சுட்டிகள், குறுங்குறிப்புகள் இன்னபிற (9/n)

19/10/2020

31 -> 35

-0-0-0-0-0-

#31

அண்மையில் ஒரு இளைஞர் வீட்டுக்கு வந்திருந்தார், பாவம், தன்னிச்சையாக சிலந்திவலையில் மாட்டிக்கொண்ட அன்பர். + ஒருமாதிரி முழ நீளக் கேள்வி ஜாபிதாவுடன்.

அந்த ஜாபிதாவைப் பார்த்தவுடனே கொஞ்சம் நடுக்கமாகி விட்டது, தனியொருவன், எவ்வளவுதான் படுதெகிர்யத்துடன் அனைத்துத் துறைகளிலும் பீலா வுடமுடியும், சொல்லுங்கள்? (ஆனால், என் மனதில் நான் ஒரு தமிழ் அலக்கிய வயாக்ராபாத அறிவுஜீவியாக நினைத்துக் கொண்டேன்!  உடனடியாகச் செயலூக்கம் வந்தேவிட்டதே!! இதோ புடீங்க்டா, அல்லாத்துக்கும் பதில்!)

சரி. அந்த ஜாபிதாவில் ஒன்று கீழே.

தமிழகத்தின் தற்கால அறிவியக்கத்தில் (தமிழ் வாசிக்கும் 20 – 35 வயது இளைஞர்களுக்கு) ஜெயமோகனின் பங்குதான் என்ன?

என் பதில் (கொஞ்சம் ஒழுங்கு செய்திருக்கிறேன்): பங்கு என்றால் – அவர் எழுத்துகளைப் படித்துக்கொண்டிருக்கும் இளைஞர்கள், அந்தச் சமயத்திலாவது வெளியே பொறுக்கித்தனமாகவோ அல்லது ஏகே47னுடனோ அலையச் சாத்தியக்கூறுகள் இல்லை என்பது முக்கியமான, ஆசுவாசமளிக்கும் விஷயம்.

மற்றபடி, அவரிடமிருந்து நேரிடையாகவும் எதிர்மறையாகவும்  கற்றுக்கொள்ள வேண்டிய விஷயங்கள் நிறையவே இருக்கின்றன.

+கள் (இளைஞர்கள் கற்றுக்கொள்ளவேண்டிய விஷயங்கள்)

1. அவருடைய அபாரமான உடலுழைப்பு. இந்த அளவு, தொடர்ந்த செயலூக்கத்துடன், எக்கச் சக்கமான நீளத்தில், பலவகைத் துறைகளில் அனுபவமோ படிப்பறிவோ அற்ற விஷயங்களைக் குறித்துத் தொடர்ந்து  தட்டச்சிட்டோ அல்லது ஸ்பீச்2டெக்ஸ்ட் தொழில்நுட்பம் வழியாகவோ கருத்து தெரிவிப்பது என்பது போற்றப்படவேண்டிய விஷயம். இதற்கெல்லாம் மகத்தான சுயஅர்ப்பணிப்பு வேண்டும். (பிரச்சினை என்னவென்றால், இது சமயங்களில் சுயஅற்பணிப்பாகி விடுகிறதே என்பதை நினைத்தால்…)

2. அற்புதமான, கொப்பளிக்கும் நகைச்சுவை உணர்ச்சி. இது ஒன்றே போதும், பிரச்சினைகளைக் கடந்துவிட. அவருடைய எழுத்துகளில் நான் ரசிப்பது இதனை. சந்தேகத்துக்கிடமில்லாமல்.

3. அசுரசாதகத்தால், அவருக்குச் சுளுவாக வரும் தமிழ் எழுத்து லாகவம். க்ராஃப்ட்.

4. புத்திசாலித்தனம். (சிலசமயம் தளும்பி வழிந்துவிடுகிறது என்பது ஊக்கபோனஸ்)

-கள் (இளைஞர்கள் புறம்தள்ளவேண்டிய விஷயங்கள்)

1. நிலை தெரியாமல் அட்ச்சிவுடும் தன்மை. சிலபல விஷயங்களில் மீயறிவே இல்லாமை. சொல்லுக்கும் செயலுக்கும் தொடர்பே இல்லாமல் இருப்பது.

2. அறம் அறச்சீற்றம் சமூகத்தின் மனச்சாட்சி என பெத்தபேச்சு பேசும் வேளையில், சதா… மனதறிந்து பொய் சொல்வது.

