மூடத் திராவிட அறிஞ்ஜர்களுடன் உரையாடுவது எப்படி

29/10/2020

இதற்கு, நமக்குச் சிலபல தகுதிகள் வேண்டும்.

முதளில் அவர்கலுடைய  உண்ணதமாண தமிள் உச்சறிப்பைப் பொற்றுத்துக்கொல்ல வேன்டும். தமில்மொளி ஒறு செம்மொளி. தமிளின் பெறுமை . வேரெந்த மொளியிளும் இள்ளாத ள நம் தமிலில் இறுக்கிரது. எடுத்துக்காட்டூ: “வாலப்பலத்தோளில் கிளவன் வலுக்கி விளுந்தான்!”

இந்த தமிழ்க்கற்பழிப்பு செங்கற்பழிப்பைப் பொறுத்துக்கொள்ள வேண்டிய இன்றியமையாத தாங்குதிறன் மிகவும் முக்கியம்.

இரண்டாவதாக: அவர்கள் எச்சில் தெறிக்க, வாயோர நுரைதள்ள, கள்வெறியுடன் (சிலசமயங்களில், உண்மையாகவே!) பேத்துவதைப் பொறுமையுடன் அவதானிக்கவேண்டும். (கைவசம் மேலதிகத் துண்டு ஒன்று இருந்தால் நலம்)

மூன்றாவதாக: அவர்கள் அறிவில்லா அறிஞர்கள் என்பதை அறிந்துகொள்ளவேண்டும். அவர்கள் மேல் ஏகத்துக்கும் நம்பிக்கை வைத்து ஏமாந்துபோக அவசியமேயில்லை.

நான்காவதாக: நமக்கு நகைச்சுவை உணர்ச்சி அதிகமாக இருக்கவேண்டும். அதே சமயம் அவர்கள் படுஸீரியஸ்ஸாக ஜோக் அடிக்கும்போது சிரித்துவிடவும் கூடாது – இல்லாவிட்டால் அவர்களுக்குக் கோபம் வந்துவிடும்வேறு! அவர்கள் வியாக்கியானங்களைக் கேட்கும்போது, ஒருவிதமான நாடகத் தன்மையுடன், பிரமிப்பு மிகுந்த முகபாவத்தைக் கொண்டிருக்கவேண்டும்.

ஐந்தாவதாக: அந்த ஜந்துக்கள் அளவுக்கு இல்லா விட்டாலும், நம் தோலானது கொஞ்சமாகவாவது தடிமன் உள்ளதாக இருக்கவேண்டும். அவர்களது தோலடிக் கொழுப்பளவு அளவுக்கதிமாக இருப்பது போல் இல்லாவிட்டாலும், நமக்கும் கொஞ்சமாவது இருக்கவேண்டும். இல்லாவிட்டால் அவர்களுடைய எச்சில்பொழிவுகளைப் பொறுமையாகக் கேட்டுக்கொள்ளவே முடியாது. அடக்கி வாசிக்கவும் முடியாது.

ஆறாவதாக: ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய்களை மட்டுமே பேசுபவர்களிடம் வெறுப்பைக் காண்பிக்காமல் புன்சிரிப்பை உதிர்த்துக்கொண்டேயிருக்க பயிற்சி பெறவேண்டும். அ. மார்க்ஸ், சுப.வீரபாண்டியன் போன்றவர்களுடன் முன்னொரு காலத்தில் (~1990களில்) நேரடியாகச் சிறிது உரையாடும் பாக்கியம் பெற்றதால்தான் சொல்கிறேன். படிப்பறிவு மூளைவளராத்தன்மை போன்றவை அருளிய, அறியாமை தரும் அகங்காரத்தால் ஏகோபித்து உளறும் அவர்களை ஆதூரத்துடன் “அடப் பாவமே!” எனப் பார்க்கும் மனோபாவம் வேண்டும்.

ஏழாவதாக: ‘திராவிட அறிஞர்’ என்பதே ஒரு மாயை என்பதை உணரவேண்டும். திராவிடமும் அறிவும் ஒன்றுக்கொன்று தொடர்பேயற்ற வார்த்தைகள் என்பதையும். அந்தப் பதமே ஒரு oxymoron என்பதை அறிந்துகொள்ளவேண்டும். அதாவது திராவிட என்றால், ox – காளை. அறிஞர் என்றால் moron – மூடன்.  காளைமூடன். நன்றி.

