல்லுங்கள்.
  இப்படிக்கு
  சும்பக்கூ திராவிடத் தடியன்
  பிகு: என்னுடைய சர்வீஸ் சார்ஜ் காம்போ பேக்கேஜில் அடங்காது, அதைப்பற்றிய டிஸ்கஷனுக்கு உங்கள் நண்பர் நட்சத்திர விடுதிக்கு தனியே வரவேண்டும், விவரங்கள் பின்னர்.


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s