3. அவர் அறிந்ததாக அவர் வெளியே பொதுவெளியில் வைக்கும் பலப்பல விஷயங்கள், அவரை வந்தடைந்தமை தமிழாக்கம் செய்யப்பட்டிருக்கும் நூல்களால் மட்டுமேதான் – இவை பெரும்பாலும் இடதுசாரி சித்தாந்தம் முரணியக்கம் பெருந்தெய்வம் நடுவாந்திரதெய்வம் என்றே பேசுபவை, பாவம்.

4. அவர் அளவுக்கும், செயலூக்கத்துக்கும் தேவையேயற்ற திரியாவரம்.

#32

ஜிஹாதிகளால் 18 அக்டோபர் 2019 அன்று படுகொலை செய்யப்பட்ட ஸ்ரீ கமலேஷ் திவாரி அவர்களின் முதலாம் நினைவுதினம் நேற்று.

கீழே, அவர் பலிதானத்துக்கு முந்தைய நாள் ஃபேஸ்புக்கில் விடுத்த செய்தி.

நான் எரியூட்டப்படப்போகும் நாள்வரை இதனை நான் மறக்கமாட்டேன்.  நாம் மறக்கக்கூடாது – இம்மாதிரி தர்மகர்த்தாக்களின் பணிகள் வ்யர்த்தமாகவே கூடாது.

பல ஹிந்துக்கள், அவர்கள் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு உதவி வேண்டும் என என்னைத் தொடர்புகொள்கின்றனர். நானும் என்னால் முடிந்த அளவில் அவர்களுக்கு உதவிசெய்துவருகிறேன்; இனிமேலும் செய்வேன்.

ஆனால், இந்த ஹிந்து சமுதாயத்தில் (அதாவது எந்த சமுதாயத்துக்காக நான் பிரயத்தனப் படுகிறேனோ, எதற்காக ஹிந்து அமைப்புகள் பாடுபடுகின்றனரோ, எதற்காக அவர்கள் பிறருடைய தூற்றல்களை எதிர்கொள்கிறார்களோ) எவ்வளவு ஹிந்துக்கள் இருக்கிறார்கள், தாங்களாகத் தன்னிச்சையாக முன்வந்து, “சகோதரா, தயைசெய்து இந்த நூறு ரூபாயை, ஹிந்து சமூகத்துக்கான என் சிறு காணிக்கையாக எடுத்துக்கொள்!” எனச் செயல்படுவதற்கு.

ஒருவர்கூட இல்லை.

நாங்கள், எவ்வளவோ சிரமங்களுக்கிடையே, ஏழ்மை, வேலைவாய்ப்பின்மைகளுக்கிடையே அளப்பரிய களப்பணி செய்யும் எங்கள் காரியகர்த்தர்களுக்கு, மிகவும் நன்றியுடையவர்களாக இருக்கிறோம், அவர்கள்தாம் எங்களுக்கு ஹிந்துத்துவத்திற்காக உழைப்பதற்கான பலத்தை அளிக்கிறார்கள்; ஏனெனில், எந்த சமூகத்துக்கு நாங்கள் கெடுபிடிகளுக்கிடையில் சேவை செய்கிறோமோ, அது குறட்டைவிட்டுத் தூங்கிக்கொண்டிருக்கிறது – அதுவொரு இறந்த சமூகம்.

ஆனால், எங்கள் கருத்து என்னவென்றால், நாங்களும் எம் காவி சகோதரர்களும் இன்னமும் உயிருடன் இருக்கிறோம். [ஆகவே, எங்கள் சேவை தொடரும்]

இருந்தாலும், எங்களுக்குக் கவலை கொடுக்கும் விஷயம் என்னவென்றால், இம்மாதிரி நன்றியற்ற சுயநலமிகள் மிகுந்த ஒரு சமூகத்தை எப்படிக் காப்பாற்றப் போகிறோம் என்பதுதான்.

தன் குடும்பத்தை, சொத்தை, பாரம்பரியத்தை, தர்மத்தைக் காக்கும் விஷயங்களுக்கு, தம் சம்பாத்தியத்தின் நூறில் ஒரு பங்கைக் கூட அளிக்க விரும்பாதவர்களைக் கொண்டதுதான் இச்சமூகம். அதே சமயம், அவர்கள் தம் பணத்தை வெட்டி ஊதாரிச் செலவுகளிலும் போலி ஆடம்பர டாம்பீகங்களிலும் திருமணப் படாடோபங்களிலும்  விரயம் செய்வர். இனிவரும் காலங்களில் இந்தச் சமூகம் துப்புரவாக ஒழிக்கப்பட்டால், அதற்காக ஹிந்து அமைப்புகளின்மேல் குற்றம் சுமத்தவே முடியாது – ஏனெனில் க்றிஸ்தவ இஸ்லாமிய அமைப்புகளுக்கு வெள்ளம்போல நிதி குவிகிறது, அதே சமயம், எங்களுக்கு வருவது கடுகளவு நிதியே.