காளைக்குப் பேசவராது. அது பேசினாலும் நமக்குப் புரியக் கொடுப்பினை இல்லை. (தொடர்புள்ள இன்னொரு விஷயம்: “காளைமாடு பால் கொடுக்காது என்பதை நம்மில் எவ்ளோ பேர் அறிவோம்.” இசுடாலிர் இதுபோன்ற, அதிர்ச்சிகொடுக்கும் உண்மைகளைத் தோலுரித்துப் பரவலாகக் கொண்டுசென்று பரப்புரை செய்யவேண்டும்! மோதி ஓழிக!!)

…எது எப்படியோ – நம் பிற அலக்கியப் பிதாமகர்களைப்போல, காளை அபரிமிதமாகச் சாணி போடும். அதுதான் அதனுடைய ஆகச்சிறந்ததே அன்றிப் பிறிதொன்றில்லாத அன்பளிப்பு, கொடை. உலகத்துக்கான பங்களிப்பு. அதாவது, bullshit. ஆக திராவிட அறிஞ்ஜர் என்றால் மாட்டுச்சாணியர் என அறியவும்.

மேற்கண்ட நானாவித தாங்குதிறன்களை நாம் வளர்த்துக்கொண்ட பின்னர்… ஒருமாதிரி ஸெட்டில் டௌன் ஆகி… …

-0-0-0-0-

தமிழ் அலக்கிய அயோக்கிய உலகத்துடனான தொடர்பை 1991ல் துப்புரவாகத் துண்டித்துக்கொண்டு 2011 வரை, சுமார் 20+ வருடங்கள்போல வெறும் வாசிப்பு என்ற அளவில், அறிவுஜீவி அலக்கியப் பிதாமக ஊழல் கூவான்கள் பக்கத்திலேயே போகாமல் இருந்தாலும் – எனக்கு அலக்கியம், தமிழ், வரலாறுஉளறாறு போன்றவற்றிலும் ஆர்வம் அதிகம். (என்ன செய்ய, சில சமயங்களில் இந்தத் தற்கொலைச்சிந்தனையானது அநியாயத்துக்கு அதிகமாகி விட்டிருக்கிறதும் கூட!)

இவை தொடர்பாக, தனிப்பட்ட 1-1 முறையில் சிலபல (சுமார் 25-30? வரை இருந்திருக்கலாம்) விதம்விதமான திராவிட, தமிழ் ‘ஆராய்ச்சியாளர்’களுடன் அப்படியிப்படி என்று சில விஷயங்களை 2009 வரை விவாதித்து இருக்கிறேன்.  அதற்குப் பிறகு என்னால் முடியவில்லை, என்ன செய்ய.

ஏனெனில்.

வெறும் தமிழ் சார்ந்த ஆராய்ச்சியாளர்களாவது சுமாராக ஒத்துக்கொள்ளுப்படிக்கு இருக்கிறார்கள்.  சங்ககாலம் மங்கமாலம் என ஒன்றுமில்லாத பல விஷயங்களை ஊதிப்பெருக்கினாலும், இருக்கும் அழகான விஷயங்களைச் சொதப்பி “யாவரும் கேளீர்” போல உளறிக்கொட்டினாலும் வரலாற்றோடு கொஞ்சம் தாராளமாக இருந்தாலும் (அதே சமயம் நம் கம்பனை ஆழ்மனதிலிருந்து காழ்ப்புடன் வெறுத்தாலும்) இவர்கள் கொஞ்சம் பரவாயில்லை.

ஆனால், அவர்கள் ‘திராவிடர்’ என்றாகிவிட்டால், சுத்தம்.