உங்களில், தங்கள் திறன்/சக்தியைச் செலவழிக்கும் நிலையில் இருப்பவர்கள், தயை செய்து இது குறித்துச் சிந்திக்கவும்.

ஜெய் ஸ்ரீ ராம். 

#IndiaRemembersKamleshTiwari

#LestWeForget

#33

‘ நீ எப்போது உன் கவிதைகளுக்காகநோபல் பரிசு பெறுவாய்?’
மப்புபுத்திரனின் வாக்கியக் கட்டுடைப்பு வாக்கியவுடைப்புக் கழுதை கனைக்கிறது.

எனக்கு என்ன படுகிறது என்றால், இந்தக் கழுதைவரியை, உயிர்மைக்கழுதை நேராகத் தன் உடன்பிறப்பு இசுடாலிரிடம் காண்பித்தால், உடனடியாக அதிரடியாக அவர் பதில் தந்திடுவார்…
அதாவது அவரும் ஒரு தொழில்முறைப் பொறுக்கியாக இருந்தவர்தாமே, ஊரை ஏகத்துக்கும் மேய்ந்தவரும் கூட அல்லவா? ஒரு பெரிய சந்தன/ரெட்ஸாண்டர் கிடங்கையே ஆட்டையைப் போட்ட பராக்கிரமம் உள்ளவர்தாமே! மேலதிகமாகத் தமிழைச் சுட்டுப்போட்டாலும் துண்டுச்சீட்டு கொடுத்தாலும் ஒரு முடியையும் அறிந்துகொள்ளும் திறமையற்றவர்வேறு அல்லவா… ஆக ஆக ஆக, இந்தக் கழுதையைக் கழுதைத்துவமாகப் படித்துக் காண்பித்தால் அந்த திராவிடக்கழுதை செங்கழுதைக்குக் கோபம் வந்துவிடுமா வராதா…

ஆகவே, வாழ்க்கையையே வெறுத்த நம் இசுடாலிர் அவர்கள், ஓங்கி நம் கவிங்கர் திருமுகத்தின் திருவாயில், துல்லியமாக ஒரு திராவிடக் கும்மாங்குத்து குத்தினால்… மப்புவின் பற்களெல்லாம் உதிர்ந்துவிடும் அல்லவா?

இதுதான் நோ பல் பரிசு.

இதுவாவது இந்த உரைநடையை ஒடித்துப்போட்டு கழுதை எழுதும் உதிரிக் கழுதையாருக்குக் கூடிய விரைவில் கிடைக்க வாழ்த்துகள்!

(அது நோபல் பரிசில்லையடா முட்டாளே, நொபெல். நாலு வார்த்தை ஒழுங்காக எழுதக் கற்றுக்கொள்ளடா, பின்னர் கூரையேறி ஆட்டைப் பிடிக்கலாம் அல்லது திராவிட உடன்பிறப்பாக ஆட்டையைப் போடலாமடா)

#34

கோவிடெல்லா (Covidella) புராணத்தில் அண்மையில் சேர்ந்திருக்கும் மூன்று பாத்திரங்கள்: டெஸிபெல்லா (Decibella), பப்பாளி & பப்பாளன்.

டெஸிபெல்லா ஃப்லேஷ்பேக்: அவள் தன் தாயாரின் கருவில் இருக்கும்போது ஒரு நாள், அந்தத்தாயார் அலுப்பில் அடித்துப்போட்டதுபோல் தூங்கிவிடுகிறார். கொர்கொர் எனக் குறட்டைவேறு; அப்படி மூச்சை உள்ளிழுக்கும்போது பக்கத்திலிருக்கும் குட்டி கம்ப்யூட்டர் யுஎஸ்பி ஸ்பீக்கர் மூக்குக்குள்ளே போய்விட்டு ஒருவழியாகக் கருப்பைக்குள்ளேயே(!) போய்விடுகிறது; பின்னர் ஆச்சரியகரமாக கருவிலிருக்கும் டெஸிபெல்லா தொண்டையில் ஸெட்டில் ஆகியும் விடுகிறது. ஆகவே, அவள் பிறந்ததினத்திலிருந்து  பயங்கர ஸவுண்ட்வுடுதல் மணியம் (நம் கம்மல்காசன் சீமார்போல) … அவளால், உரத்த குரலில் 130 டிபி அளவில்தான் ரகசியம் கூடப் பேசமுடியும்.

இவள் கோவிடெல்லாவின் நண்பி.

குழந்தை வரைந்த சித்திரம்.

பப்பாளியும் பப்பாளனும் – பாப்பாவற்ற தம்பதிகள்.  கொஞ்சம் அசடுகள்வேறு; எப்பப் பார்த்தாலும் ஏதோ ஒரு சிக்கலில் மாட்டிக்கொண்டு முழிப்பார்கள்…

…ஆனால் கோவிடெல்லாவுக்கு உதவுகிறேன் என படுஸீரியஸ்ஸாக முனைவார்கள், பாவம்.

இந்த கோவிடெல்லா அதிசாகசக் கதை எங்கே போகிறது என்றே எனக்குத் தெரியவில்லை; ஆனால் குழந்தைக்குப் பிடித்திருக்கிறது, என்ன செய்ய!  :-(

But. But, will I give Venmurasu, a run for its money? ;-)

#35

கங்கையைக் காப்பாற்ற உண்ணாவிரதம் இருந்து உயிர் நீத்த ஸ்வாமி ஸானந்த் அவர்கள் இறந்துபோய், இன்றுடன் இரண்டு வருடங்கள் ஓடியும் விட்டன.

ஆனால் கங்கை கொஞ்சம் கொஞ்சமாக உயிர்த்தெழுவதும் நிஜம் தான்.

ப்ச், ஸானந்த்ஜி அப்படிப் போய்ச்சேர்ந்திருக்கக் கூடாது; அவர் நமக்கு எடுத்தியம்பிருக்க வேண்டிய பலப்பல விஷயங்களை நாம் இழந்துவிட்டோம். இப்போதும் சுயநலம்தான், என்ன செய்ய…

-0-0-0-0-

(இந்தப் பதிவுக் குறிப்புகளில் ஒரு விதமான கலவை – சொல்லப்போனால் என்னைப் பிரதிபலிக்கும் விதமாக, என் சிந்தனைப்போக்குகளுடன்(!) இழைந்து இருக்கிறது; ஒவ்வொன்றும் ஒவ்வொரு மாதிரி. அட்ஜஸ்ட் செய்துகொள்ளவும்!)

END

11 Responses to “சுட்டிகள், குறுங்குறிப்புகள் இன்னபிற (9/n)”

 1. suswilc Says:

  இதுதான் நோ பல் பரிசு.

  Unexpected twist 😂

 2. Aathma Says:

  ஜெயமோகன் பற்றி எனது கருத்துகள் சில..நிச்சயமாக நிறைய விடயங்களில் ஆசான் தான் அவர்..அவர் வலைத்தளத்தை தினமும் மேய்ப்பவன் நான்..எனக்கு அவரின் ஆத்மார்த்தமான எழுத்து எது..உணர்ச்சி கொந்தளிப்பில் மேலோட்டமான எழுத்துகள் எது என்று வித்தியாசப்படுத்த தெரியும்

  பழக்கப்பட்டவர்களுக்கு அவரின் சிக்னேச்சர் மாறுபடுவது ப்ரத்யக்ஷமாக தெரியும்.

  சமீபகாலமாக அவரின் ஆத்மார்த்ததை காண்பது ரொம்ப துர்லபமாக இருக்கிறது

  அவரின் தொழில் கட்டாயங்கள்..சோசியல் பாலன்ஸிங் கட்டாயங்கள்..இப்படி பல காரணங்கள்

  ஆனால் எக்காலத்திலும் வெறுக்கத்தக்கவர் இல்லை..என்றும் இனிய ஜெயம் தான்..


  • ஐயா, நன்றி.

   // ஆனால் எக்காலத்திலும் வெறுக்கத்தக்கவர் இல்லை..

   பொதுவாக இந்தச் சொற்றொடர், அனைவருக்கும் (அடியேன் உட்பட) பொருந்தும். நாம் அனைவருமே சாம்பல் நிறத்தவர்தாமே! பிரச்சினையில்லை.

   இது ஒருபுறமிருக்க – நானும் அவர் வெறுக்கத்தக்கவர் அல்லர் எனத்தான் நினைக்கிறேன்.

   //என்றும் இனிய ஜெயம் தான்..