இப்படிப்பட்ட மகத்தான அரைகுறைகளாகவா இருப்பார்கள்? அகழ்வாராய்ச்சி அறிவில்லை, திராவிடம் என்றால் என்னவென்று தெரியவில்லை, அறிவியல் என்றால் கிலோ எவ்வளவு ஆஃபரில் கொடுப்பாய். பிற நாகரிகங்களைப் பற்றிய அடிப்படைப் புரிதல்களே இல்லை. முந்தைய வரலாறுகளும் தெரியவில்லை, தற்கால ஆராய்ச்சிகளின் முடிவுகளையும் அறிவதில்லை. இந்த அழகில் கைபர்போலன். காரியஓலன். ஹரப்பா நாகரிகம் திராவிடம். கபாடபுரம். குமரிக் கண்டம். கிழவிக் குண்டம். ஆரியப் படையெடுப்பு. வடவ ஆதிக்கம். குப்பைகள்.

மூளையும் இல்லை. உழைப்பும் இல்லை; அதிக பட்சம், தேவநேயப் பாவாணரின் குறிப்பிடத்தக்க உளறல்களை எடுத்துவிடவேண்டியது. அவ்வளவுதான். மீதிக்கு உரத்த உச்சாடனங்கள். ‘யாதும் ஊரே யாவரும் கேளீர்.’ போங்கடா போங்காட்ட மயிறாண்டிகளா.

இப்படியே தொடர்ந்தால் – 2009 வாக்கில், மீதமிருக்கும் என்னுடைய ஆயுள் பற்றிய சிந்தனை வந்து – கண்டகண்ட குப்பைகளின்மீது (அவசியம் வந்தாலொழிய  – அதாவது திராவிட எதிர்ப்புபோல) குவியம் செலுத்துவதில்லை என முடிவு செய்தேன்.

ஏனெனில் ‘திராவிட அறிஞர்’ என்பது ஒரு ஆக்ஸிமொரான் எனத் துளிக்கூடச் சந்தேகத்துக்கே இடமில்லாமல் புரிந்துகொண்டேன்.

ஆகவே.

-0-0-0-0-

…நிலைமை இப்படி இருக்கையிலே, இந்தச் சீனாக்கார கோவிட்-19 சமயங்களில், எனக்கு மிகவும் ஆச்சரியம் தரும் வகையில், கடந்த இரண்டுமூன்று மாதங்களில், இதுவரை ஐந்தாறு இளைஞர்கள் (ஏதோ பாவம், ஆர்வக்கோளாறு என  நினைக்கிறேன் -அல்லது இந்தக் கிறுக்குக் கிழக்கோட்டான் நேராகப் பார்க்க எப்படியிருக்கும் என்றவொரு கிண்டல் உணர்ச்சியும் இருக்கலாம்) பார்க்கவேண்டும், பேசவேண்டும் என (தனித்தனியாகத்தான்!) வீட்டுக்கு வந்திருக்கிறார்கள். சிலருடன் கூக்ள்டாக்/ஸூம் எழவும் நடந்திருக்கிறது. ஆச்சரியமாக இருக்கிறது.

அதேசமயம், இம்மாதிரி இளைஞர்களும் எப்படி இன்னமும் இருக்கிறார்கள் எனச் சந்தேகமாகவும் இருக்கிறது. ஏலியன்களாக இருப்பார்களோ?

இம்மாதிரி ஆர்வக்கோளாறர்களில் ஒருவர், ‘கரச’ அவர்களுடன் நீங்கள் கண்டிப்பாக உரையாடவேண்டும் என்றார்; ‘அவர் குறிப்பிடத்தக்க அறிஞர்’ நிறையப் படித்துள்ளவர் எனச் சொன்னார்.

எனக்கு உடனடியாக வாந்தி வந்தது. ஏனெனில் இந்த நபரைப் பற்றி (கண்ணபிரான் ரவிஷங்கர் – ‘மாதவிப் பந்தல்’ எனும் தளத்தை நடத்திவந்தவர் – பத்ரி சேஷாத்ரி அவர்களின் வலைத்தளம் மூலமாக நான் அங்கு சென்று சில காட்டுரைகளைப் படித்திருக்கிறேன் – அவற்றில் சில ஒப்புக்கொள்ளக்கூடிய வகையில் இருந்தன, பல அட்ச்சிவுடல்கள் மட்டுமே என்பது என் மங்கல் நினைவு!) நான் பலப்பல வருடங்களாக அறிவேன். அண்மையில் அயோத்யா பற்றி உளறிக்கொட்டியது, வாய்கூசாமல் பொய் சொன்னது பற்றியும் அறிவேன்.

குப்பைத்தனமாக ஒரு சிறு அறிவியல் ஆவணத்தை முழிபெயர்த்ததையும் அறிவேன். இவரும் ஒரு திராவிட தண்டக்கருமாந்திரனார் தாம்.

பிரச்சினை என்னவென்றால், நேர்மையாகப் பதில் சொல்லத் திறமையின்றி என்னை ட்விட்டரில் ‘ப்ளாக்’ செய்துவிட்டார், பிதாமகர்!

சுபம்.

திராவிட அறிஞ்ஜர்களில் இளங்குஞ்சென்றும் அதிகுஞ்சென்றும் உண்டோ?

-0-0-0-0-0-

பொதுவாக எனக்கும் (ஏன் – ஒரளவுக்கு சுயசிந்தனையும், ஏதோ முனைப்பும், கொஞ்சம் படிப்பறிவுமுள்ள  எவருக்குமே) திராவிட அறிஞ்ஜர்களுக்கும் முட்டிக்கொள்ளும் இடங்கள் பலப்பல இருக்கின்றன. அவற்றில் ஒன்று சங்ககாலத்தின் ‘தொன்மை.’  அதாவது, ‘கல்தோன்றி மண் தோன்றாக் காலத்தே…’ வகை உளறல்கள்.

இந்த உரையாடல்கள் எப்படிப் போகும் எனவொரு அல்காரித்ம் (ஒரு மாதிரி வழிமுறை) இருக்கிறது; அது எப்படியிருக்கும் என ஒருமாதிரிக் கிண்டல் அபிநயத்துடன் அன்பர் ஒருவருடன் கூக்ல்டாக் எழவு வழியாக ஒன்றிரண்டு வாரங்களுக்குமுன் உரையாடிக் கொண்டிருந்தேன். 

திராவிட அறிஞ்ஜர்களானவர்கள் – நிதர்சன உண்மைகளை ஒப்புக்கொள்ளமுடியாமல்,  படிப்படியாக எப்படி சப்பைக்கட்டு கட்டுவார்கள், கோல்போஸ்ட்களை நகர்த்துவார்கள், அட்ச்சிவுடுவார்கள் என்பதையெல்லாம். (எனக்கு என் குரலையும் பகடியையும் கேட்டு ரசித்துச் சிரிப்பது என்பது இறும்பூது தரும் விஷயம்)

அவரும் பாவம், சிரித்துக்கொண்டே கேட்டுக்கொண்டிருந்தார். “சார், நீங்க பாட் கேஸ்ட் பண்ணணும், அர்மையா இர்க்கும்! வொங்க கிட்ட கத்துக்க நெறய்யா இர்க்கு…”

ஆஹா, சரிதான்! யாருக்குத்தான் முகஸ்துதி பிடிக்காது, அம்மணிகளே அம்மணர்களே… ஆனால் திகட்டி விட்டது. மேலும் — இருக்கும் கேஸ்ட் ப்ரச்சினைகளில்  இன்னொரு புதியபூத பாட் கேஸ்ட் ப்ரச்சினையும் ஏன் கோர்த்துவிடவேண்டும், சொல்லுங்கள். ;-)

ஆனால்… அதைப் பற்றி எழுதவேண்டுமா, அல்லது யோசித்து ஆரம்பித்து நிறைய தொகுத்தெழுதியும் தொங்கல் கேஸில் இருக்கும் பதிவுகளில் (இன்றைய தேதிக்கு இந்த எண்ணிக்கை 1022 – இந்த வரைவையும் சேர்த்து) ஒன்றாக ஆறப்போடலாமா அல்லது ஊறவிடலாமா என்று நினைத்துக்கொண்டிருக்கையில் ‘தில்லை கார்த்திகேய தத்புருஷ சிவம்’ என்பவருடைய ஃபேஸ்புக் சிறுபதிவு ஒன்றின் திரைச்சொட்டை (Screen Baldness, © S. Ramakrishnan, 2020) அதே அன்பர் நேற்று அனுப்பினார். ஆகவே இந்த வரைவுக்கு இன்று கதிமோட்சம். பாவம், நீங்கள்.