   அதிவீர பராக்கிரம பராந்தக ரவாகேசரி ஆலூபோண்டா சமேத  ஸ்ரீஸ்ரீ கடலூர்சீனு தலைமையில் அணிதிரண்டு  ஒரு பெரிய தற்கொலைப்படை, ஆகமரீதியில் ஆர்பரித்து எழுவதையும் அது மதுரையைச் சுற்றி எழுப்பப்போகும் ஈட்டிவேலியில் ஒவ்வொன்றிலும் என் தலை சொருகப்பட்டு இளிக்கும் கோலத்தையும் நான், கலைங்கர் கருணாநிதி பேசுவதைப் போல, பார்க்கவேண்டிய துர்பாக்கியம் இருக்காது என நம்புகிறேன

   ஏனெனில்…

   எனக்கு வேறுவேலைகள் இருக்கின்றன. :-)

   • Aathma Says:

    அந்த கூட்டத்தில் தாசனுதாசனாக தோசை மாவனாக நான் இருப்பேன்


    • ஹ்ம்ம். :-(

     தோஸ்த் என்று நினைத்தால் தோசைமாவாகவே நிற்கிறீர்களே! வெண்முரசு ஓவர்தோசை நும்மால் தாங்கமுடியவில்லையோ!

     எது எப்படியோ. வேறு வழியில்லை எனக்கு.

     நானும் என் தலையையும் உடலையும் எஃகுத் தகடுகளால் பிணைத்து பந்தோபஸ்த் செய்துகொள்கிறேன். முன்கூட்டியே எச்சரித்ததற்கு நன்றி.

 3. saranabhi Says:

  அய்யய்யோ, ஷிவர் போல் இன்னொரு காலம் கடந்து நிற்கும் கழுதையை இந்த ‘நோபல்’ கழுதையைப் போல் எழுதிவிடலாம் என்று பார்த்தால் – கலிகாலம், அந்தக் கழுதை எங்கே (நிற்கிறது) என்றே கண்டு பிடிக்க முடியவில்லையே! அங்கம் பதறுகிறதே!


  • ற்றொம்பவே துடுக்காகத் துடிக்கவேண்டா. எல்லாவற்றையும் மப்புமேல் செலவழிக்கவேண்டா.

   அடுத்து – வரிசையில் எஸ்ராமகிருஷ்ணன் சாருநிவேதிதா போன்ற தண்டக்கருமாந்திரங்களும் நின்றுகொண்டிருக்கிறார்கள்.

 4. Sachidanandam Says:

  வணக்கம் ஸார்.. ஆச்சரியம்! நேத்து ஒலகநாயகன் பிக் பாஸ் நிகழ்சியில் நம் ஆசான் ஜெயமோகன் பற்றி பெருமையாக பேசி அவரது வெண்முரசு 25 புத்தகங்கள் படிக்கும்படி வேண்டினார்.. அந்த நேரத்தில் எனக்கு மனதில் என்னென்னவோ தோன்றியது…ம்


  • ஆ! எவ்வளவு அற்புதமான விஷயம்! 💪🤦‍♂️

   இப்போதுதான் புரிகிறது, ஏன் வொளற நாயகனின் அறிக்கைகள் அவ்வளவு பராக்கிரமத்துடன் இருக்கின்றனவென்று…

   ஆக, கூடிய சீக்கிரம் ஒரு நன்றி நவிலல் பதிவு இனியஜெயம் ரூட்டில் வருமோ? (எது எப்படியோ, தமிழகத்தில் மரக்கூழ்ப் பஞ்சம் வராமல் இருந்தால் சரிதேன்!)


 5. […] இத்தனைக்கும் தொடர்ந்து நம் இஸ்லாமிய சகோதரர்கள், அவ்வப்போது ஹிந்துக் கழுத்துகளை அறுத்துத் தலைகளை அகற்றி, நமக்கு மறுபடியும் மீண்டும், மீண்டும் மிகப் பொறுமையாகவும் நினைவூட்டி, கச்சிதமாக பாலபாடங்களைக் கற்றுத் தருகிறார்களா இல்லையா?  நினைவு இல்லையென்றால், அண்மையில் வந்த ஒத்திசைவு பதிவையாவது படித்துத் தொலைக்கவும். அதில் உத்தரப் ப்ரதேசத்தைச் சார்ந்த ஸ்ரீ கமலேஷ் திவாரி அவர்களின் கழுத்து ஹலால் முறையில் அறுக்கப்பட்டது குறித்து ஒரு குறிப்பு இருக்கிறது. (குறிப்பு #32) […]


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s