:-)

மிகவும் நன்றாகவும் க்ளிப்தமாகவும் எழுதியிருக்கிறார், இந்த அன்பர். நல்ல நகைச்சுவை கலந்த சலிப்புணர்ச்சி. வாழ்க! (இம்மாதிரி நிறைய பேர் இருக்கிறார்களோ, அந்த ஃபேஸ்புக் எழவில் கூட?)

ஆனால், இவர் மூன்று படிகளைக் கடந்திருக்கிறார். அம்மாதிரி மூடர்களுடன் விவாதித்திருக்கிறார்.

ஆனால் என்னுடைய பாவப்பட்ட அனுபவங்களில் ஒரு மாதிரி ஆறு படி நிலைகள் இருக்கின்றன. இதற்குக் காரணம் அவர் பொருதிய மூடர்களை விட என் செல்ல மூடர்களுக்கு பராக்கிரமம் அதிகமாக இருந்திருப்பதால், ஆகவே அவர்கள் அதிமூடர்களாக இருந்ததால் இருக்கலாம்.

. வேற்றுமை காணல்  (தென்னக முருகன் வேறு, வடக்கத்தி கார்த்திகேயன்-ஸ்கந்தன் வேறு)

. சிறுதெய்வங்களைப் பெருந்தெய்வங்கள் தூக்கிச் சாப்பிட்டுவிட்டன (முருகனை ஸ்கந்தன் முழுங்கினான்)

. இடைச் செருகல், பார்ப்பன-ஆரிய துஷ்டத்தனம் (தொல்காப்பியம், சிலப்பதிகாரம், புறநானூறு பரிபாடல்++ எல்லாவற்றிலும் இருக்கும் ஆரியக் கூறுகள், ஆரிய நச்சரவங்களால் திருட்டுத்தனமாக உள்ளிடப்பட்டவை)

. லெமூரியா குமரிக்கண்டம் கடற்கோள்  வழியாக நம் பழைய ஆவணங்களெல்லாம் போய்விட்டன

. கஜபாஹூ ஸிங்க்ரொனிஸ்ம், கயவாகு… (நூற்றுவன்கண்ணன் ப்ரூஃப் கீதே!  பதிற்றுப்பத்து சிலப்பதிகாரம்…)

. பார்ப்பன போகி பண்டிகை வழியாக எங்கள் பழஞ்சுவடிகளெல்லாம், காத்திரமான தரவுகளெல்லாம் எரியூட்டி அழிக்கப்பட்டன, ஆற்று வெள்ளத்தில் அடித்துக்கொண்டு போகவைக்கப் பட்டன. நீங்கள்தாம் எம் தரவுகளை அழித்துவிட்டீர்கள், பாவிகளே!

என்னுடைய அனுபவத்தில், எல்லோரும் எல்லா படிநிலைகளையும் தாண்டிவரமாட்டார்கள். ஆனால் – பெரும்பாலும் உச்ச கட்டம் அல்லது ஆகத்தான் இருக்கும். கொஞ்சம்போல விவரம் தெரிந்தவர்கள் படியை உதிர்ப்பார்கள்.

ஆனால்… ஊ நிலையாளர்களிடம் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.

வெகு எளிதில் தமிழ்வெறி செவ்வெறி வந்து  ‘டேய்! உன் தாத்தா தான் என் தாத்தாவிடம் இருந்து ஓலைச்சுவடிகளைப் பிடுங்கி நெருப்பில் எறிந்தார்’ எனக் கோபப்பட்டுவிடுவார்கள். பிறகு ரசாபாசமாகி விடும். பாதுகாப்புக்கு ஓடவேண்டியிருக்கும்.

ஆகவே அம்மணிகளே, அம்மணர்களே இம்மாதிரி மூடர் கூட்டங்களிலிருந்து தப்பிக்க, நம் பொன்னான காலத்தை வியர்த்தமாக்காமலிருக்க ஒரே வழிதான் இருக்கிறது. அனுபவப் பட்டதால்தான் இந்த அறிவுரையை அளிக்கிறேன்.

யாராவது திராவிட அறிஞ்ஜர் பெருமகனார் அல்லது பெருமகளாருடன் இம்மாதிரி தண்டக்கருமாந்திர விஷயங்களைப் பற்றி பேசவேண்டி வந்தால் முதல்படியில் அவர்கள் நின்றுகொண்டிருக்கும்போதே போர்க்கால ரீதியில் உஷாராகி விடவேண்டும்.

பின்னர் அயிகிரி நந்தினி பாடுவதுபோலச் சரமாரியாக அனைத்து அ முதல் ஊ விஷயங்களை நீங்களே ஒருமாதிரித் தன்னிலை விளக்கமாகச் சொல்லிவிட்டு, அவர்களுக்குத் தேவைப்பட்டால், அதாவது, அவர்கள் சாந்தியடையவில்லை என்றால், துளிக்கூடக் கூச்சப்படாமல் அவர்கள் காலடியில் வீழ்ந்து சரணடையவும்.

இது முக்கியம். இல்லாவிட்டால், எச்சில் தெறிப்பால் தாங்கள் உடைமாற்றுதல், தலைமுழுகுதல் போன்றவற்றை உடனடியாகச் செய்யவேண்டிவரும். தமிழ்அடி செவ்வடியும் அருளப்படலாம்.

இந்த எழவெடுத்த சீனாக்கார கோவிட்-19 சமயத்தில் இந்த ‘திராவிட அறிஞ்ஜ உரையாடல்’ ரிஸ்க் தேவையா எனத் தீவிரமாக யோசிக்கவும்.

:-(

5 Responses to “மூடத் திராவிட அறிஞ்ஜர்களுடன் உரையாடுவது எப்படி”

 1. K.Muthuramakrishnan Says:

  எப்படி ஐயா எல்லோருக்கும் ஒரே போல அனுபவம்? நானும் இதுபோலப் பட்டிருக்கிறேன்.எந்த ஆதாரம் காட்டினாலும் எல்லாம் இடைச்செருகல் என்று ஒரே போடு . இப்போதெல்லாம் ‘ஆமா ஆமாம்’ என்று ஒத்து ஊதிவிட்டு ஓடி வந்து விடுகிறேன்.


  • ஹ்ம்ம்… இப்போது எனக்கொரு சந்தேகம்.

   இடைச்செருகல் என்பதைத் திராவிடர்கள் கலவியில் ஒருவகை என்ற ஒரு திராவிடப் புரிதலுடன் இருப்பார்களோ?

   நோண்டிக் கேட்டால் முதற்செருகல் கடைச்செருகல் என்றெல்லாம் தொடர்ந்தால் என்ன செய்ய என்பதும் பயப்படவேண்டிய விஷயமே…

   • அனுதினமோர் அவதாரம் Says:

    ஆண்டவரே, சிரித்து மாளவில்லை! சற்று முன் வரை இருந்த இறுக்கமான மனநிலை இப்போதில்லை, மிக்க நன்றி! இந்நேரந்திலே சிலநாட்கள் முன்பாக (துரதிர்ஷ்டவசமாகப்) பார்க்க நேர்ந்த காணொலியில் கடமை இருக்கிறது, கட்டுப்பாடு இருக்கிறது, கண்ணியம் இருக்கிறது என வாய்கூசாமல் புழுகிக்கொண்டிருந்த தீராவிடத் திராபையின் நினைவு வந்துதொலைக்கிறது வேறு, கூடவே செந்தமிழ் வார்தைகள் சிலவும்.

 2. Ramakrishnan SN Says:

  ஜெயமோகனுக்கு தளத்தில் கடிதம் எழுதியிருக்கிறார். லிங்க் கொடுத்திருக்கிறார். மிகவும் பொறுமையாக விளக்கியிருக்கிறார்.

  https://decolonize1838612.wordpress.com/2020/10/28/%e0%ae%ae%e0%ae%a9%e0%af%81-%e0%ae%b8%e0%af%8d%e0%ae%ae%e0%af%8d%e0%ae%b0%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b5%e0%ae%b3%e0%ae%b5%e0%ae%a9/?fbclid=IwAR10blKr24_c_2g2Egn8FbQ7NhnKZnf2tHTi8kF_lVvaNFMU2B3w_IHDk_Y


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s